Advertisement

அத்தியாயம் 134

பிரதீப்பும் சக்தியும் கோட்டையூர் ஹாஸ்பிட்டலுக்கு நுழைய, சக்தி அம்மா அவனை பார்த்து ஓடி வந்து, என்னடா ஆச்சு? என்று கேட்க, அவன் பதிலேதும் சொல்லாமல் மாலினி அறைக்கு சென்றான்.

பிரதீப்பிடம் இப்பவே வீட்டை தயார் செய்ய முடியுமா அண்ணா? என்று காரில் வரும் போதே கேட்டிருப்பான். அவனுக்கு தெரிந்த சிலரிடம் கேட்க..அவர்கள் சொல்ல காலியான வீட்டை அவர்கள் காட்ட, அதை அந்த சிறிய இடைவெளியிலே தயார் செய்தனர். சக்திக்கு மனம் நிம்மதியானது.

வசுந்தரா மடியில் படுத்திருந்த மாலினி சக்தியை பார்த்து அதிர்ந்து அவனிடம் வர இருந்தவள் திரும்பி நின்று கொண்டாள். வசு..கொஞ்சம் வெளிய இருக்கிறியா? நான் என் பொண்டாட்டியிடம் பேசணும் என்றான். அவள் முறைத்தாலும் வெளியேறினாள்.

மாலி..அழைத்தான் சக்தி. அவள் அசையாது நின்றாள்.

நீ என்னை நம்பவில்லையா? உன்னை தனியே தவிக்க விட்டு வேற பொண்ணை கட்டிப்பேன்னு நினைச்சியா? என்றவுடன் திரும்பி கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

நான் அமைதியாக செல்லும் போதே உனக்கு புரியலையா? நீ கூட என்னை புரிஞ்சுக்கலைல்ல. நான் யார் வீட்டுக்கும் போகலை. நான் என்ன சொன்னாலும் என்னோட அம்மா, அப்பா கேட்க மாட்டாங்கன்னு தெரியும். அதனால அவங்களுக்கு புரிய வைக்க செத்து புழச்சி வந்துருக்கேன் என்று சொன்னவுடன் மாலினி அவனை அணைத்துக் கொண்டாள்.

எதுக்கு இப்படி அடிபட்டிருக்கு? என்று அவனை அமர வைத்தாள். அவன் செய்ததை சொல்லி விட்டு, நாம இனி தனியா இருந்துக்கலாம் மாலி.

எதுக்கு இந்த வேலையெல்லாம்? ரொம்ப வலிக்குதா? அவள் அவனுக்கு அடிபட்ட இடத்தை தொட..அவள் கையை தடுத்து, நீ நல்லா தான இருக்க? நீ என்னை விட்டு போயிருந்தால் என்ன செய்திருப்பேன் என்று அழுதான். அவளும் அழுது கொண்டே அவனை அணைத்துக் கொண்டு, என்னை விட்டு போயிருவீங்களோன்னு பயந்துட்டேன் என்று தேம்பி தேம்பி அழுதாள். அவள் கண்ணீரை துடைத்து விட்டு நான் ஜெயிச்சிட்டு வந்துருக்கேன். எனக்கு பரிசு இல்லையா? கேட்டான்.

என்னால் இப்பொழுதைக்கு இதான் தர முடியும் என்று அவன் நெற்றியில் முத்தமிட்டாள். நமக்கு தனி வீடு வாடகைக்கு தயார் செய்துட்டேன். அம்மா நம்மை பிரிக்க என்ன செய்தாலும் நான் உன்னை விட்டு போக மாட்டேன் என்று அவளை அணைத்தான்.

ஆனால் என்னால் உங்களுக்கு குழந்தை பெத்து தர முடியாது.

எனக்கு நீ போதும்..வேற யாருமே வேண்டாம் என்றான். நாம நம்ம வீட்டுக்கு கிளம்பலாமா? சக்தி கேட்க, உங்களுக்கு பார்த்துட்டு மெதுவா போகலாமே?

இல்லம்மா, எனக்கு உன்னோட தனியா இருக்கணும் போல இருக்கு. யாருடனும் பேச முடியலை என்று அழுதான். அவனும் கஷ்டப்பட்டு தான் பணத்தை அவளுக்காக கொண்டு வந்திருக்கான்.

சரி, நாம போகலாம். இதை வெளியே இருந்து கேட்ட மாலினி அம்மா, அப்பா, வசுந்தரா, கௌதம், காருண்யா மகிழ்ந்தனர்.

சக்தி அவன் அம்மாவிடம்..நான் உங்களை அடிக்கடி வந்து பார்த்துக்கிறேன். ஆனால் அவளை பார்க்கிறேன்.. பேசுகிறேன்னு தொந்தரவு செய்யக்கூடாது..புரியுதா? ஏதாவது செஞ்சீங்க. உங்களுக்கும் உங்க மகனுக்கும் எந்த உரிமையும்  இல்லாமல் போய் விடும் என்று கண்டித்து விட்டு அவன் செல்ல..அம்மாடி என்று அவர்கள் மாலினியிடம் வர, அவள் கண்டுகொள்ளாமல் அவன் பின்னே சென்றாள். அவர்கள் வீட்டிற்கு கிளம்பினர்.

கௌதம் காருண்யா அவள் பாட்டி வீட்டில் இருக்க, கௌதமிற்கு போன் வந்தது. ஆருத்ரா கால் செய்திருந்தாள்.

என்னம்மா? அவன் கேட்க, அண்ணா..நானும் சீனுவும் அப்பாவிடம் நேற்றே பேசி சம்மதிக்க வச்சிட்டோம்.

சம்மதமா?

தேவ் அண்ணா- சுவாதி விசயம் என்றாள்.

அவர் என்ன சொன்னார்? ஆர்வமாக கேட்டான். முதல்ல ரொம்ப யோசித்தார். அப்புறம் ஒத்துக் கொண்டார்.

அவனுக்கு தெரியுமா?

தெரியும் அண்ணா. ஆனால் இருவருமே சரியில்லை. ஒருவரை ஒருவர் பார்க்கிறாங்க. முதல்ல மாதிரி கூட பேச மாட்டேங்கிறாங்க.

