Advertisement

அத்தியாயம் 135

காலையில் அஜய்யும் குகனும் பார்வதி வீட்டிற்கு வந்தனர். அவளது சொந்தபந்தங்கள் அங்கு இருக்க, குகன் தயங்கியபடி அவளை பார்த்தான். அவள் அழுது கொண்டே அமர்ந்திருக்க பக்கத்தில் புகழும் இருந்தாள். இருவரையும் பார்த்து எழுந்தாள் பார்வதி. குகன் சுந்தரத்தை தேடினான். சுந்தரம் ஒரு நெடியவனை கண்ணை காட்டினார். குகன் டிசர்ட்டில் தான் வந்திருப்பான். அவன் புருவத்தை சுருக்கி என்ன? என்று கேட்டான். அஜய்க்கு அவனை தெரியும் போல. அவனை முறைத்தவாறே மாலை போட்டு மரியாதை செலுத்தி விட்டு புகழை பார்த்தார். புகழ்..அஜய்யை பார்த்து, சார்..அக்காவை அவங்க..சொல்ல, அவளருகே வந்து கையை பிடித்து அழுத்தினான் அஜய். அவள் குகனை பார்த்துக் கொண்டே மீண்டும் அவள் அக்காவிடமே சென்றாள்.

அஜய் கண்ணசைக்க, ஒரு பெண்மணி பார்வதியிடம், ஏம்மா..உன்னுடன் பொண்ணுங்கல்லாம் வேலை பார்க்குறாங்கல்ல. பசங்க மட்டும் வந்திருக்காங்க. அவள் அஜய்யை பார்த்தாள்.

அவங்க வருவாங்க என்று சொல்லி விட்டு இருவரும் வெளியே வந்தனர். சுந்தரத்திடம் வந்த குகன், யார் அவன்? அவன் பார்வையே சரியில்லையே? கேட்டான்.

அவன் அந்த பொண்ணுக்கு மாமன் முறையாம். காரியத்தை முடித்து அவளை அழைத்து போவது போல் பேசிக் கொண்டனர். குகன் அவனை மேலிருந்து கீழாக பார்க்க அவனும் இவனை பார்த்தான்.

நேரமாகுது யாரு காரியம் பண்றது. முன்னாடி வாங்க பெரியவர்கள் அழைக்க, பார்வதி மாமனும் குகனும் முன் வந்தனர்.

யாருடா நீ? அவன் குகனை கேட்க, பார்வதி வெளியே ஓடி வந்தாள். அவள் இருவரையும் பார்க்க, அவன் அம்மா பார்வதியிடம் யாருடி இவன்? அந்த வக்கீல் பையனை காணோம்..கேட்க,

உங்களுக்கு தேவையில்லை அஜய் கூற, நீ எதுக்குப்பா எங்க குடும்பத்துக்குள்ள வர்ற?

நீங்க எதுக்கு பார்வதியை கூட்டிட்டு போக நினைக்கிறீங்க?

அவ என்னோட மருமகள்.

மருமகள்னா எப்படி? உங்க பையனை கட்டிக்க போறாளா?

ஆமா.

அப்படியா பாரு? அஜய் கேட்க, பாருவா? அவன் அஜய்யிடம் கையை ஓங்க,  குகன் அவன் கையை தள்ளி விட்டான்.

நீங்க அவளை கூட்டிட்டி போறதா இருந்தா? வேலையில்லாமல் தான் கூட்டிட்டி போகணும். எழுதி கொடுத்திரு பாரு என்று அஜய் கவரை நீட்ட, அவளும் பிரித்து கையெழுத்திட்டாள்.

ஏய், என்னடி பண்ற? கவரை கிழித்து போட்டான் அவன்.

டியா? என்று குகன் அவனை முறைத்தான்.

மாமா..வேலை எதுக்கு? உங்களுக்கு என்னை பிடிச்சு தான கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன? கேட்க,

ஆமாடி. அவனுக்கு நீன்னா கொல்ல பிரியம். ஆனால் வேலைய எதுக்கு விடணும்? நல்ல வேலை, சம்பளம்..அவள் அத்தை கேட்டாள்.

அஜய் அவங்களிடம், ஆன்ட்டி..பார்வதி உங்க வீட்டுக்கு மருமகளா வந்தா வீட்டையும் கவனிக்கணும், வேலையையும் கவனிக்கணும். அவளுக்கு வேலையில கவனமில்லாமல் போயிடும். அதான் கல்யாணம் செய்தால் வேலையிலிருந்து அகற்றுவதாக மேலிடத்திலிருந்து ஆர்டர் வந்திருக்கு. பார்க்குறீங்களா? அவன் கேட்க,

தம்பி, நீங்க தலையிடாதீங்க அவள் அத்தை சொல்ல, பார்வதி நீயே உன் அத்தைக்கு புரிய வைம்மா..என்று அவன் கூறி விட்டு நகர்ந்து நின்றான். அவளுக்கு பயமாக இருந்தாலும் தைரியத்தை வரவைத்து அவர்களிடம் பேச, அவர்கள் ஏற்றுக் கொள்வதாக இல்லை.

நீ வேலைக்கும் போகணும். என்னை கல்யாணமும் பண்ணிக்கணும் என்று அவள் கையை பிடிக்க, ஏற்கனவே காதலனை இழந்து அவனுக்காக இன்னொருவனை மணப்பதாக கூறி, அப்பாவை இழந்த பேதையால் அவனது கட்டாயத்தால் மனம் நொந்து தான் போனாள். அவள் கண்ணில் கண்ணீர் வர, பொறுக்க முடியாமல் அஜய் அவன் கையை முறிக்க, பிரச்சனை அதிகமாக போலீஸ் வந்தனர். சுந்தரம் கையை கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தார். அவர்கள் பின் ருத்ரா, நந்து வந்தனர்.

நந்துவை பார்த்த போலீஸ்காரர் நம்ம கமிஷ்னர் பையன் என்று திரும்பினால் சுந்தரம் நின்றார்.

