Advertisement

அத்தியாயம் 127

மாலினி பெற்றோர் கதவு திறந்து இருந்ததை பார்த்து பதறி உள்ளே வந்தனர். மாலினி தூங்குவதை போல் நடித்தாள். அவர்கள் பெருமூச்செடுத்து விட்டு அமர்ந்து தன் மகளை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.

காருண்யா சக்தியை திட்ட, கௌதம் ஏதும் பேசாமல் நீ மண்டபத்துக்கு போ..நான் வாரேன் என்று ஹாஸ்பிட்டலுக்கு வெளியே இருந்த அர்ஜூனை அழைத்து காருண்யாவை அனுப்பி விட்டு உள்ளே வந்தான். மாலினி அம்மாவுக்கு அவளை பார்க்க பார்க்க கண்ணீர் நிற்காமல் வந்தது. அவர் துடைத்துக் கொண்டே இருந்தார். சக்தியை முறைத்து விட்டு உள்ளே வந்தான் கௌதம்.

அவனும் மாலினி அருகே அமர்ந்தான். அவள் அம்மா அழுவதை பார்த்து அவர் கண்ணீரை துடைத்தான். அவர் அவன் கையில் முகம் புதைத்து அழ மாலினியால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால் அவள் கட்டுப்படுத்திக் கொண்டு சக்தி வருவானா? என கவனித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மிகவும் சோர்வாக இருந்தது.

கௌதம் அவள் அம்மாவிடம் வேண்டாம்மா..என்று அவளை கண்ணை காட்டினான். அவர் கண்ணீருடன் அமர்ந்திருக்க சக்தி உள்ளே வந்தான். அவள் அப்பா அவன் முன் வந்து வெளியே செல்ல சொல்லி கையை காட்டினார்.

அவன் ஏதும் சொல்லாமல் அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டான். அவர்கள் புரியாமல் அவனை பார்த்தனர். அவளருகே வந்த சக்தி, அவள் நெற்றியில் முத்தமிட்டு வெளியே சென்றான்.

கௌதம் பின்னே ஓடி வந்து, என்ன பண்ண போற? சினத்துடன் கேட்டான். சக்தி அவனை பார்த்து விட்டு வாரேன் என்று மட்டும் கூறி சென்றான். அவள் பெற்றோரும் இதை கேட்டு குழப்பமான மன நிலையில் இருந்தனர்.

வீட்டிற்கு சென்ற சக்தி அவனுடைய துணிகளை ஒரு பையில் எடுத்து போட்டான். எங்க போகப் போற? அவன் அப்பா கேட்டார்.

நான் எங்க போனா உனக்கென்ன? குடிக்க போறேன்.

அதுக்கு எதுக்கு டிரெஸ் எடுத்து வக்கிற?

நான் கீழ விழுந்து வேற யாரோடவாது இருந்துட்டு அவளையும் கல்யாணம் பண்ணி விடுற நிலைக்கு போகாம இருக்க. எனக்கான உடையை பார்த்தும் என்னுடைய பொருட்களை பார்த்தும் பொண்ணுங்க கவனமா இருந்துப்பாங்கல்ல..அதுக்கு தான் இதை எடுத்துட்டு குடிக்க போறேன் என்று அவன் செல்ல,

இனி நீ குடிக்க கூடாது..அம்மா கூற, இத்தனை நாள் என் மீது இல்லாத அக்கறை உனக்கெதுக்கு?

இங்க பாரு நாளைக்கு நாம என்னோட தம்பி குடும்பத்தை பார்க்க போகணும் என்றார். நான் விழித்திருந்தால் பார்க்கலாம் என்று அவன் செல்ல அந்த பொண்ணு இவனை மயக்கி வச்சிருக்கா..என்று சத்தமிட,

பக்கத்து வீட்டம்மா அவரிடம், உன் பிள்ளை பொண்டாட்டிகிட்ட தான மயங்கி இருக்கான். அடுத்தவட்ட இல்லை..என்று பேச, அந்த மலடிக்கு என் பிள்ளை வேண்டுமா? நான் நாளைக்கே என் தம்பி பொண்ணை பேசி முடிக்க போறேன் என்றார்.

ச்சே..நீயெல்லாம் பொம்பளையாடி. அந்த பொண்ணு எந்த நிலையில இருக்கா. இந்த நேரத்துல அவ புருசனுக்கு வேற பொண்ணை கட்டி வக்க போறேன்னு வாய் கூசாம சொல்ற?

அவன் என்னோட மகன். நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். நீ உன் வேலைய பார்த்துட்டு போடி என்றார். பக்கத்து வீட்டு அம்மாவால் இதை பற்றி அனைவருக்கும் தெரிய வந்தது.

அந்த பையன் சற்று நேரம் முன் தான் அந்த பொண்ணுக்காக அப்படி அழுதான். ஆனால் இப்ப பாரேன் வேற பொண்ணை கட்டிக்க போறானாம் என்று எல்லாரும் பேசினர். இரவு நேரத்தில் ஹாஸ்பிட்டலை எட்டியது இவ்விசயம். அதற்கு மேல் அவளால் நடிக்க முடியாமல் அழுதாள் மாலினி. அவள் பெற்றோராலும் அவளை சமாதானப்படுத்த முடியவில்லை. இதை தெரிந்து சக்தியை தேடிக் கொண்டிருந்தாள் வசுந்தரா.

