Advertisement

அத்தியாயம் 128

அர்ஜூன் பிரகதியை விட்டு திரும்ப, அனைவரும் அவனை பார்த்து காரிலிருந்து இறங்கினார்கள். பிரகதி உள்ளே சென்று விட்டாள். இன்பா, இதயா, பவி அவளை திட்டிக் கொண்டிருந்தனர்.

இன்பாவை பார்த்து, க்யூட்டி நீ இங்க தான் இருக்கிறியா? அஜய் கேட்டுக் கொண்டே, அப்பா வந்துருக்காங்க என்றான்.

ம்ம்..என்றாள்.

என்னாச்சு டல்லா இருக்க? அவன் கேட்க, அவன் குடும்பமும் அவனிடம் வந்தனர். அர்ஜூன் அவர்களிடம் இங்கே தான் தங்கணும் என்று சொல்ல, இன்பா அர்ஜூனை பார்த்தாள். அவன் கண்ணை காட்ட, வாங்க அங்கிள் என்று மூவரும் அழைத்து விட்டு ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.

பொண்ணுங்க வரவேற்பா? அஜய் அண்ணா அண்ணியை பார்க்க, கையை உயர்த்தி பத்திரம் காட்டினார் அவர். அஜய் அவன் அப்பாவிடம் இன்பாவை அறிமுகப்படுத்தினான். அவளும் புன்னகையுடன் உள்ளே அழைத்து சென்றாள்.

டேய் அர்ஜூன், நாங்க எங்க போறது? இதயா முணுமுணுத்தாள். நான் அவசரத்தில் சொல்லலை. சாரிம்மா. எங்க வீட்ல எல்லாரும் தங்கிக்கோங்க என்றான்.

இதயா அம்மா, பவி அம்மா, அப்பா உள்ளே இருந்தனர். ஜூலியை பார்த்து அஷ்வின் சந்தோசத்தில் குதித்தான். அவர்கள் இவர்களை பார்த்து விழிக்க, அஜய் அம்மா அவராகவே பேசினார். அனைவரும் ஹாலில் அமர்ந்தனர். அர்ஜூன் பாட்டியின் தோப்பு வீட்டில் சந்தன நறுமணம் பரவ..அனைவரும் அதை நுகர்வுடன் மகிழ்ந்தனர்.

பவி அப்பாவிடம் தேவராஜூம் பேச..நன்றாக போனது.

குளித்து தாவணி உடுத்தி, தலையில் கிளிப் போட்டு துவாலையை தோளில் போட்டுக் கொண்டு,

ஆன்ட்டி..இதயா..என்னோட அறைக்கு வந்து எல்லாத்தையும் உலைச்சு வச்சுருக்கா என கோபமாக கத்திக் கொண்டே பிரகதி வந்தாள். அஜய் குடும்பத்தை பார்த்து மூச்சு விட மறந்து அவள் நிற்க,

என்னம்மா..வீட்டுக்கு வந்திருக்கோம். கூப்பிட மாட்டாயா? அவன் அம்மா கேட்டார்.

வாங்க ஆன்ட்டி, வாங்க அங்கிள்..தலையை சிலுப்பி சார்,..என்று தடுமாறினாள். அஜய் கண்கள் பளிச்சென அவளை பார்க்க, இதயா அவளிடம் வந்து கோபிச்சுக்காத.. உன்னோட நைட் டிரஸ் புதுசா இருந்ததா? அதை பார்க்க அழகா இருந்தது. எடுத்தேன் தண்ணியில் தெரியாமல் போட்டுட்டேன். அதான் இதை எடுத்து வைத்தேன்.

அர்ஜூன் தான் உனக்கு எல்லாமே வாங்கி கொடுத்துட்டு போனான். அந்த கவரில் இருப்பதை எடுத்து வச்சுக்கோ. நாளைக்கு நாம அர்ஜூன் வீட்ல போய்..அடுக்கிக்கலாம் என்று இதயா சொல்ல, அஜய் பார்வை அர்ஜூன் பக்கம் திரும்பியது.

அவன் அஜய்யை பார்த்து, சார்..இந்த பக்கம் எல்லா அறையும் காலியா தான் இருக்கும். எல்லாரும் எந்த அறை வேண்டுமோ எடுத்துக்கோங்க. நாளைக்கு இவங்க கிளம்பிய பின் நீங்க எங்க வேண்டுமானாலும் தங்கிக்கலாம் என்றான்.

இல்ல. அவங்களும் இங்கேயே கூட இருக்கட்டும் என்ற தேவராஜ் பிரகதியிடம், தண்ணி கொண்டு வா தாயி..என்றார்.

என்ன இவர் எல்லாமே புதுசா பண்றார். கொஞ்சம் பயமா இருக்கே. அவளை வேற டார்கெட் பண்ற மாதிரி இருக்கு என்று அவரின் மருமகள் எழுந்து, மாமா..நான் எடுத்து வாரேன் என்றாள்.

நான் அந்த பொண்ணை தான் சொன்னேன் என்றார். அவள் அமர்ந்து விட்டாள். பிரகதி உள்ளே சென்றாள். எல்லாரும் அவரையே பார்க்க, சார் இருக்கட்டும். எல்லாரும் ஃபீரியா இருக்கட்டும். இவர்களிடம் சொல்லிட்டேன். அவங்க கிளம்பிடுவாங்க என்று அர்ஜூன் சொல்ல, அவர் அவனையும் முறைத்தார்.

போச்சுடா..என்று மெதுவாக அஜய் பக்கம் நகன்ற அவன் அண்ணி, கிரிஷ்..இவரு ரெண்டு நாளைக்கு இங்க தான் இருக்க போறாரு. பாவம் அந்த பொண்ணு..என்றான்.

அண்ணி யாராவது தப்பா நினைக்க போறாங்க.

அதெல்லாம் நினைக்க மாட்டாங்க. அவரோட செக்கிங் டென்டன்சி எனக்கு தான் நல்லா தெரியுமே? என்றாள்.

அண்ணி..உனக்காக செய்றாரா? இல்லை வேறு காரணமான்னு தெரியலை. எனக்கு தெரிஞ்சு ஆகாஷிற்காக இருக்குமோ? கேட்க, என்ன? என்றான் பதட்டமாக.