சார்..என்று போலீஸ் இருவரும் சல்யூட் அடிக்க, நந்துவும் ருத்ராவும் அவரிடம் வந்தனர். குகன் அவர்களிடம் வந்து, அம்மா…அந்த பொண்ணை காணோம் கேட்டான்.

அவ வரலைன்னா உனக்கென்னடா? நந்து கேட்க, ஏற்கனவே பிரச்சனை ஓடிக்கிட்டு இருக்கு. தனியா விட்டுட்டா வந்திருக்க? நந்துவிடம் கேட்க, அவள் அவளோட அப்பாவுடன் இருக்கிறாள் என்று அனைவரையும் பார்த்தான்.

அர்ஜூன் வரலையா? குகன் காதில் கேட்க, சுந்தரம்..அவர்களிடம் அமைதியா இருங்கடா என்று சொல்லி விட்டு பார்வதியை அழைத்தார். அவள் அவரிடம் வந்தாள்.

நீங்க யாரு? அவன் அம்மா கேட்க, ஏம்மா..சாரை தெரியாதா? நம்ம சிட்டி கமிஷ்னர்.

சார், உங்களுக்கு இந்த பொண்ணை தெரியுமா? கேட்டனர்.

நல்லா தெரியும் என்று அவன் அம்மாவை பார்த்தார்.

கமிஷ்னரா? என்று வாயை பிளந்தனர். மாமனோட அம்மாவிடம்..உங்களுக்கு இந்த பொண்ணு மருமகளா வேணுமா? இல்லை அந்த பொண்ணு சம்பாத்தியம் வேண்டுமா? கேட்டார்.

ரெண்டுமே வேண்டும் சார்.

ஏதாவது ஒன்று சொல்லுங்க. ஒன்றா? என்று அமைதியானார்கள். குகனையும் அஜய்யையும் பார்த்து, பார்வதி மாமன் கலாட்டா பண்றாங்க சாரே.. அவங்களை உள்ளே தள்ளுங்க என்று சொல்ல..

போலீஸ் அஜய்யை பார்த்து, அஜய்கிருஷ்ணா சார், நீங்களும் இங்கேயா? உங்களுக்கு இந்த பொண்ணை தெரியுமா?

ம்ம்..தெரியும் சார். இவங்க என்னோட ஜூனியர் தான் என்று பார்வதியை காட்டினான். அவள் அவளுடைய மாமனை பார்த்தாள். அவன் கடுகடுத்தவாறு பல்லை கடித்துக் கொண்டு சினமுடன் அஜய்யை பார்த்தான்.

சார், நான் இவனை தான் உள்ளே தள்ள சொன்னேன் அவன் சொல்ல, சும்மா இருய்யா..என்று அவன் அம்மா அவன் கையை இழுத்தாள்.

யாரு சார், பிரச்சனை பண்றது? சுந்தரத்திடம் அவர்கள் கேட்க, நீங்களே காத்திருந்து பாருங்க..வாங்க நாம பார்க்கலாம் என்றார்.

அப்பா, என்ன நடக்குது? நந்து கேட்க, உன்னோட அண்ணனோட சண்டைய நீ பார்த்ததில்லையே? இப்ப பார்க்கலாமா?

என்ன சொல்றீங்க? வாங்க குகனை கூட்டிட்டு போயிடலாம் ருத்ரா சொல்ல, யம்மா..அவன் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப் போறான். அவன் தான மாமனாருக்கு எல்லாமே செய்யணும். என்ன செய்றான்னு பார்க்கலாமா?

கல்யாணமா? என்று ருத்ரா குகனருகே செல்ல நந்துவும் அவனிடம் வந்து,

அண்ணா, கல்யாணம் பண்ணிக்கப் போறியா? சொல்லவேயில்லை.

டேய், என்னடா பண்றீங்க? அவர் இப்ப தான் சொல்றார்..ருத்ரா சுந்தரத்தை முறைத்து பார்த்தார்.

அம்மா..அமைதியா இருங்க என்றான் குகன்.

அந்த போலீஸார்..நீங்க இந்த பையனை தானே மகனாக ஏற்றுக் கொண்டதா பேசுனீங்க? இப்ப இந்த பையனும் உங்க மகனா?

அட, ஆமாப்பா..அவன் என் மூத்த மகன் குகன். இவன் இளைய மகன் நந்து, என்னோட பொண்ணு..அம்மா வீட்ல அவங்களோட இருக்கா..போதுமா? நடக்குறத முதல்ல பார்த்து யாரை உள்ள தள்ளலாம்ன்னு முடிவெடு என்றார்.

அம்மா..என்னை விடு. என்னோட பாரு எனக்கு தான். இங்க ரெண்டு பேரு இருந்தானுக. இப்ப மூணு பேரா வந்துருக்கானுக..என்னடா என் பாரு பணத்துக்கு அடி போடுறீங்களா? அவன் கேட்க,

புகழ் அவன் முன்னே வந்து, யாரு அடி போட்டா..அஜய் சார்..டாப் லாயர். அவரிடம் இல்லாத பணமா? இல்லை ஜமீன்..என்று வாயெடுத்த புகழ் வாயை அடைத்த குகன்..ஷ்..சும்மா இரும்மா..என்று

நான் கமிஷ்னர் சார் மூத்த மகன். நானும் போலீஸ் தான் என்று சொல்ல, மாமா..நீங்க போலீஸா? முதல்லவே சொல்லி இருக்கலாம்ல. போலீஸ்-லாயர் அதான் இப்படி சண்டை போட்டிருக்கிறீங்களா? புகழ் கேட்க..பார்வதி அவளை முறைத்தாள்.

பொண்ணு லாயரா? என்று இடம் மறந்து நந்து சிரிக்க, டேய்..எதுக்கு சிரிக்கிற? அவன் அம்மா காதை திருகினார்.

அம்மா..இந்த உம்மண்ணாமூஞ்சிக்கு வாய் பேசும் லாயர் பொண்ணா? மாட்டினான் அவன் சிரிக்க, பார்வதிக்கு கோபம் வந்தது.

எல்லாரும் சும்மா இருங்க. நான் இவரை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன் என்றும் குகனை காட்டினாள். அதனால் அவரே அப்பாவுக்கு செய்ய வேண்டியதை செய்யட்டும் என்று சொல்லி விட்டு அழுது கொண்டே அமர்ந்தாள். புகழும் அவள் அப்பாவிடம் வந்து, பார்த்தேல்ல அப்பா.. உன்னோட தங்கச்சி பணத்துக்காக அக்காவை மாமாவுக்கு கட்டி வைக்க பாக்குது. நான் சொல்லும் போதே கேட்டிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது பேசிக் கொண்டே அழுதாள். அவளுடைய தோழிகள் கூட்டத்தின் இடையே வந்து அவளை அணைத்துக் கொண்டு அழுதனர்.

கொஞ்ச நேரம் பார்த்த குகன்..போலீஸ் பக்கம் திரும்பி, இங்க இருந்தா அவரை பார்த்துட்டு மட்டும் போகணும். பிரச்சனை செய்வது யாராக இருந்தாலும் உள்ளே தள்ளுங்க. நான் பார்த்துக்கிறேன் என்றான். அவர்களும் எஸ் சார், என்று தள்ளி நின்றனர்.

குகன் பார்வதியிடம் வந்து கையை நீட்ட, அவள் அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு கண்ணீருடன் அவன் கையை பிடித்துக் கொண்டு எழுந்தாள். அவளை நிறுத்தி விட்டு, புகழ் இங்க வா..என்று அழைத்தான். அவள் தோழிகள் விலக, புகழ் எழுந்து பார்வதியை கட்டிக் கொண்டு அழுதாள். இருவரும் அழ குகன் அனைத்தையும் செய்து முடித்தான். பின் வீட்டிற்கு வந்தனர். பார்வதி மடியில் புகழ் படுத்திருக்க அனைவரும் வந்தனர்.

பார்வதி, புகழை பார்த்த சொந்தபந்தங்களில் ஒருவர் முன் வந்து, பாரும்மா..பார்த்து இருங்கடா என்று அவர் நகர,

சித்தப்பா..நாளைக்கு போகலாமே? அவள் கேட்க, அவர் பார்வதியின் அத்தையை பார்த்துக் கொண்டே, இங்க சகுனி வேலை செய்றவங்க இருக்காங்க. இதுக்கு மேல என்னால கையை கட்டிட்டு வேடிக்கை பார்க்க முடியாது என்றார்.

ஏய்..என்னடா அண்ணன்னு அமைதியா இருந்தா? என்னமோ பேசுற? அவர் சத்தமிட, அவரை பார்த்து முறைத்த சித்தப்பா..பார்த்து இருங்கம்மா..என்று அவர் குடும்பத்தை அழைக்க..

அதுக்குள்ள எங்க போறீங்க? அதான் பார்வதி சொல்றாங்கல்ல இருந்துட்டு போங்க என்று குகன் அவரை பேசி இருக்க வைத்தான். பார்வதி சார்பாக ஆட்களும் இருந்தனர். ஆனால் அவள் அத்தை வாய்க்கு பயந்து தான் அமைதியாக இருந்திருப்பார்கள். அஜய் அவனுடன் வேலை செய்பவர்களை அழைக்க சென்றிருந்தான்.

ஒருவர் ஆரம்பித்தார். பொண்ணுங்களை பார்த்துக்க யார் இருக்க போறீங்க? கேட்க, இருவரும் அனைவரையும் பாவமாக பார்த்தனர். என்ன தான் குகன் அவன் வீட்டிற்கு வர சொன்னாலும் சொந்தபந்தங்கள் தவறாக பேசுவாங்களே? என்ற சிந்தனை பார்வதி மனதில் ஓட, குகன் சுந்தரத்தை பார்த்தான்.

அவங்க குடும்பத்தார் என்ன செய்றாங்கன்னு பார்க்கலாம் என்று அவர் சொல்ல, யாரும் நகரவே இல்லை. சித்தப்பா..பார்வதி அழைக்க, எங்களோட இருப்பது உங்க இருவருக்குமே பாதுகாப்பு இருக்காது.

அதான், நான் பார்த்துக்கிறேன் அவள் அத்தை சொல்ல,

அவள் சித்தப்பா..நேராக குகனிடம் வந்து, உண்மையிலே பாருவை நீங்க தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா? கேட்டார்.

ஆமா மாமா..என்று சொல்ல, அவருக்கு ஏதோ தைரியம் கூடியது போல..நீங்களே பார்த்துக்கலாமே? அவர் கேட்க..சித்தப்பா..பார்வதி அழைக்க..

அம்மா..உனக்கே தெரியும். உங்களை பத்திரமாக பலரிடமிருந்து பாதுகாத்து கொண்டிருக்க முடியாது. இங்க எல்லாரும் அப்படி தான். அதுக்காக உங்க மேல பாசமில்லாமல் இல்லை. உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோ? என்ற பயம் தான்ம்மா. நீ அவரை தானே கட்டிக்க போற? அவர் வீட்லயே இருக்கலாம்.

அவள் தயங்க, சித்தி அவளிடம் வந்து, ஊர் உலகம் பேசுவதை கண்டுகொள்ளாதேம்மா..உனக்கு நடக்கக்கூடாதது நடந்தால் எங்கள் மனசாட்சி எங்களையும் வாழ விடாது. அப்பொழுதும் இந்த ஊர் உலகம் பழி தான் தூற்றும். நமக்கு எங்க பாதுகாப்பு இருக்குமோ? அங்க இருப்பது தான் நல்லது என்றார். அவள் கண்ணீருடன் நின்றாள்.

ருத்ரா அவளிடம் சென்று, இன்று மட்டும் இங்கே இருங்க. நாளைக்கு நம்ம வீட்டுக்கு போகலாம் என்று சொல்ல, நைட் யார் கூட இருப்பா? நாங்க இருக்கோம்..அவள் அத்தை இடைபுக,

ஏம்மா..சும்மா இருக்கியா. இடையில..இடையில.. பேசிக்கிட்டு இருக்க சுந்தரம் சத்தமிட, அவர் அமைதியானாள்.

இருங்க வாரேன் என்று போனை எடுத்து பேசி விட்டு சுந்தரத்திடம் வந்து, அவங்க வந்து பொண்ணுங்கள பார்த்துப்பாங்க..என்றார் ருத்ரா.

அம்மா..என்று குகன் அதிர, சாரிடா..ஏற்கனவே சொல்லிட்டேன். இப்ப வந்துருவாங்க ருத்ரா சொல்ல, அனைவரும் புரியாமல் பார்த்தனர்.

அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில் நான்கைந்து கார்கள் அங்கு வந்து நின்றது. அனைவரும் எழுந்து ஆர்வமுடன் பார்த்தனர். புகழும் ஆர்வமாக பார்த்தாள்.

உச்சு கொட்டிய குகன், பார்வதி அருகே வந்து நின்றான். வீட்டை பார்த்த ஜமீன் குடும்பம் அப்படியே நின்று விட்டனர். அவன் அவர்களை தெனாவட்டாக பார்த்தனர்.

மாமா..என்றும்; அண்ணா என்று கல்லூரி படிக்கும் வயதுடைய பொண்ணுங்க, பசங்க குகனிடம் வந்தனர். அவர்கள் வந்தவுடன் பார்வதி நகர்ந்து நின்றாள்.

ஏய்..எல்லாரும் தள்ளுங்க..என்று குகன் முதுகிலே அடியை போட்டான் ராவண்.

ராவா..ஏன்டா, இந்த கொலைவெறி? குகன் கேட்க, ரெண்டு நாளா போன் போடுறேன். நீ எடுக்கவேயில்லை. அம்மா, அப்பா, தாத்தா..எல்லாருமே வந்திருக்காங்க என்றான்.

அவர் எதுக்குடா வந்தாரு?

யாரடா கேக்குற? என்று சத்தம் கேட்க, குகன் கண்கள் கலங்கியது. அப்பா..என்று அவன் வளர்ப்பு அப்பாவை அணைத்துக் கொண்டான்.

ருத்ராவிடம் வந்த குகன் அம்மா..பொண்ணு எங்கடி? கேட்டார். அவர் கண்ணை காட்ட, பொண்ணு நல்லா இருக்கா. ஆனால் வீடு ரொம்ப சின்னதா இருக்கே?

ஆமா. சின்னதா தானே தெரியும். குகா கிட்ட சொல்லி வாங்கிக்காத..என்று ருத்ரா சொல்ல, ஏன்டி கோவிச்சுக்கிற? அவன் அம்மா கேட்க, சரி விடு..என்று நந்துவை பார்த்து..ஏன்டா முறைக்கிற?

டேய் அண்ணா, அவரை கொஞ்சம் விடு நந்து சத்தம் போட, திரும்பிய குகன் அவன் அம்மாவை பார்த்தான். அவர் ஆசையாக பார்வதியுடம் வந்தான். குகன் வேகமாக அவளை மறைத்து நின்று கொண்டான்.

உனக்கு இன்னும் கோபம் போகலையா? நான் என் மருமகளிடம் பேசக்கூடாதா? அவர் கேட்க, நீங்க யாரு? புகழ் துடுக்காக கேட்டாள்.

நீ யாரு? அவர் கேட்க, அவள் குகனை பார்க்க..அவன் அவனோட அம்மாவை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான்.

மாமா, சொல்லுங்க..புகழ் அவனை இடிக்க, பார்வதி அவள் கையை இழுத்து அமைதியா இரு என்றாள்.

சொல்ல மாட்டீங்களா மாமா?

மாமாவா? அவர் கேட்க, ஆமா. என்னோட அக்காவை தான் மாமா கல்யாணம் பண்ணிக்கப் போறார். நீங்க சொந்தமா? அவள் கேட்க, குகன் அப்பொழுதும் பேசவில்லை.

நான் அவனோட அம்மா என்றார். அவன் அப்பொழுதும் பார்வதியை விட்டு நகரவில்லை. அவளாக முன் வந்து, ஆன்ட்டி..என்று பேசினாள்.

நீ எதுவும் பேச தேவையில்லை என்றான் அவன்.

சார்..என்று சொல்ல வந்து மென்று விழுங்கியவள், எதுக்கு இப்படி பேசுறீங்க? குகனை முறைத்தாள்.

அவனது அத்தைமார்கள் வந்தனர். குகா..சொல்லாம இருந்திடலாம்ன்னு நினைச்சியா? கேட்க, பார்வதி சொந்தக்காரர்கள் அவர்கள் அனைவரையும் கவனிக்க, பணக்கார ஆட்கள் என்று மட்டும் தெரிந்தது. வேறேதுவும் அவர்களுக்கு தோன்றவில்லை.

தாத்தாவை பார்த்தவுடன் அவர்களுள் ஒருவருக்கு ஜமீன் குடும்பம் என தெரிந்தது. தாத்தா பார்வதியை பார்த்து விட்டு, குகனை பார்த்து..வா..பேசலாம் என்று அழைக்க, மாமா..உங்க குடும்பத்து பெரிய ஜமீன் தான?

எப்படி கண்டுபிடிச்ச? புகழ் காதில் குகன் கேட்க, மாமா..மீசையை பார்த்தாலே தெரியுது..என்றாள்.

குகன் புன்னகையுடன், பேசலாமே என்றான்.

தாத்தா..நீங்க இங்கேயே பேசுங்க. தனியா போய் மாமாவை திட்ட போறீங்களா? புகழ் கேட்க, சும்மா இரு என்று பார்வதி அவள் கையை பிடித்து அழுத்த..

அக்கா, சும்மா இரு. தாத்தா..என்ன சொல்லப் போறாங்கன்னு எனக்கு தான் தெரியுமே? என்று…எதுக்கு இந்த மாதிரி ஒன்றுமில்லாத பொண்ணை கல்யாணம் பண்ணிக்கணும்? நீ சரின்னு சொன்னா.. பட்டத்து இளவரசியே வருவா? அதனால வா..போகலாம். உனக்கு இதை விட நல்ல பொண்ணா பார்க்கலாம் என்று தான சொல்ல போறீங்க? என்று தொண்டையை கனைத்தாள்.

மனதில் நினைத்ததை பேசிட்டாலே? என்று தாத்தாவும் நினைக்க, குகனும் அவன் வீட்டாரும் சிரிக்க, தாத்தா முறைப்பிலே அடங்கினர்.

சாரி சார், நீங்க பேசிட்டு வாங்க என்றாள் பார்வதி.

என்னத்த பேச? என்று தாத்தா சுந்தரத்தை பார்த்தார். ஆனால் அவர் குகனை தான் கவனித்துக் கொண்டிருந்தார்.

குகனின் இரண்டாவது அத்தை வந்து, நான் இங்கே இருக்கேன் மாமா என்று பார்வதி பக்கம் வந்து நிற்க, அரண்மனையின் மூத்த மருமகளும் வந்து நின்றார். குகன் அம்மாவும் வந்து நின்றார்.

ஜமீன் குடும்பம் என்று எல்லாரும் பேசுவதை பார்த்து, பார்வதி அத்தை பல்லை காட்டிக் கொண்டு வந்தார். குகன் முகம் மாறியது. அவன் அவளது சித்தப்பாவை பார்த்தான். அவர்களும் அவனிடம் அவளை அனுப்ப சொல்லி பாவனையில் சொன்னார்கள்.

குகன் தானாகவே தாத்தாவை தனியே அழைத்து சென்று அவள் அத்தை பற்றி சொன்னான். பாட்டி வருவதை பார்த்து அவன் முகம் மலர்ந்தது. பாட்டி, தாத்தா அருகே வந்து நிற்க, குகன் பார்வதியிடம் வந்து கையை நீட்டினான். அவள் புரியாமல் அவன் கையை பிடித்தாள். அவர்கள் முன் அழைத்து வந்து இருவரும் ஆசி வாங்க, அடுத்து ராவா..நீ தயாரா இருக்கியா? கேட்டனர். அவன் புன்னகைத்தான். புகழ்..குகன் அழைக்க, அவனிடம் ஓடி வந்தாள். அவன் கண்ணை காட்ட, அவளும் ஆசி வாங்கினார்.

உன்னோட பேர் என்னம்மா? தாத்தா கேட்க, புகழேந்தி தாத்தா. எல்லாரும் புகழ்ன்னு சொல்வாங்க தாத்தா. நான் பள்ளி கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன் அவள் பேசிக் கொண்டே செல்ல..

போதும்மா. பேர் மட்டும் தான் கேட்டேன் தாத்தா சொல்ல, நிறைய பேசுனா..நல்லா தூக்கம் வரும் என்றாள்.

தூக்கமா? பாட்டி கேட்க, பாட்டி நாளைக்கு முழுவதும் இங்கிலீஸ் மேம் கிளாஸ். நான் மட்டும் கண்ணை இப்படி அசைத்தால் கூட..என் மானத்தை வாங்கிடுவாங்க. அதான் இப்ப பேசுறேன். அப்ப தான நைட் நல்லா தூங்கலாம். காலையில ப்ரெஸ்ஸா கிளாசை கவனிக்கலாம் என்றாள்.

பார்வதியோ..அவளை முறைக்க, தாத்தா..உங்களுக்கு சரியான பேத்தி தான் என்று ராவா சொன்னான்.

ஹாய்..”ஐ அம் ராவண்” என்று புகழிடம் கையை நீட்டினான்.

சீதையை கடத்திய ராவணனா? புகழ் கேட்க, அவனுடைய தம்பிகளும், மாமா பொண்ணுங்களும் சிரித்தனர்.

எதுக்கு சிரிக்கிறீங்க? ராவணன் அரக்கனானாலும் தங்கை மீது உயிரையே வைத்தவன் என்ற புகழ் அவள் அக்காவை பார்த்தாள். பார்வதி யோசனையுடனும் கலங்கியவாறும் இருக்க, அவளிடம் வந்தாள்.

ராவா..இங்கேயும் உன் வேலையை ஆரம்பிக்காதே? அவன் அத்தை கூற, அந்த பொண்ணு இன்ட்ரஸ்டிங்கா இருக்கா என்றான் ராவண் புகழை பார்த்துக் கொண்டே.

எல்லாருமே நைட் இங்க இருக்கலாம் என்று தாத்தா கூற, அவருடைய பேத்திகள் அவரிடம் வந்து, தாத்தா வீடு சின்னதா இருக்கு. இங்க எப்படி இருக்குறது? புகழ் முகம் சுருங்கியது. ஆனால் அவள் அக்காவுடன் அமைதியா நின்றாள். அனைவரும் அமர்ந்தனர்.

அஜய்யும், பாருவுடன் வேலை செய்பவர்களும், குகனுடன் அவர்களை பாதுகாக்க வந்த போலீஸூடன் வந்தனர். பாரு அவர்களை பார்த்து எழுந்தாள். கீர்த்தியும் மற்றவர்களும் அழுது கொண்டே அவளை அணைத்தனர். எமோஸ்னலான பார்வதி..கீரு..சரண் என்னை விட்டு போயிட்டான்டி. அப்பாவும் விட்டுட்டு போயிட்டாரு என்று அழுது கொண்டே, நீங்க மட்டும் என்னை தடுக்கலைன்னா..சரணை காப்பாற்றி இருக்கலாம். அப்பாவுக்கும் ஹார்ட் அட்டாக் வந்திருக்காது என்று கதறி அழுதாள். அனைவரும் அதிர்ச்சியாக,

குகா..அந்த பொண்ணு என்ன சொல்லுது? தாத்தா கோபமாக கேட்டார்.

கீர்த்தியும் அழுது கொண்டே, இல்ல பாரு. நீ தடுத்திருந்தாலும் நம்மை விட்டு போயிருப்பான் என்றாள்.

குகன் அவன் தாத்தாவை பார்த்து விட்டு கீர்த்தியிடம் வர, அஜய்யும்..என்ன சொன்ன? என்று அவளிடம் வந்தான். பாரு அவளை விலக்கினாள்.

ஆமாம் பாரு என்று மலை அஜய்யை பார்த்து, சார் என்று அவனை கட்டிக் கொண்டான்.

