Advertisement

அத்தியாயம் 98

மறுநாள் உதயன் நம் ஜோடிகளுக்காகவே உதித்தது போல் பளிச்சென மின்னிக் கொண்டு வெளியே வந்தான். மறை எழுந்து முதல் வேலையாக போலீஸ் ஸ்டேசன் சென்றான். சக்தி வீட்டிற்கு சென்றது தெரிந்த பின் அவன் வீட்டிற்கு மறை தனியே சென்றான்.

சக்தியின் பெற்றோர் மறையை பார்த்து வீட்டினுள் அழைக்க அவன் துணைவியும் வாங்க அண்ணா..டீ சாப்பிடுங்க என்றாள்.

இல்லம்மா. தண்ணீர் மட்டும் கொடும்மா என்று அவன் அப்பாவை பார்த்து, அவனை வரச் சொல்லுங்க. நான் பேசிட்டு கிளம்புறேன்.

அவன் உங்களை பார்த்தால் கோபப்படுவானேய்யா என்றார் அவர்.

நீங்க அவனை அழைச்சிட்டு மட்டும் வாங்க. அவனிடம் பேசிட்டு கிளம்புகிறேன்.

இதற்கு மேல் நிற்காமல் சக்தியை அழைக்க, அவன் எழுந்து வந்து மறையை பார்த்து,

ஏய்..நீ எதுக்குடா என்னோட வீட்டுக்கு வந்திருக்க என்று கத்தினான். அவனுடைய பொண்டாட்டி மறைக்கு தண்ணீர் கொண்டு வந்தாள். சக்தி அதை தட்டி விட்டு..வெளிய போடா என்று கத்தினான். அவள் பயந்து விலகி நின்றாள்.

நான் உன்னிடம் பேச தான் வந்தேன்.

உன்னிடம் பேச எனக்கு விருப்பமில்லை.

நீ பேச வேண்டாம். சொல்றத கேட்டுக்கோ. நம்ம இருவருக்குமே கல்யாணம் முடிந்து விட்டது. நாம் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டால் பாதிக்கப்போவது நம் குடும்பமே. அதனால் இருவரும் நம் குடும்பத்தை மட்டும் பார்த்துக் கொள்வோம். பிரச்சனை வேண்டாம்.

இல்ல..நான் உன்னை கொன்னுட்டு அவளை அடைவேன் இல்லை நான் சாவேன் என்றான் சக்தி. மறை சீற்றமுடன் சக்தி அருகே வருவதற்குள் சக்தி பொண்டாட்டி அவனை அடித்தாள்.

என்ன திமிருடி உனக்கு? என்னையே அடிக்கிற? கையை ஓங்கினான். புள்ளத்தாச்சி புள்ளடா. அடிச்சிடாத என்று அவனுடைய பெற்றோர்கள் தடுத்தனர்.

புள்ளை வயித்துல இருக்கிறது தெரிஞ்சு உன்னை கட்டிக்கிட்டா புள்ளையும் கஷ்டப்படும்ன்னு தான் பயந்து கிணத்துல குதிச்சேன். ஆனால் காப்பாத்திட்டாங்க. அங்க இருந்த பொண்ணு நீ யாரை அடையணும்ன்னு சொன்னியோ அந்த பொண்ணு காயத்ரியை பத்தி சொல்லுச்சு.

அந்த அக்கா எல்லாத்தையும் இழந்து புள்ளைக்காக உசிரோட இருக்கு. அவங்கள போய்..என்ன செய்ய பார்த்த? அண்ணாவை பத்தியும் தப்பா பேசி..ச்சீ..

என்னால புள்ளைய தனியா வேலை பார்த்து கூட பார்த்துக்க முடியும். நான் அனைவர் முன்னும் புள்ளைய பத்தி சொன்னது அப்பா இல்லாதவன்னு யாரும் நம்ம புள்ளைய பேசக் கூடாதுன்னு தான் உன் கையால தாலிய கட்டிக்கிட்டேன். எனக்கும் உன் மீது விருப்பமில்லை.  நான் உன்னை கணவனாக முழு மனசோட ஏத்துகிட்டு தான் உன் வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தேன். ஆனால் இப்ப கூட நீ புள்ளைய பத்தி நினைக்காம அந்த அக்கா கணவனிடமே அவங்கள அடைவேன்னு சொல்ற. என்ன மனுசன் டா நீ? என்று அவனது சட்டையை பிடித்து கத்தினாள்.

அன்று குடித்து விட்டு என்னை கட்டாயப்படுத்திய போது கூட நீ குடிச்சிட்டு தான் இப்படி நடந்துக்கிறன்னு கோபம் மட்டும் தான் இருந்தது. ஆனால் இப்ப என் வயித்துல உன் புள்ள இருக்கு. நீ வேற பொண்ணு வேணும்ன்னு பேசுற. இதுக்கு மேல இங்க இருந்தா நம்ம பிள்ளையும் உன்னை மாதிரி பொறுக்கியா தான் இருப்பான் என்று அவனை விட்டு அறைக்குள் ஓடி கதவை தாழிட்டாள்.

அம்மாடி கதவை திறம்மா. அவன் இனி அப்படி பேச மாட்டான். உன்னையும் புள்ளையையும் பார்த்துப்பான் என்று சக்தி அம்மா கதவை வேகமாக தட்ட, அவன் அப்பா அங்கு வந்து,

அவன் எப்படியும் போறான். உனக்கும் புள்ளைக்கும் நாங்க இருக்கோம்மா. கதவை திறம்மா. ஏதும் செஞ்சுக்காதம்மா என்று பதறினார்.

அவள் கதவை திறந்து பையுடன் வந்தாள். அம்மாடி..எங்க போற? என் புள்ள தாலிய கட்டி ஒரு நாள் தான்ம்மா ஆவுது. இரும்மா. பேசிக்கலாம் என்றார் அவன் அம்மா.

