Advertisement

அத்தியாயம் 123

இரவு இரண்டு மணி அழுது சோர்ந்த முகத்துடன் எழுந்தாள் பிரகதி. அவளுடன் அஜய் குடும்பமும், அபி, அகில், கவின் அம்மா இருந்தனர். அனைவரும் நன்றாக தூங்க அறையை விட்டு வெளியே வந்தாள். வேலு, மறை, சத்யா கூட அங்கே இருந்தனர். அவர்கள் அங்கங்கு படுத்திருக்க..வெளியே சென்று மெதுவாக எட்டிப் பார்த்தாள்.

அஜய், அவனது சித்தப்பா அமர்ந்திருந்தனர். அவன் தீவிரமாக போனை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் சித்தப்பா..காலை நீட்டி தலையை சாய்த்து உட்கார்ந்தவாரே தூங்கினார்.

சொன்னா கேட்கிறாரா? உள்ள போய் தூங்க வேண்டியது தானே? என்று அவரையும் போனையும் பார்த்தான். மெதுவாக எட்டி பார்த்த பிரகதி..அவன் பின் நின்று கேட்கலாமா? வேண்டாமா? என்று யோசனையோடு நின்றாள்.

திடீரென அவன் சித்தப்பா விழிக்க பயந்து பின் சென்றாள். அவர் அவன் தொடையை சுரண்டி கண்ணை காட்ட, அவன் திரும்பி பிரகதியை பார்த்தான். அவள் மேலும் பயந்து வேகமாக நகர்ந்தாள் பின்னிருந்த சேரை கவனிக்காமல்.

சேர் அவள் காலில் இடிக்க பாவமாக அவனை பார்த்தாள். மெதுவாம்மா.. என்று அவர் கூற, எழுந்து அவளை பார்த்தான். உட்காரு என்று சேரை போட்டு உட்கார வைத்தான். இருவரும் அவளையே பார்க்க..

உங்ககிட்ட அர்ஜூன் நம்பர் இருந்தா போன் செய்து தர்றீங்களா சார்?

இந்த நேரத்தில் ஒரு பையனுக்கு கால் பண்ண சொல்ற? அவன் கேட்க, அவள் கண்கள் கலங்கியது. அஜய் அதையெல்லாம் கண்டுகொள்ளவே இல்லை.

சொல்லு..என்று அவளை முறைத்தான். அவளே பவியிடம் முன் பாதியை சொல்ல கேட்ட அவன்..மீதியை அவனே அறிந்து கொண்டான். வெறுப்புடன் பேசினான்.

சார்..அவனிடம் பேசணும்.

எதுக்கு?

அவனிடம் தான் பேச முடியும்?

என் முன் வைத்து தான் பேசணும். ஓ.கே வா? கேட்டான்.

சரி சார். சீக்கிரம் தாரீங்களா? கேட்டாள். அவளை முறைத்துக் கொண்டே அர்ஜூனுக்கு போன் செய்தான். அர்ஜூன் தூக்கத்திலே ஹலோ..என்றான்.

அர்ஜூன்..பிரகதி பேசுறேன் என்றவுடன் விழித்து அமர்ந்தான்.

ஏதும் பிரச்சனையா? பதறினான்.

இல்ல அர்ஜூன். நான் இங்கே இருக்கக்கூடாது. என்னை வேறெங்காவது விட முடியுமா?

“ஆர் யூ மேடு?”

இல்ல அர்ஜூன். என்னோட அம்மா, அப்பா இறந்துருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க எல்லாரும் எழுந்திருவாங்க. மேரேஜ் நடக்கப் போகுது. நான் இங்கிருந்தால் அபசகுணமாகும். அவங்க லைஃப்ல பிரச்சனையாகும். ப்ளீஸ் இதுக்கு மேல யாரும் பேசுறதை என்னால கேட்க முடியாது. இங்க மட்டும் வேண்டாம். வேரெங்காவது கூட்டிட்டு போயேன்..ப்ளீஸ்.

அதெல்லாம் ஒன்றுமில்லை. எங்க ஊர்ல யாரும் ஏதும் நினைக்கமாட்டாங்க என்றான் அவன்.

ப்ளீஸ் அர்ஜூன் என்றாள்.

இப்ப நான் எப்படி வர முடியும்? புரிஞ்சுக்கோ. நான்கு மணிக்கு மேல் வாரேன் அர்ஜூன் சொல்ல, அர்ஜூன் நீங்க என்னை பேசுற மாதிரி ஊர்க்காரவங்க எல்லாரும் பேசணும்ன்னு நினைக்கிறியா? கண்ணீருடன் பிரகதி கேட்டாள்.

அது வேற? இது வேற பிரகதி..

ஓ.கே அர்ஜூன். நீ வர வேண்டாம். நான் வாரேன் என்று அவள் சொல்ல, பைத்தியம் மாதிரி செய்யாத என்று அர்ஜூன் கோபமாக பேசினான்.

அவளும் எழுந்து கோபமாக, இப்ப நான் நல்லா தான் இருக்கேன் அர்ஜூன். அன்று மாதிரி இல்லை. அன்று இருந்த முட்டாள் தனம், பைத்தியக்காரத்தனம். எதுவும் இப்ப இல்லை. உனக்கு நான் இங்கிருந்து அகிலை விட்டு போனேன். ஸ்ரீயையும் உன்னையும் தவறாக பேசி விட்டு போனேன். அகில் ஸ்ரீயை பிரிச்சுட்டு போனது மட்டும் தான தெரியும். அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?..