இவனிடம் பேசினேன் பாரு என்று நிமிர்ந்து பார்க்க, தேவராஜ் இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தார்.

தண்ணி எடுத்து வர இவ்வளவு நேரமா? என்று இன்பா அவளிடம் வந்தாள். பிரகதி எதையோ கலக்கிக் கொண்டிருந்தாள்.

என்ன இது?

வாங்க கொடுக்கலாம் என்று தட்டில் நிறைய கிளாசை எடுத்து வைத்தாள். இருவரும் எல்லாருக்கும் கொடுத்தனர்.

நான் தண்ணி தானேம்மா கேட்டேன்.

அங்கிள் இது ஜீரா வாட்டர். யாருமே இன்னும் சாப்பிடலை. இந்த வாட்டர் குடிச்சா..நாம சாப்பிட சாப்பிட உண்வு செரிமானம் ஆகும் என்றாள்.

அஜய்யும் அவன் அண்ணனும்..டேபிளில் கோபமாக வைக்க, எங்களை வயசானவங்கன்னு நேரடியா சொல்ற மாதிரி இருக்கே? தேவராஜ் கேட்க,..

அவள் அஜய்யை பார்த்து, சார் நீங்க பிரியாணி சாப்பிடுவீங்களா? கேட்டாள்.

எவ்வளவு கொடுத்தாலும் சாப்பிடுவேன் என்றான் ஆர்வக்கோளாரில்.

தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்து சாப்பிட்டு தூங்குங்க பார்க்கலாம். எல்லாரும் அவளை வித்தியாசமாக பார்த்தனர்.

வயசானவங்க தான் இந்த தண்ணி குடிக்கணும்ன்னு யாருமே சொல்லலை. இப்ப சார் இதை சாப்பிட்டு தூங்குனா. தூங்கவே முடியாது. சிக்கன்ல புரோட்டீன் இருந்தாலும்..இந்த கிரேவில்ல..இருக்கும் ஃபேட்..என எடுத்து வந்த பிரியாணி சைடிஸ் பற்றி அவள் விவரிக்க.

போதும்மா. எனக்கு சாப்பிடும் என்னமே போச்சு என்றான் அஜய்.

நீங்க சாப்பிடக்கூடாதுன்னு சொல்லலை. இதை எல்லாத்தையும் ஜூரா வாட்டர் கன்ட்ரோல் பண்ணும். அதனால தான் எல்லாருக்கும் எடுத்து வந்தேன் என விளக்கம் கொடுக்க அஜய் அப்பா சிரித்தார்.

அர்ஜூன் அவளிடம், நீ நியூட்ரீசியனிஸ்டு மாதிரி பேசுற? கேட்க, இன்பா அவன் தலையில் கொட்டி, சும்மா இரு அர்ஜூன் என்றாள்.

நான் என்ன தப்பா சொல்லிட்டேன் என்று பிரகதியை பார்த்தான். அவள் கண்கள் கலங்க உதட்டில் வெற்று புன்னகையுடன் நின்றாள்.

மறந்துட்டியா? அவ அப்பா உடம்பு சரியில்லாமல் இருந்தார். அவ தான் பாத்துக்கிறதா சொன்னா? என்று இன்பா நினைவூட்ட, சாரி பிரகதி என்றான்.

சார், நான் உள்ள போயிட்டு வாரேன் என்று யாரிடமும் பதிலை எதிர்பார்க்காது கண்ணீருடன் அறைக்குள் சென்றாள்.

பவி அவள் பின் செல்ல, போகாத அவள் அழட்டும் என்ற இன்பா, அவள் இங்கே வந்ததிலிருந்து அழவேயில்லை. காலையில் எழுந்தவுடன் வேலை தேடணும்ன்னு சொன்னதால தான் அபியை பார்க்க வந்தோம். அவள் உடனே சென்று விட்டால் சாப்பிட கூட வரலை. இதயா தான் கொடுத்து அவள் சாப்பிட்ட பின் வந்தாள். அப்புறம் இப்ப தான் வீட்டுக்கு வந்திருக்கா..

எதுக்கும்மா அழணும்? தேவராஜ் கேட்டாள்.

அவளோட அம்மா, அப்பா, நேற்று தான் இறந்தாங்க. அவளையும் கொல்ல பார்த்தாங்க என்று அஜய் எல்லாரிடமும் கூறினான்.

அவன் அம்மா பிரகதியை கஷ்டப்படுத்தியனை பற்றி சொல்ல வர, அஜய் அவன் அம்மா கையை பிடித்து சொல்ல வேண்டாம் என்றான். அவன் அப்பா அதை பார்த்து ஏதோ உள்ளது என புரிந்து கொண்டார். அவங்க அண்ணி முன் பிரகதி பற்றி பேசுவது அவனுக்கு சரியாக படவில்லை. மற்றவர்களுக்கு தான் ஏற்கனவே தெரியுமே? அஜய் அவன் அப்பாவிடம், எனக்கு பசிக்கலை. நான் தூங்க போறேன் என்று செல்ல..சாப்பிட்டு போ என்றார்.

பசிக்கலை என்று அவன் தீர்க்கமுடன் கூறி விட்டு படியேறி அமைதியான சூழல் இருக்கும் கடைசி அறைக்குள் நுழைந்தான். மனதில் பட்டதை அப்பாவிடம் பேசும் செல்ல மகன் அஜய். அவர் அமைதியாக அவனை பார்க்க, மீண்டும் வந்து..அப்பா இதோட நிறுத்திக்கோங்க என்று அவன் சென்று விட, அவன் வீட்டாரை தவிர யாருக்கும் ஏதும் புரியலை. தேவராஜ் புன்னகைத்தார்.

அப்பா சிரிக்கிறாரும்மா..என்றான் மூத்த மகன்.

நல்லது தான்.

அத்தை அவரும் நம்மை போல் தான் நினைக்கிறாரோ? மருமகள் அத்தை காதில் சொல்ல, என்னம்மா? என்று அவர் கேட்டார்.

இல்லை மாமா. கிரிஷ் சாப்பிடாம போறான். சாப்பிட அழைத்து வரவான்னு கேட்டேன் என்றாள். அஜய் அம்மா அவளை பார்க்க கண்களால் கெஞ்சினாள்.

