Advertisement

அத்தியாயம் 126

சக்தி அடிபட்ட கையோடு மண்டபத்தினுள் உள்ளே வந்தான். சாப்பிட்டு வந்த அவன் பெற்றோர் அவனை பார்த்தும் பார்க்காதது போல் சென்று அமர்ந்தனர். மாலி..இங்க வா..ஸ்மெல் ரொம்ப இல்லை..என்று வசு சத்தம் கேட்டு சக்தி பார்த்தான்.

மாலினி வசுந்தராவுடன் ஓர் ஓரமாக அமர்ந்தாள். அவள் தனியே மாலினிக்காக சாப்பாடு எடுத்து வந்திருந்தாள். வசுந்தரா எடுத்து வைக்க மாலினி சாப்பிட்டாள். இருவரும் மரத்தின் அடியே தான் அமர்ந்திருந்தனர். ஆனாலும் மாலினி சாப்பிட முடியாமல் வாமிட் செய்து கொண்டிருந்தாள். சக்தி அவளை பார்த்துக் கொண்டே உள்ளே சென்று சத்யாவிடம் வந்தான். அவன் தயங்கிக் கொண்டே சக்தியை பார்க்க வாழ்த்துக்கள் என்று கையை குலுக்கி விட்டு இறங்க சென்றான். வேலு அவனை நிறுத்தி விட்டு மாலினியை அழைத்து வந்தான்.

எதுக்கு கூப்பிட்டீங்க? எனக்கு ஸ்மெல் ஒத்துக்கலை வீட்டுக்கு போகணும் பேசிக் கொண்டே வந்த மாலினி சக்தியை பார்த்து நின்றாள். வேலுவை பார்த்து, நான் வீட்டுக்கு கிளம்புகிறேன் என்றாள்.

நீ பேச வேண்டாம். அவனோட சேர்ந்து நில்லு போதும் என்றான்.

அவள் யோசனையுடன் சக்தியிடம் வந்து நின்றாள். அவன் அவள் கையை பிடிக்க, அவனை முறைத்து விட்டு தள்ளி நின்றாள்.

சேர்ந்து நில்லும்மா புகைப்படம் எடுப்பவர் சொல்ல அமைதியாக நின்றாள். புகைப்படம் எடுத்தவுடன் அவள் செல்ல சக்தி, சத்யா வேலுவிடம் நன்றி சொல்லி விட்டு அவள் பின்னே சென்று கையிலிருந்த உறையை கொடுத்து விட்டு மொய் வைக்கும் இடத்திற்கு சென்று மாலினி, சக்தி பெயரை சேர்த்து எழுத அங்கிருந்தவர் அவனை ஒருவாறு பார்த்தார். ஆனால் அவன் நிற்காமல் வெளியே வர, சரவணனும் கண்ணனும் அவனை பிடித்து சாப்பிட்டு போ..என்றனர்.

எனக்கு பசிக்கலை. நான் வாரேன் என்று அவன் செல்ல, இருடா சாப்பிட்டு போ..என்று அவர்கள் இழுக்க, ப்ளீஸ் நான் போகணும் என்றான். இருவரும் அவனை விட்டனர்.

மாலினி சக்தி கொடுத்த கவரை பிரித்து பார்த்தாள். அதில் அவள் எப்படி இருந்தால் திரும்ப வருவேன்னு சொன்னாலோ அதே போல் இருப்பதாக கூறி இருந்தான். கௌதம் அவளிடம் வந்து அதை வாங்கி பார்த்து, போ..என்றான்.

அவள் அவனை பார்க்க, அவரை பிடி..என்றான்.

சக்தி வெளியே சென்று கொண்டிருந்தான். மாலினி வேகமாக நடந்து வந்தாள். அவளால் முடியவில்லை. மீண்டும் வாமிட் வர..எடுத்து விட்டு அவனை பார்த்தாள். அவன் இல்லை. சென்று விட்டான் என அழுது கொண்டே வெளியே வந்தாள். அவளுக்கு மயக்கம் வந்தது. அவள் மயங்க நிலைக்கு போக கூடாது என தண்ணீரை அவள் மீது அடித்தாள். ஆனாலும் அவளுக்கு ஒருமாதிரி இருக்க நடக்க முடியாமல் சேரை பிடித்து நின்றாள்.

சக்தி பின்னிருந்து அழைத்துக் கொண்டே அவளை தூக்கினான். உங்களுக்கு கை? என்று கையிலிருந்த கட்டை பார்த்துக் கொண்டே மயங்கினாள்.

ஏய், என் பிள்ளையை என்ன பண்ற? மாலினி அப்பா ஓடி வந்தார்.

அவளுக்கு தான் முடியலைல்ல. அப்புறம் எதுக்கு கூட்டிட்டு வந்தீங்க? கேட்டுக் கொண்டே நடந்தான். அவனது மரியாதையான பேச்சில் அவனை பார்த்துக் கொண்டே நின்றார் அவன் மாமனார்.

எல்லாரும் வீட்டுக்கு போங்க. நான் அவளை பார்த்துக்கிறேன் என்று அவன் கை வலியை காட்டிக் கொள்ளாமல் அவன் வீட்டிற்கே தூக்கி சென்றான். ரோட்டில் அனைவரும் அவனை ஆச்சர்யமாக பார்த்தனர். பொழுதுக்கும் குடிப்பவன், சாமியே கும்பிடாதவன், நெற்றியில் திருநீறு..அதுவும் சண்டை போட்டு போன பொண்டாட்டியை தூக்கிப் போறான் என்று பார்த்துக் கொண்டே சென்றனர். இதை பார்த்த சக்தி நண்பர்கள் கோபமானார்கள். சத்யா திருமணத்தை விட சக்தி பற்றிய பேச்சே ஊரெங்கும் வலம் வந்தது.

வீட்டிற்கு வந்து அவளை படுக்க வைத்து..காற்றாடியை போட்டு விட்டு, வெந்நீர் வைத்து அவளுக்கு துடைத்து விட்டு காலுக்கு ஒத்தடம் கொடுத்தான். சற்று நேரத்தில் அவள் விழித்தாள்.

உங்க கைக்கு என்னாச்சு? கேட்டாள்.

ஒன்றுமில்லை. கீழே விழுந்திட்டேன்.

திடீர்ன்னு எல்லாத்துக்கும் எப்படி ஒத்துக்கிட்டீங்க?

