Advertisement

அத்தியாயம் 137

காலை வெய்யோன் தன் ஒளியை ஒளிரச் செய்ய சத்யா விழித்தான். அருகே ஆழ்ந்த துயிலில் இருந்த தன் மனைவியை பார்த்துக் கொண்டே இருந்தான். அவள் மீது கையை போட்டு அவளை இழுத்தவன் கையை பட்டென எடுத்து அவள் நெற்றி, கழுத்தை தொட்டுப் பார்த்தான். அவள் உடல் காய்ச்சலில் கொதித்தது. அவளை நேற்று ஈரமுடன் இழுத்ததை எண்ணி, என்ன செய்துட்டோம்..என்று அவள் முடியை தொட்டு பார்த்தான். அங்கங்கு ஈரமாக இருந்தது.

வேகமாக எழுந்து அவள் கப்போர்ட்டை திறந்து அவளுக்கு ஆடையை மாட்டி விட்டு, துவாலையை எடுத்து கண்ணீருடன் அவள் தலையை துவட்டினான். பின் எழுந்து..அவள் முகத்தை துடைத்து விட்டு, அவள் அறையில் மருந்தும் ஏதும் வைத்திருக்கிறாளா? என்று பார்த்தான்.

அறையை நீட்டாக ஒதுக்கி வைத்து விட்டு வெளியே வந்து பைக்கை எடுத்து ஹோட்டலுக்கு சென்று இட்லி வாங்கி விட்டு, மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று காய்ச்சலுக்கான மருந்துகளை வாங்கி விட்டு பைக்கை எடுத்தான். எதிரே வந்த மறையும் காயத்ரியும் அவன் மெடிக்கலில் நின்றதை பார்த்திருப்பர்.

காயத்ரி யோசனையுடன்..தியாவிற்கு ஏதும் பிரச்சனையாக இருக்குமோ? மறையிடம் கேட்டாள்.

இருக்காதும்மா. புதுசா கல்யாணம் ஆனவங்க. ஏதாவது மருந்து வாங்கி இருப்பான்.

முதல்ல வண்டியை நிறுத்துங்க என்று இறங்கி அவன் சென்ற மெடிக்கலுக்கு சென்று விசாரித்தாள். அவர் காய்ச்சலுக்கான மருந்து வாங்கிட்டு போறார் கடைக்காரர் சொன்னார்.

அவளுக்கு காய்ச்சலாம். போய் பார்த்துட்டு வரலாமா? அவருக்கு உதவி தேவைப்படும்ல..காயத்ரி கேட்க, இல்லை அவனே பார்த்துக்கட்டும். நான் அவனிடம் போனில் பேசிக்கிறேன். மாலையில் அவளை பார்த்துட்டு வருவோம்.

உங்களிடம் பதட்டமே இல்லை.

சத்யா நல்லா பார்த்துப்பான் என்ற மறைக்கு அவளுக்கு காய்ச்சல் வந்ததே அவனால் தான் என்று தெரியவில்லை. இனி அவளுடன் தான வாழப் போறா. அவனே பார்த்துக்கட்டும். அப்ப தான் காதல் அவளுக்கு அதிகமாகும். நாம் கரடி மதிரி உள்ளே நுழைய வேண்டாம் மறை சொல்ல..காயத்ரியும் விட்டுட்டாள்.

சத்யா வீட்டிற்கு வந்து அவளை எழுப்ப, கிரானி..கிரானி..என்று புலம்பினாள் தியா.

கண்ணை திற தியா..என்று அவன் பயத்தில் சத்தமிட்டான். அவள் பயந்து நகர்ந்து..கிரானி..கிரானி..என்றாள்.

அமைதியான அவன், தியா..ஒன்றுமில்லை..இங்க பாரு என்று அவள் அருகே அமர்ந்து அவளை அவன் மடியில் இழுத்து போட்டுக் கொண்டே..அழைத்தான்.

அவள் மெதுவாக கண்ணை திறந்தாள். சத்யாவை பார்த்து பயந்து விலக கூட முடியாமல் அழுதாள்.

அழாத..என்று அவளை தூக்கி பிரஸ் எடுத்து கொடுக்க, அவள் அழுகை நின்று பயத்துடன் அவனை பார்த்தாள். அவன் கையிலே அவளை வைத்திருக்க..நான்..இறங்கிக்கவா? கேட்டாள்.

அவளை இறக்கி விட்டான். அவள் நிற்க முடியாமல் தடுமாறினாள். நேற்று அவள் உடலில் அவன் ஏற்படுத்திய வலி மேலும் அவளை கிரக்கியது. சத்யா அவளை பின்னிருந்து மென்மையாக அணைத்துக் கொள்ள, கண்ணை மூடி உணர்ந்த அவள் அவனை திரும்பி பார்த்தாள். அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்க..தேங்க்ஸ் என்று சொல்லி அவன் கன்னத்தில் முத்தமிட்டு, அவன் கையை எடுத்து விட்டு முடித்து விட்டு வெளியே வந்தாள். அவன் காலை எழுந்ததில் இருந்து அவள் மீதுள்ள காதலில் அனைத்தையும் செய்திருப்பான்.

நேராக கிச்சன் அவள் செல்ல, அவளிடம் வந்து நீ ஓய்வெடு. இதில் சாப்பாடும் மருந்தும் இருக்கு. நீ அறைக்கு போ என்று இட்லியை தட்டில் எடுத்து வைத்தான். அவனை பார்த்துக் கொண்டே எதுவும் பேசாமல் சென்றாள். அவன் அறைக்கு வந்து கொடுக்க அவள் சாப்பிட்டு எழுந்தாள்.

நீ எழுந்திருக்காதே என்று அவளருகே வந்து தட்டை வாங்கி ஓரமாக வைத்து விட்டு மருந்தை கொடுத்து விட்டு  அவளது வாயை துடைத்து விட்டு படுத்துக்கோ என்று சொல்ல, அவள் படுத்துக் கொண்டு அவனையே பார்த்தாள்.

நீங்க சாப்பிடலையா?

அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் என்றான்.

மாமா, நிஜமாகவே அது நானில்லை அவள் சொல்ல, அவன் முகம் மாறியது. போர்வையை போர்த்தி விட்டு அவன் நகர்ந்து தூங்கு என்றான்.

மாமா, நீங்க என்னை நம்பவே மாட்டீங்களா? நீங்க என்னை நம்ப நான் என்ன செய்யணும்? சொல்லுங்க என்று எழுந்து மெதுவாக கேட்டாள். அவன் ஏதும் பேசாமல் அறையை விட்டு வெளியேறினான்.