இல்லத்த. நான் புள்ளையை பத்தி யாரிடமும் சொல்லி இருக்கக்கூடாது. என் கழுத்தில் தாலியும் இருந்துருக்காது. இந்த மாதிரி ஒருவர் என் பிள்ளைக்கு அப்பாவா இருப்பதுக்கு பதில் யாருமில்லாமல் வாழ்ந்துட்டு போகலாம். நான் போறேன்.

உங்க புள்ளையோட நாங்க வாழணும்ன்னா. அவர் குடியை நிறுத்தணும். அதனால் தான் மொத்த பிரச்சனையும். அப்புறம் அவர் மனசுல என்னையும் புள்ளையும் தவிர எந்த பொண்ணும் இருக்கக்கூடாது. அவர் கூட ப்ரெண்ட்ஸும் சுத்துறானுகள அவிங்கள விட சொல்லுங்க. அவங்க யாருமே சரியில்லை.

அத்தை..எங்களுக்குள் நடந்தது என் தோழிக்கு ஏற்கவே தெரியும். ஆனால் ஒரு வார்த்தை அவள் யாரிடமும் சொல்லலை. ப்ரெண்டுன்னா அப்படி இருக்கணும். அந்த அக்காவிடம் தப்பா நடந்து முயன்ற போது மறை அண்ணா அக்காவை காப்பாற்றிய போது இவங்கள அவங்க நண்பர்கள் அடிச்சாங்க. அங்க தான் இவரோட ப்ரெண்ட்ஸ் இருந்தாங்க. எவனாது வந்து தடுத்தானா? எல்லாரும் ஒதுங்கி நின்று வேடிக்கை தான் பார்த்தாங்க. ஆனால் மறை அண்ணா..ப்ரெண்ட்ஸ் பார்த்தீங்களா? ஒருவருக்கு ஒருவர் உதவி செஞ்சுக்கிறாங்க. சேர்ந்தே எல்லாம் பண்றாங்க.

உங்க புள்ள முதல்ல உங்களுக்கு புள்ளையா இருக்கட்டும். நான் அவரிடம் எதிர்பார்ப்பது நல்ல குடும்பா அவருடன் வாழ்வதையும்., நல்ல நண்பர்களுடன் கூட்டு சேர்வதும் தான். இன்னும் ஊதாரியா சுத்திக்கிட்டு இருந்தா உங்கள அவர் பாத்துக்கிறதுக்கு பதில் நீங்க தான் அவரை பார்த்துக்கணும். நான் வருவதும் வராமலிருப்பதும் அவர் கையில் தான் இருக்கு.

அத்த..உங்க புள்ளைக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்கீங்க. அவர் அதிலிருந்து வெளிய வருவது முடியாத காரியம். உங்களையும் அவர் கஷ்டப்படுத்துனா என் வீட்டுக்கு வாங்க உங்கள நான் பார்த்துக்கிறேன் என்று அவள் வெளியேற படியிலே நின்றாள். அனைவரும் வந்து எட்டிப் பார்த்தனர்.

அவளுடைய அம்மா, அப்பா, தோழியுடன் வந்திருந்தனர். பலகாரங்கள் சிதறிக் கிடந்தது.

அம்மா…என்று ஓடி அவள் அம்மாவை அணைத்து, நான் அன்றே சொல்லி இருந்திருக்கலாம்மா. என்னால் உங்களுக்கு அவமானமாகி விட்டது என்று கூறிக் கொண்டே மயங்கினாள்.

மாலு.எழுந்திரு அவள் தோழி பதற, எழுந்திருடா கண்ணு..உன் மேல தப்பு இல்லம்மா. எழுந்திருடா அவள் அப்பா அழுதார். சக்தியின் பெற்றோரும் அவளிடம் வந்தனர். மறை தண்ணீரை தெளிக்க..அவள் கண் விழித்து அவள் அப்பாவை பார்த்தாள்.

அப்பா..நான் நம்ம வீட்டுக்கு வரலாமா? எனக்கு ரொம்ப சோர்வா இருக்கு. தூங்கணும் போல இருக்கு என்றாள்.

இப்பவாது வந்து தொலைடா என்று சக்தி அம்மா கத்த, அவன் நகரவேயில்லை. அவனை பார்த்து விட்டு, அத்தை நான் தான் சொன்னேன்ல..அவர் வெளியே வர மாட்டார் என்று அம்மா..வீட்டுக்கு போகலாம்மா என்றாள்.

மறை ஆட்டோவை அழைக்க அவர்கள் கிளம்பினார்கள். சக்தி பெற்றோர் உள்ளே செல்ல..அவள் தோழி சக்தியை முறைத்துக் கொண்டிருந்தாள். மறை அவளை பார்த்து சக்தியை பார்த்து விட்டு,

நீ கிளம்பும்மா. உன்னோட பெற்றோர் தேடப் போறாங்க என்றாள். அவளை பார்த்துக் கொண்டிருந்த சக்தி..அவ பேர் என்ன? என்று கேட்டான்.

பேரா? டேய்..உன் பொண்டாட்டி பேர என்னிடம் கேட்கிற? ஒரு நாள் முழுசா உன்னுடன் தான இருந்தா அவ பேர் கூட நீ தெரிஞ்சுக்கலையா? ஆமா..உனக்கு குடிச்சிட்டு கிடக்கவே நேரம் சரியா போகுமே? அவள் திட்டினாள்.

சொல்லு..அவ பேர் என்ன? சத்தமிட்டான்.

தெரிஞ்சு என்ன பண்ணப் போற?

சொல்லுன்னு சொன்னேன்.