அர்ஜூன் மனது கேட்காமல் பிரகதி வெளிய வர்றியா? கேட்டான். நிசப்தம் நிலவ, அவள் தனியா இருக்கடும் அர்ஜூன் இன்பா சொல்ல..மேம் நாம தனியா இருந்தா. அழ மட்டும் தான் செய்வோம். அவள் தேவையில்லாததை யோசிப்பாள். அவள் நிலையில் யோசித்து பாருங்கள் என்று அவன் சொல்ல,..அஷ்வின் அர்ஜூன் அருகே வந்து கதவை தட்டி, “யெல்லோ சிட்டு” விளையாட வர்றீயா? கேட்டான்.

அது என்னடா சிட்டு? அர்ஜூன் கேட்க, அப்பா அம்மாவை அப்படி தான் கூப்பிடுவாங்க என்றான். அஜய் அண்ணி வெட்கத்துடன் புன்னகைத்து அவள் கணவரை பார்த்தார். ஆனால் அவர் அஜய்க்கு வைத்த சாப்பாட்டை வெட்டிக் கொண்டிருந்தார். அவரை பார்த்து அனைவரும் சிரித்தனர்.

நம்ம ஊரு சாப்பாடு சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சும்மா. கொஞ்ச நேரம் அமைதியா இருக்கியா? சாப்பிட்டுக்கிறேன் என்றான்.

அத்தை..அவரை பாருங்க என்று எழுந்து கோபித்துக் கொண்டு வெளியே சென்றார். சாப்பாடு கையோடு சமாதானப்படுத்த மனைவி பின்னே சென்றார் அவள் கணவன்.

போச்சு, என் பிள்ளையை என்ன பண்ண போறாளோ? அம்மா தலையில் கை வைத்தார்.

அஷ்வின் மீண்டும் அழைக்க, அப்படி அவளை கூப்பிடாதே? என்றான் அர்ஜூன் குட்டி பையனிடம்..

அப்புறம் எப்படி கூப்பிடுறது அங்கிள்? கேட்டான்.

அர்ஜூன் அவனை தூக்கிக் கொண்டு, பிரகதி..குட்டிப்பையன தூக்க சொன்னேல்ல. இப்ப தூக்கிட்டேன். அவன் மீது எனக்கு கோபமில்லை என்று அர்ஜூன் சிந்தித்தான்.

காஜல்ன்னு கூப்பிடு என்றான் அர்ஜூன் அஜ்வினிடம்.

எதுக்கு? என்று அவன் கேட்க, அவளுக்கு காஜல் ரொம்ப பிடிக்கும் என்றான் அர்ஜூன்.

அர்ஜூன் அவளுக்கு பிடிக்கும்ன்னு எப்படி சொல்ற? கேட்டாள் இன்பா.

அவ போன் வால்பேப்பரில் இருந்தது.

நீ வரலையா? உன்னை நான் காஜல்ன்னு கூப்பிடுறேன்..என்று காஜல்..காஜல்..காஜல்..என கத்தினான் அஷ்வின். எல்லாரும் அவள் கதவை தட்டி அழைக்க, அவள் வெளியே வந்தாள்.

சாப்பிடலாமா? பசிக்குதுப்பா..பவி கேட்க, பிரகதியை அழைத்து வந்து தனியே ஏதோ பேசினான் அர்ஜூன். கீழே வந்த அஜய் பிரகதி அறையை பார்க்க, அது திறந்து இருந்தது. அஷ்வின் சத்தம் வெளியே கேட்க அஜய் வெளியே வந்தான். இன்பா, இதயா, பவி அவனுடன் விளையாண்டு கொண்டிருக்க, அவன் அண்ணா அண்ணியும் அவர்களுடன் இருந்தனர். அவன் அம்மா அப்பா இல்லாததை கூட கவனிக்காமல் தனியே அர்ஜூனும் பிரகதியும் பேசுவதை பார்த்துக் கொண்டே அவர்களிடம் வந்தான். காலடி சத்தம் கேட்டு பிரகதி வாயை பொத்தினான் அர்ஜூன். அவள் கண்ணீருடன் திரும்பி பார்த்தாள். அஜய்யை பார்த்து எழுந்தாள்.

அர்ஜூன் அவனை பார்த்து விட்டு, எதையும் நினைச்சு கஷ்டப்படாத. நான் கிளம்புறேன். ஸ்ரீயும், அனுவும் தேடுவாங்க என்று, சார்..அவளுக்கு உங்க நம்பர் கொடுத்திருக்கேன். பார்த்துக்கோங்க..என்ற அர்ஜூனை பார்த்து, என்ன பேசிக்கிட்டு இருந்தீங்க? அஜய் கேட்டான்.

அவளுக்கு ஆறுதல் தான் சொல்லிக் கொண்டிருந்தேன் சார் என்று அவனும் கண்ணீருடன் சொல்லி விட்டு, இப்ப சாப்பாடு வந்துரும். எல்லாரும் சாப்பிடுங்க..என்று நீரால் முகத்தை கழுவி விட்டு கிளம்பினான். எதிரே தான் பாட்டி வீடும்..ஆனால் கொஞ்சம் தள்ளி தான் இருக்கும்.

பிரகதி அவன் பாட்டி வீட்டையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அஜய் அவளருகே வந்து அமர்ந்தான். சார், நீங்க நெருக்கமில்லாத யாருக்காகவாது அழுதிருக்கீங்களா? கேட்டாள்.

நெருக்கமில்லாதவங்கன்னா பார்த்து வருத்தப்பட்டிருக்கேன். ஆனால் அழுததில்லை. நீ அழுதிருக்கியா? அவன் கேட்க, நிறைய முறை சார். ஆனால் யாருக்கும் தெரியாது.

யாரு? அர்ஜூனா? கேட்டான். அஜய்க்கு பிரகதி அர்ஜூனுடன் பேசுவது பிடிக்காமல் இருக்கும். அதனால் தான் இப்பொழுது கூட பொறாமையில் அவர்களிடம் வந்திருப்பான்.

அவனையே பார்த்தாள்.

எதுக்கு இப்படி பாக்குற?

இல்லை. அர்ஜூனுக்காக அழுதிருப்பேன்னா தோணுது.

எனக்கு..என்று அவன் நிறுத்தினான்.