ப்ளீஸ் அர்ஜூன். கஷ்டப்படுத்தாத. நீ வரலைன்னா சொல்லு. நானே பார்த்துக்கிறேன் என்று போனை வைத்து விட்டு கண்ணை துடைத்து விட்டு..அஜய்யிடம் போனை கொடுத்து விட்டு அழுது கொண்டே நடந்தாள். அவளுக்கு எங்க போகன்னு தெரியலை. ஆனால் நடந்தது நினைவில் வந்து..நீ இருந்து எதுவும் ஆகப் போறதில்லை. உன் பெற்றோர் இல்லை. உனக்கு யாருமில்லை. வாழும் தகுதி இழந்தவள் நீ என மனதில் நினைத்துக் கொண்டே சென்றாள்.

அகிலை விட்டு சென்ற பிரகதி அவள் காதலனை சென்று பார்த்த போது அவன் வேரொரு பொண்ணுடன் இருந்தான். அவள் பிரகதியை ஏளனமாக பார்க்க..அவனோ..நாளைக்கு என்னை பார்க்க வா..என்றவுடன் நம்பிக்கையுடன் சென்றிருப்பாள். அவள் உள்ளே சென்றது கதவை அடைத்த அவன் சிரிக்க அவனுடன் நால்வர் வந்தனர்.

அவள் வாழ்க்கையை சீரழித்தனர். ஒரே வருடத்தில் கர்ப்பமானாள். பயந்தாலும் அவனை பார்த்து குழந்தைக்காக பணம் வாங்கலாம் என்று பெற்றோரிடம் கூட மறைத்து சென்றாள். ஆனால் அவன் குழந்தை என்றதும்..அவளை கொல்ல முயற்சி செய்தான். அவனிடம் தப்பி வரும் போது கார் மோதி..அவ்விடத்திலே கரு கலைந்தது. வலியில் கத்தினாள். துடித்தாள். யாரும் முன் வரலை..யாரோ ஒருவர் தான் உதவினார். யாரென கூட அவளுக்கு தெரியாது. அவள் பெற்றோரிடமிருந்தும் ஏமாற்றி சொத்தை அவன் வாங்கியதால் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்தனர். எப்படியோ.. பள்ளியை கஷ்டப்பட்டு முடித்தாள். அதற்கு மேல் படிக்க வைக்க முடியவில்லை. ஆனால் அவனை பார்க்கும் நிலை வந்து அவனிடமிருந்து தப்பி ஓடினாள். ஆனால் அவன் அவளை பிடித்து தவறாக நடந்து கொள்ள பார்த்தான். அவனிடமிருந்து தப்பி வரும் போது தான் வினிதாவை பார்த்து உதவி கேட்டிருப்பாள். வினிதா தான் அவள் கம்பெனியிலே சும்மா…டீம் ஆட்கள் சொல்லும் சின்ன சின்ன வேலைகளை பார்த்துக்க சொல்லி இருப்பாள்.

அனைத்தையும் நினைத்துக் கொண்டே நடந்து வந்த பிரகதி நின்றது அவர்களது பள்ளி முன். அங்கேயே மண்டியிட்டு கதறி அழுதாள். அவளை பின் தொடர்ந்து வந்த அஜய் அவளை கவனித்துக் கொண்டிருந்தான்.

பிரகதி போனை வைத்த பின் அர்ஜூன் அஜய்க்கு போன் செய்ய, அவளை நான் பார்த்துக்கிறேன் அர்ஜூன். நீ ஓய்வெடு என்று அஜய் வைத்து விட்டு சித்தப்பாவிடம் கூறி விட்டு மறைந்து கொண்டே அவளை பின் தொடர்ந்தான்.

இடி மின்னலுடன் மழை அடிக்க ஆரம்பிக்க, அழுது கொண்டிருந்த பிரகதி சுருண்டு படுத்துக் கொண்டு வேண்டாம்..வேண்டாம் என்று அழுது கொண்டிருந்தாள். அஜய் அவளிடம் வர, பிரகதி முன் ஸ்ரீ வந்து நின்றாள்.

ஸ்ரீ..நீயா?..ஸ்ரீ..வேண்டாம்ன்னு சொல்லு..வேண்டாம்ன்னு சொல்லு..என்று பிரகதி கதறி அழுதாள்.

பிரகதி..என்னாச்சு? ஒன்றுமில்லை. இங்க யாருமே இல்லை. நான் ஸ்ரீ தான். உனக்கு ஒன்றுமில்லை..என்று அவளை அணைக்க, பிரகதி அவளிடமே மயங்கினாள்.

ஸ்ரீ நீ எப்படி இங்க வந்த? அஜய் கேட்க, இதான் நீங்க பார்த்துக்கிற லட்சனமா சார்? கோபமானாள்.

அர்ஜூன், அஜய் பேசியதை கவனித்த ஸ்ரீக்கு பிரகதியை நினைத்து கவலையாக..அர்ஜூனுக்கு மெசேஜ் மட்டும் அனுப்பி விட்டு பிரகதியை தேடி வந்து விட்டாள். அவள் இங்கே இருக்கலாம் என்ற யூகத்தில் தான் ஸ்ரீ வந்தது.

ஸ்ரீ திட்ட, அஜய் அமைதியாக நின்றான். பிரகதியின் கற்பழிப்பு மின்னல் இடியுடன் கூடிய நாளில் நடந்ததால் அவளுக்கு இடி, மின்னல் என்றாலே வீட்டை விட்டு வெளியே வர மாட்டாள். அன்று நடந்த சம்பவத்தில் அம்மா, அப்பா அவளை தேடி அவன் வீட்டிற்கு சென்று அவளை தூக்கி வந்தனர். ஒரு வாரமாக அவள் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவள் பெற்றோர்கள் தவித்து போனார்கள். பின் தான் அவள் நார்மலாக பேச ஆரம்பித்தாள்.