சக்தி வீட்டில் அவனை தேடி வேலுவும் மறையும் செல்ல அவன் அம்மாவும் அப்பாவும் அவர்களை விரட்டினர். அவர்கள் கோபமுடன் அவனை தேடினர். ஆனால் சக்தி கிடைக்கவில்லை. பசங்க எல்லாரும் சக்தியை தான் தேடிக் கொண்டிருந்தனர். வசுவை பார்த்த மாலினி அவளை கட்டிக் கொண்டு அழுதாள். அவளாலும் என்ன சொல்ல என மாலினியை சிரமத்துடன் பார்த்தாள். பிரதீப் அனைவரிடமும் நாளை அனைத்தையும் பார்க்கலாம். யாரும் வெளியே சுற்றாதீர்கள். ஏற்கனவே பிரச்சனை அதிகமாயிற்று என சொல்ல அனைவரும் சென்றனர்

பிரகதி வேலை செய்யும் இடத்திற்கு வெளியே இருந்து அர்ஜூன் அவளை பார்க்க, அங்கே அழகழகான ஆடைகளை பார்த்து ஸ்ரீக்கு வாங்கலாம் என உள்ளே செல்ல, பிரகதி அவனை பார்த்து, இப்ப பேசலாம் முடியாது போ..என்றாள்.

ஓனரை பார்த்த அர்ஜூன்..சார், இந்த பொண்ணு என்னை வெளியே போக சொல்லுது. நான் ஆடை வாங்கலாம் என்று நினைத்தேன்.

எம்மா, ஒழுங்கா வேலையை பாரும்மா அவர் திட்டினார்.

அடப்பாவி, இப்படி கோர்த்து விடுறியே? என்று பல்லை கடித்த பிரகதி, சார்..நான் அப்படி சொல்லலை. தவறாக புரிஞ்சுக்கிட்டாங்க சார். இதோ காட்டுகிறேன் சார் என்று வாங்க சார் என்று அர்ஜூனை அழைத்தாள். அவன் சிரித்துக் கொண்டு அவளுடன் சென்றான்.

அதே கடையில் மேல் ஃப்ளோரில் அஜய் குடும்பம் மொத்தமும் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்தனர். அஜய் இந்த கொலைகாரனை பிடிக்கும் வரை இங்கிருந்து வர மாட்டேன்னு சொன்னதால் அவனுக்காகவும், ஒருவாரம் அவனுடைய அண்ணன் அண்ணியும் இங்கே இருக்க முடிவு செய்ததால் அவர்களுக்காகவும் தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர்.

அர்ஜூனிடம் ஆடையை காட்டினாள். அவன் பார்த்துக் கொண்டே நின்றான். அந்நேரம் கீழே ஓடி வந்த அஷ்வினை பார்த்து அர்ஜூன் முகம் மாறியது.

அங்கிள் என்று அஷ்வின் அழைக்க, அர்ஜூன் கோபமாக நடந்தான். அர்ஜூன்..என்று பிரகதி சத்தமிட, அனைவரும் அவளை பார்த்தனர். மேலிருந்து அவர்கள் அனைவரும் பார்த்தனர். நாக்கை கடித்த பிரகதி..கேமிராவை பார்த்து தயங்கினாள்.

அர்ஜூன்..அவளிடம் வந்தான். அவளுக்கு மேசேஜ் வந்தது. ஓனர் மீட் பண்ண சொல்லி இருந்தது. வா,…என்று அவன் அழைக்க, அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற பிரகதி, அவன் உன்னை அழைத்தான் என்றாள்.

அர்ஜூன் மீண்டும் செல்ல, சார்.. டிரெஸ் வாங்காம போறீங்க? உங்க லவ்வர் கோபிச்சுக்க போறாங்க என கத்தினாள். பிரகதி..என்று பல்லை கடித்த அர்ஜூன் அவளை முறைக்க, அவள் அஷ்வினை தூக்கி, என்னன்னு கேளு? என்றாள்.

அவன் அஷ்வினை பார்த்து விட்டு, அவன் ஸ்ரீக்காக வாங்கிய ஆடையை வாங்கி விட்டு வேகமாக சென்று விட்டான். பிரகதி அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். திரும்ப வந்த அர்ஜூன்..அவளிடம் ஓர் ஜூஸ் பாட்டிலை கொடுத்து விட்டு அஷ்வினை முறைத்து செல்ல, அஷ்வின் அழுவது போலானான். அவன் அம்மா வேகமாக கீழிறங்க அவரை தடுத்த அவளது கணவன் இரு..அந்த பொண்ணு என்ன பண்றான்னு பார்க்கலாம் என்றார்.

பிரகதி அஷ்வினை பார்த்து, உன்னோட அம்மா, அப்பா எங்கே? கேட்டாள். அவங்க என்று அஷ்வின் மேலே பார்க்க எல்லாரும் மறைந்து கொண்டனர். சரி, என்னோட வர்றீயா? கேட்டாள். அவன் தலையசைக்க,..ஓனர் அறைக்கு அழைத்து சென்றாள்.

அவர் அவளை திட்டினார். சாரி சார்..இனி கவனமாக இருப்பேன் என்று கூறி விட்டு, நாளை எட்டு மணிக்கே வந்துடுறேன் சார். இப்ப போகலாமா? கேட்டாள்.

கஷ்டமர் இருக்கும் போது என்று அவர் அஷ்வினை பார்த்தார்.

இந்த பையன் என்று அவர் கேட்க, அஜய் அப்பா பெயரை கூறி அஷ்வின் அவர் பெயரன் என்று கூறினாள். அவர் அவனிடம் வந்து பேசினார். ஆனால் அவன் அமைதியாகவே இருந்தான்.

சார், அவனுக்கு ஏதோ பிரச்சனை? அவனுக்கு என்னை தெரியும்? அதனால் அவனை சரி செய்ய தான் இப்ப கிளம்புறேன்னு சொன்னேன் என்றாள்.

சரிம்மா, நீ பேசி சிரிக்க வச்சிரு என்று நீ கிளம்பும்மா என்றார்.

அவள் அஷ்வினுடன் வெளியே வந்து, ஐஸ்கிரீம் வாங்கி கையில் கொடுத்து அவனருகே அமர்ந்து, அர்ஜூனை பற்றி கேட்க, அவன் அனைத்தையும் சொன்னான்.

சரி, நீ எதுக்கு அப்பா இல்லைன்னு கிண்டல் பண்ண?

