Advertisement

அத்தியாயம் 133

பூங்குயில்கள் அடையும் சத்தம் கேட்டு எழுந்த பிரகதி பக்கத்தில் அஜய்யை பார்த்து பயந்து நகர்ந்தாள். அவன் போனில் ஆர்வமாக மேசேஜ் செய்து கொண்டிருக்க அவளை கவனிக்க தவறினான். அவள் அமைதியாக கண்ணை மூடினாள். அஜய்க்கு போன் வந்தது.

முடிச்சிட்டியா? இல்லையா? காரமாக பேசினான்.

பாஸ் முடிஞ்சது. ஆனால் அந்த குளோரியா மேம் உங்களை பார்க்கணும்ன்னு பிடிவாதம் பண்றாங்க.

நானே பேசிக்கிறேன். இல்ல பாஸ். பக்கத்துல தான் இருக்காங்க அவன் சொல்ல, போனை பிடுங்கிய அந்த பொண்ணு அஜய்யிடம் குழைந்து குழைந்து பேச..மேம்..நான் பேசலாமா? கேட்டான்.

சொல்லுங்க சார். நாம மேரேஜ எப்ப வச்சுக்கலாம்? கேட்டாள்.

மேரேஜா? என்று சிரித்த அஜய்..என்னை பற்றி கேள்விபட்டிருப்பீங்கல்ல. ஏற்கனவே எனக்கு ஆள் இருக்கு. அந்த பொண்ணு சொன்னா இப்பவே மேரேஜ் பண்ணிக்க தயாரா இருக்கேன். ஆனால் அவளுக்கு நேரம் தேவைப்படுதாம். உங்களுக்கு வேற நல்ல லாயர் பையன் கிடைப்பான் என்றான்.

சார், நான் இன்னும் உங்களுக்கு ஃபீடு பேக் கொடுக்கலை?

சோ வாட்? நான் உங்கள மேரேஜ் பண்ணா நல்ல ஃபீடு பேக் தருவீங்க? அதான் சொல்ல வர்றீங்க?

எஸ், அஃப் கோர்ஸ்..

மேம்..என்னை பற்றி லாயர்ஸ், அட்வகேட், ஜர்ஜூக்கு கூட தெரியும். எங்க வேலை முடிஞ்சது. நீங்க பணமும் பே பண்ணிட்டீங்க? தேட்ஸ் ஆல்..பினிஸ்.

நீங்க என் மேல கம்பிளைண்ட் பண்ணா அது உங்களுக்கு தான் பிரச்சனை. நீங்க எங்க ஆபிஸீக்கு வந்து என்னை பார்த்து ஜொல்லு விட்டது தெளிவா பதிவா இருக்கு மேம். அப்புறம்..நீங்க தாராளமா கம்பிளைன்ட் கொடுங்க. என்னை தொந்தரவு பண்றதா நானும் பண்றேன். யார் சொல்றதை எல்லாரும் நம்புறாங்கன்னு பார்க்கலாமா? “ஐ அம் ரெடி ஆல் ஆஃப் அஸ்”. “ஆர் யூ ரெடி மேம்?” கிண்டலாக கேட்டான்.

நான் யார் தெரியுமா?

மேம், உங்கள பத்தி தெரியாம எப்படி உங்க கேஸை ஜெயிச்சி கொடுத்திருப்போம். நீங்க கிளம்புங்க. இதுக்கு மேல நீங்க என்னை பார்க்க நினைச்சா கூட நான் கம்பிளைன்ட் கொடுக்க வேண்டி இருக்கும். அவர் போனை கோபமாக சரண் மேல் போட்டு விட்டு சென்றார்.

பாஸ்..வேற லெவல்ல பேசிட்டீங்க..

நீ எங்க இருக்க?

நான் நம்ம ஆபிஸ்ல தான் இருக்கேன்.

ஆபிஸ்லயா? சத்தமே இல்லை அஜய் கேட்க, அதான் போலீஸ் இருவரை அனுப்பி இருக்காங்க. ஒருவர் சரியான சிடுமூஞ்சி சார். ஆனால் செம்ம அழகா இருக்கான். நீங்க சொன்ன வேலையை விட்டுட்டு பொண்ணுங்க அவரை சைட் அடிக்குதுங்க. இந்த மலையும் அவன் வேலையை ஆரம்பிச்சுட்டான். என்னால முடியலை பாஸ். கடுப்பா இருக்கு. மற்றவர் நடுத்தர வயதுடையவர். அவர் பக்கம் நம்ம பசங்க கூட போகலை.

அஜய் கலகலவென சிரித்து விட்டு, டேய்..பாரு என்ன பண்றா?

பாருவா? என்று எட்டி பார்த்து, பாஸ் அவள பாருங்களேன். அந்த போலீஸ்காரனை பயங்கரமா கவனிக்குறா?

சரி..இப்ப தான் நீங்க எல்லாரும் ரெஸ்ட்ல இருக்க முடியும். எஞ்சாய் பண்ணுங்க.

பாஸ், நீங்க தான் பேசுறீங்களா? நம்பவே முடியலை. உங்களுக்கு அம்மா, அப்பா பார்த்த பொண்ணை பிடிச்சிருச்சோ.

அம்மா, அப்பா பார்த்த பொண்ணுன்னு உனக்கு யார் சொன்னா?

பாஸ், லவ்வா?

ம்ம்..என்றான். அட, எங்க பாஸையே வளைச்சு பொண்ணு யாரு?

டேய், அந்த பொண்ணு விருப்பமில்லாத மாதிரி பேசுறா? நீ வேற?

சார், உங்களுக்கு பிடிச்சிருக்குல்ல விட்றாதீங்க. ட்ரை பண்ணிகிட்டே இருங்க.

இல்லடா. எனக்கு அவளை தொந்தரவு செய்ய விருப்பமில்லை. ஆனால் அவளுக்காக காத்திருப்பேன் என்றான்.

பாஸ்..பார்த்து, வேற யாரையாவது அவங்க லவ் பண்ணிடாம?

அவள் யாரையும் லவ் பண்ண மாட்டாடா. நீ எல்லாரையும் பார்த்துக்கோ என்று அந்த போலீஸிடம் போனை கொடு என்று நடுத்தவரிடம் பேசி விட்டு, குகனிடமும் பேசி விட்டு போனை வைத்தான் அஜய்.

துங்கி எழுந்தவள் போல் விழித்து, சார் என்ன பண்றீங்க? பிரகதி கேட்டாள்.

ஏய் கேடி, நீ இப்ப தான் விழிக்கிறியா? அவன் கேட்க, ஆமா சார், செம்ம தூக்கம். நீங்க வெளிய போங்க என்றாள்.

