Advertisement

அத்தியாயம் 122

சக்திக்கு மருந்திட்டு கௌதம் அவன் அறைக்கு அழைத்து சென்றான். அனைவரும் தூங்க செல்ல, காருண்யா வெட்கம் கலந்த சிரிப்புடன் கௌதமை பார்த்துக் கொண்டே நின்றாள். அவன் சென்றவுடன் அவளும் அறைக்கு சென்றாள்.

சக்தியை படுக்க வைத்து விட்டு அவனும் படுத்தான். அவனுக்கு காருண்யா அருகே இருப்பது போலவே இருந்தது. அவளுடன் நெருக்கமாக இருந்த அந்த நிமிடம்..அவளை அனு அனுவாக ரசித்த நினைவுகள் அவனை இம்சித்தது.

அவள் நினைவிலே தூங்காமல் உலன்று கொண்டிருந்தான். சக்தி புரியாமல் அவனை பார்ப்பதும் கண்ணை மூடுவதுமாக இருந்தான். காருண்யா இன்றைய அவளுக்கு சிறப்பான நினைவுகளை வரைந்து கொண்டிருந்தாள்.

எல்லாரும் அர்ஜூன் வீட்டிற்கு வந்தனர். கேரி படுக்க சென்று விட்டான். அகில், அர்ஜூன், கவின், அபி வெளியே அமர்ந்தனர்.

அர்ஜூன்..சீக்கிரம் பிரச்சனையை முடிக்கணும்..அபி சொல்ல, ஆமா அபி, அவன் நம்பும் படி நடந்து கொள்ள மாட்டேங்கிறான் அர்ஜூன் சொல்லி விட்டு, ஓய்வெடுங்கடா..வாங்க என்று அர்ஜூன் அழைக்க மற்றவர்கள் தயங்கினர்.

அர்ஜூன்..நான் பவியை பார்த்துட்டு கிளம்புறேன்னு அகில் சுற்றி பார்க்க, அவள் தோப்பு வீட்டில் தான் இருப்பாள் என்றான் அர்ஜூன்.

அகில் அங்கே செல்ல, மற்றவர்களை பார்த்த அர்ஜூன்..உங்க அம்மா, அப்பா எல்லாரும் அங்க இருக்காங்க. இங்கேயே இருங்க என்று அபி கவினுக்கு ஓர் அறையை காட்டி விட்டு அர்ஜூன் ஸ்ரீ அறை முன் நின்றான். அவனுக்கு ஸ்ரீயை எதிர்நோக்கவே கஷ்டமாக இருந்தது. அதனால் அவன் அறைக்கு சென்றான். ஆனால் அவன் பேசியதே ஓடிக் கொண்டிருக்க..அர்ஜூன் காருண்யா அறைக்கதவை தட்டினான்.

அவள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு கதவை திறந்து, அர்ஜூன்..இந்த நேரத்தில் என் அறைக்கு எதுக்கு வந்த? அவள் கேட்க, உன்னை யார் பார்க்க வந்தது? நான் கௌதம் சாரை பார்க்கணும். அவர் தூங்கி தொந்தரவு செய்ய வேண்டாம்ன்னு பால்கனி வழியே போகலாம்ன்னு தான் உன் அறைக்கு வந்தேன்.

ம்..என்றாள். அவளை பார்த்துக் கொண்டே பெட்டை பார்த்தான். அருகே செல்ல..டேய்..எடுக்காத..என்றாள்.

நான் எடுப்பேன் என்று எடுத்து பார்த்தான். இருவரும் நடனத்தின் போது இருந்த இரண்டு வரைபடம் இருந்தது.

சூப்பரா இருக்குடி..என்று உனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கா? மாமா ஏத்துக்கலைன்னா என்ன பண்ணுவ? அர்ஜூன் கேட்டான்.

அப்பா..ஏத்துப்பார். ஆனால் இவர் தான் ஏத்துக்கணுமே? அவர் சிரிக்கும் போது பாரேன் ரொம்ப அழகா இருக்கு. இன்று தான் அர்ஜூன் என்னை பார்த்து சிரித்தார். அர்ஜூன்…என்னிடம் ஏதும் குறை இருக்கா? கேட்டாள்.

ஏன் காரு? அவருக்கு என்னை பிடிக்கலை போலடா. எனக்கு பதில் சொல்லவேயில்லை.

உன்னை பிடிக்காமல் இருக்குமா? ஏதாவது காரணம் இருக்கும். வரைஞ்சது போதும். போ..தூங்கு என்று அர்ஜூன் குதித்து கௌதம் அறைக்கு சென்று பார்த்தான். சக்தியும் கௌதமும் பேசிக் கொண்டிருந்தனர். அர்ஜூன் அங்கேயே நின்று கேட்டான்.

ஒரே நாள்ல மாறி இருக்கீங்க? குழந்தைக்காகவா? மாலினிக்காகவா? கௌதம் கேட்டான்.

நான் மாறலை. நான் குடியை நிறுத்தி இருக்கேன்.

இல்லையே..மாலினிக்காக உங்க ப்ரெண்ஸூடன் சண்டை போட்டீங்க போல. இந்த அடி கூட அவனுக தான? கௌதம் கேட்க,

அவங்க பொண்ணுங்கள டீஸ் பண்ணுவாங்க தெரியும். ஆனால் தப்பா நடந்துப்பாங்கன்னு தெரியாது என்ற சக்தி..உனக்கு என்ன ஆச்சு? தூங்க முடியாம கஷ்டப்படுற?

குழப்பம் தான்.

என்ன குழப்பம்?

தேஜூவை லவ் பண்ணேன். ஆனால் என்னால என்னை கட்டுப்படுத்த முடிஞ்சது. மறந்து கூட விட்டேன். இப்ப என்னால முடியலை. எனக்கே தெரியுது. காருவை நான் காதலிக்கிறேன். அவளை பார்த்துட்டே இருக்கணும்  போல இருக்கு. என்னால என்னை கட்டுப்படுத்த முடியலை.

சொன்னால் தான் என்ன? அந்த பொண்ணே வெட்கத்தை விட்டு கல்யாணம் பண்ணிக்க உன்னிடம் கேட்டுடுச்சு. உன்னால் சொல்ல முடியாதா? சக்தி கேட்டான்.