உன் அதிகாரத்தை வேற யாரிடமாவது வச்சுக்கோக்கோ. மொத்தமா அவ வாழ்க்கைய அழிச்சிட்டு கேட்குறான் பாரு கேள்வி. மூஞ்சியப் பாரு. மறை அண்ணா..இங்க நின்னு எதுக்கும் நேரத்தை வீணாக்குறீங்க. எல்லாரும் கல்யாணத்துக்கு தயார் செஞ்சுகிட்டு இருக்காங்க. சீக்கிரம் போங்க என்று அவள் சென்றாள்.

நான் சொன்னதையும், உன் பொண்டாட்டி சொன்னதையும் யோசித்து பாரு. தேவையில்லாத வேலைய பார்த்து எல்லாரையும் கஷ்டப்படுத்தாத. அப்புறம் காயூ என்னோட பொண்டாட்டி. அவகிட்ட நீ வந்தா வெட்ட கூட தயங்க மாட்டேன் என்று நான் வாரேன்ம்மா என்று சக்தி பெற்றோரிடம் சத்தமாக உரைத்து விட்டு அவன் சென்று சக்தியை திரும்பி பார்த்து, உன்னோட பொண்டாட்டி பேரு மாலினி என்று கூறி விட்டு கிளம்பினான்.

அவன் பெற்றோர்கள் பையுடன் வெளியே வந்தனர்.

எங்க போறீங்க? கேட்டான்.

உன்னை பெத்ததுக்கு சாகணும். ஆனால் எங்க வீட்டு வாரிச பார்க்க நாங்க இருக்கணும்ல அப்பா கோபமாக பேசினார்.

நாங்க எங்க மருமகள பார்த்துக்கப் போறோம். வக்கனையா வடிச்சு கொட்டுனேன்ல. நல்ல பேர் வாங்கி கொடுத்துட்ட போதும் என்று அவர்களும் கிளம்பினார்கள்.

மண்டபத்தில் அர்ஜூன் தூங்கிக் கொண்டிருக்க ஸ்ரீயும் அனுவும் அதே அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். ஸ்ரீ எழுந்து அர்ஜூனை பார்த்து, சீக்கிரமே சொல்றேன் அர்ஜூன்.

உன்னோட பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதை விட உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அர்ஜூன். நான் உனக்கான பிரபோர்சல் கொடுப்பேன்டா. நீ, நான், அனு சந்தோசமா வாழணும் அர்ஜூன். பிரச்சனை முடியும் வரை காத்திருக்க முடியுமான்னு எனக்கே தெரியலடா. உன்னை மட்டுமே நினைச்சுக்கிட்டு இருக்கிற மாதிரி பண்ணிட்டடா. “லவ் யூ டா அர்ஜூன்”. நீ விழித்திருந்தால் இதை மட்டும் சொல்லவே முடியலடா என்று மணியை பார்த்தாள்.

நேரமாகுதே..இப்படி தூங்குற என்று அவனை பார்த்துக் கொண்டே அவனை முத்தமிட அருகே வந்தாள். குடி நாற்றம்..எருமை..இப்படியாடா குடிப்ப? இடியட்..நாறுது என்று அவனை எழுப்பினாள். அவன் எழவேயில்லை.

அம்மா..என்று அனு அழைத்தாள்.

பாப்பா முழிச்சிட்டீங்களா? என்று ஸ்ரீ அனுவை தூக்கினாள்.

அம்மா..அர்ஜூன் என்றாள்.

அவனை முழிக்க வைக்கலாமா? என்று ஸ்ரீ அனுவிடம் நீ இறங்காத..நான் வாரேன் என்று தண்ணீரை எடுத்து வந்து அர்ஜூன் மீது ஊற்றினாள். அவன் எழுந்து அமர்ந்து பார்த்தால் அவனுக்கு நேராக அனு அவனை முறைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் பக்கெட்டுடன் ஸ்ரீ அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஹே..ஏஞ்சல்ஸ் இது என்ன போஸ்? கேட்டான். அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக நேற்றைய நினைவு வந்தது. சட்டென எழுந்து ஸ்ரீயிடம் வந்து, நீ நேத்து ஏதோ சொன்னேல்ல..என்ன சொன்ன? என்று அவளை நெருங்க..அர்ஜூன் பாப்பா பாரு என்றாள் அவள்.

அவன் அனுவை பார்த்து அவளை தூக்க வந்தான். ஸ்ரீ இடையே வந்து, நீ குளிச்சிட்டு வா..நேரமாகுது. நிறைய வேலை இருக்கு. நேற்று போல் குடிக்காத என்று அனுவை தூக்க..உள்ளே வந்தார் கமலி.

இருவரும் இன்னும் தயாராகலையா? கேட்டார்.

அம்மா..நேற்று நான்..

நீ குடிச்ச. இனி குடிச்ச உன்னை தொலைச்சிடுவேன் ராஸ்கல் என்று ஸ்ரீயிடம் அனுவை வாங்கி விட்டு, சீக்கிரம் வாங்க. நிறைய வேலை இருக்கு என்று வெளியேற, ஆன்ட்டி பாப்பாவும் இன்னும் குளிக்கலை என்று வாங்க வந்தாள். நீ தயாராகி வா..அதுக்குள்ள அனுவை நான் தயாராக்குகிறேன் என்று சென்றார்.

அர்ஜூன் இருவரையும் பார்த்து விட்டு, தலையில் கை வைத்து சிந்தித்தான். நல்ல நாள் அதுவுமா தலையில கை வக்கிற? போ.. குளிச்சிட்டு வா. நானும் தயாராகணும் என்றாள் ஸ்ரீ.

அர்ஜூன் அவளை நெருங்கி, நேற்று நீ ஏதோ சொன்ன..சொல்லு என்றான்.

