Advertisement

அத்தியாயம் 94

அர்ஜூனும் ராக்கியும் உள்ளே வந்தனர். ஸ்ரீ வெளியே எட்டி பார்த்தாள். மறை அமர்ந்திருந்தான்.

சாரிக்கா..நான் உங்களருகே இருந்திருக்கணும் அர்ஜூன் வருத்தமாக கூற, எனக்கும் ஐஸ்கிரீம் வேண்டும். என்ன ஸ்ரீ? இருவரும் எனக்கு வாங்கிட்டு வருவீங்கள? காயத்ரி கேட்டாள்.

கண்டிப்பாக்கா என்றாள்.

அக்கா..நீங்க நல்லா தான இருக்கீங்க?

பரவாயில்லை அர்ஜூன் என்று ஸ்ரீயை பார்த்தார்.

வா..அர்ஜூன். நாம வாங்கிட்டு வரலாம்னு ஸ்ரீ அவனை இழுக்க, அக்காவை எப்படி விட்டுட்டு போறது?

அதெல்லாம் அவங்கள பார்த்துக்க ஆள் இங்க இருக்காங்க. வா வாங்கிட்டு வரலாம் என்றாள். காயத்ரி அவளை பார்த்து முறைத்தாள்.

அவர்கள் சென்ற பின் அத்தை..அவரை வரச் சொல்லுங்க என்றாள் காயத்ரி.

மறை உள்ளே வந்தான். அவள் புடவையில் இருந்தாள். நிமிர்ந்து அமர்ந்து கையை கட்டிக் கொண்டு, மீதியை பேசுங்க என்றாள்.

காயூம்மா..தெரியாம தம்பி பேசிட்டாங்க.

அத்தை..நான் உங்ககிட்ட பேசலை என்று மறையை பார்த்தாள்.

நான் கொஞ்சம் டென்சன்ல பேசிட்டேன். மன்னிச்சிருங்க என்றான் அவன்.

இல்ல பேசலாம்..பேசுங்க என்றாள்.

என்ன? என்று பெரியத்தையை பார்த்தான்.

நான் குட்டிப்பையனை பார்த்துட்டு வாரேன் என்று வெளியே வந்தார் அவர்.

என்ன பேசணும்?

அதான் திட்டுனீங்களே? தொடர்ந்து திட்டுங்க..

திட்டவா? எனக்கு இப்ப உங்க மேல தப்பே தெரியலன்னு தெரிஞ்சுடுச்சு.

பரவாயில்லை திட்டுங்க என்றாள். அவன் விழித்துக் கொண்டு நின்றான்.

அஞ்சு வருசத்து முன்னாடி அக்கறையுடன் திட்டு அம்மாவிடம் வாங்கினேன். அப்புறம் வினியிடம் வாங்கினேன். இப்ப நீங்க திட்டவும் அவங்க நினைவு வந்துருச்சு. அதான் திட்ட சொன்னேன்.

அவன் மகிழ்வுடன் அவளை பார்த்து விட்டு..நேரமாகியிருச்சு ஓய்வெடுங்க என்று வெளியே..ஹலோ சார்..ஐஸ்கிரீம் சாப்பிட்டு போங்க என்றாள். புன்னகையுடன் அவன் வெளியே வந்தான்.

மறு நாள் காலையில் நித்தி வீட்டுக்கதவை திறந்து அதிர்ச்சியோடு நின்றாள். விதுனனும் அவன் நண்பர்களும் வந்திருந்தனர். சைலேஷும் அவள் வீட்டிலிருந்து வருவதை பார்த்து..சார்..நீங்க இங்கேயா? கேட்டாள் சுருதி.

வாங்க என்று அழைத்து அவர்களை நித்தி கவனிக்க, சைலேஷ் நித்தி கையில் ஜோடியாக ஒரே மாதிரி மோதிரத்தை பார்த்து கேட்டனர். தாத்தாவும் உள்ளிருந்து வர, எழுந்து நின்றனர்.

யாருக்கும் பேச்சே வரவில்லை. தாத்தா அவராக பேசினார். சைலேஷ் நித்திக்கு நித்தி அம்மா முன் நடந்த நிச்சயத்தை கூறினார்.

நிவேதா எழுந்து சைலேஷிடம், சாரி சார். அன்று அவளுடன் நடந்தது..என்று நிவேதாவும் நித்தியும் முடியை இழுத்து சண்டை போட்டதை சொல்ல..அது உங்க விசயம். எனக்கு எதுக்கு சாரி? அவன் நித்தியை பார்த்துக் கொண்டே கேட்டான். அவள் அவனை முறைத்து விட்டு, என்ன எல்லாம் நல்லா நடந்ததா? உங்களுக்கு ரிவியூ எப்படி வந்தது? கேட்டாள்.