அது வந்து..அனுவை கரெக்ட் பண்ண பார்த்தேன் என்றான். அவன் குடும்பத்தினர் மெதுவாக கீழே வந்து மறைந்து இவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தனர். வெளியே கார் ஒன்று இவர்களை கவனித்துக் கொண்டிருந்தது.

அஜய்..பிரகதியை பார்த்து, இங்கே வேலை செய்கிறாளா? ஏற்கனவே இருக்கிற பிரச்சனையில் இது தேவையா? சிந்தித்தான். பின் தான் அர்ஜூனுடன் நடந்ததை பார்த்தான். அவன் பொருட்கள் வாங்குவதை போல் அவன் குடும்பத்து ஆட்களுக்கு தெரியாமல் வந்து அவனும் இருவரும் பேசுவதை கவனித்தான். இவர்களை ஓனர் உள்ளிருந்து புன்னகையுடன் பார்த்தார்.

அனுவை கரெக்ட் பண்ணவா? என்று பிரகதி சிரித்தாள்.

ஹலோ. சிரிக்காதீங்க என்றான்.

சரி சிரிக்கலை. எதுக்கு அவளை கரெக்ட் பண்ணனும்?

அவன் சுற்றி பார்த்து விட்டு, லவ் பண்ண..என்றான்.

லவ்வா?

ஆமா, அவ க்யூட்டா இருக்கால்ல..

க்யூட்டா இருந்தா லவ் பண்ணலாமா?

ம்ம்..பண்ணலாமே? என்றான்.

சரி, லவ்ன்னா என்ன?

அவன் சிந்தித்தான். ஆமா, லவ்ன்னா என்ன? கிஸ் பண்ணுவாங்க. ஜாலியா ஊர் சுத்தலாம் என்றான்.

உனக்கு யார் இதெல்லாம் சொல்லி கொடுத்தது?

யாருமில்லை. நான் தான் சினிமா பார்ப்பேனே?

சினிமாவா? அதுவும் ஒரு வேலை தான். சினிமால நீ பார்க்குற யாரும் உண்மையான ஹீரோவா, ஹீரோயினா இருக்க மாட்டாங்க? லவ் மட்டும் எப்படி உண்மையா இருக்கும்? அவங்க பணத்துக்காக நடிக்கிறாங்க அவ்வளவு தான் என்றாள் பிரகதி.

அப்ப லவ் யாரிடமும் இருக்காதா?

லவ் எல்லாருக்கும் இருக்கும். அது கிஸ் கொடுக்கிறதால மட்டும் வராது. எல்லாரிடமும் வராது. நம்முடைய ஸ்பெசல் பர்சனிடம் மட்டும் தான் வரும்.

அனுவுக்கு என் மேல லவ் வருமா?

நீ நினைக்கிற மாதிரி எல்லாம் சொன்னவுடன், கேட்டவுடன் லவ் வராது. நமக்கு யார் மேல முழுசா நம்பிக்கை இருக்கோ அவங்களிடம் வரும். சில நேரங்களில் நாமே அவங்களை தேடுவோம். அவங்கள விட்டு பிரிஞ்சு இருக்கவே முடியாது என்று கண்கலங்கினாள்.

அழுறியா? அஷ்வின் கேட்க, இல்லையே என்று அவன் வாயை துடைத்து விட்டு, இப்ப நீ லவ் பண்ணா ரொம்ப வருசம் அவங்களுக்காக காத்திருக்கணும். உன்னால காத்திருக்க முடியுமா?

நான்..

நோ..முதல்ல நீ படிக்கணும். நிறைய தெரிஞ்சுக்கணும். உனக்கான வாழ்க்கையை இப்ப அம்மா, அப்பா, உன்னுடைய குடும்பத்துடன் தான் இருக்கணும். நீ பெரிய பையனா வளர்ந்த பின் லவ் பண்ணு. ஆனால் இப்ப படிப்பு தான் முக்கியம். நல்லா எஞ்சாய் பண்ணு. யாரிடமும் என்ன பேசினாலும் யோசித்து பேசணும்.

சரி. நீ அந்த குட்டிப்பையனிடம் மன்னிப்பு கேட்டாயா?

மன்னிப்பா? நான் கேட்கமாட்டேன். அவன் அனுவிடம் பேசுறது பிடிக்கலை என்றான்.

பிரகதி புன்னகையுடன், அவன் அனுவுக்கு யாருன்னு தெரியுமா?

யாரு?

அனுவோட தம்பி. அவனோட விளையாடாம வேற யாருடன் விளையாடுவா? நான் சொன்ன மாதிரி அனு சரியா இருக்கா. அவ குடும்பத்தோட தான் டைம் ஸ்பென்ட் பண்றா? நீ தான் அவளை யோசிக்கிற? உனக்கு உன்னோட குடும்பம் தான் முதல்ல முக்கியம்..புரியுதா?

அப்ப அனு?

அவ குட்டிப்பொண்ணு. அவள் வளர்ந்த பின் பார்த்துக்கோ. நீ தான் அவள் உன்னோட பேச மாட்டேன்னு சொன்னா..விடு. அவளுக்கு நீ தெரியாம பண்ணிட்டன்னு தெரியலை. முதல்ல ராக்கியிடம் மன்னிப்பு கேட்டுரு. எனக்கு அனுவை நல்லா தெரியும். அனுவுக்கும் என்னை நல்லா தெரியும்.

அப்படின்னா, நீங்க எனக்காக பேசுவீங்களா?

இப்ப முடியாது. நீ பெரிய பையனா வளர்ந்த பின்..நாம பார்க்க முடிந்தால் அனுவிற்கு உன்னை அறிமுகப்படுத்துகிறேன்.

பிராமிஸ் அவன் கேட்க, பிராமிஸ் என்றாள்.

எனக்கு இன்னொரு கெல்ப் பண்றியா?

இன்னொன்றா? என்ன வேண்டும்?

இல்லை. சித்தப்பூ..என்னிடம் பேச மாட்டிங்குது. நீ பேச வைக்கிறியா?

