Advertisement

அத்தியாயம் 130

அஜய் அர்ஜூனை அழைக்க, சமாதானமா? கவின் கேட்டான். டேய், நாங்க ஏற்கனவே பேசிட்டோம் என்றான் அர்ஜூன்.

அர்ஜூன் அஜய்யிடம் வர, அர்ஜூனை அவன் தனியே அழைத்து சென்று சத்யா, தியாவை பற்றி கேட்டான்.

தியாவை பற்றி அர்ஜூன் சொல்லி விட்டு, எனக்கு உங்க தம்பி பற்றியெல்லாம் சரியா நினைவில்லை. என் மாமாவும் அவரும் ப்ரெண்ட்ஸ் தான். எதுக்கு அவங்கள பத்தி விசாரிக்கிறீங்க? அர்ஜூன் கேட்க, அவரை அழைத்து வா..பேசலாம் என்று சொல்ல, அர்ஜூன் மறையிடம் வந்து சொல்ல..

வேலுவும் மற்றவர்களும் அஜய்யை பார்த்து அவனிடம் வந்தனர். அஜய் பாட்டியை அவன் வந்த போது பார்த்ததை சொல்ல, இதுல என்ன இருக்கு? இதயத்துல வலி ஏற்பட்டு தண்ணீர் எடுக்க வந்து குடம் சாய்ந்து தண்ணீர் கொட்டி வலியில் அங்கேயே விழுந்து இறந்திருப்பாங்க சரவணன் கூற,

நடந்திருக்கலாம். இந்த சத்தம் வெளியே அந்த பாட்டி வீட்டிற்கு கேட்காமலா இருந்திருக்கும்? அஜய் கேட்க, ஆமால்ல கண்ணன் கேட்க,

என்ன சொல்ல வர்றீங்க? பாட்டியை கொல்ல எவனோ திட்டம் போட்டிருக்கலாம்ன்னு சொல்றீங்களா? மறை கோபமாக கேட்க,

தெரியலை. ஆனால் இன்று என்று..அவன் கோவிலில் நடந்ததை கூற, அப்பவே சொல்லாம இப்ப சொல்றீங்க சார் மறை சத்தமிட,

சார்..சத்தம் போடாதீங்க. சத்யாவுக்கு தெரியாம எதையும் தெரிஞ்சுக்கணும் என்றான் அஜய்.

சத்யாவுக்கு ஏன் தெரியக்கூடாது? வேலு கேட்டான்.

எனக்கு தோணுது..

தோணுதா?

இன்பா அங்கே வந்தாள். சும்மா இருக்க மாட்டியா அஜய்? அவங்க குடும்ப விசயத்தை அவங்க பார்த்துப்பாங்க இன்பா கூறினாள்.

ஹேய்..அவன் என்னோட தம்பி. புரியுதா? அப்புறம் தான் இவங்களுக்கு ப்ரெண்ட்ஸ் என்ற அஜய், உங்களுக்கு நான் சொன்னது ஒத்துக்கிற மாதிரி இருந்தா..அர்ஜூனிடம் என் நம்பர் இருக்கு. கால் பண்ணுங்க என்று அவன் வீட்டின் வெளியில் அமர்ந்தான். முதல்ல காரியத்தை முடிச்சிட்டு எல்லாரும் போன பின் பார்த்துக்கலாம் என்றான் வேலு.

ஆமாடா, அதுவும் சரிதான் கண்ணன் கூற, அவர்களும் அமர்ந்தனர். ஆட்கள் வருவதும் செல்வதுமாக இருந்தனர்.

ஸ்ரீ அர்ஜூனிடம் வந்து நான் கிளம்புறேன். நிவி வரணும்ன்னு சொன்னான்.

அவன் எதுக்கு ஸ்ரீ?

சொன்னால் கேட்டா தானே? நான் அனுவை பார்த்துக்கிறேன். அவனை அழைச்சிட்டு வா.

நீ மட்டும் எப்படி தனியா? இரு பாட்டியும் வரட்டும்..என்று பாட்டியை அழைத்து வந்தான். வெளியே பெரியத்தை ராக்கியுடன் இருந்தார். நீங்களும் ராக்கியுடன் வீட்டுக்கு போங்க. அக்காவிடம் நான் சொல்லிக்கிறேன் என்றான் அர்ஜூன்.

அப்பொழுது பிரகதியும் பவியும் வெளியே வந்தனர். அஜய் அவன் அண்ணனை தேடினான். பிரகதியிடம் வந்து, என்னோட அண்ணாவும் அஷ்வினும் உள்ள இருக்காங்களா? கேட்டான்.

இல்லையே? அவங்க தம்பி பயப்படுவான்னு வெளிய இருக்கிறதா சொன்னாங்களே? அவள் கூற, அஜய் பயத்துடன் மீண்டும் மீண்டும் அழைத்தான். அவன் அப்பாவிடம் கேட்டான். இங்க தானடா பையனோட இருந்தான் என்றார்.

மீண்டும் அவன் அழைக்க, அவன் எடுக்கவில்லை. இருங்க சார், பார்க்கலாம் என்று அர்ஜூன் நண்பர்களை அழைத்தான்.

இந்த நேரத்துல எங்க தான் போனான்? அஜய் அப்பா திட்டிக் கொண்டிருக்க, எல்லாரும் பைக்கில் ஏறினர். அவர்களுடன் வேலுவும் கண்ணனும் வந்தனர்.

மகன் அழுகிறான் வீட்டிற்கு செல்லலாம் என்று அவ்விடத்தை விட்டு வெளியே வந்த அஜய் அண்ணாவை ஒருவன் பின் தொடர்ந்தான்.

அர்ஜூனும் அஜய்யும் சேர்ந்து ஒரே பைக்கில் சென்றனர். ஓரிடத்தில் சத்தம் கேட்டு, அர்ஜூன் வண்டியை நிறுத்து அஜய் சொல்ல இருவரும் இறங்கினர்.

அஜய் அண்ணாவின் கையிலிருந்த அஷ்வினை ஒருவன் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தான். அஷ்வின் அழுது கொண்டிருந்தான். எவன்டா அது? அர்ஜூன் சத்தமிட்டு அருகே வர அஜய் அண்ணனை தள்ளி அஷ்வினை பிடுங்கிக் கொண்டு ஓடினான்.

அஜய்..பக்கத்தில் இருந்த கல்லை எடுத்து குறி பார்த்து எறிய அவன் தலையில் பட்டது. ஆனாலும் அவன் ஓடினான். அவன் முன் வந்த தீனாவை கவனிக்காமல்.

தீனா அவனை பிடிக்க, அர்ஜூனும் அஜய்யும் அவனிடம் வந்து அஷ்வினை வாங்கினர். சித்தப்பூ..அப்பா என்றான்.