ஸ்ரீ சார். அவளை ரொம்ப பிடிக்கும். எந்த அளவுன்னா.. அம்மா, அப்பாவை விட. ஆனால் ரொம்ப ஹர்ட் பண்ணி இருக்கேன். அவளிடம் பேச நினைத்ததை கூட பேசாமல் இருந்திருக்கேன். போன பிறவியில யாருக்கோ பாவம் பண்ணி இருக்கேனோ? என்னமோ? தெரியலை. பிடிச்ச யாரிடமும் பேச கூட முடியலை. இப்ப பேச முடியும். ஆனால் அவ முகத்துல விழிக்க முடியாத அளவு செஞ்சுட்டேன். அதான் யாரிடமும் பேசாமல் விலகி இருந்தேன். ஆனால் மறுபடியும் அர்ஜூனை பார்த்துட்டேன். ஆனால் அவன் இப்ப சொன்னது என்று கண்ணீருடன் எழுந்தாள்.

என்ன சொன்னான்?

சார்,..என அதற்கு மேல் முடியாமல் அவளது மடியிலே முகத்தை வைத்துக் கொண்டு அழுதாள். அவள் அழுகை சத்தம் கேட்டு அவளை அனைவரும் பார்த்தனர். அஜய் அவள் தோளில் கையை வைக்க, அவன் கையை பற்றிக் கொண்டு அழுதாள்.

பவி..அவளிடம் வந்தாள். இன்பா, இதயா..அம்மாக்களும் வந்தனர்.

பிரகதி..இன்பா அழைக்க, அவளை நிமிர்ந்து பார்த்து கண்ணீருடன் எழுந்து அவளை அணைத்தாள். நீங்க சொன்னதன் அர்த்தம் இப்ப தான் புரிஞ்சது. நீங்க எப்படி சாதாரணமா இருக்கீங்க? பிரகதி கேட்க, இன்பாவும் விழித்தாள்.

அர்ஜூன் எல்லாத்தையும் சொன்னான். எல்லாரும் எப்படி அந்த பாதையை கடந்து வந்தீங்க? அழுதாள். இதயா கண்ணீருடன் அவளை பார்க்க, பவியும் அழுது கொண்டே சென்றாள்.

பவி..நில்லு அவள் அம்மா அவள் பின் ஓட, இதயா அம்மா அவளை பார்த்து அவள் கையை பிடித்தார். அவள் கைகள் நடுங்கியது. அனைவரையும் பார்த்து அஜய் எழுந்தான்.

என்ன நடக்குது? அவன் கேட்க, இதயாவும் உள்ளே சென்றாள்.

பிரகதி இன்பாவை பிரித்து விட்டு, இன்பா சொல்லு..என்றான். அவள் அழுது கொண்டே அவனை பார்த்து விட்டு உள்ளே சென்றாள். அஜய் அண்ணி..இப்ப தானடா விளையாண்டுகிட்டு இருந்தாங்க. அதுக்குள்ள என்ன ஆச்சு? கேட்டார்.

தெரியலை அண்ணி..என்றான். அவர்களும் உள்ளே செல்ல, பிரகதி கண்ணீருடன் அங்கேயே அமர்ந்தாள். நீயே சொல்லு..எல்லாரும் எதுக்கு அழுறாங்க?

பாதிக்கப்பட்டவங்க அழாம..வேற யாரு அழுவா?

இன்பா? கேட்க, அவனை வலியுடன் பார்த்து, யாருக்கும் ஏதும் நடக்காமல் பசங்க பார்த்துக்கிட்டாங்க. ஆனால் அவங்களும் வலியோட தான் இருக்காங்க சார். ஸ்ரீ தான்..என்று பிரகதி அழுதாள். என் நிலை தான் இப்படி? என்று நினைத்தேன். என்னை போல் தான் ஸ்ரீயும் கஷ்டப்பட்டிருக்காள் என்று அவன் தோளில் சாய்ந்தாள். அவன் அவளை பார்க்க,..நகர்ந்து சாரி சார் என்றாள்.

பரவாயில்லை சாஞ்சுக்கோ..என்றான்.

கொஞ்சம் எமோஸ்னல்ல தான் சார். பசங்களுக்கு ஏன் பொண்ணுங்கள சதையா தான் பார்க்க தோணுமா? என்று கேட்டாள். அவன் கண்கலங்க அவளை பார்த்தான். ஆனால் என் விசயத்தை தவிர எல்லாருக்குமே அந்த கொலைகாரன் தான் காரணம். அவனை மாதிரி ஆட்களெல்லாம் சும்மா விடக் கூடாது.

உங்களுக்கு தெரியுமா சார்? எனக்கு அர்ஜூனை விட அவன் காதல் ரொம்ப பிடிக்கும். ஸ்ரீக்கு வேரொருவனை பிடித்த பின்னும் அவள் பின் தான் செல்வான் அர்ஜூன். வேற பொண்ணோட நிழல் படுவது கூட அவனுக்கு பிடிக்காது. அவனுக்கு கொடுத்த பிராஜெக்ட்டை கூட தனியே தான் செய்தான். அவனுக்கு ஸ்ரீக்கு அடுத்து எல்லாமே தருண் தான். அவனும் அப்படியே அர்ஜூன் போல தான். ஆனால் அவனுக்கு என்னை பிடித்தது அதிசயம் தான். அவனுக்கு எல்லாமே அர்ஜூனும் குடும்பமும் தான். இப்ப எனக்கும் அவனுக்கு இரண்டே வித்தியாசம் தான். ஒன்று அவனுக்கு தங்கை என்று ஒருத்தி இருக்கா. எனக்கு அப்படி யாருமில்லை.  அடுத்தது அவனுக்கு காதலிக்க ஒரு பொண்ணு இருக்கா.. எனக்கு..என்னமோ? கல்யாணம் மீதே விருப்பமில்லாமல் போச்சு. அம்மா பணம் பணம் அலைந்து அப்பாவுடன் வாழ்ந்த மாதிரி பார்த்ததில்லை. எனக்கு நடந்த அந்த சம்பவம் என்று கண்ணீருடன் தலை கவிழ்ந்து அமர்ந்தாள்.