நானா? நான் பேச வைக்க..என்று யோசித்த பிரகதி. அவர் முன் நீ ராக்கியிடம் மன்னிப்பு கேளு. அப்புறம் அவரிடமும் சாரி சொல்லி விட்டு, இனி இந்த மாதிரி பேச மாட்டேன்னு சொல்லு.

அப்பா இல்லைன்னு கிண்டல் பண்ணா.. என்ன தப்பு?

உனக்கு அம்மா, அப்பா எல்லாரும் இருக்காங்கல்ல. ஆனால் அவன் அப்பா அவனை ரொம்ப கஷ்டப்படுத்தினாங்க. அதனால் அவனுக்கு அப்பா பிடிக்காது.

என்ன பண்ணாங்க? அவன் கேட்க, பிரகதி தவித்து போனாள். மூச்செடுத்து விட்டு..அவன் அம்மாவை அடிப்பாங்க. இருட்டு அறையில பூட்டி போட்ருவாங்க..

உனக்கு அவனையும் தெரியுமா?

அவனை விட, அவன் அப்பாவை நன்றாக தெரியும் என்று அவள் முகம் கோபத்தில் சிவந்தது. பிரகதி வேலை செய்யும் கம்பெனியில் தான் அவன் மேனேஜராக இருந்தான். அவ்வப்போது அவளிடமும் வம்பு செய்வான்.

உனக்கு என்னோட சித்தப்பூவை தெரியுமா? நல்லா பேசின?

தெரியும். உன் சித்தப்பூ உதவியும் செய்வார். என்னை கடுப்பாக்கவும் செய்வார்.

அவரை உனக்கு பிடிக்குமா?

எதுக்கு இப்படி கேள்வி கேக்குற? என்று கன்னத்தில் கை வைத்து கேட்டாள். இங்க வா..என்று அவள் காதை இழுத்து, என் சித்தப்பூக்கு எந்த பொண்ணுமே பிடிக்காது. ஆனால் பொண்ணுங்க பின்னாடியே சுத்துவாங்க. அதான் உனக்கு பிடிக்குமான்னு கேட்டேன்.

இல்லை. எனக்கு யாரையும் காதலிக்கும் மனநிலையில் இல்லை. என் வாழ்க்கையில் என்றோ எல்லாமே முடிந்து விட்டது. எனக்கு எதுவுமே பிடிக்கலை. அதுவும் உன் சித்தப்பூ இருக்காரே..நான் இரண்டாயிரம் தான் கொடுக்கணும். ஆனால் அது..இதுன்னு..என்னிடம் இருபதாயிரம் கேட்கிறார். நான் என்ன செய்வது?

எனக்கு அம்மா, அப்பா தான் காசு தருவாங்க. நீ உன்னோட அம்மா, அப்பாகிட்ட கேட்கலாமே?

அம்மா, அப்பாவா? எனக்கு தான் யாருமில்லையே?

யாருமே இல்லையா?

இல்லை.

பாட்டி..

இல்லை.

தாத்தா..இல்லை.

சித்தப்பூ..என்று அவன் கேட்க, எனக்கு யாருமில்லை. யாருமே எனக்கு வேண்டாம். அவங்க இருந்த போதும் அவங்களுடன் நான் சந்தோசமாக இருந்ததில்லை. அவங்க போன பின்னும் சந்தோசமா இருக்க முடியலை என்று அவளை மீறி கண்ணீர் வந்தது.

அவன் எழுந்து பிரகதி கண்ணீரை துடைத்து விட்டு, என்னோட எங்க வீட்டுக்கு வர்றியா? பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, சித்தப்பூ..இன்னும் நிறைய பேர் இருக்காங்க.

அவள் புன்னகையுடன், இத்தனை பேரை வச்சுக்கிட்டு நீ அனுவை தேடுற? பேச்சை மாற்றினாள்.

நான் பிராமிஸ் பண்ணி இருக்கேன். இனி அனுவை பற்றி பேச மாட்டேன்.

ஹேய்..நான் அனுவை மட்டும் சொல்லலை. இப்ப உனக்கு லவ் வேண்டாம்ன்னு சொன்னேன். அனுவோட ப்ரெண்டா பேச முடிஞ்சா பேசிக்கோ. நாம மறக்க நினைக்கிற விசயம் தான் நம்மை நினைக்க வைக்கும் என்றாள்.

அஷ்வின் அவள் கழுத்தை கட்டிக் கொண்டு, நாம ப்ரெண்ட்ஸ் ஆகிக்கலாமா? கேட்டான். அவள் கையை நீட்ட கையை பிடித்துக் கொண்டு கீழே குதித்தான்.

தனியா என்ன பண்ற? வா..உன்னை உன் அம்மாவிடம் விட்டு செல்கிறேன் என்று அவனை துக்கினாள்.

அத்தை..இந்த பொண்ணு சூப்பரா பேசுறா? ஆனால் ஏதோ பிரச்சனை போல. ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாள் போல..என்று திரும்பி பார்த்தார் அஷ்வின் அம்மா. அஜய் பிரகதியையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து, அத்தை கிரிஷ்ஷை பாருங்க. அவன் அந்த பொண்ணையே பார்க்கிறான்.

ரெண்டு பேருக்கு ஆகவே ஆகல. உதவி செய்தாலும் அவளிடம் கடுப்பாக தான் பேசுறான்.

அத்தை, அது கடுப்பா? காதலான்னு? இந்த ஒரு வாரத்துல பார்த்துட்டு சொல்றேன்.

சும்மா இரும்மா.

அத்தை, உங்களுக்கு அந்த பொண்ணை பிடிக்கலையா?

பிடிக்கும். ஆனால் இருவரும் சண்டை தானே போடுறாங்க?

மோதல் தான் காதலாகும் அத்தை. அசு குட்டி சொன்னது போல அந்த பொண்ணை ஏதாவது காரணம் சொல்லி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போகலாமா?

வீட்டுக்கா? உன்னோட மாமா? அவ்வளவு தான்..

முயற்சி செய்து பார்க்கலாம். நான் இங்கிருக்கும் வரை அவளை பார்த்து அவள் நடவடிக்கையை சொல்றேன். அப்பப்ப மாமாவிடம் போட்டு வையுங்க. பார்க்கலாம் என்றாள்.

சரிம்மா..இந்த பொண்ணை அவனே ஓ.கே பண்ணா கூட நல்லது தான் என்றார்.

பிரகதி படியில் ஏற, அவளை மறித்து அஷ்வின் அம்மா வந்து, எங்கடா போன? என்று அவனை திட்டிக் கொண்டே பிரகதியிடம் ரொம்ப “தேங்க்ஸ் சிஸ்டர்” என்று அவனை அவளிடமிருந்து வாங்கிக் கொண்டாள்.

எல்லாரும் அவனை விட்டு எங்க போனீங்க? பயந்துருவான்ல?

யாரு? இவன் பயப்படுவானா? என்று அவனிடம், உன்னை உட்கார வைத்து தானே பொருட்களை வாங்க போனேன் என்று எங்க கிரிஷ் அந்த கொலைகாரனை பிடிக்கும் வரை இங்கே தான் தங்க போறானாம். நாங்களும் ஒரு வாரத்துக்கு இங்க தான் இருக்க போறோம். நாங்க அமெரிக்கால்ல இருக்கோம். உடனே கிளம்ப முடியாதுல்ல. அதான் இங்கேயே தங்குறோம்.

உனக்கு அந்த கொலைகாரனை தெரியுமா? அவன் எப்படி எல்லாரையும் கடத்துக்கிறான்? முகமூடி பயன்படுத்துவானாமே? அவள் கேட்டுக் கொண்டே போக..பிரகதி புன்னகையுடன், நீங்க நிறைய படம் பார்ப்பீங்களோ?

ஆமா, என்ன தமிழ் படம் அளவுக்கு ஏதாவது வர முடியுமா?கேட்க, ஆமா..ஆமா..சினிமா பைத்தியம் என்ற அஜய் அண்ணா..நீ எப்படிம்மா? படம் பார்ப்பாயா?

இல்ல, எனக்கு நேரமிருக்காது.

என்ன செய்வ?

நான் பார்ட் டைம் வொர்க் பார்ப்பேன்.

பார்த்தியா? சின்ன பொண்ணு வேலையெல்லாம் பார்க்குறா? நீ பாரு சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குற?

நான் சாப்பிட்டு தூங்குவதை நீங்க பார்த்தீங்களா? ஏதாவது சொல்லலைன்னா உங்களுக்கு தூக்கம் வராதே?

ஆமா, உன்னை சொல்லி எனக்கு என்ன ஆக போகிறது? இருவரும் சண்டை போட, அஷ்வின் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹலோ..என்று பாவமாக கையை அவர்களிடையே வைத்து பிரகதி ஆட்ட, இருவரும் நிறுத்தி அவளை பார்த்தனர். பையனை வச்சுக்கிட்டு சண்டை போடாதீங்க என்று சுற்றி பார்க்க அங்கிருந்தவர்கள் அவர்களை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அஜய் மறைவிலிருந்து வெளியே வந்து, அண்ணா.. எல்லாத்துக்கும் பில் போட போ என்று பிரகதி கையை பிடித்து இழுத்தான்.

சார், என்ன பண்றீங்க? விடுங்க எல்லாரும் பாக்குறாங்க பிரகதி பதறினாள்.

கிரிஷ் என்ன பண்ற? அவன் அண்ணன் கோபமாக அவன் கையை பிடிக்க, நீ சொன்னதை செய். நான் இவளிடம் பேசணும். அவ்வளவு தான்.

அதுக்கு ஏன் இப்படி பிடிக்கிற? அவ கையை விடு என்று அஷ்வின் அம்மா சொன்னாள்.

ஆனால் அவன் காதில் விழாதது போல் பிரகதியை வெளியே இழுத்து சென்றான். அக்கடையின் பின் பக்கம் இழுத்து சென்று அவள் கையை விட்டான். அவள் கையை உதறிக் கொண்டே, நான் உங்களை என்ன சார் செஞ்சேன்? கேட்டாள்.

அவளை சுவற்றில் தள்ளி கையை சுவற்றில் வைத்துக் கொண்டு, நீ இங்க என்ன பண்ற?

நான் இங்கே வேலை தான் பார்க்கிறேன்.

வேலையா? எதுக்கு?

எதுக்கா?

என் தேவைக்கு.

உனக்கு என்ன தேவைப்பட போகிறது?

ஏன் சார், எனக்கு எதுவுமே தேவைப்படாதா? நான் ஒருவருக்கு இருபதாயிரம் தரணும். அதுக்கு கூட வேலை செய்யலாம் என்றாள் கூலாக. ஆனால் அவன் முகம் மாறியது.

அவன் அவளை நெருங்கி வர..பயந்த பிரகதி..சார் தள்ளிப்போங்க என்று அவனை தள்ளினாள். அவன் இம்முறை வலுக்கட்டாயமாக அவள் கையை இறுக்கி நிற்க வைத்து மீண்டும் அவளை நெருங்கி முகத்தினருகே வந்தான். அவளுக்கு பயத்துடன் உதடுகள் நடுங்கியது. அதை பார்த்து புன்னகைத்து அவளது உதட்டை அவன் கையால் பிடித்து கண்களால் வருடினான். அவள் கண்ணை விரித்து பார்த்து, சார்..என்றாள்.

அவன் கையை எடுத்து விட்டு, நான் உனக்கு உதவி தான் செய்தேன். ஆனால் நீ பணம் தந்த. அதனால் தான் இருபதாயிரம்ன்னு சொன்னேன். அதுக்காக வேலைக்கெல்லாம வருவ? கேட்டான்.

ஆமா சார், வந்தா தான குடுக்க முடியும்.