சுவாதிக்காக தான் விலகி இருப்பான்ம்மா. நீ இதை நினைச்சு கவலைப்படாதே. சுவாதி முதல்ல சரியானவுடன்..தானாக எல்லாமே மாறும் என்றான் கௌதம்.

ஓ.கே. நீங்களும் ஆள் செட் பண்ணிட்டீங்க போல?

உனக்கு தெரியுமே? சுவாதி ப்ரெண்டு காரு தான்.

ஓ..அவளா?

என்ன அவளா?

ரொம்ப பேசுவாளே? ஆருத்ரா கேட்க, அக்கா..அப்படியெல்லாம் இல்லை என்று சீனு சத்தம் கொடுத்தான்.

ஹேய்..நான் தான் பேசிகிட்டு இருக்கேன்ல. என்ன அவசரம் உனக்கு?

போனை வாங்கிய சீனு, மாமா..சூப்பர் செலக்சன்.

என்னடா பட்டுன்னு மாமான்னு சொல்லிட்ட?

ஆமாம். சுவாதி அக்கா மாதிரி தான் காரு அக்கா எனக்கு. அப்ப நீங்க மாமா தான மாமா?

சரி தான் என்று சிரித்துக் கொண்டே புன்னகையுடன் காருண்யாவை பார்த்தான். அவள் டி.வி பார்க்கிறேன் என்று தூங்கி வழிந்து கொண்டிருந்தாள். நாம அப்புறம் பேசலாம்..என்று காருண்யாவிடம் வந்து அவளை பார்க்க..

சார், தூக்கமா வருது..என்று அவனை தூக்க சொல்லி சிறுபிள்ளை போல் கையை விரித்தாள். அவர்களை பார்த்து விட்டு கமலி..எனக்கு வேலை இருக்கு என்று எழுந்து செல்ல, நானும் வாரேன் என்று தாரிகா அம்மாவும் சென்றார்.

ஏன்டி, நீ என்ன சின்னப்பிள்ளையா? தூக்க சொல்ற..பாட்டி திட்ட, பாட்டி..என்று கௌதமை பார்த்தாள். அவன் புன்னகையுடன் அவளை பார்த்துக் கொண்டே இருக்கட்டும் பாட்டி, நான் அவளை படுக்க வைத்து விட்டு வாரேன் என்று கௌதம் செல்ல..

தம்பி, போனவுடனே வந்துறணும் என்று பாட்டி சொல்ல..அவன் தலையசைத்து காருண்யாவை தூக்க அவள் தோதாக அவன் மீது சாய்ந்து தூங்கியே விட்டாள். அவளறைக்கு சென்று படுக்க வைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவள் விழித்து..என் பக்கத்திலே இருக்கீங்களா? கேட்டாள்.

உன் பக்கத்திலே தான் இருப்பேன். ஆனால் இப்ப நான் கிளம்புகிறேன் கௌதம் எழ, சார்..இங்க வாங்களேன் அழைத்தாள். அவன் கன்னங்களை பிடித்துக் கொண்டு..நான் சொல்லும் வரை நீங்க போகக்கூடாது என்று அவனை இழுத்து அமர வைத்து அவன் மடியிலே படுத்துக் கொண்டாள்.

காரு..என்று அவன் எழ..அவனை இழுத்து முத்தமிட்டு, நீங்க என்னை விட்டு போனா உங்களுக்கு முத்தம் தர மாட்டேன் என்று அவன் மடியிலே படுத்துக் கொண்டாள். அவள் நன்றாக தூங்கிய பின் வெளியே சென்றான்.

சென்னை ஹாஸ்பிட்டலில்..மேம், உங்களிடம் பேசணும்ன்னு சொல்றாரு..டாக்டர் பார்வதியிடம் கூற, சார் அவனுக்கு ஒன்றுமில்லையே? கேட்டாள்.

சாரி மேம், எங்களால அவரை காப்பாற்ற முடியலை. உங்களிடம் பேச தான் உயிரை பிடிச்சு வச்சிருக்கார். கடைசியா பேசிடுங்க என்று அவர் சொல்ல..நோ..என்று கத்தி அழுதாள். பிறகு மெதுவாக அறைக்கதவை திறந்து சரணை பார்க்க துடித்து போனாள். அவன் கையை நீட்டிக் கொண்டு அவளுக்காக காத்திருப்பது நன்றாக தெரிந்தது. அழுது கொண்டே சுவற்றில் சாய்ந்து அவனை வெறித்து பார்த்தாள்.

பா..பா..பாரு..என்று நீட்டியை கையை எக்கினான். அவள் கதறலுடன் அவனிடம் வந்து அவன் கையை பிடித்தாள். நான் சொல்றதை கேளு. பாஸ் சொல்ற பேச்சை கேட்டு நடந்துக்கோ. நீ வேற ஒருவரை கல்யாணம் பண்ணிக்கோ. அப்ப தான் என் ஆத்மா சந்தி அடையும். உன் கல்யாணத்தை பார்த்து விட்டு தான் என்னால் நீங்க முடியும். என்னோட பேமிலியை நேரம் கிடைச்சா போய்…மட்டும் பாரு. அவங்களோட வாழ நினைக்காத..

பாரு..பாரு..உனக்கான ஒருவனோட உன்னை சேர்த்து வச்ச நிம்மதி இருக்கு..

என்ன பேசுற? நீ இல்லாமல் நான் எப்படி வாழ்றது? என்னால முடியாது. நீ என்னை விட்டு எங்க போனாலும் நானும் அங்க வந்துருவேன்.

இல்லம்மா. நீ எனக்கும் சேர்த்து வாழணும். அவள் கையில் ஒன்றை கொடுத்த சரண். இனி இது தான் உன்னோட வாழ்க்கை..என்றும், பாரு நீ சந்தோசமா இருக்கணும் என்று அவள் கன்னத்தில் கை வைத்தவாறே லவ் யூ பாரு. அடுத்த ஜென்மத்திலாவது நாம ஒண்ணு சேரணும் என்று சொல்லிக் கொண்டே அவள் கன்னத்தில் வைத்திருந்த அவன் கை கீழே விழுந்தது.