சார், அவளை தூக்குங்க. ஹாஸ்பிட்டல் போகணும் ஸ்ரீ சொல்ல, அஜய்யும் பிரகதியை தூக்கிக் கொண்டு நடந்தான். அவனுக்கு இதே போல் நடந்த  அந்த ஒரு நாள் நினைவிற்கு வந்தது. பள்ளிச்சிறுமி ஒருத்தி இரத்தமுடன் இருக்க அவளை ஹாஸ்பிட்டலில் சேர்த்தான். அவனுக்கு போன் வரவே பணத்தை கட்டி விட்டு சென்று விட்டான். பின் அந்த பொண்ணை இப்ப தான் பார்க்கிறான். அந்த பள்ளிச்சிறுமி..பிரகதி.

பவியிடம் பிரகதியை பார்த்ததும் அவனுக்கு நினைவிற்கு வந்தது. அஜய்க்கு அவள் கர்ப்பம் கலைந்த விசயம் மட்டும் தெரிய வந்திருக்கும். பிரச்சனை ஏதும் தெரியாது. பவியுடன் பேசியதை வைத்து பிரகதி  காதலனுடன் தவறு செய்திருக்கிறாள். அவள் தவறான பொண்ணு என்று அவன் நினைத்துக் கொண்டான்.

இப்பொழுதும் அவனுக்கு பிரகதி மீது நல்ல அபிப்ராயமே இல்லை. ஸ்ரீயும் அஜய்யும் பிரகதியை ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர். அவளை ஓர் அறையில் வைத்திருந்தனர். அவளுக்கு ஸ்ரீ ஆடையை மாற்றி விட்டு, தலையை துவட்டி விட்டாள். அஜய் உள்ளே வந்து, அர்ஜூனிடம் சொன்னாயா?

இல்லை..மெசேஜ் பண்ணிட்டு வந்துருக்கேன். பார்த்தால் அவனே வருவான் என்றாள்.

அங்கே வந்த செவிலியர் ஸ்ரீயை பார்த்து, மேம்..நீங்களா? பெரிய டாக்டரை வரச் சொல்லவா?

வேண்டாம். ஏற்கனவே அவங்க கஷ்டத்துல இருப்பாங்க. அவங்களை தொந்தரவு செய்யாதீங்க. இவளை நானே பார்த்துக் கொள்கிறேன்.

இவங்க பயத்துல மயங்கி இருக்காங்க. இவங்க எழுந்தவுடன் செல்லுங்கள் என்று சென்ற செவிலியர் கேசவனிடம் ஸ்ரீ இங்கிருப்பதை சொல்ல..அவளுக்கு ஏதோ ஆகி விட்டதோ? என்று அவர் நித்தியிடம் சொல்ல..பிராக்டிஸூக்கு செல்ல இருந்த நித்தி, கைரவ் பதறி கிளம்ப, சைலேஷூம் சென்றான்.

அர்ஜூன் ஹாஸ்பிட்டல் வந்து ஸ்ரீயை பற்றி கேட்க அவர்கள் வரவேற்பறை பெண்கள் அறையை கூறினார்கள். அவன் உள்ளே சென்றதும்..சொல்லீட்டு வர மாட்டியா? என்று கத்தினான்.

அவள் எழுந்திருக்க போறாடா. மணிய பாரு அஞ்சாகுது. பேசண்ட் எல்லாரும் தூங்குறாங்க. எல்லாரையும் விழிக்க வச்சிருவ போல? ஸ்ரீ கேட்க, பிரகதி கண்களை திறந்தாள். அவளுக்கு கடந்த கால நினைவு வர, பதறி அமர்ந்தாள். அவளுக்கு மூச்சு வாங்கியது. அர்ஜூன் கத்துவதை நிறுத்தி..ஏய்..என்னாச்சு? அவளிடம் வந்தான். ஆனால் அஜய் உட்கார்ந்த இடத்தில் அப்படியே இருந்தான்.

ஸ்ரீ அவனை முறைத்துக் கொண்டே தண்ணீரை எடுத்து அவளுக்கு குடிக்க கொடுத்தாள். பின் நிதானமாகி சுற்றி கவனித்து ஸ்ரீ, அர்ஜூனை பார்த்து..அமைதியானாள். நித்தி..குரூப்பில் அதை போட அனைவரும் அங்கு வந்தனர்.

இரவு பவியை சமாதானப்படுத்தி விட்டு அகில் வீட்டிற்கு வந்து துருவன் அறையை பார்த்தான். அவன் இல்லை என்றதும் தேடினான். மாடியில் சத்தம் கேட்க, வேகமாக படி ஏறினான். துருவன் ரதி மடியில் படுத்துக் கொண்டு மன்னிப்பு கேட்டு விட்டு புலம்பிக் கொண்டிருந்தான்.

அப்பாடா..எப்படியோ துருவன் புரிந்து கொண்டான் என்று அவர்களை பார்த்து விட்டு படுக்க சென்றான். ஒரு மணி நேரத்திலே போனில் மேசேஜ் சத்தம் கொடுக்க..எழுந்து பார்த்து விட்டு ஹாஸ்பிட்டல் கிளம்பினான்.

அர்ஜூன் வீட்டில் இருந்த அபி..பிரதீப்பிடம் நடந்ததை கூறினான். பின் அவர்களும் தூங்க..மேசேஜ் சத்தம் கேட்டு அதை பார்த்த அபி, கவின், பிரதீப், தீனா ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர்.

ஸ்ரீ என்னாச்சு? கேட்டுக் கொண்டே அறைக்குள் வந்த நித்தி பிரகதியை பார்த்ததும் அப்படியே நின்றாள்.

