Advertisement

அத்தியாயம் 136

அஜய் குகனிடம் பார்த்துக்கோங்க. நாங்க சரண் வீட்டுக்கு போயிட்டு வந்திடுறோம் என்றான். நாங்களும் வருகிறோம் என்று குகன் சொல்ல, வேண்டாம் சார். ஏதும் பிரச்சனையாகி விடாமல்.

அப்பா..நீங்க என்ன சொல்றீங்க? என்று தன் இரு அப்பாக்களையும் பார்த்தான் குகன். சுந்தரமும் வக்கீல் சாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, போகலாமே? என்றனர்.

இங்க யார் இருக்குறது?

அதான் நாங்க இருக்கோம்ல..நந்து சொல்ல, உன்னோட அம்மாவும் தான் வருவாங்க சுந்தரம் சொல்ல..அவன் அம்மாவை பார்த்தான். விசயம் தெரிஞ்சுட்டா இந்த மாதிரி இடத்துக்கு போகணும்ப்பா என்றார். பாட்டியும் எழ, தாத்தாவும் நாங்க வாரோம் என்றார்.

நாங்க இருக்கோம் என்று பசங்க எல்லாரும் சொல்ல, டேய்..ராவா வாடா குகன் அழைத்தான்.

நான் வரலைப்பா..என்றான். அவனிடம் வந்து புகழிடம் ஏதாவது வாலாட்டுனன்னு தெரிஞ்சது தொலச்சிருவேன் பார்த்துக்கோ.

ஏன்டா, கட்டிக்க போறவங்கல்ல..விட அவள ஏன்டா அப்படி பார்த்துக்கிற? யசோ..என்றாவது உங்கள இப்படி கவனிச்சிருப்பானா? கேளுங்க என்று அவன் வீட்டுப் பொண்ணுங்களை ராவண் ஏற்றி விட,

அவ சின்னப்பொண்ணுடா யசோ. இவன் ஏதாவது செய்தால் சொல்லுங்க என்று அவன் உள்ளே பார்த்தான். உள்ள எல்லாரும் பத்திரமா தான் இருக்காங்க என்று அவன் தங்கை கூற, மாமா இதெல்லாம் ஓவர் என்று அவன் அத்தை பொண்ணு சொன்னாள். அவன் புன்னகையுடன் தாத்தாவிடம் சென்றான்.

தாத்தா, அஜய், குகன்..அனைவரும் பார்வதி சொந்தக்காரர்களிடம் சொல்லி விட்டு கிளம்பினர். பார்வதி மனம் கனத்து இருந்தது. இப்படி தெரிந்தே என்னை விட்டு எப்படி போனான்? என்று மனம் உடைந்து இருந்தாள்.

அஜய்யுடன் அனைவரும் அங்கு சென்று சேர்ந்தனர். வீட்டினுள் நுழைந்தனர். ஏற்றி வைத்திருந்த விளக்கை பார்த்து அஜய்யும், சரண் நண்பர்களும் அழுதனர். கீர்த்தியும் ரேணுவும் அவன் அம்மா அருகே செல்ல..அவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.

அவள எங்க? கேட்டார் அவர்.

ஆன்ட்டி, அவள் அப்பா இறந்துட்டாங்க. வீட்ல தான் இருக்கா.

என்ன ஆச்சு? என்று அதிர்ந்து கேட்டார். ஆன்ட்டி சரணுக்கு நடந்ததை நினைத்து ஹார்ட் அட்டாக். உடனே இறந்துட்டார். சரண் அண்ணாவிடமும் அம்மாவிடமும் துக்கம் விசாரித்து குகன் வீட்டார் வெளியே வந்து அமர்ந்தனர்.

அஜய் அவர்களிடம் ஆபிஸ் சார்பில் பணம் கொடுத்தார். பின் அவன் எடுத்த பாலிசியை பற்றி சொல்லி பைல்லை கொடுத்தனர். அம்மா..இதை பாருங்க மலை கொடுக்க, அஜய் அதை பிடுங்கி அவனை முறைத்தான்.

என்னது? அவர் கேட்க, ஒன்றுமில்லைம்மா..என்று அஜய் வெளியே வந்தான். அதை கொடு என்று அவன் அண்ணன் பிடுங்கினான். அதை பார்த்த அவன் கண்ணீருடன் கோபமாக..பாருங்க அவனுக்கு உடம்பு சரியில்லாம இருந்திருக்கு. அதை பற்றி கூட கவனிக்காம இருந்திருக்கோம் என்று அழுதான். அஜய் அவனை அணைத்து கண்ணீருடன் ஆறுதலளித்தான். அவன் அம்மாவிற்கு கீர்த்தி விளக்கமாக சொல்ல..அவர் புலம்பிக் கொண்டே மயங்கினார். தண்ணீர் கொடுத்து எழ வைத்தனர்.

சற்று நேரம் கழித்து சரண் அம்மா..குகன் குடும்பத்தை பற்றி விசாரிக்க, குடும்பத்தை பற்றி கூறினான் அஜய். அவங்கள நம்ம சரணுக்கு எப்படி தெரியும்? அவன் அண்ணன் கேட்க, அனைவரும் விழி பிதுங்கி நின்றனர்.

தப்பா எடுத்துக்காம..இதை மட்டும் பாருங்க என்று வீடியோவை காட்ட, அந்த பொண்ணை நான் கஷ்டப்படுத்துவேன்னு சொல்லி இருக்கான்..அவர் கலங்கினார்.

