Advertisement

அத்தியாயம் 129

மெலியதான இளம்பச்சை நிற பிளைன் புடவையில் அறைக்குள் சென்றாள் தியா.  சத்யாவும் அதே நிறத்தில் சட்டையும் வேஷ்டியும் உடுத்தி இருந்தான். உள்ளே வந்து கதவை தாழிட்டு விட்டு அவன் காலில் விழுந்து வணங்க, அவன் தூக்கி கூட விடவில்லை. நிமிர்ந்து அவனை பார்த்து விட்டு எழுந்தாள்.

பாலை அவனிடம் நீட்டினாள். அங்க வை என்றான் எரிச்சலாக.

மாமா..என் மேல கோபமா இருக்கீங்களோ? என்று அவன் கையை பிடித்தாள். அவன் கையை எடுத்து விட்டு எழுந்தான். அவளும் எழுந்து அவன் பின் சென்றாள். அவன் கப்போர்ட்டில் இருந்து லேப்பையும், பென்டிரைவையும் எடுத்து கொடுத்தான்.

மாமா..லேப் வச்சிருக்கீங்களா? எனக்கா? இதுல என்ன இருக்கு? என்று ஆர்வமாக போட்டு பார்த்தாள். அதில் தியா தோழி அவளை மிரட்டிய அனைத்து புகைப்படம், வீடியோ இருந்தது. தியா கண்கலங்க..நீங்க எப்படி அவளிடமிருந்து வாங்குனீங்க? எனக்கு இப்ப தான் நிம்மதியா இருக்கு..என்று அவனை அணைத்தாள். அவன் எவ்வித உணர்ச்சியும் இல்லாது நின்றான்.

மாமா, என்னாச்சு? பேசுங்க மாமா என்று நிமிர்ந்து பார்த்தாள். அவன் அவளை விலக்கி விட்டு அவன் போனை காட்டினான்.

இதுல..என்னது மாமா? என்று அவள் வீடியோவை பார்த்து அதிர்ந்து கீழே விட்டாள்.

மாமா, இது நான் இல்லை. அவன்..அவன்..என்று தயங்க,..சீற்றமுடன் அவள் கழுத்தை பிடித்தான் சத்யா.

மாமா வலிக்குது. விடுங்க. நான் எதுவுமே செய்யலை. அவனிடம் நான் பேசியது கூடயில்லை மாமா என்று திணறினாள்.

சக்தி தோழனாகிய ஒருவனுடன் தியா உடலுறவில் ஈடுபட்டது போல் இருந்தது. அவளை விட்டு, நீ இல்லைன்னா? நீ எப்படிடி அவனுடன் இருந்த? கேட்டான்.

மாமா, உண்மையாகவே நானில்லை. நம்புங்க மாமா அழுதாள்.

வீடியோ தெளிவா இருக்கு. அது நீ தான். நேற்று இரவு தான் வந்தது. நான் கூட நீ இந்த மாதிரியெல்லாம் செய்ய மாட்டன்னு நினைச்சேன். ஆனா ச்சீ..நீ இவ்வளவு கேவலமா இருப்பன்னு நினைக்கவேயில்லை. அவள் கதறி அழுதாள்.

அது நானில்லை. நீங்க ஏன் நம்பமாட்டேங்கிறீங்க? சத்தமிட்டாள்.

இங்க பாரு..இனி உன்னோட சத்தம் இந்த வீட்ல வரவே கூடாது. நான் நினைச்சிருந்தா இந்த கல்யாணத்தை வீடியோவை வைத்து நிறுத்தி இருப்பேன். ஆனால்.. கிழவிக்காக தான் பார்க்கிறேன். உனக்கு ஆம்பளைங்க உடம்பு அவ்வளவு முக்கியமா போச்சுல்ல..ச்சீ,..உன்னை பார்க்கவே பிடிக்கலடி. ஆனால் உனக்கு தான் பிடிக்குமே? என்று அவன் ஆடையை களைய மாமா..வேண்டாம் மாமா. அது நானில்லை. அவசரப்படாதீங்க..

அவசரமா? நானா அவசரப்படுறேன்? நீ..நீ தான்டி வேரொருவனுடன் அவசரப்பட்டுருக்க..

இல்ல மாமா..என்று கதறி அழுதாள். அவன் அவளை நம்பத் தயாராக இல்லை.

சரி..வா. ஆரம்பிக்கலாம் என்று அவன் அவளருகே வர, ப்ளீஸ் மாமா, வேண்டாம்.

இன்று இதுக்காக தான எல்லாரும் நம்மை தனியே விட்டு போயிருக்காங்க. தப்பில்லை..என்றான்.

மாமா, நாம விருப்பப்பட்டு நடக்கணும்.

ம்ம்..ம்ம்..விருப்பப்பட்டு தான அவனோட படுத்த?

இப்படி பேசாதீங்க மாமா. அது நானில்லை.

நீ இல்லாமல் அந்த மூஞ்சி யாருடி? என்று அவளது புடவையை பிடித்து இழுத்தான். அவள் அழுது கொண்டே அறைக்கதவை திறந்து வெளியே வந்தாள்.

மாமா..நம்புங்க மாமா. இப்படி பண்ணாதீங்க. ரொம்ப கஷ்டமா இருக்கு என்று அழுதாள்.

உனக்கு எதுக்குடி கஷ்டமா இருக்கு? இதை அவனுக வெளிய அனுப்பினா..எனக்கு தான்டி அவமானம் என்று அவளது கையை பிடித்து இழுத்தான்.

மாமா..விடுங்க..விடுங்க..அவள் கதற கதற, தரதரவென அவளை அறைக்கு இழுத்து சென்று கதவை தாழிட்டான்.

ஏன்டி? அவனுடன் படுக்கும் போது மட்டும் சுகமா இருந்ததோ? ரொம்ப உணர்ச்சி வசப்பட்டிருந்த. அதே மாதிரி இப்ப நீ என்னோட இருக்கணும். நான் உன்னோட புருசன் தான. எவனோ ஒருவன் உன்னை இந்த அளவு எடுத்துக்கிட்டான்னா. நான் அதை விட தான எடுத்துக்கணும்.

அழுது ஆர்ப்பாட்டம் செய்த தியா உறைந்து அவனை பார்த்தாள். அவன் அவளை தூக்க அமைதியாக கண்ணை மூடிக் கொண்டாள். அவளை படுக்கையில் தூக்கி போட்டான். அவள் பயந்து இருக்க அவள் ஆடையை களைந்து உடலோடு உடல் உரசி..அவளுள் உயிர்த்தேனை எடுத்துக் கொண்டே அவளை பார்த்தான். அவன் கண்களில் கண்ணீரை தவிர எந்த உணர்வும் காட்டாமல் இருந்தாள். அவனுக்கு கோபம் வந்தது.