ஸ்ரீ நித்தியிடம் வந்து, நீங்க எதுக்கு வந்தீங்க? கேட்க, கைரவும் சைலேஷூம் உள்ளே வந்தனர். அர்ஜூன் போல கைரவும் கத்தினான். தனியா எதுக்கு வந்த? அடி எதுவும் பட்டுருச்சா? என்று அவன் ஸ்ரீயை சுற்ற அர்ஜூன் அவனை முறைத்தான்.

கேட்க தான செய்தேன். எதுக்கு முறைக்கிற? கைரவ் கேட்க, சைலேஷ் பிரகதியை பார்த்து விட்டு கன்னத்தில் கை வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அஜய்யை பார்த்து,

ஹே..அஜய்..இங்க என்ன பண்ற? எப்படி வந்த? என்று சைலேஷ் கேட்டுக் கொண்டே அவனிடம் செல்ல அஜய் புன்னகையுடன் எழுந்து அவனை அணைத்தான்.

என்னோட பிரதர் மேரேஜூக்கு வந்தேன்.

பிரதரா?

சத்யா..என்று கூற..நித்தி இருவரையும் பார்த்து விட்டு, ஸ்ரீயை இழுத்து..இவளுடன் என்ன செஞ்சுக்கிட்டு இருக்க ஸ்ரீ? கோபமாக கேட்டாள். எல்லாரும் அவளை பார்த்தனர்.

சீனியர், அவ மயங்கிட்டா. அதான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தோம்.

அவள பத்தி உனக்கு தெரியாது ஸ்ரீ? நித்தி சொல்ல..தெரியும் சீனியர். எனக்கு தெரியும் என்றாள் ஸ்ரீ.

உனக்கு எல்லாமே நினைவுக்கு வந்துடுச்சா? அகில் கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். அவனுடன் கவின், அபி, பிரதீப் வந்திருந்தனர்.

இல்லை. அவளை பார்த்த நாளிலே சில விசயங்கள் நினைவுக்கு வந்தது. அவள் பயத்துடன் அனைவரையும் பார்த்தாள்.

ஸ்ரீ..? அர்ஜூன் அவளிடம் வந்தான்.

ஆமா அர்ஜூன் நம்மள பற்றிய வதந்தி. இவள் எனக்கு கொடுத்த தண்ணீர் என்று ஸ்ரீ பிரகதியை பார்த்தாள். பிரகதி எழுந்து தலைகவிழ்ந்து நின்றாள்.

தெரிந்தும்மா..உதவின? நித்தி கேட்க.. ஆமா, தெரிஞ்சு தான் அவளை தேடி வந்தேன். அவள் செய்ததற்கான தண்டனை அவளுக்கு கிடச்சிருச்சு. அவளுக்கு இப்ப யாருமில்லை. அவளை யார் பார்த்துப்பாங்க. அதான் உதவினேன் என்றாள் ஸ்ரீ.

பிரகதி..கண்ணீருடன் சாரி ஸ்ரீ என்று அவள் கையை பிடிக்க, நித்தி அவள் கையை தட்டி விட்டு, அவள தொட்டு பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத.

உன்னோட அப்பாவுக்கு உடல் சரியில்லைன்னு சொன்னதா சொன்னாங்க நித்தி கேட்க, அகில் இரவு நடந்ததை கூறினான்.

அர்ஜூன்..இந்த பொண்ணு அனு அப்பா கம்பெனி பற்றிய விவரத்தை மட்டும் தானே கொண்டு வந்தாள். இவளை எதுக்கு கொல்லணும்? பிரதீப் கேட்டான்.

அண்ணா..அவள் அதை மட்டுமல்ல..கொலைகாரனுக்கான விவரத்தையும் கொண்டு வந்தாள். அவனது ஹோட்டல்ல போதை மருந்து விற்பனை நடப்பதன் விவரம் இருக்கு. இன்னும் ஒருவாரத்தில் கூட விற்பனை நடக்க போகுது. அதை அக்கா வீட்டிலிருந்து எடுத்து வந்தாள் என்றான் அர்ஜூன்.

போதை மருந்தா? அஜய் கேட்க, சார் இதில் நீங்க தலையிட வேண்டாம் அர்ஜூன் சொல்ல, தீனா உள்ளே வந்தான். அவன் ஸ்ரீயை பார்க்க, அவனை பார்த்து எல்லாரும்..உங்களுக்கு சரியாகி விட்டதா? பெயின் ஓ.கே வா? என விசாரித்தனர்.

அஜய்யை பார்த்து..ஹே..அஜய் கிருஷ்ணா..என்று தீனா புன்னகையுடன் அவனிடம் வர, அவனும் தீனாவை பார்த்து புன்னகைத்தான்.

இவரை உங்களுக்கு எப்படி அண்ணா தெரியும்? அர்ஜூன் கேட்டான்.

இவரை பற்றி தெரியாத போலீஸ் இருக்க முடியுமா? அஜய் கிருஷ்ணா..” தி கிரேட் கிரிமினல் லாயர்” டாப் டென் லாயரில் இவரும் ஒருவர் என்று சொல்ல, எல்லாரும் கண்விரித்து பார்த்தனர்.

சார், நான் கேட்டதுக்கு வக்கீல் என்று மட்டும் தானே சொன்னீங்க?

அதனால இப்ப என்ன? என்று அவன் பிரகதியை பார்த்தான். அவளும் அவனை பிரம்மித்து பார்த்தாள்.

இப்ப நீ ஓ.கே வா? கிளம்பலாமா? அர்ஜூன் பிரகதியிடம் கேட்க, அவள் தலையசைத்தான்.

டேய்.. ஸ்ரீக்கு ஏதோ ஆகிடிச்சு. ஹாஸ்பிட்டல இருக்கான்னு குரூப்ல போட்டது நீ தான? தீனா கைரவின் பின் சட்டையை பிடித்தான்.