அப்படி தானம்மா..பண்ண? அந்த பொண்ணு நிலைமைய யோசித்து பார்த்தியா? சரண் அண்ணன் திட்டினான்.

அண்ணா..அம்மாவை திட்டாதீங்க என்றான் விஜய்.

அந்த பொண்ணு என்ன சொன்னா? நம்ம சரண் சொன்ன பையன் அவனா? என்று வெளியே இருந்த குகனை பார்த்து கேட்டார்.

ஆமா ஆன்ட்டி, அவர் தான். பெரிய இடம் தான். ஆனால் அவர் தான் பெரியம்மா குடும்பத்துடன் இருக்காரு. ஆனால் அவங்களை அம்மா, அப்பாவா நினைக்கிறாரு என்று குகனை சந்தித்ததிலிருந்து இப்பொழுது காத்திருக்கேன் என்று சொன்னது வரை அஜய் கூறி விட்டு..பார்வதியின் பதிலையும் கூறி அவரை பார்த்தான்.

இருவருமே காதலிச்சாங்க. இப்ப அந்த பொண்ணு அவ அப்பாவையும் இழந்துட்டு தனியா இருக்கா. கண்டிப்பா துணைக்கு யாராவது இருந்தால் நல்லது தான். கல்யாணம் முடிவானால் சொல்லுங்க. என் மகனுக்கு பதில் நாங்க வாரோம் என்று மூத்த மகன் மீது சாய்ந்து அழுதார். அவர்களுக்கு சரணின் இழப்பு பெரியதாக இருக்கவே..அவன் பொருட்களை எடுத்து வந்திருப்பர் அனைத்தையும் கொடுத்தனர். அதில் ஒரு பாக்ஸ் இருந்தது. அதை பார்த்தால் பார்வதி சரண் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள். அவர் அதை அணைத்துக் கொண்டு அழுதார்.

இது என்னது? என்று சரண் அண்ணன் எடுக்க, புகழ் பெயர் போட்டு இருந்தது. அதை அஜய் வாங்கிக் கொண்டான். அம்மா..உதவி ஏதும் தேவைப்பட்டால் சொல்லுங்க என்று அஜய் தன் நம்பரை சரண் அண்ணனுக்கு கொடுத்து விட்டு கண்ணை துடைத்துக் கொண்டு வெளியே வந்தான்.

சரண் பக்கத்துல இருக்கிற மாதிரியே இருக்கு என்று அஜய் சொல்ல..ஆமா சார், எனக்கும் அப்படி தான் தோணுது என்று மலையும் அழுதான். பார்வதியை பார்க்க போகணும். அவ முன்னாடி இப்படி அழாதீங்க. சார்..நீங்களும் ஏன் சார் அழுறீங்க? விஜய் கண்கலங்க..குகன் அவர்களிடம் வந்து கிளம்பலாமா? என்று தொங்கிக் கொண்டிருந்த சரணின் சிரித்த புகைப்படத்தை பார்த்துக் கொண்டே கேட்டான். அனைவரும் கிளம்பி பார்வதி வீட்டிற்கு வந்தனர்.

அஜய்..குகனை வீட்டிற்குள் அழைத்து சென்று சரண் வாங்கிய தாலியை குகன் கையில் கொடுத்தான்.

சார், அது அவர் இடத்திலே இருக்கட்டும்.

அவன் உங்களிடம் கொடுக்க சொன்னான். கொடுத்துட்டோம். அப்புறம் நீங்களே என்ன செய்றதுன்னு பார்வதி முடிவை வைத்து பார்த்துக்கோங்க என்று பார்வதியை பார்த்தான் அஜய்.

புகழ், இந்தா இது உனக்காக வைத்திருந்திருக்கான் என்று அவளிடம் கிப்ட் பாக்ஸை கொடுக்க, அதை பிரித்த புகழ் புன்னகை கலந்த கண்ணீருடன் வலது பக்கம் திரும்பி “தேங்க்ஸ் மாமா” என்றாள். சரண், பார்வதி, புகழ் இருந்த புகைப்படம் இருந்தது. இதை பார்த்த குகனுக்கு மனம் கலங்கியது. இவள் அவனை மறக்க மாட்டாளோ? என்ற எண்ணம் உதித்தது. அஜய்யும் பார்வதியும் அவனை பார்த்தனர். கண்ணெடுக்காமல் குகன் புகைப்படத்தையே பார்க்க, அவனுக்கு கஷ்டமா இருக்குன்னு புரிந்து அஜய் வாங்க வெளிய போகலாம் என்று அழைத்து சென்றான்.

என்ன தான் இறந்தாலும்..எல்லார் மனதிலும் இந்த அளவு இருக்கிறானே? இவனை பார்வதி மறந்து என்னை மணப்பாலா? என்ற பயம் வந்தது.

வெளியே வந்தும் அவன் சிந்தனையுடன் இருக்க, மாமா..சாஞ்சுக்கவா? என்று குகன் அருகே வந்து புகழ் அமர்ந்தாள். சாஞ்சுக்கோடாம்மா..என்று குகன் அவளை சாய்த்துக் கொண்டு கவலையுடன் அமர்ந்திருந்தான். பார்வதியிடம் குகன் அம்மாக்களும் அத்தைமார்களும் சென்றனர்.

அவர்கள் அவளிடம் பேச, பாருவிற்கு குகன் அந்த புகைப்படத்தை பார்த்து வருத்தப்பட்டது நினைவிற்கு வந்து கொண்டே இருந்தது. அவள் அவனை பார்க்க நினைத்தாள். ஆனால் சுற்றி அவன் அம்மா, அத்தைகள் இருந்தனர். யோசித்தாள்.

