Advertisement

அத்தியாயம் 107

 “ஹே மை ஏஞ்சல்… ஹே மை ஏஞ்சல்

           ஹே……மை ஏஞ்சல்

     வாகை சூடிய என் கொடியே

        நித்தம் நித்தம்  உனை

      நினைத்து வாழ்வேனோ?

    மெழுகுசிலை காரிகையோ

    நீ என் உறவாக வாரோயோ?

             உயிராக வாராயோ?

    யாரிடமும் நெருங்காத என் மனமோ

       உனை பார்க்கத் தோன்றுதே?

        உன்னுள் சேர தோன்றுதே?

     கூறத்தோன்றுதே….என் காதலை…

    ஹே மை ஏஞ்சல்… ஹே மை ஏஞ்சல்

              ஹே…..மை ஏஞ்சல்

        நீயோ…. வந்தாய்

        என் வாழ்வினுள்

     முழுதாய்… நிறைந்தாயே?

       மனதெங்கும் உனையே

     நினைத்திருக்க…ஈருடலாய்

       என்னுள் கலப்பாயோ?

       என் பைங்கிளியே?

        என்னுயிறானவளே?

     கார்மேகமாய் விரித்த கூந்தலில்

      சிக்குண்டு தவியாய் தவித்து

      உன் திராட்சை கருவிழியில்

     எனை நானே மறந்தேனே?

        ஏற்பாயா? ஏற்பாயா?

            எனை நீயே!

        மீட்பேனா? மீட்பேனா?

           எனை நானே!

     மையுறுக்கும் காதல் கன்னியாய்

        வலம் வந்து உயிருறுக்கி

     மயக்கினாயே! மயக்கினாயே!

                எனை நீயே!

     தொலைத்தேனே! தொலைத்தேனே!

               எனை நானே!

     ஹே மை ஏஞ்சல்… ஹே மை ஏஞ்சல்

              ஹே……மை ஏஞ்சல்

      நினைவாய் என்னருகே நீயிருக்க…

             கனவாய் வாழ்ந்தேன்

          என் ஆருயிர் தோழியே!

          என் ஆருயிர் தேவியே!

       ஒத்த நிலவாய் நீயிருக்க…

        விண்மீனாய் வருவேன்

        என் ஆருயிர் தோழியே!

        என் ஆருயிர் கவியே!

      மீனாய் வலையில் நீயிருக்க…

           ஓயாத அலையாய்

        துடிக்குதடி என் மனமே!

              என் ஆசைக்கனவே!

      பாறையாய் இறுகிய மனதை

        என் அன்பென்னும் கடலில்

       கரைப்பாயோ? என் உயிரே!

                              என் காதலியே!

        கண்டேனே! கண்டேனே!

           விழுந்தேன் முதலாய்…

        சாய்த்தாயே! சாய்த்தாயே!

            உயிரென இறுதியாய்..

       ஹே மை ஏஞ்சல்… ஹே மை ஏஞ்சல்

                  ஹே……மை ஏஞ்சல்

         இம்சித்த உணர்வுகளை

             உனதாக்கி விட

         ஏனோ…. உனை கவர

              தவிர்த்தேன்.

    நீயே என் காதலென…மனமுணர்ந்து

             எனை ஏற்பாயா?

          விதையாய் முளைத்து

            கருவாய் காத்து

         வேரூன்றிய காதலை

            பூவாய் மலர்த்தி

          முன் நிற்கின்றேன்.

     நீயே என் காதலென…. மனமுணர்ந்து

          எனை ஏற்பாயா?

    ஹே மை ஏஞ்சல்… ஹே மை ஏஞ்சல்

          ஹே…….மை……ஏஞ்சல்……”

அனைவரும் கரவொலி எழுப்பினர். ஸ்ரீ கையை பிடித்து பாடிக் கொண்டே அவளை நெருங்கி முத்தமிட்டு மயங்கினான் அர்ஜூன்.

ஸ்ரீ கண்ணில் கண்ணீருடன்..எனக்கு நேரம் வேண்டும். பிரச்சனை முடியட்டு பின் உனக்கான பதிலை சொல்கிறேன் அர்ஜூன் என்று திகைப்பு மகிழ்ச்சி கலந்து பார்த்துக் கொண்டிருந்த நிவாஸ் மீது அர்ஜூனை தள்ளி விட்டு அழுது கொண்டே ஓடினாள் ஸ்ரீ. தாரிகாவும் பவியும் அவள் பின் ஓடினர்.

காயத்ரியும் மறையும் எழுந்தனர். பின்னிருந்து அவர்களிடம்..அவங்கள நாங்க பார்த்துக்கிறோம். நீங்க சாப்பிட போங்க என்று அகல்யா இவங்கள அழைச்சிட்டு போ என்றார் கவின் அம்மா.

பிரபோஸ் பண்ணி முடிச்சு கரெக்டா சம்பவத்தை முடிச்சிட்டு மயங்கிட்டான் பாரு நிவாஸ் புலம்ப, கவினும் அபியும் அர்ஜூனை ஓர் அறைக்குள் இழுத்து சென்றனர். அகிலும் நிவாஸூம் அவனை திட்டிக் கொண்டே சென்றனர்.