அண்ணா..என்று அவனிடம் வந்து பார்த்தான். அவன் தள்ளியதில் பாறைக்கல்லில் தலைப்பட்டு இரத்தத்துடன் மயங்கி இருந்தான். அர்ஜூனிடம் அஷ்வினை கொடுத்து விட்டு, அவன் அண்ணனை தூக்கி ஹாஸ்பிட்டலில் சேர்த்தான். அவன் தலையில் கட்டிட்டு அனுப்பினர். அவனை காரில் அமர வைத்து, தியா வீட்டிற்குள் சென்றான்.

எங்கடா அவனை? அவன் அப்பா கேட்க,

அப்பா..அண்ணா என்று தயங்கினான். ஸ்ரீயும் பிரகதியும் பவியும் அவருடன் இவர்களை எதிர்பார்த்திருந்தனர்.

அவனுக்கு ஒன்றுமில்லைல்ல அவர் கேட்க, இல்லப்பா..ஆனால் தலையில் அடி பட்டிருக்கு என்றான்.

எங்க இருக்கான்? அவர் கேட்க, காரை காட்டினான். காரில் அவன் அண்ணனும் அஷ்வினும் இருந்தனர். அஷ்வின் பிரகதியை பார்த்து, டியர்..என்று கையை நீட்டினான். அவள் அவனிடம் சென்று அசுக்குட்டிக்கு ஒன்றுமில்லைல்ல.. என்று அவனை துக்கி ஆராய்ந்தாள். அவன் அவளை அணைத்து, பயந்துட்டேன் என்று அழுதாள்.

அஜய்யும் அவன் அப்பாவும் அஷ்வினை பார்த்தனர். ஸ்ரீயும் பவியும் அவனிடம் செல்ல கவின், அபி, அர்ஜூன் அவனுக்கு விளையாட்டு காட்டி சிரிக்க வைத்தனர். அவர்களை பார்த்துக் கொண்டே அஜய் உள்ளே சென்று அண்ணி, அம்மா..வெளிய வாங்க என்று அழைத்தான்.

கிரிஷ்..என்னாச்சுடா? என்று அவன் அண்ணி பதறி, அவன் கையை தூக்கி பார்க்க, மேற்கைக்கு அடியில் இரத்தமாக இருந்தது.

அண்ணி, ஒன்றுமில்லை அவன் சொல்ல, அம்மாவும் பதறி இவ்வளவு இரத்தமா இருக்கு. என்ன பண்ணீட்டு வந்த? என்று அவனிடம் ஓடி வந்தனர். அவன் அப்பாவும் அப்பொழுது தான் பார்த்தார்.

கிரிஷ்..இவ்வளவு நேரமா இப்படியே நிக்குற? வா..என்று அவனை இழுத்து வந்தார்.

அப்பா, அண்ணாவை முதல்ல வீட்ல விட போங்க.

என்ன பேசுற? சொல்லாம என்று அவர் திட்டிக் கொண்டே அவனை இழுத்து வர, அர்ஜூனும் மற்றவர்களும் அவன் காயத்தை பார்த்து,

சார்..இது எப்ப ஏற்பட்டது? வாங்க ஹாஸ்பிட்டல் போகலாம் என்று அவர்கள் காரில் அர்ஜூன் டிரைவர் சீட்டில் அமர்ந்து காரை எடுத்து விட்டு, வேலுவிடம், அண்ணா மத்தவங்கள பார்த்துக்கோங்க என்றான்.

அஜய் அம்மா அழுது கொண்டே நின்றார். பிரகதிக்கு அவன் கையில் இரத்தத்தை பார்த்து..அவளுக்கு அவளின் அன்றைய இரத்த கோலம் நினைவில் வந்தது. அவளை அறியாமலே அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வர, அவள் கண்ணீரை பார்த்துக் கொண்டே அஜய் நம்பிக்கையுடன் சென்றான்.

என்னை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டி போய் பார்த்துருக்க. வலியே இல்லையா? அஜய் அண்ணன் கேட்க, எனக்கு ஏதும் தெரியலை என்று அவன் சொன்னான்.

ச்சே..நாங்களும் பார்க்காம போயிட்டோம் என்ற அர்ஜூன், அவன் உங்களை தாக்க வரும் போது பிடிச்சிட்டீங்கன்னு நினைச்சோம். ஆனால் அப்பொழுது தான் பட்டிருக்கும்ன்னு நினைக்கிறேன் என்று ஹாஸ்பிட்டலுக்கு வர கேசவன் திட்டிக் கொண்டே சிகிச்சையை கவனித்தார். சைலேஷ் அனிகா அப்பாவை ஏர்ப்போர்ட்டுக்கு அழைத்து சென்றுள்ளான். அதனால் இது எதுவும் அவனுக்கு தெரியாது. அனிகா, கைரவ், நித்தி, தருண் வந்து சற்று நேரத்திலே கிளம்பி இருப்பர்.

கண்ணீருடன் பிரகதியை பார்த்து ஸ்ரீ, ஏய் பிரகதி எதுக்கு அழுற? என்று கேட்டவுடன்..ஸ்ரீயை அணைத்து அழுதாள் பிரகதி. பவியும் இன்பாவும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பிரகதி..இன்பா அழைக்க, அன்று எனக்கு இதை விட என்று அவளுக்கு அவள் வயிற்றில் இருந்த குழந்தை நினைவு வந்தது. ப்ளட்..இப்ப சா..சாருக்கு..ப்ளட்..எனக்கு அழுகையா வருது என்று இன்பாவை அணைத்தாள்.

அஜய் அம்மாவிற்கு புரிந்து, அவளிடம் வந்து, முடிஞ்சத பத்தி யோசிக்காதம்மா..என்றார்.

ஆன்ட்டி..நான் பார்த்தேன். ஸ்கேன் பண்ணாங்க. என்னால மறக்க முடியலை ஆன்ட்டி என்று அழுதாள்.

ஹே..நீ எதை சொல்ற? இன்பா கேட்க, பாப்பா செத்துப்போச்சு என்று அழுதாள். அஜய் அம்மாவுக்கு என்ன சொல்றதுன்னே தெரியாமல் அவளை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டு, அதை நினைக்காதம்மா. உனக்கு தான் பாரம் ஏறும்மா என்றார்.

ஆன்ட்டி, உங்கள மட்டும் விட்டுட்டு போயிருக்காங்க என்று பிரகதி அஜய் அம்மாவை பார்த்தாள்.

முதல்ல அவ போகட்டும். அவளும் புருசனுக்காக பதட்டப்படுவாள் என்று சொல்ல, அபி அவரிடம் நான் அழைத்து செல்கிறேன். பைக்கில் வருவீங்களா? கேட்டான்.