எதையும் ஒரு முறை தான் சொல்ல முடியும். சும்மா சொல்லிக்கிட்டே இருக்க முடியாது.

சொல்ல முடியாதா? என்று மேலும் அவளை நெருங்கி ஸ்ரீ..ரொம்ப அழகாக இருக்க. எனக்கு ஓ.கே சொன்னாயா?

இல்ல. நான் அப்படி ஏதும் சொல்லலை என்று அவன் பார்வையை தவிர்த்தாள். அர்ஜூன் அவளை அணைக்க அவனை தள்ளிய ஸ்ரீ..ஒரே ஸ்மல்லா இருக்கு. குளிச்சிட்டு வா என்றாள்.

குளிச்சிட்டு வந்து அணைச்சுக்கலாமா? கேட்டான்.

அர்ஜூன்..கிளம்பு நேரமாகுது. அக்கா நிச்சயத்தை கூட நீ பாக்கலை. அதை விட குடிக்கிறது முக்கியமா போச்சுல உனக்கு. நீ போகப் போறீயா? இல்லை நான் போகவா?

நீ சொல்ல மாட்டேல்ல. நானே போறேன் என்று உள்ளே சென்றான்.

அர்ஜூன் குளித்து வெளியே வந்து ஸ்ரீயை தேடினான். அவள் இல்லை. அவன் தயாராகி வெளியே வந்து கவின், அபி, அகிலுடன் சேர்ந்து வேலையை கவனித்துக் கொண்டிருந்தான். நேரமாக விருந்தினர் எல்லாரும் வர ஆரம்பித்தனர்.

கொட்டு சத்தம் காதை கிழிக்க வெள்ளை பட்டு வேஷ்டியுடன் நெற்றியில் சிறியதாக திருநீரு இட்டு மறை வந்தான் நண்பர்களுடனும் ஊர் ஆட்களுடனும்.

பொண்ணுங்க வாங்கடி மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுங்க என்று வினிதா அம்மா சத்தமிட, நம் நாயகிகள் தேவலோக மங்கைகளையே மிஞ்சும் அளவிற்கு அழகாக கையில் ஆரத்தி தட்டுடன் வந்தனர். நம் நாயகர்கள் மெய் மறந்து அவர்களை பார்த்தனர். முதலில் ஸ்ரீ, தாரிகா, யாசு, பவி, ஆருத்ரா, நிவேதிதா, சுருதி, சுவாதி, அனு, ராக்கியும் தட்டுடன் வந்தனர். யாரும் சுவாதியை எதிர்பார்க்கலை.

அஸ்வினியை அவள் அம்மா போக சொல்ல,”வாட்..நான் சென்ஸ்” என்று திட்டினாள். சுவாதிக்கு ஆருத்ரா அவள் ஆடையை கொடுத்து மேக் அப் போட்டு விட்டுருப்பாள்.

ஏன்டா அகில், யாசு தான் நச்சுன்னு மேக் அப் போடுவான்னு பார்த்தா. இன்று எல்லாருமே போட்டுருக்காங்க கவின் கூறிக் கொண்டே தாரிகாவை கண்களால் வருட, பார்த்துடா சட்டை நனையப் போகுது அபி கிண்டல் செய்தான்.

என்னை விடு. என் பின்னால் மூணு பேர் நிக்குறாங்களே பாரேன் என்று கவின், அபி பார்த்தனர். பட்டுப் புடவையில் ஸ்ரீயை பார்த்த அர்ஜூன் வாயடைத்து அவளை பார்த்தான். அவளுக்கு செட்டாக அனுவிற்கும் பட்டுப் பாவடை சட்டையும், ராக்கி கோர்ட் சர்ட்டுடனும் இருந்தனர்.

நின்று கொண்டிருந்த அகில் பவியை நோக்கி நகர்ந்து செல்ல, டேய் அவனை பிடி. ஏதாவது தப்பா ஆகி விடாமல் என்று கவினும் அபியும் அகிலை பிடித்து, எங்க ராசா போற?

பவியாடா அது? இரு நான் பார்த்துட்டு வாரேன் அகில் கூற, உங்க கச்சேரிய அப்புறம் பார்க்கலாம்.

டாக்டர் சாரை பாருடா? என்று அகில் தலையை திருப்ப, அவன் கண்ணாடியை போட்டு தலையை ஆட்டாமல் பொம்மை போல் பார்த்துக் கொண்டிருந்தான்.

யாரடா இவர் பார்க்கிறார்? யாரென்று எனக்கு தெரியுமே? கவின் சொல்ல…யாருடா? அகில் கேட்டான்.

சுற்றி பார்த்த கவின் பின்னே கவனிக்காமல் அவருக்கு சுவாதியை பிடிச்சிருக்கு என்றான்.

பாருடா..இந்த விந்தை எங்காவது நடக்குமா? டேய்..என்ன சொன்ன சுவாதியா? நல்லதில்லடா. அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சா போச்சு அகில் சொன்னான்.

அப்பாவா? இங்க ஒரு கேவலமான பிறவி ஒண்ணு இருக்கே. அதுக்கு தெரிஞ்சாலே போச்சு என்ற கவின் நிவி எங்கடா போனான்? கேட்டான்.

பின்னே நின்று கொண்டிருந்த அஸ்வினி இவர்கள் பேசியதை கேட்டு, டாக்டரா அவளுக்கு கேக்குது? இருடி உனக்கு பெரிய ஆப்பா வைக்கிறேன் என்று எண்ணிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.

ஆராத்தி முடிய ராக்கியை தூக்கிக் கொண்டு நின்ற மறையிடம்..ஒரு நிமிஷம் நில்லுப்பா..என்று அர்ஜூனை அழைத்தார் வினிதா அம்மா. பசங்களும் சிவப்பு சட்டை, வேஷ்டியுடன் கலக்கலாக இருந்தனர்.