எனக்கு எதுவும் வேண்டாம். நீ பத்திரமா வீட்டுலயே இரு என்றான்.

சார், நான் உங்களுக்கு கொடுத்திடுறேன். ஆனால் வேலையை விட முடியாது. எனக்கு பணம் தேவை. எல்லாவற்றிற்கும் யாரையும் எதிர்பார்க்க முடியாது என்றாள்.

யாரையும் எதுக்கு எதிர்பாக்குற? நானே தாரேன் என்றான்.

சார், என்ன பேசுறீங்க?

இதுவும் ஒரு உதவி தானே?

உதவியா? எனக்கு தேவையில்லை என்றாள்.

தேவையில்லையா? என்று அவள் தோளில் கை வைத்தான். சார்..என்று அவன் கையை தட்டி விட்டான்.

ஆமா, எதுக்கு என் பேமிலியோட பேசுற?

உங்க பேமிலியோட நான் பேசலை சார். அவங்களா தான் பேச்சை ஆரம்பிச்சாங்க.

அவங்க பேசினா நீ பேசுவியா?

இப்ப அதனால என்ன சார்?

ஓ…அவங்களோட பேசி என்னை கரெக்ட் பண்ண பாக்குறியா? என்று மீண்டும் தோளில் கை போட, அவள் அவனை அறைந்தாள். கண்ணீருடன் போதும் சார் என்று அழுது கொண்டே அவள் செல்ல, உச்சு கொட்டிய அஜய் அவள் வழியை மறித்தான்.

அவள் கோபமாக வழியை விடுங்க சார் என்றாள்.

இல்லை. நான் இன்னும் பேசி முடிக்கலை.

எனக்கு உங்களிடம் பேச விருப்பமில்லை என்று அவள் நகர, தோட்டா ஒன்று அவளை தொடுவது போல் வந்து சுவற்றில் மோதியது.

ஏய்..என்று அஜய் தோட்டா வந்த திசையை பார்க்க, அவள் பயத்தில் உறைந்து நின்றாள். அவளுக்கு அர்ஜூனும் அபியும் கடைக்கு வந்து பேசியது நினைவுக்கு வந்தது. அவன் கொல்ல முயன்றவர்களை கொல்லாமல் விட்டதில்லை. ஆனால் எங்கள் அனைவரையும் விட்டு வச்சிருக்கான். காரணம் இருக்கும்ன்னு தோணுது. ஆனால் நீ கவனமா இரு..அவன் உன்னை மீண்டும் கொல்ல முயற்சிப்பான்னு நினைக்கிறேன்னு அர்ஜூன் சொல்லி விட்டு பிரச்சனை முடிந்த பின் வேலையை பார்த்துக்கலாம் என்று கூறி இருப்பான். ஆனால் பிரகதி தான் பழைய புராணத்தையே பாடி இருப்பாள். இவளிடம் பேச முடியாது என நேரம் தான் மாலினி பற்றி மற்றவர்கள் பேசியதை பார்த்து அவ்விடம் சென்றான்.

மீண்டும் தோட்டாக்கள் அவளை நோக்கி வர கண்ட அஜய் அவளை பிடித்து இழுத்துக் கொண்டு ஓடி வந்தான். அர்ஜூன் வெளியே தான் இருந்திருப்பான். பிரகதியை அஜய் இழுத்து செல்வதை பார்த்து பின்னே வந்து கவனித்திருப்பான். அவன் வேலை செய்வதை பற்றி கேட்பதை பார்த்து தான் நகர்ந்து சென்றிருப்பான். இப்பொழுது துப்பாக்கி சத்தம் கேட்டு அர்ஜூன் அவர்கள் பக்கம் வந்தான்.

மூவரும் பார்த்துக் கொள்ள, அர்ஜூன் என்றாள் பதட்டமுடன். அர்ஜூன் இவளை கூட்டிட்டி போ. ஒருவனை உயிரோட பிடித்தால் கூட போதும். எனக்கு சாட்சிக்கு ஆள் வேண்டும். நீ போ..அஜய் சொல்ல, சார் நீங்க கூட்டிட்டி போங்க என்று துப்பாக்கியை எடுத்தான் அர்ஜூன்.

அஜய் துப்பாக்கியை பார்த்து, அர்ஜூன் அதை கொடு. நான் பார்த்துக்கிறேன் என்று இருவரும் பேச, நான்கைந்து பேர் அரிவாளுடன் பிரகதியை பார்த்து வந்தனர். முகம் தெரியாமல் கருப்பு நிற முகமூடி அணிந்திருந்தனர்.

அர்ஜூன் போ..என்று அஜய் இருவர் முன்னும் வந்து நின்றான். அர்ஜூனுக்கும் சரியாக பட வில்லை. அவள் பதட்டமாக அஜய்யை பார்த்தாள்.

அர்ஜூன் துப்பாக்கியை வாங்கிய அஜய் போ..என்று கத்தினான். அஜய் சத்தம் கேட்டு அவன் குடும்பத்தினர் வெளியே வந்தனர்.

பிரகதி அவர்களை பார்த்து அர்ஜூன்..அவங்க என்றாள். பிரகதியை அர்ஜூன் அவர்களிடம் அழைத்து வர, அஜய் தனியாகவே அவர்களை தடுத்துக் கொண்டிருந்தான். சண்டையில் அஜய் தலையில் அடிபட்டது.

அர்ஜூன், அவருக்கு அடிபட்டிருக்கு வா..என்று பிரகதி இழுத்தாள்.

ஏய், என்ன பண்ற? நீ அவங்களோட இரு. உன்னை தான் கொல்ல வந்திருக்காங்க என்று அவளை திட்டிக் கொண்டே இழுத்தான் அர்ஜூன். அவன் கையை எடுத்து விட்டு, என்னால யாரும் ஹர்ட் ஆக வேண்டாம் என்று அஜய் பக்கம் ஓடி வந்தாள். பிரகதி நில்லு..கத்திக் கொண்டே அர்ஜூன் அவள் பின் ஓடி வந்தான்.

