Advertisement

அத்தியாயம் 132

பர்வத பாட்டி உடலை எடுக்கும் சடங்குகள் நடக்க சத்யாவை அழைத்தனர். அவன் எழுந்து பாட்டியை பார்த்துக் கொண்டே நின்றான். மறை அவன் தோளில் கை வைத்து, நான் பாட்டிக்கு பேரனாக எல்லாவற்றையும் செய்கிறேன் என்றான்.

இல்ல மற, அவன் தான் அவங்க பேத்திய கட்டிக்கிட்டானே? ஒருவர் சொல்ல, அவன் தான என்னை தங்கைன்னு சொன்னான். அவன் தான் எல்லாரையும் விட அவங்க கூடவே இருந்தவன். அவனே எல்லாத்தையும் பண்ணட்டும் என்று தியா வெளியே வந்து தன் பாட்டியை விரக்தியுடன் பார்த்தாள்.

பாட்டி தன்னை விட்டு சென்று விட்டாள். கணவனும் தன் பேச்சை நம்பாமல் காயப்படுத்துகிறான் என்று உடைந்த மனதை சரி செய்ய அண்ணன் என்று ஒருவனாவது இருக்கிறானே? என்று தியா காயத்ரியை பார்த்தாள். அவள் மறையை பெருமையுடன் பார்த்தாள்.

தியா மறையிடம் வந்து, என்னிடம் போனில் பேசும் போதெல்லாம் உன்னை பற்றி மட்டும் தான் பேசுவாங்க. அதான் உன்னிடம் உரிமையாக வேலை வாங்கினேன். நீ இன்னும் என் மேல கோபமா இருக்கியா? என்று அழுது கொண்டு கேட்க, மறையும் யாருமில்லாமல் தானே இருந்தான்.

இல்லை. எனக்கு உன் மீது கோபம் இல்லை என்று அவளை அணைக்க, அவளும் அவனை கட்டிக் கொண்டு, இப்ப போறதுக்கு என்ன அவசரம்ன்னு போயிட்டாங்க அண்ணா..என்று அழுது தீர்த்தாள். அவர்கள் அணைப்பில் காதல் இல்லை, காமம் இல்லை. ஆறுதலான அண்ணன் தங்கைக்கான உரிமை அணைப்பை அனைவரும் உணர்ந்தனர்.

சத்யா மனம் கனமாக, உன்னோட ப்ரெண்டை பற்றி தெரிந்தும் நீ என்ன பேசிட்ட டா? என்று அவனை அவனே குற்றம் சாட்டினாலும் அவனுக்கு தியா மீது முழு நம்பிக்கை இல்லை. தன் நண்பன் மேலுள்ள நம்பிக்கை கூட தன் மனைவி மேல் இல்லை. அவனும் புரிந்து கொள்வான். ஆனால் அவன் காதலித்த தியா அவனை விட்டு சென்ற பின்.

மறை காயத்ரியிடம் கண்ணை காட்ட, அவள் தியாவை அழைத்து சென்றாள். கண்ணீருடன் பர்வத பாட்டிக்கு செய்ய வேண்டியதை மறையும் மற்றவர்களும் செய்து முடித்து, அவரை இடுகாட்டிற்கு தூக்கி சென்றனர்.

தனியா விட்டுப் போகாத பாட்டி..தனியா விட்டுப் போகாத..என்று கதறி அழுதாள் தியா. அவளை காயத்ரி, நித்தி, யாசு, ஸ்ரீ..உள்ளே இழுத்து சென்றனர். ஆனால் காயத்ரிக்கு அவள் அழுததை விட, தனியே விட்டு போகாத என்ற வார்த்தை சிந்திக்க வைத்தது. திருமணமாகி இரண்டு நாள் தான் ஆகுது. புருசன் பக்கம் இருக்கும் போது, எதுக்கு இப்படி சொல்லி அழுறா? என்று அவளுக்கு ஒரு மாதிரி இருக்க, அவள் வெளியே வந்தாள். சத்யா அம்மாவும் அவள் பொண்ணு மூத்தவளும் அங்கே இருந்தனர்.

காயத்ரி நேரடியாகவே கேட்க, சத்யா தங்கைக்கு அண்ணா ஏதோ செய்கிறான் என்று புரிந்தது. ஆனால் அவர்கள் அம்மா..பாட்டியை இழந்த கஷ்டத்தில் ஏதாவது சொல்லி அழுறது தான் என்று அவளிடம் பேச, காயத்ரியும் இருக்கலாம் என்று சென்று விட்டாள்.

போனவர்கள் எல்லாவற்றையும் முடித்து வந்தனர். மறைக்கு மொட்டை அடித்து இருக்க, ராக்கி அவனிடம் செல்லவில்லை. பாட்டியை தூக்கிய பின் தான் பெரியத்தை அவனை தியா பாட்டி வீட்டிற்கு அழைத்து வந்திருப்பார்.

மறையை ராக்கி வித்தியாசமாக பார்க்க, அம்மாகிட்ட வா..என்று காயத்ரி பெரியத்தையிடம் பையனை வாங்கிக் கொண்டாள். அவர்களுடன் சத்யாவும் வந்து வெளியே அமர்ந்தான். தியா சுவற்றில் சாய்ந்து கண்ணை மூடி இருந்தாள். மீனாட்சி அவளிடம் வந்து அமர, துகிரா வெளியே இருந்தாள். அப்பத்தாவும் மீனாட்சியும் அவளை தொட திடுக்கிட்டு கண்ணை விழித்தாள்.

ஒன்றுமில்லைம்மா நாங்க தான்..அப்பத்தா ஆஸ்வாசப்படுத்த அமைதியாக இருந்தாள். அவளுக்கு சில அறிவுரை கூறி விட்டு வெளியே வர, வீட்டில் யாராவது இருக்க வேண்டுமென்ற பேச்சு அடிபட்டது. சத்யாவிற்கு பர்வதபாட்டி தன் பேத்தியை எண்ணி கவலைப்படுகிறார் என்று அவர் கடைசியாக பேசியது நினைவிற்கு வந்தது.

நானும் என் பொண்டாட்டியும் இங்கே இருக்கோம் என்றான்.

