Advertisement

 ஹாய் ப்ரெண்ட்ஸ்…

கொஞ்சம் தாமதமாகி விட்டது….

எல்லாருக்கும் என் இனிய இரவு வணக்கம்…

இதோ உங்களுக்கான எபிசோடு 22

இன்பாவை கவனிக்க சென்ற அகிலும் அபியும் அவளை கண்டறிந்தனர். இன்பா ஒரு மரத்தின் பின் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.அவள் முன் இருவரும் தோன்ற, அவளுக்கு மேலும் கோபத்தில் இங்கிருந்து செல்லுங்கள்….. சத்தமிட்டாள்.

சைலேஷ் சார் தான் அனுப்பினார் என்றான் அகில்.

செல்கிறீர்களா? இல்லையா?

கொஞ்சம் அமைதியாக இருங்கள் என்று அபி பேசினான்.

ஒரு அழகான கிராமம். அங்கே வசித்த பண்ணையாரால் அவரது கடன் காரணமாக வீடு, ஆடு ,மாடு ,கோழி, வாத்து அனைத்தையும் வேறொரு நபரிடம் விற்று விட்டு மொத்தமாக அங்கிருந்து சென்றார்.புதிய முதலாளியை அங்கிருந்த விலங்குகளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதனால் வெளியே மேய செல்லாமல் பிடிவாதமாக இருந்ததால் முதலாளி மிகவும் வருத்தப்பட்டார். பின் முடிவெடுத்தவராக அவர் வீட்டினுள் செல்லாமல்  விலங்குகள் இருக்கும் அதே இடத்தில் அதனோடு தங்கினார். மேலும் கோபப்பட்டார்களே தவிர, அவரை அப்பொழுதும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு வாரத்திற்கு பின் அவருக்கு கடுமையான காய்ச்சல் வந்தது அந்த குளிரால். அதனை பார்த்த விலங்குகள் மிகவும் பரிதாபப்பட்டது. அந்த வீட்டின் ஆட்கள் அவருக்கு சிகிச்சை செய்து இரண்டு நாட்களிலே குணமானார். பின் அவர் மீண்டும் அவ்விடத்திற்கு வர, அவரது உண்மையான அன்பினால் அவரை விலங்குகள் ஏற்றுக் கொண்டன.

இதே போல் உங்கள் தங்கை மனதும் மாறும். அவளுக்கு உங்கள் மீது பொறாமை. அதை அகற்றினால் எல்லாம் சரியாகும் என்று அபி பேச, அவன் அருகே வந்து அவனை உற்றுப்பார்த்தவள் அவனது கையை பிடித்து நன்றி…நன்றி….நன்றி….குலுக்கி விட்டு ஓடினாள்.

இதை எதிர்பார்க்காத அபி, இன்பா சென்ற திசையை பார்த்த படி அசையாமல் இருக்க, அகில் அவனை பார்த்து சிறு புன்னகையுடன் அவனது கையை பிடித்து அழைத்துக் கொண்டு இன்பா சென்ற திசையிலே சென்றனர்.

இதயாவும் அம்மாவும் வெளியே வர, இன்பா ஓடி வருவதை பார்த்து தங்கையும் அவளை நோக்கி சென்றாள்.

அக்கா….என்னை மன்னித்து விடு.நான்…..

நீ எதுவும் கூற வேண்டாம். நான் எப்பொழுதும் போல் உன்னை கவனித்து கொள்வேன் இருவரும் அணைத்துக் கொண்டிருந்தனர்.நித்தியும் கவினும் உள்ளே நுழைய, சைலேஷ் கோபமாக வந்தவன் அக்காவும் தங்கையும் சமாதானமாகி விட்டார்கள் என்று அமைதியோடு நோக்கி விட்டு,நித்தி கவினை பார்த்தான்.

பின் இதயாவிடமும் தோழிகளிடமும் உங்களது தண்டனையை இப்பொழுதே தொடங்க வேண்டும்.

அவர்கள் அங்கிருந்து கிளம்ப, சைலேஷ் முகமோ கடுத்தவாறு இருந்தது. பெற்றோர்கள் செல்ல, இன்பா சைலேஷ் கையை பிடித்து,

எதற்கடா இவ்வளவு கோபம்?அவளது கையை தட்டி விட்டான்.

அம்மா ஏதாவது கூறினார்களா? அவள் கேட்க,அவன் மௌனமாக இருந்தான்.

சரி, எனக்கு அந்த பெண்ணை பற்றியும், முகவரியும் கொடு, அவன் கோபமாக பணத்தை வைத்து சரி செய்ய நினைக்கிறாயா? கேட்டு விட்டான்.

இன்பா தடுமாறிக் கொண்டே, பணமா? என்று சுதாரித்தவள். என்னிடம் பணமுள்ளதா? நான் தான் முன்னே கூறினேனே! அவள் செய்த தவறுக்கான தண்டனையை கொடு என்று தானே கூறினேன். நீயும் என்னை தவறாக தான் நினைக்கிறாய்? வருத்தப்பட, வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அகில், அபி, கவின், நித்தியை பார்த்து வகுப்பறைக்குள் செல்ல சொல்ல, அவர்கள் இருவரையும் பார்த்த வண்ணமே சென்றனர்.

எதற்காக முகவரி? சைலேஷ் கேட்டான்.

அவளது உடல்நிலை பற்றி அறிந்து கொள்ள தான்.

அவன் கல்லூரி முதல்வரை பார்க்க, அவர் போன் செய்து அறிந்து கொண்டு  முகவரியை கொடுத்தார்.அதை பார்த்தவுடன் இன்பா கண்களில் நீர் கோர்க்க,

சைலு…..அந்த பெண்……

என்ன?

அவள்  யாழு……யாழுவின் தங்கை டா…

அந்த யாழியா?

ஆம். அவளுடையது தான் இந்த முகவரி…..என்றாள்.

நான் உடனே அவளை பார்க்க வேண்டும் என்றாள் பிடிவாதமாக. முதல்வர் அவளை முறைக்க, நிலைமை அறிந்த சைலேஷ் கல்லூரி முடிந்தவுடன் கண்டிப்பாக செல்வோம் என்று சமாதானப்படுத்தினான்.

முதல்வர் இன்பாவை தனியாக அழைத்து, உங்களுக்கு அவரை தெரிந்திருக்கலாம். ஆனால் கல்லூரியில் இருக்கும் போது அவரை தவிர்ப்பது தான் உங்களுக்கு நல்லது. இல்லையெனில் ஆசிரியராலோ, மாணவர்களாலோ பிரச்சனை எழும். உங்கள் வேலை கைவிடுவது போலாகிவிடும் என்று எச்சரித்தார்.

இன்பாவும் சரிங்க சார் என்று ஒத்துக் கொண்டாள்.

அன்று மாலை தாரிகாவை பார்க்க முதலில் இன்பா, சைலேஷும் உடன் இதயாவையும் அவளது தோழிகளையும் சேர்த்து அழைத்து வந்திருந்தார்கள்.

இன்பாவை பார்த்த தாரிகா உணர்ச்சி வசப்பட்டு போட்டுள்ள ஊசியையும் மறந்து வேகமாக எழுந்தாள். இன்பாவும் வேகமாக வந்து, அவளை அமர்த்தி விட்டு,

எப்படி இருக்கிறாய்? கேட்டாள்.

அக்கா…கலக்கமான குரலில் பேச்சில் விம்மலுடன் இருந்தாள். அவளை இன்பா அணைத்து தேற்றினாள். பின் இதயாவையும் அவளது தோழிகளையும் பார்த்து இவர்கள்…. மேலும் பயந்தாள்.

அவள் என்னுடைய தங்கை என்ற இன்பாவை அதிர்ச்சியோடு பார்த்து விட்டு, பிடித்து தள்ளினாள் தாரிகா. இன்பா அதிர்ந்து நின்றாள்.

இதயாவும் தோழிகளும் தாரிகாவிடம் மன்னிப்பு கேட்டனர். அவர்களிடம் அவள் ஏதும் கூறாதவாறு இன்பாவையும் சைலேஷையும் பார்த்தாள்.

சைலேஷ் தாரிகாவிடம், உன்னுடைய அக்கா யாழினியை எனக்கும் தெரியும். ஆனால் பெரியதாக பேசியதில்லை.இன்பா தான் அவளுடன் நெருக்கமாக இருப்பாள்.

நான் என் அக்கா மீதுள்ள கோபத்தை யார் மீது காட்டலாம் என்று சிந்தித்த போது, நீ என் கண்ணில் பட்டாய்.அதனால் தான் இவ்வாறு நடந்து கொண்டேன்.இது என் அக்காவிற்கு இப்பொழுது தான் தெரியும். உன் அக்காவும் என் அக்காவும் தோழிகள் என்பது நிஜமாகவே எனக்கு தெரியாது.இதுவும் தற்பொழுது தான் அறிந்தேன். என்னை மன்னித்து விடு கூறி விட்டு இதயா சோகமாக வெளியே சென்றாள்.அவளுடன் தோழிகளும் சென்றனர்.

உங்களது பிரச்சனைக்கு நான் தான் கிடைத்தேனா? தாரிகா இன்பாவை பார்த்தாள். நாங்கள் கஷ்டப்பட்ட நேரத்தில் நீங்கள் பக்கத்தில் கூட இல்லை.என்ன நட்போ? பொரிந்து தள்ளினாள் தாரிகா.

நீர் கசிந்த விழிகளுடன் இன்பா வெளியே வர, அகிலும் நண்பர்களும் உள்ளே இன்பா அழுவதை பார்த்துக் கொண்டே செல்ல,சைலேஷிடம் சற்று காத்திருப்பீர்களா சார்? தாரிகா கேட்டாள்.

என்னுடைய வேலையை நாளை செய்வதாக ஒத்தி வைத்து விட்டேன். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கிறேன் என்றான்.

காத்திருக்கிறீர்களா?…எதற்கு?..உங்களுக்கு தான் என்னுடைய அக்காவுடன் சரியாக பழக்கமில்லை தானே! அவள் கோபப்பட்டாள்.சைலேஷும் அமைதியாக வெளியே சென்றான்.

கைரவ் தாரிகாவிடம் பேச, அவள் முகத்தை கடுகு வெடிப்பதை போல் வைத்துக் கொண்டு அவனிடம் வெளியே போ…கூறுவதற்கு முன், அவன் முந்திக் கொண்டு,

நீ வெளியே செல்கிறாயா? நீ கேட்க போகிறாய் தானே!

க்கும்….முகத்தை திருப்பிக் கொண்டு கிண்டலாக கூறி விட்டு அழகாக கைரவ் செய்ய, தாரிகாவிற்கு அவளை மீறியும் சிரிப்பு உதட்டை தொட்டு சென்றது. அகிலையும் நண்பர்களையும் பார்த்த ஸ்ரீ, அவர்களை உள்ளே செல்ல விடாமல் தடுத்தாள்.

அவர்களை விடு….. தாரிகா சொன்னவுடன் அவர்கள் உள்ளே வந்தனர். தாரிகா ஆடையை மாற்றி இருப்பதை பார்த்த நித்தி கோபமாக கவினை முறைத்தாள்.

அட,…சீனியர் உங்களுக்கு நேரம் இருக்காது.உங்கள் உதவிக்கு நன்றி கவினிடம் நிமிராமல் கூறினாள்.பின் நித்தியை அழைத்து, இதோ உங்களது ஆடை. இது எனக்கு தேவையில்லாதது.உங்களது உதவியை என்றும் மறவேன்.. அனைவரும் என்னை சந்திக்க வந்திருக்கிறீர்களா? மிகவும் மகிழ்ச்சி சீனியர். நீங்கள் கிளம்புங்கள்.

கவின் தாரிகாவிடம், நான் உன்னை…………அவன் பேச முடியாமல் தயங்க,

ஆதேஷ்  மடமடவென உள்ளே வந்து, சீக்கிரம் கிளம்பு. உடனே கிளம்பியே ஆகணும் என்று அவசரப்படுத்தினான்.அவளது பையை எடுத்து விட்டு அவன் திரும்பினான்.

நீ யார்? நித்தி கேட்டாள்.

அவன் என்னுடைய தோழன் கூறி விட்டு, ஏன்டா பதறுகிறாய்? என்ன ஆயிற்று? தாரிகா கேட்டாள்.

அவன் ஏற்கனவே செவிலியருடன் பேசி வந்திருப்பான் போல்….செவிலியர் உள்ளே வந்து, அவளது ஊசியை எடுக்க, ஆதேஷ் அவளிடம் பணத்தை கொடுக்க, வெளியே அரவமாக இருந்தது.

அவன் வந்து விட்டான். வா செல்லலாம் கூற,

யாருடா? கேட்டாள் தாரிகா. அவன் ஏதும் கூறவில்லை.

இன்பா ஒருவனை திட்டிக் கொண்டிருந்தாள். போ…டா..இப்பொழுது வேண்டாம். சைலேஷும் அவளுடன் சேர்ந்து அவனை அங்கிருந்து அகல வைக்க முயன்று கொண்டிருந்தான்.

எதற்கு சத்தமிடுகிறீர்கள்? இது மருத்துவமனை. முதலில் இங்கிருந்து கிளம்புங்கள் என்றார் செவிலியர்.

அனைவரும் வெளியே வர, சைலேஷிடம் பணத்தை கொடுத்தாள் தாரிகா. எனக்காக யாரும் எதுவும் செய்ய தேவையில்லை.ஆதேஷை பிடித்துக் கொண்டு நடந்தாள்.வெளியே அந்த ஆளை இழுத்து வந்தும் அவன் கிளம்புவதாக இல்லை.

சந்துரூ புரிந்து கொள். நீ அவளிடம் இப்பொழுது பேசுவதற்கான நேரம் இது அல்ல. முதலில் கிளம்பு என்று இன்பா அமைதியாக கூறியும் கேளாமல் தாரிகா முன் வந்தான்.

அவனை கண்ட தாரிகா முகம் மாறியது. அவள் ஆதேஷை பார்த்தாள்.

சந்துரூவிடம் ஆதேஷ், தயவுசெய்து சென்று விடுங்கள் பேச, தாரிகா அனலாக சந்துரூவின் சட்டையை பிடித்து, ஏன் அப்படி செய்தாய்? அவள் என்ன செய்தாள்? அவள் உன்னை எவ்வளவு காதலித்தால் தெரியுமா? ஆவேசப்பட்டாள்.

ஆதேஷும் ஸ்ரீயும் அவளை பிடித்து இழுக்க, விடுங்கள் நான் அவனை சும்மா விட மாட்டேன் என்று சத்தமிட்டுக் கொண்டே தளராமல் அங்கேயே உட்கார்ந்து ஆதேஷ்,ஸ்ரீ மீது முகம் புதைத்து அழுதாள். திகைப்புடன் எல்லாரும் அவளை நோக்க,

இன்பாவும் போதுமாடா….உனக்கு? நான் தான் கூறினேனே! அவளுக்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை.நீ வேறு … திட்ட,

எல்லாரும் நிறுத்துங்கள் ஆதேஷ் கத்தி விட்டு, அவளை தூக்கிக் கொண்டு அவனது காரில் ஏற்றினான்.பின் சந்துரூவிடம் வந்து, உங்களிடம் நான் பேச வேண்டும். அவள் வீட்டினருகே இருக்கும் ஓர் இடத்தை கூறி வந்து விடுங்கள் என்றான்.

ஸ்ரீ அப்பொழுது தான் சந்துரூவை பார்த்தாள்.

நீ….நீங்களா?….வக்கீல் சார்….

நிவாசும் ஜிதினும் அங்கே வந்தனர். அவர்களும் சந்துரூவை பார்த்து, நீங்களா? நிற்க,

வாருங்கள் முதலில் செல்லலாம் என்று கிளம்ப,ஆதேஷ் அனைவரையும் பார்த்து ஸ்ரீ மட்டும் வந்தால் போதும் என்று ஜிதின் பக்கம் திரும்பி நானே உங்களது பியான்சேவை வீட்டிற்கு அழைத்து வருகிறேன். அவளது அம்மா வேலைக்கு சென்றிருக்கிறார். அவர் வந்தவுடன் அவளை அனுப்புகிறேன் என்றான்.

இல்லை. நாங்களும் வருவோம் என்று நித்தி கூற, அனைத்தும் உங்கள் அனைவரால் தான் நடந்தது அவனும் கோபப்பட்டான். நித்திக்கு தாரிகா விசயத்தில் ஆர்வம் வந்து விட்டதால் அவள் விடுவதாக இல்லை. கவினை வேறு தாரிகாவிற்கு பிடிக்கும் என்பதால் அவனுடன் அவளை சேர்த்து வைக்க எண்ணமும் உண்டாயிற்று.

உங்கள் விருப்பம் அவளை மேலும் காயப்படுத்தாமல் இருந்தால் சரி என்று கவினை பார்த்தான். அவன் இவனை முறைத்தான்.

ஆதேஷ் காரில் அவனும், ஸ்ரீ, தாரிகா இருக்க, சைலேஷ் காரில் கைரவ், இன்பாவும் பின் அகில் நண்பர்கள் மூவரும் பைக்கிலும், ஜிதின் காரில் நித்தியை அழைத்துக் கொண்டு நிவாசும் ஏறினார்கள்.

                      “வார்த்தைகளால் காயப்பட்டதே!

                                 என் மனம்

எந்நோக்கினும் நும் பெயரை வியாபிக்கிறதே!

                               செவியெங்கும்

                     என்னை ஊமையாகி விட்டாயே!

                              தரமற்று போக

                        நான் பொருளா? என்ன?

                     உடைந்த பீங்கான் துண்டாய்

                    என்னை சில்லாக்கி விட்டாயே!

                       இனி என் செய்வேனடா?

                               என் செய்வேனடா?”

 

 

 

 

 

 

 

 

Advertisement