பொய் சொல்லும் இந்த உதட்டை என்று அவளிடம் வந்து பிரகதி உதட்டை பிடிக்க, சார் விடுங்க என்று அவன் கண்ணை பார்த்துக் கொண்டே அவள் சுருதி குறைய..

ம்ம்..விடணுமா? என்று அவன் இதழ்களை அருகே கொண்டு வர, அவள் பயத்தில் கண்ணை மூடினாள். அஜய் கண்கள் பிரகதி இதழ்களில் படிய..அவளது காயப்பட்ட உதட்டை மெதுவாக ஊதினான். அவள் உடல் சிலிர்த்தது. கண்களை திறந்து அஜய்யை பார்த்தாள். அவன் போன் ஒலிக்க, அவன் கையை தட்டி விட்டு நகர்ந்து அமர்ந்தாள். அவன் புன்னகையுடன் போனை எடுத்து, அர்ஜூன்..உன்னோட மாமா, எங்க ஆபிஸ் பொண்ணுங்களை மயக்கிடுவான் போல.

சார்..என்று அர்ஜூன் பதட்டமாக, அஜய் முகம் மாறியது. என்ன ஆச்சுடா?

எங்க சீனியர்..அதான் காணாமல் போன சக்தி அண்ணா வொய்ஃப் தற்கொலை முயற்சி பண்ண பாத்தாங்க?

வாட்? சூசைடா? என்று எழுந்த அஜய், இப்ப எப்படி இருக்காங்க?

அவங்க முயற்சி செய்யும் போது கௌதம் சார் காப்பாத்திட்டாங்க. சார்..எனக்கு உங்க கெல்ப் வேணுமே?

என்ன செய்யணும் அர்ஜூன்?

சார், சக்தி அண்ணா செல்லும் போது பையுடன் சென்றிருக்காங்க. கண்டிப்பாக வருவேன்னு சொல்லிட்டு போயிருக்காங்க. ஏலகிரியிலயே அவங்க இல்லை. எனக்கு என்னமோ சென்னைக்கு போயிருப்பாங்களோ? என்று தோன்றுகிறது?

அர்ஜூன், அவரை அந்த கொலைகாரன் ஏதும் செய்திருப்பானோ?

இல்ல சார். இருக்கக்கூடாது. உங்க ஆட்களை வச்சு ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்களேன். எல்லாத்தையும் மாமாவிடம் கேட்க முடியாதுல சார்.

ஓ.கே அர்ஜூன். அவன் வீட்டில் என்ன சொல்றாங்க?

அவங்க வேற பொண்ணுக்கு அவரை கல்யாணம் செய்து வைப்பதாக கூறியதால் தான் சீனியர் தற்கொலை முயற்சியில் இறங்கி இருக்காங்க.

நீ அவங்கள பார்த்துக்கோ. நான் அவன் வீட்டில் விசாரித்து விட்டு ஆக வேண்டியதை பார்க்கிறேன் என்று அஜய் சொல்லி விட்டு போனை வைத்து பிரகதியை பார்த்து, போயிட்டு சீக்கிரம் வந்துருவேன். அப்புறம் நாம கண்டினியூ பண்ணலாம்.

சார்..என்று தலையணையை அவன் மீது பிரகதி தூக்கி எறிந்தாள்.

ஹேய், நான் பேசிய அனைத்தையும் தூங்குவது போல் நடித்து கேட்டுக் கொண்டு தானே இருந்த? நீ விழித்ததை நான் கண்டு கொண்டேன். உன்னை வந்து கவனிச்சுக்கிறேன் என்று வெளியே வந்தான். அவன் அண்ணனும், அண்ணியும் அவன் இடையே வந்து, எங்கிருந்து வர்றீங்க லாயர் சார்? கேலியுடன் அவன் அண்ணி கேட்க,

அண்ணா..பார்த்துக்கோ. நான் இப்பொழுதே போகணும் என்று போனை எடுத்து கௌதமை சக்தி வீட்டிற்கு வர சொல்லி விட்டு திரும்பி, எல்லாரும் கவனமா இருங்க என்று சொல்லி சென்றான்.

கௌதமும் அஜய்யும் அவன் அம்மா, அப்பாவிடம் பேசியதை வைத்து, அவன் எங்கோ செல்ல முடிவெடுத்து தான் சென்றிருக்கிறான் என்று ஹாஸ்பிட்டல் வந்தனர். மாலினியின் தோழி வசுந்தரா அவளை திட்டிக் கொண்டிருந்தாள். மாலினி அம்மா, அப்பா கண்ணீருடன் அமர்ந்திருந்தனர். அர்ஜூன் வெளியே அமர்ந்திருந்தான்.

பிரதீப் அர்ஜூனை ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியே வர சொல்லி போன் செய்ய, அர்ஜூன் கீழே வந்தான். பிரதீப்பும் வேலுவும் நின்றிருந்தனர். பிரதீப் போனிற்கு பத்தாயிரம் சக்தி பெயரிலிருந்து வந்துருக்கு என்று அவன் சொல்ல, அஜய்யும் கௌதமும் அங்கே வந்தனர்.

அர்ஜூன் அவன் இந்த சரவுண்டிங்கிலே இல்லை. பணம் அனுப்பி இருக்கான். அவ்வளவு பணம் அவனுக்கு எப்படி இந்த ஒரே நாளில்? அனைவரும் சிந்திக்க,

மாலினிக்காக தான் அனுப்பி இருப்பார் என்று கௌதம் சொல்ல, எப்படி அவளுக்கு தான்னு உறுதியா சொல்ற?

அவர் மாலினியை பார்த்து விட்டு செல்லும் முன் அவர் அமைதியாக இருந்தாலும்..வருவேன்னு சொல்லிட்டு தான் போனார். ஆனால் பணம் அனுப்பி இருக்கார் என்றால் மருத்துவ செலவுக்காக தான் என்று நினைக்கிறேன். அவர் பெற்றோர் பேசியதில் அவருக்கு விருப்பமில்லை என்று அவர் முகத்தில் தெளிவாக தெரிந்தது. ஆனால் பணத்தை மட்டும் எதுக்கு அனுப்பணும். அவர் வரலை. ஏதாவது ஆகி இருக்குமோ? சிந்தித்தனர்.

கௌதம் போனிற்கு அழைப்பு வர சக்தி எண்ணை பார்த்து, எங்க தான் இருக்கீங்க? கோபமாக கத்தினான். வேறொருவர் பேசினார்.

சார், சக்தி உங்களுக்கு உறவா? அந்த பக்கம் கேட்க, ஆமா..என்ற கௌதம், அவர் எங்கே? கேட்டான்.

சக்தி சார், கிக் பாக்சிங் சேம்பியன்ஷிப் போட்டியில் கலந்து வெற்றி பெற்றார். ஆனால் அவருக்கு பலமாக அடிபட்டிருக்கு. யாராவது வந்தால் உதவியா இருக்கும் என்றார்.

கிக் பாக்சிங் சேம்பியன்ஷிப்பா? அவரா? அவர் நல்லா தானே இருக்கார் கௌதம் பதறினார்.

போனை பிடுங்கிய பிரதீப், எங்க இருக்கான்? நாங்க இப்பவே வாரோம் என்று அட்ரசை வாங்கி விட்டு, நாங்க வரும் வரை அவனை பார்த்துக்கோங்க சார்.

முதல்ல கிரிட்டிக்கல்லா தான் இருந்தார். இப்ப கண்ணை முழிச்சிட்டார். “இட்ஸ் ஆல் ரைட்” சீக்கிரம் வாங்க சார் என்று அவர் போனை வைத்து விட்டார்.

யாருக்கும் இப்ப சக்தியை பத்தி தெரிய வேண்டாம். நான் போய் அவன் சரியாகவும் அழைச்சிட்டு வாரேன் பிரதீப் சொல்ல, அண்ணா அந்த கொலைகாரன் அர்ஜூன் சொல்ல..

நான் பார்த்துக்கிறேன் அர்ஜூன் பிரதீப் சொல்ல, நானும் உங்களுடன் வாரேன் என்று கௌதம் சொன்னான்.

நீங்க இங்க இல்லைண்ணா எல்லாருக்கும் சந்தேகம் வந்திடும் பிரதீப் சொல்லிக் கொண்டே அவன் காரில் ஏற, நானும் வாரேன் முடிந்தால் என்னோட பசங்களையும் பார்த்துட்டு வந்துருவேன் என்று அஜய் சொல்ல, சார்..உங்க அப்பா? அர்ஜூன் கேட்டான். நீங்க காரை எடுங்க. நான் என் அப்பாவிடம் சொல்லிட்டு வந்துடுறேன் என்று அர்ஜூன் பாட்டி வீட்டிற்கு காரை விட சொல்ல, நானும் என் அம்மா, அப்பாவிடம் சொல்லணும் என்று அஜய்யை பிரதீப் அவன் வீட்டிற்கு அழைத்து சென்றான். ஆதேஷூம் ஜானுவும் படிக்கிறோம் என்ற பெயரில் காதல் அம்பை விட்டுக் கொண்டிருந்தனர்.

என் தங்கச்சி படிக்கிறதை பார்த்தீங்களா? அஜய்யிடம் பிரதீப் சொல்லிக் கொண்டே, மாப்பிள்ள சொன்னதை மறந்துட்டீங்களோ? ஜானு படிப்பது போல் தெரியவில்லையே?

மாமா..அவளை அறைக்குள் வைத்து சொல்லி கொடுத்தால் தான் சமத்தா படிக்கிறா. வெளிய வந்தா என்னை ஓட விடுறா?

ம்ம்..ஓடுங்க..ஓடுங்க..என்று ஜானுவை பார்த்துக் கொண்டே உள்ளே சென்றான். அஜய்யும் புன்னகையுடன் இருவரையும் பார்த்துக் கொண்டே சென்றான். துகிரா உள்ளே கையில் நகச்சாயத்தை வைத்துக் கொண்டு அப்பத்தாவை படுத்திக் கொண்டிருந்தாள்.

பிரதீப்பை பார்த்து, ஹே..வந்துட்டீங்களா? வாங்க உங்களுக்கு போட்டு விடவா? என்று கேட்டுக் கொண்டே அஜய்யை பார்த்து, சார் உங்களை பார்த்த போதே பேச நினைத்தேன். வீட்டுக்கே வந்துட்டீங்க அஜய்கிருஷ்ணா சார் துகிரா அவனிடம் பேச, உனக்கு இவரை தெரியுமா? பிரதீப் கேட்டான்.

நல்லா தெரியும். அப்பா கேஸ் விசயமா பேச வீட்டுக்கு வரும் போது பார்த்திருக்கேன் என்று சட்டென அமைதியானாள்.

சரி, அம்மா, அப்பாவை எங்க? அவளது தலையில் கை வைத்தான்.

அவங்க உள்ள என்று அத்தை, மாமா உங்க பையன் வந்துட்டாங்க என்று அவள் நகர, அவளது கையை பிடித்த பிரதீப், நான் எங்கன்னு தான் கேட்டேன்? உன்னை அழைக்க சொன்னேனா?

வெற்றியும் மீனாட்சியும் வந்தனர். என்னப்பா? என்று வெற்றி அஜய்யை பார்த்து, தம்பி, நீங்க தேவா சார் பையன் தான உட்காருங்க..என்றார்.

அங்கிள் நேரமாகுது. வெளியே போகணும். அதான் உங்கள் மகனுடன் வந்தேன். இன்னொரு நாள் வந்து பேசுகிறேனே? அஜய் சொல்ல, சரிப்பா என்று பிரதீப்பை பார்த்தார்.

அப்பா..முக்கியமான விசயம். சக்தி சென்னைக்கு போயிருக்கானாம். ஆனால் யாருக்கும் சொல்லாதீங்க. நான் அவனை அழைத்து வாறேன். நாளை கூட ஆகலாம்.

ஏதும் பிரச்சனையா? வெற்றி கேட்க, ஆமாப்பா. நான் பார்த்துக்கிறேன். அதான் சாரும் வாராரே? என்று அவன் கிளம்ப, துகிரா முகம் வாடியது. இருவரும் கிளம்ப, சார்..அந்த பொண்ணிடம் ஏதாவது பேசிட்டு வாங்களேன் அஜய் சொல்ல, பிரதீப் துகிராவை பார்த்தான். எல்லாரும் அவளை பார்த்தனர்.

குட்டிம்மா..உன்னோட ரூம்ல..உனக்கு பிடிச்சது இருக்கு. எடுத்துக்கோ.. என்று பிரதீப் சொல்ல, அவள் அவனை முறைத்துக் கொண்டே சாக்லெட் பாக்ஸூடன் வந்து புன்னகையுடன் கையசைத்தாள்.

லவ்வா, எப்படி சார்? அஜய் கேட்க, புன்னகையுடன் பிரதீப் அவளுக்கு பிடிச்சதை தினமும் வாங்கி தந்தாலே அவள் சந்தோசமா இருப்பா. எப்பொழுதும் அவள் அருகே இருப்பேன். கையில் கொடுப்பேன். கொடுக்க தான் அவள் அறைக்கு சென்றேன். அவள் இல்லை அதனால் தான் வைத்து விட்டு வந்தேன்.

சூப்பர் சார் என்று..இருவரும் அர்ஜூன் பாட்டியின் தோப்பு வீட்டிற்கு சென்றனர்.

கேரி இன்பாவை பார்க்க வந்திருந்தான். இன்பாவும் கேரியும் பேசிக் கொண்டிருக்க பிரகதி அவர்களுக்கு டீ கொடுத்து விட்டு அருகே அமர்ந்தாள்.

ஜாஸ்மின் இதயா, பவியுடன் மகிழ்ச்சியுடன் விளையாண்டு கொண்டிருந்தாள்.

இன்னு..பாரேன். அவள் ரொம்ப சந்தோசமா இருக்கா. இவள் சிரித்து கடைசியா என் வொய்ஃபை வீட்டிற்கு அழைத்து வந்தேனே அந்த நாளில் தான் பார்த்தேன். அவள் எங்களை விட்டு போனதிலிருந்து யார் முகத்திலும் சிரிப்பில்லாமல் போனது. இவளும் அவள் அக்காவை ரொம்ப மிஸ் பண்ணி இருக்கா. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு என்று கண்ணீருடன் சொல்ல..எல்லாரும் ஒருநாள் மாறும் என்று இன்பா பிரகதியை பார்த்தாள். கேரி இருவரையும் பார்த்தான்.

நீ மட்டும் என்னம்மா பண்ற? போ..அவங்களுடன் எஞ்சாய் பண்ணு என்று கேரி கூற, நாட் இன்ட்ரஸ்டடு சார் என்று பிரகதி கூறிக் கொண்டே அவன் கையில் வைத்திருந்த பாப்பாவை பார்த்தாள்.

சார், நீங்க இருவரும் போங்க. பாப்பாவை நான் பார்த்துக்கிறேன் என்று பிரகதி பாப்பாவை துக்க கேரி பயத்துடன் அவளை பார்த்தான்.

கேரி, பயப்படாத அவள் பார்த்துப்பா என்று அவனை தள்ளி அழைத்து சென்று இன்பா பிரகதியை பார்த்தாள். அவள் முகத்தில் இதுவரை தெரியாத பளபளப்பு தெரிய இன்பா புன்னகையுடன் அவளை பார்த்தாள்.

சின்னப் பொண்ணை சைட் அடிக்கிறியா? கேரி கேட்க, நோ..டா என்று அவளை பார்க்காத புதுவிதமாய் பார்க்கிறேனா? அதான் மெய் மறந்து பார்க்கிறேன் என்றாள். எனக்கும் அப்படி தான் தோன்றுது? என்று பின்னிருந்து ஓலி கேட்க இருவரும் பயந்து நகர்ந்தனர். அஜய்யின் அண்ணி கண்ணை கசக்கிக் கொண்டு, அவள் பாவம்ல்ல என்றாள்.

கேரி புரியாமல் விழிக்க, அவகிட்ட அப்படி சொன்னீங்க? அவ்வளவு தான். அவள் அஜய்யை திரும்பி கூட பார்க்க மாட்டாள். சும்மா இருங்க சிஸ்டர் என்ற இன்பா..வாங்க போகலாம். அவளை தான் பார்க்கிறோம்ன்னு பார்த்தா தப்பா எடுத்துப்பா.

அஜய்யா? கேரி கேட்க, பிரதீப்பும் அஜய்யும் வந்தனர். பிரகதி வெளியே கேரி பாப்பாவோட விளையாண்டு கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே வந்த அஜய் கண்ணில் இன்பா, கேரி, அவன் அண்ணி பட்டனர். பிரகதி  கேரி பாப்பாவை கீழே விட்டு அதற்கு விளையாட்டு காட்டிக் கொண்டு.. வா..வா..என்று அழைக்க, பாப்பா அவளிடம் தவண்டு கொண்டு..கிளுக்கி நகைத்துக் கொண்டே வந்தது. அவளும் என்றும் இல்லாத புன்னகையுடன் அதனை தூக்கி சுற்றினாள். வந்து கொண்டிருந்த பிரதீப் மீது மோத வந்தவளை கண்ட அஜய் இடையே வந்தான். இருவரும் இடித்து விழ, அஜய் அவளை பிடித்து பார்த்துக் கொண்டிருக்க பாப்பா சிரித்துக் கொண்டே அஜய்யிடம் பாய்ந்தது.

ஹேய்..அங்கிள்க்கு வேலை இருக்கு. முடிச்சிட்டு வந்து உன்னை பார்க்கிறேன் என்று பாப்பா கன்னத்தில் முத்தமிட்டான். பிரகதி பாப்பாவை பிடுங்கி, பாப்பா கன்னத்தில் எச்சில் வைக்காதீங்க என்று சொல்லிக் கொண்டே முறைத்தாள்.

அவள் சத்தத்தில் பாப்பா அழ, ஓ…வேணாம்டா..அழக்கூடாது, அழக்கூடாது..அங்கிளை அடிச்சிடலாம். நாம விளையாடலாம் என்று பாப்பாவை தள்ளி அழைத்து சென்றாள். அஜய் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான்.

ஹலோ சார், நேரமாகுது என்று பிரதீப் புன்னகையுடன் கூற, அஜய் அவனை பார்த்து விட்டு அவன் அப்பாவிடம் விசயத்தை கூறி விட்டு வீட்டிலிருந்து வெளியே வரும் போது பிரகதி தோளில் பாப்பா தூங்கிக் கொண்டிருப்பாள். அவளை பார்த்துக் கொண்டே செல்ல, அவர்களிடம் ஓடி வந்தாள். அஜய் ஆர்வமாக அவளை பார்க்க,

சார், ஏதும் பிரச்சனையா? கேட்டாள்.

ஏம்மா, நீ கெல்ப் பண்றியா?

என்னால் முடிந்தால் செய்யலாம் என்று நினைத்தேன்.

முதல்ல நீ சரியாகு. அப்புறம் உதவலாம் என்று கடுகடுப்புடன் கூறிய அஜய், நான் வர நாட்களாகும். அந்த கொலைகாரனை மீட் பண்ண போறேன் என்று கூற, பிரதீப் அஜய்யை பார்த்தான்.

வாங்க சார், கிளம்பலாம். நேரம் போய்க் கொண்டே இருக்கு என்று சொல்ல இருவரும் வண்டியில் ஏற, அஜய்யும் பிரதீப்பும் அவளை பார்த்தனர். அவள் கண்ணீருடன் நின்றாள். புறங்கையை கட்டிய அஜய்..நல்ல ரெஸ்பான்ஸ்ல என்று பிரதீப்பிடம் சொல்ல, அந்த பொண்ணு அழுறாளே?

எனக்காக அழுறாளே? எவ்வளவு பெரிய விசயம்? அவளை வந்து பார்த்துக்கிறேன் என்று பிரதீப்பை பார்த்து, மனதினுள் இந்த ஊரிலே இருந்தால் கொலைகாரனின் வீக் பாயிண்ட்டை கண்டறியவும் முடியாது. அவனை தடுக்கவும் முடியாது. நான் அவன் இடத்திற்கு போகணும் என்று நினைத்தான்.

இருவரும் சென்னை அருகே வரவும்..சுந்தரத்திற்கு போன் செய்து..கொலைகாரன் ஏற்கனவே இருந்த இடத்தை ட்ரேஸ் செய்து சொல்ல சொன்னான் அஜய். பிரதீப் காரை நிறுத்த அஜய் புருவத்தை உயர்த்தினான்.

சக்தியை பார்க்க தானே வருவதாக சொன்னீங்க? ஆமா..அவரை பார்த்துட்டு தான் போகப் போறேன்.

எதுக்கு? அவனே வருவான். நாமாக சென்று மாட்ட வேண்டாமே? பிரதீப் கேட்க, அஜய் தன் கையில் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தை பிரதீப் முன் வைத்தான்.

என்னது?

அவன் கற்பழித்தது, கொலை செய்தது என அனைவரின் விவரம். புகைப்படம் இருந்தது. இத்தனை பேரா? பிரதீப் கேட்க, ம்ம்..அவன் நினைத்தால் உங்க ஊரையே அழிக்க கூட தயங்க மாட்டான். எனக்கு தெரிந்து ஸ்ரீக்காக மட்டுமல்ல அந்த ஊரில் இருக்கும் இன்னொரு நபருக்காகவும் அவன் அந்த ஊர் ஆட்களை விட்டு வச்சிருக்கான். ரெண்டு நாளா உங்க தம்பி நைட் வீட்டுக்கே வரலைல்ல?

ஆமா.

தீனா சாருக்கு ரகசிய உத்தரவாக கமிஷ்னர் சார் இரவு நேர வேலையும் போட்டிருக்கிறார் இந்த கொலைகாரனை பிடிக்கும் வரை. அவர் முழுநேரமும் ஸ்டேசனில் தான் இருப்பார். நான் என் அப்பாவிடம் சொல்லி தான் வந்துருக்கேன். பிரகதியிடம்..என்று தாடையை தேய்த்தவன்..கோபத்தில் சொல்லிட்டேன். இருக்கட்டும் அப்பா பார்த்துப்பார் என்று பிரதீப்பை பார்த்து சார், வண்டியை எடுங்க. சீக்கிரம் போகணும். நிறைய வேலை இருக்கு..என்றான் அஜய்.

சக்தியை பார்த்த பிரதீப் கோபமானான். சக்தி விழித்து கட்டுகளுடன் அமர்ந்திருந்தான். அஜய் சாதாரணமாக நாற்காலியில் அமர்ந்து சக்தியை பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்த புள்ளைய தனியா விட்டுட்டு இங்க இப்படி கிடக்க?

அண்ணா..உங்களுக்கு நான் அனுப்பிய பணத்தில் எனக்கு நம்ம ஊரிலே ஒரு வீடு வாடகைக்கு வேண்டும். கொஞ்சம் பார்த்து தயார் செய்து தாருங்களேன். என்னுடைய அக்கவுண்ட்டில் போட்டால் அம்மா, அப்பா எடுத்து..மீனாவோட திருமணத்துக்கு ஏற்பாடு செஞ்சிருங்க..என்றான்.

அட, நான் கூட குத்துயிரும் கொலை உயிருமாய் இருப்பன்னு நினைச்சேன். பரவாயில்லை அஜய் சொல்ல பிரதீப் அவனை முறைத்தான்.

அச்சோ..ப்ரோ..முறைக்காதீங்க. இவரை இன்றே கூட ஊருக்கு அழைத்து செல்லலாம் போலவே? அஜய் சொல்ல, நான் இப்ப வர மாட்டேன். என்னால இருவரையும் சமாளிக்க முடியாது.

சமாளிக்க முடியாதா? என்று அஜய் எழுந்து அவனை அடிக்க கையை ஓங்கினான். பிரதீப் அவனை தடுத்து, சரி..நீ சமாளிக்க வேண்டாம். ஆனால் உன்னோட பொண்டாட்டியை மறுமுறையும் எங்களால் தடுக்க முடியாது. அவள் செத்த பிறகு தாராளமா வா பிரதீப் சீற்றமுடன் கூறினான்.

தடுக்க முடியாதா? செத்த பிறகா? அண்ணா..என்ன சொல்றீங்க? பதறி வலித்த காலோடு எழுந்தான் சக்தி.

கல்யாணம் பண்ணா. எல்லா பிரச்சனையிலும் துணைக்கு நிக்கணும். அதை விட்டு அந்த பொண்ண எந்த நிலையில விட்டுட்டு வந்துட்ட. அந்த பொண்ணு தற்கொலை முயற்சி செய்திருக்கா அஜய் கோபமாக கத்தினான்.

அவன் சட்டையை பிடித்த சக்தி, என் மாலி அப்படி செய்ய மாட்டாள் என்று அழுதான்.

செய்ய மாட்டாளா? நம்ம ஊர்ல உன்னை பத்தி என்ன பேசுறாங்க தெரியுமா? பிரதீப்பும் கோபமாக. மாலினிய பயன்படுத்திட்டு அவ குழந்தையை கொன்னுட்டியாம். அதை விட நீ உன் மாமா பொண்ணை கட்டிக்கப் போறியாம். அந்த பொண்ணு ஒத்துகிச்சாம். நீ அவ வீட்ல தான் இருக்கியாம் என்று கேட்க உன் பொண்டாட்டி என்ன ஜடமா டா? கத்தினான் பிரதீப்.

அண்ணா, அவளுக்கு ஒன்றுமில்லையே? நல்லா தானே இருக்கா சக்தி கேட்க, நாங்க வரும் போது நல்லா தான் இருந்தா. ஆனால் உன்னை பார்க்காமல் கண்டிப்பா அவள் நல்லா இருக்க மாட்டா பிரதீப் கூற, அண்ணா..நாம இப்பவே கிளம்புவோம் என்றான்.

கௌதமும், வசுந்தராவும் கூட இருப்பாங்க. நீ அமைதியா படுத்துக்கோ என்ற பிரதீப், நான் கௌதமிடம் சொல்லிட்டு வாரேன் என்று வெளியே வந்தான். அஜய்யும் அவனுடன் வெளியே சென்றான்.

எப்ப போக போறீங்க? பிரதீப் கேட்க, அவனை மாதிரி ஆட்கள் இரவில் தான் உலவுவாங்க. அதனால் காலையில போய் தான் பார்க்கணும். நீங்க காலையில சக்தியை கூட்டிட்டு ஊருக்கு கிளம்புங்க. என்னோட ஆளுங்க இருக்காங்க. நான் பார்த்துக்கிறேன் அஜய் சொல்ல, எனக்கு ஏதும் சரியாக படவில்லை பிரதீப் கூற, என்னோட முடிவை மாத்தி எனக்கு பழக்கமில்லை. நான் அவனை பிடிக்க வரவில்லை. அவனோட வீக்னஸை கண்டுபிடிக்க வந்தேன்.

எனக்கு தெரியும் பொம்பளைங்க தான் அவன் வீக்னஸ். ஆனால் அவங்கள வச்சி அவனை பிடிக்க எனக்கு விருப்பமில்லை. “முதலை வாய்க்குள் மாடை” விட்ட கதையாகி விடும். அதனால் அவனோட வேற ஏதாவது பாயின்ட்டை தான் பிடிக்கணும். கண்டிப்பாக அவன் தங்கிய இடத்தில் கிடைக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு அஜய் சொல்ல, நானும் வாரேன் என்று பிரதீப் சொல்ல..இல்லை சக்தியை பாதுகாப்பா கூட்டிட்டு போங்க. நான் சீக்கிரமே வந்திடுவேன் என்று அஜய் சக்தி அறைக்குள் சென்று யோசனையுடன் படுத்துக் கொண்டான்.

சக்தியால் அமைதியாக இருக்க முடியாமல் மாலினி பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது. அவன் துங்காமல் விடிவதற்காக காத்திருந்தான். அர்ஜூனுக்கு பிரதீப் அஜய் கூறியதை சொல்ல..

அண்ணா இது டேஞ்சர். அவரை எப்படியாவது அழைச்சிட்டு வந்துருங்க.

நான் எவ்வளவு சொன்னாலும் பின் வாங்க மாட்டேன்னு சொல்றான். எனக்கு என்ன செய்வதென்றே புரியலை என்று பிரதீப் சொல்ல, அண்ணா..நீங்க சக்தி அண்ணாவோட வந்துருங்க.

அஜய் சாரை கண்காணிக்க ஆளை போடலாம் என்று அர்ஜூன் சொல்ல..சரி. முதல்ல இவன் பிரச்சனையை முடிப்போம் என்றான் பிரதீப்.

போனை வைத்த அர்ஜூன் சிந்தனையுடனே இருந்தான். அவனால் தூங்க முடியவில்லை. சுந்தரத்திற்கு போன் செய்து அர்ஜூன் சொல்ல, அர்ஜூன் அவனை தடுக்க பார். ரொம்ப டேஞ்சர் அவர் சொல்ல..கேட்க மாட்டேங்கிறாரே மாமா..என்று அவர் சொன்னதை கேட்டு விட்டு போனை வைத்தான்.

காலை எழுந்து தயாராகி பிரதீப் அஜய்யிடம் மீண்டும் பேச, அவன் ஏற்றுக் கொள்ளவேயில்லை. அவன் சக்தியை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.

அர்ஜூன் காலை எழுந்ததுமே அஜய் அப்பாவை காண சென்றான். அவனை பார்த்து பிரகதி அர்ஜூனிடம் வந்து, தயங்கி பேசாமல் நிற்க.. நாம அப்புறம் பேசலாம். சார் எங்க? என்று அஜய் அப்பாவை பார்த்து, சார் உங்களிடம் பேசணும்? கேட்டான் அர்ஜூன். அனைவரும் அவனை பார்க்க, இருவரும் அறைக்குள் செல்ல அர்ஜூன் தாழிட்டு..

சார், அஜய் சாரை இப்பவே இங்க வர சொல்லுங்க அர்ஜூன் சொல்ல, எதுக்குப்பா? அவன் முடிவெடுத்தால் மாற மாட்டான். அவனுக்கு ஏதும் ஆகாது அவர் நம்பிக்கையுடன் கூற,

சார், அவன் நிறைய பேரை கொன்றுக்கான். நாங்க பதட்டமா இருக்கோம். நீங்க சாதாரணமா சொல்றீங்க?

எதுக்கு பயம்? அவன் பிளான் இல்லாமல் எதையும் செய்ய மாட்டான். கண்டிப்பாக என் மகன் நல்லபடியாக திரும்ப வந்துருவான். அவன் கொலைகாரனை பிடிக்க போகலை. அவனுக்கு வேண்டியதை எடுத்து வந்திடுவான் அவர் சொல்ல..ப்ளீஸ் சார் அர்ஜூன் கெஞ்ச..

என் மகன் மேல நீ வச்சிருக்க பாசத்தை பார்க்க சந்தோசமா இருக்கு. அவனை பற்றி உனக்கு முழுதாக தெரியாது. அவன் அறைக்கு சென்று பார் என்று அவர் கதவை திறந்து வெளியே வந்தார்.

அர்ஜூன் வேகமாக படியேறி செல்ல, இன்பா அவன் பதட்டத்தை பார்த்து பின் சென்றாள். பிரகதி அஜய் சொல்லிட்டு போனதிலிருந்து பயத்தில் தான் இருந்திருப்பாள். அர்ஜூனிடம் சொல்லணும் என அவளும் இன்பாவுடன் சென்றாள்.

அர்ஜூன் அஜய் அறைக்கதவை திறந்து உள்ளே சென்றான். உள்ளே இருந்த மற்றொரு அறைக்கதவை திறக்க அந்த கொலைகாரனை சுற்றியுள்ள அனைத்து உறவுகளையும் புகைப்படமாகவும் எழுத்து வடிவிலும் இருந்தது. அதில் கடைசியாக நிவாஸ் பெயர் இருக்க..கொலைகாரன் மகன் தான் நிவாஸ் என்றும் கமிஷ்னர் நண்பன் என்று ஏற்கனவே அறிந்து தான் வைத்திருக்கிறான் அஜய்கிருஷ்ணா. அதையும் குறிப்பிட்டு இருக்க..அர்ஜூன் பின் வந்த இருவரும் இதை பார்த்து அதிர்ந்தனர். இன்பாவிற்கு பேச்சே வரவில்லை.

அ..அ..அர்ஜூன்..இ..இது..நி..நிவி..அவன்..

மேம். அந்த கொலைகாரன் மகன் நிவாஸ் தான் என்று ஏற்கனவே தெரியும். ஆனால் நிவி எல்லாரிடமும் காட்டிக் கொண்ட மகன். நம் நிவியை தவிர அவனுக்கு நிறைய பசங்க, பொண்ணுங்க இருக்க வாய்ப்பு இருக்கு.

பிரகதி அவ்வறையை பார்த்து வாயில் கை வைத்தாள். என்ன பிரகதி பயமா இருக்கா? அர்ஜூன் கேட்க, அ..அ..அ…பேச்சே வரலை. மூச்சை இழுத்து விட்டு, சார் போகும் முன் என்னிடம் அந்த கொலைகாரனை பார்க்க போவதாக சொல்லீட்டு போனார் என்று பேசிக் கொண்டே ஒரு புகைப்படத்தை பார்த்தாள்.

அர்ஜூன், இதற்கு பின் தேதி எழுதி வச்சிருக்காங்க.

இவன் வந்தே ரெண்டு நாள் தான் ஆகுது. எப்படி அர்ஜூன் எல்லாத்தையும் சேகரித்திருக்கிறான்? இன்பா கேட்க, ரெண்டு நாள்ல எப்படி மேம் முடியும்? சந்துரூ மாமா சொல்லி இருப்பாங்களோ?

கண்டிப்பா இருக்காது. சந்துரூ சொல்லி இருக்க மாட்டான். யாழு இறந்த நேரம் தான் இவன் டாப் டென் லாயர்ஸ்ல ஒருவனா வந்தான். அதனால அவனை தொந்தரவு செய்ய வேண்டாமென்று தான் நானே அப்பா பற்றி சொல்லலை. ஆனால் என்னை பார்க்க வந்தான். பசங்க யாராவது சொல்லி இருக்கலாம். ஆனால் என் பிரச்சனையை சொல்லலைன்னு கோபமா பேசினான். அப்படின்னா..யாழுவை பற்றியும் தெரிந்திருக்காதுல்ல..ஆனால் இதில் யாழு கொலை, ஸ்ரீ அம்மா, அப்பா கொலை..ஆமாம் அர்ஜூன் இது யாரு? இன்பா புகைப்படத்தை கேட்க.. அர்ஜூன் அந்த படத்தை உள்வாங்கினான்.

ஸ்ரீ கூறியது நினைவிற்கு வந்தது. அவள் ஆன்ட்டி வீட்டில் கொலையை பார்த்த போது சொன்ன அடையாளத்தை பார்த்து..இது யாழு அக்காவின் உதவியாளன். இவனை கொலை செய்ததை பார்த்து தான் ஸ்ரீ பயந்து என் வீட்டிற்கு அழைத்து வந்ததே மேம். ஒரு வேலை ஆதாரம் அனைத்தும் இவர் வீட்டில் இருக்குமோ? அர்ஜூன் கேட்க, அதை தெரிந்து யாராவது அவனை கொலை செய்வாங்களா? இன்பா கேட்க,

அர்ஜூன்..எனக்கும் நீ சொன்னது தான் தோன்றுகிறது. இவங்கல்ல.. கடைசியா இறந்தது இவர் தானா? இல்லை வேற யாரையும் கொன்றிருக்கானா? பிரகதி கேட்டாள். இருவரும் அவளை பார்த்தனர்.

இல்லை, சார் தான் அனைத்தையும் தெளிவாக விளங்கும் படி சேகரித்து வைத்திருக்கிறார். அதான் கெஸ் பண்ண முடியுது..என்று அர்ஜூனை பார்த்தாள்.

அவன் புன்னகையுடன், நீ வேண்டுமானால் சாரோட ஜாப்ல சேர்ந்துக்கிறியா? அர்ஜூன் கேட்க, அவள் முறைத்தாள்.

சரி விடு. நீ சொன்னதும் யோசிக்கும் படி தான் இருக்கு பிரகதி. ஒன்று இவரிடம் இருக்கணும்..இல்லை..அவன் கொல்ல நினைக்கும் யாரிடமாவது இருக்கணும்..என்று அர்ஜூன் இன்பாவை பார்க்க,

ஸ்ரீ..என்றனர் இருவரும்.

அர்ஜூன், ஸ்ரீக்கு ஏதாவது தெரிந்து இருக்குமோ?

இல்ல மேம். அவளுக்கு தெரியாது. ஆனால் அவளிடம் ஏதோ இருக்கு. அதான் அவன் முதலில் இருந்தே ஸ்ரீயை கொல்ல நினைத்திருக்கான். பாஸ்வேர்டு..இல்ல அவளுக்கு பிடிச்ச ஏதாவது.. என்று அர்ஜூன் சிந்தித்தான்.

வாங்க கீழ போகலாம் என்று அர்ஜூன் கதவை பூட்ட..பிரகதி அர்ஜூனிடம், எனக்கு பயமா இருக்கு அர்ஜூன். சாருக்கு ஒன்றும் ஆகாதுல்ல..

நீ எதுக்கும்மா அவனை பத்தி கவலைப்படுற? இன்பா கேட்க, யாராக இருந்தாலும் நான் இப்படி தான் கவலைப்படுவேன் பிரகதி சொல்ல..

பிரகதி, இந்த நடிப்ப வேற யார்கிட்ட வேண்டுமானாலும் காட்டு. உனக்கு அஜய் சாரை பிடிக்கும்ன்னு எனக்கு நல்லாவே தெரியும்.

இல்ல அர்ஜூன்..

நான் இதை யாரிடமும் சொல்ல மாட்டேன். காதலை காதலிக்கிறவங்க தான் சொல்லணும். அப்ப தான் காதலுக்கு மதிப்பு..என்ற அர்ஜூன். நிவி பத்தி யாருக்கும் தெரியக்கூடாது. நீங்க எதுக்கும் கவனமா இருங்க..என்று அர்ஜூன் கீழே வந்து தேவராஜை பார்த்து விட்டு சென்றான்.

கமிஷ்னர் சொன்ன இடத்திற்கு சென்ற அஜய்..குகனை அழைத்திருப்பான். இருவரும் சேர்த்து ஏதாவது கிடைக்கிறதா? என்று பார்த்துக் கொண்டிருக்க, பாஸ் என்று சரண் அவர்கள் முன் வந்தான்.

நீ எதுக்குடா இங்க வந்த? அஜய் சத்தமிட..சார்..ஷ்..என்று குகன் அவன் வாயை மூட..ஏதோ சத்தம் கேட்டது. மூவரும் ஒளிந்து கொண்டனர்.

அங்கே வந்த மூவர், இன்னும் எத்தனை நாள் தான் இந்த பொம்பளையை பார்த்துக்கிறது.

பாஸ் தான் பணம் கொடுக்கிறாரே..உனக்கு அப்புறம் என்ன?

ஹே..போன முறையே நம்ம பாஸ் மாட்டிக்கிறது. ஆனால் அவர் தப்பிச்சிட்டார். அவர் மாட்டினால் நாமும் மாட்டிக் கொள்வோம் அவர்கள் பேசிக் கொண்டே ஓர் அறைக்கதவை திறந்தனர். அங்கே யாரோயோ கட்டி வைத்திருந்தனர்.

கதவு மூடப்படவும் அங்கிருந்த பொருட்களை ஆராய்ந்தனர். கதவு பட்டென திறக்கப்பட..மூவரும் ஒளிந்தனர்.

டேய், இங்க வாங்கடா. இங்க யாரோ இருக்காங்க என்று பெரிய கத்தியை மூவரும் எடுத்தனர்.

சரண் வேகமா ஒடு..என்று அஜய் குகனிடம் கையசைத்து சத்தமிட, மூவரும் ஓடினர். அவர்கள் வெறித்தனமாக விரட்டினர். ஆனால் சரண் அவர்களிடம் மாட்ட, அவனை அவர்கள் அந்த பெரிய கத்தியால் குத்தி உருவினர்.

ஓடிய அஜய் சத்தத்தில் நின்று சரண்..என்று கத்திக் கொண்டே அவர்களிடம் ஓடி வர, குகனும் அவன் பின் வந்தான். சார் ஆம்புலன்ஸூக்கு கால் பண்ணுங்க. இவனுகள நான் பார்த்துக்கிறேன் என்று அவர்கள் மூவரையும் கையில் மாட்டியதை வைத்து அடிக்க அவர்கள் கத்தி அங்கங்கு விழுந்தது. ஆனால் ஒருவன் கட்டையை எடுத்து அஜய் தலையில் அடிக்க..இரத்தம் கொப்பளித்தது. தலையை பிடித்துக் கொண்டு அனைவரையும் வெறி பிடித்தவன் போல் அடித்தான் அஜய் கிருஷ்ணா.

ஆம்புலன்ஸ் வந்தவுடன் அஜய் சரணை அதில் ஏற்ற, பாஸ் பாரு என்றான் அவன். அஜய்யால் இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் கதறி அழுதான். விசயம் சுந்தரத்திற்கு எட்ட..அனைவரும் ஹாஸ்பிட்டல் சென்றனர்.

நர்ஸ் வெளியே வந்து, பேசண்ட் இதை வச்சிருந்தாங்க சார் என்று ஒரு சிறிய கிப்ட் பாக்சை கொடுத்தார். அதை பிரித்து பார்த்தான் அஜய். அதை பிரகதிக்கு கொடுக்க சொல்லி எழுதி..குட்டி அழகான கப்புள் பொம்மை ஹார்ட்டுடன் லைட் பிக்ஸ் செய்து இருந்தது. அதை பார்த்து கதறி அழுதான்.

பாருவை குகன் அழைத்து வந்தான். சார்..சரண் எங்க? என்று தொண்டை அடைக்க கேட்டாள். அவன் கையை காட்ட அவன் சிகிச்சையில் இருந்தான். அவள் பார்த்து விட்டு கதறி அழுதாள்.

சுந்தரம் அஜய்யிடம், நீ இப்பவே இங்கிருந்து போ. இவங்கள நான் பக்கத்தில் இருந்து பார்த்துக்கிறேன் என்றார். அஜய் தலையில் கட்டு போடப்பட்டு இருந்தது.

முடியாது. அவனை விட்டு நான் போக மாட்டேன் அஜய் கத்தினான்.

சார், இது ஹாஸ்பிட்டல் கத்தாதீங்க நர்ஸ் ஒருவர் சத்தமிட..நர்ஸ் ஒருவர் வெளியே வர, பாரு எழுந்தாள்.

சிஸ்டர், அவனுக்கு ஒன்றுமில்லையே? அஜய் கேட்க, சாரி சார்..அவருக்கு கத்தி ஆழமாக பட்டிருக்கு. காப்பாற்றுவது ரொம்ப கஷ்டம்..என்றவுடன் பாரு கதறி அழுதாள். அவளுக்கு அவனுடனான அனைத்தையும் நினைத்து நினைத்து..சரண் என்னை விட்டு போயிறாதடா..என் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கேன்னு சொன்ன. இவங்க சொல்றதை பார்த்தால் பயமா இருக்குடா. நீயில்லாமல் என்னால் இருக்க முடியாதுடா என்று அவள் மேலும் அழுதாள்.

சுந்தரம் அஜய்யை தரதரவென இழுத்து சென்று..நீ என்ன பார்த்த?

நாங்க எதையும் பார்க்கலை. நாங்கள் தேடிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் எங்களை கண்டுபிடிச்சிட்டாங்க. சரண் இதுல இல்லை. நான் குகன் சாரை மட்டும் தான் அழைத்து வந்தேன். ஆனால் சரண் அவரை பின் தொடர்ந்து வந்திருக்கான் என்று அவன் கொடுத்ததை பார்த்தான்.

நீ கிளம்பு. குகா நீயும் போ. நான் இந்த பொண்ணையும், அந்த பையனையும் பார்த்துக்கிறேன்.

இல்லை நான் இங்கே தான் இருப்பேன்.

பிடிவாதம் பண்ணும் நேரம் இல்லை கிருஷ்ணா. கிளம்பு. இவனை வைத்து உன்னை பிடிக்க பார்க்கலாம். ஊருக்கு கிளம்பு. நான் மேசேஜ் பண்றேன் அவர் சொல்ல.. குகா.. இவனை இழுத்து செல். பாட்டிக்கு உன்னை பற்றி தெரிய வேண்டாம். நீ கிருஷ்ணாவுடனே இருந்துக்கோ என்று அவர் சொல்ல..வாங்க சார் என்று குகன் பாருவை பாவமாக பார்த்து விட்டு சென்றான். அவர்கள் ஊருக்கு கிளம்பினர். இடி மின்னலுடன் மழை அடித்து கொட்டியது. அஜய்யும் குகனும் நனைந்து கொண்டே வெளியே நடந்தனர். அஜய் காரை ஹாஸ்பிட்டலுக்கு எடுத்து வந்த மலை..சார் சரண் என்று கண்ணீருடன் கேட்க..அஜய் அவனிடம் பாருவை பார்த்துக்கோ. சரண் பிழைப்பது கஷ்டம் என்று சொல்ல, சார் என்று அதிர்ந்தான் மலை.

மழையோடு அஜய் கண்ணீர் கரைய, குகனுடன் காரில் ஏறினான். அவன் சட்டையில் சரணின் இரத்தக்கறை படிந்து இருந்தது.

Advertisement