இல்லை. என்னால சொல்ல முடியாது. அவளோட அப்பா என்னை நம்பி தான் இங்கே அனுப்பினார். நான் உங்க பொண்ணை காதலிக்கிறேன்னு சொல்ல முடியுமா?

சொன்னால் எந்த தவறும் இல்லை என்று அர்ஜூன் உள்ளே வந்தான். அண்ணா..இப்ப எப்படி இருக்கீங்க? சக்தியிடம் கேட்டான்.

பரவாயில்லை என்றான் அவன்.

அர்ஜூன்..நீ எப்படி?

காருண்யா அறையை காட்டினான். பின் அவள் வரைந்த ஓவியத்தை கௌதம் முன் வைத்தான். அதை பார்த்துக் கொண்டே அர்ஜூனை பார்த்தான். அவன் பெட்டில் படுத்தான்.

அர்ஜூன்..நீ உன் அறைக்கு போகலையா? கௌதம் கேட்க, எனக்கு தனியா இருக்க முடியலை. அதான் வந்தேன் என்று எழுந்து கௌதமை அணைத்தான் அர்ஜூன்.

அர்ஜூன்..என்று கௌதம் அவனை விலக்க, அர்ஜூன் கண்ணீருடன் அவனை பார்த்தான்.

ஹே..உனக்கு அவன் கால் பண்ணானா? கௌதம் கேட்டான்.

ம்ம்..பண்ணான். நான் தப்பு செய்துட்டேன் என ஏற்கனவே புலம்பியதையே கௌதமிடமும் புலம்பி தீர்த்தான்.

அர்ஜூன்..அவனை பிடிக்கும் ஆதாரம் இருக்குல்ல.. பிடிக்கலாமே?

அவனை அவ்வளவு ஈசியா பிடிக்க முடியாது. இப்ப கூட பிரகதி அவளோட பெற்றோரை இழந்துட்டாள். என்னால தான் அவளுக்கு யாருமில்லாமல் போச்சு.

அர்ஜூன்..நீ அவளை இங்கே வர வைக்கலைன்னா. அங்க வச்சே செத்து போயிருப்பா. சும்மா உன்னையே பிளேம் பண்ணாத.

அவனை பிடிக்கிறத விட கொல்றது தான் சரி. எத்தனை பேரை கொன்றுக்கான்னு தெரியுமா? இப்ப ஸ்ரீய அந்த பெரியவங்க லிஸ்ட்ல வச்சிருக்கான். கொலைசெய்ய நினைத்தால் கூட காப்பாற்றிடலாம். அவளுக்கு இனியும் அதே போல் நடந்தால் அவளை அவளே ஏதாவது செஞ்சுப்பான்னு ரொம்ப பயமா இருக்கு என்று அழுதான்.

கௌதம் அவனை அணைக்க சக்தி அவன் தோளில் கை வைத்து..அர்ஜூன் அதே போல்ன்னா..அவன் கேட்க இருவரும் அவனை பார்த்தனர்.

நான் இன்று மட்டும் உங்களுடன் தங்கிக்கவா? அர்ஜூன் கேட்க.. இதுக்கெல்லாமா கேட்ப? என்ற கௌதம் போனிற்கு மெசேஜ் வந்தது. சுந்தரம் போன் செய்ய சொல்லி அனுப்பினார். இரு அர்ஜூன் வாரேன் என்று..பால்கனிக்கு சென்று போன் செய்தான்.

சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. அர்ஜூன் ஒரு முறை ஸ்லாப்பில் அமர்ந்தானே..அவ்விடத்தில் குதித்து அமர்ந்தான் கௌதம். காருண்யா அறையை பார்த்தான். அவள் அறை இருட்டாக இருந்தது.

சார்..என்றான்.

ம்ம்..சொல்லுப்பா?

என்ன சொல்லணும் சார்?

என் பொண்ணு உன்னிடம் ஏதோ கேட்டாளாமே?

சார்..என்னது?

அதான் கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்டாலே. அதான்..

சாரி சார். என்னிடம் இதுக்கு பதில் இல்லை சார்.

ஏன், என் பொண்ணை பிடிக்கலையா?

அப்படியெல்லாம் இல்லை.

அப்ப பிடிச்சுருக்கா? அவர் கேட்க நந்து புன்னகையுடன் அவரை பார்த்தான். குகன் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

தயங்கிய கௌதம், பிடிக்கும். ஆனால் முதல்ல பிரச்சனை முடியட்டும் சார்.

பிரச்சனைக்கும்? இதுக்கும் என்ன சம்பந்தம்?

இருக்கு சார் என்றான்.

அவரே வீடியோ கால் செய்ய..என்னாச்சு சார்? என்று அவரை பார்க்க நந்து அருகே இருந்து சைகையில் குகனை காட்டி நோ..காட்டினான்.

கௌதம் புரியாமல் பார்த்தான். சுந்தரம் அவனை பார்த்து, நந்து அமைதியா இரு..என்று குகனை காட்டி..இவன் எப்படி இருக்கான்? கேட்டார்.

எதுக்கு சார்?

நீ ரொம்ப யோசிக்கிறேல்ல. அதான் அவள் படிப்பு முடியவும் இவனை கட்டி வச்சிறலாம்ன்னு பார்க்கிறேன் என்றார். கௌதம் முகம் மாறியது. குகன் அவனை பார்த்தான். ஏதும் பேசவில்லை.

டாக்டர் சார், நாளை காலை போன் செய்வேன். நீங்க கூறும் பதில்ல வச்சு தான் நான் முடிவெடுக்கணும் என்றார்.

நான்..உங்களுக்கு பிரச்சனை இல்லையா? நாங்க மிடில்கிளாஸ் தான். ஆனால் காரு..

அவள் உங்களிடம் இந்த வசதிய பத்தி கேட்டாளா? இல்லை வசதியுடன் தான் வாழ்ந்தாளா? இல்லப்பா..அவளுக்கு வசதி தேவையில்லை. சரி..கவனமா இருங்க. அவளை பார்த்துக்கோங்க. நாளைக்கு பேசலாம் என்று போனை வைத்தார். மறைவிலிருந்து பார்த்த காருண்யாவிற்கு சந்தோசம் எல்லையை மீறியது. போனை வைத்த கௌதம் எழுந்து காருண்யா அறைக்கு ஏறி குதித்தான்.

சத்தம் கேட்ட காருண்யா ஓடி சென்று படுத்து கண்ணை மூடிக் கொண்டாள். பால்கனி வழியே உள்ளே வந்த கௌதம் நாற்காலியை இழுத்து போட்டு அவளருகே அமர்ந்தான். அவளை பார்த்து எழுந்து..இந்த குளுரில் போர்த்தாமல் தூங்குகிறாளே? என்று போர்த்த, அவன் கையை போர்வையுடன் சேர்த்து பிடித்துக் கொண்டு மனதினுள் சிரித்தாள் காருண்யா.

அவன் கையை எடுத்து விட, அவள் இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் அவன் என்ன செய்வதென புரியாமல் விழித்தான்.

பிடித்திருந்த கையை போர்வையுடன் இழுத்தாள். அவள் முகத்தின் அருகே வந்த கௌதம் அவளை பார்த்தான்.

அவனது மற்றொரு கை அவளது கன்னத்தை பிடித்து அவளை நெருங்கினான். அவன் மூச்சுக்காற்றை உணர்ந்த காருண்யா அவனது நெருக்கம் பயத்தை கொடுத்தாலும் மனம் அடித்துக் கொண்டது. அவன் கை தானாகவே அவள் இதழ்களை வருட, கண்ணை திறந்து ஏதும் தெரியாதது போல் சார்..என்று அழைக்க..சுயம் வந்த கௌதம்..

நான்..நான்..என்று தயங்கிக் கொண்டே கையை எடுத்தான். அவள் விடாது பிடித்துக் கொண்டு, சார்..இங்க என்ன பண்றீங்க? பதறுவது போல் நடித்தாள்.

ஏய்..கத்தாத, நான் ஒன்றும் செய்யவில்லை அவன் பதற, அச்சச்சோ..நீங்க என்ன பண்ணீட்டீங்க? என சத்தமிட்டாள். அவன் அவள் வாயை பொத்தி விட்டு, நான் இப்ப போயிடுவேன் என்றான். அவன் கையை அவள் கையோடு பொருத்தினாள்.

ஏய், என்ன பண்ற? கையை எடுக்க வந்தவனை பிடித்து இழுக்க அவள் மீது விழுந்தான் கௌதம். அவன் கை அவள் இடையில் அழுத்த, அவள் கண்ணை மூடிக் கொண்டு உதட்டை மடித்தாள். கௌதம் அவளை பார்த்து விட்டு கையை எடுத்து அவளை பார்த்துக் கொண்டே எழுந்தான்.

கண்ணை திறந்த அவளுக்கு ஏமாற்றமாக போனது. அவன் தன்னை தவறாக நினைத்திருப்பானோ? என்று அவள் போர்வையை அவள் முகத்திலும் மூடிக் கொண்டாள் கண்ணீருடன்.

செல்ல இருந்த கௌதம் அவள் செயலில் அவளிடம் வந்து போர்வையை விலக்கினான். அவள் விடாமல் பிடித்துக் கொண்டு “வெளிய போங்க” என்றாள் அழுது கொண்டு.

எதுக்கு அழுற? என்று மீண்டும் அவன் விலக்க..முகம் தெரியாதவாறு அழுது கொண்டு குப்புற படுத்தாள். அவன் போர்வையை விலக்கி பார்க்க அவள் அணிந்திருந்த தாவணியில் தான் இருந்தாள். அவள் இடை தெரிய பார்த்துக் கொண்டே அவளை நெருங்கி திருப்பினான். அவள் முகத்தை மூடிக் கொண்டு அழ..அவள் ஆடை விலகி அங்கம் தெரிந்தது. அவள் இடையில் இருந்த குழி அவனை இழுக்க..அவன் மோகமைந்தனாகி அவள் இடையில் கை வைத்தான். அழுத காருண்யா முகத்திலிருந்து கையை எடுத்து கௌதமை பார்த்தாள். அவன் காருண்யாவை பார்த்தான். அவள் இடையில் கௌதம் வைத்திருந்த கை மீது காருண்யாவும் கை வைத்தாள். அவன் அவளை நெருங்கினான்.

இடையில் அழுத்தம் கொடுத்துக் கொண்டே அவள் கோவைப்பழமாய் சிவந்து இதழ்களை பார்த்து முத்தமிட்டான். அவள் அவன் கண்ணை பார்த்துக் கொண்டே முத்தம் கொடுத்தாள். அவனது விரல்கள் அவள் கண்கள், மூக்கு, இதழ்களை தாண்டி கழுத்தை வருடியது. கண்களை மூடிய காருண்யா அவன் கையில் பொம்மையானாள். அவன் விரல்கள் மார்பிடம் வர, கையை வைத்து தடுத்து அவன் கையை கோர்த்தாள். கௌதம் அவளருகே படுத்தான்.அவளது கழுத்தில் முகம் புதைத்து முத்தமழையை பொழிவித்தான்.

திடீரென சாரி..சாரி..என கூறிக் கொண்டே எழுந்தான் கௌதம். அவள் கண்கள் திறந்து அவனை பார்க்க..உன் ஆடை விலகியதை சரி செய்ய தான் வந்தேன். ஆனால்..நான்..சாரி..சாரி என்று நகர்ந்தான். அவள் அசையாது அவனை பார்த்தாள்.

நான் வாரேன்..என்று கௌதம் சொல்ல,அவளுக்கு அழுகை வந்தது. கட்டுப்படுத்திய காருண்யா எழுந்து அவனருகே வந்து கண்ணாடி முன் அவனை நிறுத்தி விட்டு கண்கலங்க படுக்கையில் அமர்ந்தாள். கௌதம் இதழ்களில் ஒட்டிருந்த லிப்ஸ்டிக்கை அகற்றிக் கொண்டே அவளை பார்த்தான்.

மீண்டும் எழுந்து அவனிடம் வந்து..பின்னிருந்து அவனை அணைத்துக் கொண்டு, முகத்தை மறைத்து குனிந்து கொண்டு, உங்களுக்கு என்னை பிடிக்கலைன்னே எடுத்துக்கிறேன் சார். ஆனால் இன்று மட்டும் என்னுடன் இருங்க சார் என்றாள்.

அவன் கோபமாக அவளை தள்ளி விட்டு, என்ன தப்பா பேசுற?

தப்பா இல்லை சார். உங்களுக்கு என்னை பிடிக்கலை. என் உடம்பை தானே பிடிச்சிருக்கு என்று சொல்லவும் கோபமாக அவளை அடித்தான்.

கண்ணீருடன் கையை கன்னத்தில் வைத்துக் கொண்டு, எனக்கு பிரச்சனையில்லை சார். நீங்க என் பக்கத்துல இருந்தா போதும் சார்.

பைத்தியம் மாதிரி பேசாத என்று கத்தினான். இதுவரை நடந்ததை அர்ஜூன் பார்க்கலைன்னாலும் அவனால் கௌதம் பால்கனியிலிருந்து உணர முடிந்தது. அவன் சத்தம் கேட்டு சக்தி எழுந்து அமர்ந்து அர்ஜூனை பார்த்தான். அர்ஜூன் கோபமாக நின்று கொண்டிருந்தான்.

பைத்தியம்ன்னு கூட நினைச்சுக்கோங்க. ஆனால் சார் நீங்க என்னை விட்டு போகாதீங்க என்று அவனை அணைத்தாள்.

அவளை தள்ளிய கௌதம், சின்ன பொண்ணு மாதிரியா பேசுற? ச்சே.. என்றான்.

காருண்யா கண்ணீருடன், சார் நான் இப்ப எதுவும் செய்யலை. ஆனால் எனக்கு உங்களை மட்டும் தான் பிடிச்சிருக்கு. அதனால் தான் நீங்க தொடும் போது நான் மறுக்கலை. என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? கேட்டாள். அவன் கண்கலங்க..அவளை பார்த்து விட்டு ஏதும் சொல்லாமல் பால்கனியிடம் வந்தான். அவளும் அவன் பின்னே வந்தாள். அர்ஜூனை பார்த்து இருவரும் நின்றனர். அர்ஜூன் அவர்களை பார்க்காதவாறு நின்றான். கௌதம் அவன் அறை பால்கனிக்கு வந்து அர்ஜூன் தோளில் கை வைத்தான்.

அர்ஜூன் கௌதனை அடித்தான். அர்ஜூன்..என்று சக்தியும் காருண்யாவும் சத்தமிட, இவ்வளவு நேரம் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ பால்கனிக்கு வந்தாள்.

காரு..பால்கனியை லாக் பண்ணிட்டு உள்ள போ..கத்தினான் அர்ஜூன்.

அர்ஜூன்..வேண்டாம்..என்று காருண்யா அழுதாள். போன்னு சொன்னேன் என்று அவன் கத்த, அழுது கொண்டே உள்ளே சென்றாள். கௌதம் அவளை தான் பார்த்தான். சக்தி அவர்களிடம் வர, ஸ்ரீ அதிர்ந்து அர்ஜூனை பார்த்தாள்.

சார், உங்களுக்கு பிடிச்சிருந்தா பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க. இல்லைன்னா.. இல்லைன்னு அவள் பக்கமே போக இருந்துக்கோங்க. அதுக்கு மேல அவள் உங்களை தொந்தரவு பண்ணா என்னிடம் சொல்லுங்க. அதை விட்டு அவளை தப்பா பேசாதீங்க.

ஏன் சார்? உங்களுக்கு எல்லாமே அவளை பத்தி தெரியும் தான? ஏன் இப்படி பேசுறீங்க? அவள் உங்க அறைக்கு வரலை. நீங்க தான் போனீங்க? இதுக்கு மேல தெளிவா முடிவெடுத்து சொல்லுங்க அவளுக்கான பதிலை. ஆனால் அவளிடம் வேண்டாம். என்னிடம் சொல்லுங்க. அதுவரை நீங்களும் அவளிடம் பேச வேண்டாம். அவளும் பேச வேண்டாம்..என்று சொல்லி விட்டு முன் விழுந்த நிழலை பார்த்து ஸ்ரீயை பார்த்தான்.

அர்ஜூன்..என்று அவள் அழைக்க, அவன் ஏதும் சொல்லாமல் கிளம்பினான் அவன் அறைக்கு.

ஆனால் ஸ்ரீ விடாமல் அர்ஜூன் அறைக்கு வெளியிருந்து போன் செய்தாள். அவன் எடுக்கவில்லை. அவள் கதவை தட்ட..ஸ்ரீ அறைக்கு போ..உள்ளிருந்து சத்தமிட்டான்.

அர்ஜூன் நீ வெளிய வா..ஸ்ரீ அழைக்க, அனு தனியா இருப்பா. போ..என்றான். காருண்யாவும் அர்ஜூனிடம் பேச நினைத்து வெளியே வந்தாள். ஸ்ரீயிடம் அவன் கோபமாக பேசுவதை பார்த்து உள்ளேயே சென்று விட்டாள்.

ப்ளீஸ் அர்ஜூன் என்று ஸ்ரீ கதவை தட்ட, ஏய்..இரவில் தூங்காமல் என்ன செய்றீங்க? அஞ்சனா சத்தமிட மற்றவர்களும் வந்தனர்.

ஸ்ரீ என்னாச்சு? தாரிகா அவளிடம் வந்தாள். கேரியும் அவளிடம் வந்தான்.

அவர்களிடம் என்ன சொல்வது? என புரியாமல் நின்றாள் ஸ்ரீ. அர்ஜூன் கோபமாக கதவை திறக்க கௌதம் வெளியே வந்து காருண்யா அறைக்கதவை தட்டினான்.

காரு..வெளிய வா பேசணும் என்று அழைக்க, அர்ஜூன் அவனை பிடித்து அடிக்க வர, கேரி அவனை தடுத்தான்.

அர்ஜூன், உனக்கு என்னாச்சு? கமலியும் மற்றவர்களும் அவனிடம் வந்தனர்.

கௌதம் மீண்டும் காருண்யாவை அழைக்க, நீங்க அவளிடம் பேசக்கூடாதுன்னு சொன்னேன். உங்க பதிலை என்னிடம் சொல்லுங்க என்றான் சினமுடன். ஸ்ரீ அர்ஜூன் முன் வந்து, அர்ஜூன் அவங்க பேசட்டும் என்றாள்.

ஸ்ரீயை அர்ஜூன் அடித்து விட்டு கத்தினான். எல்லாரும் திகைத்து அவனை பார்த்தனர்.

தாரிகா அர்ஜூனை பிடித்து தள்ளினாள். அவள் காருண்யாவுக்காக தான பேசினா? எதுக்குடா அடிச்ச? திட்டினாள்.

அஜூ..என்ன பண்ற? எதுக்கு இவ்வளவு கோபம்? பாட்டி அவனிடம் வந்தார்.

ஸ்ரீ அவள் அறைக்கு சென்றாள். அர்ஜூன் அவளை பார்த்துக் கொண்டே நின்றான். தாரிகாவும் அஞ்சனாவும் அவள் பின் சென்றனர்.

காருண்யா கதவை திறந்து வெளியே வந்தாள். கௌதம் அர்ஜூனை பார்த்து விட்டு, காருண்யாவை இழுத்து முத்தமிட்டான். கமலி அவனை அறைந்தார்.

அர்ஜூன்..அவளுக்கான பதில் உன்னிடம் சொல்லக் கூடாது. அவளிடம் தான் சொல்லணும் என்ற கௌதம் காருண்யாவை பார்த்து எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு. ஆனால்..என்று சுந்தரத்திடம் பேசியதை கேட்டான்.

சார், எனக்கு உங்க காதல் மட்டும் போதும். வேற எதுவும் வேண்டாம்.

காரு, என்னோட சிறு வயதிலிருந்தே அம்மா..தான் எனக்கு எல்லாமே. அதனால் அவங்களோட கொஞ்சம் நெருக்கம் இருக்கும். நீ கோபப்பட கூடாது. சண்டை போடக் கூடாது என்று அவளை பார்த்தான். அவள் புன்னகையுடன் தலையசைத்து…சண்டை போட கூடாதுன்னா லைஃப் போறாகிடுமே? என்றாள்.

என்ன?

நான் உங்களிடம் சொன்னேன் என்று அவனை அணைத்து “தேங்க்ஸ்” என்றாள்.

காரு..நான் உன்னை இப்பொழுதைக்கு கல்யாணம் பண்ணிக்க முடியாது.

படிச்சி முடிச்ச பின் பார்க்கலாம் என்றாள்.

இல்ல காரு. அதுவந்து..எனக்கு உன் மேல நம்பிக்கை இருக்கு. ஆனால் அம்மா பட்ட கஷ்டம். எங்களது தனிமை. அப்புறம் தேஜூ..அவன் சொல்ல அவள் அவன் வாயில் கை வைத்து..

நீங்க சொல்லும் போது கல்யாணம் பண்ணிக்கலாம் என்றாள்.

ஏய்..இருவரும் என்ன பேசிகிட்டே போறீங்க? கமலி கேட்க, ஆன்ட்டி..நாங்க காதலிக்கிறோம் என்று கமலி, பாட்டி, மற்றவர்களை பார்த்து விட்டு அர்ஜூனை பார்த்தான் கௌதம். காருண்யா புன்னகையுடன் அவன் கையை பிடித்தாள். பாட்டி அவனை சுற்றி சுற்றி வந்து பார்த்தார்.

பாட்டி..என்று காருண்யா அழைக்க..இருடி என்று விரலை நீட்டி அவனை குனிய செய்து, அவன் கன்னத்தில் கிள்ளிக் கொண்டு, இதை சொல்ற நேரமா இது?

பாட்டி..என்று காருண்யா அவர் கையை எடுக்க, அவன் கன்னத்தில் கை வைத்தான்.

அச்சோ..பாருங்க. அவர் கன்னம் சிவந்து போயிருச்சு என்று பாட்டியை முறைத்தாள். அர்ஜூன் ஸ்ரீ அறைக்கு செல்ல..போய் படுங்க என்றார் கமலி.

நீங்க எதுவுமே சொல்லலை. எங்க காதலை ஏத்துக்கிட்டீங்களா? கௌதம் கமலியிடம் கேட்டான்.

நாங்க ஏத்துக்கலைன்னா. நீங்க இந்த வீட்ல இருக்க முடியாது என்றார் கமலி.

நாளைக்கு சீக்கிரம் எழணும். போய் தூங்குங்க என்றார். கௌதம் அப்படியே நிற்க, கேரியும் சக்தியும் புன்னகையுடன் நகர்ந்தனர்.

என்ன? கமலி கேட்க, ஆன்ட்டி..மருந்து இருந்தா தாங்களேன் என்று காருண்யா கேட்டாள்.

அதெல்லாம் வேண்டாம் என்ற கௌதம் காருண்யாவை பார்த்தான். காரு..உள்ள போ என்று கமலி அவளை அறைக்குள் தள்ளி விட்டு, மாப்பிள்ள சார்..தூங்க போகலையா? காலையில மேரேஜூக்கு போகணும் கமலி சொல்ல அவன் நகர்ந்தான். அனைவரும் சென்று விட..கௌதமும் காருண்யாவும் வெளியே எட்டி பார்க்க,இரு வாரேன் என்று கௌதம் அவளறைக்கு சென்றான்.

உள்ளே சென்ற கௌதம் காருண்யாவை அணைத்து, சாரி..நான் வேண்டுமென்றே பேசலை. பதில் சொல்ல முடியாமல் தான் பேசிட்டேன் என்று அவளை பார்த்தான். அவள் கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

எதுக்கு அழுற?

மாமா..அடிச்சுட்டான்ல.

அவனுக்கு ஏகப்பட்ட டென்சன். இதுல நானும் ஓவரா போயிட்டேன். அதான் என்று அவளை மேலிருந்து கீழாக பார்த்தான்.

என்ன?

இல்லை என்று அவன் கண்கள் அவள் இடையில் உள்ள தொப்பிளை பார்த்தது. அவள் அவன் கையை இடையில் அழுத்தினாள்.

அவன் கையை எடுத்து விட்டு, அவன் முகத்தை இடையில் புதைத்தான். அவள் கண்ணை மூடி அவன் தலையை கோதினாள். அவளை பார்த்த கௌதம் புன்னகையுடன் அவளை அணைத்துக் கொள்ள, இனி இப்படி செய்யாதீங்க. கன்ட்ரோல் மிஸ் ஆகுது என்றாள் சிணுங்கியவாறு.

மிஸ் ஆகுதா? என்னால் உன்னை பார்த்துக் கொண்டு இருக்க முடியலையே?

அப்படியா? என்று அவன் மூக்கை பிடித்து ஆட்டினாள்.

உனக்கு என் மேல் கோபம் வரலையா?

பயம் தான். எங்கே நீங்களும் என்னை விட்டு விலகிடுவீங்கன்னு ரொம்ப பயந்துட்டேன். அர்ஜூன் வேற அடிச்சிட்டானா? ரொம்ப பயமா போச்சு. அவனுக்கு பதில் நான் சாரி கேட்டுக்கிறேன் என்றாள்.

அவனுக்கு பதில் நீ எதுவும் பேசக் கூடாது. எனக்கு பதில் தான் பேசணும் என்றான்.

ம்ம்..என்று அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்.

ஹப்பா..பாட்டி கிள்ளி கன்னமே சிவந்து போச்சு. இன்னும் கொடேன் என்று கன்னத்தை காட்டினான். அவளும் முத்தம் கொடுக்க..நீங்க அறைக்கு போய் தூங்குங்க. நாளைக்கு சீக்கிரமே எழுந்துருக்கணும்.

நான் இங்கேயே..நோ..நோ..போங்க போங்க..

ஏம்மா, இப்படி விரட்டிற?

நான் தூங்கலைன்னா. என் கண்ணில் கருவளையம் வந்துரும். மேக் அப்பால் கூட மறைக்க முடியாது.

போறேன். அதுக்கு முன் ஒரு ஐந்து நிமிடம் உன் மடியில் படுத்துக் கொள்ளவா? கேட்டான்.

நேரமாகுமே? நான் ஆடை மாற்றணும்..போங்க.

ஓ..மாற்றணுமா? நான் உதவவா?

ச்சீ..போங்க. நாளைக்கு மடியில் தூங்கலாம் என்று அவனை தள்ள..சரி போரேன் என்று கன்னத்தை காட்டினான். அவள் முத்தம் கொடுக்க வர, தலையை நகர்த்தி அவள் இதழ்களை சுவைத்தான். இருவரும் அவரவர் அறையில் உறக்கத்தை தழுவினர்.

ஸ்ரீ அறைக்குள் அர்ஜூன் செல்ல தாரிகாவும் அஞ்சனாவும் அர்ஜூனை முறைத்துக் கொண்டு வெளியே சென்றனர். அவள் அனுவை அணைத்துக் கொண்டு படுத்திருந்தாள்.

ஸ்ரீ..அர்ஜூன் அழைக்க, அவள் அவனை பார்த்தாள். அர்ஜூன் அருகே வர. நான் ஓய்வெடுக்கணும். நீ கிளம்பு என்றாள்.

“ஐ அம் சாரி” என்று அர்ஜூன் தயங்கினான். ஸ்ரீக்கு ஒருமாதிரி ஆனது. நம் அர்ஜூன் என்னிடம் தயங்குறானா? என்று எழுந்து அமர்ந்தாள்.

ஒன்றும் பிரச்சனையில்லை அர்ஜூன் என்று எழுந்தாள். ஸ்ரீ..பயமா இருக்கு என்று ஓடி வந்து அவளை அணைத்தான்.

ஸ்ரீக்கு சிறுவயது அர்ஜூன் நினைவு வந்தது. ஸ்ரீ-அர்ஜூன் முதல் சந்திப்பில் அர்ஜூனை அடித்த பசங்க அவனை மறுபடியும் கேலி செய்ய, ஸ்ரீயை தேடி வந்து..பயமா இருக்கு என்று அழுதிருப்பான்.

அர்ஜூன்..என்ன சொன்ன? அவனை நிமிர்த்தி பார்த்தாள். அவன் தயங்கினான். அவனால் அந்த கொலைகாரன் பேசியதை ஸ்ரீயிடம் எப்படி கூற முடியும்? அவன் கண்ணீரை பார்த்து, ஏதும் பிரச்சனையா? எல்லாரும் நல்லா இருக்காங்கல்ல. உனக்கு..என்று அவனை பதட்டமுடன் ஆராய்ந்தாள்.

அர்ஜூன், அவன் போன் செய்தானா? ஏதாவது சொன்னானா?கேட்டாள். அவன் கண்ணீர் பெருக்கெடுத்தது. உன்னை என்னால் விட முடியாது ஸ்ரீ. நான் அவனிடம் உன்னை அழைத்து செல்ல மாட்டேன் என்று அழுதான்.

ஷ்..பாப்பா தூங்குறா? இப்ப என்ன? நான் அவனிடம் செல்லக்கூடாது. அவ்வளவு தான? ஓ.கே அர்ஜூன் ரிலாக்ஸ் என்றாள்.

அவன் கை நடுங்க..அர்ஜூன் முதல் முறையாக பழைய அர்ஜூனாக உணர்ந்தாள். அவன் கையை பிடித்து..அர்ஜூன் பாரேன். என்னோட கண்ணில போட்ட ஐ லைனரை எடுக்க மறந்தே போயிட்டேன். எனக்கு எடுத்து விடேன் என்றாள்.

ம்ம்..என்று மூச்செடுத்து விட்டான். ஸ்ரீ அவனை பார்த்து சிரித்து, ஏன்டா நான் ஏதோ பெரிய வேலை சொன்னது போல் நடந்துக்கிற?

எனக்கு இதெல்லாம் பழக்கமில்லையே?

அப்படியா? அப்ப கிஸ் பண்ண மட்டும் பழக்கம் இருக்கா? ஸ்ரீ கிண்டலாக கேட்க, எனக்கு உன்னை பார்த்தால் கொடுக்க தோணுது என்று அர்ஜூன் ஸ்ரீயை அமர வைத்து டிஸ்யூ எடுத்து வந்தான்.

டேய்..என்னடா..?

இரு..துடைக்க வேண்டாம்மா?

சரி..சரி..என்று அவள் அர்ஜூனை பார்க்க, அர்ஜூன் சரி செய்து விட்டு..நீ தான் ஃபங்சனுக்கே வரலையே? அப்புறம் எதுக்கு போட்ட?

காரு வாங்கி தந்தா. சும்மா போட்டு பார்த்தேன் என்று அவள் வாங்கி தந்ததை காட்டினாள். ஸ்ரீ..லிப்ஸ்டிக் போட்டியா? அதுவும் சரியா அழியாம இருக்கே..என்று அருகே வந்தான்.

ஏய்..நான் போடவேயில்லை. பக்கத்துல வந்த..கடிச்சு வச்சிருவேன் என்றாள். ஓ.கே கடிச்சுக்கோ என்று அர்ஜூன் கன்னத்தை காட்ட, ஸ்ரீ அவன் கன்னத்தை பிடித்து இழுத்து அவன் கையிலே முத்தம் கொடுத்தாள்.

போங்கு பண்ற ஸ்ரீ? ஒன்றே தானே கொடுக்கலாம்ல..

நோ..என்று அவன் கழுத்தில் கையை போட்டு, அர்ஜூன்..நீ ஸ்ட்ராங்கா இருந்தா தான். நம்மள நம்பி இருக்கிறவங்கள பார்த்துக்க முடியும். நீ கொஞ்சம் பதறினாலும் அவன் உன்னை விட பல மடங்கு அடிக்க ஆரம்பிச்சிருவான். அவன் ஏதோ சொல்லி இருக்கான்னு தெரியுது. எனக்கு இப்பொழுது பயம் இல்லை. அர்ஜூன் என்னையும் அனுவையும் பார்த்துப்பான். ஆனால் அதை விட நீ உன்னை பார்த்துக்கணும் என்று அவனை அணைத்துக் கொண்டாள். அவன் கண்ணீருடன் கண்டிப்பா ஸ்ரீ அவனால் உன்னையும் அனுவை தொட கூட விட மாட்டேன். நம்ம பிளானை மாத்தப் போறேன்.

அர்ஜூன்..தூங்கும் போது எதையும் யோசிக்காம தூங்கணும்..வா..போகலாம் என்றாள் ஸ்ரீ.

எங்க?

எங்கயா?

உன்னோட அறைக்கு.

இல்ல நான் இங்க உங்களுடன் தான் தூங்குவேன் என்று அர்ஜூன் அனுவிடம் சென்று படுத்துக் கொண்டான்.

அர்ஜூன்..எழுந்திரு..போ..ஸ்ரீயை இழுத்து அவன் மேல் போட, விடு அர்ஜூன் என்றாள்.

நான் உன்னை அடிச்சிட்டேன். ரொம்ப வலிக்குதா?

மனசுல தான் அர்ஜூன் ரொம்ப வலிக்குது என்றாள்.

ஏன் ஸ்ரீ? என்னை உனக்கு பிடிக்கலையா?

அர்ஜூன்..இதை பத்தி பேச வேண்டாமே? அப்புறம்..நீ எதை செய்தாலும் நல்லா யோசித்து முடிவெடு. அனுவுடன் நீ கண்டிப்பா இருக்கணும்.

ஏன் ஸ்ரீ? என் மேல் உனக்கு நம்பிக்கை இல்லையா? உன்னை சாக விட்டுருவேன்னு நினைக்கிறியா?

இல்ல அர்ஜூன். எனக்காக நீ எதையும் செய்வன்னு ஒவ்வொரு நிமிசமும் காட்டிக்கிட்டு இருக்க. என்னோட பயம். உனக்கு ஏதும் ஆகக்கூடாது.

என்னை உனக்கு பிடிக்குமா ஸ்ரீ?

கண்டிப்பா அர்ஜூன். பிடிக்கும்..என்று அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வழிய..மனதினுள்..உன்னை மட்டும் தான் பிடிக்கும். என் காதலை நான் சொல்லும் நேரம் நெருங்கி விட்டது அர்ஜூன். உன்னுடைய ஸ்ரீயாக வாழ ஆசையா இருக்கு அர்ஜூன். எனக்கு நீயும் அனுவும் போதும். வேற ஆசை எனக்கு இல்லை அர்ஜூன்..என்று அவனை பார்க்க, அர்ஜூன் அவள் கண்ணையே பார்த்துக் கொண்டிருந்தான். அர்ஜூன் தூங்கலாமா? ஸ்ரீ கேட்க..

ம்ம்..என்று அர்ஜூன் அவளை அவன் அருகிலே படுக்க வைத்து அவள் மீது கையை போட்டு தூங்கினான். அவனுக்கு ஸ்ரீ..பிடிக்கும்ன்னு சொன்னதே ரொம்ப சந்தோசமாக இருந்தது.

வெற்றி வீட்டில் எல்லாரும் தூங்க செல்ல ஆதேஷ் அவர்களிடம், ஜானு ஒரு மணி நேரம் என் அறையில் இருப்பாள். அவள் படிப்பை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றான்.

வெற்றி அவனை பார்த்து, தாராளமாக பார்த்துக்கோங்க என்றார். அதெல்லாம் வேண்டாம் என்றார் மீனாட்சி.

அத்தை, அவளை நான் ஒன்றும் செய்ய மாட்டேன். எனக்கு ஒரு மணி வரை வேலை இருக்கும். அதை பார்த்துக் கொண்டே தான் கவனிக்க போகிறேன்.

சும்மாவே தூங்குவா? இதுல நைட் படிப்பா? எனக்கு தெரிந்து அவள் உங்களையும் தூங்க வச்சிருவா..என்றான் பிரதீப்.

மாமா..அதெல்லாம் என்னிடம் நடக்காது. சரி தான துகி என்று ஆதேஷ் அவளிடம் கேட்க, எனக்கு தூக்கம் வருது. நான் போறேன்ப்பா..என்று அவள் கிளம்ப, ஜானு அவள் பின்னே ஓடி மாமா..திட்டுவாங்களா? அடிப்பாங்களா? கேட்டாள்.

அதெல்லாம் செய்ய மாட்டான். நீயே பார்த்துக்கோ. முதல்ல போ..இல்லை என்னையும் கூப்பிடுவான் என்று துகிரா ஜானுவை வெளியே தள்ளி அறைக்கதவை சாத்தினாள்.

ஜானு..எல்லாத்தையும் எடுத்திட்டு வா..என்று ஆதேஷ் அழைக்க.. மாமா..என்னை அடிக்க மாட்டேன்னு பிராமிஸ் பண்ணுங்க..என்றாள்.

என்னோட ராட்ச்சசி தான் என்னை அடிப்பாள். நான் ரொம்ப நல்ல பையன் என்று கூற..அனைவரும் புன்னகையுடன் சென்றனர். மீனாட்சி இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றார்.

அத்தை, நீங்களும் வாங்களேன் ஆதேஷ் அழைக்க, மீனு வந்துட்டியா? வெற்றி அழைத்தார். வந்துட்டேன் மாமா…என்று சென்று விட்டார்.

வேகமா வா ஜானு..என்று ஆதேஷ் அறைக்கு சென்றான். ஜானு உள்ளே சென்றாள். அறையை தாழிட்டு அவன் அவளுக்கு சேரை எடுத்து போட்டான். அவன் லேப்பை ஆன் செய்தான்.

மாமா..அழைத்தாள்.

சொல்லு ஜானு..

மேக்ஸ் பண்ணனும் என்றாள்.

இங்கிலீஸ் முடிஞ்சதா ஜானு..கேட்டான்.

இல்லை மாமா. தூக்கம் வந்துருமே?

அதெல்லாம் வராது என்று சூடான ஹார்லிக்ஸை எடுத்து அவளுக்கு கொடுத்தான்.

அவள் குடித்துக் கொண்டே அவனை பார்க்க, அவன் போன் பேசிக் கொண்டே சன்னல் பக்கம் சென்றான். பேசி விட்டு வந்து பார்த்தால் ஜானு அவன் லேப்பை பார்த்துக் கொண்டிருந்தாள்.

எழுந்திரு..என்றான் கோபமாக.

மாமா..என்று உதட்டை பிதுக்கினாள் பாவமாக.

இங்கிலீஸ் எடு..என்று எடுக்க வைத்து அவளருகே அமர்ந்து அவளுக்கு விவரிக்க, அவள் கொட்டாவி விட்டாள்.

ஜானு, விளையாட்டு கூடாது. நீ சரியா எழுதி காட்டினால் உனக்கு நான் முத்தம் தருவேன் என்றான்.

எனக்கு வேண்டாம் என்றாள்.

சரி..நீ செய்யுற ஒவ்வொரு தப்புக்கும் நீ எனக்கு முத்தம் தரணும்.

நோ…மாமா.

சரி..நீ போகலாம் என்றான்.

தூங்கலாமா?

போ..ஆனால் என்னை பார்க்கக் கூடாது, பேசக்கூடாது என்று அவன் சாதாரணமாக சொல்லி விட்டு அவனுக்கு வந்த மெயிலை பார்த்து அவன் வேலையை செய்தான்.

மாமா..விளையாட்டுக்கு தான சொல்றீங்க? அவள் கேட்க, அவன் பதிலே சொல்லலை.

மாமா..என்று அவள் அவனை உலுக்க, அவன் அவள் கையை தட்டி விட்டான். ஆதேஷ் செயல் ஜானுவிற்கு புதியதாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. அவள் அழுது கொண்டே அமர்ந்தாள். அப்பொழுது கூட அவன் திரும்பி கூட பார்க்கலை. அவனுக்கு வந்த போனை எடுத்தாள். அவன் கோபமாக அவளை முறைத்து அவளிடமிருந்து பிடுங்கி பேசினான். அவனது அட்வைசர் வொர்க்..

அவன் பேசாததை கண்டு கதவை திறந்து வெளியே அழுது கொண்டே சென்றாள். ஆதேஷ் மேலிருந்து அவளை பார்த்தான். மீனாட்சி அவளை பார்த்து..திட்டினாரா? கேட்டார்.

இல்லம்மா. மாமா..பேசவே மாட்டேங்கிறாங்க என்று அழுதாள். அவர் புன்னகையுடன் காதலை வைத்து மிரட்டுகிறாரா? என்று மேலே பார்க்க, அவன் பார்ப்பதை பார்த்து விரலை உயர்த்தி காட்டினார் சிரித்துக் கொண்டு.

ஜானுவை பார்த்து அமைதியுடன், நீ படி..உனக்கு சொல்லிக் கொடுக்கிறதா தான சொன்னார். நீ கேள்வி கேட்டு அவரை திணற வைத்து விடு.

அம்மா, மாமா பாவம்.

ஏம்மா..இப்ப தான் அழுத?

இல்லம்மா. என்னால மாமாவ கஷ்டப்படுத்த முடியாது.

ம்ம்..அதே தான். உன்னோட மாமா ஏற்கனவே என்னிடம் சொல்லி விட்டார். யாரும் உங்களை ஏதும் சொல்லக் கூடாதுன்னு தான் வேண்டாம்ன்னு சொன்னேன். அவருக்கும் உனக்கும் ஒரு வருசம் தான் வித்தியாசம் நீ சின்னப்பிள்ளை தனமா செய்யுற? அவரை பாரு இந்த வயசிலே அட்வெய்சர் வொர்க் பண்றாராம். எல்லாருக்கும் இந்த திறமை இருக்காதும்மா. நீ அவரை கட்டிக்கணும்ன்னா நீயும் நல்லா படிச்சி புத்திசாலியா இருக்கணும். ஒத்தாசை பண்ணலாம்ல..என்று ஜானுவை பார்த்தார். அவள் தலையை தொங்க போட்டுக் கொண்டாள்.

நான் சொல்றதுக்கு சொல்லிட்டேன். அந்த பையன் மானம் உன் கையில் தான் இருக்கு என்று அவளை பார்த்து புன்னகைத்து சென்றார்.

ஜானு ஆதேஷ் அறைக்கு சென்று..மாமா, நீங்க மறுபடியும் விவரிக்கிறீங்களா? நான் படிக்கிறேன் என்று கேட்டாள். அவன் சிரித்துக் கொண்டு கையை விரித்தான்.

சாரி மாமா. இனி நான் நல்லா படிப்பேன். பிராமிஸ் என்றாள். இருவரும் கட்டிக் கொள்ள..படிக்கலாமா? என்று அவன் சொல்லிக் கொடுக்க..ஜானுவும் படித்தாள். ஆதேஷிற்கு “படிக்கலைன்னா மாமா விட்டுட்டு போயிருவாருன்னு” ஜானுவிடம் துருவன் பேசியது கஷ்டமாக இருந்திருக்கும். அதனால் தான் ஜானுவை படிப்பில் தேற்ற முன் வந்தான். அதை நல்லா விதமாக தொடங்கி விட்டான்.

Advertisement