நான் எதற்காக அவரை பார்க்க நினைக்கணும்? வருத்தப்பட்டால் படட்டும் ஒரு மனது சொல்ல, இல்ல அவர் உன்னை கல்யாணம் செய்து கொள்ள போகிறவர் நீ பார்ப்பதில் தவறில்லை என்று மற்றொரு மனது சொன்னது.

என்னாச்சும்மா? நாங்க தான் பேசிக்கிட்டே இருக்கோம். பதிலே சொல்ல மாட்டேங்கிற?

ஆன்ட்டி, அவரை பற்றி சொல்லுங்களேன்.

அவனை பற்றியா இப்ப யோசிச்ச?

இல்ல ஆன்ட்டி. ஆனால் நீங்க சொல்லுங்க?

எதுக்கும்மா?

ஆன்ட்டி, நான் உங்க பையனை கல்யாணம் பண்ணிக்கணும்ன்னா அவரை பத்தி தெரிஞ்சுக்கணுமே?

என்ன சொன்ன? கல்யாணம் பண்ணிக்கிறியா?

சார், சரண் சொன்னதுக்காக தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாருன்னு நினைச்சேன். அவருக்கு என்னை பிடிச்சிருக்குன்னா..எனக்கு அவரை ஹர்ட் பண்ண விருப்பமில்லாமல் தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு கேட்டேன்.

ஆனால் அவர் எனக்கு பிடித்தால் தான் கல்யாணம்ன்னு சொல்லிட்டார். என்னால முடியுமான்னு தெரியலை. காதலோட வலி எனக்கு தெரியுமே? அவரை காதலிக்க முடியலைன்னாலும் புரிஞ்சுக்க பார்க்கிறேன். நீங்க சொல்லுங்களேன் கேட்டாள். அவர்கள் அவளை பாவமாக தான் பார்த்தனர்.

“ரொம்ப தேங்க்ஸ்ம்மா”. அவன் கஷ்டப்படுவானேன்னு கவலையா இருந்துச்சு என்ற குகனோட அம்மா, அவனுக்கு பிடித்தது. பிடிக்காதது அனைத்தையும் சொன்னார். ருத்ராவும் பார்வதியும் கேட்டுக் கொண்டனர். அவர்களிடம் பேசி விட்டு வெளியே வந்து குகனை பார்த்து விட்டு, புகழ் உள்ள வா..என்று அழைக்க..சிலமணி நேரம் அவர்களுடன் புகழும் கலந்து கொண்டாள். அவர்கள் சென்றவுடன் பாரு புகழிடம் பேச ஆரம்பித்தாள்.

புகழ், குகன் சார் பற்றி உனக்கு என்ன தோன்றுது?

ஏன் அக்கா கேக்குற?

இல்ல..சரண் போட்டோவை அவர் பார்க்கும் இடத்தில் வச்சிருக்கியே?

நான் வேண்டுமானால் தூக்கி போட்டுறவா? அவள் கேட்க, பார்வதி அழுதாள்.

அக்கா, சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன். எதுக்கு திடீர்ன்னு இதை கேக்குற? அவள் அவன் வருத்தப்பட்டதை சொன்னாள்.

நாளைக்கு மட்டும் தானே?

நாம அவங்க வீட்ல இருக்கப் போறோம். சரண் புகைப்படத்தை பையிலே வச்சுக்கலாமா? கேட்டாள்.

அக்கா..நீ குகன் மாமாவை பத்தி யோசிக்கிற மாதிரி இருக்கு புகழ் கேட்க, எனக்கு என்ன செய்வதுன்னே தெரியலை புகழ். அவரு வருத்தப்படும் போது கஷ்டமா இருக்கு.

அக்கா, நீ சரண் மாமா புகைப்படத்தை பார்க்காமல் இருந்திருவியா?

கஷ்டம் தான். அவன் என்னை பற்றி யோசித்து சாருடன் சேர்த்து வைக்க நினைத்ததற்கு பதில் அவன் உயிரோட வாழ என்ன செய்யலாம்ன்னு யோசித்து இருக்கணும். அவனே என்னை விட்டு போக நினைத்து தான இப்படி செஞ்சிட்டு போயிட்டான். புகழ் அவன் தப்பு செய்துட்டான். தேவையில்லாமல் குகன் சார் மனசையும் கலைத்து விட்டுட்டான். என்னால இவனை மறக்கவும் முடியாது. அவரை முழு மனதோடு ஏத்துக்கவும் முடியாது.

ஏன் முடியலை? முயற்சி செய்யலாமே? அஜய் உள்ளே வர, இருவரும் எழுந்தனர்.

உட்காரு பாரு. நீ தான் சொல்றேல்ல..சரண் தப்பு செய்துட்டான்னு. அதை நீ தான் சரி செய்யணும். அவன் போயிட்டான். திரும்பி வர மாட்டான். அவருடன் தயங்காமல் நல்லா பேசிப் பாரு. உன்னோட தயக்கமும், உன்னோட காதலும் தான் அவரை கஷ்டப்படுத்துது. சரணிடமிருந்து வெளிய வா பாரு. அதான் உனக்கும் நல்லது அவருக்கும் நல்லது.