அச்சோ..உனக்கு இந்த புருசனோட காதல் தெரியலையாடி. அவனுடையது தான தெரியுது .அதான் உணர மாட்டேங்கிற என்று ஆடை மறைக்கும் பகுதியில் அவளை கடித்து காயத்தை ஏற்படுத்தினான். அவள் வலியால் வாயை மூடி கத்த..இதை உன்னால் உணர முடியுதா?

மறுபடியும் உணர முடியுதான்னு பார்க்கலாமா? என்று அவளை சீற்றமுடன் எடுக்க..வலி தாங்க முடியாமல் மயங்கினாள். ஆனாலும் அவன் அவளை விடுவதாக இல்லை. அவன் களைத்து படுத்துறங்கினான். அவளுக்கு முழிப்பு தட்டியது.

மாமா, நானில்லை மாமா..என்று முணுமுணுத்தவாறு எழ முயன்றாள். அவளால் எழவே முடியவில்லை. அவனை பார்க்க, பச்ச பிள்ளை போல் அவள் மீது காலை போட்டு அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தான். அவளால் உடல் வலி தாங்க முடியவில்லை.

ஏம் மாமா, என்னை நம்ப மாட்டேங்கிறீங்க? என்று மணியை பார்த்தாள். காலை ஐந்தை தாண்டியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆட்கள் வந்துருவாங்கல்லே..என்று அவனிடமிருந்து நகர்ந்தாள். அழுது கொண்டே அம்மா..வலி தாங்க முடியலையே? நான் எப்படி வலியை மறைப்பது? என்று எழ முடியாமல் படுக்கையில் இருந்து புரண்டு கீழே விழுந்து மெதுவாக சுவற்றை பிடித்து நகர்ந்து குளியலறையில் விழுந்து தண்ணீரை திறந்து விட்டு அழுது கொண்டு தண்ணீரை ஊற்றினாள். அவனது பற்தடம் பதிந்துள்ள உடலில் அங்கங்கு எரிந்தது. அழுதுக் கொண்டே குளித்தாள். குளியலறையிலே சாதாரணமாக நடந்து பார்த்தாள். அவளால் ஓரளவு நடக்க முடிந்தது. அவள் ஆடையை மாற்றி விட்டு வெளியே வந்தாள். சமையற்கட்டில் பாத்திர சத்தத்தை கேட்டு கண்ணாடி முன் நின்று அவன் பற்தடம் எங்கும் தெரியுதா? எனப் பார்த்தாள். புடவையை மெதுவாக களைத்து காயம்பட்ட இடத்தில் மருந்தை போட்டாள். பின் ஆடையை சரி செய்து விட்டு கதவருகே சென்றாள்.

இங்க வாடி..என்று சத்தம் கேட்டு திடுக்கிட்டு வேகமாக கதவை திறந்து வெளியே சென்றாள்.

எனக்கு நேரமா கிடைக்காது. இனி நீ என் கையில் பொம்மை தான் என்று எழுந்தான். அவள் அத்தை தயாராக டீயை வைத்திருந்தார்.

தயாராகிட்ட போல..என்று தியாவை பார்த்தார். அவள் வெட்கப்படுவது போல் நடிக்க, புன்னகையுடன் இந்தாம்மா அவனுக்கு கொடும்மா என்றார்.

அவளை எதிர்பார்த்து அவன் காத்திருக்க..இருபக்கமும் திறந்து விட்டு, அவனிடம் டீயை நீட்டினாள். கதவை பூட்டிட்டு வா..என்றான். அவள் ஏதும் பேசாமல் மேசையில் வைத்து விட்டு, அவன் அம்மாவிடம் சென்று நின்று கொண்டாள்.

சத்யா சீக்கிரம் கிளம்பி வா. கோவிலுக்கு போகணும். சின்னவ ஸ்கூல்லுக்கு போகணும்? வா..எழுந்திரு..இங்க என்னம்மா பண்ற? சீக்கிரம் அவனை குளிக்க உள்ளே அனுப்பு..என்றார்.

அத்தை..அவள் தயங்கிக் கொண்டு..கோவிலுக்கு போகணும்ன்னு சொன்னீங்க? நான் இங்க வேலையை பார்த்துக்கிறேன். அவரை குளிக்க அனுப்பிட்டு வாங்க அத்தை என்றாள் மெதுவாக.

ஏன்ம்மா?

அத்தை அவரு..என்று வெட்கப்பட்டாள்.

சரிம்மா..நீ இங்க பார்த்துக்கோ. நான் வாரேன் என்று அவர் சென்றார். அவன் டீயை குடித்து விட்டு எழுந்தான். படுக்கையை சரி செய்து கொண்டிருக்க..இரத்தத்தை பார்த்து பதறினார். அதை அவர் உற்று பாக்கும் போதே கவனித்த சத்யா ப்ளேடை எடுத்து அவன் கையிலே கிழித்தான்.

இரத்தமாடா? என்று அவனை பார்த்து பதறினார்.

சத்யா..இரத்தமா இருக்கு? என்று அவர் அலற..சத்தம் கேட்டு வெளியேயிருந்த அவன் அப்பா ஓடி வந்தார். தியா அவளறையில் கையில் இரத்ததுடன் சத்யாவை பார்த்து பதட்டமுடன் ஓடி வந்து, அவளது பையை திறந்து மருந்தை எடுத்தாள். அவன் அம்மா அவரது புடவையை கிழித்து கட்ட,

அத்தை இப்ப கட்டாதீங்க? என்று அவரிடமிருந்து வாங்கி இரத்தத்தை துடைத்து விட்டு..அவள் போட்டிருந்த மருந்தை போட்டாள். அவன் கையில் நீளமான கீறலாக இருந்தது. பஞ்சு, பேன்டேஜை எடுத்து சுற்றினாள். அவளது கண்ணீர் அவன் கையில் விழுந்தது. அவன் அவளை பார்த்துக் கொண்டே நின்றான். இரத்தம் எப்படி படுக்கையில் வந்திருக்கும்? என்று அவன் அவளை பார்த்தான். அவனுக்கு நினைவு வந்தது. அவள் உணர்வில்லாதது போல் இருக்க கோபத்தில் அடித்தான். தொடர்ந்து அடித்ததால் வாயிலிருந்து வந்த இரத்தம் வந்தது. அது தான் படுக்கையில் இருந்தது.

சத்யா அம்மா அவனிடம், ரொம்ப வலிக்குதா? ஹாஸ்பிட்டல் போகலாமா? கேட்டார்.

அம்மா, ஒன்றுமில்லை. கப்போர்ட்டை திறக்கும் போது இந்த முனை கிழித்து விட்டது என்று காட்டியவன்..நேரமாகுது போய் தயாராகுங்க என்று சொல்ல, அவன் அம்மா அவனை பார்த்துக் கொண்டே சென்றார்.