டேய்..அர்ஜூன் ஸ்ரீயை அப்புறம் விழுங்கலாம். உன்னை கூப்பிடுறாங்க கேட்கிறதா? அகில் அவனிடம் கேட்க, மற்றவர்கள் சிரித்தனர்.

வாரேன்ம்மா..என்று அறை பக்கம் சென்று மறையிடம் வந்தான். அர்ஜூன் என்று முன் நின்றவர்களை விலக்கி விட்டு அவனிடம் ஓடி வந்தாள் அனு. அவளை தூக்கிக் கொண்டான்.

அனு இங்க வா. அப்புறம் அர்ஜூனிடம் போகலாம் என்று கமலி அவளை வாங்கிக் கொண்டார்.

மாமா கங்கிராட்ஸ் என்று அவனை அணைக்க, முதல்ல மாப்பிள்ளைக்கு மாலைய போடு. அப்புறம் பேசிக்கோங்க என்றார்.

அவரை பார்த்து விட்டு புன்னகையுடன் மறைக்கு மாலை போட்டு கையில் மாப்பிள்ளை அழைப்பு மோதிரத்தை அணிவித்து வரவேற்றான். ஸ்ரீ அவனையே பார்க்க, மறை கையை பிடித்த அர்ஜூன் கண்களும் ஸ்ரீயை தேடியது.

அர்ஜூன் மறை அவன் நண்பர்களுடன் மேடையில் ஏறினர். பொண்ணுங்க காயத்ரி அறைக்கு சென்றனர். ஐயர் சில மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தார்.

அர்ஜூன்..இது யார் ஏற்பாடு? எதுக்கு? மறை கேட்டான்.

என்னோட பாட்டி ஏற்பாடு தான். மாமா..ராக்கி அப்பா இறந்ததால கோவிலுக்கு போக வேண்டாம்ன்னு சொன்னீங்கல்ல. தீய கண்ணால் உங்கள் மூவருக்கும் ஏதும் ஆகக்கூடாது என்றும், அக்காவிற்கு நேற்று தாலியை கயிற்றில் தான கட்டுனீங்க. அதை தாலி செயினாகவும் மாங்கலயத்தை கோர்க்கவும் ஏற்பாடு செஞ்சிருக்காங்க. அதுக்காக தான் பூஜை ஏற்பாடு. மாமா..முடிய பதினொரு மணிக்கு மேல் ஆகுமாம்.

நடக்கட்டும் அதுவும் நல்லது தான்.

மாமா..சாப்பிடீங்கல்ல?

முடிச்சிட்டு தான் வந்துருக்கோம்.

அர்ஜூன் அவர்கிட்ட என்ன வெட்டியா பேசிகிட்டு இருக்க? போ..உன்னை பெரியத்தை கூப்பிடுறாங்க தாரிகா சொன்னாள்.

வெட்டியாவா? ஓய்..என்ன? என்று அர்ஜூன் சத்தம் கொடுக்க, தாரிகா அவனிடம் கவினை கேட்டாள்.

என்னை திட்டிட்டு அவனை கேட்கிறாய்? என்ற அர்ஜூன், மறை பார்வை தாரிகாவை தாண்டி சென்றது.

காயத்ரியும் அவளுடன் மற்ற பெண்களும், கவின் அம்மா, அபி அம்மா வந்தனர். ப்ரெண்டு என்று ராக்கி மறையிடம் ஓடி வந்தான். மறைக்கு காயத்ரியை பார்க்கவா? ராக்கியை பார்க்கவா? என்று இருந்தது. ராக்கியை மடியில் அமர்த்திக் கொண்டான். காயத்ரியை அவனருகே அமர வைத்தனர். மறையின் இதயம் படபடவென துடித்தது. அவன் அவளை பார்த்தான். காயத்ரியும் அவனை பார்த்தாள்.

அர்ஜூன் ஸ்ரீ அருகே வந்தான். அவள் அனுவை துக்கிக் கொண்டு நின்றிருந்தாள். அவன் அனுவை வாங்கி விட்டு ஸ்ரீயின் காதருகே வந்து, என்ன கொல்ற ஸ்ரீ என்றான்.

அர்ஜூன்..எல்லாரும் இருக்காங்க. என்ன பேசிக்கிட்டு இருக்க?

ஏய்..ஏதோ சொன்ன மாதிரி இருக்கே அபி கேட்க, கவின் அம்மா அர்ஜூன் காதை திருகி. நீ காயத்ரி மறை பக்கத்துல இரு என்று நகர்த்தி விட்டார். அனுவை தாரிகா வாங்கிக் கொண்டாள். ஐயர் மந்திரம் சொல்ல சொல்ல இருவரும் சொல்லிக் கொண்டிருந்தனர். அர்ஜூன் ராக்கியை தூக்கிக் கொண்டான்.

ஜில்லு நாமும் கல்யாணம் பண்ணிக்கலாமா? கவின் கேட்க, அவனை இடித்தாள். தேவும் ஆருத்ராவும் கீழே நின்று அனைவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர். சுவாதி அம்மாவிடம் ஆருத்ரா கேட்டு சுவாதியை பக்கத்திலே வைத்திருந்தாள். ஆனால் அவளை காணோம் என்று வெகு நேரம் கழித்து தான் பார்த்தாள் ஆருத்ரா. அவள் தேவ்விடம் வேறொரு காரணம் கூறி ஆருத்ரா நிவாஸூடன் அவளை தேடினாள்.

ஆருத்ரா சென்று வெகு நேரமானதால் அவர்களை தேடி தேவ்வும் வெளியே வந்தான். சுவாதி புடவையுடன் ஓட முடியாமல் ஓடி வந்தாள்.