சத்யா அம்மா எழுந்து, என்ன பேசுற? இப்ப தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு. இங்க இருக்கக்கூடாது என்றார்.

அம்மா..மறைக்கும் கல்யாணம் முடிந்து ஒரு வாரம் தான் இருக்கும். ஏன் அவன் கிழவிக்காக பண்ணலையா? நான் ஏதும் செய்யலை. அவள் சில நாட்கள் இங்கே இருந்தால் நல்லா இருக்கும்ன்னு தோணுது. நாங்க மட்டும் தனியா இருந்துக்கிறோம் என்று அவன் சொல்ல, தியாவிற்கு பயமானது.

அவள் வெளியே ஓடி வந்து சத்யா அம்மாவிடம், இல்ல அத்தை. நாங்களும் உங்களுடனே இருக்கிறோம் என்று யாரும் எதையும் அறிந்து விடக் கூடாது என அமைதியாகவும் சாதாரணமாகவும் பேசினாள். சத்யா அவளை பார்க்க, அவள் அவன் அம்மாவை தான் பார்த்தாள்.

இல்லம்மா..என்னோட முடிவை மாத்திக்க முடியாது சத்யா சொல்ல,

அவன் இருந்தால் என்ன? எங்க பாட்டி தான? அவ நல்லா இருக்கணும்ன்னு நினைக்கிறவுங்க ஏதும் செய்ய மாட்டாங்க என்று சத்யா அம்மாவிடம் மறை பேசினான்.

அவர் சிந்திக்க, அனைவரும் மறைக்கு ஒத்துபாட சத்யா அம்மாவும் ஒத்துக் கொண்டார். தியா பயத்துடன் சத்யாவை பார்த்தாள். இதை கவனித்த அவனது தங்கை, அம்மா..அண்ணாவுடன் நானும் இங்கே இருக்கேன் என்றாள்.

அவங்க புதுசா கல்யாணம் ஆனவங்க. நீ என்னடி பேசுற? நீ நம்ம வீட்டுக்கு போ..என்றார்.

அவள் இருக்கட்டும் அத்தை தியா சொல்ல, அதெல்லாம் தேவையில்லை. அம்மா..அவளை கூட்டிட்டு கிளம்புங்க என்றான் சத்யா. முறை செய்யணும்..

அம்மா..நைட்டும் நாளைக்கும் தானே. நீங்க கிளம்புங்க. அதான் என் மச்சான் இருக்கான்ல என்று மறையை பார்த்தான்.

சத்யா, செய்ய வேண்டியதை செய்யணும்.

நைட் வந்து செய்யுங்க என்று அவன் சொல்லி விட்டு அமர்ந்து கொண்டான். அங்கே வந்த ரோஸ்னி சத்யா அருகே சென்று, அவனிடம் ஏளமான பார்வையை உதிர்த்து விட்டு, அவனை வேலை ஏவினாள். தியா மறையை பார்த்தாள். யாரும் ஏதும் பேசவில்லை. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க..ரோஸ்னி வேண்டுமென்றே அவன் மீது டீயை கொட்டி விட தியாவின் பொறுமை பறந்தது. அவனது சட்டையை துடைத்து விட்டு, சத்யாவை விலக்கி தியா ரோஸ்னி முன் கை கட்டி நின்றாள்.

என்னடி பாக்குற? எனக்கு ரொம்ப வேர்க்குது. விசிறி எடுத்து வந்து வீசு..அவள் கூற, உனக்கு வேர்க்குதா? வாரேன் என்று தியா உள்ளே செல்ல, மறை உள்ளே எட்டி பார்த்தான். ரோஸ்னி அஜய்யை பற்றி பெருமையாக பேசினாள்.

என் கிரிஷ் மாமா போல் யாராலும் வர முடியுமா? இவனெல்லாம்..ஆரம்பிக்க.. குளிர்ந்த நீரில் மேலும் ஐஸ்ஸை எடுத்து வந்து அவள் மீது தியா கொட்டினாள்.

இப்ப எப்படி இருக்கு? கூல்லா இருக்குல்ல. போதுமா? இல்லை இன்னும் வேண்டுமா? கேட்டாள் தியா.

ஹேய், நான் யாருன்னு தெரியாமல் என்ன செய்ற? உன்னை சும்மா விட மாட்டேன் என்று அவளை அடிக்க கையை ஓங்கினாள். சத்யா அவள் கையை தடுத்து, அவள் என்னோட பொண்டாட்டி அவ மேல யாரு கை வச்சாலும் எனக்கு பிடிக்காது என்று கையை தட்டி விட, யூ..யூ..லோ கிளாஸ்..அவள் பேச..யாரை பார்த்துடி லோ கிளாஸ்ன்னு சொன்ன? “வாட் ஆர் யூ திங்க் ஆஃப் மை ஹஸ்பண்ட்?” தியா ரோஸ்னியை வெளுத்து வாங்கி விட்டு, அவர் உன்னை விட மேல வருவார். நீ பார்க்க தான போற? தியா பேச, சத்யா விழித்தான்.

வாட்? இவனா? என்று கலகலவென அவள் சிரிக்க, அவள் கன்னத்தில் விழுந்தது ஓர் அறை. அஜய் அம்மா ரோஸ்னியை அறைந்திருந்தார்.

நம்ம வீட்டுக்கு வந்த பிள்ளைகிட்ட என்னடி சண்டை போட்டுகிட்டு இருக்க? அவர் சத்தமிட, அண்ணி எவளோ ஒருத்திக்காக என்னோட பிள்ளையவே அடிச்சுட்டீங்க? ரோஸ்னி அம்மா அஜய் அம்மாவிடம் சத்தம் போட, தேவராஜ் இருவரையும் நிறுத்தினார்.

இங்க பாருங்க. உங்க தங்கச்சி அமைதியா இருந்தான்னா இங்க இருக்கட்டும். இல்லை கிளம்பி போய்கிட்டே இருக்க சொல்லுங்க தேவராஜூடம் அவர் பொண்டாட்டி கூற, சும்மா இருங்க..