விசாலு..உன் பேரன் நல்லா பாடுனான்டி,..எல்லார் முன்னாடியும் இப்படியா முத்தம் கொடுப்பான்? ஒரு பாட்டி கேட்க, அவன் தான் சொன்னான்ல. கல்யாணமென்றாலே அவளுடன் என்று முடிவெடுத்துட்டானே? அப்புறம் என்ன? வாய மூடிக்கிட்டு போடி என்று அவர் பேச..பேரனை விட்டுக் கொடுக்க மாட்டீயே? என்று அவர் சென்றார்.

இந்த மாதிரி யாராவது என்னிடம் காதலை சொன்னா எப்படி இருக்கும்? ஒரு பொண்ணு கேட்க, நல்லா தான் இருக்கும் என்று அர்ஜூனை அவர்கள் இழுத்து சென்ற திசை பக்கம் பார்த்து ஒரு பொண்ணு பேசினாள்.

ஏன்டி அவனையே பாக்குற?

அர்ஜூன்..சோ க்யூட் டி. அவளுக்கு அப்பொழுதிலிருந்தே அவனோட காதல் புரியல. இவன் மட்டும் அவளை விட்டால் எத்தனை பொண்ணுங்க அவனுக்கு ஓ.கே சொல்லுவாங்க தெரியுமா?

நீ சொல்லிடுவ போல. பார்த்துடி கிழவி உன்னை புட்டாக அவித்து விடாமல். அவனுக்கு மட்டுமல்ல கிழவிக்கும் அவளென்றால் உயிர்.

அதான் அவன் அம்மா இருக்காங்களே. அவங்களுக்கு அவளை சுத்தமாக பிடிக்காதுடி. முயற்சி செய்து பார்.

ஓய்..என்ன பேசுறீங்க? ஸ்ரீ அர்ஜூனுக்கு ஓ.கே சொல்லுவா ஒரு பொண்ணு அங்கு வந்தாள்.

சுவாதி..நீ எப்ப ஊருக்கு வந்த?

நான் வந்தது இருக்கட்டும். என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க? என்று அமர்ந்தாள்.

அவர்கள் கூற, அவள் புன்னகையுடன் கண்டிப்பா ஸ்ரீ ஓ.கே சொல்லுவாள். அவள் அனைத்தையும் மறந்திருக்கலாம். அவள் நம்ம ஸ்ரீ தான். இப்ப அவளுக்கு நெருக்கமாக யாரு இருக்காங்க? என்று கேட்டாள் சுவாதி.

அவளுக்கு தம்பி இருக்கானாம் என்று நிவாஸை பற்றி கூறினார்கள்.

ஏய்..அந்த பொண்ணை சாதாரணமா நினைக்காதீங்கடி. அந்த பொண்ணால தான் நம்ம ஊர் காப்பாற்றப்படுவதும், அழிவதும் அவள் கையில் தான் இருக்கு வயசு பொண்ணுங்களிடம் பாட்டி ஒருவர் சொல்ல கமலி..அவரிடம் என்ன சொல்றீங்க? என்று கேட்க, அவர் கூறும் ஸ்ரீ பற்றிய விவரத்தை அதிர்ந்து கேட்டனர்.

ஓ..இதனால் தான் அர்ஜூன் பொண்ணுங்க யாரையும் பக்கத்துல விடுறதில்லையோ சுவாதி கேட்க, கமலி அவர் அம்மாவிடம் கேட்டு அனைத்தும் உண்மை என்று அறிந்து கொண்டார். அந்நேரம் உள்ளே வந்தனர் ஆருத்ராவும் தேவும்.

அண்ணா..என்னடா யாரையுமே காணோம்? எங்க போனானுக?

முதல்ல மாப்பிள்ளைய தேடு என்றான் தேவ்.

சுவாதி..உன்னை அம்மா கூப்பிடுறாங்க ஒருவன் கத்தினான். இருங்கடி வாரேன் என்று டேய்..அதுக்கு ஏன்டா கத்துற? நான் அர்ஜூன் ஸ்ரீயை பார்த்துட்டு வாரேன்னு அம்மாகிட்ட சொல்லு என்று ஓடி வந்தாள். தேவ்வை அவள் இடித்து விட்டு, சாரி..சாரி..என்று கத்தாத..போய் அம்மாவை சமாளி. நான் வாரேன். தேவையில்லாம ஏதாவது சொன்னா..அப்புறம் நீ தம் அடிச்சத அம்மாகிட்ட சொல்லிடுவேன் என்று அவள் தம்பியை மிரட்டினாள்.

தன் கண்ணில் அணிந்திருந்த கூலரை கழற்றி விட்டு, அவளை பார்த்துக் கொண்டிருந்தான். ஆருத்ரா முந்தி அவளிடம் வந்து, ஸ்ரீயா? நிவி எங்க இருக்கான்? சுவாதியிடம் கேட்டாள்.

நிவியா? யாரது?

நிவாஸ் ஸ்ரீயோட பிரதர்.

ஓ..நிவாஸ். உங்களுக்கும் அவங்களும் என்ன சம்பந்தம்?

நானும் அவனும் லவ் பண்றோம்.

நீங்க பார்த்தீங்கன்னா சொல்லுங்க. நானும் அவனிடம் பேசணும்? என்றாள் சுவாதி.

நீங்க எதுக்கு அவனிடம் பேசணும்? ஆருத்ரா கேட்டாள்.

நான் முக்கியமான விசயம் ஒண்ணு பேசணும்.

என்ன பேசணும்?

ஆருத்ரா காதருகே வந்து, சீக்ரட் என்றாள்.