எனக்கு அவங்க ப்ரெண்ஷிப் பிடிக்கலை.

சிறுவயது பழக்கம்..அவள் கேட்க, ம்ம்..ஆனால் தவறான நட்புன்னு நீ தான சொன்ன?

நான் சொன்னதால் எப்படி? திடீரென?

அவன் அவளை பார்த்துக் கொண்டிருக்க, ஏன்? செத்து போயிருவேன். அதுவரை எனக்காக உடன் இருக்கலாம்ன்னு தோணுச்சா? கேட்டாள்.

உனக்கு இது எப்படி தெரியும்?

காரு..உங்கள அடிச்சதை பார்த்தேன். பேசியதை கேட்டேன். தெரியும்.

அவன் கண்ணீருடன் உனக்காக இல்லை. நமக்காக என்றான்.

நமக்கா? புரிஞ்சு தான் பேசுறீங்களா?

நான் திடீர்ன்னு செத்து போயிட்டா..நமக்கு என்பதன் அர்த்தம் இல்லாமல் போயிடும்.

இல்லை. உனக்கு ஏதும் ஆகாது. அதான் ஒரு சதவீதம் ஏதும் ஆகாமலிக்க வாய்ப்பிருக்குன்னு சொன்னாங்கல்ல.. என்று தடுமாறியவாறு பேசிக் கொண்டே அவளது கையை அவன் கைக்குள் வைத்துக் கொண்டு அழுதான்.

சரி, திடீர்ன்னு இந்த மாற்றத்தை நம்ப முடியலையே?

ஹாஸ்பிட்டலில் இருந்தே உன் பின் தான் வந்தேன். பொன்னன் பேசியதை கேட்டேன். எவ்வளவு முட்டாள் தனமாக இருந்தேன்னு அப்ப தான் புரிஞ்சது. அந்த பசங்க பேசியது, நீ பேசியது..அனைத்தையும் யோசித்தேன். மறையை பார்த்து தான் உன்னுடன் அவங்க மாதிரி சந்தோசமா வாழணுன்னு தோணுச்சு. ஆனால் நீ தான் ஒத்துக்க மாட்டாயே? என்று தலை கவிழ்ந்து அமர்ந்தான்.

வேண்டாம். நான் போறேன். நாம் விரும்பி கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் கல்யாணத்துக்கு பின் நமக்கான வாழ்க்கையை ஏத்துக்கிட்டேன். ஆனால் அதற்குள் இந்த மாதிரி பிரச்சனை வந்துருச்சி. இனி சேர்ந்து இருந்து பின் உங்களை விட்டு போய்..நீங்க ரொம்ப கஷ்டப்படணும் என்றாள்.

கஷ்டமா? நானா? இல்லையே? நீ தான் கஷ்டப்பட்டுகிட்டு இருந்த. இப்பொழுதும் கஷ்டப்பட்டுகிட்டு இருக்க. இனி நான் உன்னை பார்த்துக்கிறேன். ப்ளீஸ் என்னை விட்டு மட்டும் செல்லாதே என்று அழுதான்.

இப்பொழுது இல்லையென்றாலும் என்றாவது விட்டு செல்லும் நிலையில் தான் இருக்கிறேன்.

நடக்காது. உனக்கு ஏதும் ஆக விட மாட்டேன். ஒரு வேலை நீ சொல்வது போல் நடந்தாலும் உன்னுடனான நினைவுகளை சேர்த்து வைக்கும் நாட்கள் வேண்டுமே? அது நாம் சேர்ந்து இருந்தால் தான் முடியும்.

இல்ல. நான் உங்க அளவுக்கு கலர் இல்லை. உங்களுக்கு என்னை பிடிக்காமல் என் உயிருக்காகவோ குழந்தைக்காகவோ இருக்க வேண்டாம்.

குழந்தை பிறந்து எனக்கு ஏதுமானால், உங்களுக்கு விருப்பமிருந்தால் குழந்தையை நீங்களே வச்சுக்க சொல்லி எழுதி வச்சிடுறேன்.

இல்லை. நான் உன் கலரை பற்றி கூறலை. குழந்தையை பற்றி கூறலை. எனக்கு உன்னை பிடிக்கும். அதான் என்னுடன் இங்கே இருக்க சொல்கிறேன்.

காமெடி பண்ணாதீங்க என்று எழுந்து அமர்ந்தாள். அருகே இருந்த பொருட்களை பார்த்து விட்டு, நீங்க எனக்கு ஒத்தடம் கொடுத்தீங்களா?

ஆமா.

உங்களுக்கு என்னை எப்படி பிடிக்கும்?

ஏன் உன்னை பிடிக்கக்கூடாதா? நீ எவ்வளவு அழகு தெரியுமா? உன் கண்களை வெளிச்சத்தில் பார்க்கும் போது பட்டாம்பூச்சி போல் அடித்துக் கொள்கிறது. உன் மூக்கு இருக்கே.. அதை பார்த்தாலே முந்திரி பழம் சாப்பிடுவதை போல் கடிக்க தோணுது. அப்புறம் உன் கன்னம் பனியாரம் போல் இருக்கு. என்ன உப்பலாக இல்லாமல் சப்பி போய் இருக்கு. உன்னுடைய உதடு என்று அவன் அருகே வர, அவள் விழிவிரித்து..இது கனவா? என்று கேட்டாள். அவன் சிரித்துக் கொண்டு..

நீயே தெரிஞ்சுக்கோ..என்று இதழ்களில் மெலிதான முத்தத்தை பதித்தான். கனவில்லை..உங்களுக்கு உண்மையிலே என்னை பிடிக்குமா? கேட்டான். அவன் வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டு வெளியே பார்த்தான். ஒரு பொண்ணு மார்டனாக அழகாக நின்று கொண்டு..சக்தி, நீ ஏன் வீட்டிற்கு வரவேயில்லை. அதான் நான் வந்துட்டேன் என்று சிணுங்கிக் கொண்டே அவனை கட்டிக் கொண்டு அவனுடன் உள்ளே வந்தாள்.

ஏய், யாரு நீ? எங்க வீட்டுக்கு நீ எதுக்கு வர்ற? என்ன பேச்சு இது? தொடாத..என்றான் சக்தி.