“ஐ வில் கில் யூ டி”? ரோஸ்னி சத்தமிட, “ஐ அம் வெயிட்டிங் டி” என்று தியாவும் முறைக்க, ரோஸ்னி கோபமாக வெளியே சென்றாள். அவளை கடந்து தான் அர்ஜூனிம் அஜய்யும் அவளை கவனிக்காது அங்கே வந்தனர்.

காயத்ரி தியாவை புன்னகையுடன் பார்த்தாள். இதே போல் தான காயத்ரி அன்று தியாவிடம் பேசி இருப்பாள். தற்செயலாக தியா காயத்ரியை பார்க்க, அவள் புன்னகையை பார்த்து சத்யாவை பார்த்தாள். அவன் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். எனக்காகவா இவளது செய்கை? இதுவும் நடிப்போ..என்று எண்ணினான்.

தியாவிற்கு தான் சத்யா தன் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறானே என்று வருத்தமுடன் அவனை பார்க்க, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அது காதல் பார்வை அல்ல என்று புரியாமல் அவர்களை சரவணனும் கண்ணனும் கேலி செய்து கொண்டிருந்தனர்.

சக்தி அண்ணா பற்றி ஏதாவது தெரிந்ததா? என்று கவினிடம் அர்ஜூன் வினவினான்.

இல்ல அர்ஜூன். நேற்றிலிருந்தே காணோம். எங்க போனார்ன்னு தெரியலை. அவர் அம்மாவிடம் கேட்டால் அவர் மாமா பொண்ணை கட்டிக்க போறான் என்று எங்களை பேச விடாமல் கண்டபடி பேசுறாங்க. கடுப்பா இருக்குடா. அவர் ஊரிலே இல்லைடா. வேலு மாமா, பிரதீப் அண்ணா..எல்லாரும் பக்கத்து ஊரிலும் தேட போயிருக்காங்க என்றான். அஜய் அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டே சத்யா அருகே அமர வந்தான். அஜய்யை பார்த்ததும் தியா எழுந்து அஜய் அமரும் முன் சத்யா அருகே வந்து அமர்ந்தாள். சத்யாவும் அவனை மறந்து தியாவை ரசித்து பார்த்தான்.

என்ன? அஜய் தியாவிடம் கேட்க, நீங்க அங்க போய் உட்காருங்க. உங்க அண்ணி கூப்புடுறாங்க என்றாள்.

மறை அவளிடம் வந்து, தியா..எழுந்திரு..சார், அவன் மேல எதையும் கொட்டிற மாட்டார்.

கையை கட்டிக் கொண்டு மறையை முறைத்தாள்.

இப்ப எழப் போறீயா? இல்லையா? மறை கேட்க..அவள் பிடிவாதமாக நகரவேயில்லை. பார்த்துக் கொண்டிருந்த சத்யா எழுந்து அஜய் அருகே சென்று தியாவை பார்த்தான். அவள் கோபமாக உள்ளே சென்றாள்.

இங்க என்ன நடக்குது? டேய்…உன்னோட பொண்டாட்டி கோபிச்சுக்கிட்டு போயிட்டாங்க. போ..சமாதானப்படுத்து. நாம அப்புறம் பேசிக்கலாம் என்றான் அஜய்.

சத்யா உள்ளே சென்று தியாவை பார்க்க அவள் எங்குமே இல்லை. அவள் அறை பக்கம் சென்றான். அவள் அழும் சத்தம் கேட்டு உள்ளே சென்று கதவை தாழிட்டான். அவள் பயந்து எழுந்து கதவை திறக்க வந்தாள்.

நில்லுடி..என்றான் சத்யா.

ஆமா, எதுக்கு அப்படி சொன்ன? சத்யா கேட்க, அவனை நிமிர்ந்து கூட பாராமல், நான் என்ன சொன்னேன்? என்று கேட்டாள்.

அவள விட நான் எப்படி முன்னே வர முடியும்? எனக்கு அழகில்லை. படிப்பில்லை. திறமை..அவன் சொல்ல, இருக்கு என்றாள்.

என்ன இருக்கு? என்று அவன் அவளை நெருங்க பயத்துடன் பின்னே நகர்ந்து கொண்டு, துடிப்பான பேச்சும் பொருட்களை விற்கும் ஆர்வமும், டிரிக்கும் இருக்கு. அதனால் சேல்ஸ் பிசினஸ் பண்ணலாம்.

அப்படின்னா?

நம் ஊர், பக்கத்து ஊரில் விளையும் காய்கறி, பழங்கள், பூக்கள், பிரதீப் சார்..அழகு சாதன பொருட்களை விற்கும் கம்பெனியை ஆரம்பிக்கலாம். நீங்க இதை வெற்றிகரமான செஞ்சுட்டீங்கன்னா…மற்ற கம்பெனி ஆர்டரை கூட நான் பேசி வாங்கிடுவேன். நீங்களும் உடன் இருந்தால்… என்று சொல்லும் போது அவளை இழுத்து இதழ்களில் முத்தமிட்டான். அவள் அவனை அடித்துக் கொண்டு அழுதாள். அவன் அவளை விடுத்து, நான் தயாராக இருக்கேன். நீ பக்கமிருந்து உதவினால் என்றான். அவள் மகிழ்ச்சியுடன் அவனை அணைக்க, பிசினஸிற்காக மட்டும் தான். வேரெதுவும் இல்லை. எனக்கு இப்ப கூட உன்னை பார்த்தால் அந்த வீடியோ தான் நினைவுக்கு வருது என்றான். அவள் விலகி ஏதும் பேசாமல்  கண்ணீருடன் அமர்ந்தாள்.

இரண்டு நாட்களுக்கு பின் ஆரம்பிக்கலாம். நன்றாக போனால் பாட்டி நிலத்தில் நாமே கம்பெனி ஒன்றை ஆரம்பித்து, அதற்கான ஆட்களை சேருங்கள் என்று கண்ணீரை துடைத்து விட்டு, எல்லார் முன்னும் நன்றாக பேசுவது போல் நடிக்கலாமே? கேட்டாள்.