திடீரென நிமிர்ந்த பிரகதி, அஜய் கையை பிடித்து..சார் எனக்கு ஒரே ஒரு கெல்ப். நீங்களும் அவனை பிடிக்க தான நினைக்குறீங்க? உதவி தேவைப்பட்டால் சொல்லுங்க..என்று பிரகதி கேட்க, இன்பா அங்கே வந்து..பிரகதி கையை பிடித்து வா என்று அழைத்தாள்.

இன்பா..என்று அஜய் எழுந்தான். பிரகதி அவனை பார்த்துக் கொண்டே உள்ளே செல்ல, அவனும் அவர்கள் பின்னே சென்றான்.

இன்பா பிரகதியை அவள் அறைக்கு அழைத்து சென்று கதவை பூட்டினாள். அவன் கதவை தட்ட, நீ போ..நாங்க பார்த்துக்கிறோம் என்று உள்ளிருந்து சத்தமிட்டாள். அவன் யோசனையுடன் அமர்ந்தான். அவனுக்கு, பொண்ணுங்க சதையா தான் தெரிவாங்கலான்னு பிரகதி கேட்டது தான் ஒலித்துக் கொண்டே இருந்தது. அவன் காதை பொத்தி டேபிளில் சாய்ந்து இருந்தான்.

அவன் அம்மாவும் அப்பாவும் அங்கு வந்தனர். அவன் தோளில் அவர் கையை வைக்க, கண்ணீருடன் அவர்களை பார்த்தான். அவன் அம்மா கீழிருந்த அறைக்கு அவனை அழைத்து சென்று கதவை சாத்தினார். அவன் அப்பாவும் உடனிருந்தார்.

கிரிஷ்? எதுக்குப்பா அழுற?

பிரகதி கேட்டதை சொல்லி அழுதான். எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா.

உனக்கு கஷ்டமா இருக்கா? அந்த பொண்ணு எதுக்கு இப்படி கேட்டா? அவன் அப்பா கேட்க, அவன் அம்மா பிரகதிக்கு நடந்ததை சொல்ல, அஜய்க்கு அவனை அறியாமல் கோபம் அதிகமானது.

அங்கிருந்த சன்னலில் அவன் கையை அடித்து அவனே காயப்படுத்த பார்த்தவன் கையை பிடித்து நிறுத்திய அவன் அப்பா அவன் கன்னத்தில் அறைய, சுயம் வந்து அமைதியானான்.

ஏன்டா, அந்த பொண்ணுக்காக நீ எதுக்கு இப்படி கோபப்படுற? கேட்டார். நானும் அவளை இத்தனை வருடங்களாக தப்பா தான் நினைச்சிட்டு இருந்தேன். ஆனால் அவள் மேல என்ன தப்பு இருக்கு?  இங்கிருக்கிற எல்லா பொண்ணுங்களும் கஷ்டப்பட்டு இருக்காங்கப்பா. இப்ப ரேப் எல்லாருக்கும் சாதாரணமா போச்சு என்று தரையில் அவன் குத்த, அவன் அம்மா அழுதார்.

உனக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்கா? கேட்டார்.

தெரியலைப்பா. ஆனால் அவள் என்னிடம் அப்படி சொல்லும் போது, அவள் என்னை அவ்வாறு நினைத்து விடுவாளோ என்ற பயம் வந்தது. ரொம்ப கஷ்டமா இருந்தது. என்னால ஆறுதல் கூட சொல்ல முடியலை என்று அழுதான்.

அவனை அவன் பெற்றோர் அணைக்க அவள் தருணை பற்றி கூறிய போது அவளுக்கு யாருமில்லை என்று அவள் சொன்னது நினைவுக்கு வந்தது. அதையும் கூறி அழுதான்.

முதல்ல நீ அந்த பொண்ணை பற்றி என்ன நினைக்கிறன்னு யோசி என்று அவன் அப்பா கூறி விட்டு வெளியே வந்தார்.

சார், பார்சல் என்று சத்தம் கேட்க, அங்கே யாருமில்லை. அவர் சென்று சாப்பாட்டை வாங்கி விட்டு பணம் தர, பெரியம்மா பேரன் தந்துட்டாங்க என்று அர்ஜூனை சொல்ல, அவர் வாங்கி விட்டு, சாப்பிட யாரும் வரலையா? சத்தமாக கேட்டார். அனைவரும் வெளியே வந்தனர்.

பிரகதி, இன்பா, இதயா, பவி, அவங்க அம்மா எல்லாரும் வெளியே வந்தனர். அஷ்வின் அம்மா, அப்பாவும் வந்தனர். பவி அப்பாவும் வந்து விட அவர் தன் மகன் இருந்த அறையை பார்த்தார். மனைவியும், மகனும் இல்லாமல் எப்படி சாப்பிடுவது? என பார்த்தார்.

அங்கிள், அஜய் எங்க? இன்பா கேட்டாள். அவர் அறையை பார்க்க, அவன் உள்ளே என்ன செய்கிறான்? என்று இன்பா அறை பக்கம் செல்ல, அவங்களை விடும்மா. நீங்க சாப்பிடுங்க..என்றார். அவன் அழுது கொண்டே அம்மா மடியிலே தூங்கி விட்டான்.

என்னடா நடக்குது? புரியாமல் விழித்தாள் அஜய் அண்ணி. பிரகதியும் அறையையே பார்க்க, அவன் அப்பா அவளை தான் கவனித்துக் கொண்டிருந்தார். அஷ்வின் எழுந்து..சித்தப்பூ..சாப்பிட வா..எல்லாரும் வந்துட்டாங்க. பாட்டி வாங்க என்று அழைத்தான்.

விழித்த அஜய், அம்மா..நீங்க போங்க. சாப்பிடுங்க. எல்லாரும் போன பின் நான் வாரேன் என்றான்.

அஜய்யிடம் ஏதும் தவறாக சொல்லி விட்டோமோ? என்று பிரகதி சாப்பிடாமல் அவன் அறையையே பார்த்தாள்.

சாப்பிடும்மா..என்று புன்னகையுடன் அஜய் அண்ணி நடப்பது ஏதும் தெரியாமல் அவளை அருகே வர வைக்க இப்படி செய்கிறான் என்று நினைத்தாள்.

அனைவரும் சாப்பிட்டு சென்றும் அவள் அங்கேயே இருந்தாள். அவன் அப்பா அம்மாவிடம் போக சொல்லு என்றார்.

எப்படி சொல்றது?

ஆன்ட்டி, அவர் என்ன செய்கிறார்? தூங்குகிறாரா?

அவன்..என்று தயங்கினார். சாரி ஆன்ட்டி, என்னால சொல்ல முடியாத சில விசயங்களை அவருடன் பகிர்த்துக் கொண்டேன். நான் சாரை கஷ்டப்படுத்திட்டேனா? ஏதாவது சொன்னாரா? பயத்துடன் கேட்டார்.

தெரியலம்மா..ஆனால் அழுத மாதிரி இருந்தது. சாப்பாடு வேண்டாம்ன்னு சொல்லிட்டான்.

ஆன்ட்டி, நைட் கொஞ்சமாவது சாப்பிடணும். இரவில் தான் ப்ளட் சர்குலேசன் நடக்கும் என்றாள். அவன் அப்பா..அவளையே பார்த்தார்.

அங்கிள், ஆன்ட்டியை சாருக்கு சாப்பிட கொடுத்து விடுங்க என்றாள்.

நீ அவனிடமே சாரி சொல்லிக்கோம்மா.

அங்கிள்..

ஆமாம்மா. நீ தான அவன் சாப்பிட மாட்டிக்கிறான்னு கவலைப்படுற?

நான் அப்படி சொல்லை.

அதெல்லாம் ஒன்றுமில்லைம்மா. நீ சொன்னது சரி தான். அவன் சாப்பிட்டு தூங்கினால் தான் நல்லது. நான் சாப்பிட்டு எங்கும் நின்று பழக்கமில்லை. நான் அறைக்கு சென்று விட்டால் அவளும் வந்து விடுவாள். நீ சாப்பாட்டை எடுத்து கொடுத்துட்டு போய் தூங்கு என்றார் அவர்.

நான் எப்படி அங்கிள்?

என்னிடம் சாரி சொல்லி..எனக்கு என்ன? நீ என்ன பேசின்னன்னு தெரியுமா? அவனுக்கு தானே தெரியும்மா. அவனிடம் சாப்பாட்டை கொடுத்து விட்டு சாரி சொல்லிட்டு வந்துரு..என்று இருவரும் சென்றனர்.

அவள் பயந்தாலும் தன்னால் சாப்பிடாமல் இருக்கிறாரோ? என்று நினைத்தவாறு உள்ளே வந்து அதிர்ந்தாள். அவன் தரையில் சுருண்டு படுத்திருந்தான். அவள் பதறி அவனிடம் சென்றாள்.

சார்..என்று அழைக்க, அவன் நிமிர்ந்து அவளை பார்த்து கண்ணை துடைத்தான்.

அழுதீங்களா சார்? அவள் தரையில் அமர்ந்து கேட்க, அவன் நகர்ந்து அவள் மடியிலே படுத்து விட்டான்.

சார், என்று பதறினாள். அவன் பேச ஆரம்பித்தான்.

சாரி பிரகதி..நான் உன்னை அன்று தப்பா நினைச்சுட்டேன். நர்ஸ் நீ கர்ப்பமா இருப்பதை சொன்னதால் நீ விருப்பப்பட்டு யாருடனோ..அதுவும் உன்னுடைய பள்ளி பருவத்திலே..என தவறாக நினைத்து விட்டேன். அதன் பின் தான் பெண்களை பிடிக்காமல் போனது. சிலருடன் நன்றாக பேசினாலும் காதல் யார் மீதும் வரலை. இப்ப உன்னை பற்றி தெரிந்ததும் குற்றவுணர்ச்சியால் தவித்து விட்டேன். உன்னை இதுக்கு மேல தவறான பார்வை யாரும் பார்க்கக்கூடாதுன்னு நினைச்சேன். அதான் உன்னை பேச்சினால் காயப்படுத்தி விட்டேன். உன்னை காயப்படுத்தியவன் என்று தெரியவும் அடிக்க நினைத்தேன். ஆனால் எல்லார் முன்னும் முடியலை. ஆனால் அவன் உன்னை இழுத்து சென்ற போது…நீ யாரிடமும் காயப்படக் கூடாதுன்னு தான் அவனை அடித்தேன். ஆனால் இப்ப நீ பேசியது..என்னை பேசியது போல் தோன்றியது. என்னால் தாங்க முடியவில்லை.

என்னிடம் உன்னால் எப்படி இதை கேட்க முடிந்தது? பிரகதி. உன் குழந்தைத்தனமும் புத்திசாலித்தனுமும் எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. நீ எல்லாரையும் ஒரே போல் நினைக்காதே. நான் உன்னை சதையாக பார்க்கவில்லை. எனக்கு சரிசமம்மா பார்க்கிறேன். எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நான் உன்னை காதலிக்கிறேன்..என்று அவளை அணைக்க, அவனை தள்ளி விட்டு,

எனக்கு வேண்டாம். நீங்க என்னை சதையாக பார்க்கலைன்னு ஒத்துக்கிறேன் சார். ஆனால் என்னால் உங்க காதலை ஏத்துக்க முடியாது. எனக்கு யாருமே வேண்டாம் சார். பயமா இருக்கு சார். எனக்குன்னு வந்து ஒரு நாள் இருந்துட்டு போயிட்டா என்னால தாங்க முடியாது. இதுக்கு மேல் ஏமாறவோ..வலியை பொறுத்துக்க என்னால முடியாது சார். என்னை விட்டுருங்க என்றாள்.

அவன் கண்கலங்க, நான் காத்திருப்பேன். எந்த காதல் உனக்கு பிடிக்கும்ன்னு சொன்னீயோ? அதே போல் உன் பின்னே வந்து காதலித்து கொண்டே தான் இருப்பேன். நான் முடிவெடுத்துட்டேன்.

சார், நான் சிலரால் கற்பழிக்க பட்டவள்.