உனக்கு தெரியுமா? அவர் குடும்ப பிசினஸை மாமாக்களுடன் சேர்ந்து திறமையாக தான் செய்திருக்கிறார். ஆனால் அவருக்கு அது பிடிக்காமல் தான் போலீஸ் பயிற்சிக்கு, அவர் தாத்தாவை ஏமாற்றி சென்றிருக்கிறார். போலீஸ் பயிற்சியில் எடுத்தவுடன் ஜாப் கிடைக்காது. பரவாயில்லை..இனி முன்னேறி வந்திருவார். இப்ப கூட..என்று அஜய் நிறுத்தி..ஒரு கேஸ் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம்.

ஏன் சார், சொல்லக்கூடாத விசயமா? பாரு கேட்க, இல்லம்மா, அந்த கொலைகாரனை பிடிப்பதில் இவரும் சேர்ந்திருக்கிறார். பார்க்கலாம். அவனை மட்டும் வேகமாக பிடித்தால் நன்றாக இருக்கும்.

யாரு சார் அந்த பொண்ணு? காட்டவே மாட்டேங்கிறீங்க?

நானா காட்ட மாட்டேன்னு சொன்னேன். அவளே என்னோட காதலை ஏத்துக்க மாட்டேங்கிறா?

சார், நீங்க நேற்றிலிருந்து இங்க இருக்கீங்க? கால் பண்ணவேயில்லையா? பாரு கேட்க, ஒரு போட்டோ கூடவா உங்களிடம் இல்லை என்று புகழ் கேட்க குகனும் உள்ளே வந்தான்.

பாரு, அந்த பொண்ணு இத்தனை நாளாக கண்டுக்கிட்டதே இல்லை. திமிறெல்லாம் இல்லை. என்னை அவாய்டு பண்ண பாக்குறா? குகன் அமைதியாக அமர்ந்தான்.

அவாய்டு பண்றாளா? சார், நீங்க என்ன பண்ணீங்க?

நான் எதுவுமே செய்யலை. அவளுக்கு ஒரு பிரச்சனை. அதான் விலகியே இருக்கா.

சார், நீங்க ரொம்ப மாறியது போல் தெரியுது. போனை அதிகமா பயன்படுத்த மாட்டேங்கிறீங்க? அமைதியா பேசுறீங்க? எப்ப பார்த்தாலும் கேஸ் விவரத்தையும், அந்த திருட்டு பயலுகல பிடிக்க யோசிச்சுக்கிட்டே இருப்பீங்க? இந்த ஒரு வாரமா அந்த கொலைகாரனை தவிர எதை பற்றியும் பேசலை. காதல் படுத்தும் பாடுல்ல என்று குறும்புடன் புன்னகைத்தாள்.

பாரு..சும்மா இரு..

நோ..சார், பழைய படி சினமகனாகிடாதீங்க. நம்ம பசங்க பாவம் என்றாள். அவர்களும் உள்ளே வந்து அவளுடன் சேர்ந்து கொள்ள..சற்று நேரம் கலகலப்பாக இருந்தது. குகனும் புன்னகைத்துக் கொண்டே இடையிடையே அவளை ரசித்தான்.

பேச்சில் பாரு மும்பரமாகி விட, அஜய் கண்ணாலே குகனை அழைக்க.. இருவரும் வெளியே சென்றனர். குகனிடம் பாருவை பார்த்துக் கொள்ள சொல்லி காரில் ஏறினான். குகனுக்கு அவன் கிளம்புகிறான் என்று புரிந்தது.

காரில் ஏறிய அஜய்..பாருவிற்கு மேசேஜ் செய்தான். பாரு..ஒரு மாதம் விடுப்பு எடுத்துக்கோ. முக்கியமான கேஸ் என்றால் மட்டும் அனுப்புகிறேன். அதை பார்த்து பார்வதி வேகமாக வெளியே ஓடி வந்து அஜய்யை தேடினாள்.

நந்துவிடம் அர்ஜூன் நம்பர் வாங்கி, அவனுக்கு கால் செய்து அஜய் தனியே வருவதை குகன் சொல்ல, சைலேஷூம் பிரதீப்பும் கிளம்பினர்.

போனை வைத்த போது தான் குகனை தாண்டி பார்வதி ஓடினாள். இவனும் பின்னே சென்றான்.

என்னாச்சு? அவன் கேட்க, அஜய் சார் கிளம்பிட்டார் என்று கண்கலங்கினாள். நான் இருப்பது இவளுக்கு தெரியவேயில்லை..என்று அவன் வருத்தப்பட்டான். அவன் கையில் போனை பார்த்த பார்வதி போனை அவளாக எடுத்துக் கொண்டு அஜய்யை அழைத்தாள்.

சொல்லுங்க சார்..அவன் கேட்க, கோபமாக சார்..எதுக்கு பணம் அனுப்புனீங்க? கேட்டாள்.

பாரு, உனக்கு தேவைப்படும்.

சார், எனக்கு வேண்டாம். இருப்பதே போதும். ஒரு மாதம் விடுப்பு எடுக்க சொல்றீங்க? ஒருநாள் லீவ் போட்டாளே திட்டுவீங்க.

இல்லம்மா. ஆபிஸ்ல கஷ்டமா இருக்குமே?

சார், அங்க நான் மட்டுமா இருக்கப் போகிறேன் எல்லாரும் இருக்காங்க. சார் கூட அங்க தான் இருக்கப் போறார். என்னால விடுப்பு எடுக்க முடியாது. நான் நாளையே ஆபிஸிற்கு போகணும்.

நாளைக்கா? நீ அங்க போனா? புகழை என்ன செய்வது? அஜய் கோபமாக கேட்டான்.