நான் தான் போட்டேன். ஆனால் சொன்னது நித்தி தான் என்று கையை காட்டினான்.

அச்சோ..நானில்லை என்று கைரவை நித்தி முறைத்தாள். அப்பா..தான் சொன்னார் என்றாள்.

சரி..இப்ப எல்லாரும் நல்லா தான இருக்கீங்க? தீனா கேட்க, சார் நீங்க ஓய்வெடுக்காம வந்துட்டீங்க? அகில் கேட்டான்.

என்னை விடு. துருவன் நல்லா தான இருக்கான் அவன் விசாரிக்க, பிரதீப்பும் துருவனை பற்றி கேட்டான். அவன் எப்படியோ புரிஞ்சுகிட்டான் என்று கவினிடம் வந்த அகில் “தேங்க்ஸ்டா” என்று கவின் தான் துருவனை சமாதானப்படுத்தினான் அகில் கூற..ஓய்..அவன் மட்டுமல்ல எங்க அப்பாவும் நேற்று இரவு அவன் வீட்டுக்கு போனார்.

சாரி சார்..அவருக்கு என்னுடைய நன்றியை சொல்லுங்க என்றான் அகில்.

எல்லாரும் வெளியே வர, பிரகதி அனைவரையும் நிறுத்தி மன்னிப்பு கேட்டாள். பின் அர்ஜூனிடம் வந்து, அர்ஜூன்..என்னால இங்க இருக்க முடியாது என்று அகிலை பார்த்தாள்.

ஆமா..ஆமா..எங்க மூஞ்சில எப்படி இவளால் முழிக்க முடியும்? யாசு கோபமாக உள்ளே வந்து அவளிடம் கையை ஓங்கினாள். அகில் அவளை தடுத்து, அமைதியா இரு யாசு.

எங்க போக போற? அகில் கேட்டான்.

அவள் ஏதும் பேசலை.

பிரகதி..இப்ப நீ வெளிய போனால் உன்னை கொன்றுவாங்க அர்ஜூன் சொல்ல, பரவாயில்லை என்றாள்.

நீ இப்படியெல்லாம் பேச மாட்டியே? அதுவும் உன்னோட அம்மா, அப்பாவை திட்டிக் கொண்டே இருப்ப. அவங்க உன்னை பணத்துக்காக பயன்படுத்துவாங்கன்னு சொன்ன. இப்ப அவங்களுக்காக சாகும் அளவு செல்ல மாட்டியே? அகில் கேட்டான்.

அவள் கண்ணீர் நிற்காமல் வந்தது. என்ன சொல்லு? அகில் கேட்டான்.

ஆமா..சொல்லுங்க மேடம்..சொல்லுங்க என்று அஜய் கேட்க, புரியாமல் அனைவரும் அவனை பார்த்தனர். பிரகதியும் அவனை பார்க்க, அவளருகே வந்த அஜய்..எனக்கு அபாட் ஆகிடுச்சு. அதுவும் ஸ்கூல் படிக்கும் போதே..என்று உங்க ப்ரெண்ட்ஸூக்கு சொல்லுங்க என்று சொல்ல, அவள் தேம்பி தேம்பி அழுதாள்.

என்ன சொல்றீங்க? அகில் அஜய் சட்டையை பிடித்தான்.

ஓ..இது வேறயா? யாசு கேட்க, அவளுக்கு அவமானமாக இருந்தது. அவள் விடாமல் அழ..அர்ஜூன், ஸ்ரீ, நித்தி, அபி, கவின் அவளை அதிர்ந்து பார்த்தனர்.

அவளால் தான் எல்லாரும் அழுது பார்த்திருக்கிறார்கள். இவள் இப்படி அழுகிறாளா? நித்தி அவளருகே வந்து, அவர் என்ன சொல்றார்? முதல்ல மாதிரி நடிச்சி ஏமாத்தாத? என்று சொல்ல..அவள் அழுகை கோபமாக மாறியது.

நடிக்கிறேனா? உனக்கு என்னை பார்த்தால் அப்படி தானே தோன்றும்? நான் முன் அப்படி தானே நடந்து கொண்டேன். இப்ப கூட நான் நடிப்பது போல தான தெரியுது? ஆனால் நான் நடிக்கலை என்று அழுது கொண்டே அஜய்யிடம் வந்து, நீங்க தான் அன்று என்னை ஹாஸ்பிட்டல சேர்த்தீங்களா சார்? பணம் கூட கொடுத்துட்டு போனீங்க போல?

“ரொம்ப தேங்க்ஸ்” சார். நல்ல வேலை பார்த்துட்டீங்க? ஆனால் அதற்கான பணம் இப்பொழுது கூட நான் கொடுக்கும் நிலையில் இல்லை.

எல்லாருக்கும் நான் செய்தது கஷ்டமா இருந்திருக்கும்ன்னு தெரியுது. அகில் உன்னிடம் ஒன்று சொல்வேன் நினைவிருக்கா..பணத்துக்காக என்னை என் அம்மா பயன்படுத்துவாங்கன்னு..அதை எதுக்கு சொன்னேன்னு ஒரு நாள் கூட நீ யோசிக்கலைல்ல..

நம்ம புத்திசாலி சமத்து அர்ஜூன்..உனக்கு நம்ம ஸ்கூல்ல..நம்மை சுற்றி வித்தியாசமா எதுவுமே தெரியலையா? கேட்டாள். அனைவரும் புரியாமல் அவளை பார்த்தனர்.

என்ன சொல்ல வர்ற?