சின்னப்பிள்ளையாடா நீ? கவனமா இருக்க வேண்டாமா? அப்பா திட்டிக் கொண்டே சென்றார். தியாவும் செல்ல..எனக்கு ஆடையை எடுத்து கொடு என்றான்.

அவன் அம்மா திரும்பி இருவரையும் பார்த்தார். என்னம்மா?

நான் எடுத்து கொடுத்தால்..எனக்கு எடுக்க தெரியாதான்னு கேட்ப? என்று தியாவை பார்த்தார்.

அம்மா, அது அப்ப. அதான் இப்ப பொண்டாட்டி வந்துட்டால்ல..என்று அவன் சொல்ல, அவள் பயந்து விழித்தாள்.

சீக்கிரம் வா..கோவிலுக்கு போகணும் என்று அழுத்தி சொல்லி விட்டு, யம்மா..எடுத்து கொடுத்துட்டு வேகமா வா. பொருட்கள் எடுத்து வைக்கணும். நாம குலதெய்வம் கோவிலுக்கு போகணும் என்று அவர் சென்றார். தியா அங்கேயே நின்றாள். அவளை பிடித்து இழுத்து அறைக்குள் பூட்டினான்.

ஸ்கூல் பொண்ணு தயாராகி வந்தாள். அம்மா..அண்ணா எங்க?

உன் அண்ணா..இனி அவன் பொண்டாட்டியை விட்டு வர மாட்டான் போல தெரியுது. ஒரே நாளில் மயக்கி வச்சிட்டா..என்று அவர் புலம்ப, சும்மா இருடி. சின்ன புள்ள முன்னாடி என்ன பேச்சு பேசுற? அவன் அப்பா திட்டினார்.

என்னமும் செய்யுங்க என்று அம்மா சொல்ல, அவங்க பெரிய பொண்ணு வந்தாள்.

அக்கா..அம்மா அண்ணியை எப்படி பேசுறாங்க பாரு என்றாள். உள்ளே தியாவை இழுத்த சத்யா..அவளது வாயை பார்த்தான். வாயின் உள்ளே கன்னசதைப்பகுதியில் காயம் ஏற்பட்டு இருந்தது. வாயில் வாசனையா? என்ன செஞ்ச? கேட்டான். அவள் அமைதியாக அவள் போட்ட மருந்தை காட்டினாள்.

ம்ம்..காஸ்ட்லில்ல..என்று அதனை பிடுங்கி விட்டெறிந்தான். நீ அவனிடம் பணம் வாங்கினாயா? கேட்டான். அவள் அழக்கூடாது என திடமாக இருந்தாள். ஆனால் முடியாது கண்ணீர் லேசாக எட்டி பார்த்தது. கண்ணீரை உள்ளிழுத்து அமைதியாக இருந்தாள்.

போ..என் முன் நிற்காதே என்று எரிந்து விழுந்தான். அவள் வேகமாக வெளியே வந்தாள். அவள் கண்ணில் லேசாக கண்ணீர் சொட்ட, அதை துடைத்து கட்டுப்படுத்தி சென்றாள். அவள் கண்ணீரை கண்ட சத்யாவின் மூத்த தங்கை அவனறையை பார்த்தாள்.

கிரிஷ்..கிரிஷ்..என்று அஜய் அறை தட்டப்பட அவன் எழுந்து மணியை பார்த்தான். மணி ஏழை தொட.டேய்..கிருஷ் அவன் அம்மா சத்தமிட்டார்.

அம்மா, எதுக்கு கத்திக்கிட்டே இருக்கீங்க? என்று கதவை திறந்தான்.

நம்ம குலதெய்வம் கோவிலுக்கு போகணும். தயாராகி வா..பொண்ணு மாப்பிள்ளையை கூட்டிட்டி போறாங்க. அரைமணி நேரத்துல வரணும் என்றார்.

வாரேன்ம்மா..என்று கதவை சாத்தி விட்டு தயாராகி கால் மணி நேரத்திலே வந்தான்.

அம்மா..டீ வேணும் என்றான். இதயா அம்மா உள்ளே இருந்தார்.

சாரி ஆன்ட்டி. எங்க வீடுன்னு மாதிரி உள்ள வந்துட்டேன்னு பேசிக் கொண்டே வெளியே செல்ல..பிரகதி மீது மோதி நின்றான். அவள் ஆன்ட்டி..ரெடியா தாங்க..தாங்க..என்று அவனை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றாள்.

தம்பி, சாப்பிடுங்க. அப்புறம் டீ சாப்பிடலாம். நீங்க கிளம்ப நேரமாகுதாம் அம்மா சொன்னாங்க என்று இதயா அம்மா சொல்ல, சாப்பாட்டை பிரகதி எடுத்து சென்றாள். அவள் பின் வந்த இதயா அவனை முறைத்து பார்த்துக் கொண்டே பசங்களுக்கு கிச்சன்ல என்ன வேலையாம்? கேட்டாள்.

ஏய்..சும்மா இருடி என்று அஜய்யை பார்த்தார். அவன் வெளியே வந்து எல்லாரையும் பார்த்தான்.

அம்மா..அண்ணி எங்க? அவள் சரியாக கிளம்பும் போது வந்துருவா?

அப்புறம் எதுக்கு என்னை அவசரப்படுத்துனீங்க?

நீ சாப்பிடுவேல்ல..

அண்ணி சாப்பிட வேண்டாமா?

நீயே பாரு..என்றார் அவன் அம்மா.

இன்பாவும் பவியும் எல்லாருக்கும் எடுத்து வைத்தனர். அஜய் பிரகதியை பார்த்தான். அவளும் அவனை பார்த்தான். இன்பா அவளை மறைப்பது போல் நிற்க இன்பாவை பார்த்தான். அவள் முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

எதுக்கு முறைக்கிற? கேட்டான். அவள் பதிலளிக்காமல் அஷ்வினை பார்த்தாள். அப்பொழுது தான் அவன் அண்ணி வெளியே வந்தார்.

அவள் சாப்பாட்டை பார்த்து ஒரு சாப்பாத்தியை எடுத்து சுருட்டி உதட்டை விரித்து சாப்பிட்டாள்.

இன்பா அவரை பார்த்து சிரிக்க, அண்ணி உட்காருங்க என்றான் அஜய்.

கிரிஷ் என்ன சொல்லிட்ட? நான் சாப்பிட அமர்ந்தால் தண்ணி கொட்டி விடும். ஆடை பாழாகிடும். லிப்ஸ்டிக் அழிந்து விடும் என்று அவள் பேசிக் கொண்டே செல்ல..பிரகதிக்கு விக்கல் வந்தது. அவனுக்குள்ள தண்ணீரை எடுத்து அவளிடம் வந்து கொடுத்தான்.