நிவாஸும் கவினும் வந்தனர்.  நிவி இந்த பொண்ணு ஏதோ சீக்ரட்டுன்னு சொன்னா? நிவாஸூடம் சொல்லிக் கொண்டே ஆருத்ரா அவனிடம் ஓடி வந்தாள்.

ஹேய்..ஓடாத காபி கொண்டு வாராங்க சுவாதி சத்தமிட்டாள். ஆருத்ரா தேவ்வை திடீரென அங்கு பார்த்த நிவாஸூம் கவினும் அவர்களை பார்த்து நிற்க, கிருஷ்ணா….என்று அமர்ந்தாள் சுவாதி.

கிருஷ்ணாவா? ஏம்மா..உனக்கும் ஆள் இருக்கா என்று தேவ் அவளருகே வந்து குனிந்து அவளை பார்த்தான்.

ஆருத்ரா மேல் காபி கொட்டுவதற்குள் சுவாதியின் தம்பி அவளை தள்ளி விட்டான். அகில் அவளை பிடித்து..பார்த்து வரவே மாட்டியா? திட்டினான். நிவாஸ் பதறி அவனிடம் வந்தான்.

கண்ணை திறந்து பார்த்து, அய்யோ…பூச்சாண்டி என்று கத்தினாள் சுவாதி. அங்கு பார்த்த அகில் அவர்களிடம் வந்து, அண்ணனும் தங்கச்சியும் எதுக்கு இங்க வந்தீங்க?

யோவ்..அந்த பொண்ணு உன்னை பார்த்து தான் பயப்படுது. தள்ளி வாய்யா என்றான் கவின்.

சுவாதியை பார்த்துக் கொண்டே நிமிர்ந்த தேவ், என்னை மதிக்கவே மாட்டியா? கவினிடம் கேட்டான்.

நீ டாக்டர்ன்னா மதிக்கணுமா? கவின் கேட்க, டாக்டரா என்று எழுந்த சுவாதி..சார், நீங்க எந்த ஹாஸ்பிட்டலில் ஒர்க் பண்றீங்க? உங்க பெயர் என்ன? கேட்டாள்.

எதுக்கு என்னோட அண்ணாவ பத்தி கேக்குற? என்று ஆருத்ரா கேட்டாள்.

நான் மெடிக்கல் காலேஜ்ல தான் படிக்கிறேன். எனக்கு சென்னையில டாக்டர்ஸ் யாருமே தெரியாது. தெரிஞ்சா நல்லது தானே. நான் பயிற்சிக்காக நீங்க வொர்க் பண்ற ஹாஸ்பிட்டலுக்கு வரலாமா? கேட்டான்.

ஆடு தான சிக்குறத கேள்விபட்டிருக்கிறியா நிவி? நேர்ல பாரு என்று கவின் சொல்லி விட்டு, சுவாதி..நீ எப்படி பர்ஸ்டு நீட்லயே பாஸ் ஆன?

படிடா..பாஸ் பண்ணலாம் என்று நிவாஸை பார்த்து, நீ தான் ஸ்ரீயோட பிரதரா? அவனருகே சென்று அவன் கன்னத்தை பிடித்து இழுத்து, சோ..க்யூட் என்றாள்.

ஏய்..என்ன பண்ற? போடி என்று ஆருத்ரா அவளை தள்ள..ஹலோ சிஸ்டர், நான் அவனிடம் பேசணும் என்றாள் சுவாதி.

என்ன பேசணும்?

வெளிய சொல்ல முடியாத சீக்ரட். அவனிடம் நீ என்ன பேசப் போற? அகில் அவளிடம் கேட்டான்.

ஹேய்..அகில், ஸ்ரீ எங்கடா? அவ வந்துட்டாலாமே? அவள பார்த்து வருசமாகிடுச்சு. இவனிடம் பேசிட்டு வாரேன்.

அவனிடம் என்ன பேசணுமோ என்னிடம் சொல்லு என்றான் அகில். இல்லை எங்களிடம் என்று கவின் அவனருகே வந்தான். என்னிடமும் என்று அபியும் வந்தான்.

உங்க யார் கிட்டையும் சொல்ல முடியாது. நிவி வா..போகலாம் என்று நிவாஸ் கையை சுவாதி பிடிக்க, அவள் கன்னம் பழுத்தது.

இங்க என்னடி பண்ற? வா..வீட்டுக்கு..என்று சுவாதி அம்மா அவளை இழுக்க, அம்மா..ப்ளீஸ் அவனிடம் அஞ்சே நிமிசம் பேசிட்டு வாரேன்.

ஆம்பள பசங்களிடம் என்னடி பேச்சு? என்று அவளை இழுக்க..அம்மா..அவ என்ன சொல்றான்னு மட்டும் கேட்க விடுங்க கவின் சொல்ல, சொல்லுடி இப்பவே சொல்லு..என்றார்.

இல்லம்மா. அவனிடம் நான் தனியா தான் பேசணும் என்றாள். மீண்டும் அம்மாவிடம் அடி வாங்கினாள்.

போதும். நிறுத்துங்க. எல்லாரும் இருக்காங்க. சும்மா சும்மா அவள அடிக்காதீங்க என்று அவள் தம்பி வந்து அம்மா கையை தட்டி விட்டான்.

சந்தேகப்பட்டுகிட்டே இருக்காதீங்க. வா..என்ன பேசணுமோ பேசு. நான் பக்கத்தில் இருக்கேன் என்று அவள் தம்பி சுவாதி, நிவாஸ் கையை இழுத்து சென்றான்.

சுவாதி சொன்ன விசயத்தை கேட்டு சந்தோசமாக நிவாஸ் ஸ்ரீ வாழ்க்கைக்கு இது போதும் என்று வெளியே வந்தனர்.

ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர் நிவாஸ் கை குலுக்க, அவள் அம்மா அவளை பிடித்து இழுத்தார்.

ஏன் இப்படி அவங்கள கஷ்டப்படுத்துறீங்க? நிவாஸ் கேட்க, அவ என்னோட பொண்ணு. நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று மேலும் அவளை இழுக்க..அம்மா..ஸ்ரீ வந்திருக்காலாம். நான் பார்த்துட்டு வரவா? ப்ளீஸ் என்றாள்.

அனைவரையும் பார்த்த அவள் அம்மா, வா..நானும் வாரேன் என்று அவளுடன் செல்ல, மற்றவர்களும் அவள் பின் செல்ல..உறைந்து இருந்த தேவ்வை பின்னிருந்து தட்டினான் அபி.

என்ன சார்? ரூட் விட முடியலையா?

இவகிட்ட முடியாது. இல்லை இவ அம்மாவை பார்த்தீங்கள்ள..காலி பண்ணிடுவாங்க என்றான். வாங்க என்று அபி அழைக்க சென்றான் தேவ்.

ஸ்ரீயிடம் காயத்ரியும் மறையும் நின்றிருந்தனர். மறை ராக்கியை வைத்திருக்க, காயத்ரி ஸ்ரீயிடம் பேசினாள்.

ஸ்ரீ நீ கஷ்டப்படாத. அவன் குடிச்சதால தான் அப்படி செய்துட்டான்.

இல்லக்கா. எனக்கு அதெல்லாம் பிரச்சனையில்லை. ஆனால் அவனிடம் பதில் கூறும் நிலையில் நான் இல்லை. அவன் எந்த அளவு காதலிக்கிறான் என்று எனக்கும் தெரியும். ஆனால் நிறைய பிரச்சனை இருக்கு. இனியும் வரும். அவன் முதல்ல அதுல கவனத்தை செலுத்தாமல் என்னை பற்றியே நினைக்கிறான். ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் அவனுக்கு என்னால் ஆபத்து வருமோன்னு பயமாவே இருக்கு என்றாள்.

என்னம்மா இப்படி பேசுற? அவனுக்கு உன்னை சின்ன வயசுல இருந்தே பிடிக்கும். இது நம்ம ஊர்ல எல்லாருக்குமே தெரியும். உனக்கு தான் நினைவில்லைன்னு சொல்ற? அப்பெல்லாம் நீ எதுக்கும் பயப்படவே மாட்ட. துணிஞ்சு செய்வ. ஆனால் இப்ப பயப்படுற..மறை கேட்டான். காயத்ரி அவனை பார்த்தாள்.

அது வந்து எனக்கு அப்ப தெரியல. ஆனால் இப்ப ரொம்ப சீரியஸ். யாசு சீனியருக்கு எப்படி அடி பட்டிருந்தது தெரியுமா? என்று யாசுவை பார்த்தாள். அங்கே பவி, தாரிகாவும் இருந்தனர்.

அதெல்லாம் ஏதும் ஆகாது. நாங்க எல்லாரும் இருக்கோம். யாருக்கும் ஏதும் ஆகாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று மறை கூறிக் கொண்டிருக்க..சுவாதி ஸ்ரீயை பார்த்து, ஸ்ரீ..என்று அவளிடம் ஓடி வந்து பெட்டில் ஏறி அணைத்துக் கொண்டாள்.

எப்படி இருக்க ஸ்ரீ? அர்ஜூன் புரோப்போஸ் பண்ணிட்டாமாமே? கங்கிராட்ஸ் என்றாள்.

நீங்க யாரு? ஸ்ரீ கேட்க, உனக்கு நினைவிருக்காதுன்னு எனக்கு தெரியும். நினைவு வரும் போது கால் பண்ணு என்று அவள் நம்பரை கொடுத்தாள். இன்னும் டூ டேஸ்ல நான் கிளம்பிடுவேன்.

உன்னோட தம்பிகிட்ட பேசுனேன். சோ க்யூட் அப்படியே உன்னை மாதிரி என்றாள். எல்லாரும் அவளையே பார்த்தனர். மறை அண்ணா கங்கிராட்ஸ்.. என்று கீழிறங்கினாள் சுவாதி.

போகலாமா? அவள் அம்மா கேட்க, சாப்பிட்டு போங்க என்றான் மறை.

சரிப்பா என்று அவளை இழுத்து செல்ல, தேவ்வை பார்த்து சார்..என்று நின்றாள்.

என்னடி பேச்சு வேண்டி இருக்கு? அம்மா சத்தமிட, அவள் அமைதியாக சென்றாள்.

இன்னும் அவங்க மாறவேயில்லைல அண்ணா? என்று அகில் அவளை பார்த்துக் கொண்டே மறையிடம் கேட்டான்.

சில பேர மாத்தவே முடியாது அகில் என்றான் மறை சுவாதி அம்மாவை பார்த்துக் கொண்டே.

அண்ணா..நீங்க சாப்பிட்டீங்களா? ரெண்டு பேரும் ஊட்டிகிட்டீங்களா? கேட்டாள் யாசு கேலியாக. காயத்ரி அவளை முறைத்தாள்.

அக்கா, எதுக்கு முறைக்கிறீங்க? இப்ப நீங்க முறைக்கக் கூடாது வெட்கப்படணும் மேலும் அவள் கேலி செய்தாள்.

சீனியர் சும்மா இருங்க தாரிகா கூற, காயத்ரி வெளியே சென்றாள்.

என்னம்மா நீங்க? ஏற்கனவே அங்க எல்லாரும் கேலி செய்தது போதாதா? நீங்களுமா? என்று மறையும் ராக்கியுடன் அவள் பின்னே சென்றான்.

காயத்ரி மறையிடம் கோபத்தை காட்டவில்லை. மாறாக அவனை கொடுங்க நான் வச்சிருக்கேன். எவ்வளவு நேரம் தூக்குவீங்க என்று பையனை வாங்கினாள். அங்கே வந்த தாரிகா அம்மா பையனை வாங்கி விட்டு..இருவரும் கொஞ்ச நேரம் அமருங்கள் என்று சென்றார்.

ஆட்கள் கலைய சிலர் மட்டுமே இருந்தனர்.

உங்களுக்கு விருப்பமில்லையா? ஆனால் நீங்க சரின்னு சொன்ன பின் தானே ஏற்பாடு நடந்தது? மறை காயத்ரியிடம் கேட்டான்.

எனக்கு விருப்பமில்லாமல் மேடை ஏறி இருக்க மாட்டேன்.

அவருடன் என்று அவனை பற்றி கேட்கவும்..அவன் தாலி மட்டும் தான் கட்டினான். எந்த சடங்கும் நடக்கவில்லை. அத்தைக்கு அப்பொழுதே ஆசை தான். ஆனால் அவன் வேண்டாம் என்று உறுதியாக கூற..யாரும் எதுவுமே செய்யலை. அத்தை தான் கோவிலுக்கு கூட அழைத்து சென்றார்; செல்வார். அவனுடன் ஒரு நாள் கூட வெளியே சென்றதில்லை. வீட்டினுள் அறையினுள் என்று அவள் கண்கள் கலங்கியது. அவளருகே அமர்ந்த மறை அவள் கையை பிடிக்க வர, வேண்டாம். எனக்கு கொஞ்ச நாட்கள் அவகாசம் வேண்டும். அவனால் பட்ட கஷ்டத்தை மறக்கவே முடியல.

இந்த கல்யாணம் நம் மீதான அவப்பெயரை போக்க தான் நினைத்தேன். ஆனால் நீங்க அவ்வளவு மோசமில்லை. என்னால் யாரையும் நம்ப முடியல. என்னை கூட விடுங்கள். ராக்கிக்கு பாதுகாப்பு வேண்டும். நீங்க அவனை நல்லா பார்த்துக்கிறீங்க. ரொம்ப நன்றி. அவன் இதுவரை எந்த ஆணுடன் இந்த அளவிற்கு நெருக்கமாக இருந்ததில்லை.

அத்தை, வினி, அத்தையின் மகளிடம் கூட சில நேரம் சென்றிருக்கிறான். ஆனால் வேறு யாரிடமும் சென்றதில்லை.

அவர் ஸ்டாரையுமா கஷ்டப்படுத்துவாரா?

ஆமா. அவன் முன் என்னை அடிப்பான். கழுத்தை கூட நெறித்திருக்கிறான். அவனை அப்பா என்று சொல்லவே பயப்படுவான். நான் தான் யாருக்கும்  ஏதும் தெரிய வேண்டாம்ன்னு அவனை அப்பா என்று அழைக்கலைன்னா அம்மாவை அடிப்பான்னு சொன்னேன். ஆனால் இரு, மூன்று முறை ராக்கியையும் அடித்தான். அப்பொழுது தான் முதல் முறையாக ராக்கிக்கு ஃபிக்ஸ் வந்தது. அதிலிருந்து அவன் வரும் முன்னதாகவே பையனை தூங்க வைத்து விடுவேன். அவனுக்கு அப்பா என்று அழைத்தாலே பிடிக்காது.

உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லைன்னாலும் ஏதாவது கஷ்டம், பிரச்சனைன்னா சொல்லுங்க என்று அவள் கண்ணீரை துடைத்து விட்டான். அவள் அவனையே பார்த்தாள்.

கண்ணீரை தான் துடைத்து விட்டேன். தவறா?

இல்லை. என்னோட அம்மாவுக்கு நான் செய்யும் எதுவுமே பிடிக்காது. என்னோட தைரியம் அவங்களுக்கு பயம். ஆனால் அப்பா என்னை அழ விட்டதே இல்லை. என்னோட தைரியத்தின் அஸ்திவாரமே அவர் தான். அவர் எனக்கு கொடுத்த தைரியம் கூட அவனிடம் செல்லுபடியாக வில்லை. வினி மேலுள்ள பாசம் என் தைரியத்தை தோற்கடித்து விட்டது.

வினி..இப்ப ஹாப்பியா இருப்பா என்றாள். அதாவது நான் உன்னை ஏற்றுக் கொள்ளவில்லை. எனக்கான ஒருவனாக உனக்கு வாய்ப்பிருக்கு என்று சொல்வது போல் மறைக்கு தோன்றியது.

ம்ம்..பாசம் சில நேரங்களில் அனைத்தையும் இழக்க வைக்கிறது என்றான் அவன். இருவரும் அருகருகே அமர்ந்திருப்பதை பார்த்த வேலு நண்பர்கள்..

என்னடா..மச்சான் வீட்டுக்கு போகிற மாதிரி தெரியலையே? சரவணன் கேட்க, எப்படிடா போவான்? அவனோட வொய்ப் பக்கதில இருக்கும் போது வீடா? வீடு காணாமல் தான் போகும்.

காயத்ரியை பார்த்த வேலு, அவனை கேலி செய்தது போதும். வீட்டுக்கு போங்கடா. நான் அவனை வீட்டில் விடுகிறேன்.

ம்ம்..நடத்துடா..என்று மற்றவர்கள் கிளம்ப, வேலு அவர்களுடன் அமர்ந்தான்.

பையனை எங்கடா?

அவன் தூங்கிட்டான் டா. அஞ்சனா ஆன்ட்டி தான் தூக்கிட்டு, வாரேன்னு போனாங்க.

ம்ம்..என்று காயத்ரியை பார்த்தான் வேலு. சிஸ்டர் ஏதாவது உதவி வேணும்னா சொல்லுங்க? என்றான்.

ஓ.கே பிரதர் என்றாள் காயத்ரி.

நல்லா பேசுறீங்களே? நான் கூட முறைக்க தான் செய்வீங்கன்னு நினைச்சேன்.

முறைச்சா..யாரும் நம்ம பக்கத்துல வர மாட்டாங்க.

ஓ..டிரிக்கா..சூப்பர்..சூப்பர்..

மாமா..என்று அகல்யா வந்தாள். இங்க பாருங்க இதுல எது நல்லா இருக்கு? என்று சில ஆடைகளை போனில் காட்டி கேட்டாள்.

எதுக்கு பாப்பு?

மாமா, உங்களுக்கு எது பிடிச்சிருக்குன்னு சொல்லுங்க? இது எல்லாமே குறைந்த விலை தான்.

உனக்கு என்ன பிடிச்சிருக்கோ. வாங்கிக்கோ..என்றான்.

மாமா..இது சூப்பரா இருக்குல என்று ஒரு புடவையை காட்டினாள்.

நல்லா இருக்கே. என் பாப்புக்கு எல்லாமே நல்லா இருக்கும் என்று நெற்றி முட்டி சிரித்தான்.

“தேங்க்ஸ் மாமா” இதை ஓ.கே பண்ணிடுறேன் என்றாள்.

நில்லு..நீ வேறத தான காட்டி நல்லா இருக்குன்னு சொன்ன? ஆனா வேற எதையோ வாங்கப் போறதா சொல்ற?

இல்ல. அவர் பார்வை அவள் இப்பொழுது வாங்குவதாக கூறுவதில் தான் இருந்தது. இதை கவனித்து தான் அவள் கூறுகிறாள் காயத்ரி கூற, உனக்கு இது கூட புரியலையா? பாவம் நீங்க..இவனை வச்சுக்கிட்டு எப்படி தான் ஒப்பேத்த போறீங்களோ?

அவள அமைதியா போக சொல்லு இல்ல மறை கோபப்பட, பாப்பு நீ போ என்றான்.

மாமா..அவனுக்காக என்னிடம் கோபப்படுறீங்களா? மறை அவளை முறைச்சு பார்த்தான்.

இருவரும் எதுக்கு சண்டை போட்டுகிட்டே இருக்கீங்க?

நான் இல்லை இவள், இவன் என்று இருவரும் சொல்ல..பாப்பு நீ வா..என்று வேலு அவளை அழைத்து சென்றான். பெரியத்தை அவர்களிடம் வந்தார்.

பெரியத்தை மறைக்காக எடுத்த ஆடையை கொடுத்தார்.

இருக்கட்டும்மா என்றான்.

என்னை அம்மான்னு நினைக்கிறதா சொன்னீங்கல்ல. அம்மாவிடம் யாராவது வேண்டாம்ன்னு சொல்லுவாங்களா? அவன் வாங்கி விட்டு வாரேன்ம்மா விட்டு வேலுவை தேட, அவன் அவனாகவே மறையிடம் வந்து கிளம்பலாமா?

கிளம்பலாம்டா என்று காயத்ரிடம் போயிட்டு வாரேன் என்றான். அவளும் புன்னகையுடன் தலையசைத்தாள்.

தேவ், ஆருத்ரா, நிவாஸ் ஸ்ரீயை பார்த்து விட்டு வெளியே வர சுவாதி சாப்பிட சென்று கொண்டிருந்தாள். ஆனால் ஆடையை மாற்றி மேக் அப் போட இருந்தாள்.

அவளிடம் பேசலாமா? என்று தேவ் நிவாஸிடம் கேட்க, மாமா என்னிடமா கேட்டீங்க?

பொண்ணுங்கள பார்த்தா நல்லாவே கடல போடுவீங்க. இம்பிரஷ் ஆகிட்டீங்களா?

முழுசா அப்படி சொல்ல முடியாது.

அண்ணா..அவள பிடிச்ச்சிருக்கா என்று ஆருத்ரா கேட்க, முதல்ல அவளுக்கு ஆள் இருக்கான்னு பார்ப்போம் என்று அவன் செல்ல, சுவாதியுடன் இரு பசங்க கையை கோர்த்துக் கொண்டு சென்றனர்.

இப்ப பேசலாமே? நிவாஸ் கிண்டலாக சொல்ல, வா..போகலாம் என்று அவளை நோக்கி நடந்தான் தேவ்.

மாமா..அந்த பசங்க கண்டிப்பா ப்ரெண்ட்ஸ் மாதிரி தெரியலை.

இரு நிவி பார்க்கலாமே? ஆருத்ரா சொன்னாள். ஓ.கே போகலாம் என்று மூவரும் செல்ல..கவின் அவர்களை பார்த்து விட்டு ஓடி வந்தான்.

சீனியர் எதுக்கு இந்த ஓட்டம்?

உங்களுக்காக தான்.

எங்களுக்காகவா?

ஆமா. அவளை சுவாதின்னு நினைச்சுட்டீங்களா? அவ சுவாதி இல்லை என்று மூச்சு வாங்கி, சார் அவ பக்கம் போகாதீங்க.

சாரா? தேவ் கேட்டான்.

அப்புறம் எப்படி கூட்டுறது?

அதை விடுங்கடா. சுவாதி இல்லைன்னா. இவள் யாரு? ஆருத்ரா கேட்டாள்.

இவளும் சுவாதியும் இரட்டையர்கள். ஒரே மாதிரி இருப்பாங்க. இவள் சரியான ராங்கிக்காரி. எப்பொழுதும் பசங்களுடன் தான் சுற்றுவாள். சுயநலவாதி. ஆனால் இவளை தான் சுவாதி அம்மாவுக்கு பிடிக்கும். இவளுக்கு சுவாதியை பிடிக்காது. இவள் சுவாதியை பயன்படுத்திப்பா. இவள் என்ன வேலை சொன்னாலும் சுவாதி கேட்பா அவளோட அம்மாவுக்காக. ஆனால் இவளால் ரொம்ப கஷ்டப்படுவா. அவள பார்த்தாலே பாவமா இருக்கும். இவளிடமிருந்து விடுதலை கிடைக்கும் நாள் தான் அவளுக்கு நல்ல நாள்.

சுவாதி ராசியில்லாதவள் என்ற எண்ணம் அவள் அம்மாவிற்கு மேலோங்கி இருந்தது. அதற்கேற்றவாறு இந்த அஸ்வினி பிறந்த பின் அவர்கள் வீட்டில் செல்வம் பெருக, இவள் ராஜ்ஜியம் தான். சுவாதியை பற்றி இல்லாததும், பொல்லாததுமாக பேசி அடி வாங்கித் தருவாள்.

ஸ்ரீக்கும் அஸ்வினிக்கும் அப்பொழுதே ஆகாது. சுவாதிக்கு உதவியதால் அஸ்வினி ஸ்ரீயிடம் வம்பு செய்து கொண்டே இருப்பாள். நம்ம ஸ்ரீ சளைச்சவள் இல்லையே? வச்சு செஞ்சிடுவா. ஆனால் ஸ்ரீ மீது இவங்க அம்மா ஒரு நாள் கூட கோபப்பட்டதில்லை. ஸ்ரீ அம்மா, அப்பாவால் தான் இவர்கள் வாழ்க்கை உயர ஆரம்பித்து வளர்ந்திருக்காங்க. அதான் ஸ்ரீ என்றதும் சுவாதியை பார்க்க விட்டனர்.

சார்..இந்த பொண்ணு பழக்கமெல்லாம் பணத்தை வைத்து தான். அதனால் தான் நீங்களாக சென்று மாட்டக்கூடாதுன்னு உதவ வந்தேன்.

அவளை எப்படி கண்டு பிடிச்ச? தேவ் கேட்க, அண்ணா..அவ மூஞ்சிய பார்த்தியா? இல்லையா? முகத்துல இல்லாத கிரீம்மே இருக்காது. சுவாதி ஆனால் அப்படியில்லை என்றாள் யோசனையுடன்.

என்ன யோசிக்கிற ஆருத்ரா?

இல்ல..அண்ணாவுக்கு சுவாதி செட் ஆவான்னு யோசித்தேன்.

என்ன? சிரித்தான் கவின்.

எதுக்கு சீனியர் சிரிக்கிறீங்க?

உங்கள பத்தி அஸ்வினிக்கு தெரிஞ்சா சுவாதி பக்கம் கூட போக முடியாது.

அப்ப..அவளுக்கு ஆள் இல்லையா? தேவ் ஆர்வமுடன் கேட்டான்.

இருக்க விட்டுருவாளா இந்த அஸ்வினி.

பைத்தியக்காரி சார். இவள் வேண்டுமென்பதை அடைய எதுவும் செய்வாள். சுவாதியும் இவள் பேச்சை மீற மாட்டாள்.

இன்னும் சொல்லு..என்றான் தேவ்.

சார்..நீங்க தேவையில்லாம எதையும் செஞ்சு விட்றாதீங்க. சுவாதி தான் பாவம்.

ஓ..அவள தனியா எங்க பார்க்கலாம்? தேவ் கேட்க, அவளோட காலேஜ். என்ன கேட்கப் போறீங்கன்னு தெரியுது. கே.கே மெடிக்கல் காலேஜ், கிண்டி என்றான் கவின்.

முடிவா இருந்தா மட்டும் அவளுடன் பழகுங்க. இல்லை நான் பொல்லாதவனாகிடுவேன் கவின் கூற, நீ அதை சொல்றியாடா? லவ் பேர்டுல ஒன்றை காணோமே? தேவ் கேட்க,

இங்க தான் இருக்கேன் என்று தாரிகா வந்தாள். சீனியர் அனு முழிச்சிட்டா. கொஞ்ச நேரம் பார்த்துக்கோங்க. நான் வந்துடுறேன் என்று தேவ்வை முறைத்துக் கொண்டே சென்றாள். கவின் புன்னகையுடன் பிராபிளம் சால்வ் மச்சி என்று அவன் மீது கையை போட்டான்.

சரி..நீ சொல்லு. நான் கிளம்புறதுக்கு முன்னாடி அவளுடன் பேசணும்.

காதலை சொல்லப் போறீங்களா?

இப்பவே சொல்லி அவ வேண்டாம்ன்னு சொல்லவா? அவளுக்கு என்னை பத்தி எதுவுமே தெரியாது. நான் டாக்டர் என்று மட்டும் தான் தெரியும். அப்பாவை பற்றி தெரிந்தால் என்ன செய்வாளோ?

ஆமா..ஆரு, மாமா எப்படி விட்டாங்க?

அவரு எங்க விட்டாரு. நாங்க தான் ஏமாத்திட்டு வந்திருக்கோம்.

ஏமாத்திட்டு வந்திருக்கீங்களா? எதுக்கு அவசரம். ப்ளீஸ்ம்மா..ஒரே மாசம் எல்லாம் முடியவும் பார்க்கலாம். மாமா கிளம்பும் போது நீயும் கிளம்பிடு என்றான் நிவாஸ்.

நான் ஆசையா வந்தா என்னை கிளம்ப சொல்ற?

இல்ல. பிரச்சனையில உனக்கு ஏதாவது ஆனால்..

அப்ப..உனக்கு ஏதாவது ஆனால்? அவள் கேட்டாள்.

அவனுக்கு ஏதும் ஆகாமல் நாங்க பார்த்துக்கிறோம். நீங்க நாளைக்கே கிளம்புங்க என்றான் கவின்.

நாளைக்கேவா? நான் சுவாதியுடன் பேசணும். ஏதாவது செய்.

என்னை மாமா வேலை பார்க்க வைக்கிறீங்கல்ல. நான் பண்றேன். அவளுக்காக பண்றேன் என்றான் கவின்.

வாங்க வீட்டுக்கு போவோம் என்று நிவாஸ் அழைக்க, எல்லாரும் இங்க தான இருக்காங்க.

டயர்டா இருப்பீங்க. மாமா..காரை எடுங்க போகலாம். நாளைக்கு வரலாம் என்றான்.

அப்ப நாளைக்கே சுவாதியை பார்க்கலாமா?

அவ வந்தா பார்க்கலாம். கிளம்புங்க காத்து வரட்டும் என்றான் கவின். தாரிகா வருவதற்குள் நான் போகலை என்னை கொன்று விடுவாள் என்று கவின் அனுவை பார்க்க ஓடினான். இவர்கள் கிளம்ப, காயத்ரியும் மற்றவர்களும் அங்கேயே தங்கினர்.

வீட்டிற்கு சென்ற மறைக்கு முழுவதும் காயத்ரியே. அவளுடன் ஜோடியாக எடுத்த புகைப்படத்தை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

சக்தியை அனைவரும் கிளப்பி விட, டேய்..மற உன்னை விட மாட்டேன் என்று புலம்பியவாறு சென்றான் அவன்.

மறை அறை கதவு தட்டும் சத்தம் கேட்டு கனவிலிருந்து மீண்டு கதவை திறந்தான். சக்தி அரிவாளுடன் அவனை வெட்ட வந்தான்.

டேய்..மாப்பிள்ள அவனை நான் பார்த்துக்கிறேன் என்று மறை வீட்டிலிருந்து வேலுவும் அவன் நண்பர்களும் வந்து அவனை இழுத்து வந்தனர் வெற்றி வீட்டின் முன். அவர் வெளியே வர, நடந்ததை கூறினர்.

நாளை பஞ்சாயத்தில் பார்க்கலாம் என்றார் அவர்.

நாளை மறைக்கு கல்யாணம் இவனால் எது வேண்டுமானாலும் ஆகலாம் என்றான். தீனா வெளியே வந்து, அவனை நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க என்று அவனை ஸ்டேசனுக்கு இழுத்து சென்று விவரத்தை அடித்து கேட்டான்.

சக்தி குடிகாரன். ஆனால் தவறான வழியில் செல்ல மாட்டான். அவனுக்கு காயத்ரியை பிடித்து சொல்ல முடியாமல் அவளிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்தான். மறையால் அவனுக்கு ஏற்பட்ட கெட்ட பெயருக்காக பழி வாங்க செய்ததாக கூறினான்.

ஆனால் தீனா காயத்ரியை பற்றி பேசி அவளுக்கு அவனை தான் பிடித்திருக்கிறது என்று பேசி அவன் மனதை மாற்றி வீட்டிற்கு அனுப்பி விட்டான். அவனும் சென்று விட்டான். அவனுக்கு இப்பொழுது பொண்டாட்டி இருக்கிறாளே. அதுவும் கர்ப்பவதியாக இருக்கிறாள். ஆனாலும் அடங்காமல் தான் சுற்றுகிறான் சக்தி.

 

 

 

 

 

 

 

Advertisement