நாங்க தான் கலந்துக்கவேயில்லையே? கதிர் சொல்ல, ஏன்?

நித்தி..நீ இன்னும் பார்க்கவேயில்லையா? காலேஜ் இயக்குனரே இல்லாம எப்படி விழா நடக்கும்? என்று சைலேஷை பார்த்தனர்.

அவனை போன் அழைக்க, சொல்லுடா என்று நித்தியை பார்த்துக் கொண்டே வெளியே சென்றான். சந்துரூ மகிழ்வுடன் யாழு விழிச்சுட்டாடா? என்று கூற,

வாவ்..சூப்பர்டா..பேசுறாளா?

இல்லடா..அவள் ஏதோ சொல்ல நினைக்கிறா? அவளால முடியல. அவள் பக்கத்திலே டாக்டர் இருக்க சொன்னாங்கடா.

ஓ.கே டா. பார்த்துக்கோ..என்று சைலேஷ் நித்திடம் வந்து அவளை அணைத்து, நமக்கு சீக்கிரமே முழுஆதாரமும் கிடச்சிடும் என்றான். எல்லாரும் அவனை வாயை பிளந்து பார்த்தனர்.

அய்யோ மிஸ் பண்ணிட்டேனே என்று சுருதி வருத்தமுடன் பார்த்தாள். ஆதாரமா? நித்தி கேட்க, அவன் போன் மீண்டும் ஒலித்தது.

மாதவ் போனில் சைலேஷிடன், இன்பாவையும் நித்தியையும் கவனமா பார்த்துக்கோ. அந்த லூசு நந்தினி அங்க வருவதாக தகவல்.

அவ எதுக்குடா வர்றா?

எனக்கு என்ன தெரியும்? அவளை பாலோ பண்ண சொல்லியிருந்தேன். சொன்னாங்க.

இப்ப எங்க இருக்கா?

ஊருக்கு பக்கத்துல வந்துட்டா. ட்ராக் பண்ணிட்டு தான் இருக்கேன் என்றான் மாதவ்.

நித்தியோட நீ இருப்ப. இன்பாவுக்கு துணைக்கு யாராவது இருக்காங்களா?

இரு..கால் பண்றேன்னு அபிக்கு போன் செய்து கேட்க, அவன் காயத்ரி வீட்டில் இருக்கான். தருணும் அங்கே இருக்க..

சீக்கிரம் இன்பாவிடம் போங்க. நந்தினி ஊருக்கு வந்துட்டாலாம் என்று கூற, அபியும் தருணும் பைக்கில் சென்றனர். விசயம் பசங்களுக்கு தெரிய வர, அகில் ஹாஸ்பிட்டலில் இருந்து நித்தி வீட்டுக்கு விரைய, அர்ஜூன், தாரிகா, ஸ்ரீ அனைவரும் நித்தி வீட்டுக்கு வந்தனர்.

கேரியும் அவன் குடும்பமும் இன்பாவை பார்க்க சென்றனர். அபியும் இன்பாவுடன் இருந்தான். துகிரா, ஆதேஷ், ஜானு அங்கே வந்தனர். அர்ஜூன் தோப்பு வீட்டில் அவர்கள் இருந்தனர்.

கைரவும், அனிகாவும் அவள் அப்பாவை தாங்கிய படி வீட்டிற்குள் நுழைந்தனர். அவரை படுக்க வைத்து விட்டு

சற்று நேரத்தில் நித்தி வீட்டின் முன் ஓர் காரிலிருந்து இறங்கினாள் நந்தினி. அவளை பார்த்து அனைவரும் முன் வந்து நின்றனர்.

அவள நல்லாவே பாதுக்காக்குறீங்க? உன்னை நான் எதுவும் செய்யலை. கொஞ்சம் முன்னாடி வா..என்று கார் கதவை திறந்தாள். அப்பொழுது தான் கவின் தூக்கக்கலக்கத்தில் அங்கே வந்தான்.

கார் திறக்கப்பட உள்ளிருந்து வந்தவனை பார்த்து நித்தி பயந்து சைலேஷ் பின் மறைந்து நின்றாள். கைரவ் அவனை பார்த்து, நீ இங்க என்ன பண்ற? அவனிடம் வந்தான்.