ம்ம்..சரி என்று அவன் வெளியேற, அவன் பின்னே அவனை பார்த்துக் கொண்டே வெளியே வந்தாள். அவன் தங்கைக்கு தான் இவர்களுக்குள் பிரச்சனை இருக்கா? இல்லையா? என்று பழைய நிலைக்கு அவள் மனம் அவளை தள்ளியது.

வீட்டிற்கு சென்ற ரோஸ்னி அவள் அப்பாவுடன் வீட்டிற்குள் சினத்துடன் வந்தாள். அதே நேரம் அழுத பிரகதியை சமாதானப்படுத்தி இன்பா, இதயா, பவி விளையாட்டு காட்ட..பிரகதியும் சிறிது நேரத்திலே சிரித்துக் கொண்டு விளையாடினாள். இதை கண்டும் கேட்டும் மேலும் கோபமான ரோஸ்னி அவள் அறைக்கு வந்து பார்த்தாள்.

பிரகதி புன்னகையை அவளுக்கு அஜய் இல்லை என்று சொல்லவதை போல் உணர்ந்ததால் ரோஸ்னி பிரகதி அருகே சென்று அவளது கன்னத்தில் மாறி மாறி சீற்றத்துடன் அறைந்தாள். அவள் உதட்டில் இரத்தம் வழிய, பதறி இன்பா, இதயா, பவி..அவளை தடுக்க, ரோஸ்னி அப்பா அவர்களை பிடித்து தள்ளினார். இன்பாவும் இதயாவும் எழுந்து, அபி உள்ள வாடா..என்று கத்திக் கொண்டே பிரகதியிடம் வர, பவி அர்ஜூனுக்கு போன் செய்து விசயத்தை சொன்னாள்.

அர்ஜூன், அகில், கவின், சைலேஷ், நித்தி, யாசு, ஸ்ரீ, அஜய், அவன் அண்ணா, அண்ணியும் அங்கு தான் இருந்தனர். அவன் அண்ணிக்கு ரோஸ்னியை பிடித்தாலும் அவள் அஜய்க்கு சரியாக இருக்க மாட்டாள் என்ற எண்ணம் தெளிவாக இருந்தது.

அர்ஜூனுக்கு போன் செய்து பவி சொல்ல, வாரேன் என்று போனை வைத்து விட்டு அனுவை மறையிடம் கொடுத்து விட்டு, மாமா பாப்பாவை பார்த்துக்கோங்க என்று ஓடிய அர்ஜூன் ஸ்ரீயை பார்த்து அவளையும் அகிலையும் இழுத்து சென்றான்.

அர்ஜூன், எதுக்குடா இழுக்குற? என்று அகில் சத்தமிட, ஸ்ரீ அமைதியாக அவன் கையை பிடித்துக் கொண்டு அவன் காரில் ஏறினர்.

அசு..அம்மாவிடம் இரு என்று அஜய், அர்ஜூன்..நில்லு என்று அவன் காரிடம் வர, அவன் காரை விர்ரென எடுத்து கிளம்பினான்.

இருங்க சார். நான் கால் பண்றேன் என்று கவின் அர்ஜூனுக்கு போன் செய்ய அவன் எடுக்கவில்லை. அகிலுக்கு போன் செய்ய அர்ஜூன் பாட்டியின் தோப்பு வீட்டுக்கு தான் போறோம் என்று அகில் போனை வைத்து விட்டான். கவின் அஜய்யுடன் பைக்கில் கிளம்பினான்.

மூவரும் வீட்டிற்குள் நுழைய ரோஸ்னியை ஒரு பக்கமும், அவள் அப்பாவை ஒரு பக்கமும் கட்டி வைத்திருந்தனர். அர்ஜூன் அவர்களை முறைத்துக் கொண்டே பிரகதி அறை பக்கம் சென்றான். அவள் கதவை பூட்டி அழுது கொண்டிருந்தாள். மற்றவர்கள் வெளியே நின்று கதவை தட்டியும் அழைத்தும் கொண்டிருந்தனர். அர்ஜூன், ஸ்ரீ, அகில் கதவை தட்டி அழைக்க, அவள் கதவை திறந்த பாடில்லை.

மேம் கொஞ்சம், திரும்புங்க என்று அவள் தலையில் இருந்த ஹேர்பின்னை எடுத்து கதவினுள் நுழைத்தான் அர்ஜூன்.

இது எனக்கு தோன்றவில்லையே? இன்பா சொல்ல, பிரச்சனைன்னா பதட்டமாவதை விட அதற்கான முயற்சியை கையில் எடுக்கணும் என்று அர்ஜூன் சொல்லிக் கொண்டே கதவை திறந்தான். பிரகதி குப்புற படுத்து அழுது கொண்டிருந்தாள்.

ஸ்ரீயும் மற்ற பெண்களும் அவளருகே சென்று அவளை இழுக்க, அவள் கழுத்து சிவந்து, உதட்டில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பிரகதி ஸ்ரீயை பார்த்து அவளை அணைத்து அழுதாள். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது? என்று அழுது கொண்டே கேட்டாள். அஜய்யும் கவினும் உள்ளே நுழைந்தனர்.

மாமா..என்று ரோஸ்னி அப்பாவை பார்த்த அஜய், ரோஸ்னியையும் பார்த்து, என்னடா செஞ்சு வச்சிருக்கீங்க? அவரு என்னோட மாமா..என்று அவன் சுருதி குறைந்தது. பிரகதி அழும் சத்தம் கேட்டது. அவள் அறைக்கு இருவரும் செல்ல, அவள் அஜய் சத்தம் கேட்கவும் பதறினாள்.

எல்லாரும் போங்க..போங்க..என்று ஸ்ரீ, பவி, இன்பாவை வெளியே தள்ள அகில் அவளிடம் வந்து, உனக்காக பதறி எல்லாரும் வந்தா..வெளிய போக சொல்ற? எங்ககிட்ட மட்டும் வாய் கிழிய பேசுற? இரத்தம் வரும் வரை அடிச்சிருக்கா.. கன்னத்தில் அவளோட கை அச்சு தெரியுது சத்தமிட்டான்.

அஜய்யும் கவினும் அவளறைக்கு வந்தனர். அஜய்யை பார்த்ததும் அகில் பின்னே பிரகதி மறைந்து நின்றாள்.