தேவ்வை பார்த்து நின்று சார்..சார்..என்று பதற்றத்துடன், உங்க தங்கச்சி என்று அவள் மூச்சு வாங்கினாள்.

ஆருத்ராவா?

ஆமா சார்..ஒரு நிமிஷம் என்று போனை எடுத்தாள்.

அசு..வேண்டாம். அவங்கள விட்டுரு.

நீ எங்க இருக்க?

நான் வந்துட்டேன்.

சீக்கிரம் உள்ள வா..என்று ஓர் அறைக்கு வர சொன்னாள்.

வாரேன். அவங்கள ஏதும் செய்யாத என்று சுவாதி அழுதாள்.

போனை பிடுங்கிய தேவ். என்னோட ஆருவையும், மாப்பிள்ளைக்கு ஏதாவது ஆச்சுன்னா. நீ யார்ன்னு பார்க்க மாட்டேன் என்று மிரட்டினான்.

வாவ்..மிஸ்டர் ஹேன்சம். வாங்க வாங்க.

அவகிட்ட போனை கொடுங்க.

சொல்லு என்றான்.

அவகிட்ட கொடுங்க.

அவ பக்கத்துல தான் இருக்கா. சொல்லு என்றான்.

ஏய் அவரை பத்திரமா கூட்டிட்டு வாடி..என்று சுவாதியிடம் கூற,

அசு..இவங்க எல்லாரும் எதுக்கு? அவங்கள விட்டுரு. உனக்கு நான் தான வேண்டும் என்றாள்.

நான் வாரேன் என்று தேவ் போனை அணைத்தான்.

சார், அவ என்னோட அக்கா. ஆனால் அவள் கொஞ்சம் தொந்தரவு பண்ணுவா?

தொந்தரவு மட்டும் தானா?

சார்..அவ..என்று திணறினாள்.

எனக்கு தெரியும். வா போகலாம் என்று சுவாதி கையை பிடித்தான் தேவ்.

அவன் கையை எடுத்து விட்டு, சார் நீங்க உங்க ஃபேமிலிய எப்படியாவது கூட்டுட்டு போங்க. அக்காவை நான் திசை திருப்புகிறேன் என்றாள்.

காலையில் தேவ் தயாராகி மண்டபத்திற்கு வந்த போது சுவாதி சுடியில் தான் இருந்திருப்பாள். தேவ்வை பார்த்து அவனிடம் வந்து, சார் இங்க வாங்க என்று அவனை அமர வைத்து விட்டு கையை காட்டுங்க என்று அவளும் அமர்ந்து அவன் கையை பிடித்து பார்த்தாள்.

என்னம்மா பண்ற?

சார், நீங்க நிறைய ஆப்ரேசன் செய்திருப்பீங்கல்ல? உங்கள் கையை பாதுகாப்பாக வச்சுக்கோங்க என்று பேசிக் கொண்டிருந்தாள். தேவ்விற்கு போன் வர எடுத்தான் அவன் அப்பா தான்.

என்னடா பண்றீங்க?

அப்பா மண்டபத்துக்கு வந்துட்டோம். ஆரு தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

சார்..உங்களுக்கு நித்தி தெரியுமா? அவளும் ஸ்ரீ போல் தான் “சோ க்யூட்” என்றாள் சுவாதி.

ஸ்ரீ, நித்தியா? தேவ் எங்க இருக்க?

கொஞ்ச நேரம் அமைதியா இரு என்று சுவாதியிடம் கூறி விட்டு, அப்பா..நான் ப்ரெண்டோட கல்யாணத்துல தான் இருக்கேன்.

சார், உங்களுக்கு மறை அண்ணாவை முன்னமே தெரியுமா? நீங்க ப்ரெண்ட்ஸா? கேட்க, தேவ் தலையில் அடித்துக் கொண்டு அவள் வாயை மூடினான். சுவாதி அவனை பார்த்தாள்.

அப்பா..என்னோட ப்ரெண்டு தான்.

பக்கத்துல யாருடா பொண்ணு? அவர் கேட்க, தேவ் சுவாதி கண்களை பார்த்துக் கொண்டு போனை மறந்தான். அவன் கையை எடுக்க சார் உங்க அப்பாவா? என்று போனை வாங்கி,

ஹாய்..அங்கிள், சாரோட கை ரொம்ப சாஃப்டா இருக்கு. அங்கிள் இங்க சாப்பாடு செம்மையா இருக்கு. குலோப்ஜாமுன் செஞ்சிருக்காங்க..”சோ ஸ்வீட்”.

அங்கிள் நீங்களும் வர்றீங்களா? உங்களுக்கு ஸ்பெசலா நான் எடுத்து வைக்கிறேன்.

சுவாதி என்ன பண்ற? என்று போனை பிடுங்கினான் தேவ்.

சார்..உங்களுக்கு என்னோட பேர் தெரியுமா? சார்..சார்..எனக்கு உங்க ஆட்டோகிராப் வேணும்? போட்டுத்தாங்களேன்.

அப்பா, அந்த பொண்ணு..ப்ரெண்டோட தங்கை.

நீ எங்க இருக்கன்னு தெரியுது. ரெண்டு பேரும் இன்றே கிளம்பணும்.

அப்பா..இங்க மாப்பிள்ள வீட்ல மேரேஜ் ஃபங்சன்.

நாங்க மாலை கிளம்புகிறோம் என்றான். சீக்கிரம் வந்து சேருங்க என்றார்.

சுவாதி..சீக்கிரம் இங்கிருந்து போ. உன்னோட அக்கா வாரா?

அச்சோ..வந்துட்டாளா? எப்படி கண்டிபிடிச்சா? அய்யோ..கிருஷ்ணா என்று சுவாதி அமர்ந்தாள்.