சரண்..இங்க பாரு. என்னால எப்படிடா நீ இல்லாமல்…என்று அவனை பார்த்து கதறி அழுதாள். உன்னால எப்படி என்னை விட்டு போக முடிஞ்சது? நான் என்ன செய்றது?  என்ற கதறல் கேட்டு மலையும் சுந்தரமும் உள்ளே வந்தனர். மலையும் அவளுடன் சேர்ந்து கதறி அழுதான். சுந்தரம் அவள் கையில் இருந்ததை பார்த்து அதிர்ந்து நின்றார்.

வீட்டிற்கு வந்த அஜய் காரிலிருந்து இறங்க..இடி மின்னலுடன் மழை சோவென பொழிந்தது. ஆகாயத்தை பார்த்து நின்ற அஜய் தோளில் குகன் கை வைக்க..இருவரும் நனைந்தவாரே உள்ளே சென்றனர். அனைவரும் கார் சத்தம் கேட்டு ஹாலுக்கு வந்தனர்.

அஜய் சோபாவில் ஈரமுடன் தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான். சைலேஷ், கேரி, அர்ஜூன் அவனிடம் வந்தனர். அவன் அசையாது சரண் நினைவிலே அமர்ந்திருந்தான்.

சார், போன் செய்தால் எடுக்க மாட்டீங்களா? உங்களுக்கு ஏதோ ஆகி விட்டதோன்னு பயந்துட்டோம் அர்ஜூன் சத்தமிட..அஜய் அமைதியாக இருந்தான். குகன் அர்ஜூனை பார்த்தான்.

கிரிஷ், என்னாச்சு ஏதும் பிரச்சனையா? அவன் அம்மாவும், அப்பாவும் அருகே வந்தனர். எழுந்து அவன் அப்பாவை அணைத்து…இரண்டாம் முறையாக தவறு செஞ்சுட்டேன்ப்பா. சரண் பிழைப்பது கஷ்டம் என்று அழுதான் அஜய்.

தப்பு உங்க மேல இல்லை சார். என் மேல தான்..அவர் என் பின்னே வந்தது கூட தெரியாமல் உங்களை காண வந்திருக்கேன் என்று கண்ணீருடன் நின்றான் குகன்.

அஜய்க்கு போன் வர..கை நடுங்க போனை எடுத்தான். போன் நழுவி கீழே விழ கேரி அதை பிடித்து எடுத்து ஸ்பீக்கரில் போட்டான்.

சார்..சார்..நம்ம சரண்..சரண்..நம்மள விட்டு போயிட்டான் என்று மலை அழுதான். குகன் கண்ணீரை தேக்கி வைத்திருக்க,அஜய் கதறி அழுதான்.

சார்..அதை விட பெரிய பிரச்சனை? பாரு..என்று கலங்கினான் மலை.

அழுகையை நிறுத்திய அஜய்..பாருவுக்கு என்ன?

நம்ம சரண் வீட்ல அவனை எடுத்துட்டு போனாங்க. இவளும் போனா..ஆனால் அவங்க இவளால் தான் அவன் செத்துட்டான் அவளை அடிச்சி ரொம்ப காயப்படுத்திட்டாங்க. அவனை பார்க்கவே விடலை.

அவகிட்ட போனை கொடு..

சார், அவளுக்கு பின் தலையில் அடிபட்டிருக்கு. நான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கேன். அவளுக்கு கட்டு போட்டிருக்காங்க. இந்தாங்க பேசுங்க..அவன் போனை பாரு முன் வைக்க அவள் ஏதும் பேசாமல் இருந்தாள்.

பாரு..பாரு..லையன்ல இருக்கியா? பாரு..சரண் வீட்டுக்கு போக வேண்டாம். நீ ஆபிசுக்கு போ..என்று அஜய் பேச, அந்த பக்கம் சத்தமேயில்லை. பாரு…அவன் கத்த,

சார், அவ பேசவே மாட்டேங்கிறா? மலை சொல்ல..குகன் முன் வந்து கமிஷ்னர் சார் இருக்காரா? கேட்டான்.

இருக்கார் சார்..என்று அவரை மலை பார்க்க, சொல்லு..என்றார் சுந்தரம்.

அப்பா, அந்த பொண்ணை எதுக்கு அவன் வீட்டுக்கு கூட்டிட்டு போனீங்க? குகன் கேட்க, அப்பாவா? என்று மலையும் பாருவும் அவரை பார்க்க, வீட்டில் அனைவரும் அவனை பார்த்து, கமிஷ்னர் சார் அப்பாவா? கேட்டனர்.

ரொம்ப முக்கியம் பாரு என்று சினந்தான் குகன். அந்த பொண்ணு தான் போறது தான் நல்லதுன்னு தோணுச்சு. அதான் கூட்டிட்டு போனேன் என்றார் மௌனமாக சுந்தரம்.

அந்த பொண்ணை அடிக்கும் வரை நீங்க என்ன செஞ்சீங்க? அவன் கேட்க, உனக்கு எதுக்கு இந்த அக்கறை? அவர் பதிலுக்கு கேட்டார்.

அக்கறையா? என் மேல தான்ப்பா தவறு என்று அவன் வீட்டில் அஜய்யிடம் பேசியதை கூற, இல்லை என் மீது தான் தவறு அஜய் சொல்ல..இருவரும் நிறுத்துறீங்களா? நான் தான்..அவனை வெளியே விட்டிருக்கக் கூடாது. அதனால் தான் என் சரண் என்னை விட்டு ஒரேடியா போயிட்டான் என்று கதறி அழுதாள். வீட்டில் யாருக்கும் ஏதும் சரியாக புரியவில்லை.

என்ன தான் நடந்தது? சைலேஷ் கேட்க, குகன் சொன்னான். மலையும் பாருவும் அழும் சத்தம் கேட்டது அஜய்க்கு.

எல்லாத்தையும் விடு குகா. உன்னோட யூனிஃபார்ம் நேம் பேஜ் எங்க? சுந்தரம் கேட்க, அவன் ஆடையை பார்த்தான்.

அப்பா..என்னிடம் இல்லை. உங்களிடம் தான் இருக்கா. ஊருக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன். அப்பொழுது தான் தன் கையில் சரண் கொடுத்தது நினைவு வந்து கையை பிரித்தாள். சரண் கொடுத்தது குகன் பேஜ். அவள் அழுகை மேலும் கூடியது.

பாரு..போலீஸ் சார் பேஜ் உன் கையில் எப்படி வந்தது? மலை கேட்க, அவள் அழுது கொண்டே சரண் கொடுத்து பேசியதை சொல்ல..குகன் பதட்டமானான்.

குகனை பார்த்த அஜய், ஆம்புலன்ஸில் ஏறும் முன் சரண் உங்களிடம் என்ன சொன்னான்? கேட்டான்.

சார், அவரோட ஆபிஸ்ல அவர் இடத்தில் இருக்கும் பொருள் ஏதோ இருக்காம். அதை அந்த பொண்ணிடம் என்னை கொடுக்க சொல்லி விட்டு..பார்த்துக்கோங்க என்றார்.

என்ன? மலை அதிர்ந்து, அதை உங்களை கொடுக்க சொன்னானா? என்று அவனும் அழுதான்.

என்ன பொருள்டா அது? அஜய் கேட்க, சார்..சரண் பாருவிற்காக கட்டவிருந்த தாலி என்று மலை சொல்ல, கையிலிருந்த அவன் போனை கீழே விட்டான் குகன். அது சில்லுசில்லாய் நொறுங்கியது.

குகன் அவன் அரண்மனையிலிருந்து தப்பி ருத்ரா-சுந்தரம் உதவியுடன் போலீஸ் வேலைக்காக வந்தான். அவன் எண்ணமும் செயலும் முதலில் இருந்தே வேலையில் மட்டும் இருந்தது. அவன் கல்யாணம் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள விருப்பமில்லாமல் தான் உடனே வேலையில் சேர்ந்தான். அதில் பெரிய ஆளாக வேண்டும் என்பது தான் அவன் ஆசை. ஆனால் சரணின் செயலில் அதிர்ந்து பேச முடியாமல் நின்றான்.

அஜய் அவனை பார்த்து விட்டு அவன் அம்மாவை பார்த்தான். அவர் அவ்விடத்தை சுத்தம் செய்தார்.

அஜய்கிருஷ்ணா..அந்த பையன் உனக்கு ஏதோ அனுப்ப சொல்லி டாக்டரிடம் சொல்லி இருக்கான் என்று சுந்தரம் சொல்ல, அஜய் அவன் போனை எடுத்து வீடியோவை ஓட விட்டான். பேச முடியாமல் திக்கி திக்கி சரண் பேசி இருந்தான்.

பாஸ்..நான் பிழைக்கமாட்டேன். எனக்கு நன்றாக தெரியுது. என்னோட குடும்பத்துக்கு துணையா இருங்க. அம்மாவுக்கு கூட அண்ணன் இருக்கான். என்னோட பாரு..பாருவை பார்த்துக்கோங்க பாஸ். அவளுக்கு அப்பாவும் பாப்பாவும் இருந்தாலும் அவளுக்கு ஆறுதலாக அவங்க பேசினாலும் அவளுக்கு திருப்தியா இருக்காது.

என்னோட அம்மாவை அவ பார்க்காம இருப்பது தான் நல்லது. அம்மாவுக்கு ஏனோ முதலில் இருந்தே அவளை பிடிக்கலை. அதற்காக என்னால என்னோட பாருவ விட முடியலை. அவளை விட்டு போகப் போறேன் பாஸ். அம்மாவுக்கு தெரியாமல் கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு தாலியெல்லாம் வாங்கி வச்சேன் சார். ஆனால் எனக்கு பாரு இல்லை என்பது தான் கடவுளின் சித்தம் போல..

சரண் கண்ணீர் வழிய..பாஸ், குகன் சாரிடம் பாரு பேசும் போது பொறாமைப்பட்டேன். ஆனால் இப்ப அவர் தான் என் பாருவுக்கு பொருத்தமா இருப்பார். அவரை எப்படியாவது என் பாருவோட சேர்த்து வைக்க வேண்டியது உங்க கடமை. பாருவிடமும் குகன் சாரிடமும் ஒன்று மட்டும் சொன்னதாக சொல்லுங்க. அவங்க சேர்வது தான், அவங்க கல்யாணம் தான் என் கடைசி ஆசை. நீங்க இருவரும் சேர்ந்து சந்தோசமா வாழணும் பாரு. ஆகாயத்தில் இருந்து உங்களது மகிழ்ச்சியான வாழ்க்கையை பார்த்துக் கொண்டிருப்பேன்..லவ் யூ கப்புள். பாஸ் உங்க காதலோட நீங்களும் சேருவீங்க என்று முடித்திருந்தான்.

அஜய் கண்ணீருடன் குகனை பார்க்க, என்னால முடியாது சார்..என்று கண்ணீருடன் அமர்ந்தான். பாருவும் இதை கேட்டு தேற்றுவாறில்லாமல் அழுது கரைந்து கொண்டிருந்தாள்.

அஜய் குகனை பார்த்து விட்டு, பாரு..அழுறதை நிறுத்துறியா? என்று அஜய் சொல்ல, கண்ணை துடைத்து விட்டு..சார் நீங்க என்ன சொன்னாலும் கேட்டுக்க சொன்னான் சார். நான் அழலை சார் என்று வாயில் கை வைத்து அவளை சமாதானப்படுத்திக் கொண்டு..எனக்கு ஓ.கே சார். நான் குகன் சாரை கல்யாணம் பண்ணிக்கிறேன். அவனை பார்க்கவோ..அவனுடன் வாழவோ தான் முடியாது சார். ஆனால் அவனது கடைசி ஆசை இது தான் என்றால் நான் ஏத்துக்கிறேன் என்று பாரு கூற, குகன் கோபமாக..என்னால் ஏத்துக்க முடியாது சார்.

யாரோ ஒருவருக்காக தெரியாத பொண்ணை எப்படி கல்யாணம் பண்ணிக்க முடியும்?

ஏன் சார், தெரியாத உங்களை கல்யாணம் பண்ணிக்க நான் ஒத்துக்கலையா? அவள் கோபமாக கேட்டாள்.

அவனை நினைச்சுக்கிட்டு என்னை கணவனாக நிமிர்ந்து உன்னால் பார்க்க முடியுமா? குகன் கேட்க, பாருவால் பதில் சொல்ல முடியாமல் அழுதாள்.

குகா..நிறுத்து. இதுக்கு மேல பேச வேண்டாம். நாட்கள் செல்லட்டும் பார்த்துக்கலாம் சுந்தரம் சொல்ல,

ஏன் சார்? பாரு மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அஜய் சுந்தரத்திடம் கேட்டான்.

இப்ப நம்பிக்கையை விட எல்லாருக்கும் அமைதி வேண்டும். அந்த பொண்ணை பத்தி குகனுக்கும் தெரியாது. குகனை பத்தி அந்த பொண்ணுக்கும் தெரியாது. இருவருக்குமே நேரம் தரலாம் என்று சுந்தரம் கூற, அஜய் குகனை பார்த்து, இந்த ஊரிலிருந்து கிளம்பிய பின் அவளுக்கு ப்ரெண்டா உதவுங்க. அப்புறம் மத்த முடிவை எடுத்துக்கலாம்

சார், அந்த பொண்ணை பத்தி எல்லாரும் தப்பா பேச மாட்டாங்களா? குகன் கேட்டான்.

அதை நாங்க பார்த்துக்கிறோம் என்றான் மலை. பாரு அவனை பார்க்க, ஏன் பாரு அப்படி பாக்குற? நம்ம ஆபிஸ்ல எல்லாருமே உன்னோட ப்ரெண்ட்ஸ். நாங்க எப்போதும் உறுதுணையா இருப்போம் என்றான். அவள் கண்ணீருடன் அவனை பார்த்தாள். ஆனால் பாரு…நான் கூட உன்னோட காதல் தான் பெருசுன்னு நினைச்சேன். அதை விட உயர்ந்தது என் காதல் என்று சரண் காட்டிட்டு போயிட்டான். அந்த வழியிலும் உனக்காக மட்டுமே யோசித்திருக்கான். அவன் இல்லாமல் அங்க ஆபிஸ் என்று மலை அழ, பாருவும் அழுதாள். அஜய்யும் கண்ணீருடன் நின்றான்.

அக்கா..என்று சத்தம் கேட்க அனைவரும் விழிவிரித்து கவனித்தனர். கண்ணை துடைத்துக் கொண்டு திரும்பிய தன் அக்காவை பார்த்து..

அக்கா..கட்டு போட்டிருக்காங்க. அப்பா..அக்காவுக்கு அடிபட்டிருக்கு கத்தினாள் புகழ். பள்ளி இறுதியாண்டு படிக்கும் புகழிற்கு அக்கா என்றால் உயிர். கண்ணு தெரியாத அப்பா.

என்னாச்சும்மா? என்று பதறி கைத்தடியுடன் வந்தார் அவர்.

அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு, சின்ன விபத்துப்பா..என்றாள்.

அக்கா..நீ சரியில்லை. அழுதியா? என்று மலையை பார்த்து.. அண்ணா..என்னாச்சு? நீங்க இருக்கீங்க? சரண் மாமாவ காணோம்.

தொண்டை அடைக்க, அவனுக்கு வேலை இருக்காம் புகழ். அதான் வரலை.

இல்லையே..மாமா பிராமிஸ் பண்ணார். உனக்கு சின்ன அடிபட்டா கூட பக்கத்துலயே இருப்பேன்னு சொன்னாரே? வராமல் இருக்காரா? என்று போனை எடுத்து அழைக்க..சரண் போன் கீழே விழுந்த போது குகன் தான் வைத்திருந்தான். எல்லாரும் அவனை பார்த்தனர்.

போனை வாங்கிய அஜய்,..பாப்பா..அவனுக்கு வேலை இருக்கு. அப்புறம் கால் பண்ணு..என்று போனை வைக்கும் நேரத்தில் உன்னோட மாமா செத்து போயிட்டான் என்று கத்தி சொன்னான் குகன்.

ஏய்..என்று அஜய் சத்தமிட, அந்த சின்ன பொண்ணை எத்தனை நாள் ஏமாத்த போறீங்க? அவன் திரும்ப வர மாட்டான். அவள் அக்காவை விட்டுட்டு போயிட்டான்னு சொல்லுங்க என்று சினத்துடன் கத்தினான். அஜய் குகனை அடித்து விட்டான்.

புகழ் பதறி போனை விட்டு, அக்கா..மாமா எங்க? கண்ணீருடன் கேட்க..பாரு அழுதாள்.

பாரும்மா..என்று அவள் அப்பா கைத்தடியை விட்டு தடுமாற, அப்பா..என்று இருவரும் அவரிடம் வந்தனர். சுந்தரம் அவரை பிடித்தார். பார்வதி முகத்தை தடவி பார்த்து, மாப்பிள்ளைக்கு என்னாச்சும்மா?

அப்பா..என்று அவரை கட்டிக் கொண்டு அழுதாள். மூவரும் அழுது கொண்டிருக்க அஜய் போனை வைத்து விட்டு குகனை திட்டினான்.

சின்ன பொண்ணா இருந்தாலும் தெரிஞ்சுக்க வேண்டியதை தெரிஞ்சுகிட்டு தான் ஆகணும். உண்மை தானாக தெரிய வரும் போது அவள் அக்காவை நினைத்து இப்ப இருக்கும் கஷ்டத்தை விட கஷ்டப்படுவாள் என்று குகன் சொல்லி விட்டு நகர்ந்தான்.

சற்று நேரத்தில் புகழும் அழுது கொண்டே அவள் அக்கா தோளிலே சாய அவர்கள் அப்பா நெஞ்சை பிடித்தார். தம்பி, டாக்டரை கூப்பிடுப்பா..என்று சுந்தரம் சொல்ல, மலை டாக்டரை அழைத்து வந்தார். அவர் பரிசோதித்துக் கொண்டிருக்கும் போதே அவர் உயிரும் பிரிய இரு பெண்களும் கதறி அழுதனர். தன் பொண்ணோட வாழ்க்கையை நினைத்தே அவர் உயிர் விண்ணுலகம் போயிற்று.

குகன் நகர்ந்து செல்லவும் தான் அங்கிருந்தவர்களை பார்த்தான் அஜய்.

இன்பா…பிரகதி எங்க? அஜய் கேட்க, எல்லாரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

இடி சத்தம் கேட்கவும் அஜய் பதறி அவள் அறைக்கு ஓடிச் சென்று பார்க்க அவள் அங்கு இல்லை. எல்லாரும் பிரகதியை தேடினர். எந்த இடத்திலும் அவள் இல்லை.

பவி யோசனையோடு பிரகதி அறைக்கே சென்று ஓர் இடுக்கு பகுதியை கூட விடாது தேடினாள். அஜய் அழுது கொண்டே அங்கு வந்தான். பவி சிந்தித்து விட்டு..சார் வழிய விடுங்க என்று அஜய்யை நகர்த்தி கப்போர்ட்டை திறந்தாள். உள்ளிருந்து பிரகதி உட்கார்ந்தவாறே மயக்கத்துடன் சரிந்தாள். பவி அனைவரையும் அழைக்க எல்லாரும் வந்தனர். குகனும் வந்தான். அஜய் அவளை தாங்கி பிடித்து கட்டிலில் போட்டு அவளை எழுப்ப, அவள் எழவில்லை. வாயோடு வாய் வைத்து மூச்சு கொடுத்தான். அவள் எழாமல் இருக்க, அவனுக்கு பயம் அதிகரித்தது. அவள் நெஞ்சை பிடித்து அழுத்தினான். மூச்சு சீரானது..விழித்தாள்.

சார்,..என்று மீண்டும் இடி சத்தத்தில் மயங்கினாள். எல்லாரும் இங்கிருந்து போங்க என்று கத்தினான். எல்லாரும் நகர, சைலேஷூம் கேரியும் அவனுடன் இருந்தனர்.

மலை அஜய்க்கு போன் செய்து பாரு அப்பா இறந்த செய்தியை சொல்ல , சைலேஷை அணைத்து கதறி அழுதான். எல்லாரும் வெளியே இருக்க இன்பா அவர்களை பார்க்க வந்தாள்.

அஜய்..என்று அவனிடம் இன்பா வர..பாருவோட அப்பாவும் போயிட்டாராம் என்று சொல்லிக் கொண்டே அழுதான். குகனும் அங்கு தான் இருந்தான். எல்லாரும் அவனை பார்க்க, அவன் சுந்தரத்திற்கு போன் செய்தான். அவர் நடந்ததை கூற..அப்பா, காரியம் முடிந்த பின் அந்த பொண்ணை நம்ம வீட்டுக்கு கூட்டுட்டு போங்க..

என்னடா சொல்ற? அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறியா? சுந்தரம் கேட்க, இப்ப இல்லை. என் பதவி உயர்ந்த பின் பார்த்துக்கலாம் என்றான்.

யாரோட பச்சாதாபமும் எனக்கு தேவையில்லை என்று அழுது கொண்டே சத்தமிட்டாள் பாரு.

அக்கா..கல்யாணமா? யாரை? புகழ் கேட்க, மலை அனைத்தையும் கூறினான். மாமா..உனக்காக இந்த அளவு அந்நேரத்திலும் யோசித்து இருக்காரா? என்று விரக்தி புன்னகையுடன்..

அக்கா..என்னால ஒத்துக்க முடியாது. நான் அவரை பார்த்து பேசி பழகிய பின் தான் முடிவெடுப்பேன் என்றாள் புகழ். ஆனால் மனதினுள் மாமா செலக்ட் பண்ணா சரியா தான் இருக்கும் என்றும் யோசித்தாள்.

இதை கேட்ட குகன், இப்ப கல்யாணமெல்லாம் நடக்காது. பின் தான் பார்க்கணும்மா..என்று புகழிடம் சொல்லி விட்டு, நான் யோசித்து தான் முடிவெடுத்திருக்கேன். ஆனால் என்னை பற்றி தெரிந்த பின் ஒத்துக்கோ..பார்க்கலாம் என்றான் குகன்.

மலை கோபமாக, பாரு..முதல்ல அப்பாவுக்கு செய்ய வேண்டியதை செய். அப்புறம் சண்டை போடலாம் என்றான்.

மலையரசா..நீயே அப்பாவுக்கு செய்ய வேண்டியதை செய்யுடா..என்றாள் பாரு.

அஜய் போனை வாங்கி, நாங்க ஊருக்கு வாரோம். செய்ய வேண்டியதை குகன் சார் செய்வார் என்றான்.

அப்பா..முதல்ல விசயத்தை சொல்லுங்க. அப்புறம் யாரும் என்னை ஏதும் சொல்லக்கூடாது குகன் சொல்லி விட்டு, அவங்க பதில் சொன்ன பிறகு நாங்க ஊருக்கு வரவா? வேண்டாமா? ன்னு பார்க்கலாம் என்று போனை வைத்து விட்டான்.

பாருவின் அப்பாவிற்கான பார்மாலிட்டீஸை மலை செய்து கொண்டிருக்க, உனக்கு நான் கமிஷ்னர் என்றும் என் பேட்டியை பார்த்திருப்பாய் என்று நினைக்கிறேன் என்று பாருவை பார்த்தார்.

தெரியும் என்றாள். புகழும் அவள் அக்காவுடன் அவர் கூறுவதை கவனித்தாள்.

நான் கல்யாணம் செய்யப் போகும் பொண்ணு ஜமீன் பேமிலி. அவங்க அக்கா பையன் தான் குகன்.