அவள் அவனை பார்த்து விட்டு சமையற்கட்டுக்கு சென்று தண்ணீர் எடுத்து குடித்தாள்.

பிரகதி..கிரிஷ் தான் தண்ணீர் தந்தான்ல. எதுக்கு விக்கிட்டு சமையலறைக்கு போற? என்று அவன் அண்ணி கேட்க, எனக்கு பழக்கமில்லாதவங்க கிட்ட எதையும் வாங்க மாட்டேன் என்றாள்.

என்ன அருமையான பதில் என்று கிண்டலாக அஜய் சொல்ல, அவள் முறைத்தாள்.

கிரிஷ், முதல்ல சாப்பிடு. கிளம்பணும். அப்புறம் நீ என்னமும் செய் அவன் அப்பா சொல்ல, அவன் பிரகதியை பார்த்து கண்ணடித்து அமர்ந்தான். இன்பா தண்ணீரை எடுத்து வந்து அவன் பக்கத்தில் டப்பென்று வைத்தாள்.

அய்யோ..அண்ணி. நீங்க இப்படி சாப்பிடுறீங்க? நான் காலேஜ்ல படிக்கும் போது ஒரு பொண்ணு புல் மேக் அப் போட்டு, எங்க சாப்பாட்டையும் எடுத்து வெளுத்து கட்டுவாள். அவள் லிப்ஸ்ட்டிக் அழியாது. அந்த பொண்ணிடம் கேட்டு அதை யூஸ் பண்ணுங்க..என்று இன்பாவை பார்த்து குறும்புடன் நகைத்தான். இன்பா அவனை பார்த்து முறைத்தாள்.

யாரு அந்த பொண்ணு? நம்பர் கொடு…பேசுறேன்.

அதான் பக்கத்துலயே இருக்காலே..என்று இன்பாவை பார்த்தான்.

இந்த பொண்ணா? மேக் அப் போடுவாளா? ஆனால் இவள் போட்டு பார்த்ததில்லை என்று சொல்ல, அழகா தான் போடுவா என்று அஜய் பிரகதியை பார்த்தான்.

ஹே..நீ போடுவியா? எந்த பிராண்டு யூஸ் பண்ணுவ?

இன்பா கோபமாக, என்னை யூஸ் பண்ணிக்க பார்த்த…கொன்னுடுவேன் என்று அவன் கழுத்தை பிடித்தாள்.

யூஸ் பண்ணுவேனா? என்று பிரகதியை பார்த்தான். அவள் இன்பாவை பார்த்தாள்.

ஓ..சொல்லிட்டாளா? என்று இன்பாவிடம், நான் எதுக்கு உன்னை யூஸ் பண்ண போறேன்? நான் தான் நேரடியாகவே சொல்லீட்டேனே?..என்ன டியர் என்று அவளிடம் வந்து..உன்னோட நம்பர் தாரீயா? கேட்டான்.

சாரி சார். என்னோட ப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் தவிர யாருக்கும் நான் தர மாட்டேன்.

அப்ப உன்னோட ப்ரெண்ட்ஸ் கிட்ட நம்பர் இருக்கு.

ம்ம்..இருக்கு. ஆனால் யாரும் தர மாட்டாங்க என்றாள்.

ம்ம்..பார்க்கலாமே? என்று கையை கழுவி விட்டு அமர்ந்தான்.

அவனுக்கு போன் வந்தது. அவன் போனையே பார்த்துக் கொண்டிருக்க, இன்பா எட்டி பார்த்தாள்.

இன்பா, இந்தா..” கஸ்டமர் கேர் சர்வீஸ்”ல பேசுற மாதிரி பேசி போனை கட் செஞ்சிடு என்றான்.

கோபம் தணிந்து இன்பா, அது யாருடா?

ம்..உன்னை மாதிரி ஒரு மெண்டல் கேஸ் என்றான்.

அவள் கோபத்தில் போனை எடுத்து, நீங்க யாருக்கு போன் செய்தீங்களோ? அவன் பக்கத்துல இருந்து இல்லைன்னு சொல்ல சொல்றான் என்றாள்.

ஓ..சார், விளையாடுகிறாரா? கொடுங்க பேசலாம் பொண்ணு சத்தம் கேட்டு, யாருடா அந்த பொண்ணு? கோபப்படுவான்னு பார்த்தா பாசிட்டிவ்வா எடுத்துக்கிறாங்க.

நான் தான் மெண்டல்ன்னு சொன்னேன்ல என்று போனை வாங்கி, மேம்..உங்க அப்பா கேஸை என்னோட அசிஸ்டென்ட் தான் பார்க்கிறான். எதுவாக இருந்தாலும் அவனுக்கு கால் பண்ணுங்க. நான் பேமிலியோட இருக்கேன் டிஸ்டர்ப் பண்ணாதீங்க.

உங்க அம்மா அப்பாவுடன் இருக்கீங்களா? நான் பேசவா?

ஹலோ..மேம், நீங்க தேவையில்லாம பேசுனீங்கன்னா நானே உங்க கேஸ்க்கு ஆப்போசிட் பார்ட்டியை வெற்றியடைய வச்சிருவேன். அப்புறம் நீங்க இருக்குற ரேஞ்ச் வேற மாதிரி இருக்கும் என்று முகம் கடுகடுக்க பேசினான்.

சரி..டியர். நான் ஈவ்னிங் கால் பண்றேன் என்றாள்.

போனை வைத்து விட்டு எழுந்து நகர்ந்தான்.

டேய், எங்க போற? இங்க வச்சே பேசு என்றார் அவன் அம்மா.

உச் என்று இவன் போன் செய்து, ஏன்டா..இன்னுமாடா டி குரூப்ஸ் கேஸை முடிக்கலை. அந்த பொண்ணு படுத்துறாடா.

சார், சாப்பிட்டு கிட்டு இருக்கேன். நான் அப்புறம் கால் பண்றேன்னு போனை அசிஸ்டென்ட் வைத்தான்.

டேய், போனை கட் பண்றியா? என்று கோபமாக மீண்டும் மீண்டும் போன் செய்தான்.

கிரிஷ் போதும். வா..கிளம்பலாம் என்று அம்மா சொல்ல, நீங்க போயிட்டு வாங்க. நான் வரலை என்று படியேறினான்.

உனக்கென்ன? அவங்க வேலைய சீக்கிரமா முடிக்கணும்? அவ்வளவு தான இன்பா கேட்க,

அதெல்லாம் செய்வானுக. நான் பக்கத்துல இல்லைல்ல அந்த தைரியம். நான் பேசிக்கிறேன்.

நீ பக்கத்துல இருக்கும் போது செய்வாங்க. இப்ப நீ என்ன கத்தினாலும் கேட்கவே மாட்டாங்க. அவங்க முடிச்சுட்டாங்கன்னா..போனஸ் பணம் தாரேன்னு சொல்லு செய்வாங்க.

அதெல்லாம் முடியாது. என்னால தேவையில்லாம பணமெல்லாம் கொடுக்க முடியாது.

நீ தான் டாப் டென்ல இருக்கேல்ல. பணம் வச்சிருப்பேல்ல.

அதுக்கு? நான் என் எதிர்கால தேவைக்காக சேர்த்து வைக்கிறேன் என்று பிரகதியை பார்த்தான்.

டேய்..போதும்டா. அவளுக்கு கோபம் வரப் போகுது? இன்பா சொல்ல, வரட்டும் நல்லது தானே. மூஞ்சிய இப்படி தூக்கி வச்சிருக்க மாட்டால்ல.. என்றான்.

பிரகதி கோபமாக அறைக்கு சொல்ல..சித்தப்பூ..என்னோட டியரை ஏதாவது சொல்லிட்டு இருக்க? என்று பிரகதி பின் ஓடினான்.

என்னது டியரா? என்று அவன் அஷ்வினை பார்த்தான்.

உனக்கு முன்னாடி என் பையன் கரெக்ட் பண்ணிடுவான் போல..அஜய் அண்ணி சொல்ல, வாங்க கிளம்பலாம் அவன் அப்பா எழ மற்றவர்களும் எழுந்தனர்.

பவி அகில் நம்பர் இருந்தா கொடேன் அஜய் கேட்க, எடுத்து காட்டினாள். அவன் பார்த்து விட்டு, சரி பிரகதி நம்பரை காட்டேன் என்று கேட்க, இதோ..என்று காட்டினாள்.

ஏய்..கொடுக்காத என்று பிரகதி வெளியே வந்தாள். அவன் ஒரு செகண்டு தான் பார்த்தான். இன்பா பவி போனை பிடுங்கினாள்.

அப்பாடா..பிரகதி சோர்வாக அமர்ந்தாள். அவளிடம் வந்த அஜய்..அவள் நம்பரை கூற, அதுக்குள்ள நம்பரை எப்படி? அதிசயித்து கேட்டாள் பவி.

ஏம்மா, நான் லாயர் எதையும் பிளான் பண்ணாமல் செய்வேனா? என்று போனில் ஏற்கனவே கேமிராவை ஆன் செய்திருந்ததை காட்டினான். பிரகதி..பவியை முறைத்து விட்டு,சார் நம்பரை அழிச்சிருங்க என்றாள்.

அச்சோ..அது முடியாதே? இங்க நல்லா பதிஞ்சிருச்சே..என்று நெஞ்சை பிடித்தான். அவள் கோபமாக நகர்ந்தாள். பிரகதி நில்லேன் என்று அவள் கையிலிருந்த போனை வாங்கி அதில் ஒரு ஸ்மைல்லி ஸ்ட்டிக்கரை ஒட்டினான்.

என்னடா இப்படி இறங்கிட்ட? உன்னை பார்த்தால் கிரிமினல் லாயர் மாதிரியா இருக்கு? இன்பா கேட்க, ஏன் நீ எதுவும் பண்ணலையா?

லவ் மட்டும் தான் பண்றோம் என்று பெருமூச்செடுத்து விட்டு, குடும்பத்துக்கு முன்னாடியே லவ் பண்ணிக்கிட்டு திரியிற? அவள் சொல்ல, அக்கா..அர்ஜூன் தான் சீனியர். எல்லாரையும் ஓவட் டேக் பண்ணி போற மாதிரி தெரியுது இதயா கூறினாள்.

கண்டிப்பா இல்லைன்னு தெரியும். அவன் எல்லார் முன்னும் டீஸ் பண்றான். உரிமையா நடந்துக்கிறான். அவ்வளவு தான். ஸ்ரீ ஓத்துக்கிறது கஷ்டம்..இன்பா சொல்ல,

பிரகதியை பார்த்துக் கொண்டே அஜய், அவனுக்கு சீக்கிரமே நல்லதா நடக்க போகுது என்றான்.

அஜய்..என்ன சொன்ன?

ஒன்றுமில்லை. நான் வாரேன் என்று போனை பிரகதியிடம் கொடுத்து விட்டு அவனும் அவன் குடும்பமும் கிளம்பினார்கள். அவள் அந்த ஸ்மைலியை தொட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

நேராக சத்யா வீட்டிற்கு வந்தனர். அவர்கள் ஓர் காரில் ஏற, அதே சமயம் அந்த பக்கம் காயத்ரி, மறை ராக்கியுடன் விளையாண்டு கொண்டே சென்றனர். இதை பார்த்து தியா அப்படியே நின்றாள். என்ன மறையையும் உன் பக்கம் இழுக்க நினைக்கிறாயா? ஆனால் அவன் உன் மாதிரியில்லை என்று அபாண்டமாக பேசினான் சத்யா.

தியா அவங்க பேமிலியோட போறதை தான் பார்த்து நின்றிருப்பாள். அவள் கண்ணீர் ஊற்றெடுக்க கண்ணீரை சுட்டி விட்டு காரில் ஏற, அவனும் அவளருகே அமர்ந்தான். அவர்கள் கார் தியா வீட்டில் நிற்க இறங்க நினைத்தாள். பாட்டி இவர்களுடன் ஏற, அவரை பார்த்து கண்ணீருடன் தியா அணைத்துக் கொண்டாள்.

என்னாச்சுடா, இன்னும் ஒரு நாள் கூட ஆகலை. கோவிலுக்கு போகும் போது இப்படியெல்லாம் அழக்கூடாது என்று அவளை அவர் அணைத்தார். அவளுக்கு பாட்டியின் அணைப்பு ஆறுதலாகவும் வலியை குறைப்பதாகவும் இருந்தது. பாட்டியின் தோள் மீது சாய்ந்து தூங்கிப் போனாள். அதை அமைதியுடன் பார்த்தான். அவன் தங்கை அவனை கவனித்துக் கொண்டே தான் வந்தாள்.

பாட்டியிடமும் சத்யா சரியாக பேசவேயில்லை. அவன் பேசாமல் இருக்கவே மாட்டானே? என அவ்வப்போது இருவரையும் கவனித்துக் கொண்டே வந்தார்.

கோவிலில் இறங்கி கடவுளை வழிபட்டு அனைவரும் அமர்ந்திருந்தனர். தியா அவள் பாட்டியை விட்டு நகரவேயில்லை. அஜய்யும் அஷ்வினும் பழையவாறு விளையாடினர். பாட்டி சத்யாவிடம் பேசினாலும் அவன் சரியாக பதில் பேசாமலிருக்க சுருக்கென இருந்தது.

சத்யா-தியாவை முன் நிறுத்தி கோவிலை வலம் வரச் சொன்னார்கள். இருவரும் சேர்ந்து நடக்க பாட்டி எழுந்து சத்யாவிடம் பேசணும் என்று வந்தார். ஆனால் அவர் பார்த்தது சத்யா பேசுவதையும், தியா அழுததையும். அவரும் கண்ணீருடன் தன் பேத்தியை பார்த்தார்.

என்ன? இங்கே வந்து பாவத்தை கழுவ நினைக்கிறாயா? அவனுடன் வர ஆசைபட்டிருப்பாயே? என்னுடன் வர வேண்டியதாக போச்சுல்ல..

பாவமா? பாட்டி யோசித்தார்.

அந்த வீடியோவ மட்டும் கிழவி பார்த்துச்சு உசுரையே விட்ரும். எல்லார் முன்னும் நல்லவ மாதிரி பேசிட்டு இப்படி ஒரு காரியத்தை செஞ்சிருக்க?

இல்ல மாமா. நான் அது இல்லை. புரிஞ்சுக்கோங்க. அவனுடன் நான் பேசியது கூட இல்லை என்று கதறினாள்.

பாட்டிக்கு புரிந்தது. ஆனால் என் பேத்தி தப்பு செய்ய மாட்டான்னு உறுதியாக நினைத்தார். பாட்டி தடுமாற போனில் பேசிக் கொண்டே வந்த அஜய் அவரை பார்த்து அமர வைத்து தண்ணீர் கொடுத்தான்.

பாட்டி, வீட்டுக்கு போகலாமா? கேட்டான் அவன்.

இல்லப்பா. யாரிடமும் ஏதும் சொல்லாதப்பா. அப்புறம் என் பேத்தியை தான் குறை பேசுவாங்க. எல்லாம் முடிந்த பின் செல்லலாம் என்றார்.

அவள் சாதாரணமாக பாட்டியை தேடி வந்தாள். அஜய் அவனாக அறிமுகமானான். அவள் புன்னகையை சிந்தி விட்டு பாட்டியை பார்த்துக்கிட்டதுக்கு “தேங்க்ஸ்” என்று சொல்லி அவரை அழைத்து சென்றாள். இவனுடன் பேசுவதை பார்த்தும் சத்யா உப்பிட்டு பேசினால் என்ன செய்வது? என்று பேசாமல் சென்று விட்டாள்.

எல்லாரும் வீட்டிற்கு வந்தனர். அஜய் குடும்பமும் சத்யா வீட்டிற்கு வந்தனர். அவன் எல்லாரிடமும் நன்றாக பேசினான். ஆனால் பாட்டியை தவிர்த்தான். அவருக்கு கஷ்டமாக இருக்க..நான் கிளம்புகிறேன்னு சொன்னார்.

அத்தை, பாட்டியை வீடு வரை விட்டு வரவா? தியா கேட்க, வீட்ல எல்லாம் போட்டது போட்டபடி இருக்கு. வேலைய யாரு பார்ப்பா? என்று அவர் வேலையை காட்ட,

நான் போயிடுவேன்டா. நீ நல்லா இருக்கணும்டா. அத்தை பேச்சை கேட்டு நடந்துக்கோம்மா என்று அவளுக்கு அறிவுரை கூறி விட்டு வெளியே வர, அவள் கண் கலங்க பாட்டியை பார்த்தாள். சத்யா அவர் பின் வந்து, கிழவி இரு. நான் வாரேன் என்று பைக்கை எடுத்தான்.

வேண்டாம்ப்பா. நான் போயிடுவேன் என்று அவன் கையை பிடித்து, ஏதாவது தப்பு செஞ்சான்னா..கொஞ்சம் மன்னிச்சு விடுப்பா. அவ முதல்ல மாதிரி இல்லை. ரொம்ப மாறிட்டா. உன்னை எல்லார் முன்னாடியும் பேசினான்னு ஏதும் பண்ணிடாதப்பா. சின்ன வயசுல இருந்து அம்மா, அப்பா இல்லாம வளர்ந்துட்டா. தப்பு செஞ்சு மன்னிக்க முடியலைன்னா கண்டி. ஆனால் தண்டித்து தனியா விட்றாதப்பா. அவ இதுக்கு மேல தனியா இருந்தா அவ வாழ்க்கையே முடிஞ்சிடும் என்று கண்ணீர் வடித்தார்.

அவன் அவரை வித்தியாசமாக பார்க்க, ம்ம்..நான் பார்த்தேன். உங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்கு. சீக்கிரம் சரி செஞ்சிருங்க. இல்லை அது உங்கள் வாழ்க்கையை அழிச்சிரும். அவளுக்கு உன்னை விட்டால் யாருமில்லை. கை விட்றாதப்பா என்று அவர் அவன் கையை விட்டு நடந்தார். அவன் அவரை பார்த்துக் கொண்டே நின்றான். அவனுக்கு தியாவை கண்டாலே அந்த வீடியோ தான் நினைவுக்கு வந்தது.

வீட்டிற்கு வந்த அஜய் குடும்பம் சோர்வாக அமர டீ கொண்டு வந்து கொடுத்தாள் பிரகதி.

வீட்ல யாருமே இல்லையா? அஜய் அண்ணன் கேட்க, ஆமா..எல்லாரும் வீட்டுக்கு பின்னாடி இருக்காங்க.

அஜய் டீ குடித்தவுடன், டேய் அண்ணா.. எழுந்திரு.. வேரெங்காவது அமர்ந்து கொள் என்று அவனை தள்ள, சித்தப்பூ அப்பாவை எதுக்கு தள்ளி விடுற? அஷ்வின் கேட்டான். அவன் அம்மா மடியில் படுத்துக் கொண்டு இதுக்கு தான் என்றான்.

என் புள்ளை எத்தனை வருசம் கழித்து சந்தோசமா என் மடியில் படுத்திருக்கான். ஸ்கூல் படிக்கும் போது படுத்திருந்தது என்றார் அவன் அம்மா.

சந்தோசமாவா? என்று அவன் அம்மாவை பார்த்து, அம்மா..என்று நிறுத்தி அவன் கண்ணை மூடிக் கொண்டான்.

சித்தப்பூ, எழுந்திரு..வா வெளிய போகலாம்.

இப்பதான டா போயிட்டு வந்தோம். நீ விளையாடு. நாம நாளைக்கு போகலாம் அஜய் சொல்லிக் கொண்டே அவன் பார்த்ததை நினைத்து பார்த்தான்.