என்னை மறந்துட்டியா? நேற்று தான இரவில் கட்டிலில் விழுந்து..அப்புறம் கீழே விழுந்து கையில் அடிபட்டு ஹாஸ்பிட்டல் சென்று மருந்திட்டு வந்தோம்..என்று பேசிக் கொண்டே மாலினி இருக்கும் அறை முன் வந்து சக்திக்கு முத்தம் கொடுக்க, அவன் அவளை அறைந்தான். அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை.

என்ன கதை சொல்லிக்கிட்டு இருக்க? நான் நேற்று இரவு என் வீட்டிலே இல்லை.

ஆமா..அதான் நானும் சொல்றேன். என் வீட்டில் நம் அறையில் ஒன்றாக அங்க தொட்டு, இங்க தொட்டு..என்று அவன் கையை அவள் மேல் இழுத்து வைக்க.

ச்சீ..நீ பொண்ணா? என்ன பண்ற? என்று அவளை திட்டிக் கொண்டே மாலினியை பார்த்தான். அவள் கண்ணீருடன் எழுந்தாள்.

மாலி..இல்லை. எனக்கு இவள் யாருன்னே தெரியாது.

தெரியாதா? இது என்ன? என்று அவள் ஆடையை விலக்கி பற்தடத்தை காட்ட..மாலினி அழுது கொண்டே ஹாலுக்கு வந்தாள்.

அவள் போகட்டும் டியர். நீங்க வாங்க என்று அவள் அவனை இழுக்க, மாலி போகாத. இவ நடிக்கிறா. நான் நேற்று..அவன் சொல்ல, அவன் இதழ்களில் அவள் முத்தமிட்டாள். மாலினி அழுது கொண்டே வெளியே வர, அவளுக்கு உமட்டிக் கொண்டு வந்தது. அவள் வாமிட் செய்ய..அந்த பொண்ணை தள்ளி விட்டு சக்தி அவளிடம் ஓடி வந்தான்.

மாலி..ப்ளீஸ். என்னை நம்பு. இவள் யாருன்னே எனக்கு தெரியாது என்று போனில் கௌதமிற்கு போன் செய்து, இந்தா நீயே கேளு..கௌதம் சாருடன் அவர் அறையில் தான் இருந்தேன். கேட்டுக்கோ..என்றான்.

அவள் வாங்கி கௌதமிடம் பேசினாள். ஆனால் அங்கே வந்த பொன்னன். மாலினியை அடித்தான். சக்தி கோபமாக அவனிடம் வர, அந்த பொண்ணும் அவனுடைய மற்ற நண்பர்களும் அவனை பிடித்துக் கொண்டனர்.

ஏன்டி, அதான் அவனுக்கு ஒரு பொண்ணு முத்தமெல்லாம் கொடுக்கிறா. அப்படியும் யோசிக்கிற. உனக்கு எவ்வளவு திமிருடி? என்று பொன்னன் அவளை அடிக்க மாலினி கீழே விழுந்தாள்.

இதை கேட்டுக் கொண்டிருந்த கௌதம் அகில் நண்பர்கள் மத்தியிலிருந்து திடீரென ஓட..மற்றவர்களும் அவன் பின்னே வந்தனர்.

கீழே விழுந்த மாலினி கையை மிதித்த பொன்னன் அவளை நெருங்க..

ஏய்..அவள ஏதாவது செஞ்ச என் கையால் தான் உனக்கு சாவு என கத்தினான் சக்தி.

அட, இவளுக்காகவா இப்படி பதறுற? இவளெல்லாம் ஒன்றுமே இல்லை. அழகான பொண்ணை நான் வேண்டுமானால் கொண்டு வாரேன். பழையபடி எங்களுடன் வந்து விடு..என்றான்.

அழகு இல்லை யா? என் கண்ணுக்கு இவள் தான் அழகா இருக்கா என்று அவன் காலை எடுத்து விட்டு அவளருகே அமர்ந்தான். பக்கத்து வீட்டு ஆட்கள் வந்துவிட, பொன்னன் கத்தியை மாலினி கழுத்தில் வைத்து அவளை அவன் பக்கம் இழுத்தான். அவள் கண்ணீருடன் மயங்கினாள். அனைவரும் பயந்தனர்.

மாலி..எழுந்திரு..எழுந்துரு..என சக்தி துடித்தான். சக்தி, மாலினி பெற்றோர்கள் வந்தனர். அவளை பார்த்து பதறி வர, அவளது உள்ளங்கையை கத்தியால் கிழித்தான் பொன்னன். அவள் மயங்கினாலும் வலியில் முணங்கினாள்.

அவனை பிடித்திருந்தவர்களை அடித்து விட்டு சக்தி மாலினியிடம் வர, வந்தா..கழுத்தை அறுத்திடுவேன் என்று அமர்ந்தவன் நகரவேயில்லை. சக்தியை மீண்டும் அவன் ஆட்கள் பிடிக்க, அங்கே வந்தனர் அகிலும் நண்பர்களும்,

மாலினி..என்று கௌதம் அவளிடம் வர,..ஏய் வந்த என்று அடுத்த கையின் உள்ளங்கையில் கிழிக்க, அவள் இரு கையிலும் இரத்தம் வந்து கொண்டிருந்தது.

ஏய், அவ புள்ளதாச்சிடா..என்ன பண்ற? ஓர் அம்மா கத்த..சக்தி கதறி அழுதான். இதை பார்த்துக் கொண்டே வந்த அஜய், அர்ஜூன், அபி ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

ஏய்..அவங்கள விடு..காருண்யா சத்தமிட, அவன் அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.

இரு போலீஸ்க்கு கால் பண்றேன் என்று போனை எடுக்க, பொன்னன் மாலினியை எழ வைத்து அவளை கீழே தள்ளி விட்டான். தள்ளி போய் விழுந்தாள்.

பொன்னன் குட்டிக்கரணமிட்டு கீழே விழுந்தான். வேறு யாரு..நம்ம பிரதீப் தான். உடன் வெற்றியும் வந்திருந்தார். பக்கத்து வீட்டு ஆட்கள் பிரதீப்பிற்கு போன் செய்ய..மாலினியை பார்த்த பிரதீப் பின்னிருந்து பொன்னனை எட்டி உதைத்தான்.

சக்தி மீண்டும் அவர்களிடமிருந்து தப்பி மாலியிடம் வர, அவர்களின் பெற்றோர்களும் கதறினர்.

அழும் நேரமில்லை கௌதம் சொல்ல..பொன்னன் சிரித்தான். மாலினி ஆடை முழுவதும் இரத்தத்தால் நனைந்து இருந்தது. அதை தொட்டு பார்த்த சக்தி கோபமும் வலியுமாய் கத்தி அழுதான்.

