Advertisement

அத்தியாயம் 110

கௌதம் காருண்யாவை பார்த்துக் கொண்டிருந்த சக்தி அவர்கள் முன் வந்து, அவளுக்கென்ன? கேட்டான்.

எவள கேட்குறீங்க?

அதான் அவள்? என்று வீட்டை பார்த்தான்.

மாலினியா? கௌதம் கேட்க, ஆம் என்று தலையசைத்தான்.

நீங்க யாரு? காருண்யா கேட்டாள்.

அவளோட..என்று தயங்கிய சக்தி, நான் அவளுக்கு தாலி கட்டியவன் என்றதும் காருண்யாவிற்கு சினம் ஏறியது.

நீங்க விளையாட பொண்ணுங்க என்ன பொம்மையாடா? என்று அவனை பிடித்து தள்ளினான்.

காரு..நில்லு என்று கௌதம் அவளை பிடிக்க, அவன் கையை தட்டி விட்டு, நீ ஒழுங்காக இருந்திருந்தால் அவங்க கஷ்டப்பட தேவையேயில்லை. என்ன மனுசங்கடா நீங்க? என்று சத்தமிட்டாள்.

அவங்க உயிரோட இருக்க வாய்ப்பேயில்லை. நீ சந்தோசமா குடி. உன் பிள்ளைய உன்னுடையதே இல்லைன்னு சொல்லுவியா? என்று அவள் கத்த,..இன்னும் சத்தமிட்டால் எங்கே மாலினி வந்து விடுவாளோன்னு கௌதம் காருண்யாவை இழுத்து முத்தமிட்டான். அவள் அமைதியானாள். பின் சுயம் வந்து கௌதமை அடித்துக் கொண்டு, உன்னோட தேஜூன்னு என்னை நினைச்சியா? எல்லாருடனும் படுக்க அவள் சொல்லி விட்டு கௌதமிடம் மீண்டும் அடி வாங்கினாள்.

என்னோட தேஜூவா? அந்த கேடுகட்டவள என்னோட தேஜூன்னு சொல்ற?

அவளை காதலித்தேன் தான். அவள் நல்லா பொண்ணை நடந்துக்கிட்டா. நார்மலா தெரிஞ்சா. என்ன தேவ் பின்னே சுற்றியதால் அவன் மேல் அவளுக்கு காதல்ன்னு நினைச்சேன். ஆனால் இப்படி கேவலமான ஜென்மம் என்று எனக்கு தெரியாதுடி. தெரிஞ்சா அவள திரும்பி கூட பார்த்திருக்க மாட்டேன். என்னால எந்த பொண்ணையும் நம்பி என் வாழ்க்கையை விட முடியாது. எனக்கு என்னோட அம்மா போதும். என்னை விட்டா அவங்களுக்கு யாருமில்லை. இன்னும் ஒரு முறை உன் வாயிலிருந்து தேஜூன்னு வந்துச்சு என்னை பொல்லாதவனாக தான் நீ பார்க்கணும் என்று எச்சரித்து விட்டு சக்தியிடம் திரும்பினான்.

அப்ப நடந்ததை விட்டுரு. கல்யாணம் முடிஞ்சா அவள பார்த்துக்கிறத விட்டுட்டு அப்படி என்ன குடி உனக்கு முக்கியமா போச்சா. அவ செத்துருவான்னு முழுசா சொல்ல முடியாது. ஒரு சதவீதம் பிழைக்க வாய்ப்பிருக்கு. அவளுக்கு எதுவுமே தெரியாது. குழந்தைய நினைச்சி சந்தோசமா இருக்கா. முடிஞ்சா அவனோட கணவனா வாழப் பாரு. இல்லை மொத்தமாக அவ வாழ்க்கையை விட்டு போயிரு..என்றான்.

எனக்கு இதுவரை எந்த பொண்ணுடனும் பேசி பழக்கமில்லை. ஆனால் இன்று தான் அவள் சிரித்து, அழுது பார்த்திருக்கேன்.

ஓ..அப்ப நடந்த எல்லாத்தையும் பார்த்துக்கிட்டு இருந்தேல்ல? கௌதம் கோபமானான்.

ஆமா. பார்த்தேன் சக்தி சொல்ல, அவன் வாயிலே குத்தினான் கௌதம்.

உன்னோட பொண்டாட்டிய உன்னோட ப்ரெண்டு வம்பு செய்வதையும் தொடுறதையும் வேடிக்கை பார்த்துகிட்டு நின்றிருக்க. இதே நானா இருந்தா அவன் செத்திருப்பான்.

ஏன்டா, என்னடா ப்ரெண்டு பிடிச்சிருக்க? உன்னை தவறான வழியில் செல்ல வைப்பவன் ப்ரெண்டாடா? அவனே சொல்றான். நீ மாலினியிடம் தப்பா நடந்துகிட்டதுக்கு காரணம் நான் தான்னு தைரியமா சொல்றான். நீ வேடிக்கை பார்த்துகிட்டு இருக்க.

உன்னை அவன் ப்ரெண்டாவே பார்க்கலை. அவன் உன்னை பயன்படுத்தி சந்தோசப்படுகிறான். ரெண்டுன்னா.. உனக்கு பிரச்சனையை ஏற்படுத்த மாட்டான். பிரச்சனை நேரத்தில் உடன் இருப்பான். இவன் இருப்பானா? ஒரு நாள் இல்லை ஒரு நாள் உன்னை அவனே சொந்த விருப்பு வெறுப்புக்காக கொலைகூட செய்வான். அப்படிபட்டவன் தான் உன்னோட ப்ரெண்டு. எனக்கும் ப்ரெண்டு இருக்கான். எல்லாரிடமும் நன்றாகவே பேசினாலும் யாரை எந்த இடத்தில் வைக்கணும்ன்னு நான் தான் முடிவு செய்வேன்.

இங்க வந்த பின் தான் ரொம்ப சீரியசாகவே இருக்கிற மாதிரி இருக்கு என்றான். சக்திக்கு மறை கூறியதும் இவன் கூறியதும் ஒத்துப்போக நண்பர்களை கண்காணிக்கணும் என்று நினைத்தான்.

அவளுக்கு சரி செய்ய முடியாதா? சக்தி கேட்க, தெரியலையே? நடப்பது அந்த கடவுள் செயல் தான். நாம் என்ன செய்வது? என்று கையை விரித்து விட்டு வந்த ஆட்டோவை நிறுத்தி ஏறினான். காருண்யா கோபம் அதிகமா இருந்தாலும் அவளும் ஏறினாள்.

நம்ப முடியாதா? நம்ப முடியாத அளவு நான் என்ன செய்தேனாம் இவரை? என்று கடுங்கோபத்துடன் எண்ணியவாறு வர, வீடு வந்து இறங்கினர். அவன் முன் செல்ல அர்ஜூன், தாரிகா, ஸ்ரீ, அனு சாப்பிட அமர்ந்திருந்தனர்.

சாப்பிட வாங்க சார் அர்ஜூன் அழைக்க, கௌதம் கோபமாக படி ஏறி கதவை அடித்து சாத்தினான். காருண்யாவும் புலம்பிக் கொண்டே வந்தாள்.

அர்ஜூன் அவளை நிறுத்த அவனை தள்ளி விட்டு கௌதம் அறைக்கதவை கால் வலிக்க எத்தி விட்டு உள்ளே சென்றாள்.

இருவருக்கும் என்னாச்சு? அர்ஜூன் அவர்கள் சென்ற திசையையே பார்க்க, நீ சாப்பிடு. கொஞ்ச நேரத்தில பசிக்குதுன்னு வருவா. அப்ப கேட்டுக்கலாம் என்றார் கமலி.

வெளியே காட்டவில்லை என்றாலும் அறைக்குள் சென்றதும், அவன் என்னை அந்த கேவலமான பொண்ணோட ஒப்பிட்டு பேசிட்டான். இனி உன்னிடம் பேசவே மாட்டேன். நான் இவரை என்ன செய்தேனாம்? நம்ப முடியாதாம். இந்த அசிங்கம் உனக்கு தேவையாடி என்று அழுது கொண்டே தூங்கிப் போனாள் காருண்யா.

கௌதமிற்கு அவள் கல்யாணம் செய்து கொள்வீங்களா? என்று கேட்டது. அவளை கௌதம் முத்தமிட்டதே நினைவு வர அவன் தூங்க முடியாமல் அல்லாடினான்.

தூங்க முடியாமல் கௌதம் கீழிறங்கி வந்தான். அனைவரும் அவனை பார்க்க, சாப்பிட அமர்ந்தான். அனைவரையும் பார்த்தவன் எதுக்கு இப்படி பாக்குறீங்க? அவன் கேட்க, அனைவர் பார்வையும் காருண்யா அறையை ஏறிட்டது.

சார், உங்களோட சண்டை போட்டாளா? அர்ஜூன் கேட்டான்.

இல்லை.

அப்புறம் எதுக்கு இருவரும் கோபமா வந்தீங்க?

அர்ஜூன், நான் சாப்பிடலாமா?

தம்பி, அவ பசி தாங்க மாட்டா. நடந்ததை சொல்றீங்களா? என்று கமலி கேட்க, அவ ரொம்ப பேசுறா? என் விசயத்துல தலையிடாம இருக்க சொல்லுங்க ஆன்ட்டி என்று அவன் சாப்பிட, அர்ஜூன் மணியை பார்த்து விட்டு, சாப்பிட்ட கையுடன் படியில் ஏறினான்.

அண்ணா..சாப்பிட்டு போடா என்றாள் தாரிகா.

இரு..அவள பார்த்துட்டு வாரேன் என்று அர்ஜூன் செல்ல, சாப்பிடுவதை நிறுத்திய கௌதம் அர்ஜூனை பார்த்து விட்டு மீண்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். எல்லாரும் அவனை விநோதமாக பார்த்தனர்.

காரு..கதவை திற அர்ஜூன் கதவை தட்டினான். அவள் அறை நிசப்தம் நிலவ, கமலியும் அஞ்சனாவும் சென்றனர்.

தம்பி, என்னோட பேத்திய என்ன பண்ணீங்க? பாட்டி கேட்டார்.

அவ ஓவரா பேசினா. அடிச்சுட்டேன் என்றான்.

அடிச்சீங்களா? தாரிகா அவள் பாட்டியை பார்த்தாள். அவர் அவனை முறைத்துக் கொண்டிருந்தார்.

பாட்டி, அவ தேவையில்லாம ஏதாவது பேசி இருப்பா? தாரிகா சொல்ல, அதுக்கு அடிப்பாரா? அவளை அடிக்க இவருக்கு என்ன உரிமை இருக்கு? கேட்டார்.

சாப்பாட்டிலே கையை கழுவி விட்டு கௌதம் எழுந்தான்.

சார், நில்லுங்க. சாப்பிட்டு போங்க. பாட்டி புரியாம பேசுறாங்க. அவ ஏதாவது சொல்லி இருப்பா..என்று தாரிகா சொல்ல, அவளை பார்த்த கௌதம் என் மேல தான் தவறு. உரிமையில்லாதவரை அடிப்பது தவறு தான். என்னை மன்னிச்சிருங்க பாட்டிம்மா. அதுக்காக அவளிடம் மன்னிப்பு கேட்க முடியாது..என்று அவன் படியேற,

சார்..என்று தாரிகா பின்னே ஓடி வந்தாள். தேஜூவின் மேலுள்ள காதலில் தவித்த நேரம் அவளை பற்றி தெரிந்து..அந்த கஷ்டத்திலிருந்து கௌதமால் வெளியே வர முடியவில்லை. இதில் அவள் தேவ்வை மிரட்டி..அவனுக்கு பிடித்த சுவாதியை பிரிக்க நினைத்தாள். அதனால் தேஜூவை வெறுத்தாலும் ஏனோ யாரையும் அவனால் முழுதாக நம்ப முடியவில்லை. இப்ப கல்யாணம் என்றதில்லாமல் தேஜூவை பற்றி காரு பேசி கௌதமிற்கு அவனுடைய பழைய நினைவுகளை கொண்டு வந்து விட்டாள். அப்புறம் அவனுக்கு கோபம் வராமல் இருக்குமா?

நீ போ..சாப்பிடு என்று கௌதம் தாரிகாவை பார்த்தான். அவள் வேகமாக ஓடியதில் கால் பிரண்டு கீழே விழ, அவளை பிடித்து நிறுத்தி விட்டு அர்ஜூனை பார்த்துக் கொண்டே வேகமாக உள்ளே சென்றான். அர்ஜூன் கௌதம் பின் செல்ல..அர்ஜூனை போல் கௌதம் பால்கனி வழியே குதித்து காருண்யா அறைக்கு சென்றான்.

அவனை அதிர்ந்து கமலியும் அஞ்சனாவும் பார்க்க, அவன் பின்னே அர்ஜூனும் குதித்தான். கௌதம் கையை கட்டிக் கொண்டு அர்ஜூனை பார்த்தான்.

தூங்குறாளா? லூசு..கொஞ்ச நேரத்துல பயந்துட்டேன் என்று அர்ஜூன் அசடு வழிய..என்னையும் சேர்த்து பயமுறுத்திட்ட என்று அர்ஜூனிடம் கோபமாக கௌதம் கூறி விட்டு அவன் அறைக்கு வந்தான்.

என்ன பண்றீங்க? அஞ்சனா கேட்க, அர்ஜூன் அவரிடம்..அம்மா சார்ட் கட். நல்ல வழில்ல என்று சிரித்தான்.

இருவரும் கௌதமை பார்க்க, இவன் தான் நேற்று ஸ்ரீ அறைக்கு இப்படி போனான் என்று அர்ஜூனை கோர்த்து விட்ட கௌதம் காரு நினைத்து அர்ஜூன் பயந்ததால் மட்டும் தான் போனேன் என்றான்.

அர்ஜூன் கௌதமை முறைக்க, கமலியும் அஞ்சனாவும் கௌதம் அறையிலே அமர்ந்தனர். அவன் புரியாமல் இருவரையும் பார்த்தான்.

நடந்ததை சொல்லுங்க என்று அர்ஜூன் பெட்டில் படுத்தான். கௌதம் மாலினியுடன் ஸ்கேனிங் சென்டருக்கு சென்றது; காருண்யா உடன் வந்தது; தேஜூ பற்றி காருண்யா பேசியது; சக்தியிடம் அவள் செய்கை; கோபத்தில் அவன் கொடுத்த முத்தம் அனைத்தும் சொல்லி விட்டு, பாவமாக முகத்தை வைத்து சாரி ஆன்ட்டி என்றான் இருவரிடமும்.

முத்தம் கொடுத்தீங்களா? அர்ஜூன் எழுந்து நின்றான். அவன் சொல்லியதை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்த தாரிகா பயங்கரமாக சிரித்தாள்.

எதுக்குடி சிரிக்கிற? கமலி கோபமானார்.

சிரித்துக் கொண்டே, அவள் வாயை அடைக்க சரியான வழி தான். என்ன சார் அவளிடம் நல்லா வாங்குனீங்களா? ஒருவாறு அவள் சொல்ல.. இல்லை..இல்லை..என்று கௌதம் பதறினான்.

அடிய சொன்னேன் சார் என்று அவள் மீண்டும் சிரித்தாள்.

இதுக்கா கோபமா இருந்தா? அர்ஜூன் கேட்க, ஆக்சுவலா..அவள் என்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டாள். நான் முடியாதுன்னு சொன்னேன். அப்புறம் தான் சக்தி வந்து வாக்குவாதத்தில் தான் முத்தம் கொடுத்தேன்.

கல்யாணமா? அவளா கேட்டா? கமலி கேட்க, ஆம் என்று தலையசைத்தான்.

நல்லா கொடுத்தீங்க? வேற ஏதாவது சொன்னீங்களா? அர்ஜூன் கேட்க,

வேறையா? என்று சிந்தித்த கௌதம்..ஆமா, எனக்கு கல்யாணத்துல விருப்பமில்லை. தேஜூவால் ஏமாந்தது போல் யாரிடமும் ஏமாற வேண்டாம். அம்மாவை தவிர யாரையும் நம்ப மாட்டேன்னு சொன்னேன்.

யார் அந்த தேஜூ? தாரிகா கேட்டாள். அவன் மௌனமாக அமர்ந்தான். அவன் போன் அழைக்க, அதை பார்த்து விட்டு அர்ஜூனை பார்த்தான்.

சொல்லுங்கம்மா..என்று போனை எடுத்தான். ஒரு மாசம் தான்ம்மா. வந்துருவேன் என்றான்.

அம்மா குரல் தழுதழுக்க, என்னாச்சும்மா? என்று கௌதம் எழுந்தான்.

அம்மாவா? அச்சோ..கௌதம். அம்மா பாவம். இன்னும் சாப்பிட கூட இல்லை. நீ எப்ப வர்ற? ச்சே..நீ தேவையில்லை. தேவ்…தேவ்வை வர சொல்லு..

தேஜூ..நீ எப்படி? பதறினான் கௌதம்.

என்ன டியர், இப்படி பதருற? என்னை என்னன்னு நினைச்சீங்கடா? அந்த சுவாதி பக்கம் கூட தேவ் போக கூடாது. எனக்கு போலீஸ்ல ஆட்கள் இருக்காங்கடா. ஈசியா என்னை உள்ள வைக்க சொத்தன்னு நினைச்சியா?

என்னோட அம்மாவ எதுக்கு பிடிச்சு வச்சிருக்க? கண்கலங்க கேட்டான்.

அம்மாவுக்கு என்னை பற்றி நீ சொல்லலை போல.

தேவ் விசயத்தில் என் அம்மாவை எதுக்கு இழுக்குற?சத்தமிட்டான்.

தேவ் அம்மாவை கடத்தினாலும் அவன் சுவாதியை விட்டு வருவானான்னு சந்தேகம். அதுவே நீயா இருந்தா? அம்மா மேல உயிரையே வச்சிருக்க. இதுக்கு நீயும் உன் அம்மாவும் தான் சரி.

வேண்டாம் தேஜூ. ரொம்ப தப்பு பண்ற? என்னோட அம்மாவுக்கு ஏதாவது ஆனால் உன்னை கொல்லாமல் விட மாட்டேன்.

ம்ம்..இன்னும் அதிகமாக உன்னிடம் எதிர்பார்த்தேன் என்றாள்.

தேஜூ..விட்டுரு என்று கத்தினான்.

கத்துறத விட்டுட்டு அவனை போன் செய்ய சொல்லு என்று போனை வைத்தாள்.

இவளை? என்று கண்ணீருடன் அமர்ந்தான்.

என்னாச்சு சார்? அர்ஜூன் கேட்டான்.

கண்ணை துடைத்த கௌதம்..தேவ்விற்கு போன் செய்து விசயத்தை சொல்ல..எல்லாரும் அவனை பார்த்தனர். அர்ஜூன் போனை வாங்கி சார்..நீங்க எங்கேயும் போக வேண்டாம். மாமாவுக்கு போன் செய்து போலீஸை போக சொல்லலாம்.

போலீஸா? அவளுக்கு அவர்களுடன் பழக்கம் இருக்குன்னு சொன்னா கௌதம் சொல்ல..நானே போகிறேன் என்று தேவ் சொல்ல..

நோ டா. அவள்..என்று அனைவரையும் பார்த்த கௌதம் வேண்டாம். அவள் பக்கம் போகாத. நான் வாரேன் என்றான்.

நீங்க போக நான் விட மாட்டேன் அர்ஜூன் சொல்ல, என்னோட அம்மா அந்த சைக்கோ கிட்ட இருக்காங்க. அவ சொத்துக்காக அவளோட பெத்தவங்களையே கொன்னவ? இப்ப என்னோட அம்மாவை என்று அறையை விட்டு வெளியே வர, அர்ஜூன் அவனை தடுத்து, சார்..இங்கேயும் கொலைகாரன் ஆட்கள் இருக்காங்க. போகும் வழியில் உங்களுக்கு ஏதாவது ஆக வாய்ப்பிருக்கு.

அதுக்கு என்னோட அம்மாவ அந்த கேடு கெட்டவகிட்ட விட சொல்றியா? அவங்களுக்கு அவளை பத்தி முன்னே சொல்லி இருக்கலாம் என்று அழுதான்.

சார், ஒன்றும் ஆகாது என்ற அர்ஜூன், விசயத்தை கமிஷ்னரிடம் சொல்லி அவளை அரெஸ்ட் பண்ண போலீஸை வைத்து இப்பவே என்னன்னு பாருங்க என்றான்.

போலீஸ் வேண்டாம் அர்ஜூன். நான் கிளம்புகிறேன் என்று கௌதம் வெளியே வந்தான். அர்ஜூனும் அவன் பின் வர, மற்றவர்களும் வந்தனர்.

பாட்டி அவர்களை பார்த்து, எதுக்கு இப்படி ஓடுறானுக?

கௌதம் வேகமாக ஓட, அர்ஜூன் அவன் பின்னே ஓடி வந்தான். சக்தி அவர்களை பார்த்து விட்டு, இவனுக எதுக்கு ஓடுறானுக? பார்த்தான்.

மாப்பிள்ள எங்க ஓடுறீங்க? அர்ஜூனிடம் ஒருவர் கேட்க, அவரை பிடிங்க என்றான் அர்ஜூன்.

திருடனா மாப்பிள்ள? என்று அவர் கேட்க, இல்ல சொந்தக்காரர் தான். அவருக்கு ஆபத்து புரியாமல் ஓடுகிறார். சக்தியும் அவர்கள் பின் ஓடி வந்தான்.

ஏலேய்..அந்த பையனை பிடிங்கடா? என்று அவர் சத்தமிட, கௌதமை சுற்றி வளைத்தனர். அர்ஜூன் மூச்சிறைத்துக் கொண்டு கௌதமிடம் வந்தான்.

டேய்..என்னை விடுங்க. நான் என் அம்மாவை பார்க்கணும்? கத்தினான்.

ஏய்..என்னாச்சு? சக்தி அவனிடம் வந்தான்.

அவனை முறைத்த கௌதமிடம் அர்ஜூன் வந்தான்.

ஏன் அர்ஜூன்? விட சொல்லு. ப்ளீஸ். அவ ஏதாவது பைத்தியம் மாதிரி செஞ்சுடாம? எனக்கு அம்மாவை விட்டால் யாருமில்லை. விடுங்க கத்தினான். கேரியும் அங்கு வந்தான்.

சார், பொறுமையா இருங்க. அம்மாவுக்கு ஏதுமாகாது. மாமா பார்த்துப்பார். அர்ஜூனுக்கு தேவ் அழைத்தான். நான் கிளம்பிட்டேன் அர்ஜூன்.

பிடித்திருந்தவர்களை தள்ளிய கௌதம் போனை வாங்கி, நீ போகாத? அவளால் தான் சுவாதி உன்னை தப்பா நினைச்சுக்கிட்டு இருக்கா. திரும்பவும் பிரச்சனையை கிளப்ப தான் அந்த தேஜூ இப்படி பண்றா.

இல்லடா. நான் கிளம்பிட்டேன். அம்மாவை ஏதும் செய்து விட்டான்னா. நான் அவளிடம் பேசினேன். அவள் என்னை வரச் சொன்னாள்.

ஏய்..நீ சுவாதி, சீனு கூட இருடா என்று கௌதம் சொல்ல, அவங்களை பார்த்துக்க ஆளை விட்டுட்டு தான் போறேன்.

தேவ்,வேண்டாம்டா..அவள் நம் மீது கோபத்துல இருக்கா. என்ன வேண்டுமானாலும் செய்வா?

எல்லாமே என்னால தான. என்னோட முட்டாள் தனத்தால் நீ அம்மாவை இழக்க வேண்டாம் கௌதம்.. தேவ் சொல்லிக் கொண்டே அழுதான்.

தேவ்..வேண்டாம்டா..

நான் வந்துட்டேன்.

நோ..டா..போகாத என்றான்.

நான் போனா தான் அம்மாவை விடுவா? அவ வச்சிருந்த வீடியோ இப்ப இல்லையாம். அதுக்கு..என்று நிறுத்தினான்.

அதுக்கு? என்று கௌதம் சத்தமிட்டான்.

அவளுடன் சேர்ந்து வீடியோ எடுத்தால் அம்மாவை விடுவேன்னு சொன்னா..

மறுபடியும் அவளிடம் மாட்டிக்காதேடா கௌதம் சொல்ல, சாரிடா என்று தேவ் உள்ளே சென்றான்.

அர்ஜூன் கையை கட்டி கௌதமை முறைத்துக் கொண்டு இருவருமே பேசி முடிச்சிட்டீங்களா? சார் உங்க அம்மா பாதுகாப்பா இருப்பாங்க என்றான் அர்ஜூன். கௌதம் புரியாமல் பார்க்க, ஹே…தேவ் உன்னை சும்மா விட மாட்டேன்டா என்று தேஜூ கத்தும் சத்தமும்..அவனை பெண் போலீஸ் அடித்து திட்டுவது போலும் சத்தம் கேட்டது.

தேவ்..அம்மா நல்லா இருக்காங்களா? கௌதம் கேட்டான்.

கௌதம் அம்மா நல்லா இருக்காங்க தேவ் சொல்லி விட்டு, அவன் அம்மாவிடம் போனை கொடுத்தான். கௌதம்..என்று அவன் அம்மா அழுதார்.

கௌதம் தேஜூ..எதுக்குடா இப்படி? கேட்டார்.

அம்மா..உங்களுக்கு ஒன்றுமில்லையே?

இல்லப்பா. இங்க போலீஸ் வந்துருக்காங்க. அவள இழுத்துட்டு போறாங்க..

அம்மா, தேவ்விடம் போனை கொடுங்கள் என்ற கௌதம், அம்மாவை உன்னோட வீட்ல வச்சி பார்த்துக்கிறியா?

நான் முன்பே அழைத்து சென்றிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது தேவ் வருந்த, சுவாதிகிட்ட எதையும் சொன்னீயா?

இல்லடா. வேலை இருக்குன்னு தான் வெளிய வந்தேன். ஆனால் அவளுக்கு ஏற்கனவே தேஜூ பற்றி தெரியும் போல சீனு சொன்னான் என்று தேவ் கூறினான்.

காரு தான் சொல்லி இருப்பா என்று கௌதம் சொல்ல..நான் அப்புறம் பேசுறேன்டா என்று தேவ் போனை வைத்தான்.

அர்ஜூன்..எப்படி அதற்குள்?

மாமாவிடம் சொன்னவுடனே..உங்க போனை டிராக் பண்ணிட்டோம். அதான் சொல்றேன்ல. எம்மாடி என்னமா ஓடுறீங்க சார்? கேலி செய்தான்.

அமைதியா எப்படி தான் இருக்க முடியும்? அம்மாவை கடத்தி இருக்கா..

அர்ஜூன் அவளால தனியா ஆள் கடத்தல் எப்படி முடிந்தது? போலீஸ் அவளோட ஆளுன்னு வேற சொன்னாலே..கௌதம் கேட்க, தெரியலையே சார் என்ற அர்ஜூன்..வீட்டுக்கு போகலாமா? கேட்டான்.

மாப்பிள்ள..இந்த பையன் சொந்தக்கார பையன்னு சொன்ன? என்ன முறை வேணும் என்று ஒருவர் கேட்க, கௌதம் அர்ஜூனை பார்த்தான்.

மாமா..அது வந்து..இவர் அண்ணா முறை தான் என்று கௌதம் தோளில் கை போட்டான். கௌதம் அர்ஜூன் கையை தட்டி விட்டு..நான் யாருக்கும் சொந்தமெல்லாம் இல்லை என்றான்.

என்னப்பா? இப்படி சொல்லிட்ட?

நாங்க முறையே இல்லாம மாப்பிள்ள மருமகன்னு பேசிப்போம். ஆனால் மாப்பிள்ள முறை இருக்குன்னா காரணம் இருக்குமே? அவர் கேட்டார். அவன் கோபமாக முன் செல்ல, அர்ஜூன் புன்னகையுடன் கௌதமை பார்த்து விட்டு..மாமா பிரச்சனை முடிச்சது. எல்லாரும் வேலைய கவனிங்க. “தேங்க்ஸ் மாமா” இதே போல் சத்தம் கொடுத்தால் வந்துருங்க என்றான்.

கண்டிப்பா மாப்பிள்ள என்றார் அவர். அர்ஜூன் சக்தியை பார்த்துக் கொண்டே கௌதம் பின்னே ஓடினான். வீட்டிற்கு வந்த கௌதம் சோபாவிலே படுத்து விட,.அம்மாவுக்கு ஒன்றுமில்லையே? பாட்டி அவனிடம் வந்தார்.

நல்லா இருக்காங்க. நான் பேசிட்டேன் என்றான். பாட்டி இங்க உட்காருங்க என்று அர்ஜூன் அவரை அமர வைத்து மடியில் படுத்துக் கொண்டான்.

ஏய்யா..நீ இல்லாம வீடே வெறிச்சோடி இருந்தது. நீ வந்த புரவு தான் எல்லாமே பழைய படி இருக்கு அர்ஜூனிடம் அவர் சொல்ல..பாட்டி, நீ மாமா மேல கோபமா இருக்கியா? கேட்டான்.

இல்லடா. அவனுக்காக காத்துக்கிட்டு தான் இருக்கேன். அவன் போன பிறவு தான் அவன் மேலே தப்பில்லாம அவனுக்கு தண்டனையை கொடுத்துட்டோம்ன்னு உங்க தாத்தா வருத்தப்பட்டு அவனை நினைச்சே செத்து போயிட்டார். அப்புறம் தான் வாழ்க்கையே கஷ்டமா போச்சு. அப்புறம் நீ வந்த பின் நமக்கு சொத்து எல்லாம் வந்தது. உன் அம்மா இல்லைன்னாலும் உன்னை பார்த்தாலே என் கஷ்டம் முழுவதும் மறந்து போச்சு என்று அர்ஜூன் நெற்றியில் முத்தமிட்டார்.

பாட்டி..காருவிடம் பேச மாட்டேங்கிற?

நான் பேச போனாலே புள்ள விலகி போயிடுறா. நான் என்ன செய்றது?

பாட்டி, நீ தான் பேசணும். அவள் யாருமில்லாமல் ஹாஸ்டல்ல பத்து வயசுல இருந்து இருக்காலாம். எனக்கே இப்ப தான் தெரியுது. முதல்லே தெரிஞ்சிருந்தா அவளை அம்மாவிடம்..என்று அர்ஜூன் நிறுத்தி அமைதியானான்.

பாட்டி அவனிடம், அம்மா மேல கோபம் போகலையாய்யா?

கோபம் போயிருச்சு. ஆனால்..நான் தேவையில்லாம அவங்ககிட்ட கோபப்பட்டுட்டேன். அவங்க நிலைமையில இருந்து யோசிக்காம விட்டுட்டேன்.

அப்படி என்ன நிலை வேண்டி இருக்கு? பிள்ளைய விட.. எனக்கு கோபம் போகலை. உனக்காக தான் அமைதியா இருக்கேன் அஜூ..என்றார்.

இல்ல பாட்டி என்று அர்ஜூன் சொல்ல வாயெடுக்க, கௌதம் அவனிடம்..தேஜூவை பற்றி பேச ஆரம்பித்தான். அவளை பற்றி கூறி விட்டு, போலீஸ் ஆட்கள் அவளுக்கு பழக்கமிருக்க வாய்ப்பேயில்லை என்றான். அர்ஜூனும் அவன் பாட்டியும் அவனை பார்க்க, அவன் போன் ஒலித்தது. எடுத்த கௌதம் அன்நோன் நம்பரா? என்று அர்ஜூனை பார்த்தான். அர்ஜூன் எழுந்து அமர்ந்தான்.

என்னப்பா கௌதம்? உன்னோட அம்மா பாதுகாப்பா இருக்காங்கன்னு நிம்மதியா இருக்க போல.

யாரு நீங்க? கௌதம் கேட்டான்.

என்னோட மாப்பிள்ள பக்கத்துல இருக்காரா? அவர் உங்களிடம் என்னை பற்றி சொல்லலையா? சொல்லைன்னாலும் அவர் உங்களை தடுக்கலைன்னா தெரிஞ்சிருக்கும்.

என்ன பேசுறீங்க? மாப்பிள்ளையா? யாரு?

அர்ஜூன்..மாப்பிள்ளைய தான் சொல்றேன். அவர் மட்டும் வந்து தடுக்கலைன்னா அம்மாவை காப்பாத்துறேன்னு உங்க உயிரே போயிருக்கும். ச்சே..என்னோட மாப்பிள்ள எல்லாருக்கும் என்னம்மா பாதுகாப்பு தாரார். தேஜூவை பிடிச்சிட்டா..என்னிடம் ஆளா இல்லை. கொடூர சிரிப்புடன்..உங்க அம்மா வயசு நாற்பது இருக்குமா? சின்ன வயசுலே கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களோ? லவ் மேரேஜா?

யோவ்..நீ யாருய்யா? என் அம்மா என்ன செஞ்சா உனக்கென்ன?

உனக்கு அம்மான்னா பிடிக்குமோ? அர்ஜூன் போனை வாங்கி, யாருன்னு கேட்டான்.

மாப்பிள்ள நான் தான் என்றான் நிவாஸ் அப்பா குணசீலன். கொலைகாரன், காமுகன்..

நான் தான் ஸ்ரீயுடன் வாரேன்னு சொன்னேன்ல.

இல்லையே..என் மகளை ஒப்படைப்பதாக தானே சொன்னீங்க மாப்பிள்ள..

கௌதம் போனை பிடுங்கி ஸ்பீக்கரில் போட்டான். சரி.. ஸ்ரீயை ஒப்படைக்கிறேன். இப்ப எதுக்கு கௌதம் சாருக்கு கால் பண்ணீங்க?

அதுவா? உன்னோட ப்ரெண்டு அந்த பையன்..அவன் பேரென்ன..நந்து அவனோட அம்மாவை போல இந்த டாக்டர் பையன் அம்மா நல்லா இருக்கா.

யாரை இன்று எனக்கு இரையாக்கலாம்ன்னு யோசிச்சா..எனக்கு இருவரையும் விட மனசே வரலை. யாருன்னு சொல்லு மாப்பிள்ள?

என்னடா சொன்ன? கௌதம் கோபமாக எழுந்தான்.

எடுபட்ட பயலே..என்ன பேச்சுடா பேசுற? பாட்டி சத்தமிட…அத்தையா? நல்லா இருக்கீங்களா அத்தை. கமலி இருக்காளா? அவள வரச் சொல்றீங்களா? அவர் கேட்க, என்னோட பிள்ளையவே வரச் சொல்றீயா? கத்தினார் பாட்டி.

கௌதம் வாயை பொத்திய அர்ஜூன்..இங்க பாரு. இதுக்கு மேல பேசுன? நீ எங்க இருப்பன்னு எனக்கு தெரியும். நேரா வந்து போட்டு தள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன் சத்தமிட்டான்.

சரி மாப்பிள்ள..கமலிய விடுங்க. டாக்டர் பையா..உங்க அம்மா சரியா இருப்பாங்கன்னு நினைக்கிறேன் அவன் சொல்ல..அர்ஜூன் கௌதம் வாயிலிருந்து கையை எடுத்தான். கௌதம் கொதித்து போனான்.

யாருடா நீ? என்னோட அம்மா மேல கைய வச்ச உன்னோட உடம்புல உயிர் தங்காது கௌதம் கத்தினான். அனைவரும் அவனது சத்தத்தில் கீழே வந்தனர். காருண்யா அப்பொழுது தான் வெளியே வந்தார்.

அர்ஜூன்..யாருடா இவன்? இஷ்டத்துக்கு பேசுறான்? நீயும் பேசிக்கிட்டு இருக்க. சார்..நான் சொன்ன கொலைகாரன் என்றான்.

பாட்டி அர்ஜூனிடம் வந்து, அவன் என்ன சொன்னான்? உன்னோட அம்மாவை எதுக்கு கூப்பிடுறான்? கேட்க, அர்ஜூன் அமைதியாக நின்றான்.

அத்தை, கமலி உங்களிடம் சொல்லலையா? அவளோட..என்று அவன் பேசுவதற்குள் ஓடி வந்த ஸ்ரீ போனை எடுத்து, பேச்சை நிறுத்து என்றாள். கமலி அதிர்ந்து போனை பார்த்துக் கொண்டிருந்தார்.

உனக்கென்ன நான் தான வேண்டும். நான் இப்பவே வாரேன் என்றாள்.

அம்மாடி..இப்ப வீட்டிலிருந்து ஒருகால் எடுத்து வச்ச உனக்கு பழக்கமான எல்லாரும் செத்துருவாங்க. ஸ்ரீ அர்ஜூனை பார்க்க..

உன்னுடைய உயிர்த்தோழி. நித்தி என்ன செய்றான்னு சொல்லவா? அவள் வீட்டுக்கு பக்கத்து வீட்டு மாரி அக்காவுடன் பேசிக் கொண்டிருக்கிறாள். பாரேன்ம்மா..ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போல் அந்த அமைச்சர் பொண்ணும் இருக்கா என்றான். வேற..என்றவன் மாசமா இருந்து கிணத்துல குதிச்சாலே அதான் அந்த சக்தி பய பொண்டாட்டியோட ப்ரெண்ட அவனோட ப்ரெண்டு பயலுக..பின்னாடியே போய்க்கிட்டு இருக்காணுக..

அச்சோ..மாப்பிள்ள..உங்க மாமா பாரேன் பொண்டாட்டி கூட விளையாடிகிட்டு இருக்கான். மரத்துக்கு பின்னாடி நிக்கிறது கூட தெரியாம உன்னோட காயத்ரி அக்கா மரத்தை தாண்டி போகுது. நானும் இந்த விளையாட்டில் கலந்து கொண்டால் என்ன? அவன் கேட்க..

ச்சே..உனக்கு பொண்ணுங்கள மதிக்கவே தெரியாதா? தப்பாவே பேசுற? தாரிகா சத்தமிட்டாள். கேரியும் வந்து..கோழையாட்டம் கண்காணிக்கிற..என்று தெனாவட்டாக பேசினான்.

அண்ணா..என்று அவனிடம் அர்ஜூன் வந்து அமைதியா இருங்க.

அமைதியா இருந்த பொண்ணாம்மா நீ? உன்னோட அக்கா செத்தும் இப்ப பேசுற? பார்த்துக்கோ இல்லை உன்னோட அம்மாவுக்கு நீ இல்லாம போயிருவ?

மாப்பிள்ள..உங்க தைரியத்தை உங்க தங்கச்சிக்கும் கொடுத்துட்டீங்களோ? கேட்டான் அர்ஜூனிடம்.

ஸ்ரீ போனை வைக்க நினைக்க,..ஸ்ரீ போனை கீழே வை அவனாக வைக்கும் வர போட்டுக் கொண்டே இருப்பான் அர்ஜூன் கூறினான்.

என்னம்மா நீ? அதுக்குள்ள வைக்கப் போறீயா? மாப்பிள்ள யாழினிய செத்தது. விபத்தல்லன்னு உங்க அம்மாவிடம் சொல்லலையா? என்னோட பிளான் படி ஆபிஸ்ல வச்சே முடிக்க பார்த்தோம். ஆனா இந்த சந்துரூ கூடவே இருந்தான். அவனால தான் அவளை கொல்ல ரொம்ப நாளாகிடுச்சு. எப்படியோ முடிச்சிட்டேன்.

அர்ஜூன்..அவன் என்ன சொல்றான்? என்று தாரிகா அர்ஜூன் சட்டையை பிடித்து கத்தி அழுதாள். அவள் அம்மாவும் உடைந்து அழுதார். எல்லாரும் அதிர்ந்து அர்ஜூனை பார்த்தனர். பாட்டி அவனிடம் வந்து, என் பேத்திய இவன் எதுக்கு கொல்லணும். சொல்லுடா? என்று அவனை அடிக்க.. கௌதம் அவரை பிடித்துக் கொண்டான்.

இங்க என்ன நடக்குது? நிவாஸ் கீழே வந்தான். அவன் குரல் கேட்டதும் போன் அணைக்கப்பட்டது. அனைவரும் போனையும் அவனையும் மாறி மாறி பார்த்தனர்.

தாரிகா அம்மாவிடம் சென்ற அர்ஜூன், என்னை மன்னிச்சிருங்கம்மா.. எனக்கு முன்பே தெரியும்? அக்காவை கொன்னுருக்காங்க. ஆனால் அம்மா..என்று சொல்ல முடியாமல் அழுதான். ஆதேஷ் காரை பார்த்திருக்கான். அது கயலோட பையன் கார். ஆனால் அவன் செய்யலை. நான் கயல் மீது சந்தேகத்தில் இருந்தேன். ஆனால் அவள் இல்லை என்று கண்டுபிடித்தேன். இந்த கொலைகாரன் தான் ஆளை விட்டு அக்காவை கொன்றான். ஸ்ரீ, அகில் அம்மா, அப்பாவிடம் எல்லாத்தையும் பறிக்க தான் அனைத்தையும் செய்தான். பொம்பள பொறுக்கி வேற..

ஸ்ரீ..கயல் வீட்டில் ஒருவனை கொன்றதை பார்த்தேல்ல. அது அக்காவுக்காக உதவி செய்தவன் தான். அங்க இருந்தது உன்னோட ஆன்ட்டி இல்லை. விக் வச்சிருக்காங்க. ஜிதின் சொன்னது போல் அது கயல் இல்லை தான் என்றான்.

யாராவது சொல்லுங்க? என்ன நடக்குது? நிவாஸ் மீண்டும் சத்தமிட்டான். தாரிகா கோபமாக நிவாஸ் அருகே வர அர்ஜூன் இடை புகுந்து…தாரி வேண்டாம் என்று கத்தினான். யாருக்கும் ஏதும் புரியவில்லை. அவள் அழுது கொண்டே படியில் ஏற, நின்று கொண்டிருந்த காருண்யா தாரிகா கையை பிடித்து நிறுத்தினாள். காருண்யாவை தள்ளி விட்டு அவள் செல்ல, படியில் நின்று கொண்டிருந்த காருண்யாவை பிடித்தான் நிவாஸ்.

அர்ஜூன்..தாரி, என் மேல எதுக்கு கோபப்படுறா? நிவாஸ் கேட்க, கொலைகாரன் போன் செய்தான். யாழினி அக்காவை கொன்றது அவன் தானாம் ஸ்ரீ சொல்ல..

யாரு தான் டா அவன்? என்று நிவாஸ் அர்ஜூனிடம் கேட்க, அவன் ஸ்ரீயை பார்த்தான்.

காருண்யாவும் கீழே இறங்கி வந்தாள்.

ஏன்டி, நீ வந்ததுமில்லாமல் கௌதம் சாரையும் மாட்டி விட்டுட்ட? அர்ஜூன் கோபப்பட்டான்.

நடக்கிற எல்லாத்தையும் சொல்ல முடியுமா? கௌதம் சத்தமிட்டான்.

சாரி சார். உங்க அம்மா மாட்டுவாங்கன்னு நினைக்கலை. ஒரு நிமிஷம் சார்..என்று அர்ஜூன் கௌதம் கையை பிடித்து அவனறைக்கு அழைத்து சென்றான். நிவாஸ், ஸ்ரீ, காருண்யா, கேரி, ஜான் அனைவரும் அவன் பின் சென்றனர். தாரிகா அம்மாவை அணைத்து சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் கமலியை பார்த்து, பாட்டி..உன்னை எப்படி அந்த கொலகாரபயலுக்கு தெரியும்? என்னை அத்தைன்னு சொல்றான்? சத்தமிட்டார்.

அம்மா..என்று அழுது கொண்டே எழுந்தார். தாரிகா அம்மாவும் எழுந்து அவரை பார்த்தார். என்னை..என்னை.. என்று அவர் கதறி அழ இருவருக்கும் புரிந்தது.

ஏன்டி, முதல்லவே சொல்லி இருக்கலாமே? அஜூக்கு தெரியுமா? கேட்டார் பாட்டி. ஊருக்கு வரும் முன் தான் தெரியும் என்றார் கமலி.

அர்ஜூன் அறையில் சென்று லேப்பை ஆன் செய்து அவங்க ஊரில் சின்ன இடுக்கு கூட விடாமல் மேப் போட்டு வைத்திருந்தான். அங்கே வந்தனர் அவனுடைய நண்பர்கள் அகில், அபி, கவின்.

அர்ஜூன், என்னடா இது? எல்லாரும் அழுதுகிட்டு இருக்காங்க? யார் முகமும் சரியில்லையே? அபி கேட்க, கீழே சத்தம் கேட்டு அனைவரும் எட்டி பார்த்தனர்.

ஆதேஷிடம் தாரிகா கத்திக் கொண்டிருந்தாள். அவள் அக்கா விசயம் அவனுக்கு தெரியும் என்று அவனை அடித்துக் கொண்டிருக்க, கமலி அவளை தடுத்தார்.

ஏன்டா, உனக்கு சொல்லவே தோணலையா? அவள் அம்மாவும் அவனிடம் வந்து, மறைச்சு என்ன தான் ஆகப் போகுது? அவரும் சத்தமிட, அவன் கோபமாக..உங்கள கஷ்டப்படுத்த வேண்டாம்ன்னு தான் ஆன்ட்டி சொல்லலை. நான் சொல்லி இருந்தால் உங்களால கவனமா இருந்திருக்க முடியாது என்று மேலே நின்று கொண்டிருந்தவர்களை பார்த்து விட்டு, இதுக்கு தான் கூப்பிட்டாயா? இல்லை வேரேதும் இருக்கா என்று தாரிகாவை பார்த்து விட்டு அர்ஜூனை பார்த்தான். பின் கௌதம் காருண்யாவை பார்த்தான்.

அவரு ஆருத்ரா ஹாஸ்பிட்டல்ல இருந்த டாக்டர் தான? ஆதேஷ் கேட்க, தாரிகா எல்லாரையும் ஒன்றாக பார்த்து முறைத்தாள். கவினும் ஸ்ரீயும் தாரிகாவிடம் செல்ல இருந்தவர்களை நிறுத்தினான் அர்ஜூன்.

அவகிட்ட தனியா மாட்டிறாதீங்க. அவ இருக்கிற கோபத்துல என்று வாயை மறைத்துக் கொண்டு அர்ஜூன் பேசினான். அர்ஜூன் அவள் மட்டும் முறைக்கலை. ஆதுவையும் பார் என்றான் அகில்.

நான் முதல்ல உள்ள போறேன். எல்லாரும் வந்துருங்க என்ற அர்ஜூன்..ஓர் அடி எடுத்து வைக்க, இருவரும் அண்ணா..என்று கோபமுடன் அழைத்தனர்.

ஆது? என்னாச்சு? அர்ஜூன் கேசுவலாக கேட்க, நீங்க எல்லாரும் சேர்ந்து என்னை விட்டு என்ன செய்றீங்க? ஆதேஷ் கேட்டான்.

இன்னும் எதையெல்லாம் மறைக்கலாம்ன்னு திட்டம் போடுறானுக ஆது என்றாள் தாரிகா. ஸ்ரீ..நீயும் சேர்ந்துட்டேல..

கேளு தாரி. அவளுக்கும் தெரியும் என்று ஆதேஷ் கூறி விட, தாரி..என்று ஸ்ரீ அவளிடம் வந்தாள்.

இவள யாரு போகச் சொன்னா. நான் சொன்னால் கேட்கவே மாட்டேல.. அனுபவி ஸ்ரீ என்று அர்ஜூன் முணுமுணுத்தான். எல்லாரும் அவனை பார்த்தனர்.

ஹலோ..அங்க நோக்குங்க..என்றான் அர்ஜூன். ஸ்ரீயை முறைத்த தாரிகா, கையில் கிடைத்ததை ஸ்ரீ மீது தூக்கி எறிந்தாள். அர்ஜூன் கவினிடம் கண்ணை காட்ட, அவனும் அவளிடம் சென்றான்.

தாரி, என்ன பண்ற? அஞ்சனா கோபமாக கேட்க, கவின் அவனுடைய நடிப்பை ஆரம்பித்தான். ஸ்ரீ முன் வந்து கவின் நிற்க..சீனியர் உங்களுக்கும் தெரியும் தானே? அவள் கேட்க, ஆம் என்று தலையசைத்த கவின் மீதும் தூக்கி எறிந்தாள்.

ஆவென கத்திக் கொண்டே நெற்றியில் கை வைத்த கவின், அடிப்பாவி.. அதுக்காக என்னை கொல்லப்பாக்குறியே? உனக்கும் ஆன்ட்டிக்கும் தெரிஞ்சா கஷ்டப்படுவீங்கன்னு தான நாங்க சொல்லலை. அதுக்காக..என்னை கொல்லவே பாக்குறியே? இது நியாயமா என்று சோபாவில் படுத்தான்.

சீனியர் அடி பலமா பட்டுருச்சா? தாரிகா அவனருகே வந்தாள். ஸ்ரீ இருவரையும் பார்த்துக் கொண்டே ஆதேஷிடம் அந்த கொலைகாரன் கால் பண்ணான். அவர் அந்த டாக்டர் சார் அம்மாவையும் அவர் காதலித்த பொண்ணுன்னு நினைக்கிறேன். அவள வைத்து கடத்தி இப்ப தான் பிரச்சனையே முடிஞ்சது. அர்ஜூன் தான் கௌதம் சாரை கூப்பிட்டான். என்னவென்று பார்க்க சென்றோம் அவ்வளவு தான் என்று ஸ்ரீ விளக்கினாள். ஆதேஷூம் மேலே செல்ல தாரிகா அவனை பார்த்து விட்டு கவினை பார்த்தாள்.

என்னோட ஜில்லுல்ல கோபப்படக்கூடாது என்று மெதுவாக எழுந்தான்.

நீங்களும் என்னை ஏமாத்த பாக்குறீங்களா? தாரிகா மேலும் அழுதாள்.

இல்லம்மா. யாருமே உங்களை ஏமாத்தலை. தெரிஞ்சா கஷ்டப்படுவீங்கன்னு தான் சொல்லலை. புரிஞ்சுக்கோம்மா. ஏற்கனவே நிறைய பிரச்சனை இருக்கு தாரிகாவை கவின் அணைத்து சமாதானப்படுத்த..என்னிடம் எதுக்கு தாரி கோபப்படுற? கேட்டுக் கொண்டே நிவாஸ் அவனிடம் வர, அர்ஜூன் கீழே செல்ல இருந்தவனை ஸ்ரீ தடுத்து மற்றவர்களை காட்டினாள்.

அர்ஜூன் முகத்தில் பயத்துடன் நிவாஸிடம் செல்ல இருந்திருப்பான். தாரிகா கொலைகாரனை பற்றி சொன்னால் நிவாஸை அனைவரும் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பாங்க. அவனை கஷ்டப்படுத்துவாங்க. அவனும் உடைந்து விடுவான் என்ற எண்ணம் மேலோங்கியது. அர்ஜூன் ஸ்ரீயை பார்க்க, எல்லாரும் அர்ஜூன் ஸ்ரீயை பார்த்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

Advertisement