பர்வத பாட்டி பேத்தியும் சத்யாவும் பேசியதை பார்த்து கலங்கிய போது தான் அஜய் அங்கு வந்தான். அவருக்கு உடம்பு சரியில்லைன்னா அந்த பொண்ணை எதுக்கு குறை சொல்லணும் என்று யோசித்து அவன் அம்மாவை பார்த்தவாறு அமர்ந்து,

அம்மா, இப்ப கோவிலுக்கு போனோம்ல. போன இடத்துல யாருக்காவது உடம்பு சரியில்லைன்னா. அந்த கல்யாண பொண்ணை தான் குறை சொல்லுவாங்களா?

அனைவரும் திகைத்து அவனை பார்த்தனர். ஏன்டா? உன்னால மட்டும் எப்படிடா இப்படியெல்லாம் கேட்க முடியுது? இன்பா கேட்க, அம்மா..நீங்க சொல்லுங்க? என்றான்.

ஆமாப்பா. அந்த பொண்ணை தான் சொல்லுவாங்க.

ஏம்மா?

ஏன்னா? அபசகுணம் மாதிரி நினைப்பாங்க. அந்த பொண்ணு, பையனுக்காக தான போறோம். சாமி கும்பிட முடியாம போனா அந்த பொண்ணை தான் சொல்வாங்க.

அந்த பையனும் தான புதுசா கல்யாணம் ஆனவன்.

அப்படி வராது. அவன் அந்த இடத்திற்கு உரியவன். ஏற்கனவே கோவிலுக்கு சென்றிருப்பான். ஆனால் அந்த பொண்ணு முதல் முறையாக அடி எடுத்து வைக்கிறாள் அவர்கள் வீட்டிற்கும் குடும்பத்திற்கும். வம்சம் விருச்சமாக வளரணும்ன்னு தான் கல்யாணம் முடிந்த கையோடு குலதெய்வம் கோவிலுக்கு அழைத்து செல்வது. அப்ப..அவளை தான சொல்லுவாங்க.

ஓ..அதை தான் சொன்னாங்களா?

யார்? என்ன சொன்னாங்க? அவன் அப்பா கேட்க,

அச்சச்சோ..தெரியாமல் உளறிட்டோமோ? சும்மா தான்ப்பா கேட்டேன் என்றான்.

இன்பாவை பார்த்து, உனக்கு தியாவோட பாட்டி வீடு தெரியுமா? கேட்டான் அஜய்.

அவங்கள பத்தி நீ எதுக்கு கேக்குற?

அவங்களுக்கு உடம்பு சரியில்லாத மாதிரி இருக்குன்னு தோணுச்சு.

அவங்களுக்கு ஹார்ட் பிராபிளம் இருக்குப்பா. கல்யாணத்து முன்னாடியே சர்ஜரி பண்ண தான் மறை சொல்லிக்கிட்டு இருந்தான். முதல்ல ஒத்துக்கிட்டாங்க. அப்புறம் அவங்க முதல்ல பேத்தி கல்யாணம் முடியட்டும்ன்னு சொன்னாங்க. இன்னும் இரண்டு நாள்ல அவங்களுக்கு சர்ஜரி இருக்கு என்றார் பவி அம்மா.

ஹார்ட் பிராபிளமா? என்று எழுந்த அஜய் தீவிரமாக யோசித்தான்.

அப்பா..நாம கோவிலுக்கு கிளம்பும் போது நல்லா பேசிட்டு இருந்தாங்க. ஆனால் வரும் போது ஒரு மாதிரி இருந்தாங்க. கவனிச்சீங்களா?

வயசானவங்க. சோர்வாகி இருக்கும் என்றார் இதயா அம்மா.

அவன் அப்பாவை பார்த்து, பாட்டியின் தடுமாற்றம் இவன் உதவியை சொல்ல, அவரும் யோசனையுடன் இருந்தார்.

அங்கிள், உங்களுக்கு அவங்க வீடு தெரியுமா? பவி அப்பாவிடம் கேட்டான்.

தெரியுமே?

அப்பா, நாங்க பார்த்துட்டு வாரோம் என்று அவன் காரை எடுத்தான். கிரிஷ் இரு நானும் வாரேன் என்று அவன் அண்ணனும் அப்பாவும் வந்தனர். நால்வரும் பர்வத பாட்டி வீட்டிற்கு சென்றனர்.

கதிரவன் தன் ஒளியை சுருட்டிக் கொள்ள மணி ஏழானது. வீட்டு கதவை பவி அப்பா தட்ட, சத்தமில்லாமல் இருந்தது.

சன்னல் திறந்திருக்க அஜய் அவ்வழியாக பார்த்தான். வீட்டினுள் குடம் விழுந்து வீடு முழுவதும் தண்ணீராய் இருந்தது. பக்கத்து வீட்டு பாட்டி வந்து, எதுக்கு இப்படி தட்டுறீங்க? அவள் சோர்வா இருக்கு. தூங்கணும்ன்னு சொன்னா..என்றவாறு அஜய்யை பார்த்தார். அவன் அதிர்ந்து பார்க்க..என்ன பாக்குற? என்று அவனை விலக்கி பார்த்து,

அய்யோ..என்று அலறினார். கீழே கொட்டி இருந்த தண்ணீரில் பாட்டியும் விழுந்திருந்தார்.

அப்பா..வழி விடுங்க என்று அஜய் கதவை உடைத்து பாட்டி அருகே சென்று, மூச்சு, ஹார்ட் பீட் செக் செய்தான். ஆனால் எதுவும் இயங்கலை. அவன் கையை தூக்கி பார்க்க, கை தரையில் விழுந்தது.

பாரு..என்று அந்த பாட்டி கதறி அழுதார். அப்பா..அவங்க இறந்துட்டாங்க என்றான் அஜய். அவர் தம்பிக்கு போன் செய்து சொன்னார்.

பாட்டி சென்ற பின் தியா வீட்டை ஒதுக்க ஆரம்பித்து இருப்பாள். அவள் அத்தையோ தன் மகள்களை பக்கத்து வீட்டிற்கு அனுப்பி விட்டு, அந்த வீட்டு அம்மாவுடன் பேசிக் கொண்டிருந்திருப்பார். சத்யா அறைக்கு சென்றிருப்பான். அவன் அப்பா வெளியே வந்திருப்பார். அவள் வலியுடன் வேலை செய்து கொண்டிருக்க,..சத்யாவின் முதல் தங்கை அவளுக்கு ஒத்தாசை செய்தாள். இருவரும் வேலை செய்து கொண்டிருக்க, சத்யா பதட்டமுடன் வெளியே வந்தான்.

அவனிடம் அவன் அப்பா சொல்லி விட்டு அவர் பாட்டி வீட்டிற்கு விரைந்தார். பதட்டமுடன் சத்யா தியாவை அழைத்தான்.

