Advertisement

அத்தியாயம் 92

மறையும் அருகே இருந்தவனும் அவர்களை பார்த்து அவர்களிடம் வந்தனர். அவர்கள் சேற்றில் கால் வைக்க வரும் வேலையில் மறை ராக்கியையும், அருகிலிருந்தவன் அனுவையும் தூக்கினர்.

இருவரும் எதுக்கு ஓடி வந்தீங்க? அருகிலிருந்தவன் கேட்க, இந்த அங்கிளுக்கு தேங்க்ஸ் சொல்ல அனு சொல்ல..

ராக்கியை பார்த்து விட்டு மறை, அனுவிடம் எதுக்கு “தேங்க்ஸ்”? கேட்டான்.

நாளைக்கு உதவுனீங்கள?

நாளைக்கா? அவன் கேட்க, அண்ணா..நேற்று நீங்க உதவியதை தான் நாளைக்குன்னு சொல்றா? ஸ்ரீ சொல்ல..

அவன் சிரித்து விட்டு, ஓ.கே..என்று ராக்கியிடம் கேட்டான். அவன் உதட்டை பிதுக்கி விட்டு குதிரையை பார்த்தான். குதிரைகள் அருகே இருவரையும் தூக்கி சென்றனர். மறை ராக்கியிடம் பிரெளனியை தொட வைத்தான். அனு ஒயிட்டை தொட்டுப் பார்த்து, நல்லா இருக்கு என்றாள். தாரிகாவும் அவர்களிடம் வர, தாரி..என்று ஸ்ரீ அழைக்க..ப்ளீஸ் ஒரே முறை என்று அவள் பயந்து கொண்டே அருகே வந்தாள். நிவாஸ் அவள் பின்னே வந்து..ப்பே என்று பயமுறுத்த அவள் பயந்து விழ, அவள் கையை பிடித்து நிறுத்திய நிவாஸ்..நகர்ந்து வா. இல்லை நானே தள்ளி விட்டுருவேன் என்றான்.

லூசு தள்ளி விட்றாதடா என்று அவன் கையை இறுக பற்றினாள்.

அர்ஜூன் பின்னிருந்து வந்து நிவாஸை பயமுறுத்த அவன் தாரிகா கையை விட்டான். அவள் சேற்றில் விழுந்து எழுந்து,

டேய்…அண்ணா..ஏன்டா, உன்னை…மீண்டும் விழ போன தாரிகாவை பிடித்தான் கவின்.

சீனியர், நீங்க இங்க என்று நிமிர்ந்தாள். சேற்றிலிருந்து வெளியே வந்து அர்ஜூன்..நில்லுடா என்று கவின் கையை எடுத்து விட்டு, அனு விழ போனா? என்று தாரிகா சொல்ல, அர்ஜூன் அனுவை பார்த்து அவளிடம் வேகமாக வர, அர்ஜூன் தாரிகா அருகே வந்தான். அவனை பிடித்து தள்ளி விட்டாள். அவன் விழுவதற்குள் ஸ்ரீ அவன் கையை பிடிக்க,

ஸ்ரீ அவனை விட்டுரு..இல்ல உன்னையும் பிடிச்சு தள்ளி விட்டிருவேன்னு ஸ்ரீயிடம் வந்த தாரிகா அவள் கையை எடுத்து விட, ஸ்ரீ அர்ஜூன் கையை இறுக்கமாக பிடித்து இழுத்தாள்.

ஸ்ரீ..இழுக்காத..இதுக்கு நான் விழுறதே பரவாயில்லை என்றான் அர்ஜூன்.

ஓ…அப்படியா? என்று தாரிகா ஸ்ரீயையும் சேர்த்து உள்ளே தள்ளி விட்டாள். ஸ்ரீ அர்ஜூன் மேலே பொத்தென்று விழுந்தாள்.

அய்யோ..போச்சு..இரண்டு பேரும் சேர்ந்து என் முதுகை மேலும் ஒடச்சிருவீங்க போல என்ற அர்ஜூன்..ஓய்..ஏஞ்சல் எனக்கு கெல்ப் பண்ண வந்தியா? கொல்ல வந்தியா?

இல்ல அர்ஜூன்..நான் உன்னை கொல்லுவேனா? பாவமாக கேட்க, ஆமாம் ஸ்ரீ நீ கொல்லமாட்ட. எதையும் தெரிஞ்சே செஞ்சு என்னை கஷ்டப்படுத்துவ..என்று அவன் காதலை பற்றி கூற,

நான் உன்னை கஷ்டப்படுத்துவேனா? ஸ்ரீ கேட்க, நீ பண்ணவேயில்லையா? அவன் கேட்டான்.

அவள் ஏதும் பேசாமல் எழுந்து கண்ணை துடைத்துக் கொண்டு உள்ளே ஓடினாள். அவர்கள் இருவரும் அவர்களுக்கு மட்டும் கேட்கும் படி பேசி இருப்பார்கள்.

எதுக்குடா அழுதுகிட்டே போறா? தாரிகா கேட்க, அர்ஜூன் எழுந்து சேற்றோடு உள்ளே செல்ல இருந்தவனை நிறுத்திய பாட்டி..அண்ணனும் தங்கையும் குளிக்காம உள்ள போனீங்க அவ்வளவு தான் என்று திட்டினார். ஸ்ரீ மீது சேறு பட்டிருக்காது. அவள் அர்ஜூன் மீது தான் விழுந்திருப்பாள்.