அவள் தவறு செய்திருந்தாலும் சத்யா நீ காயப்படுத்தி இருக்கக்கூடாது. அவளோட பாட்டி இறந்துருக்காங்க. நீயும் அவளை பலவீனமாக்கிட்ட. நீ தப்பு செய்ற சத்யா..அவன் மனசாட்சி அவனுக்கு அறிவுறுத்த..என்னால முடியலை. என்னோட தியாவை வேறொருவன் எடுத்துக்கிட்டான். அவளும் அவனுக்கு இசைந்திருக்காள். அவள் ரொம்ப மோசமானவள் என்று நினைத்தவாறு அழுது கொண்டே சோபாவில் படுத்தான்.

தியா கண்ணீருடன், மை காட்..நான் தவறு செய்துட்டேன். ஆனால் அடுத்தவனுடன் படுக்கும் அளவிற்கு நான் போகலை. என்னோட மாமா..என்னை நம்பவே மாட்டேங்கிறாங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு. ஆனால் மாமா நீங்கள் இன்னும் என்னை காதலிக்கிறீங்க. அதுவே போதும் என்று படுத்து கண்ணை மூடினாள். சத்யா அவளை நன்றாகவே பார்த்துக் கொண்டான். இனி உடலளவில் அவளை காயப்படுத்தக்கூடாது என நினைத்துக் கொண்டான். அவள் மீதுள்ள காதல் அவளுக்கு காய்ச்சல் என்றவுடன் வெளியே வந்து விட்டது அவனுக்கே தெரிந்தது. அவனுக்கு தியா மீது கோபம் இருந்தாலும் அவளை தவிர்க்க முடியவில்லை. அவள் இல்லாமல் தான் இல்லை என்று தோன்றியது. மறை, காயத்ரி அவளை பார்த்து விட்டு சென்றனர்.

பிரகதி தூக்கம் கலைந்து காலை விழிக்க பதறி எழுந்தாள். அவளருகே அஜய்கிருஷ்ணா படுத்திருந்தான். சார்..என்று நகர்ந்தாள். அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனுக்கு அருகே மெதுவாக வந்தாள். என்ன நினைத்தாலோ.. அவனருகே வந்து படுத்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எனக்கு பயம் இல்லையே? கைகளை பார்த்து நடுக்கம் இல்லையே? என்று கைகளை தூக்கி பார்த்தாள். பின் அவனை பார்த்து அவனை நெருங்கி படுத்துக் கொண்டு கைகளை அவன் மீது போட்டாள். அவன் அசைய கண்களை மூடி விட்டு..மறுபடியும் திறந்து பார்த்தாள். அவன் துங்கிக் கொண்டிருக்க அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. புன்னகையுடன் கையை அவன் கன்னத்தில் வைக்க சென்ற போது அவள் முகம் இருண்டது. அர்ஜூனிடம் பேசியது நினைவிற்கு வந்தது.

இல்லை சார். என் வாழ்க்கை நிரந்தரமானது அல்ல. என்னால் என்று அவள் கையை அப்படியே அந்தரத்தில் வைத்தவாரே அழ, அவள் கையை இழுத்து அவன் கன்னத்தில் வைத்துக் கொண்டு விழித்து அவளை பார்த்தான் அஜய்.

சார்..என்று விலகினாள்.

எனக்கு புரியுது. நான் இங்கிருக்கும் வரை என்னை நீ ஏத்துக்கலாமே?

இல்லை. அது சரிவராது.

ஏன், உனக்கு என் மேல் நம்பிக்கை இல்லையா? நான் என்றாவது ஒருநாள் காயப்படுத்தி விடுவேன்னு நினைக்கிறியா? என்று அவன் அவள் கையை விடாமல் பிடித்திருக்க..அவள் எடுக்க முயன்றாள்.

சார், ப்ளீஸ் விடுங்க. ஓ.கே விடுறேன். நேற்று நீ என்னை நினைக்கவேயில்லையா?

நான் எதுக்கு? அவள் சொல்லும் போதே பிரகதியிடம் கண்ணீர் வந்தது.

பதில் சொல்ல முடியாமல் அழுகிறாயா? சொல்ல பயந்து அழுகிறாயா?

அவளால் ஏதும் பேச முடியாமல் கையை உதறி விட்டு நகர்ந்து நின்றாள். எழுந்து அமர்ந்த அஜய் அவளை பார்த்தான்.

இப்ப என்னை என்ன செய்ய சொல்ற?

நீங்க வேற மேரேஜ் பண்ணிக்கோங்க.

மேரேஜா? என்று அவளை பார்த்து, நீ என்னை கல்யாணம் பண்ணிக்கோ. நானும் உன்னை மேரேஜ் பண்ணிக்கிறேன்.

என்னால முடியாது.

ஆனால் என்னால முடியும். எனக்கு மத்தவங்கள மாதிரி டயலாக் பேசத் தெரியாது. ஆனால் எனக்கு நீ பக்கத்தில் இருக்கணும். இந்த ஸ்டேட்டஸ், அப்புறம் உனக்கு நடந்தது என்று ஏதும் சொல்லாமல் என்னை கல்யாணம் பண்ணிக்கோ. உன்னோட பயம் நான் தான் என்றால் என்னுடன் நெருக்கமாக பழகி பார். இப்ப கன்னத்தை தொட வந்தேல்ல..இது போல். ஆனால் உன்னை என்றும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன்.

சார், அது வந்து..

கல்யாணத்தில் விருப்பமில்லை என்றால் முதலில் நான் கேட்டது போல் இங்கிருக்கும் வரை நான் உன்னுடனே இருக்கேனே?

சார், என்ன பேசுறீங்க?

நீ தான் கல்யாணத்துல விருப்பமில்லைன்னு சொல்லிட்ட. நான் ஊருக்கு சென்று விட்டால் வேலையால் அழைந்தே நேரம் சென்று விடும். இங்கு உன்னுடனான நினைவுகளை சேகரித்து வைத்துக் கொள்கிறேனே?

எல்லாரும் உங்களையும் தப்பா நினைப்பாங்க. உங்கள யாரும் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க.

என் மீது உனக்கு இவ்வளவு அக்கறைன்னா..நீயே கல்யாணம் பண்ணிக்கோ.

அவள் கண்கள் கலங்கியது. உங்க அம்மா, அப்பாவை நினைச்சு பாருங்களேன்.

அவங்கள பத்தியா? அவங்கள அண்ணன் பார்த்துப்பான்.

அஜய் எழுந்து பிரகதி அருகே வர, சார்… அங்கேயே நில்லுங்க என்றாள்.

உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை தான? அவனுகள மாதிரி என்னை நினச்சுட்டேல்ல அவன் கண்கள் கலங்கியது.

அதுக்கு இல்லை சார். என்னால் உங்க பேரு கெட்டுப் போயிரும்.

நான் எண்ணுவது என்னோட எதிராளிகள் பற்றி தான். ஊரை பற்றி அல்ல.

எதிராளியா?

ஆமா, என்று பேசிக் கொண்டே அவளிடம் வந்து அவளை இழுத்து கைக்குள் வைத்துக் கொண்டான் அஜய்.