தெரியுமே? அதுக்காக எல்லாம் முடிந்ததாக இல்லை. நான் உன்னை தொடாமலே காதலிப்பேன். காதலித்துக் கொண்டு தான் இருப்பேன். என்னை பொறுத்தவரை..காதலில் செக்ஸுக்கு பெரிதாக இடமில்லை. காதலில் காமம் இருக்கும் தான். என்னால் உன் மீதுள்ள காமத்தை கட்டுப்படுத்த முடியும். ஏன்னா..அதால நீ கஷ்டப்படுவ. இதுக்கு மேல நீ கஷ்டப்படக்கூடாதுன்னு நினைக்கிறேன். உனக்கு எப்பொழுதும் பாதுகாப்பாய் இருப்பேன் என பேசி விட்டு எழுந்து அவள் கொண்டு வந்த சாப்பாட்டை சாப்பிட்டான். அவள் அவனையே பார்த்தாள். அவளுக்கு இவன் பேசியதில் நம்பிக்கை, காதல் வந்து விட்டது. அதை ஏற்றுக் கொள்ளும் மனம் தான் வரவில்லை.

எதுக்கு பாக்குற? சாப்பிடுறேன்னு பாக்குறியா? உன்னை பார்த்துக்கணுன்னா..நல்லா சாப்பிடணும்ல..என்று முடித்து விட்டு எழுந்து அவளை எழச் சொல்லி அவன் அறைக்கு திரும்பினான்.

அஜய் பின்னே அறையிலிருந்து பேயறைந்ததை போல் வந்த பிரகதியை பார்த்து வெளியே இருந்தவர்கள் அதிர்ந்தனர்.

இன்பா, அவளிடம் வந்து அஜய்யுடன் தனியாக அறையில் என்ன செஞ்சுக்கிட்டு இருந்த? அவள் அவனுடைய அம்மா, அப்பாவை பார்த்தாள். அவர்கள் சாப்பிட்டவுடன் தூங்க செல்வேன் என பொய் சொல்லி தான் என்னை உள்ளே அனுப்பி இருக்கிறார்கள் என புரிந்து கொண்டு இன்பாவை பார்த்தாள்.

சொல்லு..அவன் திட்டினானா? எதுக்கு டல்லா இருக்க?

பிரகதி அவளை அணைத்தாள். ஏய்..என்னாச்சு? இதயா அம்மா பதறினார்.

எனக்கு ஒன்றுமில்லை என்று அஜய் பெற்றோரிடம் வந்து, உங்களிடம் பேசினாரா? கேட்டாள்.

சொன்னானா? அவன் அப்பா கேட்க, நீங்க தடுத்திருக்கலாமே? அவள் கேட்டாள்.

தடுக்கணுமா? எதம்மா..தடுக்க சொல்ற? அவன் பிடிவாதக்காரன். படித்த பின் அவன் வீட்டிற்கே அதிகம் வருவதில்லை. அவனுடைய கனவுக்காக தனியே போராடி இந்த இடத்தில் இருக்கான். இந்த ஒரு வருசமா பார்க்காத பொண்ணில்லை. இவள் அலைந்தது தான் மிச்சம். அவன் சென்னையில் தங்கும் இடத்தில் கூட இல்லாமல் வேலையில் தான் மூழ்கி இருப்பான். அது கூட இவள் அங்கே சென்ற பின் தான் தெரிந்தது என்று அஜய் அம்மாவை பார்த்தார். அவர் கண்ணீருடன் பிரகதியை பார்த்தார்.

அவன் என்னிடம் நேரடியாக எதுவும் கூறவில்லை. ஆனால் எனக்கு புரிந்தது.

அவன் என்னிடம் சொன்னான் என்றார் அஜய் அம்மா.

என்ன பேசுறீங்க? எதுவுமே புரியலை என்றாள் இன்பா.

ஹா..உங்க ப்ரெண்டுக்கு என்னை பிடிச்சிருக்காம். காதலிக்கிறாராம் என்ற பிரகதி, சாரி அங்கிள், சாரி ஆன்ட்டி என்று அறைக்கு சென்றாள்.

அத்தை..கிரிஷ் சொல்லிட்டானா? ஆனால் இந்த பொண்ணு கோபமா தெரியுதே? அவளுக்கு நம்ம கிரிஷ்ஷ பிடிக்கலையா? கேட்டாள் அஜய் அண்ணி.

இல்லம்மா..அந்த பொண்ணுக்கு பிடிச்ச மாதிரி தான் இருக்கு. ஏத்துக்க மாட்டேங்கிறா தேவராஜ் சொல்ல,

மாமா நீங்க அந்த பொண்ணை ஏத்துக்கிட்டீங்களா?

ம்ம்..வாழப் போகும் அவனுக்கே பிடிச்சிருக்கு. நம்ம வீட்டுக்கு ஏத்த பொண்ணா தான் இருக்கா. நீ வசதியாகவும் பாதுகாப்பாகவும் வளர்ந்த பொண்ணு. அவ கஷ்டத்த புரிஞ்சுக்க முடியாது. அவள் ஏத்துக்க நாளாகும்மா. அதுவரை நம்ம பையன் தான் பொறுமையாகவும், அமைதியாகவும் காத்திருக்கணும் என்றார்.

என்ன அமைதியா? நம்ம கிரிஷ்ஷா நெவர் மாமா..என்றாள். அவள் கணவன்..”நினைச்சதை அடைய எந்த அளவுக்கும் போவாம் நம்ம கிரிஷ்” என்று பிரகதி அறையை பார்த்து புன்னகைத்தான்.

அங்கிள் நான் அவனிடம் பேசிட்டு வாரேன் இன்பா சொல்ல, நாளைக்கு பேசிக்கோம்மா..எல்லாரும் தூங்க போங்க என்று தேவராஜ் சொல்ல,அனைவரும் கிளம்பினார்கள்.

மாலை ஆறு மணியளவில் சத்யா வீட்டிற்கு வந்தனர் மணமக்கள். தியா வீட்டில் விளக்கை ஏற்றி விட்டு அவனை பார்த்தாள். அவன் அவளை கண்டு கொள்ளவேயில்லை. அவன் கோபமாக இருக்கான். இரவு பேசி சமாளிக்கலாம் என்று நினைத்துக் கொண்டே தியா அவன் அம்மா பின் சென்றாள்.

அண்ணி, நீங்க அண்ணாவுடன் இருங்க. நான் டீ எடுத்துட்டு வாரேன் என்று அவன் தங்கை உள்ளே சென்றாள். குட்டித்தங்கை தியாவிடம் அமர்ந்து பேசிக் கொண்டே இருந்தாள். சத்யா அவளை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.

டீ சாப்பிட்டு அவனறைக்குள் செல்ல, டேய்..இப்ப எதுக்கு போற? அவன் அம்மா சத்யாவிடம் கேட்டார்.

அம்மா..டிரஸ்ஸை மாத்திட்டு வாரேன் என்று கதவை மூடினான். அவன் பின் செல்ல இருந்த தியாவிற்கு அறைக்கதவு பூட்டப்பட ஒருமாதிரி ஆகிவிட்டது.

தியா..இங்க வா..என்று அவன் அம்மா அழைக்க, இவள் சமையலறைக்கு சென்றார். அவர் பொருட்கள் எல்லாம் எங்கே வைத்திருக்கிறார்..என்று கூறினார்.

அத்தை, எதுக்கு இப்ப இதை சொல்றீங்க?

காரணம் இருக்கு. நீ கவனிச்சு வச்சுக்கோ..சமைப்பேல்ல..

அத்தை, பாட்டி கொஞ்சம் கொஞ்சம் சொல்லி கொடுத்தாங்க. நான் முயற்சி செய்கிறேன் அத்தை. ஆனால் உங்க அளவுக்கு சமைக்க முடியும்மான்னு தெரியலை..என்றாள்.

சரி. வா..போகலாம் என்று அவளுடன் அமர்ந்தார். அவனும் வெளியே வந்தான்.

சத்யா, உனக்கு ஒரு வாரம் விடுப்பு கொடுத்திருக்கான் பிரதீப். அந்த கிழவி வீட்டுக்கும் நீ போக வேண்டாம். சரவணா பார்த்துக்கிறேன்னு சொல்லி இருக்கான்.

எதுக்கு ஒரு வாரம்? சத்யா கேட்க, இத்தனை நாள் உழைப்புக்கு ஓய்வெடுத்ததாக இருக்கட்டும் என்றார் அவன் அம்மா.

அண்ணா, உனக்கு லீவ் இருக்கு. நான் நாளை ஸ்கூலுக்கு போகணும்.. என்றாள் குட்டி தங்கை.

ஏன்டி, ஸ்கூல்ல இருந்து தப்பிக்க பார்க்காதே. படிப்பு ரொம்ப முக்கியம். இனி படிப்புல சந்தேகம் இருந்தா தியாகிட்ட கேட்டுக்கோ சத்யா அம்மா சொல்ல,

ம்ம்..கண்டிப்பா கேளு. நான் க்ளியர் பண்றேன் என்றாள். சத்யா அவளை பார்த்தான். அவனுடைய அப்பா உள்ளே வந்தார். சத்யா அம்மா அவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு, இடத்தை ஒதுக்கி சாவியை கொடுத்துட்டீங்களா?

கொடுத்தாச்சும்மா..என்று தியாவை பார்த்து புன்னகைத்து விட்டு மகனை பார்த்தார். அவன் போனை பார்த்துக் கொண்டிருந்தான். அவனருகே வந்து அமர்ந்து, ராஜ் அண்ணா பசங்களோட பேசினாயா?

அதான் நீங்க பேசுனீங்கல்ல?

அதுக்கு இல்லடா. உனக்கு ஏதாவது உதவி செய்வாங்கல்ல..என்று அவர் கூற, அவரை பார்த்து யாரோட உதவியும் எனக்கு தேவையில்லை.

முதல்ல மாதிரி இனி பேசாத. உன்னை நம்பி இந்த பொண்ணு வந்துருக்கா. நிலையான ஒரு வேலைய பாரு என்றார்.

பார்க்கலாம் அப்பா. உங்க அண்ணா பசங்க நிறையா பணம் வச்ச்சுருக்காங்கன்னு பொறாமையாப்பா?

பொறாமை இல்லைடா. நீயும் முன்னேறனும்ன்னு தான் சொன்னேன்.

குறுக்கு வழியில போறதெல்லாம் வேண்டாம்ப்பா..என்று எழுந்து கதவருகே செல்ல, எங்கடா போற? அவன் அம்மா கேட்டார்.

நான் எப்பொழுதும் எங்க போவேன் அங்க தான். நான் பார்த்துட்டு வந்துடுறேன் என்று தியாவை பார்த்தான்.

கல்யாணம் காலையில பண்ணிட்டு, இப்ப ப்ரெண்ட்ஸை பார்க்க போற நேரமா இது? நீ போகக்கூடாது..என்றார்.

அம்மா..சீக்கிரம் வந்துருவேன்.

போன அவ்வளவு தான். என்னங்க வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க?

சத்யா ஒழுங்கா ஓர் இடத்தில் உட்கார் இல்லை வேலுவிடம் நான் பேச வேண்டி இருக்கும் என்று அவன் அப்பா மிரட்டுவது போல் சொல்ல, இருக்கேன் என்று பல்லை கடித்து விட்டு அமர்ந்தான்.

அவன் அம்மா..சத்யா அறைப்பக்கம் சென்றார். தியா எழுந்தாள். நீ இரும்மா..இனி நீ தான் எல்லாத்தையும் கவனிக்கிற மாதிரி இருக்கும். இன்று ஓய்வெடுத்துக்கோ என்று தன் மகனை ஆராய்ந்தார் அவன் அப்பா.

சற்று நேரத்திலே வெளியே வந்த அம்மா..தியா, சத்யாவை ஒன்றாக நிற்க வைத்து ஆடை, அணிகலங்கள்  கொடுத்தார்.

சத்யா நீ போ..உன்னறையில் மாற்றிக் கொள் என்று தன் சின்ன மகளை பக்கத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார். தியாவை அவன் தங்கை அறைக்கு அழைத்து சென்று அவளை தயார்படுத்தினார்கள் சத்யா அம்மாவும், மூத்த தங்கையும்.

அவள் தயாரானதும் தியாவை பார்த்த அவன் தங்கை..அம்மா அண்ணிக்கு முதல்ல சுத்தி போடுங்க என்றாள்.

சும்மா இருடி..என்ற அம்மா பால்செம்பை அவளுக்கு கொடுத்து அவனறைக்கு அனுப்பி விட்டு, அனைவரும் வீட்டிலிருந்து வெளியே கிளம்பினர்.

Advertisement