அவனை விலக்கிய ரஞ்சித் நித்தியை பார்த்து, ஒளிஞ்சுக்கிட்டு இருக்கியா? கண்ணாமூச்சி விளையாடணுமா? என்று கேட்டான்.

சைலேஷ் நித்தியை பார்த்தான். அவளின் பார்வை ஏதோ தவறு செய்த பிள்ளை போல் இருந்தது. நித்தி வீட்டிற்கு வந்த கவின் ரஞ்சித்தை பார்த்து அவனை அடிக்க..இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.

கவின் என்ன நடக்குது? யார் இவன்? சைலேஷ் சத்தமிட்டான்.

இவனால் நித்தி அவளது கனவை கைவிட்டாள்.

கனவா? என்று சைலேஷ் அவளை பார்த்தான். கேசவனும் தாத்தாவும் அவனை பார்க்க, கேசவனும் சினத்துடன் வந்து அவனை அடித்தார்.

யோவ்..போதும்யா..என்ன எதுக்கு அடிக்கிறீங்க? இவளால் ஒருவன் சாகும் அளவிற்கு போய் இப்ப கூட இழுத்துக்கிட்டு இருக்கான் என்றான்.

ஏய்..எல்லாமே உன்னால் தான் நடந்தது அகில் சத்தமிட்டான்.

புரியும்படி பேசுறீங்களா? அர்ஜூன் கேட்டான்.

ரஞ்சித் சைலேஷ் முன் வந்து, உங்க ரேஞ்சுக்கு ஏத்த பொண்ணே அவ இல்லை என்று கூறி விட்டு, சார்..அவள் உங்களை தான் கல்யாணம் பண்ணிக்க போறாளாமே? அது உண்மையா? இல்லை உங்க தம்பியும் சேர்ந்து அவளை வச்சிக்கப் போறானா? என்று ஹாஸ்பிட்டலில் கைரவும் நித்தியும் போனிற்காக அடித்துக் கொண்டதை காட்ட..

ஏய்…என்று பசங்க எல்லாரும் சத்தமிட்டனர். நந்தினி கால் மீது கால் போட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

இங்க பாரு நம்ம மேச் பிரச்சனையை இதுல இழுக்காத..என்று கைரவ் சத்தமிட்டான்.

நீ இன்னும் தயாராகலையா? தயாராகுப்பா..உன்னோட அண்ணியோ இல்ல உன்னோட..என்று நித்தியை பார்க்க அவள் அழுது கொண்டிருந்தாள். தாரிகா, அனிகா, ஸ்ரீ அவளை மறைத்து நின்றனர்.

பல்லை கடித்த கைரவை பார்த்த தாத்தா..பேச வேண்டியதை பேசிட்டு போப்பா..என்றார் தாத்தா.

ம்ம்..அவசரப்படாதீங்க தாத்தா. சொல்கிறேன்..

இவனிடம் என்ன பேச்சு வேண்டிகிடக்கு? என்று நந்தினியை பார்த்த கவின் ஏகாந்த பொருத்தம். பொறுக்கிக்கு பொறுக்கி நல்ல ஜோடி என்றான்.

ஏய்..என்று நந்தினி கையை உயர்த்தி கத்த, அர்ஜூன் அவளது கையை மடக்கினான். அவள் கத்த..ஸ்ரீ அவனிடம் வந்து..விடு அர்ஜூன் என்று விலக்கினாள். அவள் ஸ்ரீயை ஒருமாதிரி மேலும் கீழும் பார்க்க..

ஏய்..என்ன அவள பாக்குற? கொன்றுவேன். பார்த்துக்கோ அர்ஜூன் அவளை மிரட்ட, பிரதர் அவளை விடுங்க ரஞ்சித் கூற, யாருக்கு யாரு பிரதர்? உன்னை மாதிரி கிறுக்கன் என் மாப்பிள்ளையோட பிரதராடா கவின் மேலும் எகிறினான்.

டேய் அமைதியா இரு. நீ பேசு சைலேஷ் கூற, உங்க வொய்ஃபாக போறவள பத்தி தெரியாம முடிவெடுத்துட்டீங்க? அவள் பெரிய கூடைப்பந்து விளையாட்டுக்காரி. எந்த அளவுக்கு என்றால் பசங்களுடன் ஒரு பொண்ணா நின்னு விளையாடுறவா. அவளுக்கு அந்த அளவு எங்க விளையாட்டை பிடிக்கும் என்று கைரவை பார்த்தான்.

கையூ..அன்று சூப்பர் சாட் பண்ணால. நான் அன்றே சொன்னேன்ல அனிகா இடையே வர, அவன் பார்வை அனிகாவை ஏறிட்டது. அகில் அவன் முன் வந்து, உனக்கு பொண்ணுங்கள பார்த்து தான் பேச வருமா?

அட, விடுப்பா..நான் என்ன செய்வது? அழகா பொண்ணு இருந்தா பாக்க தானே செய்வோம்.

போடா..பரதேசி. நீ என்ன சொல்றது? போடா இங்கிருந்து.. சார்கிட்ட நாங்களே சொல்லிக்கிறோம்.

இரு அகில். அவன் சொல்லட்டும் சைலேஷ் கூறினான். சார்..என்று கவின் அவனிடம் வந்தான். அவன் சொல்லட்டும் விடுங்கடா என்று கத்தினான்.

நீ சொல்லு.

அவளோட கடைசி மேச்ல அவளோட பெயர் லிஸ்ட்லயே இல்லை. அவள் பார்வையாளராக வந்தாள். அவங்க பள்ளி குழு மாணவன் ஒருவனுக்கு விளையாடும் போது பயங்கர அடி. அவனுக்கு பதிலாக எங்களோட விளையாட பசங்க யாருமே வரலை. ஆனால் இவள் வந்தால்..இதுல பாருங்க அந்த டீம்ல குருன்னு ஒருவன் இருந்தான். அவனுக்கு அவள் மேல ஒரு கண்ணு. எப்படியாவது அடைய நினைத்தான். நாங்க விளையாடும் போது அவளின் ஆடை விலக அவன் பார்வை அங்கு சென்று அவளை தொட வந்தான். நான் அவளுக்கு உதவ வரும் போது அவள் என்னை தள்ளி விட்டு இவளை தொட்டான்.

சைலேஷ் கைகள் இறுகியது. ஏய்..ஒழுங்கா உண்மையா சொல்லு..கவினும் அகிலும் கத்தினர். அர்ஜூன், ஸ்ரீக்கு நித்தி விளையாடுவது தெரியும். ஆனால் இந்த பிரச்சனையெல்லாம் தெரியாது.

நான் சொல்வது உண்மைதான். அவளுக்கு அவனை பிடித்ததால் என்னை மீண்டும் தள்ளி விட்டாள். அவனை விடக்கூடாதுன்னு அவனை தாக்க நானும் வந்தேன் தான். அதற்குள் இவளால் அவனுக்கு அடிபட்டு பயங்கர அடி..தலையில் இரத்தம் வந்து கோமாவில் இருக்கான் அவன் சொல்லி விட்டு நித்தியை பார்க்க, சைலேஷ் அவனை ஓங்கி அறைந்தான்.

சார், என்னை எதுக்கு அடிக்கிறீங்க? ரஞ்சித் கேட்க, நடந்ததை மட்டும் சொல்லு என்று சைலேஷ் கேட்டான்.

இதான் நடந்தது அவன் கூற, மீண்டும் பளாரென்று அவனை அறைந்த சைலேஷ் உண்மையை சொல்லு என்றான்.

எத்தனை முறை கேட்டாலும்..இதான் நடந்தது என்றான் அவன். பக்கத்தில் இருந்த விறகு கட்டையை எடுத்த சைலேஷ் உண்மையை சொல்லு..என்று அவனை அடித்தான்.

தம்பி..அவனை விடு தாத்தா சத்தமிட,..தாத்தா, நடந்த எல்லாமே எனக்கு தெரியும். இவன் என் நித்தி பேரை கெடுக்கிறான். அவனை விடலாமா? அவன் வாயிலிருந்து உண்மை வரும் வரை அடி வாங்க தான் செய்வான்.

நந்தினி தப்பிக்க முயற்சிக்க..ஏய்..எங்க போற? நில்லு அவனுக்கு மாதிரி உனக்கு கிடைக்கணும்ல..என்று அவன் கூற, அவள் ஓடினாள். தாரிகா, ஸ்ரீ, அனிகா அவளை பிடித்து இழுத்து வந்தனர்.

நீ சொல்லு..சைலேஷ் கேட்க, அவன் அடிக்காதீங்க கூறுகிறேன் என்று சொன்னான். நித்தியை ரஞ்சித் தான் தவறான கண்ணோட்டத்தில் பார்த்தான். அவனை தடுக்க நித்திக்கு இடையே வந்து குருவிற்கு அடிபட்டு தலையில் அடிபட்டு இரத்தம் வந்தது. அவன் கோமாவில் இருக்கிறான். அந்த பயத்தில் விளையாட்டை விட்டவள் தான் நித்தி என்று பயத்துடன் சைலேஷை பார்த்தான்.

எழுந்துரு. என் முன் நிற்காதே ஓடிடு..

நான் போறேன் சார். என்ன இருந்தாலும் அவள் பயந்து போய் விளையாட்டை விட்டு ஓடியவள் தானே? எல்லாரும் அப்படி தான் சொல்வாங்க. இது மாறாது. அவள் கோழை தான் அவன் சொல்ல..

போயிரு..செய்றதை செஞ்சுட்டி ஓவரா பேசுற? அகில் சத்தமிட்டான்.

அவள் கோழை தான் என்று கைரவிடம் வந்து, நீ தயாரா இரு. வருவியா? இல்லை அவள மாதிரி உன்னோட அண்ணா பின்னாடி ஒளியப் போறியா? அவன் கேட்க, சைலேஷிற்கு சினம் வந்தது.

யாருடா கோழை? அவள் விளையாடுவா? நீ தயாரா இரு..மேச்சை ஒரு வாரம் தள்ளி வச்சிருக்காங்கல்ல.. பார்த்துக்கலாம். கையூவுடன் அவனோட டீம்ல விளையாடுவா? என்றான் சைலேஷ்.

அண்ணா..என்னை சேர்க்கலையே? கைரவ் கேட்டான்.

உனக்கு சப்போர்ட் இருந்ததால விளையாட ஏத்துக்கிட்டாங்க என்றான் சைலேஷ்.

அண்ணா..ஆனால் நித்தி?

நீ தானே உன்னோட டீம்ல ஒருவனுக்கு காலில் அடிபட்டும் விளையாடுகிறான்னு சொன்ன? அவனுக்கு பதில் நித்தியை போடலாம் என்று சைலேஷ் சாதாரணமாக கூறினான்.

இல்ல. என்னால முடியாது என்று நித்தி அழுதாள். சைலேஷ் அவளிடம் வந்து, எதுக்கு முடியாது?

எனக்கு பயமா இருக்கு என்று அவனை அணைத்து அழுதாள். யாருக்கும் ஏதும் ஆகாது. நம்ம கல்லூரி கோச் தான் உன்னை பற்றி என்னிடம் சொன்னார்..

அவருக்கு தெரியுமா? கைரவ் கேட்டான். என்னுடைய நண்பர்களுடன் அன்று ஆதரவாக அவரும் தான் இருந்தார்.

ம்ம்..அவர் தான் விருப்பப்பட்டார். உன்னிடம் விளையாட வர சொல்லி கேட்டாராமே?

ஆமா. ஆனால் என்னால் முடியாது.

இங்க பாரு. அன்று நடந்தது போல் இன்று நடக்காது. தேவையில்லாமல் பயந்து உன் கனவை நீயே அழித்துக் கொள்ளாதே!

ஆனால்..தாத்தா என்று நித்தி அவரிடம் வந்து, நான் விளையாடுவதால் உங்களுக்கு பிரச்சனையில்லையே?

எதுக்கும்மா பிரச்சனை? பெருமையா தான் இருக்கும் என்றார்.

சைலேஷிடம் வந்து, இவனுடன் வேண்டாமே?

கண்டிப்பாக நீ இவனுடன் தான் விளையாடணும்.

நீ விளையாட வா..என்று ரஞ்சித் அவளை பார்த்து அழைக்க..கண்ணை நோண்டிருவேன் பார்த்துக்கோ..என்று அகில் சட்டையில் வைத்திருந்த பேனாவை எடுத்து ஸ்ரீ அவன் கண்ணருகே கொண்டு வந்தாள்.

ஸ்ரீ இங்க வா? என்று அர்ஜூன் அவளை பிடித்து இழுக்க, ஏன்டா நாங்கெல்லாம் மிரட்டக்கூடாதா? அவள் கேட்க, தாரிகா அவனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் ஸ்ரீயை பார்த்துக் கொண்டிருந்தான்.

இதுக்கு மேல இங்க இருந்த நான் உன்னை கொன்னுடுவேன் கவின் அவனை விரட்ட, மேச்ல உன்னை பார்த்துக்கிறேன் என்று நித்தியை பார்த்து கூறினான்.

நீ என்னடா பாப்ப? நான் உன்னை பார்க்கிறேன் என்று சைலேஷ் கத்தினான். அவன் செல்ல..நந்தினியிடம் வந்தான் சைலேஷ்.

உன்னிடம் அன்றே சொன்னேனா? இல்லையா? நித்தி, இன்பா விசயத்துல தலையிடக்கூடாதுன்னு சொன்னேன்ல. இன்பாவ உன்னோட அண்ணன் என்ன செஞ்சான்? என்று அவளை அடித்தான்.

ச்சே நீயெல்லாம் பொண்ணாடி? இந்த புழப்புக்கு..தினமும் ஒருவனோட என்று நிறுத்தினான்.

சைலு என்ன பேசுற? தாத்தா சத்தமிட்டார்.

தாத்தா..இவள பத்தி உங்களுக்கு தெரியாது. இவங்க இன்பாவை மட்டும் குறி வைக்கலை. நித்தியையும் வச்சிருக்கா. அன்று நித்தி நம்ம வீட்ல இருந்ததால சரியா போச்சு. இல்ல..என்று சினந்த சைலேஷ். நீயெல்லாம் உயிரோட இருக்கவே லாயிக்கில்லை. எங்காவது செத்துப்போ. இவனை கூட என்ன செஞ்சு இங்க கூட்டிட்டு வந்தாளோ? அருவருப்புடன் பேசினான்.

ஆமா..நான் செஞ்சேன் தான். நீ தான் என்னை விட்டுட்டேல. அதான்.

நான் விட்டேனா? நீ என்னை நம்பவேயில்லை. அதை விட எனக்கு தெரியாமல் இவளை கொல்ல ஆள் வேற அனுப்பி இருக்க. நான் விட்டேன்னா..உன் காதலை என்னிடம் நிரூபிக்க முயற்சியாவது செஞ்சீயா? என்னை ஏமாற்றி..வேறொரு பணக்காரனை ஏமாற்றி அவனை திருமணம் செய்து ஏமாற்றி இப்ப என்னை மறுபடியும் பார்த்து என் தோழியின் வாழ்க்கையை பாழாக்க முயன்று என் நித்தியிடமே வந்துட்ட..அதுவும் நான் இருக்கும் போதே.

இங்க பாரு நான் நினைச்சிருந்தா எங்களோட நிச்சயத்துக்கு பதில் கல்யாண ஏற்பாடே செய்திருக்க முடியும். ஆனால் எதற்கு நேரமுள்ளது என பின் தொடர்பவன். என் நித்தி படித்து, அவள் கனவை அடையும் வரை காத்திருப்பேன். இதற்கு மேல் எங்கள் வாழ்வில் குறுக்கிட்ட..உன்னை உள்ளே தள்ளாமல் விட மாட்டேன். உன் அண்ணனை போல் இருக்க வேண்டியது தான்.

நிச்சயமா? அவள் கேட்க, இருவர் கையையும் சேர்த்து வைத்து..அவர்கள் மோதிரத்தை காட்டினான். நீயாக போயிட்டா நல்லது. இல்ல..நான் அடிச்சு விரட்டுவேன் என்றான். அவளும் அங்கிருந்து சென்றாள்.

சார்..கண்டிப்பா நித்தி அந்த கேம் விளையாடணுமா?

விளையாடணும் என்றான். விதுனனும் அவன் நண்பர்களும் நித்தியிடம் வந்து நீ கூடைப்பந்து விளையாடுவாயா? என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.

இந்த முறை விளையாண்டு ஜெயித்தால்..கண்டிப்பாக என் கனவை அடையாமல் விட மாட்டேன் என்றாள்.

நாம பிராக்டிஸ்ஸை எங்க பண்றது? நம்ம பசங்க, கோச் இல்லாம நாம மட்டும் என்ன பண்றது? கைரவ் கேட்டான்.

முடியாதா? வர வச்சிருவோம்..என்றான் சைலேஷ் புன்னகையுடன்.

நித்தி அவனிடம் வந்து, என்னை நம்பி புரிஞ்சு வைச்சிருக்கீங்க என்றாள்.

ஏம்மா..அனிகா. நித்தி விளையாண்ட போது நானும் அங்கு தான் இருந்தேன். அதன் பின் தான் நித்தியை பற்றி அறிய கோச்சிடம் பேசினேன் சைலேஷ் கூறினான்.

ரொம்ப தேங்க்ஸ்..உங்கள் முயற்சியை வீணாக்காமல் நம் பெயரை காப்பாற்றுவேன் என்றாள் நித்தி.

அர்ஜூன் இங்கே வந்த சமயத்தில் ராக்கியை காணாமல் அனைவரும் தேடினர். காயத்ரியும் தேட அவள் தொலைவில் வந்த பின் அவளுக்கு போன் வந்தது.

ராக்கியை யாரோ கடத்தி வைத்திருப்பதாக காயத்ரியை வரச் சொல்லி ஒருவன் அழைக்க, அவன் அதே போல் மறையையும் வர வைத்தான். விசயத்தை அஞ்சனாம்மாவிடம் காயத்ரி கூறிக் கொண்டே விசாரித்து செல்ல..மறை அவளை பார்த்து பைக்கை நிறுத்தினான்.

காயத்ரியிடமிருந்து போனை வாங்கிய மறை அஞ்சனம்மாவிடம் நான் பார்த்துக்கிறேன் என்று போனை துண்டித்து அவளை ஏறச் சொன்னான். இருவரும் அவ்விடம் சென்றனர்.

தோப்பு வீட்டில் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இன்பாவும் அங்கே தான் இருந்தாள். ஆனால் யாரிடமும் பேசவில்லை. திடீரென எழுந்து ஓடினாள்.

மாமா..அவங்கள பாரு..ஓடுறாங்க. அச்சச்சோ..அங்க கிணறு இருக்கு. போகாதீங்க ஜானு கத்தினான். ஆனால் இன்பா வேகமாக ஓட, மேம் தற்கொலை செஞ்சுக்கப் போறாங்க என்று துகிரா கத்தினாள்.

மேம்..நில்லுங்க என்று அபியும், பிரின்சஸ் எங்க போற? என்று கேரியும் அவர்கள் பின் ஆதேஷ், துகிரா, ஜானு, ஜான் ஓடி வந்தனர்.

இன்பா அருகே வந்து கிணற்றில் குதிக்க நின்ற பொண்ணை பிடிக்க அவளால் முடியாமல் இருவரும் உள்ளே விழுந்தனர். அபியும் கேரியும் குதிக்க..இன்பாவும் அந்த பொண்ணும் மயங்கினார்கள்.

இன்பாவை முதலில் தூக்கி வந்த அபி அவளது வயிற்றில் கைகளால் அழுத்தி தண்ணீரை வெளியே எடுக்க, கேரி அந்த பொண்ணை தூக்கிக் கொண்டு மேலே வந்து, அவளது வயிற்றில் கை வைத்தான்.

விழித்த இன்பா பதறி,..நோ..பண்ணாத என்று பதறினாள். அபி..அந்த பொண்ணு கர்ப்பமா இருக்கா..என்று பதட்டமுடன் அவள் பேச அனைவரும் உறைந்து அவளை பார்த்தனர்.

டேய்..அவ வயித்துல பாப்பா இருக்கான்னு சொன்னேன்னு அபியை அடித்தாள்.

அதுக்கு வாய்ப்பேயில்லை. அவங்களுக்கு கல்யாணமே ஆகலை என்றாள் ஜானு.

அதை அப்புறம் பேசலாம். முதல்ல காப்பாத்துங்கடா என்று கத்த.. ஆதேஷூம் கேரியும் அந்த பொண்ணை தூக்கிக் கொண்டு ஹாஸ்பிட்டலை நோக்கி ஓடினர். துகிரா ஜானு இன்பாவை பார்த்துக் கொண்டே இருக்க..

மேம்..உங்களுக்கு ஒன்றுமில்லையே? அபி கேட்க, தெளிந்த இன்பா அவனை முறைத்து பார்த்து அவனை அடித்தாள். எத்தனை தடவை உன்னை உதவிக்கு அழைத்தேன். உனக்கு கேட்கவேயில்லையா? நான் எப்படி பயந்து விட்டேன் தெரியுமா? எங்க ஆதேஷ்?

அவனுக்கும் கேட்கவில்லை. பெருசா பேசுன? ஏதாவது பிரச்சனைன்னா உடனே வந்துருவேன்னு சொன்ன? அவனுக என்ன செய்யப் பார்த்தானுக..கூப்பிட்டும் எழாம ஏன்டா இப்படி பண்ண? என்று அழுது கொண்டே அவனை அணைத்தாள். அபி அதிர்ந்து இன்பாவை பார்க்க..ஜானு அவனது தோளை தட்ட, அவளை பார்த்து விட்டு சாரி மேம். நாம எதிர்பார்க்காத நேரத்தில் இப்படி நடந்துருச்சு..மன்னிச்சிருங்க மேம்.

எப்படிடா மன்னிக்கணும்? ஏதாவது ஆனா செத்து போயிருப்பேன் என்றாள். இப்பொழுது அபி அவளை அணைத்து இப்படியெல்லாம் பேசாதீங்க. அசந்த நேரத்துல மயங்க வச்சிட்டுட்டானுக. சாரி மேம்..என்றான்.

இனிமேல் இந்த மாதிரி சாரி சொல்லி சமாளிக்க நினைச்ச உன்னை என்று உதட்டை மேற்பல்லால் கடித்து கையை நீட்டி மிரட்டினாள். ஜானு துகிராவுடன் வாங்க அண்ணி..இங்க கதையாகிற மாதிரி இல்லை என்று ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றாள். ஜாஸ்மினும் ஜானும் இன்பாவை பார்த்து புன்னகையுடன் ஜானுவுடன் சென்றனர்.

அபி அவர்களை பார்த்து விட்டு எழுந்தான். இன்பா எழுந்து எங்க போற? என்று கேட்டாள்.

ஹாஸ்பிட்டலுக்கு என்றான் அவன்.

போகலாமே? என்று இன்பா அவனை அணைத்துக் கொண்டாள். மேம்..என்று அபி அழைக்க,..

நோ..மேம்..ஏதாவது செல்லமா கூப்பிடுடா? யாரும் அழைக்காதது போல் கூப்பிடு என்றாள்.

மேம்..என்று மீண்டும் அவன் அழைக்க, நான் உன் காதலை ஏத்துக்கிறேன்டா. எனக்கும் உன்னை பிடிச்சிருக்கு. நான் உன்னை காதலிக்கிறேன். இப்பவாது ஏதாவது நேம் சொல்லுடா..

ரெயின் என்றான் அபி.

ரெயினா?

யாரும் வைக்காத பெயர். ரெயின் போல தான சோவென பேசுறீங்க?

டேய்..நீ என்னை பாராட்டிகிறாயா? இல்லை வாய் பேசுவேன்னு திட்டுறியா? இன்பா கேட்டாள்.

நான் எப்படி என்னோட ரெயினை திட்டுவேன்? என்று அபி இன்பாவை மீண்டும் அணைக்க வந்தான்.

ஓய்..எல்லார் முன்னும் என்னை தொட்ட..நீ கெட்ட.,

சரிங்க மேடம்.

மேடமா? மறுபடியுமா?

சும்மா மை ரெயின் என்றான். சோ..க்யூட் என்று அவன் கன்னத்தை கிள்ளினாள். நீங்க என்ன பண்ணீங்க? என்று அபி அவளை விரட்ட.. தூரத்தில் இருந்து இன்பாவின் அம்மாவும் இதயாவும் அவளை பார்த்தனர்.

போதும் அபி. வா..அவங்க நல்லா இருக்காங்களான்னு பார்க்கலாம் என்று இன்பா அழைக்க, அபி கையை நீட்டினான். அவள் பிடித்துக் கொள்ள இருவரும் கையை கோர்த்துக் கொண்டு ஹாஸ்பிட்டலுக்கு வந்தனர். இதை கண்ட கேரி..பிரின்சஸ் ஓ.கே சொல்லிட்டாளா? அபியிடம் கேட்டான்.

அவன் புன்னகைக்க, அந்த பொண்ணு எப்படி இருக்காங்க? இன்பா கேரியிடம் கேட்க, அந்த பொண்ணு நல்லா இருக்கா. பிரின்சஸ் உன்னிடம் ஒன்று சொல்லணும் என்று ஜாஸ்மினை தேடினான். அவள் வெளியே இருக்க..அவளை அழைத்து வந்து பிரின்சஸ்..நான் இவளை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொன்னான்.

என்ன? நேரம் வேண்டும்ன்னு சொன்ன மாதிரி இருந்தது? ஜாஸ்மின் கேட்க, அது சும்மா தான். நாம சீக்கிரமே மேரேஜ் பண்ணிக்கலாம் என்றான்.

பிரின்சஸ் எந்த வேலையா இருந்தாலும் எங்க மெரேஜுக்கு நீங்க ஜோடியா வந்து கலந்துக்கணும் கேரி சொல்ல, கண்டிப்பா சார் என்றான் அபி. நான் சொல்றதுக்குள்ள உனக்கு என்னடா அவசரம்? இன்பா அபி காதை கடிக்க, நீங்களும் இதை தானே சொல்வீங்க?

ஆனா நான் சொல்லலையே? என்றாள் இன்பா. மூவரும் சிரித்தனர்.

 

 

 

 

 

 

Advertisement