என் அம்மா பணம் வாங்கி தான் அவனுக்கு காதலனாய் நடிக்க வச்சாங்க. அவன் என்னை வைத்து மத்த பொண்ணுங்களை பயன்படுத்திக் கொள்வான். அது போல் நடந்த போது தான் ஸ்ரீ அவனை உள்ளே தள்ளினாள். அவளை பழி வாங்க நான் வரலை. என்னை அவன் அனுப்பினான். அவன் பேச சொன்னது போல் பேசினேன். நடந்து கொள்ள சொன்னது போல் நடந்து கொண்டேன்.

எதுக்கு அவன் சொல்வதை நான் கேட்கணும்ன்னு தான கேட்க வர்ற? என்று அபியை பார்த்த பிரகதி..பணம் அபி.. பணம். என் அம்மாவுக்கு பணம் வேண்டும். எனக்கு அம்மா, அப்பா, பாதுகாப்பு வேண்டும். அதுக்கு தான் அவங்க சொன்ன எல்லாத்தையும் செய்தேன். அவன் நடக்காத ஒன்று எனக்கு ஸ்ரீயை பிடித்தது.

அகில் மீதுள்ள பொறாமையில் செய்தேன். பழி வாங்க செய்தேன்னு தான சொல்றீங்க? கண்டிப்பா அகில் மேல எனக்கு விருப்பமே இல்லை. ஸ்ரீயுடனான அகில் எனக்கு பிடிக்கலை. அவங்க ப்ரெண்ட்ஷிப் பிடிக்கலை.

ஏன்னா..எனக்கு ப்ரெண்ட்ஸ் யாருமே இல்லை. நீங்க என்னை பகையாக தான் பார்த்தீங்க? ஆனால் நான் ஒருநாள் கூட அப்படி பார்க்கலை.

அவனுக்கு ஸ்ரீயை காயப்படுத்தணும். அவ ப்ரெண்ட்ஸோட நீ ஏதும் பேசக் கூடாதுன்னு என்னை மிரட்டினான். முதல்நாள் சாதாரணமாக பேச தான் அவளருகே வந்தேன். நம்மை சுற்றி அன்று அவன் தம்பி நம்ம ஸ்கூல்ல படிச்சான். அவன் எப்பொழுதும் ஸ்ரீ பின்..அதான் அர்ஜூன் உங்க பின்னாடி தான் சுத்தினான். நான் அவள் பக்கம் சென்றால் கூட உடனே என் போனுக்கு கால் வரும்.

பிரின்சிபுல் கிட்ட வேற ஒரு பிரச்சனையை சொல்லி போன் எப்பொழுதும் வச்சிருப்பேன்னு சொல்லி தான் சேர்த்தே விட்டான். நான் இங்கே ஏதாவது செய்தால் அவன் அங்கே என் அம்மாவை கொன்றுவேன்னு மிரட்டினான். நான் என் அம்மாவிடம் சொன்னேன். அம்மா..இவனை விடுங்க ரொம்ப டேஞ்சரா இருக்கான்னு சொன்னேன். ஆனால் நாளடைவில் அவன் பேச்சை கேட்டு என்னை என் அம்மாவே மிரட்டுவது போல் பேசினாங்க.

அர்ஜூன்..அந்த நாள் இரவு ஸ்கூல்ல நடந்தது கூட நல்லதுன்னு நினை. அவன் பிளான் வேற. நான் தான்..என்று கண்ணீருடன்..எனக்கு ஸ்ரீயோட ப்ரெண்ட்ஷிப் பிடிச்சது. அதை விட நீ அவ மேல வச்சிருந்த லவ் பிடிச்சிருந்தது.

அதனால் தான் உதவுகிறேன்னு…என்று அவனை பார்த்து விட்டு,  நான் மயக்க மருந்தை கலந்தவுடன் அவன் ஆட்கள் வந்து ஸ்ரீயை கடத்துவதாக பிளான் செஞ்சிருந்தாங்க. ஆனால் நான் தான் உன்னை முன்கூட்டியே வர வைத்தேன். அப்ப தான் ஸ்ரீ பாதுகாப்பா இருப்பான்னு..அகிலுக்கு ஸ்ரீ மேல லவ் இருந்தது எனக்கு நல்லா தெரியும்.

ஸ்ரீ நீ சொன்ன மாதிரி எனக்கு தண்டனை கிடைச்சது. ஆனால் உங்களை காயப்படுத்தியதால் இல்லை. உன்னை காப்பாற்றியதால்..

அப்ப..நீ அகிலை லவ் பண்ணவேயில்லையா? நித்தி கேட்டாள்.

சத்தியமாக இல்லை. அகிலயும் பிடிக்கும் நண்பனாக. ஆனால் காதல் இல்லை.

இதெல்லாம் நம்ப நாங்க என்ன முட்டாளா? எனக்கு தான் தெரியுமே? உன்னால் எப்படி காதலிக்க முடியும்? யாசு பிரகதியை நம்பாமல் பேசினாள்.

ஏன்? என்னால காதலிக்க முடியாது? நானும் காதலித்தேன். பார்த்து பழகிய காதல் இல்லை. நம்பிக்கையால் முளைத்த காதல். ஒரு வேலை நம் பள்ளியிலே தொடர்ந்து படித்திருந்தால் நானும் காதலை அவனிடம் சொல்லி இருப்பேன்.

யாரை நீ காதலிச்ச? உன்னை யாரு நம்பியது?

என்னை நம்பியது அவன் தான். அவன் நம்பிய பின் தான் அவன் மீது காதல் வந்தது.

யாரு? அர்ஜூன் கேட்டான்.

அர்ஜூன், “பிரிலியன்ட் ஸ்டூடண்ட் அவார்டு” அவனுக்கு கிடச்சிருக்கணும். என்னை பற்றி அவனுக்கு தெரியும். ஆனால் எல்லாமே இல்லை..

ஏய்..சும்மா சொல்லாதடி? யாசு சொல்ல..