அவ..சார் வீட்ல ஆன்ட்டியோட இருந்துப்பா.

ஏய், என்னடி பேசுற? கீர்த்தி போனை பிடுங்கினாள். ஒழுங்கா வீட்டுக்கு போ..என்று அவள் திட்ட, நான் சொல்றது உங்களுக்கு புரியலையா? வேலை செய்யாத போதே அங்கிருந்து அவனை மறக்க முயற்சிக்கணும். வேலை வந்தால் என்னை மீறி அவன் பெயர் என் வாயில் வந்திடும் கத்தினாள் பாரு. அனைவரும் திகைத்து அவளை பார்த்தனர். குகனால் நம்பவே முடியலை. அவனை மறக்க முயற்சிக்கணும்ன்னா இவள் சொன்னா? என்று அவளை பார்க்க, பாரு அழுது கொண்டே அறைக்குள் சென்று கதவை தாழிட்டாள். அனைவரும் உள்ளே வந்தனர்.

அப்பா..நீங்க இருந்திருக்கலாமே? அவன் போனால் என் நிலை நினைத்து நீங்களும் என்னை விட்டு போயிட்டீங்க. எனக்கு யாருமே இல்லாத மாதிரி இருக்கு என்று சத்தமாக கதறி அழ, அக்கா…கதவை திற..என்னை மறந்திட்டியா? மாமா உனக்காக காத்திருக்கேன்னு சொன்னாங்கல்ல அதையும் மறந்துட்டியா? அக்கா நீயும் என்னை விட்டு எதுவும் செய்திடாத வெளியிருந்து புகழ் அழுதாள்.

புகழ் என்னை தான் சொன்னாலா? என்று அவளை பார்த்துக் கொண்டே நின்றான் குகன்.

அண்ணா, என்ன பண்ற? ராவண் சத்தமிட, நந்துவும் அங்கே வந்து..கதவை திறங்க என்று கத்தினர். அவள் அழுது கொண்டே கதவை திறந்தாள். புகழை அணைத்து நான் எதுவும் செய்யலை. என்னால முடியல புகழ். கஷ்டமா இருக்கு. ஆனால் அவனை போலோ, அப்பா போலோ முட்டாள் தனமா நடந்துக்க மாட்டேன் என்றாள்.

அக்கா..என்று பின்னே சத்தம் கேட்க..அவள் அணைத்தவாறே நிமிர்ந்து குகனை பார்த்தாள். அவன் ஏற்கனவே புகழ் அவனுக்காக பேசியதையே கேட்டு சிலை போல் நின்றவனை பாரு அணைக்க, அவனால் மூச்சு கூட விட முடியலை.

அவனை பார்த்து ஏதும் சொல்லாமல் விலகி, புகழை அணைத்தாள். எல்லாரும் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர். பாட்டி புன்னகையுடன், அவனை கூட்டிட்டு வாங்க.

குகனை மந்திரிக்கணும் போல..அவன் அத்தை சொல்ல, இருங்க நான் வேப்பங்குலையை எடுத்துட்டு வாரேன் என்று நந்து கேலி செய்தான்.

நந்து கொஞ்ச நாளாவே அதிகமா பேசுற? அவன் அம்மா சொல்ல, மை டியர் மதர்..லவ் யூ என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டான்.

உங்க கொஞ்சலை அங்கிட்டு போய் வச்சுக்கோங்க சுந்தரம் சொல்ல, அம்மா.. அப்பாவுக்கு பொறாமையா இருக்கு நந்து சொல்ல..குகன் சுயம் வந்து வெளியே சென்றான். ராவண் அவன் பின்னாடியே ஓடி வந்து, முதல் அணைப்பு எப்படி இருந்தது? என்று அவனை கேலி செய்ய, அவன் பின் புகழ் முறைத்துக் கொண்டிருந்தாள்.

புகழ்..அது வந்து தயங்கினான் குகன்.

சார், தள்ளி நில்லுங்க என்று ராவண் தோளில் கை வைத்து அவனை விலக்கினாள்.

அண்ணா..நான் குளிக்கவே மாட்டேன் என்று ராவண் சொல்ல, புகழ் அவனை முறைத்து விட்டு, மாமா..அக்கா தெரியாமல்..

தெரிஞ்சு உன்னோட அக்கா பண்ணலைன்னு எனக்கு யாரும் சொல்ல தேவையில்லை என்ற குகன் ராவணை பார்க்க,

ஏம்மா..பொண்ணு அவன் மாமான்னா நானும் மாமா தான? மாமான்னு சொல்லு புகழ் என்று அவன் குலைய, அவனை எத்திய குகன்..கொன்றுவேன். புகழிடம் இப்படி பேசாத..சொன்னேனா? இல்லையா? அவன் கீழே விழுந்தான்.

அவள் சிரித்துக் கொண்டே சார், உங்களுக்கு தேவை தான் என்றாள்.

சார் இல்லம்மா..மாமா என்று அவன் மீண்டும் உச்சரிக்க, குகன் அவனை அடிக்க விரட்டினான். புகழ் அவர்களை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள். இதை தள்ளி நின்று பார்வதியும் மற்றவர்களும் பார்த்தனர்.

முந்தைய நாளில் பர்வத பாட்டி வீட்டில் சத்யா குடும்பத்தினரும் மறை குடும்பமும் சத்யா-தியாவுடன் இருந்தனர். ஆனால் இன்று மாலையே அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்றனர். தியாவிற்கு சத்யாவுடன் இரவில் இருக்க பயமாக இருந்தது. முதலிரவன்று பேசியது போல் பேசினால் என்ன செய்வது? பயந்துடன் இருந்தாள்.