மலை என்ன சொல்றீங்க? புரியுற மாதிரி சொல்லுங்க..என்று அஜய் கோபமாக கேட்டான்.

பைல் ஒன்றை மலை அஜய்யிடம் கொடுக்க, குகனும் பாருவும் அஜய்யிடம் வந்து பைல்லை பார்த்து கண்ணீருடன் சிலையாகினர். புகழும் அவர்களிடம் வந்து எட்டி பார்த்தாள்.

அவனுக்கு எப்படி? அவன் எதுவுமே சொல்லலை.

சிறுநீரக கட்டியா? சரிசெய்ய வாய்ப்புள்ளது தானே? பாரு அஜய்யிடம் கேட்க, ஆம் என்று தலையசைத்தான்.

சார், வெளிய வந்தா செத்துருவான்னு தெரிஞ்சு தான் வந்துருக்கானா? ஒரு நிமிஷம் கூட என்னை பத்தி யோசிக்கவேயில்லை பார்வதி அழுதாள்.

நான் அவனுக்கு ஸ்கேன் செய்த டாக்டரிடம் விசாரித்தேன் என்ற விஜய்..கடந்த இரண்டு நாட்களாக ரொம்ப வலியால் கஷ்டப்பட்டிருக்கான். அவனுக்கு கட்டி கரையவில்லை என்பதால் ஏற்கனவே ஆப்ரேசன் செய்ய சொல்லி இருந்திருக்காங்க. இவன் தான் ரொம்ப அசால்ட்டாக எடுத்துக் கொண்டான். வலி தாங்க முடியாமல் ஹாஸ்பிட்டல் சென்ற போது ஒரு வாரம் தான் உயிரோட இருப்பான்னு சொல்லி இருக்காங்க. அவனுக்கு சாவு உறுதியானதால்..என்று அவன் அழுது கொண்டே அமர்ந்தான்.

சொல்லு..பார்வதி அவனை உலுக்க, அவன் மலையை பார்த்தான். அவன் அழுது கொண்டே..உன்னோட பெயரை இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே மேட்ரிமோனியில் பதிவு செய்து வைத்திருக்கான் என்று சில பசங்க போட்டோஸை காட்டினான். இது லேப்பில் இருந்தது என்ற மலை குகன் சாருடன் நீ நன்றாக பேசுவதை கவனித்து தான் இந்த வீடியோவை டாக்டர்ஸ் வச்சி எடுத்திருக்கான். முதல்லவே இது தெரிந்தால் நீ சாரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்க மாட்டன்னு..வீடியோவில் இதை பற்றி ஏதும் சொல்லலை..என்றதும்.

எல்லாரும் சும்மா பேசாதீங்க. மாமா..எதையும் மறச்சிருக்க மாட்டாங்க. எனக்கும் மாமாவுக்கும் இடையிலே சீக்ரெட்டே இல்லை. எல்லாமே என்னிடம் ஷேர் பண்ணிப்பார் என்று புகழ் அழுதாள்.

இது எல்லாமே உண்மை தான்டா. இது உனக்காக அவன் எழுதியது என்று கடிதம் ஒன்றை மலை கொடுக்க, புகழ் கண்ணீருடன் அதை பிரித்துப் பார்த்தாள்.

குட்டி செல்லம்..நீ இதை பார்க்கும் போது மாமா உன்னுடன் இருக்க மாட்டேன். உங்களுக்காக நல்ல மாமாவா உன் பக்கம் ஒருவரை விட்டு போறேன். அவர் உங்களை நல்லா பார்த்துப்பார். அக்காவை பார்த்துக்கோ செல்லம். இருவருக்கும் சண்டை வராமல் பார்த்துக்கோ. உனக்கும் நல்ல துணை கிடைப்பான். எந்த காரணத்திற்காகவும் பாரு வேலையை விட்ற கூடாது. அப்பாவை பார்த்துக்கோ. அப்பாவுக்கு ட்ரீட்மென்ட்டுக்காக பணம் பாஸிடம் வாங்கிக்கோங்க. அவரிடம் கொடுத்து வச்சிருக்கேன். என்னோட குட்டி செல்லத்துக்காக கிப்ட் ஒண்ணு இருக்கு. எடுத்துக்கோ. மாமா இப்ப உனக்கு மோசமா தெரியலாம். இது தான் நல்லது. என் செல்லம் கோபப்படக்கூடாது. நல்லா படிக்கணும். அப்பாவுக்கு ட்ரீட்மென்ட் முடிந்து கண்ணு தெரியவும் என்னை மட்டும் அவரிடம் காட்டு. அக்காவை தொந்தரவு செய்யாம நல்ல பிள்ளையா இருக்கணும். குட் பை..டா செல்லம் என்று முடித்திருக்க..

நீ ரொம்ப மோசமான மாமா..என்று கதறி அழுதாள் புகழ். குகன் அவளை பார்த்து அவளிடம் ஓடினான். குகன் தோளில் சாய்ந்து..எல்லாமே தெரிஞ்சு உங்களை எங்களுக்காக விட்டு போயிருக்காங்க.

அப்பா..உனக்கு ஆப்ரேசனுக்கு கூட மாமா பணம் கொடுத்துட்டு போயிருக்காரு. ஆனால் அதுக்கும் இப்ப பிரயோஜனம் இல்லை. நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்காதுன்னு பிராமிஸ் பண்ணேல..இப்படி விட்டுட்டு போயிட்ட..என்று தலையில் அடித்து அழுதாள்.

பாரு கண்ணீருடன் அசையாமல் இருக்க, பாரு..என்று விஜய் அவளிடம் அவன் அம்மாவுக்காக இன்சூரன்ஸ் பணம் வரும்படி செய்துட்டு போயிருக்கான்.

அஜய் குகனிடம் வந்து, பாருவை பார்த்துக்கோங்க. நாங்க அவன் வீட்டினரை பார்த்துட்டு வாரோம் என்றான்.

அதான பார்த்தேன். அந்த பய கூட தான சுத்திகிட்டு இருந்தா. இப்ப இன்னொருத்தன். குமாரு..அந்த வக்கீல் பையன் செத்துப்போயிட்டான் போல. ஆனால் அதுக்குள்ள இன்னொருத்தனை கூட்டிட்டு வந்திருக்கா என்று பாருவை பற்றி அவதூறாக பேச..அஜய் கோபமாக வெளியே வந்தான்.