நான் சும்மா சொன்னாலும் சொல்லலைன்னாலும் எனக்கு அப்பொழுது அவன் மேல காதல் இருந்தது என புன்னகைத்தாள்.

யாருன்னு சொல்லு? ஆர்வத்தை கிளப்பாதே கவின் சொல்ல..தருண் சத்தம் கேட்டது.

கோபமாய் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்த தருணை பார்த்த பிரகதி, “இவன் தான்” என்றாள்.

தருணா? என்று அனைவரும் அதிர்ந்து அவனை பார்க்க..ஏன்டா இப்படி பாக்குறீங்க? கேட்டுக் கொண்டே அவர்களிடம் வந்தான்.

பிரகதியை பார்த்து, நீ இங்க என்ன செய்ற? என்று ஸ்ரீயிடம் வந்து உனக்கு ஒன்றுமில்லையே? என கேட்டான். அவளும் அவனையே பார்க்க..

அர்ஜூனிடம் வந்து, டேய் பிரச்சனைன்னா..போன் போடாம மேசேஜ் பண்ணி இருக்கீங்க என்று திட்ட..அர்ஜூனும் அவனை அதிர்ச்சியோடு பார்த்தான்.

மாமா..என்று தீனாவிடம் வந்தான்.

அடேங்கப்பா..இப்ப பெரிய ஹீரோயிசம் காட்டி இருக்கீங்க மச்சான் கிண்டலாக தீனா.

நானா? என்னிடமா பேசுறீங்க? அவன் புரியாமல் கேட்க,..அபி அவன் முன் வந்து, வாயிலே அடித்தான்.

டேய்..ராஸ்கல், என்னிடம் என்னடா சொன்ன? பிரகதியால தான் எல்லா பிரச்சனையும் என்று அர்ஜூனை பற்றி பெருமையடிச்ச..அபி கேட்க,

எதுக்கு அவனை அடிக்கிற அபி? அவன் என்னை பற்றி சொன்னால் நம்புவீங்களா? ஏன் இப்ப கூட சிலருக்கு என் மேல நம்பிக்கை இல்லை என்றாள் பிரகதி.

பிரகதி..தருண் அழைக்க..நான் சொல்லிட்டேன். இதுக்கு மேல என்னால நடிக்க முடியாது.

டேய்..பிரகதி உன்னை லவ் பண்றாளாம் அர்ஜூன் சொல்ல, அவனிடம் அதிர்ச்சி ஏதுமில்லை.

தருண் அர்ஜூனிடம், ஆமா அர்ஜூன். எனக்கு தெரியும். ஆனால் எனக்கும் அப்ப அவள் மீது விருப்பம் தான் என்று சொல்லும் போது அங்கு இன்பா, பவி, இதயா வந்து அவன் சொல்வதை கேட்டு அதிர்ந்தனர்.

போச்சுடா தருண் இதயாடா கவின் கூற, அவன் திரும்பி பார்த்து இதயா..என்று அருகே வர..நில்லு..அங்கேயே நில்லு..வந்தேன்னா அவ்வளவு தான் என்று கண்ணீர் சொட்ட சொட்ட பின்னே நகர்ந்தாள்.

இதயா..நீ தப்பா புரிஞ்சுக்காத.

இல்ல. இப்ப தான் சரியா புரிஞ்சுகிட்டேன் என்று அவள் அழுது கொண்டே ஓட..தருண் இதயாவை தடுக்க முயலும் போதே நகர்ந்த பிரகதி அவளை பிடித்தாள்.

போகணும்னா போ..சொல்றதை கேட்டுட்டு போ..எனக்கு உங்க லவ் தெரியும். எனக்கு அவன் மீது இப்ப விருப்பமில்லை. அவன் மீது மட்டுமல்ல..யார் மீதும் விருப்பமில்லை என்றாள் உறுதியான குரலில்.

பேசுடா பக்கி தருணை பிரகதி திட்ட, அவனும் மீதியை தொடர்ந்தான். எனக்கு எந்த பொண்ணையும் பிடிக்காமல் தான் இருந்தது.

பிரகதி வந்த பின் அவளால் ஸ்ரீ கஷ்டப்பட ஆரம்பித்தாள். அதனால் அர்ஜூன் புலம்பியவன்..ஏதாவது செய்யணும்ன்னு சொன்னான்.

ஓ.கே பிரகதியை கடத்தி மிரட்டலாமான்னு சும்மா ஜோக் பண்ணேன். ஆனால் அர்ஜூன் உடனே சரின்னு சொல்லிட்டான்.

நானே பார்த்துக்கிறேன்னு அவளை தனியே பார்க்க நினைத்தேன். வாய்ப்பு கிடைத்தது. நான் அவளை பார்த்த போது போனில் யாருடனோ அவள் கெஞ்சிக் கொண்டிருந்தாள். என்னால் முடியாது…முடியாது என்று அழுதாள்.

திமிறாக கெத்துடன் அனைவரையும் கஷ்டப்படுத்தும் பிரகதி போல் இல்லாமல் இருந்தாள்.

ஓ..அதனால் லவ் வந்துருச்சா? இன்பா கோபமாக கேட்டாள்.

மேம்..முழுசா சொல்லிக்கிறேனே! எனக்கு அவளை கடத்த மனதில்லை. அதனால் தனியாக பேசினேன். என்னிடம் திமிறாக தான் பேசினாள். எனக்கு அப்பொழுது தான் முதலில் சந்தேகம் கிளம்பியது. அவள் போனை எடுத்தால் தெரிந்து விடும்ன்னு நான் அவளிடம் ஸ்ரீயை பற்றி பேசிக் கொண்டே அவள் போனை எடுத்து அவள் பார்க்காத சமயத்தில் பார்த்தேன்.