அர்ஜூன் அவள் செல்வதை பார்க்க கவின் அர்ஜூன் தோளை தட்டி விட்டு..வேகமாக வீட்டினுள் ஓடினான்.

டேய்..குளிச்சியா இல்லையா? கவினிடம் பாட்டி கத்திக் கொண்டிருக்க.. அவன் சென்று விட்டான். அர்ஜூனை நிறுத்திய தாரிகா..அவள என்னடா சொன்ன?

அவ கஷ்டப்படுத்துறான்னு சொன்னேன்.

அவ உன் காதலை ஏத்துக்கலைன்னா..இப்படி தான் பேசுவியா? தாரிகா திட்டினாள்.

அவ ஏத்துக்காம இல்லை. அவள் சொல்ல மாட்டிங்கிறா? என்று தாரிகா கையை உதறிய அர்ஜூன் கோபமாக வீட்டிற்கு பின் சென்றான்.

என்னடி என் பேரனிடம் கேட்டுக்கிட்டு இருந்த?

நான் எங்க போய் வெளிய குளிக்கிறது தாரிகா கேட்டாள்.

நான் கேட்கிறேன் அதுக்கு பதில் சொல்ல மாட்டிங்கிற?

பாட்டி..இவங்க இப்படி தான் சண்டை போட்டுகிட்டே இருப்பாங்க. ஒண்ணு அண்ணா..கோவிச்சிட்டு போவான். இல்ல அவ கோபிச்சுட்டு போவா? ரெண்டுக்கும் வேற வேலையே இல்லை. முதல்ல நான் குளிக்கணும்.. சொல்றீங்களா? இல்ல அப்படியே வீட்டுக்குள்ள போகவா?

வேலைக்காரம்மாவை அழைத்து, புள்ளைக்கு குளிக்க ஏற்பாடு செய் என்று மறையை அழைத்தார். அவன் ராக்கியுடன் வந்தான். காயத்ரியை பார்த்து, அவளிடம் ராக்கியை கொடுத்து விட்டு..அர்ஜூன்..இப்பெல்லாம் ரொம்ப கோபப்படுற மாதிரி தெரியுதுல்ல பாட்டி.

ஆமா..அவனுக்கு வேண்டியது விலகியே இருந்தா கோபம் வரத்தான செய்யும் என்று அபி அவர்களிடம் வந்தான்.

நீ என்னடா இங்க வந்துருக்க? பாட்டி கேட்க..எனக்கு உங்க உதவி வேண்டும் பாட்டி. நாம தனியா பேசணும் என்றான்.

இரு..மறைக்கு மருந்த போட்டு விட்டு வாரேன். பேசுவோம்..என்று மறையின் கட்டை பிரித்து..அவர் சில இலைகளை பறித்து அரைத்து வந்ததை கட்டிட்டு விட்டு, தண்ணீர் படாமல் கொஞ்ச நேரம் பார்த்துக்கோடா..என்றார்.

அவன் நண்பர்கள் வேலையை ஆரம்பிக்க, ஒருவன் மட்டும் தனித்திருப்பான். நீ ஓய்வெடுடா மச்சான். பிரெளனிய நான் பார்த்துக்கிறேன் என்றான்.

ஆமா..மதியம் வரையாவது தண்ணீர் படாம பார்த்துக்கோ என்று பாட்டி அபியை அழைக்க, அபி..தீனா சார் ஸ்டேசன் வந்திருட்டாரா? இன்று காலை கோர்ட்ல அவங்க எல்லாரையும் அழைத்து போகணும்ன்னு சொன்னார். என்ன ஆச்சு? ஏதாவது தெரியுமா?

இல்லண்ணா..மாமா போனே பண்ணலை என்றார். உங்க ப்ரெண்டு அந்த பொண்ணு எங்க இருக்கா? அவளா என்னோட வீட்ல தான் இருக்கா என்றான். மறைக்கு போன் வர..அவன் கையில் மருந்து கட்டியிருக்க.. மறுகையால் போனை எடுத்து பேசினான்.

சொல்லுங்க..

அடேய்..யாருடா அந்த பொண்ணு? அந்த புள்ளையால உனக்கு அதிகமா அடிப்பட்டிருக்காமே ராக்காயி சொன்னா.

பாட்டி எனக்கு ஒன்றுமேயில்லை.

வீட்டுக்கு வா. உன்னை பார்க்கணும் என்றார்.

வாரேன்..கொஞ்ச நேரம் பாட்டி.

என்ன கொஞ்ச நேரம்..இன்று ஹாஸ்பிட்டல் போகணும் மறந்துட்டியா? பர்வதம் பாட்டி கேட்க,

சரவணா..இன்னிக்கி தேதி என்னடா? மறை கேட்க,..அவன் கூற, ஷ்..என்று பெருமூச்சுடன் டேய்,..நான் வாரேன்டா என்று மறை எழுந்திருக்க..

என்னடா பர்வத கிழவிய மறந்துட்டியா? ஒருவன் கேட்க, ஷ்..என்றவன் பாட்டி இப்ப வந்துடுறேன் என்று போனை அணைத்து எழுந்தான்.

சாப்பிட்டு போகலாமே? என்று பெரியத்தை அவனிடம் கேட்க, இல்லம்மா..முக்கியமான வேலை ஒன்று இருக்கு.

யாரது? என்று அவர் கேட்க, அவன் நண்பர்களை பார்த்தான். அவர்கள் அவனை பார்த்து சிரிக்க, அவர்களை முறைத்து விட்டு பேச வந்தவனை..

ஒருவன் அவரிடம் ஓடி வந்து..உங்களுக்கு தெரியுமா? இந்த ஊர் பாட்டிகளுக்கெல்லாம் இவர் தான் பேரன். அதுவும் இப்ப பேசுச்சே ஒரு கிழவி..அது இவனிடம் ஒரு பொண்ண கூட பக்கத்துல விடாது.

ஏன்? அவர் கேட்க, அந்த கிழவியோட பேத்திய இவனுக்கு முடிச்சு வைக்கணும்ன்னு அதுக்கு ஆசை. பாவம் பாட்டி..இவனை நம்பி பேத்தையை கிழவியாக்காமல் விடாது போல என்று கூறி சிரித்தான். அவர் அவனை பார்த்தார். மறை நண்பனை பார்த்து, டேய்..போடா வேலைய கவனி. அவங்க உன்னிடம் கேட்கல.

அந்த பொண்ணை எனக்கு கட்டிவச்சிடுன்னு நானே கிழவிகிட்ட கேட்டேனா? என்னை விரட்டி விரட்டி அடிச்சது.

பொண்ணு அழகா இருக்குமா?

அழகா தான் இருக்கும். ஆனால் திமிரு அதிகம். வெளியூர்ல வேலை பாக்குற திமிரு. அதெல்லாம் என் மாப்பிள்ளைக்கு செட் ஆகாது. அவனை எப்படி வேலை வாங்கும் தெரியுமா? என்று அவன் கூற, அவர் அவனை பார்த்தார்.

அம்மா..நான் கிளம்புகிறேன் என்று மறை வீட்டினுள் பார்த்துக் கொண்டே சென்றான்.

அந்த பொண்ணை விடு. இவரை பத்தி சொல்லுண்ணு கேட்டார். அவன் கதையை கூற, இதையெல்லாம் அவரே சொல்லிட்டார். அவரோட தினமும் வேலை? குணம்? என்று மறையை பற்றி கேட்டுக் கொண்டிருந்தார். காயத்ரி கையில் மறை ராக்கியை கொடுத்த போதே அவள் உள்ளே சென்று விட்டாள். தாரிகா குளிக்க சென்று விட்டாள்.

தாரிகா அம்மாவும், கமலி அவர் பேசுவதை கேட்டுக் கொண்டே அமர்ந்திருந்தனர். இருவருக்கும் அவர் எந்த எண்ணத்தில் கேட்கிறார் என்று தெளிவாக தெரிந்தது.

அவன் சென்றவுடன் நேரடியாகவே தாரிகா அம்மா கேட்டார். அதற்கு அவர்..அதனால் என்ன தவறு? பணம் கூட சேர்த்து வைத்திருக்கிறார் போல. வேலை நிரந்தரமாக இல்லை. ஆனால் நல்ல குணமுள்ளவராக தெரிகிறது. வேறென்ன வேண்டும்?

என் பிள்ளையால் கஷ்டப்பட்டு மனம் நொந்து வாழ்ந்த பொண்ணும்மா.. எனக்கு அதுவும் தெரியாது. தெரிந்தால் அன்றே சரி செய்திருப்பேன். அவன் செய்த தவற்றை சரி செய்ய நினைக்கிறேன். எம் மூத்த மருமக தனியா போனதுனால. எனக்கு இந்த பொண்ணு தான் எல்லாமே. என்னோட பொண்ணுங்களே அவளை அவதூறாக பேசி இருக்காங்க. எல்லாரும் அவளை இன்னும் என்னென்ன செய்தார்களோ? அவள் எதையும் என்னிடம் கூறியதில்லை. எவ்வளவு கஷ்டத்த உள்ள வைச்சு அழுதுகிட்டு இருந்திருப்பா. நினைச்சாலே வேதனையா இருக்கு. அவர் போன பின் எல்லாமே பிள்ளைகள் தான் என்று செல்லம் கொடுத்து விட்டேன். ஆனால் எல்லாரும் என்னையே கொல்லும் அளவு போவார்கள்னு தெரியாமல் போச்சு என்று அழுதாள். அவளுக்காக பேசிய என் மீதே இவ்வளவு வன்மம் என்றால் அவளை எவ்வளவு கஷ்டப்படுத்தி இருப்பாங்க என்று மேலும் அழுதார்.

கவின் ஸ்ரீயை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தான். பெரியத்தை பேசுவதை கேட்ட காயத்ரி அங்கேயே ஓர் ஓரமாக அமர்ந்து அழுதாள். ஸ்ரீ அவளிடம் வர, கவின் என்ன பேசுறாங்கன்னு மறைந்து நின்று கேட்டான். தாரிகா அம்மா அவருக்கு ஆறுதலாக பேச, மருமகள் மீது இவ்வளவு பாசமா? என்று கமலி அவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

காயத்ரியை சமாதானப்படுத்தி ஸ்ரீ அவளை உள்ளே அழைத்து சென்றாள்.

அர்ஜூன் பாட்டியிடம் அபி இன்பா பற்றி பேசி இருப்பான். பாட்டியின் தோப்பு வீடு பாதுகாப்பாக இருக்கும். அவளுக்கு ஏதுவாக இருக்கும் என்று இன்பாவை அங்கே தங்க வைக்க ஏற்பாடு பற்றி பேசினான். அவர் யோசனையுடன் அங்கே பூச்சி நிறைய வரும் என்றார்.

காலையில் என்றால் எல்லாரும் சுற்றிலும் வேலை செய்வார்கள். நீங்களும் அங்கே இருப்பீங்க. இரவில் மட்டும் அவங்க தருண் வீட்ல தங்கிப்பாங்க என்றான். அவங்களுடன் அவங்க குடும்பமும்..இன்னொரு பொண்ணோட குடும்பமும் இருப்பாங்க என்று அவன் சொல்ல..வீடு சுத்தமா இருக்கணும். பார்த்துக்கோ என்றார்.

ஓ.கே என்றவுடன் அபி..இன்பா குடும்பமும், பவி குடும்பமும் அங்கு தங்கும் ஏற்பாட்டை அவனும் அர்ஜூனும் பார்த்தனர்.

மறை அர்ஜூன் பாட்டி வீட்டிற்கு வர உடன் பர்வதம் பாட்டியும் வந்திருந்தார். விசாலாட்சி வெளிய வாடி என்று அவர் சத்தமிட, எவடி அவ? அர்ஜூன் பாட்டி கேட்டுக் கொண்டே வெளியே வந்தார்.

புருசன் செத்து போய் அவனை பார்க்க கூட இல்லாமல் தாலிய தூக்கி  எறிஞ்ச மோசமான பொண்ணை வீட்ல வச்சிருக்க? கத்தினார் பர்வதம்.

பாட்டி, என்ன பேசுற? நீ பாட்டிய பார்க்க வந்தா பாட்டிய மட்டும் பார்த்துட்டு போ. தேவையில்லாம பேசாத மறை சத்தமிட,

என் வீட்டுக்கு வந்து ஏன்டி கத்திக்கிட்டு இருக்க?

அந்த பொண்ணை எங்கடி?

என்னோட வீட்டுக்கு யார் வந்தா உனக்கென்ன?

யாரோ இருந்தா பரவாயில்லை. என் பேரன் அவளுக்காக நிறைய அடிபட்டிருக்கான்.

பாட்டி..சும்மா இரு என்றான் மறை. அனைவரும் கீழே வர, காயத்ரியும் பெரியத்தையும் வந்தனர்.

ஓ..நீ தானாடி அந்த சிறுக்கி? என் பேரனை மயக்க பாக்குறியா? ஏற்கனவே ஒருத்தனை கொன்னது போதாதா? இவனையும் கொல்லணுமா? அவர் கேட்க,

என்ன பேசுறீங்க? என் மருமகளை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?

ஓ..செத்துப் போன பையனோட அம்மாவா? உன் பிள்ளைய மதிக்காத பொண்ணுடன் என்ன பண்ணிக்கிட்டு இருக்க? இந்த மாதிரி அபசகுணமுள்ள பொண்ணை ஊருக்குள்ள எதுக்கு விட்டீங்க? கேட்கவும் மறைக்கு கோபம் வந்தது.

பாட்டி..போதும். நிறுத்து. என்ன நடந்ததுன்னு தெரியாம பேசிக்கிட்டே போற? முதல்ல உன்னோட பேத்தி என்ன பண்றான்னு தெரிஞ்சுட்டு பேசு.

அவங்க பொறுமைக்கு முன்னாடி உன் பேத்தி கால் வாசி கூட வரமாட்டா என்று சத்தமிட்டான்.

என்னோட பேத்திய இவளோட ஒத்து பேசுற?

ரொம்ப சரியா சொன்னீங்க? உங்க பேத்தியோட ஒப்பிட்டு இவங்கள பேச முடியாது. அவள் தான் ஏழெட்டு பேரோட பழகுறாளே? மறை சினத்துடன் சொல்ல..அவன் நண்பர்கள் அவனிடம் வந்தனர்.

மற..வேண்டாம்டா. இதுக்கு மேல பேசாத.

டேய்..நானும் இத்தனை நாள் பொறுமையா பார்த்துக்கிட்டு தான இருந்தேன். ஏதாவது பேசி இருப்பேனா? என்னை பேச வைக்கிறாங்கடா என்று சீறினான்.

என்னடா சொன்ன? என்று பாட்டி அவன் சட்டையை பிடிக்க, நண்பர்களில் ஒருவனும் சினமுடன்,

ஏய்..கிழவி, அவனோட சட்டையை எதுக்கு பிடிக்கிற? உன்னோட பேத்தி இங்க வர்றதே. உன்னோட வீடு, நிலத்துக்காக தான். அதை விற்று காசாக்க தான் வந்து வந்து செல்கிறாள். மறையின் போனை அவனிடமிருந்து பிடுங்கி..இங்க பாரு என்று புகைப்படம் சிலதை எடுக்க..