என் பிள்ளை அடிபட்டு இருக்கான்? எதுவாக இருந்தாலும் வாரேன். என்னை ஹாஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போறீயா? கேட்டார்.

அபி அவரை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து செல்லவும் அஜய் கையில் கட்டிட்டு வெளியே வரவும் சரியாக இருந்தது. அம்மா..நீங்க எதுக்கு வந்தீங்க? கோபமாக அஜய் பேச..ஆமாடா இரத்தத்தோட பிள்ளைகள பார்த்துட்டு சும்மா நின்னுட்டு இருக்க முடியுமா? அவன் அப்பா சினத்துடன் கேட்டார்.

அவன் அம்மா நேராக அஜய் அண்ணனிடம் சென்று தலையை தொட்டு பார்த்தார். ரொம்ப வலிக்குதாடா? கேட்டார்.

அம்மா, ஒன்றுமில்லை என்று பக்கத்தில் நின்ற தன் மனைவியை காதலுடன் பார்த்தான்.

வாங்க..கிளம்பலாம் அர்ஜூன் அழைக்க, அர்ஜூன் நீ அங்க போ. உன்னோட குடும்பத்தை பார். நான் டிரைவ் பண்ணிடுவேன் என்றான் அஜய்.

அதெல்லாம் தேவையில்லை. நான் காரை ஓட்டுகிறேன் என்று அஜய் அப்பா அர்ஜூனிடமிருந்து கார்ச்சாவியை வாங்கி ஏறினார். அஜய் அம்மாவுக்கு பிரகதி அழுதது நினைவிற்கு வந்து, எங்க கூட வீட்ல இருந்தவங்கள..உன்னால முடிஞ்சா கூட்டிட்டு வந்து விடுறியா? பொண்ணுங்க..இந்த நேரத்தில் அங்க இருக்க வேண்டாம்ன்னு தோணுது என்று சொல்ல, அர்ஜூன் ஒத்துக் கொண்டான். அபி..முதல்ல வீட்டுக்கு வண்டிய விடு..காரை எடுத்துட்டு வாரேன் என்றான் அர்ஜூன்.

அர்ஜூன், நீ அங்க போ. நான் வேண்டுமானால் எங்க காரை எடுத்துட்டு வாரேன் என்று அஜய் சொல்ல, முதல்ல ரெஸ்ட் எடுங்க சார் என்று அவன் கிளம்பினான்.

வீட்டிற்கு வந்ததும் எல்லாரும் ஓய்வெடுங்க என்று எல்லாரையும் அவரவர் அறைக்கு அனுப்பி விட்டு, அஜய் அம்மா அவனிடம்..கிரிஷ், அந்த பொண்ணு ரொம்ப யோசிக்கிறா? இன்னும் ரொம்ப கஷ்டப்படுறா? எனக்கு என்ன தோணுதுன்னா, அவள் உன் பக்கம் சாய்வான்னு தான் தோணுது என்றார்.

அம்மா, என்னை விட அவளிடம் நீங்க ஆர்வமாகி விட்டீங்க. அம்மா..இதுக்கு மேல அவகிட்ட பாசமா இருந்தீங்கன்னா எனக்கு பொறாமை வந்துடும் என்றான் கேலியாக.

இங்க உங்க பிள்ளைக்கு அடிபட்டிருக்கு. அவள பத்தி பேசுறீங்க? இப்பவே இப்படின்னா உங்க பையனை மறந்துடுவீங்க போல..என்றான் பாவமாக.

நான் சிந்திக்கும் எல்லாமே என் பசங்களுக்காக தான என்றார்.

“லவ் யூ அம்மா” என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டான்.

இங்கேயே இரு. அவளே உன்னிடம் வந்து பேசுவா பாரு..என்று அவன் அம்மா அவனுக்கு கட்டிட்ட இடத்தை பார்த்து விட்டு அறைக்கு சென்றார்.

அம்மா, எங்களுக்கு ஏதுமில்லை. நிம்மதியா தூங்குங்க என்றான். அவர் சென்று விட்டார்.

அஜய் எழுந்து நடந்தான். அவனுக்கு பிரகதி அறையை பார்க்க தோன்றியது. கதவை சாத்தி தான் வைத்திருந்தாள். உள்ளே சென்றான். பெரியதாக ஏதுமில்லை. இதயாவிடம் பிரகதி கோபப்பட்டது நினைவுக்கு வந்தது. அப்படி என்ன தான் இருக்கு? என்று பார்த்தான்.

சில ஆடைகள். ஒரே ஒரு புத்தகம் இருக்க, அதை அஜய் எடுத்தான். அதிலிருந்து விழுந்ததை பார்த்து அதிர்ந்தான். அதில் சில புகைப்படங்கள். அவள் வயிற்றிலிருந்த குழந்தையின் ஸ்கேன் புகைப்படம்..மை க்யூட் சார்ம் என்று எழுதி நான்கு மாதம் என்று தேதியும் இருந்தது. அஜய் கைகள் நடுங்க அதை கீழே விட்டான். மீண்டும் அதை எடுத்து கண்ணீருடன் அமர்ந்தான்.

பார்த்துட்டீங்க போல? என்று இதயா உள்ளே வர, இன்பாவும் அவன் வைத்திருந்ததை அதிர்ந்து பார்த்தாள்.

அவ வந்துட்டாளா? கேட்டான்.

வருவாள். கூப்பிட போயிருக்கான் அர்ஜூன். எங்களை தருண் வீட்ல விட்டு போனான் என்ற இதயா..இதை படிச்சு பாருங்க என்று அவள் டிராயரில் வைத்திருந்த டைரியை எடுத்து போட்டாள்.

பிரகதி அவளுக்கு நடந்த அனைத்தையும் எழுதி இருந்தாள். குழந்தையை இழந்த பின் மனதில் ரணமுடன் இருந்த நேரம் எழுதியதை பார்த்தான்.

எனக்கு கொடுக்கும் அனைத்தையும் அந்த கடவுள் எடுத்துக்கணும்ன்னா எதுக்கு அவர் கொடுக்கணும்? அவரது இந்த செயலில் நான் என் குழந்தையையும் இழந்துட்டேன்.

அம்மா, அப்பா கிடைச்சாங்க..ஆனால் பாதுகாப்பு இல்லாமல் போனது.

காதல் கிடைத்தது கூறவும் முடியவில்லை, தொடரவும் முடியவில்லை.

நட்பு ஆசைப்பட்டும் கிடைக்கல.

நீ கூட என்னை விட்டு போயிட்டேல..கண்ணீர் பட்டு எழுத்து லேசாக மறைந்து இருந்தது. அவன் கண்ணீரும் அதில் நனைந்தது.

இருக்கு சார்..என்று இதயா காட்டிய பக்கத்தை படித்து உடைந்து போனான்.