பிரதீப்பும் வெற்றியும் அவனை துவைத்து எடுக்க..மாலினியை கையில் தூக்கிக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு ஓடினான் சக்தி. அனைவரும் அவன் பின் செல்ல, தீனாவும் விசயம் அறிந்து வந்தான். தீனா, அஜய், பிரதீப், வெற்றி அவன் நண்பர்களையும் தூக்கி போட்டு மிதித்தனர்.

தீனா அவர்களை ஸ்டேசனுக்கு இழுத்து சென்று, இனி நீங்க வெளிய வராத மாதிரி பண்றேன்டா என்று கொந்தளித்தான்.

மாலினிக்கு சிகிச்சை அளிக்க கௌதமும் உள்ளே சென்றான். சற்று நேரத்தில் அவன் வெளியே வர..அனைவரும் அவனிடம் வந்து கேட்டனர். சக்தி அவனிடம், அவளுக்கு ஒன்றுமில்லையே? என கேட்டான்.

கரு கலைந்து விட்டது இருந்தும் அவள் உயிருக்கு போராடுகிறாள் கௌதம் சொல்லிக் கொண்டே அழுதான்.

சக்தி, அவளுக்கு கர்ப்பப்பையில் கட்டி அதிகமாக இருக்கு. அதனால் உடனே ஆப்ரேசன் செய்து கர்ப்பப்பையை எடுக்க வேண்டி இருக்கும் என்று கேசவன் சொல்ல, சக்தி யோசிக்காமல் உடனே ஏற்பாடு செய்யுங்க சார்..என்று சொன்னான்.

அவர் சக்தியிடம் கையெழுத்து வாங்க கௌதம் அவரிடம் “லேப்ராஸ்கோப்பி முறை”யில் ஆப்ரேசனுக்கு தயார் செய்யுங்க சார் என்றான். அவர் அவனை பார்த்து விட்டு உள்ளே சென்றார்.

மாலினி அம்மா நெஞ்சில் அடித்துக் கொண்டு, என் பிள்ளை வாழவே ஆரம்பிக்கலை. அதற்குள்ளாக கர்ப்பப்பையை எடுக்குறாங்களே? என்று அழுதார். அவங்க கணவரும் கண்ணீருடன் ஆறுதலாக தன் மனைவியை தோளில் சாய்த்துக் கொண்டார்.

கண்ணை துடைத்து விட்டு, அது என்ன முறை? வசுந்தரா கேட்க, பெயின் அதிகமாக இருக்காது. ஒரு சென்டிமீட்டர் அளவு வயிற்றில் ஓட்டை போட்டு கர்ப்பப்பை அகற்றுவாங்க என்ற கௌதம் நானும் பார்க்கிறேன் என்று உள்ளே சென்றான். மாலினிக்கு “ஹிஸ்ட்ரக்டமி ஆப்ரேசன்” நடந்து கொண்டிருக்க, கௌதம் மட்டும் வெளியே வந்தான்.

என்னாச்சு சார்? சக்தி பதட்டமாக, என்னால முடியலை. நானும் இந்த ஆப்ரேசன் செஞ்சிருக்கேன். ஆனால் இந்த சிறுவயதிலே அவளுக்கு இந்த ஆப்ரேசன் என்று கண்கலங்கினான்.

பரவாயில்லை சார். அவள் நல்லா இருந்தான்னா போதும் என்றான் சக்தி.

உங்களுக்கு குழந்தைக்கு வாய்ப்பு இருக்காது கௌதம் சொல்ல, அதான் அவள் இருக்காலே போதும் சார் என்றான். மாலினி அப்பா கண்ணீருடன் அவனை அணைத்துக் கொண்டு அழுதார். அவன் தட்டிக் கொடுத்தான்.

சார், அவளுக்கு ஏதுமாதுல? சக்தி கேட்க, இல்லை சக்சஸ் ஆகிட்டா.. பிரச்சனையில்லை. இப்பவே எடுக்குறதும் நல்லது தான். கட்டி வளர்ந்து விட்டால் அவளை காப்பாற்ற முடியாது என்றான் கௌதம்.

அவள் பத்திரமா கிடச்சிட்டாலே போதும் என்றான் சக்தி. ஆனால் அந்த குழந்தை இறந்ததை நினைத்து மனதினுள் வேதனையுடன் இருந்தாலும் சக்தி வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் கௌதம் அழுது கொண்டிருந்தான்.

காரு அவனிடம் வர..காரு என்னால ஆப்ரேசன் பண்ண முடியலை. முதல் முறையாக நான் தோற்று விட்டேன் என்று கௌதம் அழுதான். காருண்யா அவன் கையை பிடித்துக் கொண்டு அவனருகே அமர்ந்தாள்.

சக்தி ஆப்ரேசன் செய்யும் அறைக்குள் நுழைய அங்கிருந்தவர்கள் திட்டினர்.

நான் உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன் என்று கத்திய சக்தி அவள் தலைப்பக்கமாக அமர்ந்து கண்ணீருடன் அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

அனைத்தும் முடிந்து டாக்டர் அனைவரும் வருத்தமாக அவனை பார்க்க கேசவன் அவனது தோளில் தட்டி விட்டு வெளியே வந்தார். அவன் புரியாமல் வெளியே பயத்துடன் வந்தான். அவள் அம்மா அப்பாவையும் சக்தியையும் பார்த்த கேசவன்..அந்த பொண்ணு..பிழைச்சிட்டா..என்று சொல்ல..மடிந்து அமர்ந்து சக்தி அழுதான். ஆனால் இனி குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்று சொல்லவும் சக்தி பெற்றோர் முகம் மாறியது. ஆனால் அவன் எனக்கு அவள் மட்டும் போதும். தேங்க்ஸ் டாக்டர் என்றான்.

கௌதம் எழுந்து கேசவனை சந்தேகமாக பார்க்க, அவர் புன்னகையுடன்.. அந்த பொண்ணு குழந்தை பெத்துருந்தா தான் அவள் உயிருக்கு ஆபத்து மற்றபடி ஏதுமில்லை. பார்த்துக்கோங்க என்று அவர் சென்றார். அனைவரும் அங்கிருந்து செல்ல, அவள் வீட்டார் மட்டும் இருந்தனர்.