சார், விடுங்க. யாராவது பார்க்கப் போறாங்க.

பார்க்கவா? என்று அவளை தூக்கிக் கொண்டு கதவை திறந்தான்.

சார்..விடுங்க..விடுங்க…பிரகதி கத்த, அனைவரும் வெளியே வந்தனர்.

கிரிஷ்..அவன் அப்பா சத்தமிட, அவரை பார்த்து விட்டு அவன் அம்மாவிடம்.. அம்மா, நாங்க வெளிய போயிட்டு வாரோம். அவளை நான் ஏதும் செய்ய மாட்டேன். நான் நேற்று சாப்பிடவேயில்லை. ரொம்ப பசியா இருக்கு. சாப்பாடு தயார் செய்யுங்க என்று சொல்லிக் கொண்டே அவன் காரை திறந்து அவளை உள்ளே போட்டு அமர்ந்து காரை எடுத்தான்.

நில்லு..அவளை தனியா எங்க கூட்டிட்டு போற? இன்பா வெளியே ஓடி வர, மற்றவர்களும் வந்தனர்.

சார், எங்க போறோம்? பிரகதி கேட்க, அர்ஜூனும் கௌதமும் இன்பாவை பார்த்து, நாங்க பார்த்துக்கிறோம் என்று பைக்கில் அஜய்யை பின் தொடர்ந்தனர்.

அஜய் அவன் ஊருக்கு பக்கத்து ஊரில் காரை விட்டான். கார் அங்கிருந்த பாழடைந்த வீட்டினுள் செல்ல, அர்ஜூனும் கௌதமும் வேகமாக பைக்கில் இருந்து இறங்கினார்கள்.

பிரகதியை இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான் அஜய். அஜய் பாதியிலே நிற்க, ஹாலை அடைந்து திகைத்து நின்ற பிரகதி அஜய்யை தேடி அவனை பார்த்து ஓடி வந்து அணைத்துக் கொண்டாள்.

இவனுக தான உன்னை? என்று பல்லை கடித்தான் அஜய். அவள் அழுது கொண்டிருக்க, அவளது உடல், கை, கால், இதழ்கள் நடுங்கியது.

பாரு..இவனுக தான நல்லா பார்த்து சொல்லு? அஜய் கத்த, அர்ஜூனும், கௌதமும் திகைத்து நின்றனர். போலீஸ் பிடித்தவனை தவிர மற்ற நால்வரும் நன்றாக சுற்றிக் கொண்டிருந்திருப்பார்கள்.

பாரு வீட்டிலிருந்து கிளம்பிய அஜய் இவர்களை பிடித்து அடித்து துவைத்து காரில் போட்டு வந்து கொண்டிருக்க, இடையிலே பார்த்த பிரதீப், சைலேஷை காரில் ஏற விடாமல் சமாளித்து, அவர்களை அவன் ஊர் வந்ததும்..நான் ஒருவரை பார்க்கணும் வாரேன் என்று காரை அங்கேயே விட்டு நடந்து திரும்பி பார்க்க, சைலேஷ், பிரதீப் கிளம்பினார்கள். உடனே காருக்கு ஓடி வந்து காரை எடுத்து இந்த வீட்டிற்கு அவர்களை கொண்டு வந்திருப்பான்.

அஜய் சொன்னான் என அவனை கட்டிக் கொண்டே அவர்களை பார்த்தாள் பிரகதி. இரத்தம் வரும் வரை அடித்து தலைகீழாக கட்டி தொங்க விட்டிருந்தான் அஜய். அவனை விலக்கி பிரகதி அவர்களை பார்த்தாள்.

இவனை என்ன செய்யலாம்? சொல்லு..அஜய் கேட்க, நான் சொல்லவா? குரல் கேட்டு மூவரும் திரும்ப அஜய் மட்டும் அமைதியாக நின்றான்.  தீனா வந்திருந்தான்.

பரவாயில்லை. சும்மா தான் பேசுறீங்கன்னு நினைச்சேன். சரியாவும் நல்லாவும் செஞ்சுட்டீங்க? அர்ஜூன் சரி தான? தீனா உள்ளே வந்தான்.

அண்ணா, சார்..என்ன நடக்குது? அர்ஜூன் கேட்க, உனக்கு புரியலையா? அஜய் கேட்க, புரியுது சார். ஆனால் அவனை தான் பிடிச்சிட்டோமே?

யார் இவனோட அந்த பையத்தியக்கார ப்ரெண்டா? அவனை சென்னைக்கு அழைத்து சென்றதே தப்பு அர்ஜூன். அந்த சிறையில் அவனுக்கு ஏக கவனிப்பு. முதல்ல அவனை கொல்றதை விட..அவனுக்கு பயத்தை காட்டுவோம் என்று தீனா சொல்ல, கௌதம் அஜய்யை பார்த்தான்.

டாக்டர் சார், நீங்க உயிரை காப்பாற்றுபவர். நான் நீதி வாங்கி தருபவன். நான் நீதிபதி ஆகக்கூடா து. ஆனால் என்ன செய்வது? இவனுகள சும்மா விட மனசு இடம் கொடுக்க மாட்டேங்குது என்றான் தீனா.

இவனுக மாதிரி பொறுக்கியை தண்டிக்க சட்டம் சொன்னாலும் அதை யாராலும் செயல்படுத்த முடிவதில்லை என்ற அஜய்..அர்ஜூனை பார்த்து,

அவ பட்ட கஷ்டம் எல்லாத்துக்குமே காரணம் அவனும் இவனுகளும் தான. முதல்ல முதலை குட்டிகளை அழிச்சிட்டு..அப்புறம் பெரிய முதலையை பிடிக்கலாம். இது வளர்ந்தால் நம்மையே விழுங்கிடும் அர்ஜூன் என்று சைக்கோ போல் அஜய் பேச்சின் தோரணையை பார்த்து பிரகதி பயந்து அர்ஜூனிடம் வந்தாள்.

அஜய் பிரகதியை பிடித்து இழுத்து, உன்னால எதையும் மறக்க முடியலைல்ல. நீ தான் இவனுகள கொல்லணும்.

நா..நானா? வார்த்தை வாய்க்குள் செல்ல, என்னால முடியாது என அழுதாள்.

உன்னால என்ன தான் முடியும்? கத்தினான் அஜய். எதற்கெடுத்தாலும் முடியாது. கடந்த காலம் முடிந்தது விடு என்றால் முடியாது. என்னை கல்யாணம் பண்ணிக்கோ? கேட்டால் முடியாது. உன் வாழ்க்கையை அழித்த இந்த பொறுக்கிகளை கொல்ல சொன்னால் அதுவும் முடியாது. என்ன தான் முடியும்? சீற்றமுடன் அவன் கத்த, அவள் அழுதாள்.

எதுக்கு அழுற? நீ அழுறதுக்காக இவனுகள பிடிச்சிட்டு வந்தேன்?  உன்னை எப்படி கஷ்டப்படுத்துனாங்க. நீ அப்படியே இவனுகள விடுவதா. நீ எல்லாரையும் கொல்லும் போது அந்த நினைவுகளை அழைச்சிரு. இனி உன் வாழ்க்கையில் நான் மட்டும் தான் இருப்பேன் அஜய் சொல்ல, கண்ணை துடைத்து, தயங்கியவாறு அஜய்யை பார்த்தாள்.

அஜய்க்கு அவளின் குழந்தை மீதான பாசம் நினைவு வந்து, உனக்கு மறந்து போச்சுல்ல. என்னோட பாப்பா..பாப்பா.ன்னு சொல்லிக்கிட்டு இருந்த. அந்த பாப்பா உன் வயிற்றில் இருக்கும் போது கொன்னவனுக இவனுக. பாப்பா ரொம்ப கஷ்டப்பட்டிருக்குன்னு அன்று சொல்லிக்கிட்டு இருந்த? உனக்கான வலியை விட..வளரும் முன்னே கொன்ற இவனுகள கொல்ல வேண்டாமா? அஜய் சத்தமிட, அவள் அழுது கொண்டே அவனிடம் வந்து நான் கொல்கிறேன் என்றாள்.

ஏய்..நான் யாருன்னு நினைச்சீங்க? ஒருவன் கத்தினான். தீனா அவனை வாயிலே குத்து விட, அவன் வாயிலிருந்து இரத்தம் கொப்பளித்தது.

எனிபடி கெல்ப்? ஒருவன் கத்த..யாரும் இங்க வர மாட்டாங்க. நாம பள்ளத்தாக்குக்கு இடையில் இருக்கும் காட்டில் இருக்கோம். கத்தாத…இங்க மிருகங்கள் இருக்கும். வந்துறாம..அஜய் சொல்ல,

நான் கத்தி அனிமல் வந்தா..முதல்ல நீங்க தான் சாவீங்க அவன் சொல்ல, இதுக்கு ஏற்பாடு பண்ணாம வருவோமா? தீனா கேட்க, அவன் கோபமாக கத்தினான்.

தீனா துப்பாக்கியை தூக்கி எறிய அஜய் அதை பிடித்து பிரகதியிடம் கொடுத்தான். வேண்டாம் சார் என்று அவர்களிடம் வந்த அவள் மரக்கட்டைகளை எடுத்து சினமுடன் அவர்களை அடிக்க,

எதுக்குடா நிக்கிறீங்க? வாங்க..என்று தீனா அர்ஜூன் கௌதமை அமர வைத்தான். இருவருமே அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவள் அடித்துக் கொண்டிருக்க, அஜய் அவளிடம்..நடந்த அனைத்தும் இப்பொழுதே மறைய போகிறது என்று சொல்லிக் கொண்டே கௌதமை பார்த்தான். அவன் புரிந்து கொண்டு அவள் அனைத்தையும் மறக்க எந்த உபகரணமும் இல்லாமல் அவள் மனதை பேசியே மாற்ற ஹிப்னட்டைஸ் பண்ண, அவளும் அடித்துக் கொண்டே மயங்கினாள். அவளுக்கு நடந்தது கெட்ட கனவாக தான் இருக்கணும் அஜய் எண்ணிக் கொண்டே பிரகதியை தூக்கினான்.

சற்று நேரத்திலே அவளை விழிக்க வைத்தனர். அவள் எழுந்து அவர்களை பார்த்தாள். அவர்கள் மயக்கத்தில் இருந்தனர். உண்மையிலே அவளுக்கு அனைத்து கனவாக தெரிய, அனைவரையும் பார்த்தாள்.

சார், எனக்கு என்னாச்சு? உடம்புக்கு ஒரு மாதிரி இருக்கு அஜய்யிடம் கேட்டாள்.

அதுவா? உனக்கு வந்த கனவால் தான் இப்படி இருக்கு. வீட்டுக்கு போய் ஓய்வெடுத்தால் சரியாகிடும் என்று தொங்கிக் கொண்டிருப்பவர்களை பார்த்து, சார் இவங்களுக்கு என்னாச்சு? என்று எழுந்து முடியாமல் அவன் மீதே சாய்ந்து கொண்டாள்.

நான் அடிச்சே கொன்னுட்டேனா? அவள் கேட்க, என்ன? உனக்கு எல்லாமே நினைவிருக்கா? என்று கௌதமை முறைத்தனர்.

சார், நான் சைக்காட்டிஸ்டு இல்லை. என்னால் முடிந்ததை முயற்சி செய்தேன்.

அஜய் நொந்து போனான். பிரகதி அவனை பார்த்து விட்டு, சார்..இவங்க யாரையும் எதுவுமே செய்ய வேண்டாம்.

ஏம்மா? தீனா கேட்க, நாம இருப்பது காடு தான? மிருகங்கள் வரும் தான?

ஆமா..அஜய் சொல்ல, அப்ப நாம இப்பவே போகணும்.

அர்ஜூனும் ஆமாம், வாங்க இங்க இருப்பது ஆபத்து என்று அர்ஜூன் கௌதம் கையை பிடித்து வெளியே அழைத்து செல்ல, வாங்க சார், நாமும்  போயிடலாம் என்று அஜய் தீனாவிடம் மிருகங்களுக்கு மனித ரத்த வாசனையை உணரும் சக்தி இருக்கு. இவங்க உடம்புல இரத்தம் அதிகமா வெளியேறு..இப்பவே மிருகங்கள் வரும் வாய்ப்பு இருக்கு என்று அஜய் கையை பிடித்து இழுத்தாள். அவன் புன்னகைத்து தீனாவை பார்த்தான். ஐவரும் வெளியே கார் இருக்கும் இடத்திற்கு காட்டை விட்டு ரோட்டருகே வந்தனர்.

சார், தீனா அங்கிருந்த மலையில் வேகமாக ஏற, சார் என்ன செய்றீங்க? கௌதம் கேட்டான். மேலிருந்து குதித்த தீனா..அங்கிருந்த சிசிடிவிக்களை சைலன்ஸ் துப்பாக்கியால் சுட்டான்.

அண்ணா, இதை விட்டுட்டீங்க? அர்ஜூன் கேட்க, அதையும் உடைத்தனர். தூரத்தில் கத்தும் சத்தம் கேட்டு அவர்கள் தூரத்திலிருந்து அவ்வீட்டை பார்த்தனர். மரங்கள் மட்டும் தான் தெரிந்தது. அவர்கள் கதை முடிந்திருக்கும் என்று தீனா சொல்ல..அவரவர் காரில், பைக்கில் ஏறினர். பிரகதி ஆடையில் இரத்தக்கறை இருக்க..போகும் வழியில் உடையை வாங்கி மாற்றி விட்டு அவளது ஆடையை கார் டிக்கியில் போட்டான் அஜய்.

அஜய் காரை ஓட்டிக் கொண்டே பிரகதி கையை பிடிக்க, அவள் ஏதும் பேசாமல் அவனை பார்த்தாள். இப்ப உனக்கு எப்படி இருக்கு?

மனம் லேசா இருக்கு. ரொம்ப தேங்க்ஸ் சார். ஆனால் கல்யாணம் வேண்டாமே?

காரை நிறுத்தினான். நீங்க சொன்னது போல் இந்த ஊரில் நீங்கள் இருக்கும் வரை அங்கிள், ஆன்ட்டி சம்மதத்தோடு நம் நினைவுகளை சேகரித்து வச்சுக்கோங்க. பிரச்சனை முடியவும் நான் யாரும் தெரியாத இடத்திற்கு சென்று என் வாழ்க்கையை ஆரம்பிக்க போகிறேன். அர்ஜூன் படிக்க உதவுவதாக சொன்னான் என்று அஜய்யை பார்த்தாள். அவனுக்கு கஷ்டமாக இருந்தாலும் கொஞ்ச நாட்கள் அவளுடன் நாட்களை கழிக்கலாமே? என்று எண்ணியவன் அவளை நெருங்க, பிரகதி அமைதியாக அவனை பார்த்தாள். அவள் கண்களை பார்த்துக் கொண்டே அஜய் பிரகதிக்கு முத்தம் கொடுத்தான். அவளும் கொடுத்தாள். இவர்கள் முடிவை அஜய் பெற்றொர்கள் ஏற்றுக் கொள்வார்களா? பார்க்கலாம்.

அவர்களுடைய முடிவில் அஜய் பெற்றோருக்கு விருப்பமில்லை என்றாலும் பிரகதியை பிடித்ததால்..எல்லை மீறக் கூடாது என்ற கண்டிப்பை அறிவித்தது மட்டுமல்லாமல் அவர்களை கவனிக்கவும் செய்தனர்.

பாரு வீட்டில் குகனை எழுப்பிய பாருவை பார்த்து, மெய் மறந்து அவன் கண்களை கசக்கிக் கொண்டு மீண்டும் அவளை பார்த்து, நம் பாருவா? என்னை எழுப்ப வந்திருக்காலா? அதுவும் புடவையில்..என்று காபியை வாங்காமல் இருக்க, பக்கத்திலிருந்து மாமா..இன்னும் உங்களுக்கு விடியவில்லையா? புகழ் சத்தம் கேட்டது. அவன் அருகே அமர்ந்து..என்ன மாமா பாக்குறீங்க? காபி குடிங்க என்று பாருவை பார்த்து,

அச்சோ..அக்கா, நீ இரு. நான் மறந்துட்டேன் என்று வெளியே ஓடினாள். அவன் பக்கத்தில் யாருமே இல்லை. என்னுடன் உறங்கிய யாருமே இல்லையே? குகன் கேட்க, அவங்க எல்லாரும் வெளிய இருக்காங்க. வெளியவா? என்று குகன் எழுந்தான். அவனை மறித்து, சார் இதை குடிங்க. அப்புறம் அவர்களை பார்க்கலாம்.

நான் வெளிய போய் குடித்துக் கொள்ளவா? அவன் கேட்க, நீங்க இங்கேயே குடிக்கலாம் என்று அவனை அமர சொல்லி காபியை கொடுத்து விட்டு, அவள் விரிப்புகளை மடித்து அடுக்கினாள். அவளை மேலிருந்து கீழாக பார்ப்பதும் திரும்பிக் கொள்வதுமாக குகனை பார்த்த பார்வதி அவனருகே வந்து அமர்ந்தாள்.

குடிச்சிட்டீங்களா சார், போய் குளிச்சிட்டு வாங்க. தேவையான எல்லாமே இங்கேயே இருக்கு என்றாள்.

நான் இங்கே எப்படி குளிப்பது?

ஏன் சார், உங்களுக்கு சவர்..வசதி எல்லாம் வேண்டுமா? கேட்டாள்.

அதுக்கில்லை. நீங்க கிளம்புங்க. குளிச்சிட்டு வாரேன் என்றான்.

ஓ..நான் இங்கே இருப்பது தான் பிரச்சனையா? அவன் அவளை பார்க்க, இனி ஒரே வீட்ல தான தங்கப் போறோம். அப்புறம் என்ன? அவள் கேட்க,

நான் வீட்டிற்கு வரலை. நேராக உங்க ப்ரெண்ட்ஸோட ஆபிஸ் போயிடுவேன்.

நானும் தான் வருவேன்.

புகழ்? அவன் கேட்க, அவளை கிமிஷ்னர் அங்கிள் பார்த்துக்கிறேன்னு சொன்னாரு.

ஓ..என்றவன் எழுந்து வெளியே செல்ல பார்க்க, இடையே வந்து நின்றாள் பாரு. அவள் கண்களை நேராக பார்த்த குகன் வேகமாக பின்னே நகர்ந்தான். அவள் மடித்து வைத்தவை அவனை தட்டி விட..அவன் கீழே விழ அவனை பிடித்த பாருவும் அவன் மீதே விழுந்தாள். குகன் கை நேராக அவள் இடையை பிடித்து விட, அவள் பயந்து எழுந்தாள்.

சாரி, சாரி..என்று அவன் குளியலறைக்குள் சென்றான். அவள் பயந்தாலும் அங்கேயே இருந்தாள். குளித்து வந்த குகன் அவளை பார்த்து, நீங்க வெளிய போகலையா?

நீங்க என்னை அவாய்டு பண்ற மாதிரி இருக்கு. எல்லாரை போலவும் சாதாரணமாக பேசுங்க. அப்ப தான் உங்களுடன் பேசவாது முடியும் என்று சொல்லி விட்டு வெளியேறினாள் பாரு.

சரணுடன் காதல், மோதல், நட்பு அனைத்தும் இருந்திருக்கும். ஆனால் வெட்கம் பாருக்கு அவனை பார்த்து இருந்திருக்காது. ஆனால் குகனிடம் தோன்றியது.

பாரு பதட்டமுடன் வெளியே வந்தாள். அக்கா..என்று புகழ் அவளிடம் வந்து, ராஜூவ் வாரானாம். சொன்னா கேட்டவே மாட்டேங்கிறான். கிளாசை கட் பண்ணிட்டு வரான். அவன் அம்மாவுக்கு தெரிஞ்சா என்னை தான் திட்டுவாங்க. எதையாவது சொல்லி அவனை சீக்கிரம் அனுப்பிடுக்கா என்றாள்.

குட்டிப்பிசாசு எங்க இருக்க? சத்தமிட்டுக் கொண்டே வந்தான் ரெளத்திரன்.

அக்கா, போச்சு..சீனியரை எதுக்கு கூட்டிட்டு வந்தான்? செத்தேன் என்று உள்ளே ஓட, சீனியர் இருங்க நானும் வாரேன் என்று ராஜூவ் அவன் பின் ஓடி வந்தான்.