அஜய் கவனம் சிதைந்து பிரகதியை பார்க்க, அவள் அவனருகே வந்து விட்டாள். விழுந்தவர்கள் கூட பிரகதியை பார்த்து எழுந்தனர்.

அர்ஜூனோட போ..அஜய் கத்தினான். அவள் அழுது கொண்டே அவனை பார்த்து நின்றாள். அவர்கள் அவளை வெட்ட வந்தனர். அஜய் தடுக்க அர்ஜூனும் வந்தான். இருப்பினும் ஒருவன் வைத்திருந்த அரிவாள் பிரகதி கழுத்தருகே வர, அதை பிடித்து அவன் கையை முறுக்கி அரிவாளை கீழே விழ வைத்து அவனை ஓங்கி எத்தி தள்ளினார் காரிலிருந்து வந்த அஜய் அப்பா தேவராஜ். பிரகதியை விலக்கியவர் இருவருடனும் சேர்ந்து அவர்களை விரட்டினார்.

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வெளியே தெரியும்படி ஃவைபரில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளதால் பிரகதி அஷ்வினிடம் பேசியது, மூத்த மருமகள், மகன் அவளிடம் பேசியது, மறைந்திருந்து அஜய்யும் அவன் அம்மா அவளை கவனித்தது அனைத்தையும் பார்த்திருப்பார். அஜய் அவளை இழுத்து சென்றதையும் பார்த்து தான் இருந்தார்.

அப்பா..என்று அஜய் அழைக்க, பிரகதி அவரை பார்த்தார். ஆனால் அவர் அஜய் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். கல்யாண விழாவிற்கு தான் உன்னை அனுப்பினேன். என்ன செஞ்சுகிட்டு இருக்க? அவர் திட்டினார். அவர்கள் குடும்பமே பதறி அங்கே வந்தனர்.

சார்..என்று பிரகதி இடைபுகுந்து..சார், என் மேல தான் தப்பு. நான் தான் யார் சொல்வதையும் கேட்காமல் வேலைக்கு வந்தேன். அதை எச்சரிக்க தான் சார் என்னை அழைத்து வந்தார். நான் தான் தப்பா நினைச்சுட்டேன் என்று அஜய்யிடம் சாரி சார் என்றாள்.

பிரகதி, இங்க வா அர்ஜூன் மெதுவாக அழைக்க, என்ன? கேட்டாள்.

லூசு..லூசு..என திட்டிக் கொண்டே அவளை அவன் பக்கம் இழுத்து, சாரி சார்..நாங்க தான் பிரச்சனை. கிளம்புகிறோம் என்று அவர்கள் குடும்பத்தை பார்க்க, அவர்கள் அதிர்ச்சியுடன் பிரகதியை பார்த்தனர்.

அர்ஜூன்..எதுக்கு எல்லாரும் என்னையே பாக்குறாங்க? பிரகதி அர்ஜூனிடம் எக்கி அவன் காதருகே வந்து கேட்க, அஜய் முகம் கோபமாக மாறியது. அதை கவனித்து விட்டு, உன் பேரு என்னம்மா? அவர் கேட்டார்.

அவர்களை பார்த்துக் கொண்டே அவரை பார்த்து, பிரகதி சார் என்றாள்.

ஏய், என்ன பண்ற? புள்ளைக்கு மருந்தை போட்டு விடு..என்று அவர் மனைவியிடம் சொல்ல, அஜய் அவளை முறைத்துக் கொண்டு நின்றான். அவள் பாவமாக அர்ஜூனை பார்க்க, சார் நாங்க கிளம்புகிறோம் என்றான் அவன். மருந்தை அஜய் அண்ணன் காரிலிருந்து எடுத்து அம்மாவிடம் கொடுக்க, அஜய் அவளை முறைப்பதிலே கவனம் வைத்திருக்க, அவன் அம்மா மருந்தை போட்டார்.

ஷ்..ஆ..என்றான். அர்ஜூன் கையை எடுத்து விட்டு, ஆன்ட்டி..இப்படி போடக்கூடாது என்று அவள் அஜய்யிடம் வந்தாள். அர்ஜூனுக்கு என்ன சொல்லவென்று தெரியாமல் அவள் எண்ணிற்கு அழைத்தான். போனை பார்த்து விட்டு, அர்ஜூன் பக்கத்துல தான இருக்கேன். அப்புறம் எதுக்கு போன் செய்யுற? கேட்டவுடன் அஜய் அப்பாவும் அங்கிருந்தவர்களும் அவனை பார்த்தனர். அவன் பல்லை காட்டினான்.

மருந்தை வாங்கி..சார்..குனியுங்க என்று அஜய் குனிந்தவுடன் அவன் நெற்றியில் மருந்தை போட்டுக் கொண்டே ஊதினாள். மருந்தை போட்டவுடன் அவன் அம்மாவை பார்த்து, ஆன்ட்டி பார்த்தீங்கல்லா? சாருக்கு வலிக்கலை என்று புன்னகைத்தாள். அஷ்வின் அம்மா அஜய் அம்மாவை பார்த்து கண்ணை காட்ட, அஜய் நிமிர்ந்தாலும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் புன்னகைக்க, அர்ஜூன் போகலாமா? என்று அவனிடம் வந்தாள்.

அர்ஜூன் அவளை முறைத்து பார்த்தான். எதுக்குடா முறைக்கிற?

ம்ம்..சும்மா தான். சார் வாரோம் என்று நிற்காமல் இழுத்து செல்ல அவர்கள் அதே அதிர்ச்சி பார்வையை காட்ட, இவங்களுக்கு என்ன ஆச்சு? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி எல்லாரும் நல்லா தான இருந்தாங்க அர்ஜூன்.

