Advertisement

அத்தியாயம் 120

துருவன் வீட்டிற்குள் செல்ல, டைனிங் டேபிளில் சாப்பிட எடுத்து வைத்து ரதி சென்று இருப்பார். இது என்ன புதுசா? எடுத்துலாம் வச்சிருக்காங்க.. என்ற துருவன் பையை பக்கத்து சேரில் வைத்து அமர்ந்து சாப்பிட்டு அறைக்கு சென்றான். யாரோ அழைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தான். வெற்றி நின்று கொண்டிருந்தார்.

அய்யா, நீங்க எங்க வீட்டுக்கு வந்துருக்கீங்க? அம்மா வீட்ல இல்லை என்றான்.

உள்ள போய் பேசலாமா? அவர் கேட்க,

சாரிய்யா, வாங்க..என்று அழைத்து அமர வைத்தான். இருங்க வாரேன் என்று சமையலறைக்கு சென்று அவனே பாலை எடுத்து டீ போட்டான். அவர் எழுந்து வந்து அவனை பார்த்தார். அவன் அவரிடம் கொடுத்து அவரை அமர சொன்னான்.

நீயும் உட்கார் என்று அவனை பார்த்தார்.

எதுக்கு இப்படி பாக்குறீங்க? என்று சங்கடமாக பார்த்தான்.

உனக்கு சமைக்ககூட தெரியுமா?

கொஞ்சமா தெரியும் என்றான்.

ஓ.கே. இன்று இங்கேயே சாப்பிடவா? அவர் கேட்டார்.

நான் சமைத்து சாப்பிட போறீங்களா? ஆச்சர்யமாக துருவன் வெற்றியிடம் கேட்டான்.

ஏன்? எனக்காக சமைத்து தர மாட்டாயா?

அப்படியெல்லாம் இல்லை. ஒரு நிமிசம் என்று ஃபிரிஜை திறந்தான். அவரிடம் வந்து..கொஞ்ச நேரம் இருங்க. நான் கடைக்கு போயிட்டு வாரேன்.

என்ன வாங்க போற?

மட்டன் வாங்கிட்டு வாரேன் என்றான்.

அதெல்லாம் வேண்டாம். இருக்கிறத வச்சு ஏதாவது செய் என்று அவர் போனில் மனைவியிடம், நம்ம வீட்டு பையன் வீட்டுல அவனுடன் சாப்பிட்டுக்கிறேன் என்று போனை வைத்து விட்டார்.

சமையற்கட்டிலிருந்து இதை கேட்ட துருவன் அவரை திரும்பி பார்த்தான்.

கெல்ப் பண்ணவா? வெற்றி கேட்க, இல்லய்யா, நான் செய்திடுவேன். நீங்க சப்பாத்தி, எக் ப்ரை சாப்பிடுவீங்களா? கேட்டான்.

நீ எது வேண்டுமாலும் செய். நான் சாப்பிடுவேன் என்றார். அவரையே பார்த்துக் கொண்டு நின்றான்.

இப்படியே நின்றால்..நீ படிக்கணுமே? நேரமாகாதா? கேட்டார்.

நான் சீக்கிரம் செய்துடுறேன் என்ற துருவன்..இவர் என்னை தான் அவர் வீட்டு பிள்ளைன்னு சொன்னாரா? இவருக்கும் தெரிந்து தானே இருக்கும். இவர் என்னிடம் தான் பேச வந்திருக்கார். துளசியை விட சொல்லிடுவாரோ? என்று சிந்தனையுடன் தயார் செய்து கொண்டிருந்தான்.

வெற்றி ரதியிடம் ஏற்கனவே சொல்லி இருப்பார். ரதி கேட்ட போது பதறினார்.

நான் உன் மகனை ஏதும் செய்ய மாட்டேன். அவன் ஸ்கூல்ல பிரச்சனைன்னு தீனா சொன்னான். அதான் பேச நினைக்கிறேன். வேற ஒன்றுமில்லைம்மா..என்று அவர் பேசி விட்டு தான் துருவனை பார்க்க வந்திருப்பார்.

அவன் செய்து முடித்து கொண்டு வந்து அவருக்கு எடுத்து வைத்தான். அவர் அவனை அமர சொல்லி நீயும் சாப்பிடு என்றார். இருவரும் சாப்பிட்டவுடன் இடத்தை ஒதுக்கி விட்டு அவரை பார்த்தான்.

துருவா..அப்புறம் வாஷ் பண்ணிக்கோ. இங்க வா..என்று அவனை அருகே அழைத்தார். அவன் பதட்டமானான்.

நான்..நான்..இங்கேயே இருக்கேன் என்றான்.

வாய்யா..என்று அவனை இழுத்து அவர் அருகே அமர்த்திக் கொண்டு, அவனுக்கு கருப்பு நிற பிரேஸ்லெட்டை அவரே போட்டு விட்டார். இது துளசி உனக்காக கிளம்பும் முன் வாங்கியது. அவன் கண்ணீரை பார்த்து, இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? என்று அவன் கண்ணீரை துடைத்து விட்டார்.

நான் அவளிடம் பேசாமல் விட்டுட்டேன்.

உன் நிலையில் நான் இருந்தால் கூட உன்னை போல் தான் செய்திருப்பேன். நீ முன்னதாகவே எல்லாவற்றையும் யோசிச்சு இருக்க..நல்லது தான். கொஞ்ச நாள் கஷ்டமா இருக்கும். அப்புறம் பார்த்துக்கலாம். ஆனால் சண்டையெல்லாமா ஸ்கூல்ல போடுறது? எப்பையும் ஜானு மேல தான் கம்பிளைன்ட் வரும். இப்ப உன் அம்மாவை அழைத்து பேசி இருக்காங்க..என்றார்.

அம்மாவா? அவங்க என்னிடம் சொல்லலையே?

எப்படிப்பா சொல்லுவாங்க. நீயே உன் அம்மா மேல கோபமா இருக்க. காதலிக்கிறது தப்பில்லை. மத்தவங்கள புரிஞ்சுக்கணும். நீ துளசி மேல வச்சிருக்கிற காதலை விட உன்னோட அம்மா, உன் அப்பாவை காதலிச்சாங்க. அவர் இல்லை என்பதால் தான் உடைஞ்சு போயிட்டாங்க. நாங்க துளசிய அனுப்பியது உன் அம்மாவுக்காக மட்டுமல்ல. எதிர்காலத்தில் உனக்கு, துளசிக்கு, உன் அம்மாவுக்கு பிரச்சனை வரக்கூடாதுன்னு தான். எனக்கு துளசி பத்தி தெரியும். அவளுக்கு எந்த வேலையும் செய்ய தெரியாது. ஆனால் சொல்லி குடுத்தா கத்துப்பா.

அவளை பக்கத்துல ஊருக்கு அனுப்புறதா தான் பிரதீப் இந்த பேச்சையே ஆரம்பித்தான். அவன் சொன்னவுடனே துளசியும் மறுக்காமல் போறேன்னு சொன்னா. ஆனால் அவள் அழுததால் தான் பக்கம் இருந்தால் கண்டிப்பாக உன்னை பார்க்க உடனே வந்துடுவான்னு தான் வெளியூருக்கு அனுப்பி வச்சோம். ஜானுவிடம் கூட சொல்லலை. போகும் வழியில் தான் துளசி மாப்பிள்ள வீட்டுக்கு போய் சொல்லிட்டு போயிருக்கா..என்றார்.

துருவன் கண்கலங்க அவரை பார்த்தான். இப்ப அதெல்லாம் விடு. நம்ம வீட்ல எல்லாரும் உனக்காக காத்திருப்போம் துளசி மாதிரி. நீ எப்ப வேண்டுமானாலும் வரலாம். ஆனால் துளசி வர வருடங்களாகும். இந்த சண்டை சச்சரவு எல்லாத்தையும் விட்டு, புத்திசாலியா இருந்து..படிச்சு முன்னுக்கு வாங்க. அப்புறமும் அவள் வரலைன்னா நானே வர வைக்கிறேன் என்றார். அவரை அணைத்துக் கொண்டு “தேங்க்ஸ் அய்யா” என்றான்.

இல்லை. மாமான்னே கூப்பிடலாம் என்றார்.

அது வந்து.. பழகிடுச்சு என்றான்.

சரி, நல்லா படிங்க. வீட்டுக்கு வாங்க.

கண்டிப்பா வருவேன் என்று துருவன் சொல்ல அவர் கிளம்பினார்.

அர்ஜூன் பாட்டி வீட்டிலிருந்து கிளம்பிய அனைவரும் மண்டபத்தில் நுழைய காயத்ரி பெரியத்தையை பார்த்து ஓடி வந்தாள்.

மெதுவா..வா..என்று பாட்டி சொல்ல,அவரை கட்டிக் கொண்டாள்.

ராக்கியும் மறையிடமிருந்து ஓடி வந்தான். அனுவை பார்த்து, அக்கா..வா விளையாடலாம் அழைத்தான். ஆனால் அனு அமைதியாக இருந்தாள். மறையும் காயத்ரியும் அனைவரையும் பார்த்தனர்.

ஸ்ரீ, நிவாஸ் எங்க? காயத்ரி கேட்டாள்.

அவள் சோர்வா இருக்கா அக்கா. அதான் ரெஸ்ட் எடுத்துகிட்டு இருக்கா என்றாள் தாரிகா. இருவரும் அர்ஜூனை பார்த்தனர். அவன் அமைதி இருவருக்குமே ஏதோ பிரச்சனை என புரிந்தது. காயத்ரி அனுவை தூக்க வந்தாள். ஆனால் அனு யாரிடமும் செல்லாமல் அர்ஜூனிடமே இருந்தாள். அர்ஜூனே அனுவை தாரிகாவிடம் கொடுக்க அவளிடம் மட்டுமல்ல அவள் யாரிடமும் செல்லவில்லை.

அபி, அவன் அம்மா, அகில், அவன் அம்மா, பவி குடும்பம், கவின், அவன் அம்மா, அகல்யா, வேலு அவன் நண்பர்கள், தாத்தா, மாலினி, அவள் தோழி அவள் குடும்பம்..அனைவரும் வந்திருந்தனர்.

பசங்க அர்ஜூனிடம் வர, மேடையில் பொண்ணை வர சொல்லி சத்தமிட்டனர். தியா வர, சத்யா அம்மா, அவன் தங்கைகள் அவளுக்கு ஆடையை கொடுத்தனர். அவள் ஆடையை மாற்றி விட்டு பட்டுப்புடவையில் வந்தாள். புள்ளங்க புடவை உடுத்தினாலே தனி அழகு தான் என்றார் ஓரு பாட்டி.

தங்கச்சிய வச்சுக்கிட்டு இப்படி இந்த பையனுக்கு கல்யாணம் பண்ணலாமா? என்று அரசலாக பேச…அந்த புள்ளைகளுக்கு கல்யாணம் செய்து தான் இவனுக்கு கல்யாணம் பண்ணுன்னா..வயசு ஏறிடும். கடைசி பொண்ணு ஸ்கூல் முடிக்கவே இரண்டு வருடம் இருக்கு. அதனால ஒன்றும் தவறில்லை. இதை நம்ம ஊர் பெரியர்களிடம் பேசி தான் பேச்சி கல்யாண வேலையை ஆரம்பித்தார் ஒரு பாட்டி சொல்ல..

வாயை மூடிட்டு நடப்பதை பார்த்து புள்ளைகளை ஆசிர்வாதம் பண்ணுங்கடி என்றார் அர்ஜூன் பாட்டி.

அர்ஜூன் அமைதியை பார்த்து, அபியும் கவினும் அவனிடம் வந்து, ஏதும் பிரச்சனையா? கேட்டனர்.

இல்லடா. டயர்டா இருக்கு அர்ஜூன் சொல்ல இருவரும் தாரிகாவை பார்த்தனர். அவள் முகமும் சரியில்லை. மாலினியை பார்த்து காருண்யா அவளிடம் சென்று பேசினாள்.

மாலினி கௌதமை தேடினாள். அவனை பார்த்து அவனை அழைத்தாள். அவனும் அவளை பார்த்து வந்தான். அவன் பார்வை அவ்வப்போது காருண்யாவை தீண்டி சென்றது. சக்தி அவன் நண்பர்களிடம் பேசியதை சொல்ல, உடனே முடிவெடுக்காதம்மா காத்திருந்து பாரும்மா. ஏற்கனவே கல்யாணம் முடிந்து ஒரே நாளில் கோபத்தில் வந்துட்ட. அவருக்கும் கொஞ்சம் நேரம் கொடுத்து பார்க்கலாம் கௌதம் சொன்னான். காருண்யாவிற்கு நந்து போன் செய்தான். அவள் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏய் என்னாச்சு, போன்ல யாரு? மாலினி கேட்க, அது,..என்று அவன்..அவன்..என்று தயங்கி அண்ணன் தான் என்றாள்.

உனக்கு அண்ணன் இருக்கானா?

ம்ம்..என்றவள் கௌதமை பார்த்துக் கொண்டே போனை எடுத்தாள்.

காரு..அர்ஜூனுக்கு ஒன்றுமில்லையே? போனையே எடுக்க மாட்டேங்கிறான்.

அர்ஜூனா? என்று அவனை பார்த்தாள். அவன் ஏதோ பறி கொடுத்தது போல் அமர்ந்திருக்க, அவனை சுற்றியுள்ள நண்பர்கள் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். அனுவும் அவன் தோளில் அமைதியாக சாய்ந்திருந்தாள்.

ஹேய்..லையன்ல இருக்கியா? இல்லையா?

இருக்கேன் சொல்லு என்று எழுந்தாள்.

அவனிடம் போனை கொடு..

இல்லை. அவன் கொஞ்சம் அப்செட்டா இருக்கான். நான் அப்புறம் கால் பண்ணவா?

ஏய்..என்னன்னு சொல்லு?

இங்க வச்சி என்ன பேசுறது? என்னை சுத்தி எல்லாம் கழன்று போய் இருக்காங்க என்று முணுமுணுத்தவாறு..மாலினியை தாண்டி கௌதம் பக்கம் வந்தாள்.

இருடா. நீயே பேசிக்கோ..என்னை விடு என்று செல்ல, அவளே அவள் பாவடையை மிதித்து விட தடுமாறி கௌதம் மடியிலே அமர்ந்தாள். அவன் பதட்டமாக, அவள் எழுந்து, சாரி சார் என்று அர்ஜூனிடம் சென்று போனை கொடுத்தாள்.

யாரு?

நீயே பேசு..என்றாள்.

அர்ஜூன் பேசாமல் போனை காதில் வைத்திருக்க, நந்து அவனிடம் கேட்டுக் கொண்டே இருந்தான்.

அர்ஜூன்..பேசு. இல்லை என்னிடம் கேட்பான் காருண்யா சொல்ல, நந்து நானே உனக்கு நாளை கால் பண்றேன்னு போனை வைத்து விட்டான். அபி ஸ்ரீ இல்லாததை பார்த்து நித்தியை பார்க்க சொல்லி இருப்பான்.

நித்தி அபிக்கு போன் செய்ய கவினும் சேர்ந்து அவனுடன் வெளியே சென்றான். காயத்ரி, மறையும் வெளியே வந்தனர்.

ஸ்ரீ மயங்கிட்டாளாம் டா. ஒரு நிமிசம் தான் விழித்திருப்பாள். மறு படியும் தூங்குறேன்னு படுத்தவ எழலை போல..மூன்று மணி நேரத்திற்கும் மேலாகுதாம். கௌதம் சார், ப்ளட் டெஸ்ட் எடுத்திருக்காங்களாம்..என்றாள்.

சைலேஷ் அவளிடம் போனை வாங்கி, அர்ஜூனிடம் போனை கொடுங்க என்றான்.

இல்ல சார், அவன் யாரிடமுமே பேசலை. அனுவும் ஒரு மாதிரி இருக்கா. எங்களுக்கு பயமா இருக்கு என்றான் அபி.

அவனை தனியே அனுப்பி விட்டு அனுவிடம் பேசுங்க. பாப்பா பயத்துல இருக்கான்னு நினைக்கிறேன்…சைலேஷ் கூற, அபி ஓ.கே சார் என்று யாரும் ஏதும் சொல்ல போறதில்லை. அதனால் சைலேஷ் சார் சொன்னது தான் சரி என்று அர்ஜூனை நினைத்தது போல் நகர்த்த காயத்ரியை பயன்படுத்தினர். அவனும் அனுவை பவியிடம் விட்டு காயத்ரியிடம் சென்றான்.

பவி அனுவிடம் பேசினாள். தாரிகா வந்ததிலிருந்தே வெளியே தான் இருந்திருப்பாள். அனைவரும் அனுவை கவனித்தனர்.

பவி சாதாரணமாக பேசி விட்டு, ஸ்ரீ பற்றி கேட்க அனு அழுதாள்.

எதுக்குடா அழுற? அழக்கூடாதுன்னு அவளை தோளில் போட, அம்மா..மாதிரி ஏஞ்சலும் ஸ்டார் கிட்ட போக போறாலா? என்று கேட்டுக் கொண்டே அனு ஏங்கி அழ, அனைவரும் அதிர்ந்தனர்.

வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அஞ்சனாம்மா..வேகமாக அனுவை தூக்க..ஆன்ட்டி பாப்பா, என்ன சொல்றா? அகில் கேட்டான்.

எதுவும் சரியா தெரியலை. கொஞ்சம் பயமா தான் இருக்கு என்றார். ஆனால் ஒன்றும் இருக்காதுன்னு டாக்டர் தம்பி சொன்னாங்க. ஸ்ரீ இப்படி அசந்து தூங்கி நான் பார்த்ததில்லை என்று கவலையுடன் கூறி விட்டு, அவர் அனுவுடன் வெளியே சென்றார். அதான் நான் பேசியும் தாரி என்னிடம் சரியா பேசலையா? மனதினுள் கவின் நினைத்துக் கொண்டான்.

அனு சொன்னதை அர்ஜூனும் காயத்ரியும் கேட்டிருப்பர். என்னடா? காயத்ரி அர்ஜூனை பார்க்க, தெரியலக்கா என்று கண்ணீருடன் அமர்ந்தான்.

அவனுக்கு போன் வந்தது. ஸ்ரீ முழிச்சிட்டான்னு நிவாஸ் சொல்ல, அர்ஜூனுக்கு உயிரே வந்தது. கண்ணை துடைத்து எழுந்த அர்ஜூன் வெளியே சென்று அனுவை தூக்கி விட்டு, உள்ளே கௌதமிடம் வந்தான். மாலினி அவனை கிண்டல் செய்து கொண்டிருந்தாள்.

சார், எல்லாரையும் பார்த்து கூட்டிட்டு வீட்டுக்கு வாங்க என்று சாவியை கொடுத்து விட்டு, ஸ்ரீ முழிச்சிட்டா..நான் பார்க்க போறேன் என்று மேடையை பார்த்தான். இப்பொழுது தான் சத்யா மேடையில் ஏறி தியா அருகே சென்றான். இதை பார்த்த அர்ஜூன்..ஒரு நிமிடம் நின்றான். சத்யா தியாவிற்கு மோதிரம் அணிவிக்க, அர்ஜூன் மேடை ஏறி இருவர் முன்னும் வந்து கையில் வைத்திருந்த இரண்டு ஆயிரம் நோட்டுகளை இருவர் கையிலும் திணித்து “ஆல் தி பெஸ்ட்” என்று மறுநிமிடமே இறங்கி ஓடினான்.

அனைவரும் அவனை பார்க்க, வீட்டில் இருந்தவர்களுக்கு புரிந்தது ஸ்ரீ விழித்து விட்டால் என்று. நில்லுடா..சத்யா அழைக்க, நாளைக்கு பார்க்கலாம் அண்ணா..என்று ஓடினான்.

என்னாச்சு இவனுக்கு வேலு கேட்க, அவனுக்கு முக்கியமான வேலை இருக்கு மறந்துட்டான். நீங்க நில்லுங்க என்று நிற்க வைத்தனர். சத்யா தியாவையே பார்க்க, ஏன்டா இனி தான் பார்த்துக்கிட்டே இருக்க போறீங்களே? அப்புறம் என்னடா இப்பவே இப்படி பார்த்துக்கிட்டே நிக்கிற? சரவணன் கேட்க, அங்கே தியாவின் ப்ரெண்ட்ஸ் வந்தனர்.

அவள் பயத்துடன் அவர்களை பார்க்க, அண்ணா.. வாழ்த்துக்கள். தியா வாழ்த்துக்கள் என வாழ்த்தி சென்றனர். தியாவிற்கு ஒன்றுமே புரியலை. எப்படி இவங்க எல்லாரும் வந்தாங்க? யோசித்தவாறு நின்றாள்.

ரொம்ப யோசிக்காத. கொஞ்சம் சிரிக்கிறியா? சத்யா கேட்டான். அவள் அவனை பார்த்தாள். அங்க பாரும்மா..என்றான். தியாவின் அமைதியை அவனும் எதிர்பார்க்கவில்லை.

குட்டிப்பசங்க வந்து பாட்டு ஆட்டம் என குதூகலிக்க.. கடைசியாக “டூயட் சாங்கிற்கு” வாங்க என்று அழைத்தனர்.

அகில் நல்லா பண்ணுவான் என்று அவனை அழைக்க, பவியை கவின் நகர்த்த அவளும் எழுந்தாள். ஆனால் அகில் விருப்பமில்லை என்று அமர்ந்து விட்டான்.

இவனுக்கு என்ன ஆச்சு? காயத்ரி கேட்க, தெரியலையே? என்றனர். ரதி அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

வேற யாராவது வாங்க..யாருமே எழலை. கவின் தாரிகாவை பார்க்க அவள் அமைதியாகவே இருந்தாள்.

அகிலிடம் பவி பேச வந்தாள். என்னை விடுறியா? என்று கோபமுடன் அகில் வெளியே சென்றான். அப்பொழுதும் பவி அவனை விடாமல் அவனிடம் பேச செல்ல, எதுக்கு என்னை தொந்தரவு செய்ற? என்னை விட்டு போயிடு என்று அவன் கத்தினான்.

என்ன சொன்ன? உன்னை விட்டு போகணுமா? என்று அகிலை நெருங்கினாள். அகில் அவளை தள்ளி விட்டான். எழுந்த பவி அழுது கொண்டே நின்றாள். அவள் அழுவதை பார்க்க முடியாமல் அகில் அங்கிருந்து வீட்டிற்கு சென்றான்.

அபி கோபமாக அகில் பின் செல்ல, பவி அவனை தடுத்து கண்ணீரை துடைத்து விட்டு மீண்டும் உள்ளே சென்று நடனமாடும் இடத்தில் நின்று டான்ஸ் பண்ண விருப்பமுள்ளவர்கள் வாங்க என்று அழைத்தாள். அவள் அழுதது நன்றாக தெரிந்தது. தாரிகா அவள் அருகே சென்று நிற்க கவின் அவளிடம் வந்து அவள் கையை பிடித்தான். காருண்யாவும் அவர்களை பார்த்து நடனத்திற்கு தயாராக அவர்களுடன் நின்றாள்.

பக்கத்து ஊர்க்காரன் ஒருவன் வந்து பவி அருகே வந்து, “லெட் மீ டான்ஸ் வித் யூ?” கேட்டான். அவள் அவனை பார்த்து விட்டு ரதியை பாத்தவாறே அவனது கையை பிடித்தாள். அபி போனில் வீடியோ செய்தான்.

சார், காருவுடன் நீங்க போகலாமே? அபி கௌதமிடம் கேட்க, அவன் தயங்கினான்.

அண்ணா..போங்க என்றாள் மாலினி.

அவன் சிந்தித்துக் கொண்டே காருண்யாவை பார்த்தான். வேலு நண்பர்கள் சரவணனும் கண்ணனும் முன் வந்தனர்.

கண்ணன் அந்த ரிசப்சன் பொண்ணை அழைத்தான். அவள் அண்ணனை பார்த்து கேட்டு விட்டு அவனருகே வந்து நின்றாள்.

மாலினி அவள் தோழியிடம்..போடி என்று சரவணன் அருகே அவளை நிற்க வைத்து விட்டு வந்து அமர்ந்தான். சரவணன் அவளை பார்த்து, ஓ.கேன்னா பண்ணலாம் என்றான். அவளும் ஒத்துக் கொள்ள..காருண்யா தனியே நின்றாள்.

அகல்யாவிடம்..வா பாப்பு..வேலு அழைக்க, புடவையில் முடியாது மாமா என்று தடுத்தாள். அதனால் அவர்கள் செல்லவில்லை.

அபி கௌதமிடம், நீங்க கண்டிப்பா போகலையா? கேட்டான்.

கௌதம் மௌனம் காக்க, சரி..வீடியோ எடுங்க. நான் அவளுடன் போகிறேன் என்று போனை கௌதமிடம் கொடுத்தான். அங்கே வந்த ஒருவன்..இருப்பா. நான் போறேன். எதுக்கு அந்த பொண்ணுக்கு அடிச்சுக்கிறீங்க? பொண்ணு ரொம்ப அழகாக இருக்கா என்றான்.

இல்லை..என்ற அபி மனதினுள் இவரை போக வைக்க பிளான் பண்ணா. இவர் வேற..என்று அண்ணா..சார் போவாங்க. என்ன சார்? கௌதமிடம் அபி கேட்டான்.

கௌதம் அவனை முறைத்து விட்டு காருண்யாவிடம் வந்து நின்றான். அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

பவி- பக்கத்து ஊர்ப்பையன், கவின்- காருண்யா, சரவணன்-வசுந்தரா, கண்ணன்-ரிசப்சன் பொண்ணு, கௌதம்-காருண்யா கையை பிடித்து நிற்க பாடலை ஒலிக்க விட்டனர்.

அனைவரும் பாடலுக்கு ஏற்ப நடனமாட, பவிக்கு அகில் தன்னிடம் எப்படி பேசி விட்டான்னு கண்ணிலிருந்து கண்ணீர் வந்தாலும் அவள் அவன் இணையுடன் ஒத்து ஆடினாள். அவன் அவளையே பார்த்துக் கொண்டே வேகமெடுக்க..எனக்கு இணையா உன்னுடன் ஆட முடியுமா? கேட்டான்.

ம்ம்..என்றாள். பவி இடையில் கை வைத்து அவளை தூக்கி அவன் ஆட..டேய் போச்சு..அகில் இதை மட்டும் பார்த்தான் அவ்வளவு தான் அபி புலம்ப, காருண்யாவிடம் இந்த அளவு நெருக்கத்தை எதிர்பார்க்காத கௌதம் அவனை மறந்து அவளுடன் புன்னகையுடன் ஆட, அவள் சந்தோசமாக அவன் தோளில் கையை போட்டு அவன் கண்ணை பார்த்துக் கொண்டே நடனமாடினாள். கவின் தாரிகாவின் அமைதியை களைத்து அவளுக்கு ஆறுதலாகவே ஆடினான். மற்றவர்களும் நன்றாகவே ஆடினர்.

பவியுடன் ஆடுபவன், கொஞ்சம் சிரிச்சேன்னா..அழகா இருக்குமே? உனக்கு அழ மட்டும் தான் தெரியுமா? என அவளிடம் பேசிக் கொண்டே நடனமாட, அவன் குடும்பம் மொத்தமும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். முடியும் சமயத்தில் உன்னோட பேர் என்ன? உன்னோட நம்பர் தர்றீயா? எனக்கு உன்னை பிடிச்சிருக்கு என்றான். பவி கால்கள் நின்றது. அவன் விடாது அவளை தூக்கி போட்டு பொம்மை போல் பிடித்து அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.

அவள் கண்ணீர் உருவெடுக்க,அவன் இறக்கி விட்டான்.

ஏய்..என்ன பண்ற என்னோட பொண்ணை? என்று பவி அப்பா அவர்களிடம் வந்தார். அவரை தடுத்த பவி..என்னால யாரையும் ஏத்துக்க முடியாது. எனக்கு அகிலை தான் பிடிக்கும். அவனே என்னை விட்டு சென்றாலும் என் மனதில் வேற யாருக்கும் இடமில்லை என்று அழுது கொண்டே வெளியே ஓடினாள்.

அவன் சத்தமாக, சரி நீ அவனை காதலிக்கிறன்னு புரியுது. ஆனால் ஏதும் உதவி வேணும்ன்னா சொல்லு என்று கத்தினான். நின்று அவனை பார்த்த பவி அவனிடம் வந்து, நான் அவனை பார்க்கணும். கூட்டிட்டி போறியா? கேட்டாள்.

வா..என்று அவன் பவியை இழுத்துக் கொண்டு செல்ல, எல்லாரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். மேடை ஏறிய வேலு..எல்லாரும் நல்லா டான்ஸ் பண்ணாங்கல்ல. கிளாப்ஸ் குடுங்க என்று சத்யா பக்கம் திருப்பினான்.

அதுவரை காருண்யாவும் கௌதமும் கடைசி நின்ற போசிலே நின்று பவியை பார்த்துக் கொண்டிருந்தனர். வேலு பேசியதும்..அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்க, கௌதம் காருண்யா இடையிலிருந்து கையை எடுத்தான். அவளும் விலகிக் கொள்ள..

சார், அதான் முழுசா பார்த்துட்டோமே? கவின் சொல்ல..அவனை முறைத்துக் கொண்டே கௌதம் மாலினி அருகே சென்று அமர்ந்தான். காருண்யா அவன் பின்னே வர..மாலினி எழுந்து அவளை அவனருகே அமர செய்தாள். அவன் காருண்யாவை பார்த்து விட்டு அமைதியாக இருந்தான். அவள் புருவத்தை உயர்த்தி கமலியிடம் அவனை காட்ட, கமலி கையை உயர்த்தி காட்டினார். அவள் சிரித்துக் கொண்டே கௌதமை பார்த்தாள். மாலினி அவளை பார்த்து புன்னகைத்து விட்டு தன் தோழி வசுவை பார்த்தாள். அவள் கண்கள் சரவணனை விட்டு அகலாதிருந்தது.

நடத்துடி..நடத்து என்றாள்.

என்ன? அவள் கேட்க, ஏற்கனவே அவனுக்கு உன் மேல ஒரு கண்ணு. இப்ப உனக்குமா? மாலினி கேட்க, அவள் புன்னகைத்தாள். காருண்யா அவர்களை பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்தான். எல்லாம் முடிந்து அனைவரும் சாப்பிட செல்ல, மாலினி சாப்பாடு வாசனை வந்தாலே உமட்டுது. எனக்கு வேண்டாம். நீ சாப்பிட்டு வா..வசு. நான் காத்திருக்கேன் என்று வெளியே சென்று அமர்ந்தாள். வேலுவும் அகல்யாவும் அவளிடம் வந்து ஒரு பாக்சை நீட்டினர்.

என்ன?

இட்லி தான் வீட்ல போய் சாப்பிடு என்றான் வேலு.

அவள் இருவரையும் பார்த்து, உங்களுக்கு எப்ப கல்யாணம்? கேட்க, அகல்யா வேலுவை பார்த்து விட்டு வெட்கத்துடன் உள்ளே சென்றாள்.

இன்னும் கொஞ்ச நாட்கள் தான் என்ற வேலு..பிரதீப் அண்ணா பேசுனாங்களா? கேட்டான்.

ம்ம்..சொன்னாங்க. ஆனால் அவரால் செய்ய முடியுமா? அவரால் குடிக்காம இருக்க முடியாது மாலினி கேட்க,

பார்க்கலாம். அதுக்கு தான் ஒரு வாரம் சொல்லி இருக்காங்களே? நீ அவனுக்கு உதவ தயாரா இருக்கிறியா? கேட்டான் வேலு.

ம்ம்..பண்ணலாம். அவர் வரலையா? அவள் கேட்க, நீ ரொம்ப தேடுற மாதிரி இருக்கு வேலு கிண்டலாக கேட்டான்.

ஆமா. அவர் என்னோட புருசனாச்சே..

ம்ம்..நல்ல முன்னேற்றம் தான்.

வந்துருக்கணும். ரெசார்ட்ல அரேஞ்ச பண்ண சென்றான். வந்துடுவான். நீ வேண்டுமானால் இருந்து அவனை பார்த்துட்டு போவேன்.

வேண்டாம். அவர் வர்றப்ப வரட்டும். நாங்க கிளம்புறோம். கொஞ்சம் சோர்வா இருக்கு என்று அவள் சொல்ல அவளுடைய பெற்றோர் வந்தனர்.

வசு வந்துவுடன் கிளம்பலாம்மா என்றாள். சரிம்மா..என்று அவள் அப்பா அவளருகே அமர்ந்தார். வேலு புன்னகையுடன் சாப்பிட்டீங்களாப்பா? கேட்டான்.

சாப்பிட்டோம்ப்பா. முதல்ல உன்னை தான் எதிர்பார்த்தோம். மறையும் சத்யாவும் முந்திட்டானுக என்றார்.

அதனால என்னப்பா? மறை கண்டிப்பாக செய்ய வேண்டிய நிலை. அப்புறம் தியாவை தான் உங்களுக்கும் தெரியுமே? அவள் மனம் மாறும் முன்னே செய்திடலாம்ன்னு தான். அவனுக சந்தோசமா இருந்தா போதாதா? வேலு சொல்ல, பெரிய மனுசன் மாதிரி பேசுறடா..என்றார் அவள் அம்மா.

அவன் புன்னகையுடன் மாலினிய நல்லா பார்த்துக்கோங்க என்று அவளை பார்த்து சாப்பிட்டுடு என்று உள்ளே சென்றான். வசு வர..எல்லாரும் கிளம்பினர்.

காரில் அந்த பையனுடன் பவி அகில் வீட்டின் முன் இறங்கினாள். கோபமாக கேட்டை திறந்து உள்ளே வந்து கதவை படார் படாரென தட்டினாள். துருவன் கதவை திறந்து, இந்த நேரத்தில வந்திருக்கீங்க?

அவன் எங்கடா? என்று துருவனை விலக்கி அவள் காலணியை போட்டு விட்டு அவன் அறைக்கு செல்ல..துருவன் வெளியே நிற்பவனை பார்த்து விட்டு அவள் பின் சென்றான். அகில் அறைக்கதவு திறந்திருக்க..அவள் சத்தம் கேட்டு அகில் ஓடி வந்து கதவை சாத்த பவி கதவை பிடித்து தடுத்தாள்.

சொல்லுடா..என்ன தான் உனக்கு பிரச்சனை? உனக்கு என்னை பார்த்தால் எப்படி தெரியுது? அவள் கேட்க, சட்டென அவளை தள்ளி விட்டு கதவை சாத்தினான். அவள் விழாமல் துருவன் பிடித்தான்.

அப்பொழுதும் விடாது..அவள் சொல்லு..சொல்லு..எனக் கத்தினாள். அகில் போனை அப்பொழுது தான் ஆன் செய்தான். நிறைய போன் நண்பர்களிடமிருந்து வந்திருந்தது. அதை பார்த்தாலும் பவிக்கு மேசேஜ் செய்தான்.

இனி நாம பார்க்க வேண்டாம். முடிச்சுக்கலாம் என்று வர..அதை பார்த்து கதவை தட்டி தட்டி அழுதாள். துருவன் அவளிடமிருந்து போனை வாங்கி பார்த்தான்.

டேய் அண்ணா..கதவை திற, துருவன் தட்ட அகில் உள்ளே அழுது கொண்டிருந்தான்.

விடுடா..என்று எழுந்த பவி. நான் இனி உன்னை தொந்தரவு செய்யலை. நீ எனக்கு கொடுத்த ஒன்றை வச்சிட்டு போறேன். நாளை வரை உனக்கு நேரம் தாரேன். நீயா தான்ன லவ்வ சொன்ன? அதே மாதிரி இதை நீயே எனக்கு நாளைக்குள் கொடுக்கணும் இல்லை நீ சொன்ன மாதிரி நான் முழுசா உன்னை விட்டு போயிருவேன் என்று ஸ்ரீ வாங்கி கொடுத்த செயினை கதவின் பக்கம் வைத்து விட்டு அழுது கொண்டே சென்றாள்.

அகில் அவன் அறை சன்னல் வழியே அவளை பார்த்தான். வெளியே கார் அருகே நின்றவனை பார்த்து, இவர் இங்கே என்ன செய்கிறார்? என்று கண்ணீருடன் பார்த்தான். அவனை பார்த்து விட்டு பவி நகர, அவளது கையை பிடித்து அவளை நிறுத்தி கார் கதவை திறந்தான்.

கண்ணீருடன் அவன் கையை எடுத்து விட்டு கார் கதவை அவள் அடைத்து விட்டு, என்னால முடியாது. என்னை பார்க்க நினைக்காதீங்க என்று கூறினாள்.

நான் யாருன்னே தெரியாம ரிஜெக்ட் பண்ணுற? அவன் கேட்க,  நீங்க யாராக இருந்தாலும் என்னால் அகிலை தவிர யாரையும் நினைக்க முடியாது என்று அவள் நகர, பிரகதி அவள் முன் வந்தாள்.

என்னாச்சு? எதுவும் பிரச்சனையா? அவள் கேட்க, அவளை பார்த்த பவி. உன்னிடம் சொல்லும் அளவுக்கு நீ எனக்கு முக்கியமானவள் இல்லை. உன் வேலைய பார்த்துட்டு போ..ம்ம்..இப்ப அவன் பிரீயா தான் இருக்கான். வேணும்ன்னா கரெக்ட் பண்ணிக்கோ என்றாள்.

பிரகதி புரியாமல் விழித்து, அகிலையா சொல்ற? அவன்..என்று அவள் அவன் வீட்டை பார்க்க அவன் பவி செல்ல திரும்பிய போதே அழுது கொண்டே படுத்து விட்டான்.

இருவரும் சண்டை போட்டுக்கிட்டீங்களா? பிரகதி கேட்டு விட்டு அஜய்யை பார்த்து, நீங்க யாரு? இவளோட கைய எதுக்கு பிடிச்சீங்க? அஜய் பிரகதியை முறைத்து பார்த்தான்.

பவி ஓட, அவளை ஓடிச் சென்று பிரகதி பிடித்து, அகிலை காதலிக்கிற இன்னுமா உனக்கு புரியலை. அவன் கோபக்காரனாக இருந்தாலும் காரணமில்லாமல் சண்டை போட மாட்டான்.

நான் எதுவுமே செய்யலை. அப்புறம் எதுக்கு என்னை பார்க்க வராதன்னு சொல்றான் என்று அழுதாள். அஜய் இருவரிடமும் வந்தான். அவன் வேலீஸ்வர் ஊருக்கு இரண்டு ஊர் தள்ளி இருக்கும் ஊரான். இங்கே வெற்றி எப்படியோ? அது அவன் அப்பா பெரிய ஆள். குடும்பம் பெரியது. சத்யாவிற்கு சொந்தக்காரன்.

நீ தான் காரணம் என்று நான் சொல்லலை. நான் என்ன தான் ஸ்ரீயை பழிவாங்க அவனை காதலிப்பது போல் நடித்தாலும் எனக்கு அவன் கோபத்தை பற்றி நல்லா தெரியும். அப்பொழுதே நான் செய்யும் அனைத்தும் எனக்கு தான் வந்தது.

பவி..உனக்கு தெரியுமா? நான் ஸ்ரீ, அர்ஜூன் பற்றிய வதந்தியை அகிலை நம்ப வைத்தேன். ஆனால் அகில் அந்த கோபத்தையும் என்னிடம் தான் காட்டினான். அவன் என்னை காதலித்தான். ஆனால் நான் அவனை ஏமாற்ற தான் செய்தேன். அவனுக்கு என்னை விட அப்பொழுது ஸ்ரீயை பிடிக்கும்ன்னு ஒவ்வொரு செயலிலும் தெரிஞ்சது. ஆனால் அவனுக்கு ஸ்ரீ மீது காதல் இல்லைன்னு எனக்கு தெரியும். ஆனால் ஸ்ரீ தான் பைத்தியகாரத்தனமா அகிலை காதலித்தாள். அவள் மனம் உடையும் படி நடந்ததால் ரொம்ப நாளா அவனிடம் சரியா பேசலை. நானும் என் வேலை முடிந்ததுன்னு போயிட்டேன். அகில் என்னை தேட கூட இல்லை தெரியுமா? அவன் அப்ப யாரையும் காதலிக்கலை. அவன் உன்னை மட்டும் தான் காதலிக்கிறான். நீ கொஞ்சம் பொறுமையா யோசி. அவன் ஏதும் பிரச்சனைன்னு சொன்னானா?

அவனுக்கு அந்த கொலைகாரன்..என்று துளசியை பற்றி இன்பா பேசியது நினைவு வந்தது. ஆனால் இதுக்கும் அவளுக்கும் சம்பந்தம் இருக்காதே? என்று தெரியலை.

“ரொம்ப தேங்க்ஸ்” பிரகதி. மனசு கொஞ்சம் அமைதியா இருக்கு என்று பவி அவளை அணைத்தாள்.

என்ன பிரச்சனையாக இருக்கும்? பிரகதி யோசிக்க, ஹே..கேர்ல்ஸ்..ஐ அம் கியர் என்றான் அஜய்..

அவனை கண்டுகொள்ளாமல், நான் கிளம்புகிறேன் என்ற பவி அர்ஜூன் பாட்டி வீட்டை பார்த்து விட்டு, பிரகதியிடம்..உனக்கு தெரியுமா? ஸ்ரீக்கு உடல் சரியில்லை. அர்ஜூன் அவள் விழிச்சுட்டான்னு அனுவோட உடனே கிளம்பிட்டான்.

அவளுக்கு என்னாச்சு? அவள் உண்மையிலே எல்லாரையும் மறந்துட்டாளா?

ஆமா பிரகதி. அவள் மறந்துட்டா. நான் அவளை பார்க்க போறேன். நீயும் வர்றீயா?

அர்ஜூன் என்னை கொன்னுடுவான். அவன் என்னை பார்த்தவுடனே அகிலையும், ஸ்ரீயையும் பார்க்கக் கூடாதுன்னு சொல்லிட்டான். அர்ஜூனுக்கு அகில் பரவாயில்லை. தெரியுமா? அகில் கோபமாகவே பேசினாலும் சற்று நேரத்தில் அமைதியாகிடுவான்.

இந்த அர்ஜூன் ஜாலியா பேசுறான். கோபம் வந்தால் அவ்வளவு தான். இருவருக்கும் ஒரே வித்தியாசம் தான். அகில் கோபத்தை நேரடியா காட்டுறான். அர்ஜூன் சேர்த்து வைத்து மொத்தமா காட்டுவான் என்றாள்.

வா..அவன் உன்னை ஒன்றும் சொல்லாமல் பார்த்துக்கிறேன்.

இல்ல பவி. என் மேல் தானே தப்பு. அவன் கோபத்திலும் அர்த்தம் இருக்கு. ஸ்ரீ இப்பவாது நிம்மதியா இருக்கட்டும்.

அட..வா..என்று பவி அழைக்க, நானும் வரவா? கேட்டான் அஜய்.

ஹலோ சார், நீங்க யாரு? நான் கேட்டதுக்கு பதிலே காணோம்.

என்னை பேசவா விட்டீங்க? நீங்களா பேசிக்கிட்டு இருக்கீங்க?

உங்க உதவிக்கு நன்றி சார். நீங்க கிளம்புங்க என்று அர்ஜூன் வீட்டிற்கு செல்ல, நானும் வருவேன் என்று அவனும் பின்னே வந்தான். துருவன் இவர்களை பார்த்து விட்டு உள்ளே சென்றான்.

Advertisement