அர்ஜூன்..இங்க என்ன நடக்குது?

ஏன் சார், உங்களுக்கு புரியலையா? என்று பிரகதியை பார்த்தான் அர்ஜூன்.

பிரகதி வெளிய வா என்று அகிலிடம் வந்தான் அஜய். அவள் நகர்ந்து அர்ஜூனிடம் செல்ல அவளது கையை பிடித்து இழுத்தான். அவளை பார்த்து, அவளது உதட்டில் வழிந்த இரத்தத்தை தொட்டு..என்ன இது? கேட்டான். அவன் கையை தட்டி விட்டு அவள் அழுது கொண்டே ஓரிடத்தில் அமர்ந்தாள்.

நான் கேட்குறேன்ல பதில் சொல்ல முடியாதா? அவளிடம் வந்தான் அஜய். அகில் அஜய்யை தடுக்க அர்ஜூன் அகிலிடம், அவர் பேசட்டும் டா என்று அர்ஜூன் வெளியே வந்து கட்டி வைத்த இருவரையும் முறைத்தவாறு அமர்ந்தான். அகில் இருவரையும் பார்த்து விட்டு வெளியே அர்ஜூனிடம் வர, ஒவ்வொருவராய் வெளியே வந்தனர்.

உங்களுக்கு நான் எதுக்கு சார் பதில் சொல்லணும்? நீங்க தொட மாட்டேன்னு சொன்னீங்க? அவள் கேட்க, அவன் கோபமாக இந்த நேரத்தில் கையை பிடித்து ஆறுதல் சொல்வது ஒன்றும் தவறில்லை.

நான் நல்லா தான் இருக்கேன். வெளிய போங்க சார் என்றாள்.

என்னால போக முடியாது. நீ என்ன செய்வ?

அப்ப நான் போறேன் என்று பிரகதி நகர, அவள் கையை பிடித்து வேகமாக இழுத்து, அவள் கையை அவன் நெஞ்சில் வைத்து..இங்க வலிக்குதுடி என்றான்.

அவள் கண்கலங்க அவன் நெஞ்சிலிருந்து கையை எடுக்க, அவன் கண்ணீர் தரையில் விழுந்தது. அதை சுட்டுவிரலால் சுட்டி விட்டு பக்கத்தில் பார்க்க ஸ்ரீயை தவிர யாருமில்லை.

ஸ்ரீ உன்னோட ப்ரெண்டுக்கு மருந்து போட்டு விடு என்று அஜய் வெளியே வந்து போனை எடுக்க அவன் குடும்பம் மொத்தமும் வீட்டிற்குள் வந்தனர். அஜய் அர்ஜூனை பார்க்க சாரி சார்..என்ற அர்ஜூன் எழுந்தான்.

எதுக்குப்பா எல்லாரையும் அழைத்து வர சொன்ன? தேவராஜ் கேட்க, அஜய் அர்ஜூனையே பார்த்துக் கொண்டிருந்தான்.

சார், நான் என்னோட ப்ரெண்டை இங்கிருந்து அழைச்சிட்டு போறேன். இதுக்கு மேல அவள் கஷ்டப்படுறதை பார்க்க முடியாது என்று அஜய்யை பார்த்தான்.

யாரப்பா சொல்ற? என்று அவன் அம்மா கேட்டுக் கொண்டே ரோஸ்னியையும் அவள் அப்பாவையும் இவர்கள் கட்டி வைத்திருப்பதை பார்த்து அதிர்ந்தார்.

ரோஸ்னி அம்மா அவர்களை பார்த்து, உங்களை யார் கட்டி வச்சாங்க? கேட்க, அவள் பிரகதி பெயரை கூறினாள்.

ஓ..அடிவாங்கிய அவள் உன்னை கட்டி வச்சாலா? அபி கோபமாக அவளிடம் வந்தான். அபி..என்று அர்ஜூன் சத்தம் கொடுக்க அபி நின்றான்.

சார், நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரியாது. ஆனால் இவங்க மட்டுமல்ல யாரு எங்க ப்ரெண்ட தொட்டாலும் சும்மா விட மாட்டோம். இந்த பொண்ணு ரொம்ப சீப்பா நடந்துக்கிறா? என் வீட்டிற்கு வந்து என் ப்ரெண்டையே வீட்டை விட்டு வெளிய போக சொல்லி மிரட்டுறா? அதனால் இவளோட குடும்பம் இந்த வீட்ல இருக்கக்கூடாது. நான் நினைச்சிருந்தா அப்பொழுதே அவள் கழுத்தை பிடித்து வெளிய தள்ளி இருப்பேன். ஆனால் உங்களுக்காகவும் அஜய் சாருக்காகவும் தான் விட்டேன். அந்த பொண்ணு அஜய் சாரை கல்யாணம் பண்ணிட்டு அதிகாரம் பண்ணாலும் நான் இதே தான் செய்வேன் என்று மறைமுகமாக பிரகதியிடம் அவள் பேசியதை எடுத்துரைத்தான்.

ஆனால் அஜய் சார் உங்களுக்கு கொடுக்கும் அதே மரியாதையை என்னால இந்த மாதிரி கேவலமான பொண்ணுக்கு கொடுக்க முடியாது. நீங்க பேமிலியோட வரலாம். ஆனால் இவள் உங்கள் மனைவியானாலும் இவள் இந்த வீட்டுக்கு வரக்கூடாது. என்னோட பாட்டிக்கு வீடு கோவில் மாதிரி. தப்பான பொண்ணுங்க இங்க இருப்பது தெரிந்தால் அவங்க ரொம்ப கோபப்படுவாங்க.

அர்ஜூன், என்ன பேசுற? இவளை நான் கல்யாணம் பண்ணிக்க போறேனா? உனக்கு யார் சொன்னா?

சார், இவ தான் பிரகதியிடம் பேசுனா. இல்ல மிரட்டுனா? நான் அத்தை பொண்ணு அந்த பாசத்துல பேசுறான்னு பார்த்தால் இப்ப அபி மட்டும் இங்க இல்லைன்னா, பிரகதியை கொன்றுப்பா. நீங்க கூட அவளோட கழுத்தை பார்த்தீங்கல்ல..என்ற அர்ஜூன். நீங்க அவளுக்கு மட்டும் தானாம். அதை உங்ககிட்ட பேசாம அவளை மிரட்டி..கொல்ல பார்த்தா.

நான் இப்ப தீனா அண்ணாவை தான் வர வச்சு இவளை உள்ள தள்ளி இருக்கணும். உங்க பேமிலி பேர் கெட்டு போயிருமே சார். அதான் விட்டேன்.

என்னம்மா..உன்னோட டார்லிங் இங்க தான் இருக்காரு. இப்ப பேசும்மா..என்று அர்ஜூன் கேட்க, அத்தை வாங்க என்று அஜய் அண்ணி ரோஸ்னியை முறைத்து விட்டு பிரகதியை பார்க்க சென்றாள்.

பிரகதி அவர்களை பார்த்து திரும்பிக் கொள்ள, அஜய் அவளை முறைத்து விட்டு பிரகதியை பார்க்க வந்தான். அவன் அம்மாவும் அண்ணியும் அவளை பார்க்க, ஸ்ரீ அவளுக்கு போட மருந்தை கையில் வைத்துக் கொண்டு நின்றாள்.

நான் போட்டு விடுறேன் என்று அஜய் அம்மா மருந்தை வாங்க, பிரகதி அவர்களை விட்டு விலகினாள்.

பிரகதி நான் போட்டு விடவா? அவன் அண்ணி அருகே வர, கண்ணீருடன் வேண்டாம் என்று தலையசைத்தாள்.

ரொம்ப வலிக்குதாம்மா? அவன் அம்மா கேட்க, இல்ல ஆன்ட்டி..இதை விட பெரிய வலியெல்லாம் அனுபவித்திருக்கேன் ஆன்ட்டி. இது சாதாரணம் தான் என்றாள்.

ஸ்ரீ மருந்தை போட்டு விட அஜய் உள்ளே வந்து, அவள் பேசும் வரை வேடிக்கை பார்த்தியா? என்று திட்டிக் கொண்டே அருகே வந்தான். அவள் துப்பட்டாவை தேட..அதை எடுத்த அஜய் அவளுக்கு போட்டு விட்டு அவளை வெளியே இழுக்க..சார், என்னை விடுங்க. நான் வரலை..என்றாள்.

உன்னிடம் வா..என்று நான் சொல்லவில்லை. நீ அமைதியா இல்லாம சத்தம் போட்ட உன்னை தூக்கிட்டு தான் போகணும் என்றான். அவள் பாவமாக அனைவரையும் பார்க்க அவன் பிரகதியை நிற்க விடாது இழுத்து சென்றான்.

ஸ்ரீ மருந்துடன் வெளியே வந்தாள். அவன் அம்மாவும் அண்ணியும் என்ன செய்ய போகிறானோ? என்று பயந்தவாறு வந்தனர்.

அஷ்வின் பிரகதியை பார்த்து அவன் தாத்தாவிடமிருந்து அவளிடம் வந்தான். அஜய் திரும்பி அவன் அண்ணியை பார்த்தான். பிரகதியிடம் சென்ற மகனை தூக்கிக் கொண்டாள் அவள்.

பிரகதி கையை எடுக்க, அஜய் வேண்டுமென்றே கையை பிடித்து, அப்ப பேசுனேல்ல இப்ப பேசு என்று ரோஸ்னியிடம் வந்தான். அவள் பிரகதியை முறைத்து பார்த்தாள்.

ஏய்..என்ன முறைக்கிற? என்று கவினிடம் அவங்க கட்டை அவிழ்த்து விடுடா என்றான் அஜய். அவன் அர்ஜூனை பார்க்க, சொல்றேன்ல கத்தினான் அஜய். பிரகதி பயத்துடன் அஜய்யை பார்த்தாள். அவள் இதயத்துடிப்பு அதிகமானது. கண்ணில் படபடப்பு..இருட்டுலகத்தில் இருப்பது போன்று அவள் கண்களை மூட,

அஜய்..ரோஸ்னியிடம் என்றாவது உன்னை காதலிக்கிறேன்னு சொல்லி இருக்கேனா? இல்லை கல்யாணம் தான் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கேனா? கேட்டான்.

மாமா..எனக்கு உங்களை மட்டும் தான் பிடிக்கும். ஆனால் இவளை போய்..உங்களுக்கு இவ செட் ஆக மாட்டா என்று சாதாரணமாக பேசினாள்.

செட் ஆக மாட்டாளா? அவள் வாழ்க்கையை உன்னால் ஒரு நொடி கூட வாழ முடியாது என பிரகதி பட்ட அனைத்து துன்பத்தையும் சொல்ல அனைவரும் அதிர்ந்து அவளை பார்த்தனர். அவள் அஜய் கையை விட்டு அங்கேயே கதறி அழுதாள்.

சார், என்ன பண்றீங்க? அர்ஜூன் கோபமாக கையை ஓங்கினான் அஜய்யிடம்.

அர்ஜூன் கையை பிடித்த அஜய்..அர்ஜூன் உனக்கு இவளை பற்றி தெரியாது. இந்த ரோஸ்னி பார்க்க தான் அழகு. ஆனால் மனசு நல்லதேயில்லை. என்னோட அண்ணியை பற்றி என்னிடமே ஓவரா பேசினா? என் அண்ணனையும் அவங்களையும் பிரிக்கும் ஏற்பாடு என்னிடம் ஆரம்பிக்கிறாளாம் என்று அஜய் அண்ணியை பார்க்க,

கிரிஷ், அவ என்ன சொன்னா? அவன் அண்ணி பயத்துடன் கேட்க, அஜய் அண்ணன் அவர் மனைவிடம் வந்து, யார் என்ன சொன்னாலும் நான் கேட்கவே மாட்டேன். எனக்கு உன் மீது நம்பிக்கையும் இருக்கு. நீ என்னோட வொய்ஃப் என்று அஷ்வின் அம்மா தோளில் கையை போட்டு ரோஸ்னி முன் அழைத்து வந்து, அப்ப எனக்கு வந்த மேசேஜ் நீ தான் செஞ்சியா? கேட்டான்.

மேசேஜா? என்று அவன் அண்ணி மீண்டும் பதட்டமாக, எதுக்கு பயப்படுற? எனக்கு உன்னை பற்றி கல்யாணத்துக்கு முன்பே தெரியும் என்று சொல்ல..அவன் அண்ணி பயத்தில் விலகி நின்றார்.

அஜய் அண்ணா அவளை இழுத்து தன்னோடு நிற்க வைத்து, நீ லவ் பண்ணியவன் தப்பானவன்னு தெரிஞ்சு அவனிடமிருந்து தப்பிக்க நீயே கல்யாண பேச்சை வீட்டில் ஆரம்பித்தது. நான் உன்னை பார்க்க உன் வீட்டுக்கு வந்த அன்றே..நம் கல்யாணத்துக்கு முன்பே தெரியும் என்றான்.

என்னை மன்னிச்சிருங்க. நான் அவனுடன் எந்த தப்பும் செய்யலை. என்னை நம்புங்க என்று அவன் காலில் விழுந்து அழுதாள். பிரகதி அழுகை நின்று அவன் அண்ணியை பார்க்க..

எனக்கு தெரியும்மா. உன்னை பற்றி வீட்டில் பேசிய போதே அனைத்தையும் அறிந்து கொண்டேன். உன்னை நம்பாமல் வேற யாரை நம்ப போறேன் என்று அவனும் மண்டியிட்டு தன் மனைவியை அணைத்துக் கொண்டான்.

இவள் நம்ம கல்யாணம் முடிந்த ஒரே வருசத்துல இந்த மேசேஜ் அனுப்பினாள். நானும் ட்ரேஸ் பண்ண பார்த்தேன். ஆனால் முடியலை என்று ரோஸ்னியை பார்த்து, பலமான உறவுகளை உன்னால உடைக்க முடியாது.

அத்தை..என்று அஜய் அண்ணி அவன் அம்மாவை பார்க்க, எங்க எல்லாருக்கும் ஏற்கனவே எல்லாமே தெரியும்மா. நீ தப்பு செஞ்சா தானே தலைகுனிந்து நிற்கணும் அஜய் அப்பா சொல்ல, மாமா..என்று அவள் காலில் அவள் விழ,

ஏய்..கஞ்சா கரடி கீழ குனிந்து குனிந்து இடுப்பு பிடிச்சுக்காம? அவள் கணவன் கிண்டல் செய்ய, ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள். அவள் நெற்றியில் முத்தமிட்டு தேவையில்லாமல் பயப்படாத என்று அவள் தலையில் கொட்டினான்.

அய்யோ..வலிக்குது. கொட்டாதீங்க..என்று ரோஸ்னியை அருவருத்த பார்வை பார்த்தாள் அவள்.

அர்ஜூன்..உனக்கு இப்ப புரியுதா? இப்ப நான் பிரகதியை பற்றி சொன்னது இதுக்கு தான். இவளே அவளை பத்தி கண்டுபிடிக்கிறேன்னு கண்டமாதிரி மேசேஜ் பண்ணுவா? இல்லை தப்பா பேசுவா? இவளெல்லாம் என் பிரகதியை பேச இடம் கொடுக்கலாமா? என்று பிரகதியை பார்த்தான்.

மாமா, என் பிரகதியா? அவளை நிறைய பேர் தொட்டிருக்காங்க. ச்சீ இவள பிடிச்சிருக்குன்னு சொல்ற?

ஆமா, எனக்கு இவளை தான் பிடிச்சிருக்கு. பெற்றோருக்காக தன் ப்ரெண்ட்ஸ் கிட்ட கெட்ட பேரு வாங்கி, அவள் அம்மாவின் பணத்தாசையால் தன் கற்பை இழந்து, அந்த கருவை கூட கலைக்க முடியாமல்..அதையும் இழந்து..இப்ப கூட அந்த கரு நினைவிலே அதோடு பேசிக் கொண்டு இருக்கும் அவளை யாருக்கு பிடிக்காமல் போகும். அத்தனை கஷ்டத்திலும் தன் ஒழுக்கத்தை நீங்காது வாழ்ந்த அந்த பொண்ணு எங்கே? எங்க குடும்பத்தையே கலைக்க நினைத்த நீ எங்கே?

சரி, சொல்லு அண்ணாவிற்கு எதுக்கு அப்படி மேசேஜ் பண்ண? என்று பிரகதி கையை விட்டு ரோஸ்னியை நெருங்கினான். ஆனால் அவள் அவன் கேட்டதற்கு பதிலளிக்காமல்..மாமா, அவள் கெட்டு போனவள். ஆனால் நான் அப்படி இல்லை என்று அவள் மீண்டும் பிரகதியை சொல்ல, அவளது கழுத்தை பிடித்து தூக்கினான். அனைவரும் பதறி அஜய்யிடம் வர..அவன் திரும்பி முறைத்ததில் அனைவரும் நின்றனர். பிரகதிக்கு அவன் கோபம் கூட பெரியதாக தெரியவில்லை. ரோஸ்னி துடிப்பதை பார்த்து அஜய்யிடம் வந்து, அவனை அடித்தாள்.

அவளை விடுங்க சார்..என்று அவள் ரோஸ்னியை பார்த்துக் கொண்டே அவனை அடிக்க, அவளை பார்த்துக் கொண்டே ரோஸ்னியை விடுவித்தான். அவள் இறுமினாள்.

அர்ஜூன்..தண்ணி அவளுக்கு தண்ணீர் எடுத்துட்டு வா..பிரகதி சொல்ல, அவளருகே வந்த அர்ஜூன் கையை கட்டிக் கொண்டு நின்றான்.

அவனை பார்த்த பிரகதி..டேய் தண்ணீர் கேட்டேன் என்று கேட்க, அகில் தண்ணீருடன் வந்தான். தேங்க்ஸ் அகில் என்று பிரகதி வாங்க

அகில் அவள் கையை தட்டி விட்டு ரோஸ்னி முன் வந்து அமர்ந்து தண்ணீர் குடித்தான்.

அகில்..மடையா? அவள் திட்ட, ஓய்..யாரை திட்டுற? என்று பவி அவனிடம் வந்தாள்.