கடைசியில் இன்று காலை எழுதியது..என் வாழ்க்கை யாருக்காக? எதற்காக? என்று புரியாமல் இருந்தது. ஆனால் இன்று ஏதோ..ஒரு திருப்தி. எல்லாம் எல்லாருக்கும் தெரிந்து விட்டது. மனப்பாரம் இறங்கியது போல் இருக்கு. ஆனால் கிரிஷ் சார்..தான். கொஞ்சம் பயமா இருக்கு. என்னால் மீண்டும் யாரையும் இழந்து அதிலிருந்து மீண்டு வர முடியாது. அவருக்கு எல்லாம் தெரிந்து இப்படி பேசுறார். சொல்ல நல்லா தான் இருக்கும். வாழும் போது கஷ்டமா இருக்கும். அது எப்படி டச்சிங் இல்லாம லவ் பண்ணுவாங்க? சிரிப்பா இருந்தாலும் நல்லா இருக்குல்ல. நீ என்ன சொல்ற மை க்யூட் சார்ம்?

இதை விட நேற்று அவன் வந்த பகுதியை வாசித்து பாருங்கள் சார்..என்று இதயா ஓர் பக்கம் காட்ட அதை பார்த்தவன் புன்னகையுடன் வாசித்தான்.

அஜய்யை அவன் கத்தியால் குத்த வரும் போது இவள் இடையே வர, அவன் இவள் ஆடையை கிழித்து இருப்பானே..அவனை பார்த்து பயந்து அஜய் பக்கம் திரும்பி இருக்கும் போது அவனுடனான நெருக்கத்தை ரசித்து எழுதி இருந்தாள்.

கோபமா இருக்கும் போது..அழகா இருக்கேனா? என்று சிரித்தான். இன்பாவும்..ஏய்..குடு..குடு நானும் பார்க்கணும் கேட்க, உனக்கெல்லாம் இல்லை என்று பெருமூச்செடுத்து எழுந்து இருந்த இடத்திலே வைத்தான். அந்த படத்தை மட்டும் கையில் வைத்திருந்தான்.

இதையும் வச்சிரு..கத்த போறா?

அவளுக்கு தான் என் கோபம் பிடிச்சிருக்கே? என்றான்.

அவனிடம் கோபப்பட்டதை சொல்லி இருக்கா. எதையாவது செஞ்சி இருக்கிறதையும் கெடுத்துக்காத என்றாள் இன்பா.

போகலாம் என்று எழுந்த இன்பா கண்ணில் ஓர் கவர் சிக்கியது. அதை எடுத்து பார்த்து அஜய்..இங்க பாரு..என்று அவனிடம் கொடுத்தாள். அது “பிரக்னென்சி கிட்”. அதை பார்த்தவனுக்கு கோபப்படுவதா? அழுவான்னு? புரியாமல் கையில் வைத்தவாறு நின்றான்.

டேய், வா..அவ சத்தம் கேட்குது என்று இன்பா அழைக்க, நீ போ..நான் பேசிட்டு வந்துடுறேன்.

வேண்டாம் டா. சொன்னா கேளு. அவளோட பர்சனல்ல தலையிடாத.. இன்பா சொல்ல, அவன் கேட்காமல் நின்றான்.

அக்கா, போகலாம்.

பார்த்து பேசு. நீயும் கஷ்டப்படுத்திறாத என்று இருவரும் அகன்றனர். மறு நிமிடம் பிரகதி அறைக்குள் வர, அஜய் கதவை பூட்டினான். அவள் பயந்து, சார் இங்க என்ன பண்றீங்க? கேட்க, அவன் கதவு, ஜன்னலை தாழிட்டான்.

அவன் அவளது படுக்கையில் அமர்ந்து, அதை வெளியே எடுத்து வைத்தான்.

சார், இதை எதுக்கு எடுத்தீங்க? என்னோட அறைக்கு நீங்க எதுக்கு வந்தீங்க? என்று டைரி நினைவில் பதட்டமுடன் சென்று பார்த்தாள். வைத்தது வைத்த படி இருக்க..அப்பாடா என்று அவனிடம் வந்தாள்.

வெளிய போங்க சார் என்றாள்.

நான் போறேன். இது என்ன?

இது என்னன்னு உங்களுக்கு தெரியலையா?

அது தெரியுது. இதை எதுக்கு வச்சிருக்க? என்று அந்த கிட்டை தூக்கி போட்டான்.

சார், அது என்னோடது. அதை எதுக்கு எடுத்தீங்க? தூக்கி போடுறீங்க? என்று அழுதாள்.

சரி, அப்ப இதை கிழிச்சிடலாம்ல..என்று கிழிப்பது போல் நடித்தான். அவன் கன்னத்தில் ரையென அறை விழுந்தது.

அது என்னோட பாப்பா. நீங்க எதுக்கு வச்சிருக்கீங்க? சத்தமிட்டாள்.

இங்க பாரு உன்னை தொட மாட்டேன்னு சொல்லி இருக்கேன். அதுக்காக அதிகமா பேசாத.

அதிகமா பேசலை. என்னோட பாப்பாவை எதுக்கு எடுத்தீங்க? கத்தினாள்.

அவளருகே வந்த அஜய், அந்த குழந்தை செத்து போச்சு. அது யாருடைய குழந்தைன்னு உன்னால சொல்ல முடியுமா? அவன் கேட்க, தவித்து போனாள்.

என்னோட குழந்தை.

குழந்தையோட அம்மாவை கேட்கலை. அப்பாவை கேட்டேன்.

அவள் அழுதாள்.

சொல்லு..அப்பா யாரு? என்றான்.

ப்ளீஸ் சார். இப்படி கேட்காதீங்க..

சொல்லு என்று அவன் சினத்துடன் சத்தமிட்டான்

அவள் பயந்து அழுது கொண்டே, எனக்கு தெரியாது சார். தெரியாது. ஆனால் அது என்னுடையது தானே?

உனக்கு கலைக்க தோன்றவில்லையா?

அது ஒரு உயிர். அதன் உயிரை எப்படி சார் எடுப்பது? என்னால் முடியலை. அது என்ன பாவம் செய்தது? என்னை காப்பாற்றுவதற்காக கடவுள் எடுத்திட்டான்னு அம்மா சொல்வாங்க என்று கதறி அழுதாள்.

அவள் கண்ணீரை ஊதித் தள்ளினான்.

சார்..

நான் தான் உன்னை தொட முடியாதே? அதான் ஊதினேன் என்று அவளருகே அமர்ந்து, அது உன்னோட குழந்தையா இருந்தாலும் அதால வளர முடியாது. எல்லாரும் கேள்வி கேட்டே கொன்னுருப்பாங்க. அது அப்பொழுதே இறந்தது கூட சரி தான். இனி அதை பற்றி நீ நினைக்கவே கூடாது. உனக்கு உன்னோட ப்ரெண்ஸ் கிடச்சுட்டாங்க. அது போதும். அதை விட்டுரு என்று அவள் கையிலிருந்த புகைப்படத்தை உறுவி மடித்து அவளுக்கு மோதிரமாக செய்து அவளிடம் கொடுத்தான். நீ என்னை ஏற்ற பின் நானே போட்டு விடுவேன்.

