Advertisement

ஹாய்….ப்ரெண்ட்ஸ்…

இனிய இரவு வணக்கம்….

இதோ உங்களுக்கான எபிசோடு 20

திடீரென கல்லூரிக்குள் கயலின் ஆட்கள் நுழைய, ஜிதின், ஸ்ரீ, நிவாஸ் அதிர்ந்து பார்க்க, அவர்கள் கைரவ் அருகே சென்று அவனை அடிக்க வந்தனர்.

ஸ்ரீ அவர்களை தடுத்து, நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?

அவன்…கை காட்டிக் கொண்டே, கொடுத்து விடு என்றனர்.

கைரவ் திமிறாக, கொடுக்கவா? எதை கொடுக்க வேண்டும்?

தெரியாதது போல் நடிக்காதே!

நடிப்பா? நானா? அலட்சியமாக பதில் கூறினான்.

அவனை பிடித்து சோதிக்க, நான் தான் கூறினேனே! கைரவ் சிரித்தான்.

ஸ்ரீக்கும் அவன் மீது சந்தேகம் எழ,என்ன செய்தாய்? அவனருகே ஸ்ரீ வர, கல்லூரியில் அனைவரும் வேடிக்கை பார்த்தனர்.

கல்லூரி முதல்வர் வந்தார்.என்ன நடக்கிறது?உங்களை யார் உள்ளே அனுமதித்தது? செக்யூரிட்டி….அழைத்தார்.அவரையும் பிடிக்குள் நிறுத்தினார்கள்.இங்கிருந்து செல்லுங்கள் முதல்வர் கத்த, அவரது கழுத்தில் கத்தியை வைத்தனர்.

அனைவரும் செல்லுங்கள் ஜிதின் கூற, உங்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை அவனை விலக்கி விட, பொறுங்கள் ஸ்ரீ கூறி விட்டு,கயலுக்கு போன் செய்து தனியாக சென்றாள்.

உங்களுடைய ஆட்கள் என்ன செய்து கொண்டிருகிறார்கள்?கேட்க, அவன் நாம் பேசியதை பதிவு செய்திருப்பானோ என்று சந்தேகமாக உள்ளது. அவனுக்கும் உன் மீது காதல் தானே!

இல்லை.

நீயே அதனை நிரூபி….என்றார்.

ஸ்ரீ யோசித்து விட்டு,கைரவின் பாட்டிலை வாங்கி பார்த்தாள்.சைலேஷ் அங்கே வந்து,

இது கல்லூரி. அனைவரும் செல்லுங்கள் ஒருவனை பிடித்து தள்ள அவன் சைலேஷை அடிக்க வந்தான். அப்பொழுது அழகான ஒரு பெண் உள்ளே வந்து, சைலேஷ் முன் வந்து அவனது கையை தட்டி விட, அவர்கள் கோபப்பட்டனர்.

ஏய். குட்டி பிசாசு…சைலேஷ் கூற, அவனை பார்த்து புன்முறுவல் செய்தாள். இப்பொழுது அவர்கள் அவளை அடிக்க முற்பட, சைலேஷ் தடுத்தான்.

எல்லாரும் அமைதியாக இருங்கள் ஸ்ரீ கூறி விட்டு,கைரவிடம் பேசினாள். அவன், “நான் ஏதும் செய்யவில்லை ஸ்ரீ” பாவம் போல் கூற, அவளும் நம்பி விட்டாள்.

என்னை…உனக்கு…அவள் தயங்க,அவன் சட்டென, எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று தன் காதலை கூற, எனக்கு விருப்பமில்லை. எனக்கு திருமணம் முடிவாகி உள்ளது.நான் தான் ஏற்கனவே கூறினேனே! என்றவள் கைரவின் காதலை நிராகரித்து விட்டாள். உன்னை நண்பன் என்பதை தவிர வேறு எந்த எண்ணமும் என்னிடம் இல்லை. இதற்கு மேல் அது போல் நீ நினைத்தால் நண்பனாக கூட ஏற்க முடியாது அனைவர் முன்னிலையிலும் கூறி விட்டு,

உங்களுக்கு போதும் தானே! அனைவரையும் கிளம்ப சொல்லுங்கள் போனில் ஸ்ரீ கூற,ஒருவனுக்கு போன் வந்தது.அவர்கள் கிளம்பினார்கள். நான் உன்னிடம் பேச வேண்டும் என்று அந்த பெண்ணிடம், இங்கேயே இரு என்று சைலேஷ் கைரவை இழுத்துக் கொண்டு தனியே சென்றான்.

கல்லூரிக்குள் போலீஸ் நுழைய, ஏதோ பிரச்சனை என்று அழைப்பு வந்தது என்று மாதவ் இறங்க, கல்லூரி முதல்வர் அருகே அந்த பெண்ணை பார்த்து,

ஏய் வாலு, நீ இங்கே என்ன செய்கிறாய்? அவள் சிரித்துக் கொண்டு முதல்வரை பார்த்தாள்.

ஏம்மா, உனக்கு இன்னும் எத்தனை பேரை தெரியும்? நிறுவனர், போலீஸ்….என்று கல்லூரி முதல்வர் கேட்டார்.

சார், நாங்கள் அனைவரும் நண்பர்கள் மாதவ் அவளது கன்னத்தை பிடித்து கிள்ளினான்.

டேய்…ஏன்டா….வலிக்கிறது டா….அந்த பெண் அவனை முறைத்தாள்.

போலீஸ் என்பது சரியாக போய் விட்டது. எல்லாம் முடிந்து விளக்கு வைத்த பின்னே வருகிறாய்? மா என்று ஏதோ ஆரம்பித்த பெண், சுற்றி மாணவ, மாணவியரை பார்த்து விட்டு, அவனை பார்த்து கேலியாக நகைத்தாள்.

பிரச்சனை முடிந்ததா?அவன் கேட்க,

இப்பொழுது பிரச்சனை இல்லை சாரென்று கல்லூரி முதல்வர் கூறி விட்டு, நீயும் கைரவும் என்னை இன்னும் அரை மணி நேரத்தில் சந்திக்க வேண்டும் ஸ்ரீயிடம் கூறினார். ஜிதின் பேச வந்தான். அவர் கண்டுகொள்ளாமல் அனைவரும் வகுப்பிற்கு செல்லுங்கள். மணி ஒலித்து விட்டது என்று கூறி விட்டு, அந்த பெண்ணிடம் நீங்கள் பேச வேண்டியவர்களிடம் பேசி விட்டு சீக்கிரம் என்னுடைய அறைக்கு வாருங்கள் மேடம். உங்களது வகுப்பினையும்,அதற்கான கால அட்டவணையும் தயார் செய்யலாம் என்றார்.

சரிங்க சார்.

மேடமா? என்று நித்தி விழிக்க, அவளருகே வந்து அந்த பெண், என்னுடைய பெயர் இன்பா. சைலேஷின் தோழி என்று கூற, நண்பர்கள் அவர்களை ஒருவாறு பார்க்க,

உன்னுடன் போட்டிக்கெல்லாம் வர மாட்டேன். பயப்படாதே! நித்தி மாதவை பார்த்து, நீங்கள் தானே அன்று உதவியது…..அவன் நகைத்தான். ஆனால் அவன் பார்வை நித்திக்கு பின் இருக்கவே அவள் திரும்பி பார்த்தாள்.

யாசு அவனை முறைத்துக் கொண்டு கோபமாக இருப்பதை கண்டு,

ஏய் என்னடி? யாசுவிடம் கேட்டுக் கொண்டே இருவரையும் மாறி மாறி பார்த்தாள்.

முறைக்காதே! அவள் என்னுடைய தோழி மட்டும் தான் சைலேஷிற்கும்.

அவன் யாசு அருகே வந்து, அவளது தோளில் கையை போட்டுக் கொண்டு, நான் முதலில் கூறினேனே! அந்த ஷாப்பிங் பொண்ணு என்றான் இன்பாவிடம்.

முகம் மலர்ந்தது இன்பாவிற்கு. சைலூ நித்தியை பற்றி கூறினான். நீ கூறவே இல்லையேடா? செல்லமாக முறைத்தாள். அனைவரும் மலங்க மலங்க விழித்தனர்.பின் யாசு அவனருகே கை கோர்த்து நண்பர்களை பார்த்தாள்.

நல்லது என்று அகில் கூற, நித்தி அவனை இடித்தாள்.ஜோடி அழகாக தான் உள்ளது என்றனர் கவினும் அபியும்.

அது எப்படி இல்லாமல் போகும். யாசு அழகாக இருக்கிறாள் டா. நீ ஏன்டா கூறவில்லை?

நீ என்னிடம் கூறினாயா?…..மாதவ் கேட்க,

அவள் முகம் தொங்கி விட, அட சும்மா தான் பேசினேன். அவன் வரட்டும். இருவரும் சேர்ந்து அவனை ஒருவழி செய்து விடுவோம் இன்பாவை சமாதானப்படுத்தினான்.

பின் பேச்சை மாற்றி, உனக்கு யாசுவை தெரியாதா என்ன? மாதவ் கேட்க, இன்பா நகைத்தாள்.

என்னை முன்னே தெரியுமா? யாசு கேட்க,உங்கள் அனைவரையும் என்று அபினவை பார்த்தாள் குறு நகையுடன்.

ஸ்ரீ சோகமாக உட்கார்ந்திருப்பதை பார்த்து அவளிடம் சென்று, இதற்கெல்லாமா வருத்தப்படுவது? அவளை தட்டிக் கொடுத்து விட்டு, திரும்பி பார்க்க, யாசுவின் நண்பர்கள் மாதவிடம் பேசினர். ஸ்ரீயிடம் நண்பர்கள் ஆறுதலாக பேச, நான் முன் செல்கிறேன்.நீ அவரை பார்த்து விட்டு வா என்று நிவாஸ் வருத்தமாக கூறிவிட்டு சென்றான்.

சைலேஷ் அங்கே வந்து, வகுப்பிற்கு செல்லுங்கள் என்று அனுப்பி விட்டு, நாம் இன்னொரு நாள் பேசுவோம் இன்பா, மாதவை பார்க்க,அவர்கள் சென்றனர். இன்பா முதல்வரிடம் பேசிக் கொண்டிருப்பதால்,கைரவும் ஸ்ரீயும் காத்திருந்தனர்.

அவள் முடித்து வரவே வகுப்பு இடைவேளை நேரமானது. பின் இருவரும் உள்ளே செல்ல, அவர்களிடம் அவரது போனை காண்பித்து, இதை பற்றி இணைய தளத்தில் போட்டு விட்டனர். கல்லூரி மானமே போனது உங்களால். இந்த பிரச்சனையை உன் அண்ணன் கவனித்து கொள்வார்.ஸ்ரீயை பார்த்து முடிந்தால் உன்னுடைய ஆன்ட்டி தான்  பிரச்சனைக்கு காரணம் என்று ஒத்துக் கொள்ள சொல் என்றார்.

அவள் மௌனமாக இருப்பதை கண்டு, உங்களுக்கு ஒரு மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் எக்காரணத்திற்காகவும் கல்லூரிக்குள் வரக் கூடாது. ஸ்ரீ வருத்தமானாள்.கைரவால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.

எனக்கு இன்னும் ஒரு வாரத்தில் விளையாட்டு போட்டி உள்ளது என்று   மண்றாடினான்.அவர் உறுதியாக கூறிவிட்டார்.இருவரும் வருத்தமாக வெளியே வந்தனர்.

ஸ்ரீ ஓரிடத்தில் அமர, கைரவும் அமர்ந்தான். கொஞ்ச நேரம் அமைதிக்கு பின் அவனே பேசினான். மிகவும் கஷ்டமாக உள்ளது. இது என்னுடைய கனவு. இந்த போட்டிக்கு பின் வரும் போட்டி தான் முக்கியம் என்றாலும் இதில் கலந்து கொள்ளாமல் விட்டால் அனைத்தும் முடிந்து விடும் வருத்தப்பட்டான்.என்னால் உன்னுடைய படிப்பும் கெட்டு விட்டது.என்னை மன்னித்து விடு ஸ்ரீ….அவனது குரல் தளர அவனை பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ ,அவனது தோளில் கை வைத்து ஆறுதலித்து விட்டு எழுந்தாள்.

கிளம்புகிறாயா?அவன் கேட்டான்.

இல்லை, நண்பர்களிடம் கூறி விட்டு கிளம்ப வேண்டும்.

அவன் எழுந்து, நான் என் அண்ணாவை பார்க்க செல்கிறேன் அவளிடம் சொல்லி விட்டு சென்றான்.ஸ்ரீ அங்கேயே இருந்தாள்.

மதிய உணவு இடைவேளை விடப்பட்டு, மாணவ மாணவிகள் வெளியே வந்தனர்.அகிலும் நண்பர்களும், பின் நிவாசும் வந்தான். அவனிடம் பையை வாங்கி டிபன் பாக்சை தேடினாள்.

அய்யோ! மறந்து வகுப்பிலே வைத்து விட்டேனே! நிவாஸ் கூற, நான் எடுத்து வருகிறேன் என்று சென்றாள்.மற்றவர்கள் அவளை பார்த்து வருத்தமடைந்தனர்.

வகுப்பிற்குள் நுழைந்த ஸ்ரீ முகம் மாறியது. அவளது வகுப்பு பெண் தாரிகாவை அந்த நான்கு பெண்கள் தொந்தரவு செய்து கொண்டிருந்தனர்.அவளது தலை முடியை களைத்து, தலையில் எதையோ கொட்டி வைத்திருந்தனர். அவள் கைகள், உதடு,கன்னங்களில் காயம் வேறு…அவள் பயந்து நடுங்கிக் கொண்டு உடல் பலவீனமாக காணப்பட்டாள்.

ஏய், அவளை என்ன செய்கிறீர்கள்? பதறி ஸ்ரீ அவளருகே வந்தாள்.

அவர்களில் இருவர் ஸ்ரீயை பிடித்து தடுக்க, மற்றவர்கள் அவளது வயிற்றிலே குத்தினர்.

வலி தாங்காத அவள், என்ன விட்டு விடுங்கள். இது என்னுடைய மாதாந்திர நேரம். என்னால் தாங்க முடியவில்லை.

ஓ அப்படியா! என்று மீண்டும் ஒருத்தி அவளது வயிற்றில் குத்த,  அவளுக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு விட்டது. அவளும் வலி தாங்க முடியாமல் அலறிக் கொண்டே கிரக்கமானாள்.

பொறுமை இழந்த ஸ்ரீ, அவர்களை அடிக்க ஆரம்பித்தாள். அவர்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அவள் தாக்கவே,ஸ்ரீக்கும் அடிபட்டது. அவர்களை அடித்து பிடித்து ஒரு பெஞ்சில் போட்டு கட்டி விட்டு, வகுப்பறையை மூடினாள்.

தாரியா அயர்வாக சரிந்து இருப்பதால், அவளை ஸ்ரீ எழுப்பினாள். என்னை ஏதும் செய்யாதீர்கள் என்று அவள் அரை மயக்கத்தில் புலம்பவே, நான் தான் ஸ்ரீ பயப்படாதே என்றவுடன் அவள் ஸ்ரீயை கட்டிக் கொண்டு அழுதாள்.

ஒன்றுமில்லை தாரிகா என்று அவளை கட்டிக் கொண்டு போனில் நிவாசிற்கு போன் செய்து நித்தியை உதவிக்கு அழைத்தாள். நித்தி போனை வாங்கி பேசவே, நீங்கள் மட்டும் சீக்கிரம் வாருங்கள் ஒரு பிரச்சனை என்றாள். பசங்க யாரும் வரவேண்டாம் என்றாள்.

கண்ணிமைக்கும் நேரத்தில் நித்தி வந்து, ஸ்ரீ உனக்கு என்ன?

அவள் வகுப்பறைக்குள் வந்தவுடன், அந்நிலவரத்தை புரிந்து கொண்டவள் அந்த பெண்களை பார்த்து கேவலமான ஒரு பார்வையை உதிர்த்து விட்டு,போனில் கவினிற்கு போன் செய்தாள்.அவன் தான் எப்பொழுது நித்திக்காக முன் நிற்பவன்.

அவள் மீது தண்ணீரை தெளித்து விட்டு, அவளது களைந்த முடி, உடையை சரி செய்து கொண்டிருக்க, அவளால் முடியவில்லை என்றாலும் மெதுவாக விழித்து பார்த்து கண்ணை மூடினாள். நித்தியை பார்த்து சீனியர் வேண்டாம்….இருக்கட்டும் அவளது கையை எடுத்து விட்டாள் தாரிகா. அவளை நித்தி கூர்ந்து கவனிக்க,சரியாக கவினும் வந்தான்.

என்ன இது? தாரிகாவை பார்த்து விட்டு, என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? உங்களுக்கு அசிங்கமாக இல்லை. உங்களை போல் அவளும் ஒரு பெண் தானே!ஆமாம், அவர்களை யார் இப்படி கட்டி வைத்தது? நித்தியை பார்க்க ஸ்ரீ நிமிர்ந்து நான் தான் என்றாள்.

வாவ், சூப்பர் “வெல் டன்” என்றான்.

அவன் குரலை கேட்ட தாரிகா, அனைவரும் செல்லுங்கள் பதறினாள்.

ஒன்றுமில்லை பதட்டப்படாதே! நித்தி அவளை அமைதிப்படுத்தினாள். பின் அவளால் நடக்க முடியாது. கொஞ்சம் உதவி செய்டா. பாத்ரூம் வரை அவளை தூக்க முடியுமா?

ஓ.கே என்று அவன் தாரிகா அருகே வந்து அவளை தூக்க, அவள் வேண்டாம். நான் முயற்சி செய்கிறேன் கூறினாள்.

அதெல்லாம் முடியாது. நீ மிகவும் சோர்வாக இருக்கிறாய்? நான் பார்த்துக் கொள்கிறேன் என்று அவளை தூக்க அவளும் அவனது கழுத்தை கட்டிக் கொண்டாள்.ஆனால் அவளது இதயம் படபடவென துடிக்க,

என்ன உனக்கு….? அவன் அவளை தூக்கிய படியே அவளை பார்த்தான். அவள் விழிக்கவில்லை என்றாலும் அவளுள் உணர்வுகள் எழுந்தது. நித்தி அதனை புரிந்து கொண்டாள். தாரிகாவிற்கு கவின் மீது விருப்பமுள்ளது மனதினுள் நினைத்தாள்.பின் ஒரு நிமிடம் இருடா என்று சைலேஷிற்கு போன் செய்து, வகுப்பறையில் நடந்ததை கூறினாள். இது வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சனையாகும் கல்லூரிக்கு என்றும் சீக்கிரம் வாருங்கள் என்றாள்.

                 ” குரல் அறிந்தேன் நீ தானா?

                    குரல் அறிந்தேன் நீ தானா?

         முதல் முறை உன் அருகாமையை உணர்கிறேன்.

                   இந்நிலையிலா? நீ என்னருகே?

                      நோகிறதே! நோகிறதே!

                      என் மனம் துவல்கிறதே!

                   இனி எங்கனம் என் காதலை

                       நீ அறிய செய்குவேன்!”

 

 

Advertisement