அடியேய் வந்தா..நீ தொலைஞ்ச.

அக்கா தான எதுக்கு பயப்படுற? தேவ் கேட்டான்.

சார். அவளோட அக்கா இருக்கிற இடத்தில் இவள் இருந்தாள். அந்த ஒடஞ்ச லிப்ஸ்டிக் சுவாதியை அடிப்பா.

நீ வந்த வழி தான் நான் போகணும்? நான் எப்படி போறது? அமர்ந்தவாறே புலம்பினாள்.

எம்மா..நீ அங்கேயே நில்லு அவ வந்தா சொல்லு என்று சுவாதியை அவன் பின் நிறுத்திக் கொண்டான்.

சுவாதி எங்கடி போன..வந்துரு.இல்லை உன்னை அடிச்சே கொன்னுருவேன் என்று சத்தம் கேட்க, சார் அவங்க வந்துட்டாங்க. நான் போறேன். சுவாதிக்கு உதவுங்க ப்ளீஸ் சார் என்று அவள் ஓடி விட்டாள்.

இங்க வா என்று சுவாதியை அழைத்த தேவ்..அவன் கால் மீது நிற்க சொல்ல..சார் என்று தயங்கினாள். இப்ப வேற வழியே இல்லை என்றான்.

ஏய்..நீ எங்கடி போற? சுவாதி எங்கே? என்று அவள் தோழியை பிடித்து கேட்டாள் அஸ்வினி.

தெரியாதுக்கா என்று அவள் செல்ல..தேவ் அட்டன்சனில் நின்று அவன் கால் மீது அவளை நிற்க வைத்து அவன் உடலை வைத்து மறைத்து திரும்பி நின்று போன் பேசியவாறு நடித்தான். சுவாதி ஒடுங்கி நின்று அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனும் அவளை பார்த்துக் கொண்டிருக்க அஸ்வினி அவனை பார்த்து விட்டு சென்றாள். ஆனால் இருவரும் அப்படியே நிற்க, அங்கே வந்த சுவாதி தம்பி இருவரும் நின்று கொண்டிருப்பதை பார்த்து, அக்கா..என்று கத்தினான். அவள் பயந்து இடற, தேவ் அவளை பிடித்து நிற்க வைத்தான்.

இங்க என்ன பண்ற? சீக்கிரம் வா..என்று தேவ்வை முறைத்துக் கொண்டே சுவாதியை இழுத்து சென்றான். அவள் அவனை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள். அப்படி சென்ற இருவரையும் நிறுத்திய ஆருத்ரா..அவளை அவள் அம்மாவிடம் இழுத்து சென்று, எல்லார் முன்னும் இவ உங்க பொண்ணு தான இங்க இருக்கக்கூடாதாம்மே. அவ அக்கா இருக்கிற இடத்துல இவள் இருக்கக்கூடாதுன்னா..இவ எதுக்கு உங்களுக்கு என்று ஆருத்ரா கேட்க, சுவாதி அழுதாள்.

அங்கு வந்த அஸ்வினி யாருடி அவன்? யாரோட சுத்துற?

அவ யாரோட சுத்துனா உனக்கென்ன நீ நேத்து இரண்டு பசங்களுடன் என்ன பண்ணிக்கிட்டு இருந்த?

ஏய்..என்னை பத்தி பேச நீ யார்?

அவள பத்தி நீ பேசாத. உன்னை மாதிரி பொண்ணால தான் இவ கஷ்டப்படுறா?

கஷ்டமா? சொல்லுடி கஷ்டமா படுற? மிரட்டும் தொனியில் அவள் பேச, சொல்லு சுவாதி.

கஷ்டப்படலக்கா என்றாள் சுவாதி.

ஆரு கோபமாக அஸ்வினியை முறைத்து விட்டு, அவ கஷ்டப்படலைல்ல. நான் அவளை கூட்டிட்டு போறேன். அவள் கல்யாணம் முடியும் வரை எங்களுடன் தான் இருப்பாள் என்றாள் ஆருத்ரா.

அது எப்படி? நான் இருக்கும் போது இவளா?

நீ என்ன மகாராணியா? அதுக்கு கூட தகுதி வேண்டும். அது உனக்கு இல்லை என்று கிண்டலாக ஆரு கூற, ஆரு போதும் என்றான் நிவி.

அம்மா..நீங்க சொல்லுங்க. சுவாதி எங்களுடன் இருக்கலாம்ல என்று கூறி தான் அழைத்து சென்று புடவை உடுத்தி அவளை அழகாக தயார் செய்து..அனைவர் முன்னும் நிறுத்தி ஆராத்தி எடுக்க வைத்தாள். இப்பொழுது அவள் தேவ்வை பற்றி வேற தெரிஞ்சுக்கிட்டா. என்ன செய்கிறான்னு பார்க்கலாம்.

மேடையில் நின்ற அர்ஜூன் அனைவரையும் பார்த்து, நிவாஸை காணோமே? என்று ஸ்ரீயிடம் கேட்டான்.

நிவாஸ், ஆருத்ரா, சுவாதி, தேவ் அங்கே தான் நின்றார்கள். இப்பொழுது காணோமே? என்று பவி கூறினாள்.

எங்க போனாங்க? அர்ஜூன் கேட்க, கவினுக்கு அஸ்வினி நினைவு வந்தது. அவன் அவளை அனைத்து பக்கமும் கண்களால் அலசினான்.

அர்ஜூன்..அந்த அஸ்வினிய காணோம். ஏதும் பிரச்சனையாக இருக்குமோ? கவின் பதறி, நான் பார்த்துட்டு வாரேன் என்றான் கவின்.

இரு நானும் வாரேன் என்று அர்ஜூன் சொல்ல, நீ போகக்கூடாது அர்ஜூன். நீ செய்ய வேண்டிய சடங்குகளும் இருக்கு என்றார் வினிதா அம்மா.

கவின் வா..நாங்க வாரோம் என்று வேலு நண்பர்களை அழைத்தான்.

மாமா..என்று கவின் மறையை பார்த்தான். அதான் நான் இருக்கேன்ல. நீங்க போய் என்னன்னு பாருங்க என்றாள் அகல்யா.

ஆமா. ரொம்ப பெரிய மனுசி இருக்காலாம். நீங்க போங்க சார் கேலி செய்தான் மறை. அகல்யா சினத்துடன் அமைதியா இரு இல்ல பூச்சிய பிடிச்சு வேஷ்டிக்குள்ள விட்டுருவேன் என்றாள். காயத்ரி இருவரையும் பார்த்து புன்னகைத்தாள்.

ஏய்..என்ன பிரச்சனையோ தெரியல. நீங்க இப்ப தான் சண்டை போடணுமா? என்ற வேலு..அத்தை பார்த்துக்கோங்க என்று கவின் அம்மாவிடம் சொல்லி விட்டு அவர்கள் கிளம்பினார்கள். அபி கீழிறங்கி சுவாதி அம்மா, அப்பாவையும் அழைத்து சென்றார்.

தேவும் சுவாதியும் அஸ்வினி கூறிய அறைக்கு சென்றனர். ஆருத்ராவையும் நிவாஸையும் கட்டி வைத்திருந்தனர்.

அவங்கள அவிழ்த்து விடு என்றான் தேவ். அஸ்வினி தேவ் அருகே வந்தாள். அவன் சுவாதி கையை பிடித்திருந்தான். அதை தட்டி விட்டு அவனை சுற்றி சுற்றி வந்து அவனை ரசித்து பார்த்தாள். அவனுக்கு அவளை பார்க்கவே எரிச்சலாக இருந்தது.

அக்கா..உங்க தங்கச்சி என்று ஒருவன் சொல்ல, எடுத்துக்கோ என்றாள் அஸ்வினி.

எடுத்துக்கோவா? அக்கா..என்ன சொன்ன? சுவாதி கேட்க, அவளை இருவர் இழுத்து சென்றனர்.

அக்கா..வேண்டாம்ன்னு சொல்லு..சொல்லுக்கா என்று சுவாதி அழுதாள்.

என்னோட தங்கச்சிய விட்டுரு.

விடலாம். உனக்கு சுவாதியை பிடிக்குமா? கேட்டாள்.

இல்லையே? அப்படி பிடித்திருந்தால் அவளை இழுத்து செல்லும் போது சும்மா இருக்க மாட்டேனே என்றான் தேவ்.

மச்சான் என்ன பேசுறீங்க? அந்த பொண்ணு பாவம் நிவாஸ் கூற, மாப்பிள்ள எனக்கு நீங்களும், ஆருவும் தான் முக்கியம்.

அண்ணா..என்று சத்தமிட்டாள். உள்ளே சுவாதி அழும் சத்தம் ஒலிக்க ஒலிக்க தேவ்வால் பொறுமையாக இருக்க முடியவில்லை.

அவங்கள விடு என்றான் கையை மடித்துக் கொண்டு.

டேய்,..விடுங்கடா. ஆனால் நீ எனக்கு வேண்டுமே ஹேன்சம். அவர்களை அவிழ்த்து விட்டனர்.

மாப்பிள்ள ஆருவை கூட்டிட்டு போங்க என்று தேவ் சொல்ல..மாமா என்று நிவாஸ் தயங்கினான்.

சீக்கிரம் போங்க என்றான். இருவரும் வெளியேற..அஸ்வினி தேவ்வை நெருங்கி வந்தாள். வந்த அவளை கன்னத்தில் அறைந்தான் தேவ். அவளுடைய ஆட்கள் அவனை பிடிக்க,

இந்த வயசுல என்ன கேவலமா பண்ணிக்கிட்டு இருக்க?

கேவலமா? இல்லையே? நான் உன்னை ஏதும் செய்ய மாட்டேன். எனக்கு பணம் கொடு போயிடுறேன்.

பணம் கொடுத்தால் சுவாதியை விட்டுருவியா?

உனக்கு தான் அவள் மீது விருப்பமில்லையே? அப்புறம் என்ன உனக்கு அக்கறை?

அவ பொண்ணுடி. அதுக்கு தான் பாக்குறேன்.

டியா? நீ சொன்னா டி கூட இனிக்குதே?

ச்சீ..என்றான்.

சார், கெல்ப் பண்ணுங்க..என்று சுவாதி கத்தினாள். அவனை நகர விடாமல் ஆட்கள் பிடித்திருக்க, வேற வழியில்லை போல என்று அவர்களுடன் சண்டையிட்டு சுவாதி இருக்கும் அறைக்குள் நுழைந்தான். ஆனாலும் ஆட்கள் விரட்டினர். அவள் ஆடையை அவர்கள் பிடித்து இழுக்க, விடாமல் பிடித்து சமாளித்துக் கொண்டிருந்தாள்.

உள்ளே வந்த அஸ்வினி சுவாதியை அடித்தாள். அவள் தம்பி தேடி இங்கே வந்தான். அவனும் தேவ்வுடன் சேர்ந்து சண்டை போட முயன்றான். கொஞ்சமாக தான் உதவ முடிந்தது.

நீ சுவாதிய காப்பாத்து என்று தேவ் கத்தினான். பின் தேவ் அவன் பெல்ட்டை உருவி அனைவருடனும் சண்டை போட கவின், வேலு நண்பர்களும் அவனுடன் சேர்ந்து கொண்டனர். அபி..தீனாவிற்கு சொல்ல, அவன் வந்து கொண்டிருந்தான்.

 

 

 

 

Advertisement