அண்ணா, எதுக்கு இப்படி கத்துற? கேட்டாள் தங்கை.

அம்மா..எங்க?

பக்கத்து வீட்டுக்கு போயிருக்காங்க.

அம்மாவை..தியா வீட்டுக்கு வர சொல்லு என்று தியாவை இழுத்தான்.

எதுக்கு? தியா கேட்க, அவன் ஏதும் சொல்லாமல் அவளை இழுத்து சென்றான். வீட்டுக்கு வெளியே ஆட்கள் நிற்க பதட்டமுடன் சத்யாவை பார்த்து, எல்லாரும் இங்க என்ன பண்றாங்க? கேட்டாள். அவன் கண்கலங்க பேசாமல் அவள் கையை விட்டான். அவள் முன் செல்ல அழுகை சத்தம் கேட்டு வேகமாக உள்ளே சென்றாள். ஏற்கனவே மறை, காயத்ரி, பாட்டிகள், சத்யா அப்பா..மேலும் சிலர் இருந்தனர். மறை கதறி அழுது கொண்டிருந்தான். அவனை பார்த்து விட்டு, அவள் பாட்டியை பார்த்து, பாட்டி என்று கண்ணீருடன் மயங்கினாள். ஏற்கனவே வலுவிழந்த அவள் உடல் ஒத்துழைக்காமல் மயங்கி விட்டாள்.

காயத்ரி அவளிடம் ஓடி வந்தாள். சத்யா அப்பா கூட பதறி அவளிடம் வந்தார். ஆனால் சத்யா பாட்டியை பார்த்துக் கொண்டே கண்ணீருடன் நின்றான். அவனுக்கு பாட்டி கூறியது நினைவில் வந்தது.

சத்யா, என்னடா பண்ற? தியாவை பாரு வேலு சத்தமிட..அவன் நகரவேயில்லை. அஜய் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான். சரவணன் தண்ணீரை எடுத்து வந்து தர, அவளை விழிக்க வைத்தனர். அவள் எழுந்தவுடன் பாட்டியிடம் சென்று, எந்திரி..பாட்டி..எந்திரி. என்னை தனியா விட்டுட்டு போய்ட்டியா? ப்ளீஸ் பாட்டி எழுந்திரு..கதறினாள். ஊரார் அனைவரும் வந்தனர். வெற்றி வீட்டிலும் ஆட்கள் வந்தனர். இன்பா அம்மா எல்லாரும். அர்ஜூன் வீட்டில் எல்லாரும். அகில்…நண்பர் குடும்பம் எல்லாரும் வந்தனர்.

தனியாவா? அஜய் சிந்தித்தான். அனைவரும் அவளை பாவமாக பார்க்க, சிலர் மட்டும் கல்யாணம் முடிந்தவுடன் அவள் பாட்டியே கொன்னுட்டா.. என்று பேச, அஜய் பேச வாயெடுக்க..அவ கொன்னாலா? நீங்க பார்த்தீங்களா? என்று மறை கோபமாக கத்தினான். தியா அவனை பார்த்தாள்.

மற, பேசுறவங்க பேசிட்டு போகட்டும் விடு என்று கண்ணன் அவனை அணைத்தான். செத்தது அவ பாட்டிடா. அவ எப்படி கொல்லுவா? அவ அவங்க கூட இல்லாமல் கொஞ்சம் ஓவரா தான் நடந்துப்பா. ஆனால் அது அப்ப? அவளோட ப்ரெண்ட்ஸ் பேசிட்டு போனதிலிருந்து அவ மாறிட்டா. முதல்ல பாட்டியோட சண்டை போடுவா? திமிறா பேசுவா? மதிக்கவே மாட்டா. ஆனால் இப்ப அப்படி இல்லை. பாட்டியை நான் தான் தினமும் பார்க்க போவேனே?

கண்ணா, அவங்க சொன்னாங்கடா..அவளுக்குன்னு குடும்பம் கிடைக்கப் போகுதுன்னு ரொம்ப சந்தோசப்பட்டான்னு சொன்னாங்க. யாருமில்லாமல் திடீர்ன்னு ஒரு குடும்பம் கிடைச்சா எப்படி இருக்கும் தெரியுமா? என்று மறை பேச அவள் மேலும் அழுதாள்.

இனி அவள பத்தி யாரும் ஏதும் பேசக்கூடாது. அவள் என்னோட தங்கை என்றான். அழுகை நின்று சத்யாவை பார்த்தாள் தியா. சத்யா மறையை பார்த்து அதிர்ந்தான். சத்யா தியாவிடம் மறையை பற்றி கேட்டது நினைவிற்கு வந்தது. அவன் தியாவை பார்க்க, அவள் பார்வை அவன் மீது ஏளனமாய் விழுந்தது.

எழுந்த தியா, மறையிடம் சென்று..எங்கடா போய் தொலைஞ்ச? தினமும் தான் வருவேல்ல, வந்து பார்த்திருந்தா காப்பாற்றி இருக்கலாம்ல என்று அவனை கண்ணுமுண்ணு தெரியாமல் அடித்தாள். காயத்ரி அவளை தடுத்து,

அவருக்கு பதில் நான் தான் வந்தேன். சோர்வா இருக்கு தூங்கப் போறேன்னு சொன்னாங்க. அவங்க படுத்த பின் தான் ராக்கியுடன் வீட்டுக்கு போனேன் என்றாள்.

தியா காயத்ரியை அணைத்து அழுதாள். அஜய்க்கு ஏதோ தப்பா இருக்கே என்று தோன்றியது. தண்ணீராக இருந்ததே..வலியுடன் எழுந்தால் கூட பக்கத்து வீட்டு பாட்டியை அழைத்து இருக்கணுமே? அந்த பாட்டி இரண்டு மணி நேரமா வெளியே உட்கார்ந்து இருந்ததாக சொன்னாங்களே! என்று சிந்தித்தான்.

காயத்ரியும் அவளுடன் அழுதாள். சத்யா அம்மாவும், தங்கைகளும் வந்தனர். சத்யா அம்மாவிற்கு சத்யா பொண்டாட்டி பின் சென்று விடுவானோ? என்று பயந்து தான் தியாவிடம் கடுமையாக நடந்து இருப்பார்கள். அஜய் அவன் அம்மாவை பார்த்தான். அவருடன், பொண்ணுங்க எல்லாரும் வந்திருந்தனர். ஸ்ரீயும் பிரகதியும் அருகே அமர்ந்திருந்தனர். அர்ஜூனிடம் பேசலாம்..என்று அஜய் வெளியே வந்தான். அர்ஜூன் அவன் நண்பர்களுடன் அமர்ந்திருந்தான். அனுவிற்காக நிவாஸை விட்டு சென்றிருந்தனர்.

Advertisement