அஜய் சார் அப்பா பத்தி உனக்கு தெரியுமா? என்று பேச, ஏய்..யெல்லோ சிட்டு,  “குட் நைட்” என்றான் அஷ்வின். அவள் புன்னகையுடன், “குட் நைட்”. “ஹாவ் ல நைஸ் டிரீம்” என்று கையசைத்து சென்றாள். அஜய்க்கு பிரகதி அவனுக்கு சொன்னதை போல் உணர்ந்தான். அவன் புன்னகைக்க, அவன் அப்பா அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்பா..நான்..நீ எதுவும் சொல்ல வேண்டாம். எங்க தங்க போறீங்க? கேட்டார்.

அர்ஜூன் பிரகதியிடம், அஜய் அப்பா மீது சுற்று கிராமத்து ஆட்களின் மரியாதையை பற்றி கூறினான். அவர் குடும்பத்தில் கூட யாரும் அவரை எதிர்த்து பேச மாட்டார்கள் என்று சொல்ல, அவள் பயந்து..அர்ஜூன் வண்டியை நிறுத்து. அதிகமா பேசிட்டேனோ?

அது என்ன பேசிட்டேனோ? அப்படி தான் பேசிட்ட?

அர்ஜூன்..வா. அவரிடம் மன்னிப்பு கேட்டுடலாம் என்றாள்.

ஏதாவது தப்பா நினைக்க போறாங்க.

டேய்..வண்டியை திருப்பு. ஒரே சாரி தானே. சொல்லிட்டு வந்திடலாம் என்று அவள் பிடிவாதம் செய்ய, அவனும் அவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர்.

அர்ஜூன் மறுபடியும் அவர்களிடம் வருவதை பார்த்து, “யெல்லோ சிட்டு” என்று அஷ்வின் அவர்கள் முன் ஓடி வந்தான்.

அர்ஜூன் வண்டியை நிறுத்த, அவனை தூக்குடா முணுமுணுத்தாள்.

வந்த வேலைய மட்டும் பாரு என்றான் அர்ஜூன்.

சின்ன பையன் தான? பாவம்ல பிரகதி அவனிடம் சொல்லிக் கொண்டே இறங்கினாள்.

நீயும் எங்களோட வர்றியா? அஷ்வின் கேட்க, அத்தை நாம் தேவையில்லை. என் மகனே போதும் என்றாள் அஜய் அண்ணி.

எங்க வர்றியான்னு கேட்குறீங்க? என்று அஜய் அப்பா அஷ்வினை தூக்கினார்.

நம்ம கூட வீட்டுக்கு தான்..என்றவுடன் பதட்டமானாள். திரும்பி அர்ஜூனை பார்த்தாள்.

சார், சாரி. நீங்க யாருன்னு தெரியாம கொஞ்சம் அதிகமா பேசிட்டேன் என்று பயந்தவாறு முகத்தை வைத்தாள்.

கொஞ்சமா? அதிகமா? என்று அஜய் அண்ணன் கேட்க, அவள் அவரை பார்த்தார்.

அதெல்லாம் ஒன்றுமில்லை. இதுக்காகவா போயிட்டு திரும்ப வந்தீங்க?

ஆமா சார் என்றாள். அர்ஜூன் அஜய்யை பார்த்து தங்கும் இடம் தயாரா இருக்கு. இன்று இரவு மட்டும் எட்டு பேர் அங்க இருக்காங்க. கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்கோங்க. காலையில அவங்களுக்கு இடத்தை மாத்திடுறோம் என்றான்.

பசங்களா இருக்காங்களா? தேவா கேட்க, இல்லை.. பொண்ணுங்களும் அவங்க பெற்றோரும் இருக்காங்க.

சரி என்றார். அஜய் அஷ்வினை பார்த்தான். அவன் பிரகதியை பார்க்க, அவள் அவனிடம் சைகையில் ஏதோ சொல்ல அனைவரும் அவளை பார்த்தனர்.

அதை கண்ட அர்ஜூன், இவ வேற..என்று சார், பிரகதியை விட்டுட்டு வந்து கூட்டிட்டு போறேன் என்றான்.

தம்பி, எதுக்காக இரண்டு தடவை அலையுறீங்க? நாங்க கார்ல தான வாரோம். உங்க பின்னாடியே வாரோம் என்று அவன் அம்மா கூற,

அம்மா..அப்பாவோட நீ போகலையா? கேட்டான் அஜய்.

அம்மா தேவராஜை பார்த்தாள். நானும் வாரேன் என்றார். அனைவரும் அதிர்ச்சியுடன் இவர் வாராரா? என்று பார்க்க, ஏன் நான் வரக் கூடாதா? என்று அவர் கேட்டார்.

வாங்க மாமா, போகலாம் என்றாள் அஜய் அண்ணி.

அம்மா, என்னோட ரோபோவை காணோம். எடுத்துட்டு வரவா? என்று அஷ்வின் கடை பக்கம் ஓட, அஜய் அவனாகவே அவன் பின் சென்றான்.

முதல்ல இந்த பொண்ணை விட்டுட்டு வந்திரு..என்றார் தேவராஜ். அர்ஜூனுடன் அவள் சென்று விட்டாள். அஜய்யும் அஷ்வினும் வெளியே வந்து பிரகதியை தேடினர்.

பிரகதி சொன்னது போல் அஷ்வின் மன்னிப்பு கேட்டிருப்பான். அதனால் அஜய்யும் கோபத்தை விட்டிருப்பான்.

அந்த பொண்ணு அவனோட போயிட்டா. அஷ்வின் கண்ணா நீ லேட் பண்ணிட்ட என்று அஜய் அண்ணி அஜய்யை பார்த்தாள். அவன் அப்பாவும் பார்த்தார்.

அப்பா..அர்ஜூன் வீட்டு பக்கம்ன்னு தான் சொன்னான். எனக்கு அவன் வீடு தெரியும். போகலாமா? அஜய் கேட்க, அவரும் தலையசைத்தார். அனைவரும் காரில் ஏறினர். அவர்கள் கிளம்பினார்கள்.

Advertisement