அவள் இரவு உணவுக்காக தயார் செய்து கொண்டிருக்க, சத்யா சமையற்கட்டு வாயிலில் நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அருகே இருப்பதை உணர்ந்தாலும் தெரியாதது போல் காட்டிக் கொண்டு வேலையை முடித்து, சாப்பிட எடுத்து வைத்தாள். சத்யா ஏதும் சொல்லாமல் அமர்ந்து சாப்பிட்டு விட்டு அறைக்குள் சென்றான்.

அவள் மீண்டும் சமையலறைக்கு வந்து வேலையை முடித்து சுத்தம் செய்து விட்டு சொருகிய புடவையுடன் அறைக்குள் வந்தாள். தியா உடையை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் செல்ல..அவளை தள்ளிக் கொண்டு சத்யா முன்னே சென்றான். அவள் பயந்து அதிர்ந்தாலும் உசாராகி வெளியே செல்ல திரும்பினாள். அவளை உள்ளே இழுத்த சத்யா, அவளை அணைத்தான். அவள் அமைதியாக இருந்தாள். அவளை பார்த்து விட்டு அவன் தன் சட்டையை கழற்றினான். அவள் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதுக்கு பாக்குற? என்று அவன் கேட்டான். அவள் பயத்தை மறைத்துக் கொண்டு ஹீட்டரை ஆன் செய்யணும் என்றாள்.

அதெல்லாம் தேவையில்லை என்று குளிர்ந்த சவரை ஆன் செய்தான். அவள் கண்கள் கலங்கியவாறு நடுங்கிக் கொண்டு நின்றாள். அவளுக்கு குளிர் அதிகமாக தியா சத்யாவை அணைத்தாள். அவன் அவளை தள்ளி விட்டு, ஆரம்பம் என்னுடையதாக இருக்க வேண்டும் என்று துவாலையை எடுத்து துடைத்து விட்டு அதை கட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

அவள் கண்ணீருடன் நீரை விட்டு விலகினாள். பின் அறைக்கு வெளியே வந்து குளிருடன் துவாலையை எடுத்து அவனருகே வந்து அவன் தலையில் போட்டு விட்டு மீண்டும் உள்ளே செல்ல, மீண்டும் அவளிடம் நெருங்கி நனைந்த ஆடையை பார்த்து சொக்கி நின்றான். தியா அவன் கண்களில் இருந்த மோகத்தை பார்த்து பயந்தாலும்..நான் அவனுக்கு மட்டுமே உரியவன். அதனால் தடுக்கக்கூடாது என்று எண்ணும் சமயத்தில் அவள் முந்தனையை கழற்றினான்.

அவன் கையை தட்டி விட்டு அவளாகவே ஆடையை களைந்து அவனை பார்த்தான். திருமணத்தின் முன் இருந்த காதல் இப்பொழுது அவன் கண்ணில் தெரியவில்லை. அவன் காதலுக்காக ஏங்கிக் கொண்டிருந்தாள். ஆனால் அவன் முழுமோகமாய் அவளை அடைந்தான். அவள் தடுக்கவில்லை. ஆனால் நெஞ்சம் அடைத்து கண்ணீர் ஆறாய் ஓடியது. அன்று உங்களை எல்லார் முன்னும் பேசியதற்காக கிடைத்த தண்டனையாக ஏற்றுக் கொள்கிறேன் என்று மனதில் எண்ணி ஆறானாள். அவனுக்கு அவள் பேசியதை விட அந்த வீடியோ அவனை பாதித்தது. அது உண்மையா? பொய்யா? என்று ஆராய கூட அவனுக்கு தோன்றவில்லை. மோகம் தலைக்கேறும் போது மூர்க்கமாகவும், கோபத்தின் போது..கடித்து குதறியும் அவளை காயப்படுத்தினான்.

அஜய், சைலேஷ், பிரதீப் வீட்டருகே வர, முன்னதாகவே காரை நிறுத்திய அஜய்..நீங்க கிளம்புங்க. நான் போய்க்கிறேன் என்று அவர்கள் பேசுவதை கூட காதில் கேட்காமல் நடந்தான். இரவு மணி எட்டாகி இருந்தது.

அஜய் வீட்டினுள் நுழைய யாரும் வீட்டினுள் இல்லை. பிரகதி பற்றிய எண்ணமாக இருக்க, அவளறை பக்கம் சென்றான். பேசும் குரல் கேட்க அங்கேயே நின்றான்.

அர்ஜூனும் பிரகதியும் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்ரீயிடம் பிரோஸ் பண்ணியாமே? கேள்விப்பட்டேன். நான் எத்தனை தடவை என் காதலை சொன்னாலும் அவள் பதில் சரியாக இருப்பதில்லை. எனக்கு எப்படி அவளை ஒத்துக்க வக்கிறதுன்னு தெரியலை அர்ஜூன் புலம்ப,

அவளே உன் பக்கம் வருவா அர்ஜூன். அவள் முன் மாதிரி இல்லை. அவள் உன்னிடம் உரிமையாக தான் நடந்துக்கிறா? அவ இடத்துல எந்த பொண்ணு இருந்தாலும் ஒன்று ஓ.கே சொல்லுவா. இல்லை உன்னை விட்டு விலகி இருப்பா. ஆனால் ஸ்ரீ இரண்டாங்கெட்டான். ரெண்டுமே செய்யலை. ஒன்று மட்டும் நிச்சயம். அவளுக்கு உன்னை பிடிச்சிருக்கு. தெளிவா தெரியுது. அனுவோடயும் ரொம்ப க்ளோஸா இருக்கா. அனு அவளை அம்மான்னு அழைக்கும் அளவு நெருக்கம். அவளும் ஏதும் சொல்லலை. அர்ஜூன் அவள் காதலை சொல்ல தயங்குகிறான்னு தான் தோணுது?