சார், வெளிய போங்க. நீங்க சொன்னது போல் மறக்க முடியாது. இவ்வளவு சாதாரணமாக சொல்றீங்க? என்னோட வலி உங்களுக்கு புரியாது. ப்ளீஸ் போங்க..

நீ மறக்கல்லைன்னா. நான் போக மாட்டேன். இங்கே தான் தூங்கப் போறேன்.

ஏன் சார்? உங்களை நான் என்ன செய்தேன்? இப்படி கஷ்டப்படுத்துறீங்க? என்று அவள் அழுது கொண்டே கேட்டாள்.

நான் என்ன சொன்னேன்? தூங்க தான போறேன்.

எல்லாரும் என்ன நினைப்பாங்க?

நீ எனக்கு மட்டும் தான் என எல்லாருக்கும் தெரிய தான் தங்க போறேன் என்று அவளது படுக்கையில் படுத்தான்.

ப்ளீஸ் சார், போங்க என்று அவனருகே வந்தாள்.

எனக்கு அடிபட்டிருக்கு. அதை பற்றி உனக்கு கேட்கவே தோணலையா? என்னை வெளிய அனுப்புறதிலே குறியா இருக்க?

எனக்கு தேவையில்லாத விசயத்தை நான் எதுக்கு கேட்கணும்? அவள் கேட்க, அவன் கண்கள் கலங்கியது. அவனாகவே எழுந்து வெளியே சென்றான். போகும் அவனை பார்த்துக் கொண்டு, சாரி சார். எனக்கு வேற வழியே தெரியலை. என்னால எல்லாரும் உங்களை தப்பா நினைப்பாங்க பேசுவாங்க..என்று மனதில் நினைத்தவள் அவன் வெளியேறவும் கதவை சாத்தி விட்டு அழுதாள்.

காலை நேரத்தில் அஜய் வேகமாக படியிறங்கி வந்தான்.

கிரிஷ்..மெதுவா..வா அம்மா சொல்ல, அங்கிருந்தவர்களை பார்த்தான். பெரியவங்களும் அவன் அண்ணனும் அங்கிருந்தனர். மற்ற யாரும் அங்கில்லை.. இறங்கியுடனே.. எல்லா அறைக்கதவுகளையும் படபடவென தட்டிக் கொண்டே சென்றான்.

கிரிஷ்..என்ன பண்ற? அவன் அப்பா பதறி எழுந்தார்.

அப்பா..எல்லாரையும் ஹாலுக்கு வர சொல்லுங்க என்று அவன் அண்ணியையும் அஷ்வினையும் பார்க்க ஓடினான். அவர்களை அழைத்துக் கொண்டு கீழே வந்து பார்த்தான். அனைவரும் அவனை பதட்டத்துடன் பார்த்தனர்.

அவன் எல்லாரும் இருக்காங்களா? என பார்த்தான்.

அம்மா, பிரகதி எங்க? கேட்டான்.

தெரியலையேப்பா. நான் பார்க்கவேயில்லை என்றார்.

நைட் தூக்கம் வரலன்னு என் அறையில் தான் தூங்குனாடா. நான் எழும் போது அறையில் அவள் இல்லை.

எங்க போனா? எல்லாரும் பாருங்க..

பிரச்சனையாடா? இன்பா கேட்க, ஆமா அவளை தேடுங்க கத்தினான்.

சார், யாரோ இருக்கான் என்று பவி சொல்ல..ஜன்னல் வழியே பார்த்தான் அஜய். வீட்டின் பின் பக்கம் தென்னந்தோப்பில் இருப்பவனை பார்க்க அவன் அஜய்யை பார்த்து விட்டு கையில் இருந்த போனில், சார் அவன் என்னை பார்த்துட்டான் என்று ஓட, அஜய் வீட்டின் பின் பக்கம் ஓடி வந்து அவனை விரட்டினான்.

அதே திசையில் பிரகதி மரத்தினடியே நின்று அன்னார்ந்து மரத்தை புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். இரு கிளிகள் கொஞ்சிக் கொண்டிருந்தது.

வந்தவன் பிரகதியை பிடித்து துப்பாக்கியை நெற்றியில் வைத்தான். ஓடி வந்த அஜய் அதை பார்த்து, அவள விடு. நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன் என்றான்.

அது எப்படி விடாமல் இருப்ப? என்று டிகரை அழுத்த சென்று அஜய்யை சுட்டான். ஆனால் அஜய் விலக அவனுக்கு ஏதுமாகலை.

அதிர்ச்சியில் நின்றிருந்த பிரகதி, அவன் அஜய்யை சுடவும் விழித்துக் கொண்டு அவன் துப்பாக்கியை வைத்திருந்த கையை பிடித்து தூக்க, அவன் சுடவும் தோட்டா மேல் நோக்கி பாய்ந்தது. அஜய்யும் அவர்களிடம் வந்து பிரகதியை விலக்க, அஜய் வெளியே ஓடும் போதே இன்பா அர்ஜூனை அழைத்திருப்பாள். அனைவரும் அங்கு வந்தனர்.

இருவரும் துப்பாக்கியை வைத்து சண்டை போட மீண்டும் துப்பாக்கி தோட்டா பாய்ந்தது. அனைவரும் அதிர, அந்த கிளிகள் இரண்டும் பிரகதி முன் விழுந்தது. அஜய்யுடன் சண்டை போடுபவனை ஒருவன் தூரத்திலிருந்து சுட, அவன் சரிந்தான்.

பிரகதி அந்த கிளிகளிடம் வந்து, அதன் இரத்தத்தை தொட்டு பார்த்து கண்ணீருடன் நின்றாள். அஜய் அவனை பார்த்து அதிர்ந்தாலும் சினமுடன் பிரகதியிடம் வந்து அவள் கன்னத்தில் அறை கொடுத்தான்.

அவள் கன்னத்தில் கை வைத்து அழுதுகொண்டே கிளியை தான் பார்த்தாள். வீட்ல யாரிடமும் சொல்லாமல் எதுக்கு வெளிய வந்த? ஒரு நிமிசத்துல உயிரே போச்சு கத்தினான்.

கிரிஷ்..எதுக்கு அந்த பொண்ண அடிச்ச? அவன் அம்மா கேட்டுக் கொண்டே பிரகதியிடம் வந்தார்.

அவனை பார்த்த பிரகதி, நான் என்ன செஞ்சா உங்களுக்கென்ன? என்னை பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை. என்னிடம் எதையும் எதிர்பாக்காதீங்க..என்று அவள் கோபத்தில் பேசி விட, அஜய் அவள் கழுத்தை பிடித்து..நான் ஏற்கனவே சொன்னேன். உன்னை தொடமாட்டேன்னு. எப்பவும் அது தான்..

சார்..என்று அபி, அர்ஜூன், கவின் அவனை தடுத்து கையை எடுத்து விட்டனர்.

அவன் அப்பா அவனை அடித்து, அது என்ன பொம்பள பிள்ள கழுத்தை பிடிக்கிற? சத்தமிட்டார்.

அவ என்ன பேசுறா பாருங்க.

விருப்பமில்லைன்னா..விடுடா அவன் அப்பா சொல்ல, எப்படி அவ செத்து போறதை பார்க்க சொல்றீங்களா? சினத்துடன் கேட்டான்.

இன்பா பிரகதியிடம் வந்து, உனக்காக மட்டும் அவன் இங்க வரலை என்று அஜய்யிடம் என்ன பிரச்சனைன்னு சொல்லுடா..என்று கத்தினாள்.

உனக்காகவா? என்று அர்ஜூன் இன்பாவை பார்த்தான்.

அர்ஜூன்..அஜய் சார் பிரகதிக்கிட்ட பிரபோர்ஸ் பண்ணாங்க என்றாள் பவி.

எல்லாரும் அவனை பார்க்க, அவன் போன் ஒலிக்க, பெருமூச்செடுத்து விட்டு போனை எடுத்தான்.

அஜய்கிருஷ்ணா..அந்த பொண்ணை முடிக்க விட மாட்டிங்கிறீங்களே? அவன் சொல்ல, அஜய் மெலிதான புன்னகையுடன்..உன்னோட ஆள நீயே கொல்ற மாதிரி ஆகிடுச்சுல்ல..காத்திரு உன்னை நீயே கொன்னுக்கனும்ல.

என்னை நான் கொல்லப் போறேனா? அதை அப்புறம் பார்க்கலாம். உன்னோட ஆளுங்கள விடுவேன்னு நினைக்கிறியா? இப்பவே கூட ஒருத்தனை.. என்று சொல்ல, அர்ஜூன் எல்லாரும் இங்க இருக்காங்களா? அவன் கேட்க, அர்ஜூனும் அனைவரையும் பார்த்தான்.

இருக்காங்க சார் என்றான் அர்ஜூன்.

அந்த பக்கம் குணசீலன் சிரிப்பு ஒலிக்க, உச்..என்ற அஜய்..எதுக்கு சிரிக்கிற? எரிச்சலா இருக்கு என்று முகத்தை கடுகடுவென வைத்து கூறினான்.

அட..அங்க இருக்கிறவங்கள்ள நான் சொல்லை கிரிமினல் லாயர் சார். உன்னோட அசிஸ்டென்ட்டும் உனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை என்றவுடன் எழுந்தான் அஜய்.

ஹேய்..வேண்டாம். என் பசங்க மேல கையை வைக்காத..

சாரி டியர் லாயர் சார். ஏற்கனவே இரண்டு பேர் காலி..என்றான்.

ஏய்..என்ன சொல்ற? சீறினான் அஜய்.

உன்னோட அசிஸ்டென்ட்டுக்கு கீழ ஏழு பேர் இருக்காங்கல்ல..அதுல பார்வதி பொண்ணு ரொம்ப அழகாக இருக்கு. என்னோட ஆட்களுக்கு பணம் போதுமாம். அதான் இனி பொண்ணுங்கல..அவங்களுக்கு குடுக்கலாம்ன்னு பார்க்கிறேன்.

வேண்டாம்..உனக்கு என்ன வேண்டும்? கேளு..

எனக்கா எனக்கு..அர்ஜூனோட ஆள் வேண்டும். தர முடியுமா? அவன் கேட்க, அஜய் அர்ஜூன் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே முடியாது என்றான்.

அர்ஜூன் அவனிடம் போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டான். ஆமா..அந்த பொண்ணு தலையில துப்பாக்கி வச்சா உனக்கென்னடா இவ்வளவு கோபம் வருது. என்ன லவ்வா? எல்லாரும் ஜோடி ஜோடியா சுத்துறீங்க? எனக்கு பார்த்தாலே கடுப்பா இருக்கு. எப்படிடா உசார் பண்ணுறீங்க? அவன் கேட்க..இன்பாவை பார்த்த அபி ஓடி வந்து அவள் வாயில் கை வைத்து வேண்டாம் என்று தலையசைத்தான்.

எல்லாரும் அவர்களை பார்த்தனர். அஜய் பக்கத்தில் நின்ற தாரிகா கையிலிருந்து போனை வாங்கி, அவன் சொன்ன இருவர் யார் என பார்த்தான்..

அவனோட ஜூனியர்ஸ். இப்ப தான் தொழிலுக்குள் கால் எடுத்து வைத்தவர்கள். ஒரு பொண்ணும் பையனும்..அந்த பொண்ணை கற்பழித்து கொலை செய்த செய்தியை பார்த்து அஜய் கொதித்து விட்டான்.

அர்ஜூனிடம் போனை பிடுங்கி..அவங்க சின்ன பசங்கடா. இப்ப தான் ஃபீல்டுக்குள்ளவே வந்தாங்க. அதுக்குள்ள என்ன பண்ணிட்ட? கண்கலங்கி கோபமுடன் பேசினான்.

அஜய் கிருஷ்ணா..உன்னை எல்லாரும் என்னமோ பெருசா பில்டப் பண்ணாங்க. விட்டா அழுதுருவ போல. தயாரா இரு அழணும்ல. அடுத்து அந்த பொண்ணு பார்வதி தான்..பசங்க அவ பின்னாடி தான் போய்கிட்டு இருக்காங்க.

ஏய்..எதுவும் செஞ்சுறாத?

நான் செய்யக்கூடாதுன்னா..எனக்கு மூவரில் ஒருவராவது வேண்டும் என்றான் அவன்.

மூவரா? அஜய் அர்ஜூனை பார்த்தான்.

கமிஷ்னர் பேட்டிய பார்த்துருப்பன்னு நினைக்கிறேன். அவர் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்ன என்னோட டார்லிங், ஸ்ரீ, எல்லாரும் ஒரே இடத்துல தான் இருக்கீங்கல்ல..டாக்டர் பையனோட அம்மா.

மெண்டலா உனக்கு? அஜய் கேட்க..

மெண்டலா? இல்லையே. நான் நல்லா இருக்கேன். இப்ப கூட என் ஆண்மையை நிரூபிக்கும் வேலையில் தான் இருக்கேன்.