சக்தி அம்மா அவனை தனியே அழைத்து குழந்தை பெத்துக்க முடியாதுன்னா. அவ மட்டும் எதுக்குடா?

இங்க பாரு. ஒழுங்கா போயிரு. குழந்தையை விட எனக்கு அவள் தான் முக்கியம். நீ அவள கஷ்டப்படுத்த நினைச்ச..எனக்கு அம்மா, அப்பாவே இல்லைன்னு தனியா போயிருவேன். உன்னை பார்க்க கூட வர மாட்டேன். அப்பா உனக்கும் தான் என்று கண்டிப்புடன் கூறினான். இதை கேட்ட அவள் பெற்றோர் மனம் நிம்மதியானது. சக்தி உள்ளே சென்று மாலினி விழிப்பதற்காக காத்திருந்தான். மற்றவர்கள் வெளியே இருந்தனர்.

வசுந்தரா உள்ளே வந்து சக்தியிடம் பேசணும் என்று சொல்லி விட்டு வெளியே சென்றாள். அவன் வெளியே வந்தான். அவன் அம்மாவும் அப்பாவும் அவனை முறைத்து பார்த்தனர்.

வசுந்தராவை பார்த்து, சொல்லு என்றான்.

குழந்தை நல்லா இருக்குன்னு சொல்லிடுங்க. அவளால அடுத்து குழந்தை பெத்துக்க முடியாதுன்னு சொல்ல வேண்டாம்.

மறைக்காதீங்க. கண்டிப்பா அவளுக்கு சொல்லி புரிய வைப்போம் என்று கௌதம் சொன்னான்.

இல்லை. அவளால ஏத்துக்க முடியாது என்று வசுந்தரா அழுதாள்.

புரிய வைக்க முயற்சி செய்யலாம்..என்றான் கௌதம்.

சார், அவளுக்கு குழந்தை பத்தி தெரிஞ்சதும் முதல்ல என்னிடம் தான் சொன்னா. நான் கூட அவளிடம் யாருக்கும் தெரியாமல் குழந்தை கலச்சிற சொன்னேன். ஆனால் அவள் முடியாதுன்னு சொன்னா. குழந்தை விசயம் எப்படியோ..பொன்னனுக்கு தெரிஞ்சு போச்சு. அவன்..அவன்..என்று தயங்கி சக்தியை பார்த்தாள். அவன் அவளை முறைத்தும் கூர்மையுடனும் பார்த்தான்.

சொல்லு..அவன்? சக்தி கேட்க, குழந்தைய பத்தி வெளிய சொல்லக்கூடாதுன்னா..அவளை அவனிருக்கும் இடத்துக்கு வரச் சொன்னான். மறு நாளே என்ன சொன்னான்னு தெரியலை. கிணத்துல குதிச்சுட்டா. அப்புறம் தான் எல்லாருக்கும் தெரிய வந்துச்சு. உங்க கல்யாணம் முடிந்து சண்டை போட்டு வந்த பின் நாங்க வேலைக்கும் போகலையா? குழந்தையுடன் பேசிக்கிட்டே இருப்பா. அவளால இந்த விசயத்தை தாங்கிக்க முடியாது. ப்ளீஸ் சார் சொல்ல வேண்டாம் என்றாள்.

நாம சொல்லாம மறைச்சுட்டா பின் விளைவி விபரீதமாகிடும் என்றான் கௌதம்.

சக்தி யோசனையுடன், எல்லாரும் அவளிடம் சாதாரணமாகவே பேசுங்க. நானே நாளைக்குள் சொல்கிறேன். எத்தனை நாள் இங்கே இருக்க வேண்டி இருக்கும் சார்?

நாளை வரை இருக்கணும்..

சரி..பார்த்துக்கலாம் என்று சக்தி உள்ளே செல்ல, மற்றவர்களும் உள்ளே சென்று அமர்ந்தனர்.

மாலையில் தான் மாலினி விழித்தாள். அதுவரை சக்தியும் மாலினி பெற்றோரும் உள்ளே இருந்தனர். அவள் விழித்து சுற்றி அனைவரையும் பார்த்தாள். பொன்னன் நடந்து கொண்டது நினைவு வர..வேகமாக எழ அவளுக்கு சோர்வாக இருந்தது.

ஓய்வெடும்மா..சக்தி அவளிடம் சொல்ல, அவள் தன் வயிற்றை தொட்டு பார்த்து, குழந்தைக்கு ஒன்றுமில்லையே? கேட்டாள். சக்திக்கு கௌதம் சொன்னது நினைவு வர, அவன் அவளுடைய அம்மா, அப்பாவை பார்த்தான்.

குழந்தை இல்லாதது போல் உணர்வு வர..சக்தி சொல்லுங்க..நம்ம குழந்தைக்கு ஒன்றுமில்லையே? மெதுவாக கேட்டாள்.

அம்மு..என்று அவள் அப்பா அவளிடம் வந்தார். அப்பா..என்னோட குழந்தைக்கு ஒன்றுமில்லையே? கண்ணீருடன் வயிற்றை தொட்டுப் பார்த்து கேட்டாள்.

ஒன்றுமில்லைம்மா..என்றார்.

நாங்க தனியா பேசலாமா? சக்தி கேட்டான். அவன் வீட்டில் வைத்து சக்தி பேசியது நினைவுக்கு வந்து கையை அவனிடம் நீட்டினாள். அம்மா.. அவருக்கு என்னை பிடிக்குமாம்..என்றாள்.

ம்ம்..தெரியும்மா என்று கண்கலங்க அவர் அம்மா அழுது கொண்டே வெளியே சென்றார். அழாதம்மா..என்று அவள் அப்பா மாலினியை பார்த்துக் கொண்டே சென்றார்.

அம்மா எதுக்கு அழுறாங்க சக்தி? குழந்தைக்கு ஒன்றுமில்லை தான? அவன் நல்லா தான இருக்கான் என்று கேட்டுக் கொண்டே வயிற்றில் கை வைத்து பார்த்தாள்.

சக்தி கண்ணீருடன் அவள் தலையணை பக்கம் அமர்ந்தான். அவள் மெதுவாக அமர, அவளை அணைத்துக் கொண்டு அழுதான்.

நீங்களும் அழுறீங்க? எனக்கு பயமா இருக்கு. அழாம சொல்லுங்க. குழந்தைக்கு வேரேதும் பிரச்சனையா? சொல்லுங்க? கேட்டாள்.