புகழ் நில்லு..என்று அவளை பாரு வெளியே அழைத்து வந்தான். பாருவை பார்த்து அமைதியான ரௌத்திரன்..அக்கா நேற்றே வர நினைத்தோம். ஆனால் பிராஜெக் சப்மிட் பண்ண இருந்ததால் முடியவில்லை..என்று அவள் பின்னே ஒளிந்திருந்த புகழை பார்த்து வெளிய வா..என்றான்.

என்னாச்சு ரௌ? பாரு கேட்க, நாங்க மீட் பண்ற இடத்துல பிராஜட் பண்ணிட்டு இருந்தோம். ஐஸ்கிரீம் அரா கேட்டாள். அதனால எல்லாருக்கும் வாங்க போயிருந்தோம். வந்து பிராஜெக்டை தேடினேன்.  பையில் வைத்ததாக இந்த குட்டி பிசாசு சொன்னான்னு விட்டுட்டேன்.

நேற்று காலையில் பைல்லை எடுத்து பார்த்தாள். அனைத்திலும் இங்க்கை கொட்டி வச்சிருக்கா. முதல்லவே சொல்லி இருந்தா நான் தயார் செய்திருப்பேன். ஆனால் முடியாமல் நேற்று காலை விடுப்பு எடுத்துட்டு வீட்டில் வைத்து அனைத்தையும் முடித்து மதியம் தான் காலேஜ் போனேன். அங்க போனா எல்லாரும் முடிச்சு ஏற்கனவே பிரபசரிடம் கொடுத்துட்டாங்க.

மேம் ரொம்ப திட்டுனாங்க. எனக்கு இன்டர்னல்ல மார்க் போகப் போகுது.

சாரி சீனியர் என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனருகே வந்து, பிராமிஸா நான் எதுவுமே செய்யலை. எல்லாமே முருகேஷ் வேலை தான். நான் என் பேனாவில் இங்க் ஊத்திக்கிட்டு இருந்தேனா? அவன் தான் என்னிடம் வம்பு செய்றேன்னு என்னை தள்ளி விட்டான். அதில் தான் இங்க் கொட்டிருச்சு சாரி..

அவனும் சரி விடு. அடுத்ததை உடனே சப்மிட் செஞ்சுட்டா போச்சு என்றான்.

ரொம்ப அழுதியா? நைட் தூங்கலை போல? அக்கறையுடன் கேட்க, ராவா அவனை முறைத்துக் கொண்டிருந்தான். அவள் முகம் வருத்தமாக.. இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே குகன் வெளியே வந்து ராவணிடம் சென்றான்.

அக்கா, நீங்க மாமா வீட்டுக்கு போனீங்களா?

இல்லை என்று தலையசைத்து உள்ளே செல்ல, அவர்களும் உள்ளே சென்றனர். குகனின் அம்மாவும் அப்பாவும் உள்ளே சென்று அமர்ந்தனர். அதற்குள் குகனை பற்றி பாரு சொல்ல..இருவரையும் ராஜூவ் பார்த்து விட்டு,

புகழ் அப்ப இனி உன்னை பார்க்க முடியாதா? அவன் வருத்தமாக கேட்டான்.

உள்ளே வந்த சுந்தரம்..யார் சொன்னா? கொஞ்ச நாள் தான். ஆனால் வேற ஸ்கூல்ல தான் புகழ் சேரப் போறா? ஆனால் அவளோட ப்ரெண்ட்ஸ் எப்ப வேண்டுமானாலும் எங்க வீட்டுக்கு வந்து பார்க்கலாம்.

புகழ் அவரிடம் வந்து அவரை அணைத்துக் கொண்டு, தேங்க்ஸ் அங்கிள் என்றாள்.

இதுக்கு எதுக்கும்மா தேங்க்ஸ்? நாம எல்லாரும் ஒரே குடும்பமாகப் போறோம். இதில் என்ன உள்ளது? அவர் கேட்க, கமிஷ்னர் சார் நீங்களா? என்று ரௌத்திரன் எழுந்தான்.

உட்காருப்பா..நீ என்ன படிக்கிற? அவர் கேட்க, மற்றவர்களும் உள்ளே வந்தனர். குகனும் ராவணும் அவனையே கவனிக்க..அவன் அவனை பற்றி எல்லாம் சொல்ல, சீனியர்..நீங்க எதையோ மறந்துட்டீங்க போல? புகழ் கேட்க,

என்ன? அவன் கேட்டான்.

சீனியர், உங்க..உங்க..இழுத்தாள்.

ஷ்..என்று ராஜூவ்வை பார்த்தான்.

என்ன சீக்ரட்டா? ராவண் கேட்க, சீக்ரட்டெல்லாம் இல்லை என்று புகழை முறைத்தான்.

சீனியர், அவங்ககிட்ட நான் வேண்டுமானால் சாரி சொல்லிடவா?

வேண்டாம். நீ செய்த வேலையில் கோபமா தான் இருந்தா. நானே பார்த்துக்கிறேன். அவள் பாதி முடித்து கொடுத்தாலே. அடுத்த முறை அவளை பார்க்க வரும் போது தயாரா வா..

நீங்க தான் சீனியர் பயப்படணும். நான் எதுக்கு பயப்படணும்?

அதுவும் சரிதான்.

ரௌத்திரன் அருகே வந்த புகழ் அவன் தோளில் கையை போட்டு, அவன் காதில் ஏதோ சொல்ல, அவன் புன்னகையுடன் முயற்சி செய்து பார்க்கிறேன்.

அக்கா, எதுவும் கெல்ப் வேணும்ன்னா சொல்லுங்க?

ஏன் சீனியர்? காலேஜை விட்டுட்டு வந்து கெல்ப் பண்ண போறீங்களா? ராஜூவ் கேட்க,

நீ பேசாதடா. இன்று எதுக்குடா விடுப்பு எடுத்த?  உன்னோட அம்மாவுக்கு தெரிஞ்சா..எனக்கு தான் அர்ச்சனை பண்ணுவாங்க புகழ் அவனை திட்டினாள்.

நானே நேற்று வர முடியாத வருத்தத்தில் இருக்கேன்.

ரொம்ப நடிக்காதடா. தெளிவா தெரியுது புகழ் சொல்ல..

நான் நடிக்கலடி..என்று அவளை அணைக்க வந்தான் ராஜூவ். புகழ் அருகே குகன், ராவா, நந்து வந்து நின்று அவனை முறைத்து பார்த்தனர். அவன் பின்னே விலக, அனைவரும் அவர்களை தான் பார்த்தனர்.

புகழ் மூவரையும் பார்த்து சிரித்தாள்.

சிரிக்கிறியா? என்று ராஜூவ்..ப்ரெண்ஷிப் ஹக் தான். வேறெதுவும் இல்லை என்றான்.

அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் நந்து சொல்ல, ரௌத்திரன் அவர்களை பார்த்து நீங்க எல்லாரும் புகழுக்கு என்ன வேண்டும்? கேட்டான்.

சீனியர், மூவருமே எனக்கு மாமாக்கள் என்று அனைவரையும் அறிமுகப்படுத்த..அவன் எழுந்து தாத்தா பாட்டி காலில் விழுந்து ஆசி பெற்று விட்டு, அவங்களை பார்த்துக்கோங்க என்று குகனை பார்த்து, உங்க நம்பர் தர்றீங்களா? கேட்டான்.

உனக்கு எதுக்கு அண்ணனோட நம்பர்? ராவண் கேட்க, தேவைப்படும் என்றான் சுருக்கமாக.

எதுக்கு தேவைப்படப் போகிறது? ராவண் கேட்க, நந்து அவனை பார்த்து..அண்ணா நம்பர் தான கேட்கிறான்? இதுல என்ன இருக்கு?

இருக்குதோ? இல்லையோ? அண்ணா..நம்பரெல்லாம் கொடுக்காதே என்றான் ராவண்.

கொடுத்தா தான் என்னவாம்? சுந்தரம் கேட்க, புகழை பார்த்துக் கொண்டே வேண்டாம்ன்னு தோணுது என்றான்.

ராவா, சும்மா இரு என்று குகன் அவனிடம் கொடுத்து விட்டு அவன் நம்பரையும் வாங்கிக் கொண்டான்.

தேங்க்ஸ் மாமா..என்று புகழ் குகனை அணைக்க, ஏய் என்னடி பண்ற? பசங்க எல்லாரையும் கட்டிப் பிடிச்சுக்கிட்டு இருக்க? பாட்டி எழுந்தார்.

பாட்டி..நான் யாரை விழுங்கி விட மாட்டேன். என்னோட மாமா, ப்ரெண்ட்ஸ் தான?

இதெல்லாம் சரியில்லை பாட்டி சொல்ல, பாட்டி நான் பழகி அவங்கள பத்தி தெரிஞ்ச பின் ஹக் பண்ணுவேன். பசங்களிடம் அப்படியெல்லாம் அதிகமா இருக்காது. சீனியரிடம் கேளுங்க?

எப்படியானாலும் பண்ணக் கூடாது பாட்டி சொல்ல, பாட்டி அவளை விடுங்களேன் என்ற குகன்..புகழிடம் என்ன தான் பழகினாலும் முழுதாக ஒருவரை பற்றி தெரிந்து கொள்வது முடியாத காரியம். எல்லாரும் வெளிப்படையாக நடந்துக்க மாட்டாங்கடா..என்றான்.

மாமா, நீங்களும் பாட்டியோட சேர்ந்து பேசுறீங்க?

இல்லயே பாட்டி சொன்னதுக்கு நான் சொல்லலை. உன்னோட நல்லதுக்காக சொல்கிறேன். கேட்டுக் கொள்வதும் கேட்காமல் இருப்பது உன் விருப்பம் என்றான்.

மாமா..உங்களுக்கு தெரியாது. அக்கா வேலை முடிந்து வர நேரமாகும். என்னோட ப்ரெண்ட்ஸூம் சீனியர்ஸூம் தான் என்னை வீட்டில் பத்திரமா விட்டுட்டு அவங்க வீட்டுக்கு போவாங்க.

புரியுதும்மா. நான் யாரையும் குறை சொல்லலை என்று அவன் சொல்லிக் கொண்டிருக்க, புகழ் அழுது கொண்டே வெளியே வந்தாள். மூன்று மாமாக்களும், பாருவும், நண்பர்களும் அவள் பின் வந்தனர்.

ஏய், குட்டிப்பிசாசு நில்லு..என்று ரௌத்திரன் ஓடி வந்து அவன் முன் வந்து, உன்னோட மாமா சொல்றது சரி தான். கொஞ்ச கொஞ்சமா பழகிக்கோ..என்றான்.

நீங்களும் அவங்கள மாதிரியே பேசுறீங்க? என்று அவனை தாண்டி அவள் அழுது கொண்டே செல்ல, ராஜூவ்க்கு உன் மேல ஃபீலிங்க்ஸ் இருக்கு என்று ரௌத்திரன் கூற, அவள் நின்று அவனை பார்த்தாள். அவன் தலைகவிழ்ந்து நின்றான்.

புகழ் யோசிக்காது ராஜூவ்வை அணைக்க, அவன் அனைவரையும் பார்த்து பயந்தாலும் அவளை அணைத்து காதலை கூற, ராவணுக்கோ சினம் மேலிட்டது. குகன் அவன் கையை பிடித்து நிறுத்தினான்.

ராஜூவ் காதலை சொன்னவுடனே அவனை விட்டு விலகி புகழ் அவனை அறைந்தாள். அவன் கண்ணீருடன் அவளை பார்த்தான். இத்தனை நாளா இதே எண்ணத்துடன் தான் இருந்திருக்கிறியா? நம்ம ப்ரெண்ட்ஸ் யாரையும் என்னால் காதலிக்க முடியாது. எல்லாரும் ப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல மட்டும் தான் இருக்கீங்க.

சீனியர் உங்களுக்கு எப்பொழுதிலிருந்து தெரியும்? கேட்டாள். நான் கல்லூரி சேர்ந்த பின் தான் எனக்கு தெரியும். சாரி புகழ். அவனே சொல்வதாக சொன்னான். அதான் உன்னிடம் நான் சொல்லலை.

புகழ்..நான் உன்னிடம் சொல்ல நினைக்கும் போதெல்லாம் ஏதாவது ஒரு தடை வந்துருச்சு. அதனால சொல்ல முடியலை. இப்படி உடனே நிராகரிக்காத. கஷ்டமா இருக்கு என்று அழுதான் ராஜூவ்.

பார்த்தேல்ல. இதுக்கு தான் நான் சொன்னேன் பாட்டி சொல்ல, பாட்டி…என்று ராவா சத்தமிட்டான். எல்லாரும் அவனை பார்க்க அவன் முகம் சிடுசிடுவென இருந்தது.

ராவா..நீ அமைதியா இரு குகன் சொல்ல..அவனையும் பார்த்த புகழ், என்னோட அக்கா லவ் பண்ணி படும் கஷ்டம் போதும். என்னால இதெல்லாம் முடியாது. அப்பாவும் அக்காவும் எனக்காக ரொம்ப கஷ்டப்பட்டாங்க. எங்களுக்கான நேரமும் குறைவு தான். அப்பா இப்ப இல்லைன்னாலும் நான் என் அக்காவுடன் அவங்க குடும்பத்துடன் சந்தோசமா இருக்க நினைக்கிறேன். காதல்ன்னு யாரும் என்னை தொந்தரவு செய்யாதீங்க. பாருவிடம் வந்த புகழ்..அக்கா இனி நீ சரண் மாமாவை பற்றி நினைக்கவே கூடாது. இந்த ஒருவாரம் உன் பக்கத்திலே நான் இருக்கணும் என்றாள்.