சார், வேண்டாம் என்று கீர்த்தியும் விஜய்யும் தடுக்க, அவளை பத்தி பேசுனா உனக்கு என்னடா கோபம் வருது? அவளோட நீயும் இருக்கியா? என்ற கேட்டவன் கன்னத்தில் அறைந்தாள் புகழ்.

இதுக்கு மேல என்னோட அக்காவை பத்தி பேசுன? சத்தமிட்டாள்.

ஏய்..யார் மேல கையை வச்சிருக்க? நான் உன்னோட முறை மாமன். நான் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றான். அஜய்க்கு மேலும் கோபம் ஏற, என்னடா செய்வ? என்று குகன் அவனிடம்..இனி இந்த பக்கம் உன்னை பார்த்தால் கொல்லாம விட மாட்டேன். மரியாதையா ஓடிப் போயிரு..என்று அவனும் கத்தினான்.

உங்கள விட மாட்டேன்டி என்று அவன் கத்த, போலீஸ் இருவரும் அவனிடம் வந்து, நட..டா ஸ்டேசனுக்கு பொண்ணுங்களை மிரட்டுற? அவர் இழுத்து செல்ல, அய்யோ..என் பிள்ளை..விடுங்க..விடுங்க..என்று அவன் அம்மா அவர்கள் பின்னே ஓடினார்.

அப்பாடா..தொல்லை ஒளிந்தது என்று பாருவின் சித்தி அவளிடம் வந்து, அப்பா..சொன்ன அந்த பையன் இறந்துட்டானாம்மா? அவர் கேட்க, அவரை கட்டிக் கொண்டு அழுதாள் பார்வதி. புகழ் அவர்களை பார்த்து சோர்வுடன் பார்வதி மடியில் படுத்துக் கொண்டு கண்களை மூடினாள்.

நடக்கிறதை தெளிவா சொல்றீங்களா? பாட்டியும் கோபமாக கேட்டார். பார்வதி எழ புகழும் எழுந்து நின்றாள். குகன் அவரிடம் செல்ல..அஜய்கிருஷ்ணா தம்பி, நீங்க சொல்லுங்க என்று குகனை இத்தனை வருடமாக வளர்ந்த அப்பா வந்தார்.

சார், நீங்களா? அஜய் கேட்க, ம்ம்..உங்க ஜூனியரா எங்க மருமகள்? அவர் கேட்க, தாத்தா அவரை முறைத்தார்.

குகா? அந்த பொண்ணு லாயரா? அவன் அம்மா கேட்க, அவன் பேசாமல் பாட்டியிடம் வந்தான். அஜய் அனைத்தையும் சொல்லி விட்டு குகன் தாத்தாவிடம்..உங்க பேரனுக்கு விருப்பமிருந்தால் மட்டுமே பாருவை கல்யாணம் பண்ணிக்கட்டும். ஆனால் பாருவுக்கு நேரம் வேண்டும். அவள் என்ன தான் சரணுக்காக கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னாலும் அவள் சரணுக்காக திருமணம் செய்வது சரியாக இருக்காது. அவள் குகன் சாரை விரும்பி தான் கல்யாணம் பண்ணிக்கணும் இல்லையென்றால் வேண்டாம். என்ன சொல்ற பாரு? கேட்டான்.

சரணுக்காக தான் ஒத்துக்கிட்டேன். ஆனால் அது சாரை கஷ்டப்படுத்தும். அதனால்..என்று குகனை பார்த்து, அவர் ஏற்கனவே கூறியது போல் ஆறு மாதமோ? இல்லை ஒரு வருடமோ? போகட்டும். அப்புறம் பார்த்துக்கலாமே?

தாத்தா உடனே, அதெல்லாம் தேவையில்லை. அதான் இருவருக்கும் பிடிக்கவில்லையே? அப்படியே விட்டிருங்க. கல்யாண பேச்சை எடுக்கக்கூடாது என்றார்.

தாத்தா..என்று எழுந்த குகன், எங்கள் வாழ்க்கைக்கான முடிவை நாங்களே எடுத்துக்கிறோம். நீங்க தலையிடாதீங்க. எதற்கெடுத்தாலும் வேண்டாம் என்ற வார்த்தை தான் உங்களுக்கு வருமா?

பள்ளியில் எந்த பிரிவை எடுத்து படிப்பது? கல்லூரிக்கு சென்று என்ன படிப்பது? எந்த பிசினஸ் செய்வது? எந்த வழியில் செய்வது? எல்லாத்தையும் நீங்களே முடிவு செஞ்சா நாங்க எதுக்கு? கோபமாக பேசினான்.

அதான் நீ போலீஸாகிட்டேல்ல. கல்யாண முடிவை நாங்க எடுத்தா என்ன? பாட்டி கேட்டார்.

பாட்டி..நீங்களுமா?

ஆமா. நீ அந்த பையனுக்காக தான இந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்க?

உங்களுக்கு யார் சொன்னா? என்னை பற்றி தெரியாதா பாட்டி? எனக்கு பிடிக்காத எதையும் செய்ய மாட்டேன்.

படிச்சியே?

ஆமா..உங்க கட்டாயத்தால் வெறுப்புடன் தான் படிச்சேன் தாத்தா.

அந்த பொண்ணை பிடிக்காம கல்யாணம் பண்ணிக்க முடிவெடுத்திருக்க?

இல்லை. பிடிச்சு தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேன் என்று குகன் சொல்ல தாத்தா சிரித்தார்.

தாத்தா, எதுக்கு சிரிக்கிறீங்க? கோபமாக கேட்டான்.

என்ன சொன்ன? யோசிச்சு பாரு என்று பாட்டியும் புன்னகைக்க, அவன் சிந்தனையுடன் திரும்பினான். பார்வதி அவனை முறைக்க மற்றவர்கள் சிரித்துக் கொண்டிருந்தனர்.