குழந்தையே இல்லம்மா. அவன் உன்னை தள்ளிவிட்டதில் வயிற்றில் அடிபட்டு குழந்தை நம்மை விட்டு போயிட்டான்.

அவனை விலக்கி தள்ளி விட்டு, இல்லை அவன் என்னை விட்டு போக மாட்டான். எனக்கு என் குழந்தை வேண்டும் என்று அவன் சட்டையை பிடித்துக் கொண்டு அழுதாள்.

முடியாதும்மா. நமக்கு குழந்தை வேண்டாம். எனக்கு நீயும் உனக்கு நானுமாய் இருந்து கொள்வோம் என்றான்.

குழந்தை வேண்டாமா? அவன் போயிட்டான்ன்னு நீங்களும் போகப் போறீங்களா? என்று கத்தினாள்.

அவளை அணைத்து நான் உன்னை விட்டு போகமாட்டேன்ம்மா. ஆனால் நமக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லைம்மா என்றான் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டு.

என்னது? என்னால அம்மாவாக முடியாதா? இல்லை..எனக்கு குழந்தை வேண்டும்…வேண்டும்..என கத்திக் கொண்டு அவன் மார்பில் அடித்துக் கொண்டு, எதுக்கு என்னால அம்மாவாக முடியாது? என்று கதறி அழுதாள்.

அழாதம்மா. டாக்டர் ஓய்வெடுக்க சொன்னாங்க என்றான் மெதுவாக.

நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க. கர்ப்பப்பை வீக்கா இருப்பதாலா? அவள் அழுது கொண்டே கேட்க, அவளை முத்தமிட்டு மார்போடு அணைத்துக் கொண்டான். அவனால் அவள் முன் அழ முடியவில்லை.

கர்ப்பையில்ல கட்டி இருக்க, கர்ப்பபையை எடுத்துட்டாங்கம்மா. என்னிடம் கேட்டு தான் செஞ்சாங்க. எனக்கு நீ மட்டும் போதும்மா என்றான்.

அவள் அவனை அடித்துக் கொண்டே, இதுக்கு என்னை சாகவே விட்டிருக்கலாமே?

சரிம்மா செத்துடலாமா? கேட்டான்

அவள் அடிப்பதை நிறுத்தி விட்டு, என்ன சொன்னீங்க? செத்திடலாமாவா? உங்களை நான் சொல்லலை.

நீ இல்லாத இடத்தில் நான் இருந்து என்ன தான் செய்வது? என்று அவன் கதறி அழுதான்.

இந்த நாலு நாள்ல எப்படி இந்த அளவு என்னை பிடிச்சது?

நான் உன்னுடன் தானே இருந்தேன். உன் பின் தான் வந்தேன். உன் வீட்டருகே தான் இருந்தேன். உன்னை மட்டும் தானே பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு நீ போதும்..என்றான். அவள் அழுது கொண்டே அவனை அணைத்து, என்னால் நம் குழந்தை..அவளை தடுத்த சக்தி..உன்னால் இல்லை என்று எழுந்தான்.

அவள் அவனை பார்க்க அவளுக்கு பொன்னனால் என்று நினைவு வந்து, வேண்டாம் என்று கையை பிடித்தாள். அவன் அவள் கையை எடுத்து விட்டு வெளியே வந்தான்.

என்னாச்சு? எல்லாரும் அவனிடம் வந்தனர். அவன் ஏதும் சொல்லாமல் செல்ல வசுந்தரா மெதுவாக மாலினியை எட்டி பார்க்க, வசு அவரை போக விடாத…அவர் பொன்னனை ஏதும் செய்து விடாமல் என்று கத்திக் கொண்டே மயங்கினாள்.

சக்தி..என்று வசு சத்தமிட, அவன் திரும்பி பார்த்தான். வசுந்தரா வேகமாக உள்ளே சென்றாள். மற்றவர்களும் உள்ளே சென்றனர். அவர்களை பார்த்து பதறி அறைக்கு வந்தான் சக்தி.

மாலினி மயக்கத்திலே வியர்த்து வடிய போகாதீங்க.. போகாதீங்க..என்று படுத்திருந்தாள். வசுந்தரா அவளுக்கு துடைத்து விட்டு, அவரு எங்கேயும் போகலை. பாரு..மாலி..கண்ணை திறந்து பாரு..என்று அவள் அழுதாள்.

கௌதம் சத்தம் கேட்டு வெளியேயிருந்து ஓடி வந்தான். அனைவரும் அவர்களையே பார்த்தனர். உள்ளே வந்து அவள் மயங்கியதை பார்த்து..டாக்டரை அழைக்க அர்ஜூனும் பிரதீப்பும் வந்தனர்.

டாக்டர் ஒருவர் வந்து மாலினியை பார்த்தார். அவங்க ஓய்வெடுக்கட்டும். தொந்தரவு செய்யாதீங்க. அவங்களிடம் சொல்லீட்டீங்கல்ல..டாக்டர் கேட்க, சொல்லிட்டேன் டாக்டர் என்று சக்தி சொல்ல அனைவரும் அவனை பார்த்தனர். அவள் போகாதீங்கன்னு தானே அழுதிருப்பாள்.

ஆப்ரேசன் பற்றி சொன்னீங்களா? வசு கேட்க, எல்லாமே சொல்லீட்டேன் என்றான் சக்தி.

அவள் ரொம்ப அழுதாளா?

அழுதா? ஆனால் இனி அழ மாட்டான்னு நினைக்கிறேன் என்று சக்தி சொல்ல…மாப்பிள்ள என்ன சொன்னீங்க? அவ கேட்டுக்கிட்டாளா? மாலினி அம்மா கேட்க, அவள் எழுந்தவுடன் தெரியும் என்றான் அவன்.

பிரதீப் சக்தியை தனியே அழைத்து, பணத்துக்கு என்ன செஞ்ச? கேட்டான். கௌதம் சார் கட்டிட்டார். நான் பணம் செலுத்தும் முன்னே அவர் கட்டி விட்டார்.

அண்ணா..பணம் வரவும். உங்களிடம் வாங்கியதை கொடுக்கிறேன். இப்பொழுதைக்கு வேரெதாவது வேலை இருக்குமா? சக்தி கேட்டான்.