அர்ஜூன்..அவன் என்ன சொன்னான்? ஸ்ரீ கேட்க,

நீ என்ன சொன்ன? அவன் ஸ்ரீ வேண்டும்ன்னு சொல்றான். இதுக்கு என்ன அர்த்தம்? நிவாஸ் சத்தமிட குணசீலன் போனை வைத்து விட்டான்.

போனை வாங்கிய அஜய், அவன் அசிஸ்டண்டுக்கு போன் செய்து கொண்டே ஓட, இன்பா அவனை நிறுத்தி என்ன செய்யப் போற? கேட்டாள்.

வழிய விடு என்றான்.

சொல்லிட்டு போ..

நான் சொல்லணுமா? எதுக்கு சொல்லணும்?

டேய், நான் உன்னோட ப்ரெண்டு.

அது இப்ப தான் உனக்கு தெரியுதா? பிரச்சனைன்னு…நீ சொல்லவேயில்லை. நீயெல்லாம் என்ன ப்ரெண்டு? யாழுவோடது கொலைன்னு தெரிஞ்சும் சொல்லாம இருந்திருக்கீங்க. உன்னை தொந்தரவு செஞ்சிருக்கானுக. அதையும் சொல்லலை. சந்துரூவும் சொல்லலை. இதுல ப்ரெண்டுன்னு சொல்றீங்க?

அவன் போன் ஒலிக்க..அஜய் போனை எடுத்தான்.

சரண், எல்லாரும் என்னடா பண்றீங்க? சினமுடன் கத்தினான்.

பாஸ்..வைசுவோட குடும்பம்..என்று அழுதான்.

அவ குடும்பத்துக்கு என்ன? கோபமாகவே பேசினான்.

அவங்க அக்காவுக்கு நிச்சயமாகி இருந்தது. அவங்களுக்கு இன்னும் ரெண்டு நாள்ல மேரேஜ். அவள பத்தி தெரிஞ்சு மேரேஜை கேன்சல் பண்ணிட்டாங்க. அதனால..

போதும்..சொல்லாத..என்று வாயில் கை வைத்து கண்ணீருடன் பெருமூச்சு விட்டான்.

சித்தப்பூ..என்று அஷ்வின் அஜய்யிடம் வந்தான். அண்ணி அஷ்வினை கூட்டிட்டு உள்ள போங்க. எல்லாரும் போங்க என்று கத்தினான் அஜய்.

இன்பா அவனிடம் வர, உள்ளே போ..சத்தமிட்டான். அவள் செல்ல பிரகதி அவனை பயத்துடன் பார்த்துக் கொண்டே சென்றாள். பசங்க எல்லாரும் இருந்தனர். அப்பா நீங்க போங்க..என்றான்.

பாஸ்..சரண் அழைக்க, வெயிட் பண்ண முடியாதா? கர்ஜித்தான்.

சாரி பாஸ்..

கிரிஷ், எது செஞ்சாலும் யோசித்து செய் என்று அவர் அப்பா சென்றார்.

சரண்..நம்ம ஆட்கள் எல்லாரும் இரண்டு வாரத்திற்கு நம்ம ஆபிஸ்ல தான் தங்கணும். இப்ப வந்த நம்ம ஜூனியர்ஸ் சேர்த்து தான். யாரும் வெளியே போக கூடாது. என் அறையை தவிர எல்லா இடத்தையும் யூஸ் பண்ணிக்கோங்க.

பாஸ், குளோரியா மேம் கேஸ்?

அவங்க கேஸ் டீட்டைல்ஸ் தயாரா வச்சிரு..எல்லாமே தயாரா இருக்கா? கேட்டான்.

இருக்கு பாஸ். இன்று ஹியரிங் இருக்கு.

இன்றே முடிச்சிருவீங்களா?

முடிஞ்சிரும்ன்னு நினைக்கிறேன்.

அது என்ன நினைக்கிறேன்?

பாஸ்,..என்றான்.

நீ இன்றே முடிக்கலைன்னா. இந்த கேசை மாத்தி விட்ருவேன். நீ தான கஷ்டப்பட்டு எல்லா ஆதாரத்தையும் சேர்த்து வச்சிருக்க?

நீ முடிக்கலைன்னா சேலரிய மறந்துடு..

பாஸ்..

பாருவை தவிர எல்லாரையும் இப்பவே ஒருமணி நேரத்திற்குள் வர வைக்கிற..

பாஸ் பாரு?

அவ கூடவே இருந்தேன்னா பிரச்சனை இருந்திருக்காது. அவளை ஏற்கனவே பின் தொடர்ந்துகிட்டு தான் இருக்காங்க. கஷ்டம் என்றான் அஜய்.

பாஸ்..என்று பதறினான் சரண்.

பார்க்கலாம் என்று போனை வைத்தான்.

அர்ஜூன்..ஆரம்பத்திலிருந்து எல்லாவற்றையும் சொல்லுங்க.. எல்லாமே..என்று கௌதமை பார்த்தான். எல்லாருமே சொல்லுங்க என்றான்.

அனைவரும் நடந்ததை சொல்ல..நான் அழைக்கும் போது வாங்க. முதல்ல ஹாஸ்பிட்டல்ல இருக்கால்ல அந்த பொண்ணோட புருசனை தேடி கண்டிபிடிச்சு அந்த பொண்ணுகிட்ட விடுங்க.

கொலைகாரன் சம்பந்தப்பட்ட பசங்க எல்லாரும் சேர்ந்து பேசி மூன்று குழுவா பிரிஞ்சிக்கோங்க. ஒரு குழுவினர் சக்தியை கண்டுபிடிங்க. மற்றவர்..சத்யா வீட்டுக்கு போங்க. மற்றவர் பெண்களுக்கு பாதுகாப்பாக வீட்டிற்கு ஒருவர் இருக்கணும். கவனமா இருங்க..ஆள் பத்தலைன்னா..

சார்..அதெல்லாம் நம்ம ஊர் பசங்க இருக்காங்கல்ல..அதுவே போதும் என்றான் அகில்.

ஊர் பாதுகாப்புக்கு சொல்லலாம். தீனா சாரை உங்களுடன் சேர்க்க வேண்டாம் என்ற அஜய்..நான் சென்னை கிளம்புகிறேன் என்றான்.

சார், தனியா போறது ஆபத்து. கையில் கட்டுடன் வேற இருக்கீங்க அபி சொல்ல..ம்ம்..தெரியும். பார்த்துக்கலாம் என்றான் அஜய்.

சார், உங்க கூட வேலை செய்றவங்களுக்காக தான போக போறீங்க? சந்துரூ மாமா பார்த்துப்பாங்க என்றான் அர்ஜூன்.

அப்படியா? என்று அஜய் அர்ஜூன் அருகே வந்து, நீ இப்ப எல்லாத்தையும் சொல்லீட்டியா? என்று புருவத்தை உயர்த்தினான்.