அவரு ஜமீன் பேமிலியா? பாரு அதிர்ச்சியுடன் கேட்டாள்.

ஆமாம்மா. பெரிய பேமிலி தான் என்று அனைத்தையும் சொல்லி விட்டு, அவனுக்கு இந்த உத்யோகம் தான் பிடிச்சிருக்கு. அவன் எங்களுடன் வந்து ஒரு வாரம் கூட ஆகலை. அமைதியா தான் இருப்பான். கோபம் வந்தால் தான் கிலோ கணக்கில் வரும். அதை விட அவன் கொலைகாரன் மகன் என்பதால் தான் உன் வாழ்க்கையை பற்றி அதிகம் யோசித்திருப்பான். பேச வேண்டிய நேரம், இடத்தில் மட்டும் தான் பேசுவான். இங்கே வரும் முன் கூட அவங்க பேமிலி பிசினஸை கவனித்துக் கொண்டு தான் இருந்திருக்கான். நல்ல பையன் தான்ம்மா. அவன் அப்பா தான் சைக்கோ. அவனுக்கு தம்பி கூட இருக்கான். அவன் டாக்டரா இருக்கான் என்று அவங்க செய்யும் எல்லாவற்றையும் சொன்னார் சுந்தரம்.

ஜமீன் பேமிலி என்பதால் அதுவும் பெரிய பேமிலி என்பதால், சார் இது சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிறேன் பாரு சொல்ல..அவன் பேமிலியை பத்தி யோசிக்கிறியா?

அதை ஒப்பிட்டால் நானும் அவங்க பொண்ணை எப்படி கல்யாணம் செய்து கொள்ள முடியும்?

நீங்களே இப்படி சொல்றீங்க? எங்களுக்கு சின்ன வீட்டை தவிர ஏதுமில்லை. நாங்க என்ன செய்றது சார்? என் கல்யாணத்து சேர்த்து வைத்திருக்கோம் தான். ஆனால் அவங்க பேமிலி அளவுக்கு சின்னதா கூட ஏதும் செய்யவே முடியாது.

சரி, நாம நினைக்கிறதை அவனிடமே பேசிக்கலாம். நான் இனி அந்த குடும்பத்துக்குள் செல்ல மாட்டேன்னு சொல்லீட்டு தான் வந்திருக்கேன். அதனால எங்க கல்யாணம் கோவில்ல வச்சி கூட முடிச்சிருவோம். ஆனால் அந்த வீட்டிலே பிறந்து வளர்ந்த சொந்த பையன் போல தான். அதனால் அவனும் அவன் அம்மா, தாத்தா தான் முடிவு செய்யணும் என்றார்.

அக்கா,மாமா முடிவு சரியா தான் இருக்கும். அதனால போலீஸ் சாரையே கல்யாணம் பண்ணிக்கோ புகழ் சொல்ல..முதல்ல பேசிக்கலாம் என்று அவள் அப்பாவை பார்த்து..

உங்கள் இருவரையும் இழந்துட்டு நான் என் கல்யாணத்தை பற்றி யோசிக்கிறேன்னு நினைக்காதீங்கப்பா. இப்ப தெரிஞ்சுக்க வேண்டிய கட்டாயம். உங்களுக்கு நான் கொல்லி வைப்பதை விட..உங்க மருமகன் வைப்பது தான் சரியாக இருக்கும். என்னை மன்னிச்சிருங்கப்பா..என்று குகனிற்கு போன் செய்ய, அவன் போன் தான் உடைந்து விட்டதே. போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது என்று வந்தது. அதனால் அஜய்க்கு போன் செய்து அவரிடம் பேசணும் என்றாள்.

யோசனையுடன் அவன் போனை நீட்ட, குகன் வாங்கி சொல்லுங்க..என்றான்.

பாரு மனதில் பட்ட அனைத்தையும் கேட்டு விட, ஸ்டேட்டஸ் பத்தி பேசாதீங்க. எனக்கு பிடிக்காது. நான் ஸ்டேட்டஸ்காக உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொல்லலை. காலையில் இருந்து உங்க ஆபிஸ்ல தான் இருந்தேன். உங்க எல்லாரையும் கவனிச்சுக்கிட்டு தான் இருந்தேன். நீங்க இருவரும் நடந்து கொண்டதை பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். அவர் இறந்து விட்டார் என்று என்னால் எப்படி உடனே திருமணம் செய்து கொள்ளமுடியும்? அமைதியாக கேட்டான். சரண் பாருவிற்கு கொடுத்த முத்தம் நினைவிற்கு வர அழுகை வந்தது. அவள் கட்டுப்படுத்தினாள். அதை குகனால் ஃபீல் பண்ண முடிந்தது.

அழனும்ன்னா அழணும். அழுகையை கட்டுக்குள் வைக்க பார்க்காதீங்க. பலமடங்கு வலியை கொடுக்கும். முதல்ல சொன்ன மாதிரி பழகலாம். எனக்கு கல்யாணத்துக்கும் ஓ.கே தான். ஆனால் உடனே அடுத்த படிக்குள் செல்ல முடியாது. உங்க அப்பா வேற இறந்திருக்கார். ஆறு மாதமோ இல்லை ஒரு வருடம் கழித்தோ பார்க்கலாம்.

உங்க பேமிலி?

என் அம்மாவிடம் ஏதும் கேட்க எனக்கு விருப்பமில்லை. தாத்தாவை நான் சம்மதிக்க வைத்து விடுவேன். நீங்க எதை பற்றியும் கவலைப்படாதீங்க.

புகழ்?

பாப்பா நம்முடன் இருப்பதால் ஒன்றுமில்லை என்றான்.

புகழ் போனை வாங்கி, எனக்கு நீங்க நல்ல பதிலா சொன்னா தான் ஒத்துப்பேன் என்றாள்.

கேளும்மா..என்றான்.

இப்பவே உங்க வீட்டுக்கு வர சொல்றீங்க? நானும் உடன் தான் இருப்பேன். ஓ.கே வா?

நீங்க இல்லாமலா? அவன் கேட்க,

உங்களோட ஃபீரி டைம்ல என்ன செய்வீங்க?

இதுவரை ஃபிரீ டைம் இருந்ததில்லை. இனி இருந்தால் நாம் இருவரும் எங்காவது வெளியே போகலாம்.

அப்ப அக்கா?

சண்டை போடாம இருந்தா வேண்டுமானால் அழைத்து போகலாம் என்றான்.

எங்காவதுன்னா? எங்க?

நீங்க இருவரும் சொல்ற இடத்துக்கே போகலாம்.

அப்ப உங்களுக்கு எந்த இடமும் பிடிக்காதா?

தெரியாது..என்றான்.

தெரியாதா?

எங்கும் சென்றதில்லை. பிசினஸ் டிரிப் கூட மீட்டிங் முடிஞ்சதும் பேலஸ் போகணும். அங்க நிறைய விதிமுறைகள் இருக்கும்.

நாங்க அங்க தான் இருக்கணுமா?

இல்லம்மா. அங்க நாம இருக்க தேவையில்லை. உனக்கு விருப்பம்ன்னா இருக்கலாம்.

வெளியவே போக முடியாத இடத்துல இருக்க முடியாதுப்பா..என்றாள் புகழ்.

ஓ.கே. அப்பா வீட்ல இருந்துக்கலாம்.

அங்க யார் யார் இருப்பா?

போதும் நீ பேசியது. மலை வந்துருவான். நாம வீட்டுக்கு கிளம்பணும் என்று போனை வாங்கிய பார்வதி, நீங்க கிளம்பி வாரீங்களா? நேரமாகுது..

போனை பாப்பாகிட்ட கொடுங்களேன் குகன் சொல்ல, அவள் போனை புகழிடம் கொடுத்தாள்.

உங்க கேள்விக்கு நாளைக்கு பதில் சொல்றேன்.

ம்ம்..பர்ஃப்ட்டா இருக்கீங்க மாமா என்றாள் புகழ். அப்புறம் உன் அக்கா மாதிரி பாதியிலே போனை வாங்கிடுவேன்னு நினைச்சீங்களா? அவன் கேட்க, ஹலோ..கிளம்பி வாங்க..என்று பாரு சொல்லி விட்டு போனை வைத்து விட்டு விரக்தியுடன் தன் அப்பாவை பார்த்தாள். மலை உள்ளே வந்தான்.

குகன் பேசியதை அனைவரும் ஆச்சர்யமுடன் பார்த்தனர். மச்சான்..இப்ப நல்லா பேசுனீங்க? அர்ஜூன் கேட்க, நீ..கேட்டான்.

நீங்க அப்பான்னு யாரை சொன்னீங்களோ? அவர் என் சொந்த மாமா என்றான் அர்ஜூன்.

நீ தான் அர்ஜூனா? நந்து சொல்லி இருக்கான்? அவர்கள் பேச..பிரகதி எழுந்து அமர்ந்தாள். அவளை பார்த்து அவளிடம் வந்தான் அஜய்.

சார், எனக்கு..என்று வெளியே பார்க்க மண்வாசனை மழை வந்ததை அறிவுறுத்த அவள் கண்கள் கலங்கியது.

எதுக்கு அதையே நினைச்சுக்கிட்டு இருக்க?

இந்த மண்வாசனை கூட எனக்கு வலியை தான் எண்ண வைக்கிறது என்றாள்.

சரி, இதை இனிமையான வாசனையாக மாற்றலாமா? என்று அவன் கேட்க..அருகே இருந்த சைலேஷ், கேரி வெளியேறினர்.

பிரகதி..கொட்ட கொட்ட விழிக்க..அமர்ந்த அவளை நெருங்கி அஜய் வர, அவள் பயத்துடன் விலகினாள். அவள் தோளில் இருகைகளையும் வைத்து அழுத்தி, நீ என் கண்ணை மட்டும் பாரு.

நோ..சார்..

நோ வா? என்று ரோஜா இதழ்களை கையில் ஏந்துவதை போல் அவளை மென்மையுடன் தூக்கினான். அவன் கை பட்டவுடன் நேராக அவன் கண்களையே பார்த்தாள் பிரகதி. இன்று முதல் உனக்கான அழகான நினைவுகளை கொடுப்பேன் என்று அவள் நெற்றியில் முத்தமிட்டான். அவள் கண்களை மூட, அவள் இதழ்களை நோக்கி குனிந்தவன் நிறுத்தி அவளது கன்னத்தை வருடினான். கண்ணை விழித்து..அவனை பார்த்து வேகமாக கீழிறங்கினாள். இன்று இது போதும். உன் பழைய நினைவுகள் அழிய நான் உதவுகிறேன் என்று அவளை பார்த்து விட்டு, சரண் கொடுத்ததை எடுத்தான். அவள் அப்பொழுது தான் அவன் தலையில் கட்டையும், அவன் ஆடையில் இருந்த இரத்தகறையையும் பார்த்து பதறினாள்.

எனக்கு ஒன்றுமில்லை என்று அவளை பார்த்துக் கொண்டே கண்ணீருடன்..இதை உனக்கு நான் கொடுக்க ஒருவன் தன் உயிரையும் பொருட்படுத்தாது எங்களை பின் தொடர்ந்து வந்து, மொத்தமாக எங்களை விட்டு சென்று விட்டான் என்று அவள் கையில் கொடுத்து விட்டு கண்ணீருடன் அறைக்கு சென்றான்.

சார்,..நில்லுங்க என்று பிரகதி அவன் பின் வந்தாள். அனைவரும் அவளை பார்த்து அவளிடம் வந்து அவள் உடல்நலத்தை விசாரித்தனர்.

ஐந்தே நிமிடத்தில் அஜய் வர, குகனும் அஜய்யும் கிளம்பினர். பிரகதி அவனை பார்த்துக் கொண்டே நின்றாள். அகில் அவர்களிடம் வந்து சார், கால் பண்ணா போனை எடுங்க. டென்சன் ஆக்காதீங்க என்றான். அஜய் தலையசைத்து பிரகதியை பார்த்துக் கொண்டே சென்றான்.

Advertisement