தொழிற்சாலைக்கு வர்றீயா? அப்பா தான் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக கேட்டார். வேலை கஷ்டமா தான் இருக்கும். பரவாயில்லையா? பிரதீப் கேட்டான்.

வாரேன் அண்ணா. ஆனால் என்னால் நாளை வர முடியாது.

சரி அப்பாவிடம் சொல்லி வைக்கிறேன். நீ வா..ஆனால் ரொம்ப நாள் ஆக்கினால் உனக்கான வேலையை வேறு யாருக்காவது கொடுத்திருவாங்க. நான் ஏதும் செய்யமுடியாது.

ம்ம்..என்று அமர்ந்தான். அர்ஜூன் அவனிடம் வந்து அமர்ந்து அவனையே கவனித்தான்.

என்ன அர்ஜூன்?

ஒன்றுமில்லைண்ணா.

சும்மா சொல்லு.

ரொம்ப கஷ்டமா இருக்கா..

இருக்கு. எல்லாத்தையும் சமாளித்து தான் ஆகணும். இத்தனை நாள் நான் பொறுப்பில்லாமல் சுற்றியதற்கான தண்டனை தான் அர்ஜூன். ஆனால் அவளும் சேர்ந்து அனுபவிக்கிறாள் என்று அழுதான்.

சார், டாக்டர் உங்களை வரச் சொன்னார் என்று ஒருவர் கூற, சக்தி செல்ல அவனுடன் பிரதீப்பும் கௌதமும் சென்றனர். காருண்யா அர்ஜூனிடம் வந்து அமர்ந்தான்.

காரு, நீ மண்டபத்துக்கு வரலையா? இன்னும் கொஞ்ச நேரத்தில் மாப்பிள்ளையும் பொண்ணும் கிளம்பிடுவாங்க.

நீ போகும் போது சொல்லு. நான் வாரேன் என்றாள்.

சக்தி பேசிட்டு வரும் போதே எழுந்தாள் மாலினி. மாலு..என்று வசு அவளிடம் வந்தாள்.

மாலினி எழுந்து அமர்ந்தாள். கொஞ்சம் சோர்வா இருந்ததா தூங்கிட்டேன் என்றாள். வசு கண்கலங்க அவளை பார்க்க, மாலினி கண்ணை விழிக்கவும்..சக்தி செத்திடலாமா? என்று பேசியது தான் அவளுக்கு கேட்டிருக்கும். அதனால் அமைதியாக வசுவை பார்த்து அவளை அருகே வரவைத்து அணைத்துக் கொண்டாள். வசுந்தரா தான் அழுதாள்.

சாரிடி, நானும் உன் அருகே இருந்திருக்கணும்?

நாம் எல்லா நேரமும் உடன் இருக்க முடியாது வசு. உனக்கும் பேமிலி, வாழ்க்கை இருக்கு. நீ அதை பாரு..கிளம்பு என்றாள்.

மாலு..என்னை கிளம்ப சொல்றீயா? மேலும் அழுதாள்.

இல்லடா. அப்படி இல்லை. என்னை பார்த்து நீ அழுவது எனக்கு கஷ்டமா இருக்கு. இப்ப கிளம்பி நல்லா ஓய்வெடுத்திட்டு வா. காலை என்னுடன் இருந்து விட்டு வேலைக்கு போ..பின் அவர் பார்த்துப்பார். மாலை வா..நைட் வீட்டுக்கு போ. எனக்கு ஒன்றுமில்லை. நான் நல்லா இருக்கேன்.

சரி மாலு. நான் வெளிய இருக்கேன்.

நான் உன்னை வீட்டுக்கு போக சொன்னேன் என்று மாலினி கண்டிப்புடன் கூற, வசுந்தரா அழுது கொண்டே வெளியே வந்து, மாலினி அம்மாவை கட்டிக் கொண்டு, என்னை கிளம்ப சொல்றா? என்று அவரை அணைத்து அழுதாள். சத்யாவை தவிர வேலு, அவன் நண்பர்கள், அகல்யா, காயத்ரி இருப்பதை பார்த்து விட்டு, நான் வாரேன் ஆன்ட்டி என்று அழுது கொண்டே ஓடினாள்.

ஏய்..நில்லு காருண்யா அழைக்க, கௌதம் அவளை தடுத்து..அவ போகட்டும் என்றான். வேலு நண்பர்கள் சரவணனை பார்க்க, சக்தி அவனை பார்த்தான். அவர்கள் சக்தியிடம் பேச, சரவணன் வசுந்தராவை தேடி சென்றான். அவள் அழுது கொண்டே வெளியே அமர்ந்திருந்தாள். அவளருகே வந்து அமர்ந்து அவள் கை மீது கை வைத்தான். அவள் நிமிர்ந்து அவனை பார்த்து விட்டு அவன் தோளில் சாய்ந்து அழுதாள். அவள் அப்பா அங்கு வந்து அவளை அடிக்க, அவன் அவரிடம் பேச வந்தான்.

உன் வேலைய பார்த்துட்டு போ..என்று சரவணனை திட்டி விட்டு வசுவை இழுத்து சென்றார். அவன் கவலையுடன் அங்கேயே அமர்ந்தான். வசுந்தரா மீண்டும் அவனிடம் வந்து, கண்ணீரை துடைத்து விட்டு “தேங்க்ஸ்” சொல்ல, அவள் அப்பா அவளை திட்டிக் கொண்டே வந்தார்.

அவன் அவள் கையை பிடித்து, எனக்கு உன்னை ரொம்ப வருடமாகவே பிடிக்கும். நீ விருப்பப்பட்டால் கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாள். அவன் கன்னத்தில் விழுந்தது அறை ஒன்று. சரவணன் அம்மா..அவனை அறைந்தார். வசு பயந்து அவரை பார்த்தார்.

அம்மா..இருந்து வளர்த்திருந்தால் நல்லா வளர்த்திருப்பாங்க. அப்பா தானே வளர்த்தார் என்றவுடன் அவள் அப்பா கோபமுடன், என் பொண்ணு எந்த தப்பும் செய்யலை. காதலிப்பது ஒன்றும் தப்பு இல்லையே?