அகில் ரோஸ்னியிடம், நான் உன்னை மாதிரி ஒரு பொண்ணை பார்த்தேன். ஆனால் அவ உன்னை மாதிரின்னு நினைச்சேன். ஆனால் சரியான டம்மி பீஸ். அவள் எங்களோட ப்ரெண்ட்ஸை கோபப்படுத்த, அழ வைக்க..படித்து பிராக்டிஸ் செய்து பேசுவாளாம் என்று உதட்டை மடித்து சிரிக்க.. பிரகதி கோபமாக அவனை பார்த்தாள்.

தருண் சொல்லி காட்டினான் பாரேன் என்று அகில் சத்தமாக சிரிக்க..பிரகதி அவனிடம் வந்து வாயை மூடுடா..என்றாள்.

அவ யாருன்னு தெரியுமா? இவள்..தான் என்று ரோஸ்னி முன் பிரகதியை காட்டி சிரித்தான்.

ராஸ்கல்..நீ சிரிக்கிறத நிறுத்து என்றாள் பிரகதி.

சரி..கோபப்படாத. இங்க வாயேன் என்று பிரகதியை அழைத்து..இவளை பாரேன். உன்னை மாதிரியே இல்ல..என்று ரோஸ்னியை காட்டினான்.

நானா? என்று ரோஸ்னியை பார்த்து விட்டு அகிலை பிரகதி பார்க்க, அவன் சிரித்துக் கொண்டு,

டேய்..மச்சான், இங்க பாரேன். ஆர்வக்கோளாறு..என்று கிண்டலாக கூறிக் கொண்டே எழுந்தான்.

ஆர்வக்கோளாறா? என்று அங்கிருந்த ஜக்கில் இருந்த தண்ணீரை அகில் மீது ஊற்றினாள். ஆனால் அவன் மிஸ் ஆக..அவனை விரட்டிக் கொண்டு, நில்லுடா..இல்லை..என்று தண்ணீரை மீண்டும் ஊற்றினாள். பிரகதி முன் வந்த அஜய் சட்டையில் தண்ணீர் பட்டது.

சாரி சார்..என்று திக்கி அவனது சட்டையை பார்த்தாள். அகில் அவளிடம் வவ்வளம் காட்ட..ராஸ்கல் என்று முணங்கிக் கொண்டே அவனை பார்த்தாள்.

அஜய் புன்னகையுடன் அவளது கையை பிடித்து, எனக்கு பிரகதியை தான் பிடிச்சிருக்கு. என்னுடைய வாழ்க்கை அவளோடு தான். அவள் ஒத்துக் கொண்டால் உடனே கல்யாணம் செய்துப்பேன். உங்களுக்கு ஏதும் பிரச்சனையா அம்மா, அப்பா என்று அவன் பெற்றோர்களை பார்த்தான். புன்னகைத்த அவள் முகம் மாறியது.

அவன் அப்பா..இந்த விசயம் வெளியே வராமல் இருந்தால் ஒத்துக்கிறேன் என்றார். கண்டிப்பாக யாருக்கும் தெரிய வராதுப்பா என்றான். அவள் அவன் கையை எடுத்து விட்டாள்.

ஆன்ட்டி, அங்கிள் எனக்கு இதில் விருப்பமில்லை என்றாள் பிரகதி.

நான் என் பெற்றோரிடம் என் காதலை சொன்னேன். அவங்க எனக்காக என்று பொண்ணு தேடக் கூடாதுன்னு சொன்னேன். அவ்வளவு தான். நான் உன்னை கட்டாயப்படுத்தலை என்றான் அஜய்.

இல்ல சார், நீங்க நேரத்தை வீணாக்க போறீங்க? பிரகதி சொல்ல, அதை பற்றி நீ எதுக்கு கவலைப்படுற? என் அம்மா, அப்பாவே..என்று அவன் அம்மாவை பார்த்தான்.

அந்த பொண்ணு விருப்பத்தோட கல்யாணம் பண்ணிகிட்டா ஓ.கே தான் அவன் அம்மா சொல்ல, அஜய் அவன் அண்ணன் அண்ணியை பார்த்தான்.

உன்னோட சாய்ஸ் சரியா இருக்குன்னு எனக்கு தெரியும் அண்ணன் சொல்ல, என் மைத்துனனுக்கு அவன் காதலி கிடைக்க வாழ்த்துக்கள் என்றாள் அவன் அண்ணி.

பார்த்தேல்ல..என்னோட குடும்பமே ஒத்துக்கிட்டாங்க. எனக்கு காத்திருப்பதில் பிரச்சனையில்லை என்று அவன் சொல்ல, வேண்டாம் சார். ப்ளீஸ் என்னை தொந்தரவு செய்யாதீங்க என்று அவள் அறைக்குள் செல்ல..

பிரகதி அகில் அழைக்க, போடா..என்று அவள் அறைக்குள் சென்று பூட்டிக் கொண்டாள்.

அப்பா..இனி நான் இவங்க குடும்பத்தையே பார்க்க கூடாது.

நீங்க என்னோட பிரகதிய பத்தி வாயை திறந்தீங்கன்னா.. என்னை பத்தி தெரியும்ன்னு நினைக்கிறேன் என்று அஜய் மிரட்டினான்.

மாமா..என்று அவள் அழைக்க,

மாமாவா? நானா? உனக்கா? நீ யாருன்னே எனக்கு தெரியாது.. புரிஞ்சதுல்ல..

வேற எந்த குடும்பத்தையும் இந்த மாதிரி டார்கெட் பண்ணன்னு தெரிஞ்சது. நீ வெளிய ஃபீரீயா சுத்த முடியாது என்று மிரட்டி அவர்களது உடைமைகளை எறிந்து விட்டு, ஸ்ரீயை பார்த்து என்ன வேடிக்கை பார்க்கிற? போ..அவளுக்கு மருந்தை போட்டு விடு என்று அர்ஜூனை பார்த்து, அவளுக்கு இனி யாராலும் பிரச்சனை வராது. அவள் இங்கேயே இருட்டும் என்று அவன் அறைக்கு சென்றான்.

Advertisement