பாரு..தயக்கமுடன் ஆபிஸ் போகலாம்ன்னு நினைச்சேன் என்றாள்.

அதுக்குள்ள ஆபிஸா? மாமா..என்று குகனிடம் வந்து, பாருங்க மாமா. அதுக்குள்ள ஆபிஸ் போகப்போறாளாம்.

அதுக்குள்ள எதுக்கு ஆபிஸ்? நீங்க யாருமே வேலையே பார்க்கலையே?

ஆமா, ஆனால்..என்று எல்லாரையும் பார்த்து தயங்கினாள். நந்து அம்மாவிற்கு அவள் குகனுடன் பேசி பழக நினைக்கிறாள் என புரிந்து, அதனால என்ன? ஆபிஸ்க்கு போகட்டும். அதான் நாங்க இருக்கோம்ல. நானும் ஒரு அக்காவும் இருக்கோம் என்றார் ருத்ரா.

அக்காவா? என்று பாருவை பார்த்தாள். பாரு புகழ் அருகே வந்து, நாம உனக்கு எக்சாம் முடியவும் சுற்றுலா போகலாமா? நான் விடுப்பு எடுக்கிறேன் என்றாள் பாரு.

சுற்றுலாவா? அக்கா சமாளிக்க பார்க்காதே..

இல்லடா. கண்டிப்பா போகலாம் என்று சுந்தரத்தை பார்த்து போகலாம்ல அங்கிள்? கேட்டாள்.

கண்டிப்பா போகலாம். பிரச்சனை முடிந்தவுடன் என் ஊருக்கே கூட்டிட்டு போறேன் என்றார் அவர்.

உங்க ஊருக்கா?

ம்ம்..ஏலகிரி. இடம் அழகா இருக்கும். போட்டிங், பாராஸ்லைடிங் எல்லாமே இருக்கும் குகன் சொல்ல, மாமா நீங்க போயிருக்கீங்களா?

போனேன்ம்மா. உடனே வந்துட்டேன். செம்மையான கிளைமேட் என்று அவர் வர்ணிக்க, மாமா..நீங்க சொல்றதை பார்த்தால் இப்பவே போகலாம்ன்னு தோணுது என்றாள் புகழ்.

புகழ் முதல்ல அவனிடம் பேசு என்றான் குகன் ராஜூவ்வை பார்த்து. அவனருகே சென்று தள்ளி அமர்ந்தாள் புகழ். அவன் அவளை பார்த்து விட்டு தலை கவிழ்ந்து அமர்ந்தான்.

உனக்கே தெரியும்? அக்காவை அவங்க நிறைய முறை கஷ்டப்படுத்தி இருக்காங்க. உன்னோட அம்மா அதுக்கு மேல இருப்பாங்க. என்னால அக்காவை போல் பொறுமையா இருக்க முடியாது. என்னால உன்னை ப்ரெண்டை தாண்டி பார்க்க முடியலைடா என்று ரௌத்திரனை பார்த்தாள். அவனும் அமைதியாக அமர்ந்திருந்தான்.

சீனியர், உங்களுக்கு என்ன ஆச்சு? என்று அவள் கேட்க, ராஜூவ் அவனை பார்த்தான்.

இல்ல. இனி நம்ம ப்ரெண்ஷிப் அவ்வளவு தானா? அவன் கேட்க, அது ராஜூவ் பதிலில் தான் இருக்கு என்றாள். ரௌத்திரன் அவனை பார்த்தான். இனி ப்ரெண்ட்ஷிப்பும் இல்லாமல் போகுமோ? என்று ராஜூவ் புகழை பார்த்து, இனி நான் யாரையும் சந்திக்க வரலை என்று எழுந்தான். புகழ் கண்கலங்க ராஜூவ்வை பார்க்க, ரௌத்திரன் ரௌத்திரமானான். ராஜூவ்வை அவன் அடிக்க, சீனியர் வேண்டாம் புகழ் தடுத்தாள்.

சாதாரணமா ப்ரெண்ஷிப்பே வேண்டாம்ன்னு சொல்ற?

நான் என்ன செய்றது? என்னால முடியாது..அவன் சொல்ல, ரௌத்திரன் அவனை மீண்டும் அடித்தான்.

போதும் சீனியர். அவனை விடுங்க..புகழ் அவர்களை தடுக்க..ராஜூவ்வும் அவனை அடித்தான்.

நிறுத்துறீங்களா? புகழ் சத்தமிட, இருவரும் கண்டுகொள்ளவே இல்லை.

என்ன நடக்குது? ரௌத்திரா என்ன செஞ்சுக்கிட்டு இருக்க? அரா சத்தம் கேட்க, இருவரும் அடிப்பதை நிறுத்தி விட்டு அவளை பார்த்தனர். புகழ் அழுது கொண்டே அவளிடம் சென்று அவளை கட்டிக் கொண்டாள்.

அரா..என்று ரௌத்திரன் பேச..எங்க வந்து என்ன செஞ்சுக்கிட்டு இருக்கீங்க? அவங்களே கஷ்டத்துல இருப்பாங்க. நீ அவனோட பெரியவன் தான. சண்டை போட்டுக்கிட்டு இருக்க..என்று அவள் திட்ட..

அவன் என்ன சொன்னான்னு தெரியாம பேசாத அரா.

அவன் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். அதுக்காக சண்டை போடுவியா? அரா சினமானாள். ரௌத்திரன் கோபமாக செல்ல..ராஜூவ் அராவிடம், சாரி சீனியர். என்னால நீங்க சண்டை போட்டுக்க வேண்டாம். என் மீது தான் தவறு. அவன் சொல்லி விட்டு நகர, புகழ் அவனை இழுத்து, சீனியரிடம் சாரி சொல்லு என்றாள்.

நான் சரியா தான் சொன்னேன். நான் கிளம்புறேன் என்றாள்.

இல்லை. நான் தான் பிரச்சனை? நான் இனி உங்க யாரையும் பார்க்க வரலை என்றாள் புகழ்.

இருவரும் என்ன பேசுறீங்க? அரா கோபமாக கேட்டாள்.

சீனியர்..நீங்க சீனியரை போய் பாருங்க என்று புகழ் உள்ளே சென்றாள். பாருவும், குகன் தங்கைகளும் அவள் பின்னே சென்றனர். ராஜூவ் வருத்தமுடன் அங்கேயே நிற்க குகன் அவனிடம் வந்தான்.

அண்ணா, அவனிடம் உனக்கென்ன பேச்சு? ராவண் கேட்க, ராவா..நீ தலையிடாத. நான் பேசிக்கிறேன் என்ற குகன் அவனை தனியே அழைத்து சென்று அமர வைத்து பேசினான்.

Advertisement