தெரியலை பிரகதி. ஆனால் அவளை தவிர யாரையும் என் வாழ்வில் நினைத்து கூட பார்க்க முடியாது.

இத நீ சொல்லணுமா? உன் காதல் தான் ஊருக்கே தெரியுமே?

என்னை விடு. நீ என்ன முடிவு எடுத்திருக்க? அர்ஜூன் கேட்டான்.

அர்ஜூன், இந்த பிரச்சனை முடியவும் என்னை யாருக்கும் தெரியாத ஓர் இடத்திற்கு செல்ல நினைக்கிறேன்.

பிரகதி, அஜய் சாரை கொஞ்சம் யோசித்து பாரேன்..

அவரை நான் முன்பே சந்தித்து இருந்தால் அவர் காதலுக்கு ஒத்துக் கொண்டிருப்பேன். ஆனால் அர்ஜூன் இப்ப என்னால முடியலை.

அவரை பிடிக்கும். காதல் இருக்குன்னு ஒத்துக்கிறியா?

ஆமா, அர்ஜூன் ஒத்துக்கிறேன். எனக்கும் அவர் மீது காதல் வந்திருச்சு. ஆனால் சேர்ந்து வாழ்றதுல்லாம் கஷ்டம். என்னுடைய கஷ்டமாக நினைவுகளை அகற்றி புதிதான நினைவுகளை கொண்டு வருவதாக சொன்னார். அவரால் மறக்க வைக்க முடியும். ஆனால் அர்ஜூன் அவர் ரொம்ப கஷ்டப்படுணும். எனக்கு படுக்கையில் அருகே யாராவது இருந்தால் அனைத்து நினைவும் வரும். நானும் மறக்க ஏதேதோ செய்தும் முடியல. அன்றைய வலி என் மனதில் ஆறாத வடுவாயிற்று? இனி சரியாக வாய்ப்பேயில்லை. நான் கஷ்டப்படுறதே போதும். அவரும் கஷ்டப்பட வேண்டாம்ன்னு நினைக்கிறேன்.

அர்ஜூனை தேடி ஸ்ரீ அங்கே வந்தாள். அஜய்யை பார்த்து அவனிடம் வந்தாள். அவன் வாயில் கை வைத்து பேசாதே என்றான். இருவரும் கவனித்தனர்.

சொன்னா கேளு பிரகதி. நீ அவரை விட்டு விலக எண்ணி உன்னை நீயே கஷ்டப்படுத்தாத. யாரும் தெரியாத இடத்தில் வாழ்வது சாதாரண விசயமில்லை. உனக்கு ஏற்கனவே..

ப்ளீஸ் அர்ஜூன்..சொல்லிடாத?

இவ்வளவு பயத்தை வச்சுக்கிட்டு எதுக்கு தனியா வாழணும்ன்னு சொல்ற? நீ படி பிரகதி. இங்கிருந்தே படி..நம்ம ஏலகிரில சுத்தி நிறைய காலேஜ் இருக்கு.

படிக்கணுமா? அதுக்கு பணத்துக்கு எங்க போறது?

நான் படிக்க வைக்கிறேன் என்றான் அவன்.

ஏன்டா, உனக்கு ஏற்கனவே நிறைய வேலை இருக்கும். நீ, ஸ்ரீ, அனு எல்லாரும் படிக்கணும். இதுல எதுக்கு என்னை சேர்க்கிற? உனக்கு தான் கஷ்டம். இருக்கிற பிரச்சனை முடிஞ்ச பின்னாவது ஸ்ரீயோட சந்தோசமா இருக்க பாரு. அதை விட்டு அடுத்தவங்களுக்கு உதவுறேன் இப்படி பணத்தை செலவழிக்காதே

அடுத்தவங்களா? உன்னை தான் சொல்றியா?

அர்ஜூன்..புரிஞ்சுக்கோ. நான் அந்த அர்த்தத்தில் சொல்லலை. நாம ப்ரெண்ட்ஸ் மட்டும் தான். நீ உன்னோட குடும்பத்தை பாரு. அம்மா, பாட்டி, ஸ்ரீ, அனு, தாரிகா, அப்பா..எல்லாரும் உன் பொறுப்பு தான?

அது எனக்கு தெரியும்? நீ சொல்ல தேவையில்லை..என்ற அர்ஜூன் உன்னோட நிலைக்காகவோ? அன்றே உதவி இருக்கலாமோ? என்று பாவத்தில் இப்ப உன்னை பார்த்துக்க நாங்க வரலை என்று கோபமாக பேசினான்.

அன்று உன்னை பற்றி தெரியல. தெரிஞ்சிருந்தா அன்றே நாம எல்லாரும் ப்ரெண்டஸா இருந்திருக்கலாம்.

அர்ஜூன்..நான் அப்படி நினைக்கலை. நான் யாரையும் கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு நினைக்கிறேன்.

கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு நினைக்கிறியா? அதான் சாரை விட்டு விலக நினைக்கிறாயா? நீ விலகி சென்றால் தான் அவர் கஷ்டப்படுவார்.