அண்ணா, வசமா சிக்கிட்ட..என்று ராவண் பார்வதியை பார்த்தான். மாமா..என்று சினமுடன் புகழ் அவனிடம் வந்தாள்.

சொல்லுங்க மாமா? என்றாள்.

என்ன சொல்லணும்?

அக்காவை பிடிச்சு தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்களா?

ஆமா, ஆனால் உன்னோட அக்காவுக்கு தான் விருப்பமில்லையே?

எப்ப இருந்து பாருவை உங்களுக்கு பிடிச்சது? கீர்த்தி கேட்க..தெரியலையே என்றான்.

தெரியலையா? அது எப்படி தெரியாமல் இருக்கும்? மலை கேட்டான்.

வீடியோ பார்த்த பின் தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன்.

அது என்ன நினைக்கிறேன்? அவன் இரண்டாவது அத்தை கேட்க, எதுக்கு இப்ப எல்லாரும் கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க?

விருப்பமில்லாததை போல் பேசுனீங்க? அஜய் கேட்டான்.

சார், அந்த பொண்ணுக்கு அவனை பிடிச்சிருக்கு. ஆனால் அவன் இப்ப தான் இறந்திருக்கான். இந்த நேரத்தில் எப்படி கல்யாணத்தை பத்தி பேசுறது? அதான் விலக நினைத்தேன். நீங்க அந்த பொண்ணோட பாதுகாப்புக்காகவும் அவன் சொன்னதுக்காகவும் யோசிச்சீங்க. ஆனால் அந்த பொண்ணு கல்யாணத்துக்கு ஒத்துக் கொண்டாலும் அவங்க மனசுக்கு கஷ்டமா இருக்கும். என்னோட ஒரு பொண்ணு வாழணும்ன்னா. அவங்க என்னோட விருப்பப்பட்டு அருகில் இருக்கணுமே தவிர விருப்பமில்லாமல் இருக்கக்கூடாது என்று பார்வதியை பார்த்துக் கொண்டே சொன்னான்.

மாமா, அப்ப அக்காவுக்கு உங்களை பிடிக்கும் வரை எத்தனை வருசமானாலும் காத்திருப்பீங்களா?

ம்ம்..காத்திருப்பேனே என்றான் யோசிக்காது.

நான் உங்களிடம் பேசணும் என்று பார்வதி குகனிடம் சொல்ல, போ..பேசிட்டு வா.

தாத்தா, உங்களுக்கு பிரச்சனையில்லையா? ஆச்சர்யமாக குகன் கேட்க, எனக்கு ஒன்றுமில்லை. பேசிட்டு வா..என்றார்

இருவரும் செல்ல, கல்யாணம் பண்ணிக்கலைன்னா..அவன் ஆத்மா சாந்தி அடையாது என்று பார்வதி சொல்ல, குகனுக்கு கஷ்டமாக இருந்தது.

இப்ப என்ன செய்ய சொல்றீங்க?

மேரேஜ் பண்ணிக்கலாம். என்னால் முடிந்த வரை அவனை மறக்க முயற்சி செய்கிறேன் என்றாள்.

“ஐ அம் சாரி” விருப்பமில்லாத பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறது என்னால முடியாது என்று மனம் கலங்கியவாறு வேரெதுவும் பேசாமல் சென்றான். அவள் மௌனமாக வந்தாள்.

என்னப்பா? தாத்தா கேட்க, ஓ.கே சார், நீங்க சொல்ற மாதிரி எனக்கு உங்களை பிடித்தால் கல்யாணம் பண்ணிக்கலாம். அவன் தான் இனி என் வாழ்க்கையில் இல்லை என்றாகி விட்டதே பார்க்கலாம் என்று கண்கலங்கிக் கொண்டே உள்ளே சென்றாள். அவன் அவளை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான்.

ஏன் சார்? மலை கேட்க, கல்யாணம் முடிந்த பின் பிடிக்கலைன்னா..வாழ்க்கை நரகமாகிடும். அதை விட இது பரவாயில்லை. கல்யாணம் செய்தால் கடைசி வரை ஒன்றாக வாழணும். விவகாரத்து என்ற பேச்சுக்கே இடம் இருக்கக்கூடாது. சரி தான பாட்டி? கேட்டான் குகன்.

என் பேரன் புத்திசாலி புள்ள..என்று அவன் நெற்றியில் முத்தமிட்டார்.

சரி, அப்ப நாங்க இங்கே இருந்துக்கவா? புகழ் கேட்க,

இல்லம்மா..நீங்க இங்க இருக்கக்கூடாது. எங்க கூட வீட்டுக்கு வாங்க உன்னோட படிப்பை அங்க பார்த்துக்கலாம்.

மாமா..தூரமா இருக்குமே?

அதான் நான் இருக்கேன்ல.

சுந்தரம் அவர்களிடம் வந்து, ஒரு வாரம் விடுப்பு எடுக்க முடியுமாம்மா? கேட்டார்.

ஒரு வாரமா? நோ..நோ..என்னை எல்லாரும் வச்சு செஞ்சிருவாங்க.

நான் கேட்கிறேன் என்று சுந்தரம் கேட்க, எதுக்கு லீவ் போட சொல்றீங்க?

கொஞ்சம் பிரச்சனையா இருக்கு. வீட்லயே இருந்தா தான் பாதுகாப்பு என்றார்.

பாதுகாப்பா? சரி வீட்ல தான? இருக்கலாம். ஆனால் மேம், சார் யாரும் என்னை திட்டக்கூடாது. அதையும் சேர்த்து பேசிடுங்க அங்கிள் என்றாள்.

நீ ஒத்துக்கிட்டேல்ல. இனி உன்னை யார் என்ன சொல்லுவாங்க? சுந்தரம் கேட்டார்.

ஓ.கே அங்கிள் நாளை மாலை கிளம்பிடலாம்.

மாலையா? தாத்தா கேட்க, அப்பாவுக்கு சாமி குப்பிடணுமே? கேட்டாள்.

சரிம்மா. நாங்க மதியம் கிளம்புகிறோம் என்றார் அவர். சரி என்று உள்ளே சென்று புகழ் பார்வதியிடம் சொன்னாள்.

Advertisement