அர்ஜூன் கவினை பார்த்தான். அடப்பாவி என்னை போட்டு விட்ருவான் போல..என்று கவின், சார் நாங்க கிளம்புறோம் என்று நகர, அஜய் அவன் சட்டையை பிடித்து..எங்க தம்பி போறீங்க?

உங்களுக்கும் தெரியும் போல? என்று வினவ..அய்யோ சார், எனக்கு எதுவுமே தெரியாது. ரொம்ப பசிக்குது. விட்டீங்கன்னா..சாப்பிடுவேன் கவின் சொல்ல, அவனை விட்ட அஜய்..

எப்ப யாழுவை கொன்னானுகன்னு எனக்கு தெரிய வந்ததோ? அப்பொழுதே இந்த பிரச்சனையில உள்ள வந்துட்டேன். ஜஸ்ட் விசாரிக்க மட்டும் தான் செய்தேன். சந்துருவை என் ஆள் ஒருவன் பாலோ பண்ணான்..அதுல எனக்கு எல்லாமே தெரிஞ்சு போச்சு. இன்பாகிட்ட சொல்லலையோ?

ஆமா சார், யாருக்கும் தெரிந்தால் கொலைகாரனுக்கும் தெரிஞ்சிடுமே? அர்ஜூன் சொல்ல, நல்லா யோசிக்கிற. ஆனால் இப்ப சந்துருவே ஆபத்துல தான் இருக்கான்.

சார்..என்றான் அர்ஜூன். நோ..பிராபிளம்..என்ற அஜய், அவனிடம் பேசலாமா? என்று சந்துரு எண்ணிற்கு அழைக்க..ஒருவன் போனை எடுத்து பாஸ் என்றான்.

டேய், வீடியோ காலுக்கு வா..என்ற அஜய் சந்துரூவை காட்டினான். அனைவரும் அதிர்ந்து அவனை பார்த்தனர். சந்துரு கை கால்கள் கட்டப்பட்டு இருந்தது.

டேய் அஜய், என்ன பண்ணீட்ட? நான் போகணும்..மெண்டல்..மெண்டல்.. சந்துரூ திட்டி விட்டு, என்னை எதுக்குடா கடத்தி வச்சிருக்க?

பொண்ணை கடத்தி வச்சாலும் பிரயோஜம். கொஞ்சம் சைட்டாவது அடிக்கலாம்? என்று சந்துரூ சொல்ல, அர்ஜூன் போன் முன் வந்து அவனை முறைத்து பார்த்தான்.

அர்ஜூன்..நீ அஜய்யுடன் என்ன செய்ற?

டேய், என் மச்சானையும் கடத்திட்டியா? அவன் புலம்ப.. இன்பா சிரிப்பு சத்தம் கேட்டது. எல்லாரும் நேராக பார்க்க..அறையின் சன்னல் வழியே எல்லா பொண்ணுகளும் வரிசையாக நின்று இவர்களை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அவங்க பார்ப்பதை பார்த்தவுடன்..அஜய்..இரு நானும் அவனை பார்க்க வாரேன் என்று இன்பா குதித்துக் கொண்டு செல்ல..எல்லாரும் வெளியே வந்தனர் பிரகதியை தவிர.

இன்பா போனை வாங்கி சந்துரூவை கிண்டல் செய்ய, அபி அவளை முறைத்துக் கொண்டிருந்தான். அஜய் எங்க இருக்க? சந்துரூ கேட்டான்.

நான் என் தம்பி மேரேஜூக்கு வந்தேன். அதை விடு..உன் பக்கத்துல இருக்கிறவங்க யாருன்னு தெரியுமா? அஜய் கேட்க, எனக்கு பாடிகார்ட்ஸா?

அஜய் புன்னகையுடன், கொலைகாரனுக..என்றான்.

சார்..என்று அனைவரும் கோரசாக..நீ என்ன செய்றன்னு தெரிஞ்சு தான் செய்றியா? இன்பா சீரியசானாள்.

தெரிஞ்சு தான் செய்றேன். போலீஸை நம்ப முடியாது..சோ..என்னோட கேஸ்ல ஆஜரானவங்க தான். ஆனால் சந்துரூ அதிகமா பேசிறாத. போட்ருவானுக..என்றான் அஜய்.

அடப்பாவி..நண்பனாடா நீ? கொல்ல ஆளயே செட் பண்ணிட்ட.. கொலைகாரா..சந்துரூ சத்தமிட்டான்.

இது ரிஸ்க் இல்லையா? அர்ஜூன் கேட்க, ம்ம். இல்லை சும்மா..தப்பிக்க முயற்சி செய்ய மாட்டானல..அதான்.

அர்ஜூன், நான் கேட்டதற்கு பதில்? நிவாஸ் கேட்க, அது..அவன் என்று அர்ஜூன் தயங்கினான். நிவாஸிற்கு புரிந்தது. தாரிகா போன் முன் வந்து சந்துரூவை பார்த்து,

நல்லா தானே இருக்கீங்க? அவள் கேட்க, ஓ.கே தான்னு நினைக்கிறேன். அஜய் விட்ற மாட்டான்.

விட்ற மாட்டானா? நான் சென்னை வருவேன்ல. நல்லா விடுறேன் பார்க்கலாம் என்று கேலி பேசிய மறுநொடி எதுக்கும் கவனமா இரு.

டேய்..கை, காலை அவிழ்த்து விட சொல்லுடா.

முடியாது. நீ ஓடிட்டா.. வெளிய உன்னை போட ஒருவன் தயாரா இருக்கான் என்ற அஜய் சாரிடா..ரெண்டே வாரம் தான்.

என்னது ரெண்டு வாரமா? இப்படியே இருந்தா நானே செத்து போயிருவேன்.

நான் எங்கேயும் போகலை. அவிழ்த்து மட்டும் விட சொல்லுடா. நான் உன்னோட ப்ரெண்டுடா. இப்படி ட்ரீட் பண்ற? எனக்கு கஷ்டமா இருக்கு சந்துரூ சொல்ல, ஏய் கேடி, உன்னை பத்தி தெரியாதா? இன்னும் ட்ரை பண்ணாலும் என்னிடம் நடக்காது.

ஏதோ பொண்ணுகிட்ட பேசுற மாதிரி பேசுற?

அஜய் கண்கள் பிரகதி அறை பக்கம் செல்ல, அவள் உள்ளே இருப்பது போல் தெரியலை. எல்லாரும் பார்க்க அவளும் வெளியே தான் வந்தாள். அவள் யாரையும் பார்க்காமல் குட்டி பாக்ஸ் போன்ற அட்டையை எடுத்துக் கொண்டு அவர்களை தாண்டி சென்றாள்.

Advertisement