அர்ஜூன்..உனக்கு புரியலை. காதலிக்கும் போது எதுவும் தெரியாது. சேர்ந்து வாழ ஆரம்பிக்கும் போது நிறைய பிரச்சனைகள் வரும். அப்பொழுது இந்த விசயத்தை இழுத்து விட்டால் மொத்த வாழ்க்கையும் அன்றோடு முடிந்து விடும். அதை விட இன்றே பிரிந்து விடுவது நல்லது தானே?

மெண்டல் மாதிரி பேசாத..

நீ சொல்லு அர்ஜூன். நீ ஸ்ரீயை வீடியோவை பார்த்தேல்ல. நீ ஸ்ரீயை வருங்காலத்தில் ஏதாவது சொல்லி விட்டால் அவள் கஷ்டம் எப்படி இருக்கும்? யோசித்து பார்.

நான் பேச மாட்டேன்.

அர்ஜூன், அதை உறுதியாக உன்னால் சொல்ல முடியாது. நம் சூழ்நிலை நம்மை மாற்றும் வாய்ப்புகள் அதிகம். ஒரு வேலை சொல்லிவிட்டால்..

சொல்லி விட்டால் நான் அவள் சரியாகும் வரை மன்னிப்பு கேட்டுக் கொண்டே இருப்பேன்.

மன்னிப்பு கேட்டால் சரியாகி விடுமா?

பிரகதி வேண்டாம். என்னை கோபப்படுத்துற?

ம்ம்..தட்ஸ் கரெக்ட் அர்ஜூன். கோபம்..இந்த கோபம் அவளை சமாதானப்படுத்தும் போது வந்தால் அவள் உடைந்து விடுவாள். அவன் புரியாமல் பார்த்தான்.

மன்னிப்பும் ஓரளவுக்கு தான் கேட்க முடியும். உன் பேச்சு வளர்ந்தால் அவள் தனக்கு யாருமில்லை என உணர ஆரம்பித்து விடுவாள். அப்படி மட்டும் நினைத்தால் வாழ்நாள் முழுவதும் உன் வார்த்தைகள் அவள் மனதில் ஓடிக் கொண்டே இருக்கும்.

நீ சொன்னது போல் உன்னை கஷ்டப்படுத்தக்கூடாதுன்னு மன்னிப்பை ஏற்று உன்னுடன் வாழ்வாள். ஆனால் உன் வார்த்தைகள் அவளை நினைக்க வைத்துக் கொண்டே இருக்கும். ஒருகட்டத்தில் மனமுடைந்து தவறாக ஏதாவது நடக்க கூட வாய்ப்பு உள்ளது.

நிறுத்து பிரகதி..என்று அர்ஜூன் கோபப்பட, பிரகதி அவனை புன்னகையுடன் பார்த்தாள். ஸ்ரீ கண்ணீரோடு அமர்ந்தாள்.

எதுக்கு சிரிக்கிற?

உனக்கு எந்த அளவு கோபம் வருதுன்னு பார்த்தேன் அவ்வளவு தான்.

அவன் முகம் மாற..நீ இப்ப பேசியது?

சும்மா உன்னை பயமுறுத்த என்றாள்.

கையை ஓங்கிய அர்ஜூன் நிறுத்தி அமைதியானான்.

அர்ஜூன்..காதல்ல..நம்பிக்கை முக்கியம். அது உன்னிடம் இருக்கு. ஸ்ரீ எத்தனை பேரிடம் பேசினாலும் அவள் மீதான நம்பிக்கை அவளுக்கு பிடித்த உனக்கு குறைந்தால் வேதனையோடு தான் வாழ்வாள். அதனால் ஸ்ரீயிடம் கவனமாக இரு.

அஜய் சார்? அர்ஜூன் கேட்க, இந்த பிரச்சனை முடியும் வரை என்ன நினைக்கிறாரோ செய்யட்டும். நான் தடுக்கலை. ஆனால் அர்ஜூன்..என்று அழுதாள்.

அவள் தோளை தட்டிய அர்ஜூன், இப்ப பேசியது சாரையும் உன்னையும்  நினைவில் வைத்து தான பேசுன?

ஆமா அர்ஜூன். எல்லாரையும் இழந்து நிற்பவங்களுக்கு தான் என் வலி தெரியும். ஸ்ரீயும் அனைத்தையும் இழந்திருக்கிறாள் உன்னை தவிர. அவளிடம் மறந்தும் தப்பா பேசிறாத?

சார், அப்படி பேச மாட்டாங்க பிரகதி, அர்ஜூன் சார் என்னை தவறாக நினைத்து பேசியது எனக்கு நன்றாக நினைவில் இருக்கு. அவரது வெறுத்த அந்த பார்வையை மறுபடியும் சந்திக்க திராணியில்லை அர்ஜூன். ப்ளீஸ் அர்ஜூன்..நான் போகணும்.

நீ போ. ஆனால் படிக்கணும்.

இல்ல அர்ஜூன்.

ப்ளீஸ் தோழனாக இதை மட்டும் உனக்கு செய்ய விடேன் அர்ஜூன் கேட்க, பிரகதி தலையசைத்தாள். அஜய் அழுது கொண்டே அவனறைக்கு சென்றான். ஸ்ரீயும் அவன் பின் செல்ல அவளை தடுத்து, நீ அவனை அழைத்து செல். நாம கேட்டது அவங்களுக்கு தெரியக்கூடாது என்று அவன் மேலே ஏறினான்.

Advertisement