அதில் அவள் அனுப்பிய மேசேஜில் ஏதோ பட்டியல் போல வார்த்தைகள் இருந்தது. நாளை பேச வேண்டியவை என போட்டிருந்தது. நன்றாக கவனித்து விட்டு சென்றேன்.

மறுநாள் அவளை பின் தொடர்ந்தேன். அவள் நம்மிடம் பேசும் முன் போனை பார்த்து படித்து விட்டு தான் பேசினாள். இதை கண்டவுடன் சிரிப்பு தான் வந்தது என சிரித்தான். இதயா அவனை முறைத்தாள்.

ஏன்டா, என்னிடம் சொல்லலை?

அர்ஜூன்..அவளுக்கு யாரோ கட்டளையிடுறாங்க. அதை நம்மிடம் பேசுறா? நான் உன்னிடம் சொன்னால் நீயும் சிரிக்க தான் செய்வாய்? உனக்கு பிரகதி மேல கோபம் வராது. அப்ப பிரகதியும் மாட்டுவா..அவள் இவ்வாறு நடந்து கொண்ட காரணமும் தெரியாமல் போகும். அதனால் உன்னிடம் சொல்லலை.

ஒரு நாள் நானே அவளை தனியே அழைத்து சென்று போனை காட்டி கேட்டேன். கையிலிருந்த போனை ஏமாற்றி வாங்கி ஓடி விட்டாள். மறுநாள் அவள் பேசி பழகும் இடத்திற்கு சென்று அவள் முன் நின்றேன். அவள் பிரச்சனை இருக்குன்னு சொன்னா? யாரால்? என்னன்னு தெரியலை?

அடுத்து பேசும் முன் தான் அவள் செய்த வேலையால் அகிலும் ஸ்ரீயும் பிரிஞ்சிட்டாங்க. அவளும் காணாமல் போய் விட்டாள்.

இதுல காதலே இல்லையே? இதயா கேட்க, காதலா? எனக்கு விருப்பம்ன்னு தான சொன்னேன் தருண் சொல்ல..

என்ன விருப்பம்? என்று இதயா கையை கட்டிக் கொண்டு முறைத்தாள்.

அவன் என்னிடம் தனியா பேச வரும் போதே அவன் சந்தேகப்படுறான்னு புரிஞ்சது. அவனிடம் உதவி கேட்க அவன் பின் சுற்றினேன். எனக்கு தருணை பிடிச்சு காதல் வந்துச்சு. ஆனால் அந்த எமகண்ட பயலும் பாலோ பண்ணதை நான் கவனிக்காமல் விட்டுட்டேன்.

யாரை சொல்ற? தருண் கேட்க, அவனோட தம்பி.

எவனோட தம்பி? தருண் கேட்க,..பிரகதி அவனை முறைத்து விட்டு, நான் யாருக்கு இடையிலும் வர நினைக்கலை. அர்ஜூன் சொன்ன பைல்லை கொடுக்க தான் வந்தேன். ஆனால் அந்த கொலைகாரன் லிஸ்ட்ல தான் இருப்பேன்னு நினைக்கலை. அம்மாவிடம் இப்ப நல்லா தான பேசுன?

அர்ஜூன் அவங்க என்னோட அம்மா..ஒரு இன்சிடன்டுக்கு பின்னாடி குடும்பமே மொத்தமா மாறிடுச்சு அர்ஜூன். நான் வாரேன் என்று அவள் நகர..

ஒரு நிமிஷம்..அப்ப அந்த அபார்சன்? அஜய் கேட்க, ப்ளீஸ் சார்..அதை பத்தி மட்டும் கேட்காதீங்க? என்று அழுதாள்.

ஏன் அதுக்கு கதை கட்ட தெரியலையா? அஜய் கேட்க, அபார்சனா..என்று தருண் பிரகதியிடம் வந்து, அவன் உன்னை..தருண் கேட்க?

அவள் அழுது கொண்டே ஓடினாள். அபி அம்மா, கவின் அம்மா, அஜய் அம்மா பிரகதியை தேடி வந்தனர். அவள் அழுது கொண்டே வரவும் பதட்டமுடன் அவளிடம் சென்றனர்.

அம்மா..இந்த பொண்ணு நடிக்கிறா? என்றான் அஜய்.

அவ நடிக்கலை. நடந்த எல்லாமே உண்மைதான். நாங்க பார்த்த பிரகதி போலி. இவள் தான் உண்மை. இதை அன்றே அறிந்தவன் நான் என்ற தருண்.

பிரதீப்பிடம், மாமா..நீங்க பிரின்சிபிலா இருக்கிற சாரிடம் பிரகதி பெயரை மட்டும் சொல்லுங்க. அவரே எல்லாத்தையும் சொல்லுவார். அவர் அப்ப அவளோட கிளாஸ் டீச்சர். அவரிடம் பிரகதியை பற்றி பேசி இருக்கேன். விசாரிக்கிறவங்க விசாரிச்சுக்கோங்க..சொல்லிய தருண் கோபமாக.. போதுமா? உனக்கு இன்னும் விவரிக்கணுமா? இதயாவிடம் கேட்டான்.

மாமாவா? யாசு கேட்க, மாமா தான கூப்பிடணும். நான் சொல்லும் போது கூப்பிடலை. இப்ப கோபத்துல கூப்பிட்டான் எங்க மச்சான் என்றான் தீனா.

அர்ஜூன்..நான் தப்பு செஞ்சுட்டேன். அவ எங்க போனான்னு பார்க்காம விட்டுட்டேன் என்ற தருண் தலையில் கை வைத்து அமர்ந்தான்.

அஜய்யிடம்..உங்களுக்கு அவளை எப்படி தெரியும்? கேட்டான். அவனும் சொன்னான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement