Advertisement

அத்தியாயம் 109

மறையுடன் அர்ஜூனும் அவன் வீட்டிற்கு வந்தனர். காயத்ரி உள்ளே அழைத்து அவனை சாப்பிட சொன்னாள்.

அக்கா, என்று தயங்கி அவன் கண்கள் அவர்கள் வீடெங்கும் அலைபாய்ந்தது. ஸ்ரீயை அவன் தேடினான். மறை புன்னகையுடன் எதுக்கு அடிச்சிட்டு, இப்ப தேடுற?

ஸ்ரீயை தேடுறியா?

அவள் வந்து சிறிது நேரத்திலே கிளம்பி விட்டாள் காயத்ரி கூற, போனை எடுத்து பெரியத்தையுடம் ஸ்ரீயை பற்றி வினவினான்.

என்னடா செஞ்சீங்க? சிங்கத்திடம் மாட்டி அது உங்களை ஏதும் செய்யாமல் விட்டு விட்டதாம். ஊரெங்கும் உங்களை பற்றிய பேச்சு தான். உங்க யாருக்கும் ஏதும் ஆகலையே? அவர் கேட்டார்.

எங்களுக்கு ஏதுமில்லை. ஸ்ரீ இருக்காளா?

உன்னுடன் தான இருப்பா. நீ என்னிடம் கேட்குற? போனை பிடுங்கிய காயத்ரி அத்தை, அர்ஜூன் ஸ்ரீயை அடிச்சிட்டான். அதான் அவள் கோபமா இருக்கா என்று அவள் சொல்ல.

அக்கா, ரொம்ப கோபமா இருக்காளா? அர்ஜூன் பாவமாக கேட்டான்.

எல்லார் முன்னாடியும் அடிச்சிட்ட? அப்புறம் கோபப்படாமல் என்ன செய்வா? என்று காயத்ரி கேட்க, போனை அவன் பிடுங்கி, அவ வீட்டுக்கு வந்தா கால் பண்ணுங்க என்று போனை வைத்து விட்டு வேகமாக வெளியே சென்றான்.

ஏன்டா? பிள்ளைய அடிச்ச? அந்த பாட்டி வெளியே வந்து கேட்டார்.

பாட்டி உள்ள இருக்காலா? என்று அவர்களை நோக்கி சென்றான்.

வந்தா..போயிட்டா என்றார் அவர்.

எங்க போயிருக்கா? உங்களுக்கு தெரியுமா?

நான் கேட்டேன். ஆனால் சொல்லாமல் சென்று விட்டாள். அர்ஜூன் அனைவரும் கால் செய்து பேசினான். என்னோட தாரியும் ஸ்ரீயும் தான் அனுவுடன் போனாங்க. நீ தாரிக்கு கால் பண்ணு என்றான் கவின்.

அர்ஜூன் தாரிகாவிற்கு போன் செய்ய, அவள் ஸ்ரீயை விட்டு தள்ளி வந்து இடத்தை சொல்ல அர்ஜூன் ஸ்ரீயை தேடி ஓடி வந்தான்.

காட்டுப்பகுதியில் இந்த அந்த காளி கோவிலில் தான் அனுவுடன் இருவரும் இருந்தனர். அர்ஜூன் அங்கு வந்து பார்த்த போது..கொடிகளை அகற்றி ஸ்ரீயும் அனுவும் கோவிலில் கருவறையில் சாமிக்கு மிக அருகில் இருந்தனர்.

தாரிகா அர்ஜூனை பார்த்து விட்டு அவனிடம் வர, அவன் அவளை கண்டுகொள்ளாமல் ஸ்ரீ அனுவிடம் ஓடினான்.

அர்ஜூன்..என்று அனு கீழிறங்கி அவனிடம் வந்தாள். ஆனால் அர்ஜூன் ஸ்ரீயிடம் சென்று அவளை அணைத்து, சாரி ஏஞ்சல் உன்னை கோபத்தில் அடிச்சிட்டேன் என்று அழுதான்.

அவனை நிமிர்த்திய ஸ்ரீ, இதுக்கெல்லாமா அழுற? எனக்கு உன் மேல கோபம் இல்லை. என் மீது தவறு இருக்கே. நானும் முதலில் யாரையாவது உதவிக்கு அழைத்திருக்கணும் என்றான்.

அர்ஜூன் ஸ்ரீ நெற்றியில் முத்தமிட, டேய்..சாமிக்கிட்ட நின்னு என்ன பண்ற? கடிந்தாள். அனு இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு அர்ஜூனை முறைத்தாள்.

அவன் தாடையை பிடித்து அனு பக்கம் திருப்பினாள் ஸ்ரீ. அர்ஜூன் அனுவை பார்த்து, செகண்டு ஏஞ்சல் என்று அவளை தூக்க வந்தான்.

போடா..என்று அனு ஓடினாள். தாரிகா அனுவை தூக்கி கொண்டு வாடா நம்மள அவன் கண்டுக்கவேயில்லை என்று ஓட அர்ஜூனும் அவர்களை விரட்டி விளையாடினர். ஸ்ரீ மூவரையும் மகிழ்வுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அர்ஜூன் இருவரையும் பிடித்து இழுந்து வந்து அமர்ந்தான். குட்டி ஏஞ்சல்..எங்க அப்பா சொல்லு என்று ஸ்ரீயை பார்த்துக் கொண்டே கேட்டான்.

அர்ஜூன்னு தான் சொல்வேன் என்று அனு ஸ்ரீயிடம் ஓடினாள்.

தாரிகா அர்ஜூனிடம், உனக்கு எப்படி இருக்கு அண்ணா? தாரிகா கேட்க, என்ன எப்படி இருக்கு? அர்ஜூன் கேட்டான்.

அனு அப்பான்னு கத்தினாலே.

ம்ம்…ரொம்ப சந்தோசமா இருந்தது. அந்த நிலையில் பிள்ளையை தூக்க முடியலை. அதான் வருத்தமா இருக்கு. தாரி இதை அனுவிடம் நான் எதிர்பார்க்கவில்லை. இப்ப நினைத்தால் கூட புல்லரிக்குது. இப்ப கூப்பிட சொன்னா கூப்பிட மாட்டேங்கிறா..என்று வருத்தமுடன் சொன்னான்.

அவளே கூப்பிடுவா. அவள் இப்ப தான உங்களிடம் வந்துருக்கா. அர்ஜூன்..நீ ஒரு விசயத்தை கவனிச்சியா? அனு அப்பான்னு கூப்பிட்டவுடன் நீ அப்படியே நின்னுட்ட. பயந்தாலும் ஸ்ரீ உன்னை தள்ளி விட்டு அவள் சிங்கத்தின் முன் உனக்காக நின்றாள். உனக்கு ஏதாவது தோன்றுதா?

அவள் என்னை காதலிக்கிறான்னு சொல்றியா? அர்ஜூன் கேட்டான்.

நான் சொல்லவில்லை. சும்மா கேட்டேன்.

அர்ஜூன் சிரித்து விட்டு, ஏன் தாரி..நான் அவளை நெருங்கினால் ஏதும் சொல்ல மாட்டேங்கிறா. எல்லார் முன்னும் உரிமையாக தோளில் கை போட்டால் சில நேரம் கோபப்பட்டாலும் பல நேரம் அமைதியாக தான் இருக்கிறாள். நாங்கள் ஒரே படுக்கையில் பல முறை தூங்கி இருக்கோம். அவளிடம் மிகவும் நெருக்கமாக கூட இருந்திருக்கேன். வேண்டாம் என்று அவள் சொல்வாளே தவிர அவள் கண்கள் நன்றாக காதலை காட்டியது.

அண்ணா..என்று அவள் அழைக்க, எனக்கு தெரியும். ஸ்ரீ என்னை தான் காதலிக்கிறாள். ஆனால் சொல்ல மாட்டேங்கிறா. ஏதோ காரணம் இருக்குமென தோன்றுகிறது. எப்பொழுதும் அவளை டீஸ் பண்ண தான் நெருங்குவேன். ஒரு முறை கோபத்தில் கூட..ஆனால் அவள் கண்ணீர் என்னை தடுத்தது. நான் கூட அவளுக்கு இப்பொழுது விருப்பமில்லை என்று தான் நினைத்தேன். ஆனால் காயத்ரிக்கா கல்யாணத்தன்று என்னால் கட்டுப்படுத்த முடியாமல் எல்லை மீறினேன். ஆனால் அவள் ரொம்ப அழுதாள். அவள் அந்த வீடியோவை இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.

டாக்டர் சொன்னது போல் பத்து வருடம் கூட ஆகலாம். அவர் கடைசியா ஒன்னு சொன்னார் தாரி. அவள் ரொம்ப நாள் இப்படியே இருக்க மாட்டாளாம். தற்கொலை முயற்சி கூட செய்வாள்ன்னு சொன்னாங்க என்றான் கண்ணீருடன்.

அண்ணா..என்ன? இதெல்லாம் எப்ப சொன்னாங்க? தாரிகா பதறினான். அவள் என் காதலில் லாக் ஆகணும். அவளே என்னிடம் சொல்லணும். இல்ல அனு கையில தான் இருக்கு. ஆனால் தாரி ஸ்ரீயை நான் விட்ற மாட்டேன். அவள் என்னை காதலிப்பது எனக்கு தெரியும்ன்னு காட்டிக்காத என்றான் அர்ஜூன்.

அண்ணா… நீ சொன்ன மாதிரி வேகமாவே ஸ்ரீயை உன்னிடம் காதலை கூற வைக்கிறேன் என்று மனதினுள் நினைத்தாள் தாரிகா. ஸ்ரீயும் அனுவும் அவர்களிடம் வந்தனர்.

ஸ்ரீ இங்க என்ன பண்ற?

அர்ஜூன்..இந்த கோவில் எதுக்கு பூட்டி இருக்கு? எனக்கு இதை பார்த்ததும் அகில் சீனியருடன் வந்த நினைவு இருக்கு என்றாள்.

எதுக்கு பூட்டி இருக்குன்னு தெரியாது? ஆனால் நீயும் அகிலும் தினமும் இந்த கோவிலுக்கு வந்த பின் தான் பள்ளிக்கே வருவீங்க என்றான்.

அர்ஜூன்..இதை சீர்ப்படுத்த முடியுமா? ஸ்ரீ கேட்டாள்.

எதுக்கு ஸ்ரீ?

என்ன கேள்விடா கேக்குற? சாமி இருக்கும் கோவில் இப்படியா இருப்பது? கேட்டாள்.

சுத்தம் செய்ய சொல்லலாம் என்று அர்ஜூன் எழுந்து கோவிலுக்குள் உள்ள மரத்தினருகே சென்று நால்வர் பெயரையும் எழுதினான்.

அண்ணா..என்ன சின்ன பிள்ளைத்தனம்? தாரிகா கேட்டாள்.

இந்த மரத்தில் சேர்த்து பெயர் எழுதினால் வாழ்நாள் முழுவதும் அவர்களை பிரிக்கமுடியாது. காளி தேவி எந்நிலையிலும் அவர்களை சேர்த்து வைப்பாள் என்று சொல்லுவாங்க என்றான்.

இதையெல்லாமா நம்புற? தாரிகா கேட்க, இது சாதாரண கோவில் இல்லை. காளி தேவி சக்தியை மீறியது ஏதுமில்லை.

தாரி..நீயும் எழுதேன் என்றாள் ஸ்ரீ.

எனக்கே ஸ்ரீ தான் பழக்கப்படுத்தினாள் என்று அம்மரத்தின் தடிமனான தண்டின் கீழே தட்டி விட்டான். அதில் அர்ஜூன் ஸ்ரீயின் பெயர் இருந்தது. ஸ்ரீ அவனை பார்த்தாள். அவனும் பார்க்க தாரிகா அவள் பெயருடன் கவின் பெயரையும் சேர்த்து எழுதினாள்.

சரி, வாங்க போகலாம் என்று அவர்களை அழைத்துக் கொண்டு சென்றான்.

மாலினி வெற்றியை பார்க்க செல்ல, அவர் அவளை கேசவனிடம் அனுப்பி செக் அப் செய்துட்டு வாம்மா. அப்புறம் வேலை தாரேன் என்றார்.

அவள் தயக்கமுடன் அய்யா..பணம் தேவைப்படுகிறதே என்றாள்.

கேசவனிடம் பேசுகிறேன்னு கால் செய்து விசயத்தை சொன்னார். நித்தி ஏற்கனவே அவள் அப்பாவை பற்றி சொன்ன போது சேவை தான் பெரியதென பார்ப்பவர். வெற்றி சொல்லவும் உதவாமல் இருப்பாரா?

கேசவன் மாலினியை அழைத்து, அவளையும் குழந்தையையும் செக் அப் செய்து விட்டு ஸ்கேன் எடுத்துட்டு தான் வெற்றியிடம் சொல்ல முடியும். அப்பா வரலையாம்மா? கேட்டார். அந்நேரம் உள்ளே வந்தான் கௌதம்.

இல்ல சார், அவரை சிரமப்படுத்த வேண்டாம் என்று தான் நானாகவே வந்தேன். வேலை கேட்டு வந்தேன். அய்யா தான் செக் அப் செய்து ரிப்போட்டை காட்ட சொன்னார்.

தம்பி, ஒரு உதவி செய்றீங்களா? என்று கௌதமிடம் கேட்டார்.

என்ன சார் பண்ணனும்? இந்த பொண்ணு கர்ப்பமா இருக்கு. ஸ்கேன் பண்ணனும். கூட்டிட்டு போய் பார்த்துட்டு வந்து இங்கே விட முடியுமா? கேட்டார்.

ஓ.கே சார். ஆனால் எனக்கு இடம் தெரியாதே?

அவளுக்கே தெரியும்ப்பா. என்ன மாலினி தெரியும்லம்மா?

தெரியும் சார் என்று கௌதமை பார்த்தாள். மாலினி கொஞ்ச நேரம் வெளிய உட்காரும்மா என்று அவளை அனுப்பி விட்டு இவர் எடுத்த ரிப்போர்ட்டை காட்டி விட்டு அவளுக்கு நடந்ததை சொன்னார். சக்தி பற்றியும் கூறினார். அவனும் கேட்டு விட்டு ரிப்போர்ட்டை வாங்கி வெளியே வந்தான்.

மாலினியிடம் போகலாம்மா? என்று கேட்டான். சார்..உங்களுக்கு வேலை இருந்தால் நானே பார்த்துக்கிறேன் என்றாள்.

அப்படி ஒன்றும் எனக்கு வேலை இல்லை. நான் இங்கே புதியவன். நடப்பீங்கள? கேட்டான் புன்னகையுடன்.

நடக்காம எப்படிண்ணா போறது?

அண்ணாவா?

ஆமா. என்னோட பெரியவங்க தான நீங்க?

இருவரும் பேசிக் கொண்டே வெளியே வந்தனர். அவன் சுவாதியை பற்றி கேட்க, சுவாதி, ஸ்ரீ, அர்ஜூன், அகில் எல்லாருமே தெரியும். எல்லாருக்கும் ஸ்கூல்ல நான் சீனியர் அண்ணா. ரெண்டு வருடம் அவங்கள விட மூத்தவ.

என்ன? என்று அதிர்ந்து நின்றான் கௌதம்.

உன்னை பற்றி டாக்டர் சார் சொன்னார். ஆனால் சின்ன பொண்ணா? காலேஜ் படிக்கிற வயசு தானா? கேட்டான்.

பன்னிரண்டு வரை படிச்சிருக்கேன் அண்ணா. அதுக்கு மேல படிக்க வீட்ல வசதி இல்லை.

ஓ..அப்படியா? என்ற கௌதம் சுவாதியை பற்றி தெரிந்தவற்றை கேட்டான்.

என்னண்ணா? அவ மேல லவ்வா?

அவள் எனக்கு தங்கச்சிம்மா என்றான். இவர்கள் பேசுவதை மறைந்து மறைந்து நின்று சக்தி கேட்டுக் கொண்டிருந்தான். காருண்யா அங்கே வந்து, சார்..இங்க என்ன பண்றீங்க? அத்தை உங்களை அழைத்து வரச் சொன்னாங்க.

கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு வாரேன்ம்மா என்றான்.

சார், நீங்க சாப்பிடலை என்று டிபன் கேரியரை காட்டினாள்.

எடுத்துட்டே வந்துட்ட.

வேண்டாமா சார் என்று ஆட்டிக் காட்டினாள்.

நீ குடுத்திட்டு போ என்றான்.

இந்த பொண்ணு யாரு சார்? கேட்டாள்.

கர்ப்பமா இருக்காங்க. ஸ்கேன் பண்ண போறோம்.

நீங்க எதுக்கு சார் போறீங்க? உன்னோட ஹஸ்பண்டு எங்கம்மா? அவர் இதுக்கு கூட வர மாட்டாரா? காருண்யா கேட்க, மாலினி தலை கவிழ்ந்து நின்றாள்.

காரு, நீ வீட்டுக்கு போ. நான் வந்துருவேன் என்றான். காருண்யா மாலினியை பார்க்க அவளால் பதில் சொல்ல முடியவில்லை.

நீ போன்னு சொல்றேன்ல கௌதம் சத்தமிட்டான்.

என் மேல எதுக்கு சார் கோபப்படுறீங்க? என்று சினத்துடன் நடுரோட்டில் நின்றாள்.

கௌதம் அவளிடம் வந்து, என்ன பிடிவாதம் பண்ற? எனக்கு எதுவும் வேண்டாம். நீ கிளம்பு என்றான் கோபமாக.

அந்த பொண்ணுக்காக என் மேல கோபப்படுறீங்க சார்? என்று அவள் நகரவேயில்லை.

காரு..புரிஞ்சுக்கோ..என்றான்.

முடியாது என்று தலையசைத்தாள்.

சார், நீங்க போங்க. நான் பார்த்து போயிடுவேன்.

இல்லம்மா. சார் சொன்னது உனக்கு நினைவில்லையா? யாராவது உடன் இருக்கணும்? உன் குழந்தை நல்லா இருக்கு. ஆனால் நீ வீக்கா இருக்கம்மா. எப்பொழுதும் யாராவது உடன் இருக்கணும். உனக்கு ஏதாவது ஆனால் உன் குழந்தையும் பாதிக்கப்படும்.

சார், எனக்கு ஏதும் ஆக என் பிள்ளை விட மாட்டான். அவனுக்கும் ஏதும் ஆகாது. நீங்க ரிப்போர்ட்ட கொடுங்க என்று மாலினி வாங்க வர, அவளுடன் செல்வோமா? என்று சக்தி யோசிக்க, அங்கே வந்தான் அவன் உத்தம நண்பன் பொன்னன்.

மாலு, நான் வந்துட்டேன்ல. போகலாமா? என்று மாலினி தோளில் கையை போட, அவன் கையை தட்டி விட்டாள். கௌதமும் அவள் கணவன் என்று நினைக்க, அவன் மீண்டும் அவளது இடையை கிள்ள, மாலினி அவனை கன்னத்தில் அறைத்தாள்.

ராஸ்கல்..என்னை தொட நீ யாருடா பொறுக்கி? என்றாள்.

பொறுக்கியா? உன் புருசனோட ப்ரெண்டு தான. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ என்றான்.

ப்ரெண்டா என்று மாலினியை இழுத்து கௌதம் அவன் பின் வைத்துக் கொண்டான்.

காரு..இவங்கள கூட்டிட்டு போ என்றான் கௌதம். காருண்யா பொன்னனை முறைத்தவாறு மாலினி கையை பிடித்தாள்.

இங்க பாருப்பா. இது எங்க ப்ரெண்ட்ஸ்க்குள்ள சாதாரணம். வாடா..மாலு..கருப்பா இருந்தாலும் கலையா இருக்க. எனக்கு என்னமோ அன்று சக்திக்கு பதில் நான் இருந்திருக்கக் கூடாதாதுன்னு ஏக்கமா இருக்கு என்றான்.

மாலினி கண்கலங்க, கௌதம் அவனை அடித்தான்.

ஏய்..யாரு மேல கை வைக்கிற? இவ புருசன விட்டே உன்னை காலி பண்ணிடுவேன் என்று பொன்னன் கௌதமை மிரட்ட, மாலினி கோபமுடன் காருண்யா கையை விட்டு அவனிடம் வந்து, உங்களால தானடா அவர் இப்படி இருக்கார்? இதுவரை செய்தது போதாதா? என்று கத்தினான்.

கத்தாதடி என் பைங்கிளியே! அவன் குடித்து விட்டு அன்று சரியாக தான் சென்று கொண்டிருந்தான். ஆனால் அது சுவாரஸ்யமாக இல்லை. அதான் சின்னதா ஒரு விளையாட்டு விளையாடினேன். நீ வந்து அவனிடம் சிக்கிட்ட?

அது சரி..இவன் யாருடி? சிவப்பா அழகா அதுக்குள்ள இன்னொருத்தனை பிடிச்சிட்டியா? அவன் கேட்க, அவன் கன்னம் பழுத்தது. காருண்யா அவனை அடித்து விட்டு, யார பார்த்து என்ன பேசுற? என்று ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை உபயோகித்தாள்.

காரு…நிறுத்து. அவன் பேசுறதை விட அதிகமா பேசுற? கௌதம் சொல்ல, சார்..நான் என்ன செய்தாலும் ஏதாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கீங்க?

நீ தான் அப்படி பேசுற?

ஏய்..நிறுத்துங்கடா. உங்க சண்டைய தள்ளி போய் வச்சுக்கோங்க என்று மாலினி கையை பிடித்து இழுத்தான் பொன்னன். அந்நேரம் சரவணனும், கண்ணனும் அங்கு வந்தனர்.

ஏய்..என்ன பண்ணிக்கிட்டு இருக்க? என்று பொன்னன் கையை பிடித்து திருகினான் சரவணன்.

சார், நீங்க போங்க. இவனை நான் பார்த்துக்கிறேன் என்று அவனுடன் இருவரும் சண்டையிட்டு ஸ்டேசனுக்கு இழுத்து சென்றனர்.

காருண்யா மாலினியிடன், உங்க புருசன் என்ன தான் செய்கிறார்? இந்த மாதிரி பொறுக்கியெல்லாமா அவருக்கு ப்ரெண்டு. மாலினி மீண்டும் அமைதியானாள்.

அவன் ஏதோ விளையாட்டுன்னு சொன்னானே? காருண்யா மீண்டும் ஆரம்பிக்க, இதுக்கு தான் உன்னை ஆரம்பித்திலே கிளம்பச் சொன்னேன். கேள்விய கேட்டு அந்த பொண்ணை கஷ்டப்படுத்தாத.

அவங்க ஹஸ்பண்டை பற்றி தானே கேட்டேன்?

அவ புருசன் வெட்டி ஆபிசர். கோபிச்சுக்கிட்டு அம்மா வீட்டுக்கு வந்துருக்காங்க.

அப்ப..அம்மா எங்க?

சிஸ்டர். அவங்களுக்கு என்னால ஏற்கனவே அவமானமா போச்சு. இப்ப பிள்ளைக்கு அவங்க பாக்குறது நல்லா இருக்காது.

ஓ..லவ் மேரேஜா?

இல்ல சிஸ்டர். அவரால என் வாழ்க்கை பாழாகக்கூடாதுன்னு கல்யாணம் பண்ணி வச்சாங்க. நான் வீட்ல ஒரே பொண்ணு. என்னோட அம்மா, அப்பாவுக்கு என்னை கட்டிக்கப் போறவரை செலக்ட் பண்ண நிறைய ஆசை வச்சிருந்தாங்க. இவருக்கு அந்த மாதிரி ஏதுமில்லை. ஆனாலும் வேற வழியில்லாமல் ஏத்துக்கிட்டாங்க. இப்ப அவரு புள்ளைன்னு நான் அவங்ககிட்ட போய் நின்னா அவருக்கு சுத்தமா மரியாதையே கொடுக்க மாட்டாங்க. நானா பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டேன். அவர் அம்மா, அப்பா கூட என் கூட தான் இருக்காங்க. நல்லா பார்த்துக்கிறாங்க.

அத்தை, மாமா கூட தனியா வீட்ல இருக்கலாம்ன்னு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நினைச்சேன். ஆனால் இந்த மாதிரி பொறுக்கியால தனியா இருக்கணும்ன்னா பயமா இருக்கு. சக்தி கண்ணிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.

உங்க ஹஸ்பன்டு?

அவரை தான் நான் விட்டுட்டு வந்துட்டேனே? அவர் குடிய விடணும். நான் சொன்னதை முதல்ல செய்யட்டும். அப்புறம் பார்க்கலாம்.

ஏம்மா..உங்களுக்கு கல்யாணமாகி எத்தனை நாள் ஆகுது? கௌதம் கேட்டான்.

மூணு நாள் ஆகுது அண்ணா.

மூணு நாளா? கௌதம் கேட்க, அண்ணாவா என்று காருண்யா கேட்டாள்.

இன்னும் கொஞ்சம் அவருக்கு நீ நேரம் கொடுத்திருக்கலாமேம்மா? கௌதம் கேட்டான்.

இல்லண்ணா. நீங்க சொன்ன மாதிரியும் யோசிச்சேன். திருமணத்துக்கு பின் என்னிடம் ஒரு வார்த்தை இதுவரை அவர் பேசியதேயில்லை. நான் கோபப்பட்ட போது கூட அவர் பேசலை அண்ணா. அவருக்கு என்னை பிடிக்காமல் கூட இருக்கலாமே? என்று கண்கலங்கியவள் அவருடன் இருந்து அவர் குடித்து விழுந்து கிடந்து அவர் நண்பர்கள் வீட்டிற்குள் வந்து விட்டால்..அவர் பெற்றோரால் அந்த பொறுக்கிகளை சமாளிக்க முடியாது. அப்புறம்..நீங்க தான் இவனை பார்த்தீர்களே?

இவங்க கேங்குல இவங்க குடிக்கு அடிமைன்னா. மத்தவங்க பொண்ணுங்க பின்னாடி சுத்துவாங்க. இப்ப போனானே கேடு கெட்ட பொறுக்கி. இவன் என் தோழியிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்தான். தீனா சாரிடமிருந்து மறஞ்சு தான் இருப்பான். பள்ளியில் படிக்கும் போதே என்னிடமும் பலமுறை வம்பு செய்திருக்கிறான்.

உன்னோட ஹஸ்பன்ட்டுகிட்ட சொல்லலாமே?

நான் சொல்லி நம்பவா போறாங்க. இவனுக இல்லாம அவங்க இல்லையே. நான் சொன்னால் எங்களுக்கு பிரச்சனை தான் அதிகமாகும்.

எங்களுக்கு மேரேஜ் ஆலமரத்தடி பஞ்சாயத்தில் தான் நடந்தது. மறை அண்ணாவுக்கும் அங்கே தான் நடந்தது. ஆனால் அவங்க நல்ல நாள் பார்த்து சிறப்பா கொண்டாடினாங்க. ஆனால் என்று கழுத்தில் தொங்கிய அவளது தாலிக் கயிற்றை பார்த்து, ஆலமரத்து கல்யாணம் தானன்னு எல்லாரும் ரொம்ப கேவலமா பேசுறாங்க என்று கண்ணீருடன் நின்றாள்.

அழாதம்மா. நீ சந்தோசமா இருந்தா தான் பிள்ளை நல்ல படியா வளரும் என்றான் கௌதம்.

உங்க புருசனை கண்ணுல காட்டுங்க. அவனை லெப்ட் ரைட்டு வாங்கிடுவோம் என்றாள் காருண்யா.

நீங்க எதுக்கு அந்த பொறுக்கி பயல அடிச்சீங்க? எங்களையே விட்டு வைக்க மாட்டான். இதுல பாலிஸ் பண்ண தேவதையாட்டம் இருக்கீங்க? அவனிடம் தனியா மாட்டீறாதீங்க? சார், இவங்கள பார்த்துக்கோங்க என்றாள் மாலினி.

கௌதம் கலகலவென சிரித்தான். பாலிஸ் போட்ட தேவதையா? ஏம்மா, தேவதையை பார்த்திருக்கிறியா? இவ சரியான சண்டக்காரி என்று அவளை பார்த்தான்.

அவள் கீழிருந்த குச்சியை எடுத்துக் கொண்டு கௌதமை விரட்டினாள். இருவரும் புன்னகையுடன் வம்பு செய்து கொண்டே சென்றனர். மாலினி அவர்களை ஏக்கமுடன் பார்த்து நடக்காததுக்கு ஆசைப்படுவது வீண் என்று அவளுக்கு அவளே சொல்லிக் கொண்டு கண்ணீரை துடைத்து விட்டு அவர்கள் பின் சென்றாள்.

ஸ்கேன் செய்த டாக்டர் மாலினியிடம் வெயிட்டான பொருளை துக்காதீங்க. கவனமா இருங்க என்று பல அறிவுரைகள் கூறினார். காருண்யாவும் அவளுடன் இருந்தாள். இருவரும் வெளியே வந்தனர். கௌதம் மரத்தடி நிழலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

ஹாய்..சார், சாப்பிடுறீங்களா? என்று பூரியில் கை வைத்தாள். அவள் கையில் அடியை போட்டு சாப்பிடும் போது சாப்பாட்டை தொட்ட கெட்ட கோபம் வரும் என்றான்.

மாலினியை பார்த்து என்ன சொன்னாங்க? கேட்டான்.

சார், கவனமா இருக்க சொல்றாங்க என்று பேசிக் கொண்டிருந்த மாலினிக்கு வாமிட் வந்தது. அவள் எடுக்க கௌதம் எழுந்தான். நான் பார்த்துக்கிறேன் சார் என்று காருண்யா அவளிடம் சென்றாள். அவளுக்கு உதவி செய்து அழைத்து வந்தாள்.

உணவு வாசனை வந்தாலே இப்படி தான் இருக்கு சார்.

நாலு மாசம் ஆகுதுல. சிலருக்கு அஞ்சாவது மாசத்துல நிற்கும். சிலருக்கு ஏழு மாதம் கூட இருக்கும் என்று பேசிக் கொண்டே கௌதம் கையை கழுவினான்.

மாலினி வருத்தமாக அமர்ந்திருந்தாள். போகலாமா? கேட்டான்.

சார், வேலை பார்க்க கூடாதுன்னு சொல்றாங்க. நான் வேலை ஏதும் பார்க்காமல் என்னால என்ன செய்ய முடியும்? என்று அழுதாள். இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

அக்கா, எதுக்கு அழுறீங்க? நீங்க என்ன வேலையெல்லாம் பார்ப்பீங்க? கேட்டாள் காருண்யா. அவளுக்கு தெரிந்ததை மாலினி கூறினாள்.

நோ..வொர்ரிக்கா, சிஸ்டம் யூஸ் பண்ணுவீங்களா?

ஏய், சிஸ்டம் ரொம்ப நேரம் பார்த்தால் அதிக மயக்கம் தான் வரும். உனக்கு அது கூட தெரியாதா? என்ன டாக்டருக்கு படிக்கிற? கௌதம் திட்ட, நீயும் டாக்டரா? மாலினி கேட்டாள்.

படிச்சுக்கிட்டு இருக்கேன் என்றவள் கௌதமிடம், அப்புறம் என்ன வேலை தான் செய்ய முடியும்? அதிக சம்பளம். உடலுழைப்பு இல்லாமல் வேலை செய்யணும்ன்னா என்ன செய்றது? அதான் சொன்னேன்.

இதை பத்தி யாரும் இப்பொழுதைக்கு யோசிக்க வேண்டாம். சாரிடம் ரிப்போர்ட்டை காட்டுவோம். அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் என்ற கௌதம் ரிப்போர்ட்டை பார்த்து விட்டு, இருவரும் இங்கேயே இருங்க. நான் அந்த மேடமிடம் பேசிட்டு வாரேன்னு சென்றான்.

அண்ணா, நானும் வரவா? மாலினி கேட்க, காருண்யா அவளிடம் அண்ணாவா? சாரான்னு? யோசிச்சு வையுங்க. சார் பார்த்துட்டு வந்துருவார் என்றாள். கௌதம் புன்னகையுடன் உள்ளே சென்றான். சக்தி அவர்களை பின் தொடர்வதை விடவேயில்லை.

கௌதம் இருவரையும் ஆட்டோவில் ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றான். இருவரும் அவனையே பார்க்க, அவன் சிந்தனையுடன் வந்தான். மூவரும் ஹாஸ்பிட்டலுக்குள் சென்றனர்.

வெற்றியும் கேசவனும் மாலினியை அழைக்க, மூவரும் உள்ளே சென்றனர். கௌதம் ரிப்போர்ட்டை கேசவனிடம் கொடுத்தார். அவர் பார்த்து விட்டு ரெஸ்ட் எடுத்தாள் நல்லது என்றார்.

சார், நான் பிள்ளைய பெத்தெடுக்கணும். பணத்துக்கு எங்க போறது? கலக்கத்துடன் மாலினி கேட்டாள்.

ஏம்மா, நீ சக்திய கூட்டிட்டு வாரீயா? பேசலாம் வெற்றி சொல்ல, மாலினி எழுந்தாள். வேண்டாய்யா..நடப்பது நடக்கட்டும். நானே என்னால் முடிந்ததை பார்த்துக் கொள்கிறேன் என்றாள்.

மாலினி…நில்லு. எதுக்கு அவசரப்படுற? கௌதம் சத்தம் போட்டான்.

அண்ணா, நான் எப்படி அவரிடம் பேசுவது? மற்றவர்கள் அவளை பார்த்தனர்.

உன்னோட புருசனிடம் பேச இப்படி யோசிக்கிற? கேசவன் கேட்டார்.

அது வந்து..சார் என்று சிந்தித்தாள்.

மாலினி வெளிய இரு..என்று கௌதம் அவளை வெளியே அனுப்பினான். அவள் சென்றவுடன் சார், பெரிய ஆளுங்க நன்கொடை ஹாஸ்பிட்டலுக்கு கொடுப்பாங்கல்ல. அந்த பணத்தில் மாலினிக்கு டிரீட்மென்ட் பண்ணலாமே?

நன்கொடை கொடுப்பாங்க? ஆனால் குழந்தை பிறப்புக்கென யார் உதவி செய்வா?

ஏன் சார், பண்ண மாட்டாங்க. குழந்தை பிறக்கும் வரை ஸ்கேன் தவிர மற்றதுக்கு ஃபீரியா பண்ணலாமே?

இங்க அந்த வசதி இல்லைப்பா. செக் அப் எல்லாத்தையும் ஃபீரியா பண்ணலாம். ஸ்கேனுக்கும், குழந்தை பிறக்கவும் பணம் கட்டணுமே?

கௌதம் வெற்றியை பார்த்தான். அவர் புன்னகையுடன் கௌதமை பார்த்து, நான் பார்த்துக்கிறேன் என்றார்.

சார், என்று கௌதம் சிந்திக்க, அவர் தான் பார்த்துக்கிறேன்னு சொல்லிட்டாருல்ல..கண்டிப்பா பார்த்துப்பார் என்று கேசவன் குறும்புடன் கண்ணடித்தார்.

“தேங்க்யூ சார்” என்று கேசவன், வெற்றியிடம் கையை கொடுத்த கௌதம் சார் நான் செக் அப்பிற்கு கொடுக்கிறேன்.

இல்லப்பா..நானே அதை முடியாதவர்களுக்கு இலவசமாக தான் செய்து தருவேன். நாங்களே பார்த்துப்போம் என்றார். அவன் புன்னகையுடன் வெளியே வந்தான். காருண்யா மூவரையும் பார்த்து விழித்தாள்.

வெளியே வந்த கௌதம் முகம் மாறியது. அவனாகவே சரி செய்து மாலினியிடம் வந்தான்.

ஹே, குட் நியூஸ் சிஸ்டர். நீங்க செலவே செய்ய வேண்டாம். டாக்டர் சாரும், நீங்க சொன்னீங்களே அவரே பார்த்துக்கிறோம்ன்னு சொல்லிட்டாங்க என்றான்.

என்ன? அப்ப எனக்கு வேலை?

குழந்தை பிறந்த பின் பார்த்துக்கோங்க.

இல்ல. நான் பார்த்துப்பேன் என்றாள்.

அது உன்னால முடியாது. இப்ப எவ்வளவு வச்சிருக்க? கௌதம் கேட்டான்.

பத்தாயிரம் வச்சிருக்கேன்.

அதை வச்சு என்ன செய்ய முடியும்?

உனக்கான மாத்திரையே மாதத்திற்கு ஆயிரம் ஆகும். அதை நீ எடுத்துக் கொண்டால்  தான் பாப்பா பாதுக்காப்பா இருக்கும். அவங்களிடம் சென்று ஒத்துக்கோ. நீ இந்த ஊர்ல தான இருப்ப? அவங்களுக்கு கொஞ்ச கொஞ்சமா அடைச்சுக்கோ என்றான். அவள் அமைதியானாள்.

போய்..பேசிட்டு வா என்று அவளை அனுப்பி விட்டு, அவள் சென்றவுடன் தலையில் கை வைத்து அமர்ந்தான்.

சார், ஏதோ பிரச்சனை தான? என்னாச்சு? காருண்யா கேட்டாள்.

பிரச்சனை பெருசு என்றான். சக்தி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான்.

மாலினி கருப்பையில் கட்டி இருக்கு. குழந்தை பிறந்தவுடன் அவள் இறக்கும் வாய்ப்பு தான் அதிகம்.  கருவை கலைக்க முடியாது. ரொம்ப கஷ்டம் என்றான்.

அவள் வேலையே செய்யாமல் இருந்தால் கூட காப்பாற்றுவது கடினம் என்று ரிப்போட்டை காட்டினான். காருண்யா வாங்கி பார்த்து விட்டு, கௌதம் தோளில் சாய்ந்து கொண்டாள்.

எந்த வாய்ப்புமே இல்லையா? அவள் கேட்டாள்.

இல்லை. குழந்தை பிறக்கும் போது தான் தெரியும் என்றான்.

பொன்னன் மாலினியை தொடும் போது வர நினைத்தானே தவிர கையை முறுக்கிக் கொண்டு நண்பனை கோபத்துடன் பார்த்திருப்பான் சக்தி. ஆனால் கௌதம் சொன்னதை கேட்டு அவன் முன் வர நினைத்து அவன் வர, மாலினி வெளியே வருவதை பார்த்து கண்ணீருடன் மறைந்து கொண்டான்.

போகலாமா? அவள் வருத்தமுடன் கேட்டாள்.

என்னாச்சும்மா? என்று கௌதம் சாதாரணமாக பேச, காருண்யா அவனையே பார்த்தாள்.

அண்ணா, சார் எந்த வேலையும் பார்க்கக்கூடாதுன்னு சொன்னாரு. அவரிடம் கேட்டா எந்த பிரச்சனையும் இல்லை என்றார். சரசு அக்காவெல்லாம் மாசமா இருந்தப்ப எல்லா வேலையும் பார்த்தாங்க. என்னை பார்க்க வேண்டாம்ன்னு சொல்றாங்க. நீங்க டாக்டர் தான ரிப்போர்ட்டை பார்த்தீங்கல்ல..என் பிள்ளைக்கு ஒன்றுமில்லையே என்று கேட்க, காருண்யா கண்கள் கலங்கியது.

சார், அப்பாவிடம் பேசிட்டு வாரேன் என்று நகர்ந்தாள் அவள்.

அவளை பார்த்து மாலினி, சீக்கிரம் வந்துருங்க டாக்டர் மேடம். பையனுக்கு பசிக்கும். நான் சாப்பிடணும் என்றாள். சக்தி கண்ணிலிருந்து கண்ணீர் வடிய தொட்டு பார்த்தான்.

ஒவ்வொருவர் உடலும் ஒரு மாதிரி. சிலருக்கும் இந்த நேரம் சாதாரணமாக தான் இருக்கும். சிலருக்கு மயக்கம், வாமிட்டால், உடல் சோர்வு அதிகமாகும். உடல் சோர்வுடன் வேலை செய்தால் குழந்தைக்கு ஆபத்தாகும் அதனால் தான் என்று முடித்தான்.

அண்ணா, மேடம் வர நேரமாகுமா? என்று கேட்டாள்.

நான் அழைச்சிட்டு வாரேன். இங்கேயே உட்காரு என்றான். அவள் ஸ்கேனில் தெரிந்த குழந்தையை பார்த்துக் கொண்டிருந்தாள். சக்திக்கும் ஆசையாக முகத்தை கையால் மறைத்தவாறு அவள் பின் அமர்ந்து பார்த்தான். அவள் வயிற்றில் கை வைத்து பேசிக் கொண்டிருந்தாள். அவன் கண்கள் கலங்க, அவளை பார்த்துக் கொண்டிருந்தான். சக்திக்குள் மாலினி வந்து விட்டாளோ?

கௌதம் காருண்யாவுடன் வந்தான். மாலினி போகலாமா? என்று காருண்யா அவளாகவே கேட்டாள்.

போகலாம் என்று புன்னகையுடன் எழுந்த மாலினி..நீங்க எங்க வீட்டுக்கா வரப் போறீங்க? கேட்டாள்.

ஆம் என்று கௌதம் சொல்ல, நீங்க வீட்டுக்கு போங்க. நானாகவே போயிடுவேன் என்றாள் அவள்.

நீ தான என்னை அண்ணன்னு சொன்ன? நீ வீட்டுக்கு போன பிறகு நாங்க போறோம் என்றான்.

மாலினி, ஹே..என்னை வச்சி ரெண்டு பேரும் ஊரை சுத்தலாமான்னு பாக்குறீங்களா? என்று கேலியாக வினவ, முந்திக் கொண்ட காருண்யா எப்படி கண்டுபிடிச்சுட்டீங்க? என்று கௌதமை பார்த்தான். அவன் அவளை முறைத்து பார்த்தான்.

சரி, மேடம் உங்களுக்கு படிப்பு முடிஞ்ச பின் இருவரும் கல்யாணம் பண்ணிப்பீங்களா?

என்ன, இவளை கல்யாணம் பண்ணனுமா? கௌதம் கேட்க, சும்மா சார் விளையாடுறார் சிஸ்டர். கண்டிப்பா மேரேஜ் தான் என்று கௌதம் கையை பிடித்து கண்ணை காட்டினாள். அவன் திருதிருவென விழித்தான்.

அண்ணா, நானும் வரலாம்ல? கேட்டாள். ம்ம்..கண்டிப்பா வரணும்மா..என்றான்.

மூவரும் கிளம்பினர். அப்பொழுதும் சக்தி அவர்களை பின் தொடர்ந்தான். அவளை வெளியேவே விட்டுட்டு. ஒரு மாசம் நாங்க இங்க தான் இருப்போம் என்று இருவரும் போன் நம்பரை கொடுத்து விட்டு, எதுவும் வேண்டுமென்றால் போன் செய் என்றனர்.

கௌதம் மாலினியிடம், செக் அப்பிற்கு நான் அழைத்து செல்கிறேன். தனியே வெளியே வராத. தினமும் யாருடனாவது சேர்ந்து மெதுவாக நட..என்று சொல்லி விட்டு சென்றான். அவள் புன்னகையுடன் உள்ளே சென்றாள். எல்லாவற்றையும் அவள் கூறாமல் கேசவன் சாரே எல்லாத்தையும் பார்த்துக் கொள்வதாக சொன்னாள். அவரை பற்றி தெரியும் என்பதால் யாரும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கார் அரேஞ் பண்ணவா? கௌதம் காருண்யாவிடம் கேட்க, வேண்டாம் என்று அவனை பார்த்தாள்.

என்ன? என்று அவன் கேட்டான்.

கௌதமை நெருங்கி வந்த காருண்யா அவன் கையை பிடித்து, பிடிச்சுக்கலாமா? கேட்டாள்.

அவள் கையை எடுத்து விட்டு, வா..ரெஸ்ட் எடுக்கணும் என்றான்.

சார், நீங்க தேஜூவை மறக்கலையா? அவள் கேட்க, அவன் அவளை முறைத்து பார்த்தான்.

முறைக்காதீங்க சார். அவங்க சொன்ன மாதிரி என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா? கேட்டாள்.

லூசா நீ? உன்னோட அப்பா என்னை நம்பி தான் உன்னை அனுப்பி வைத்தார். உன்னை அழைத்து வந்தது போல் அவரிடம் நான் ஒப்படைக்கணும்.

சார், என்னை பிடிக்குமா? கேட்டாள்.

உன்னை எனக்கு பிடிக்காது. நாம செட் ஆக மாட்டோம் என்றான்.

எதுக்கு?

எனக்கு கல்யாணத்தில் விருப்பமில்லை.

சும்மா சொல்லாதீங்க சார். உங்களால தேஜூவை மறக்க முடிலைல்ல? சாதாரணமாக பேசினாள்.

கோபமான கௌதம். சும்மா அவள இழுக்காத. எனக்கு பிடிக்கலை.

தப்பான அவள இழுத்தா உங்களுக்கு பிடிக்கலையா? இல்லை அவள் தேவ் சாருடன் இருந்தது பிடிக்கலையா? கேட்டாள்.

அவளை ஓங்கி அறைந்தான் கௌதம். இதுக்கு மேல அவளையும் தேவ்வையும் சேர்த்து பேசாத. உனக்கு நல்லதில்லை என்று சுவாதிக்காக அவன் பேசியதை கௌதம் அவனுக்காக தான் பேசுகிறான் என்று தவறாக நினைத்து அழுது கொண்டே நின்றாள்.

அழுகையை நிறுத்திட்டு வர்றீயா? இருக்கிற டென்சன்ல இவ வேற? என்று அவன் கடிந்தான். அவள் ஏதும் பேசாமல் நடந்தாள்.

Advertisement