இவன் வேண்டாம்மா..வேற யாராவது பிடிச்சிருந்தா சொல்லு. இந்த மாதிரி வளர்ந்த பையன்னு கூட பார்க்காமல் கையை ஓங்கும் குடும்பத்தில் எப்படி என் பெண்ணை கொடுப்பது? உன்னையும் அடிக்க மாட்டாங்கன்னு என்ன நிச்சயம் என்ற அவள் அப்பா சரவணனை பார்த்து, காதலிக்கிற பொண்ணை பார்த்துக் கொண்டே இருந்தால் நாள் சென்று விடும். முடிந்தால் உன் அம்மாவை சரி செய். ஒரு வாரம் தான் தர முடியும். அவங்க எல்லாரிடமும் நல்லபடியா நடந்துகிட்டா நான் என் பொண்ணை உனக்கு கொடுப்பதை பற்றி யோசிக்கிறேன் என்று வசுவை இழுத்து சென்று விட்டார். அவள் அவனை பார்த்துக் கொண்டே சென்றாள்.

பார்த்தேல்ல..உன்னை பார்த்தாலே யாருக்கும் நல்ல எண்ணமே இல்லை. உன்னால அவ கஷ்டப்பட்டா. உனக்கு இப்ப கொடுக்கும் அம்மா என்ற மரியாதை கூட கிடைக்காது என்று சரவணன் அவன் அம்மாவை திட்டி விட்டு உள்ளே சென்றான்.

எல்லாரும் அவளுக்கு சாப்பிட பழங்கள், ஹார்லிக்ஸ் வாங்கி கொடுத்து பார்த்து விட்டு சென்றனர். சக்தி அம்மா..அவனிடம் வீட்டுக்கு போகலாமா? கேட்டான்.

வீட்டுக்கா? அவ இங்க ஹாஸ்பிட்டல்ல கஷ்டப்பட்டு கிட்டு இருக்கா. அன்று என்னமோ நல்ல தங்கமான பொண்ணு. அது..இதுன்னு அவளை பெருமையா பேசுனீங்க. அவள் வீட்ல போய் இருந்தீங்க? சக்தி சினமுடன் கேட்டான்.

நம்ம வீட்டு வாரிசை எப்படி தனியா விடுறது? அதான் உடன் சென்றோம். ஆனால் இப்ப தான் ஒன்றுமே இல்லையே? நீ இப்பவே நம்ம வீட்டுக்கு வரணும். என்னோட தம்பி பொண்ணு மீனாவை கட்டிக்கோ என்று அவர் கூற, அவன் அமைதியாக இருந்தான். மாலினி பெற்றோர் அவர்களை அதிர்ந்து பார்த்தனர்.

இதை கேட்ட கௌதம் கோபமானான். அவன் சக்தியை முறைத்துக் கொண்டிருந்தான். ஆனால் காருண்யா எழுந்து,

ம்ம்..கிரேட், என்ன அருமையா பேசுறீங்க ஆன்ட்டி? உங்க பையன் இப்ப உங்க முன்னாடி நிற்க காரணம் அவள் தான். அது எப்படி? எப்படி? குழந்தை பெத்து கொடுக்க தான் பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக் கொடுப்பாங்களா? ஒரு வேலை அன்று குழந்தை இல்லாமல்..உங்க மகன் என் வாழ்க்கையை கெடுத்து விட்டான்னு அந்த பொண்ணு எல்லார் முன்னும் சொல்லி இருந்தால் என்ன செஞ்சிருப்பீங்க?

மானம் போனா போயிட்டு போதுன்னு விட்ருவீங்களா? உங்களுக்கு ஒரே ஒரு புள்ளை தான். நீங்க அவரை சரியா வளர்த்தீங்களா? இவரையே சரியா வளர்க்கலை. இதுல குழந்தையை பத்தி பேசுறீங்க? குழந்தைய உங்க பொறுப்புல விட்டா உங்க பையனை மாதிரி தான வளர்ப்பீங்க?

ஏம்மா பொண்ணு, எங்க விசயத்துல தலையிட நீ யாரு?

நான் யாரு? நல்ல கேள்வில்ல சார்? என்று கௌதமை பார்த்து, அந்த பொண்ணு இவரை அண்ணான்னு சொல்றா? நான் இவரை கல்யாணம் பண்ணிக்க போறேன். முறை இருக்கு ஆன்ட்டி. கேட்க முழு உரிமையும் இருக்கு ஆன்ட்டி என்று சொல்ல கௌதம் ஆடிப் போய் அவளை பார்த்தான். சக்தி அவளை பார்த்து மறைமுகமாக புன்னகைத்தான்.

இதையெல்லாம் கேட்கக் கூடாத மாலினிக்கு அனைத்தும் தெளிவாக கேட்டது பிரதீப் தயவால். அவன் மாலினியிடம் பேசி விட்டு கதவை சாத்தி தான் சென்றான். ஆனால் கதவோ பாதியிலே நின்றது. இதை யாரும் கவனிக்கவில்லை. அவள் கண்ணீருடன் வாயை கையால் அடைத்து அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள்.

நீ சொந்தமா இருந்தால் என்ன? இனி இந்த பொண்ணால் எங்க வம்சம் தலைக்காது. இவளை வைத்துக் கொண்டிருந்தால் தரித்திரமாகிடும் என்றவுடன் சக்தி கையை இறுக்கினான். மாலினி அம்மாவும் அப்பாவும் அவனை பார்க்க சக்தி அமைதியாக தான் இருந்தான்.

ஏம்மா, நீயும் பொண்ணு தான? உன்னால எப்படி இப்படி பேச முடியுது? என் பிள்ளை குழந்தை உண்டானப்ப எப்படி பார்த்தீங்க? இப்ப அப்படியே மாறி பேசுறீங்க? அவளுக்கு நீங்க பேசியது தெரிந்தால் கஷ்டப்படுவா? மாலினி அம்மா என்றவுடன் யாருக்கும் கஷ்டத்தை காட்டிக் கொள்ளாமல் மாலினி படுத்துக் கொண்டாள். வாயிலிருந்து கையை மட்டும் எடுக்கலை. கையில் பொன்னன் கொடுத்த காயம் வேற வலியோட இருந்தாள்.

அதுக்கு நாங்க என்ன செய்றது? எங்களால உங்க பொண்ணை ஏத்துக்க முடியாது. அவள நீங்களே வச்சுக்கோங்க என்று இருவரும்.. எல்லாத்தையும் முடிச்சிட்டு சீக்கிரம் வீட்டுக்கு வா என்று சென்றனர். அவள் கண்ணீர் அனைத்தையும் நன்றாக துடைத்து விட்டு கையை எடுத்து விட்டு அமைதியாக கண்ணை மூடினாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement