அத்தியாயம் 87

கமலியிடம் சென்ற அபி..தி கிரேட் பிசினஸ் வுமனின் மகன் தினமும் தூங்க மாத்திரை போடுகிறாரா? என்று கேட்டுக் கொண்டே அவரிடம் வந்தான். அவர் அவனை பார்த்து முறைத்தார்.

மேம் என்னை முறைத்து பயனில்லை. உங்களுக்கு என்ன பிரச்சனையோ? எனக்கு தெரியாது. நான் தான் அர்ஜூனை புரிஞ்சுக்கலை. உங்க பையன் தான அவன். நீங்களும் புரிஞ்சுக்கலையே? இதுவரை நடந்ததை விடுங்க. ஒரே ஒரு வார்த்தை ஸ்ரீயிடம் சொன்னால் போதும். ப்ளீஸ் ஆன்ட்டி.. அவனை இன்னும் இருவரும் கஷ்டப்படுத்தாதீங்க. அவர் அமைதியாக நின்றார். அப்பொழுது தான் கைரவ் கத்தும் சத்தம் கேட்டு இருவரும் அவர்களை பார்த்தனர். கைரவ் கடைசியாக பேசியது மட்டும் கவனித்தனர் இருவரும்.

ஸ்ரீ அழுவதை பார்த்து அபியும் ஸ்ரீயிடம் ஓடி வந்தான். ஸ்ரீ…அழாத.. போதும்..வா போகலாம் அவன் அழைக்க..அவள் அழுது கொண்டே இருந்தாள். அனுவும் அழுது கொண்டிருக்க..

அனு அழுறா ஸ்ரீ. நீ அழுவதை நிறுத்து அபி கோபமாக சத்தமிட்டான். அங்கே வந்த பிரதீப்..ஸ்ரீயையும் கமலியையும் பார்த்து விட்டு அனுவை தூக்கினான்.

ஸ்ரீ எழுந்திரு..பிரதீப் கூற, வேலுவும் தருணும் அங்கு வந்தனர்.

எழ போறியா? இல்லை அர்ஜூனை விழிக்க வைக்கணுமா? பிரதீப் அரட்டினான். அவள் பின் நகர்ந்து அழுது கொண்டே வாயை மூடி அமர்ந்தாள்.

ஸ்ரீ எதுக்கு அழுற? தருண் அவளிடம் வர,..நில்லுங்க. அவள் பக்கத்தில் யாரும் வர வேண்டாம். நீ இங்கே இருக்க வேண்டாம். உனக்கு தான் அர்ஜூன் வேண்டாம் என்று கூறிட்டேல்ல. நீ கிளம்பு. உன்னோட ஆன்ட்டி வீட்ல விட்டுருறேன். நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ. எப்படியும் போ. எங்க பிரச்சனைய நாங்க பார்த்துப்போம். ஆனால் இனி அர்ஜூன் பக்கம் கூட வரக்கூடாது பிரதீப் கூற, அனைவரும் திகைத்தனர்.

அண்ணா..என்ன பேசுறீங்க? அவ அங்க போனான்னா? தருணால் பேச முடியாமல் ஸ்ரீயை பார்த்தான். அவள் மேலும் அழுதாள்.

அண்ணா, உங்களுக்கு தெரியுமே? அர்ஜூனை ஸ்ரீ காதலிக்கிறாள்.

என்ன காதலா? இவளுக்கா?

காதலிச்சா யார் என்ன சொன்னாலும் விட்டு போகக்கூடாது. அவனோட அம்மா சொன்னா விட்டுருவாளா? அர்ஜூன் அவன் அம்மாவை எதிர்த்து நிற்கலையா? இப்ப வரை ஸ்ரீயை ஒரு வார்த்தை சொல்லவிட மாட்டான். ஏம்மா..உனக்கு தெரியாதா? உன்னால் ஏன் அவனிடம் காதலை சொல்ல முடியலன்னு எனக்கு புரியுது.

நீ நடந்ததையே நினைச்சுக்கிட்டு இருந்து உன்னோட வாழ்க்கையை மட்டுமல்ல அவனுடைய வாழ்க்கையையும் அழிச்சுகிட்டு இருக்க. தனியா உன்னை மட்டும் நாலு வருசமா நினைச்சுகிட்டு இருந்திருக்கான். எந்த அளவுக்கு உன் மேல காதல் இருக்கும்.

யோசிம்மா..யார் உன்னை தப்பா பேசினாலும் அவனுக்காக நீ யோசிக்கலாமே? இந்த பாப்பாவுக்காகவாது யோசிம்மா..என்று பிரதீப் அனுவை ஸ்ரீயிடமே கொடுத்தான்.

அழுகையை நிறுத்தி ஸ்ரீ அனுவை பார்க்க..அம்மா..என்று ஸ்ரீயை அணைத்துக் கொண்டாள் அனு. ஸ்ரீ கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டு பிரதீப்பை பார்த்தாள். நான் முயற்சி பண்றேன் என்று அனுவை தூக்கிக் கொண்டு எழுந்து கமலியை பார்த்தாள்.

சாரி ஆன்ட்டி என்று அவள் விலக, பிரதீப் கூறியதில் ஸ்ரீக்கு நடந்ததா? என்னவாக இருக்கும்? என்று சிந்தித்தார். அனைவரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அண்ணா..பாப்பாவுக்கு காய்ச்சல் அதிகமானது போல் தெரிகிறது என்றாள் ஸ்ரீ.

நீ இரு நாங்க பார்த்துக்கிறோம் என்று அபி அனுவை தூக்கி டாக்டரிடம் காட்ட, ஊசி செலுத்தப்பட்டு தாரிகா அம்மாவிடம் அழுது கொண்டே தூங்கினாள் அனு.

வேலு..நீ வீட்டுக்கு போ..நித்தி வீட்டுக்கு நீயும், அகல்யாவும் வரக்கூடாது. அவ வீட்ல தான இருக்கா? கவின் கண்டிப்பா அங்க தான் இருப்பான். ஆன்ட்டியை வீட்டிக்கு வரச்சொல்லு. ரெண்டு நாள்ல நிச்சயத்தை வச்சுகிட்டு அங்க இருக்கக்கூடாது. நீ வீட்டுக்குள்ள போகலைல்ல? பிரதீப் கேட்டான்.

போகலண்ணா.

இருந்தாலும் குளிச்சிட்டு உன்னோட வீட்டுக்குள்ள போ..அங்கிள் அகல்யாவுடன் தான இருக்கார்.

ம்ம்..என்றான்.

அண்ணா நான் மறையுடன் இருக்கேன் என்று வேலு சொல்ல..அவன் ரொம்ப பிஸியா இருப்பான் என்று பிரதீப் புன்னகைத்தான்.

பிஸியா? அவனா? என்று வேலு உள்ளே செல்ல..மற்றவர்களும் அவனை பின் தொடர்ந்தனர்.

அவனை பார்க்க அனைவரும் செல்ல..அவன் ராக்கியுடன் தூங்குவதை பார்த்து..அண்ணா, என்ன நடக்குது? என்று பிரதீப்பிடம் கேட்டுக் கொண்டே தருண் உள்ளே சென்று ராக்கியை தூக்க கையை கொண்டு வந்தான். அவன் கையை பிடித்த மறை கண்ணை திறந்து..அவன் தூங்கட்டும். நீ போ..என்றான்.

அண்ணா..அவன்? தருண் கேட்க..போ..என்று மெதுவாக முறைத்தபடி மறை கூற, அண்ணா..அவன் அந்த பையனை வச்சுக்கிட்டு என்ன பண்றான்?