டேய்..வேண்டாம் டா என்று மறை அவனிடமிருந்து போனை பிடுங்கினான்.

இருடா..கிழகி உன்னோட சட்டையவே பிடிக்குது? அது எவ்வளவு முட்டாளா இருக்குன்னு அதுக்கு தெரிய வேண்டாமா? என்று மறையின் போனை பிடுங்கி..போனை காட்டினான். அந்த பாட்டியின் பேத்தி விதவிதமான மார்டன் ஆடைகளுடன் பல ஆண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் இருந்தது. பாட்டி அதை பார்த்து மயங்கி சரிந்தார்.

டேய்..ஏன்டா, தண்ணி எடுத்துட்டு வாங்க மறை கத்த, தண்ணீருடன் அபி ஓடி வந்தான். அர்ஜூனும் அவனுடன் வந்தான். தண்ணீரை தெளிக்க..பாட்டி விழித்தார்.

பாட்டி..உனக்கு ஒன்றுமில்லையே? என்று மறை அவரை கட்டிக் கொண்டான்.

டேய்..இடியட், ஏன்டா இதையெல்லாம் காட்டுன? மறை அவன அடிக்க வந்தான். நான் அவளை பார்க்கணும். உடனே வர சொல்லு..என்றார் அவர்.

அவன் நண்பனை விடுத்து அவரிடம் வந்து, பாட்டி பட்டணத்துல இதெல்லாம் சாதாரணம். ப்ரெண்டா கூட இருக்கலாம். நீ எதையும் யோசிக்காத. டாக்டர் என்ன சொன்னார் நினைவிருக்குல?

அவனை கண்ணீருடன் பார்த்து, அவளுக்காக தானடா நான் எனக்கான ஆப்ரேசனுக்கே ஒத்துக்கிட்டேன். எனக்கு எதுவுமே வேண்டாம். எல்லாத்தையும் அவ பேருக்கு மாத்த ஏற்பாடு செய்.

பாட்டி, அவளுக்கு மாத்துனா? உன்னை பார்க்க கூட வர மாட்டா?

வரமாட்டாலா? என்று அவரும் அவனை கட்டிக் கொண்டு அழுதார்.

ஆப்ரேசனா? பெரியத்தை கேட்க, மறை அவரை பார்த்து “இருதய ஆப்ரேசன்” என்றார்.

பணம் அதிகம் தேவைப்படுமே?

ஆமா. 90 சதவீதம் பணம் இருக்கு. மீதிக்கு நிலத்தை விக்கணும் என்றான் அவன்.

நிலத்தை விக்கணுமா? அதையா அந்த பொண்ணுக்கு கொடுக்க சொல்றாங்க?

ஆமாம் என்று தலையசைத்தான்.

அவளுக்கு எதையும் கொடுக்காமல் அவளை சரி செய்ய நல்ல பையனா பார்த்து அவளுக்கு கல்யாணம் பண்ணி வச்சிரு என்றார் அர்ஜூன் பாட்டி.

பர்வதம் பாட்டி மறையை பார்க்க, பாட்டி வாழ்நாள் முழுவதும் என்னால் உன்னை பார்த்துக்க முடியும். ஆனால் ஒரு நாள் கூட உன் பேத்தியை என்னால் சமாளிக்கவே முடியாது.

ஏய்யா..இப்படி பேசுற? உன்னை விட்டா யாரு இருக்கா?

பாட்டி என்னால முடியாது.

அர்ஜூன் பாட்டி மறையிடம், ஏன்ப்பா முடியாது? நம்ம வீட்ல வளர்க்க குதிரையவே சமாளிக்கிற? ஒரு பொண்ணை சமாளிக்க முடியாதா?

பொண்ணை சமாளிக்கலாம். ஆனால் அவளை சமாளிக்க முடியாது.

அவளை சமாளிக்க முடியாதா? இல்ல வேற யாரையும் உனக்கு பிடிச்சிருக்கா? என்று தெரிந்து கொண்டே அர்ஜூன் பாட்டி கேட்க, பாட்டி சும்மா இருங்க என்று அவன் நண்பன் ஒருவன் தடுக்க..

எனக்கு பிடிச்சிருக்கு. ஆனால் அது தெரிய வேண்டியவங்களுக்கு தெரியும். அவங்க பதில் சொன்னா பார்க்கலாம் என்று மறை கூறிக் கொண்டே காயத்ரியை பார்த்தான். அவள் கோபப்படாமல் அமைதியாக நின்றாள். மறைக்கு ஆச்சர்யமாக இருந்தாலும், பர்வத பாட்டியை பார்த்து, நீ இன்னும் யாரிடமும் ஏதாவது பேசணுமா? என்று கேட்டான்.

காயத்ரியை அவர் பார்க்க, அம்மா..என்று ராக்கி காயத்ரியிடம் ஓடி வந்தான். அனுவும் வெளியே வந்து ராக்கி இங்க பாரு..பாட்டி கீழ விழுந்திருக்காங்க..வாடா..என்று ராக்கி கையை பிடித்து அனு பர்வத பாட்டியிடம் வந்தாள்.

பாட்டி..கீழ விழுந்துட்டீங்களா? அனு கேட்க, அவர் மறையை பார்த்தார். அவன் காயத்ரியை பார்க்க, பாட்டி ஏதும் ராக்கியிடம் பேசிடுவாங்களோ? என்று பயத்துடன் பாட்டியை பார்த்தாள். பாட்டியும் அவளை பார்த்தார்.

ஏம்மா..உனக்கு ரெண்டு புள்ளைங்களா? கேட்டார் பர்வதம்.

பையன் மட்டும் தான் என்றாள் சுருக்கமாக.

பாட்டி..சொல்லுங்க? அனு மீண்டும் கேட்க, இல்ல குட்டி..நான் இப்ப எழுந்திருவேன் பாரு என்று மறை கையை பிடித்து எழ, அவரை தாங்கிய படி..ரெண்டு பேரும் உள்ள போய் விளையாடுங்க என்றான்.

அந்த குட்டிப் பொண்ணு யாருடா? மறையிடம் கேட்க, அவ என்னோட பொண்ணு என்று அர்ஜூனும், அவ என்னோட தோழியின் பொண்ணு என்று காயத்ரியும் கூறி இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அனைவரும் அவர்களை பார்க்க..

அர்ஜூன், அவ வினிதாவுக்கும் அண்ணாவுக்கும் பிறந்த பொண்ணு. நீ உன்னோட பொண்ணுன்னு சொல்லாத. அது உன் வாழ்க்கையை பாதிக்கும் காயத்ரி கூறினாள்.

அக்கா..நான் ஏற்கனவே சொன்னதை தான் இப்பொழுதும் சொல்கிறேன். ஸ்ரீயை தவிர என் வாழ்வில் எந்த பொண்ணும் வர முடியாது. அப்புறம் அனு. அனு எப்ப எங்க பொறுப்பில்ல வந்தாலோ..அப்பவே என்னோட பொண்ணாயிட்டா. இதில் என் வாழ்க்கை பாழாக ஏதுமில்லை. ஸ்ரீ என்னை ஏத்துக்கலைன்னாலும் எனக்கு அனு எப்பொழுதும் என் மகளாக என்னுடன் இருப்பாள். ஸ்ரீயும் நானும் கல்யாணம் பண்ணிக்கலைன்னாலும் ஸ்ரீ கண்டிப்பாக என்னை தவிர யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டா என்று எனக்கு நன்றாக தெரியும் என்று ஸ்ரீயை பார்த்தான். அவள் அமைதியாக நின்றாள்.

ஆனால் அர்ஜூன்..காயத்ரி பேச, அவன் முடிவெடுத்தால் மாற மாட்டான். நடப்பது நல்லதுக்குன்னு விட்ற வேண்டியது தான் அர்ஜூன் பாட்டியும் ஸ்ரீயை பார்த்துக் கொண்டே பேசினார்.

ஸ்ரீக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அமைதியாக நின்றாள். அர்ஜூன் கண்டிப்பா நீ நினைக்கிற மாதிரி நான் உன்னிடம் கண்டிப்பாக என் காதலை சொல்வேன். உன் காதலுக்கு சும்மா சொன்னா நல்லா இருக்காது என்று ஸ்ரீ மனதில் நினைத்தாள். கவின் ஸ்ரீயை பார்த்தான். அவள் உள்ளே செல்ல, அர்ஜூன் அனுவுடன் உள்ளே செல்ல..மற்றவர்கள் மறையை பார்த்தனர்.

வா..பாட்டி வீட்டுக்கு போகலாம் மறை கூற, அவளுக்கு அனைத்தையும் எழுதி குடுக்குறேன்னு ஏதாவது செய்யாதே என்று அர்ஜூன் பாட்டி சொல்ல பர்வதம் அமைதியாக நின்றார்.

பெரியத்தை மறையின் நண்பர்களை பார்த்தார். பின் பர்வத பாட்டியிடம், அந்த பையனை உங்க பேத்திக்கு முடிச்சு வையுங்க என்று காயத்ரி மறையை பற்றி ஒருவனிடம் விசாரித்தாரே அவனை கைக் காட்டினார்.

அய்யோ..நான் சும்மா அந்த பொண்ணை கட்டி வைக்க சொல்லி கிழவிகிட்ட வம்பு செய்ய கேட்டேன். அவ்வளவு தான் என்றான் அவன். மறையும் அவனை பார்த்தான். அவனுக்கு அந்த பொண்ணை பிடிக்குமோ? என்று சிந்தித்தான்.

பர்வதம் பாட்டி அவனை பார்த்து, நீ என் பேத்திய கட்டிக்கிறியா? கேட்டார்.

அவன் யோசனையோடு அனைவரையும் பார்த்து, அந்த பொண்ணுக்கு என்னை பிடிக்காதே?

அது எப்படி பிடிக்காமல் போகுமென்று நான் பார்க்கிறேன் பாட்டி கூற, கவனித்துக் கொண்டிருந்த காயத்ரி..ஒரு நிமிஷம் நான் பேசலாமா? என்று கேட்டாள். எல்லாரும் அவளை பார்க்க,

விருப்பமில்லாதவரை கட்டிக்கிட்டு அந்த பொண்ணு இவர் வாழ்க்கையையும் கெடுத்து விட்டால் என்ன செய்வது? என்று கேட்டாள்.

அந்த பொண்ணு எப்படி இருந்தாலும் அவருக்கே பிடித்திருந்தாலும் இவங்க பேத்திய மாதிரி பொண்ணுங்க ஏத்துக்க மாட்டாங்க. இவர் இருக்கும் போதே என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதனால்…என்று அவள் அவளோட பெரியத்தையை பார்த்தாள்.

என்ன? என்று அவர் பார்க்க, பாட்டியின் பணம், நிலத்தை வைத்து “வாழ்நாள் ஒப்பந்த கல்யாணம்” பண்ணி வைக்கலாம். எல்லா பொண்ணுங்களும் மோகத்திற்காகவெல்லாம் பழக மாட்டாங்க. அவங்களுக்கு தேவையானது கிடைக்க பழகலாம். அதுக்காக பணத்திற்காக தவறான உறவில் இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. அவங்க ஏமாற்றி வெளிய தேவையானதை எடுத்துக் கொண்டு வெளியே வரும் பொண்ணுங்களும் இருக்காங்க.

ஏன்? பாட்டியோட பேத்தியும் அப்படி இருக்கக்கூடாது. அவளுக்கு பணம் வேண்டுமென்பதால் தான் பாட்டியிடமிருந்து எழுதி வாங்க நினைக்கிறாள்.

அவள் எதிர்ப்பார்ப்பதை இவர் மேல் நம்பிக்கை இருந்தால் இவர் பெயரில் மாற்றுங்கள். இவர் அப்படியே விட்டு விட்டால் தான் இவர் வாழ்க்கைக்கு பிரச்சனை. அதுவே இவர் அதை லாபகரமாக்கினால் கண்டிப்பாக நாள் செல்ல செல்ல அவளே ஏத்துப்பாள். நிலத்தில் விவசாயம் செய்யலாம். இல்லை தொழிற்சாலை அமைக்கலாம். வேறெதாவது நிறைய செய்யலாம். “சிறுதுளி பெரு வெள்ளம்” சிறியதாக உள்ள நிலத்தில் ஏதாவது செய்து பன்மடங்காக பெருக்கி அவளுக்கென கொடுத்தால் அமைதியாக இருக்கப் போகிறாள்.

அதுஎப்படி? பட்டணத்து பொண்ணு..கொஞ்ச பணத்துக்கு அமைதியாக இருப்பா? அவன் கேட்டான்.

இருப்பா. அவளுக்கு இருப்பது பாட்டி மட்டும் தான? அவளுக்கு பட்டணத்தில் எத்தனை நண்பர்கள் இருந்தால் பாசமாக, அக்கறையுடன் நடந்து கொள்ள யாரும் இருக்க மாட்டாங்க. கண்டிப்பா அவள் இங்க சந்தோசமா இருப்பா. இப்பொழுது கூட பாட்டி அக்கறை கூட அவளுக்கு இதமாய் இருப்பதால் கூட அடிக்கடி வரலாம்.

நீங்க அவள வர வைச்சு அவளிடம் பேசாம, கவனிக்காம இருந்து பாருங்க. அவளோட உண்மையான குணம் வெளிய வரும். எல்லாரும் பிறந்ததிலிருந்து தப்பு செய்வதில்லை. ஏதாவது கஷ்டமான சம்பவம் கூட அவர்களை தவறான வழியில் இழுத்து சென்றிருக்கும். இப்பொழுதே ஏதும் செய்ய வேண்டாம். அவளை பற்றி பாட்டி, நீங்களும் அண்ணாவும் நன்றாக அறிந்து கொண்டு செயல்படுத்துங்கள்.

ஆனால் பாட்டி, அம்மாவை ஒத்துக்க வைக்க முடியாதே? என்றான் அவன்.

நான் பேசிப் பார்க்கிறேன் என்றார் பாட்டி.

அப்ப உனக்கு ஓ.கே வாடா? மறை கேட்டான்.

எனக்கென்னடா? ஓ.கே தான் என்றான்.

ஏன்டா, சொல்லாம இருந்த? நண்பன் ஒருவன் கேட்க, ஆமா..இந்த கிழவி எப்பப்பாரு இவனோட புராணத்தை நம்மிடமே பாடும். இதை எப்படி நான் சொல்றது? சும்மா பிடிச்சிருந்தது என்றான் அவன்.

அக்கா..உங்க பிளான் சூப்பர். ஏய்..கிழவி உன் பேத்திக்கிட்ட உலறி ஏதும் வச்சிறாத? என்றான் அவன்.

இப்ப கூட கிழவி தானா?

ஆமா..கிழவிய கிழவின்னு சொல்லாம..எப்படி கூப்பிடுறது?

அவள அக்கான்னு கூப்பிட வேண்டாம். அவளை காயத்ரின்னே கூப்பிடுங்க. அவளுக்கு பிள்ளை இருந்தாலும் வயசு இருபத்து மூன்று தான்.

என்ன? என்று மறையின் நண்பர்கள் வாயை பிளக்க, மறையே அதிர்ந்து தான் பார்த்தான்.

சாரிம்மா பாப்பா..உன்னை தெரியாம அக்கான்னு சொல்லிட்டேன். இல்லடா என்று மறையை பார்த்தான். மறை அவனை முறைத்து பார்த்தான்.

நான் பேர் சொல்லி தான் அழைக்க சொன்னேன். இந்த பாப்பாவெல்லாம் கூடாது என்றார் கண்டிப்புடன் பெரியத்தை.

ஓ.கேம்மா..என்று அவன் தலையை ஆட்ட, மறையோ அவனை முறைப்பதை நிறுத்தவில்லை. இவர்கள் பேச்சு மாற..காயத்ரிக்கு ஒரு மாதிரி இருந்தது. அவள் உள்ளே சென்றாள்.

டேய்..போதும்டா..அவனை அப்புறம் முறைச்சுக்கலாம். தோப்பு வீட்டை மட்டும் தயார் செய்துட்டு வாரோம் என்றான் ஒருவன். பாட்டிய வீட்ல விட்டுட்டு நானும் வாரேன்டா என்று மறை சொல்ல..தம்பி, உங்களுக்கு வயசு என்ன ஆவுது? பெரியத்தை மறையிடம் கேட்டார்.

எனக்கு இருபத்தேழு என்றான் அவன். உங்ககிட்ட ஒண்ணு சொல்லணும்? உங்க மருமகள எதுக்கும் கட்டாயப்படுத்த வேண்டாம். அவங்களுக்கு தோன்றினால் என்னை பற்றி அவங்களே சொல்லட்டும்மா..என்று கிளம்பினான்.

அர்ஜூன் வேகமாக வெளியே போனுடன் வந்தான். அண்ணா..நானும் வாரேன் என்று வெளியே செல்ல..தம்பி சாப்பிடாம போறீங்க? பெரியத்தை கேட்டார்.

வந்து சாப்பிடுறேன்ம்மா என்ற அர்ஜூன் அவன் பைக்கை எடுக்க, அபி அவன் முன் வந்தான்.

என்ன அர்ஜூன் பிரச்சனை?

அபி..என்று தயங்கி பெரியத்தையை பார்த்தான். என்ன ஆச்சுப்பா? என்று அவர் வர..அது வந்தும்மா..உங்க இளைய பொண்ணு கோர்ட்டுக்கு போற வழியில தப்பிச்சிட்டாங்களாம்.

என்னப்பா சொல்ற?

ஆமாம்மா. நான் பார்த்துட்டு வாரேன் என்று அர்ஜூன் கிளம்ப, அவங்க இங்க தான் வருவாங்கன்னு தோணுதுடா..என்றான் அபி.

நிச்சயமா. அம்மா அவங்க உங்க பொண்ணு தான். ஆனால் கவனமாக இருங்க. தாய்ப்பாசத்தில் அவர்களை பேசுவதில் ஏமாந்து அருகே செல்லாதீர்கள். என்ன வேண்டுமானாலும் நடக்க வாய்ப்புள்ளது என்று அபி, கவினை பார்த்து அக்காவையும் அம்மாவையும் பார்த்துக்கோங்க. வினிதா அக்காவை இழந்தது போல் இவங்களை நாம் இழக்கக்கூடாது என்றான் அர்ஜூன். அவர்கள் இந்த பக்கம் வரவிடாமல் தடுக்க பார்க்கிறோம். வேலு அண்ணா தவிர மற்றவர்களுடம் விசயத்தை சொல்லி இங்க வர வையுங்கடா. பார்த்துக்கோங்க. கவனமா இருங்க என்று அர்ஜூன் சென்றான்.

மறைக்கு இவ்விசயம் எட்டியவுடன் அவர்களை பார்க்க வந்து விட்டான். ஆனால் காயத்ரியின் பேச்சால் யோசனையுடன் வெளியே அமர்ந்தான்.

கவின் அவனை பார்த்து, உள்ள வாங்கண்ணா..என்று அழைக்க, இருக்கட்டும் டா. அவர்களை அறையிலே இருக்கச் சொல்லு. எந்த அறைன்னு வெளிப்பக்கம் காட்டேன் என்று தயங்கி கேட்டான் மறை. தாரிகாவும் உள்ளே வரச் சொல்ல. நீயும் அவங்க அறையில இருக்கிறியாம்மா? உன்னோட போன் நம்பரை கொடு என்று வாங்கினான்.

அண்ணா..நீங்க பதரும் அளவிற்கு ஏதும் நடக்காது என்றான் அபி.

வா..என்று கவின் அபியை இழுத்து..எங்க இருக்காங்க என்று அறையையே சுற்றிப் பார்த்தான். இருவரும் புன்னகையுடன்..எத்தனை பேர் இருக்காங்க பார்த்தீங்கள? அதெல்லாம் அவங்களால வர முடியாது என்றான் அபி.

அண்ணா..அந்த அறை தான் என்று கை காட்ட, அவன் அங்கே நின்று கொண்டு, நீங்க உள்ள போங்க என்றான். அவன் நண்பர்களும் அவனுடன் வந்தனர்.

Advertisement