ஹ..லவ் பண்றான் பிரதீப் கூற, அண்ணா..என்று மறை பிரதீப்பை முறைத்தான்.

பார்றா.. என்னையே முறைக்கிறான்?

டேய், மற..அண்ணாவையே முறைக்கிற..

ஷ்..பையன் தூங்குறான். அப்புறம் பேசலாம்.

பையனா? யார் பையன்? வேலு கேட்க, அங்கிருந்த தலையணையை தூக்கி மறை வேலு மீது எறிந்தான். அதை பிடித்த வேலு, பாவி..விட்டா கொன்றுவான் போல.

வாங்க போகலாம் என்று தள்ளி சென்று வேலு பிரதீப்பை பார்த்தான். அபியும் மறையை பார்த்துக் கொண்டே அவன் மாமாவிடம் சென்று அமர்ந்தான்.

அண்ணா..அவனுக்கு என்ன ஆச்சு?

ஆமாம்டா. அவனுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன். கேட்டால் குட்டிப்பையனுக்காகன்னு சொல்றான்.

எந்த பொண்ணா இருந்தாலும் ஓ.கே. ஆனால் இவங்க கணவன் இறந்து ஒருநாள் கூட ஆகல வேலு சொல்ல,

அதுக்கென்ன அண்ணா. அக்கா ஒன்றும் வாழ்க்கையை சந்தோசமா வாழலையே. கஷ்டப்பட்டு இருக்காங்க. அந்த ஆள் மீது காதலும் இல்லை. அக்காவுக்கு ஓ.கேன்னா பார்க்கலாமே? அபி கேட்க,

அபி எவ்வளவு சாதாரணமான சொல்ற? தருண் கேட்டான்.

தப்பான பழக்கம் இருக்கப் போறதில்லையே? பார்க்கலாம்.

அக்கா என்ன பேசினாங்க தெரியுமா? அவங்க பையன் மட்டும் போதும்ன்னு சொன்னாங்க. அதுக்காக அவங்க வாழப்போன இடத்துக்கு போக மாட்டேன் என்றும்..அவங்க செத்துப்போன புருசன் மூஞ்சில விழிக்கவே மாட்டேன்னு தாலிய தூக்கி எறிஞ்சுட்டாங்க. யாரும் வேண்டாம் பையன் போதும்ன்னு தூக்கி எறிஞ்சி பேசினாங்க. எல்லாவற்றையும் கூறினான்.

ஆமா..அவனால அந்த அளவு கஷ்டப்பட்டு இருக்காங்க. இனி எப்படி அவங்க அங்க இருக்க முடியும்? அவன் ரொம்ப கேவலமான ஆள். அவனிடம் மாட்டி பட்ட கஷ்டம் போதாதா? அவங்க என்ன பண்ணனுன்னு முடிவு பண்ணுவாங்க.

இப்ப அவங்களுக்கு இருப்பது பையன் மட்டும் தான? சரியா தான் பேசி இருக்காங்க.

ஆனால் இப்ப அவங்க பையன் யார்கிட்ட இருக்கான்? இத்தனை வருசமா அப்பாவை வெறுத்த அவனே கூறுவான். அப்பா..என்பதன் அர்த்தம் புரியாத சிறு பையன். இப்ப தான பழக ஆரம்பிச்சு இருக்காங்க? அக்காவுக்கு அண்ணாவை பிடிக்குதோ என்னவோ? ஆனால் அவன் கண்டிப்பாக அண்ணாவை தேடுவான். குட்டிபசங்களுக்கு ஒன்ஸ் பிடிச்சு இருந்தா மாற மாட்டாங்க. அவங்களுக்கு எதை பற்றியும் தெரியாது? பாதுகாப்பு யாரிடம் இருக்கோ அவங்களிடம் தான் இருப்பாங்க. பார்க்கலாம் என்று அபி பேசினான்.

விட்டா நீயே சேர்த்து வச்சுருவ போல? வேலு கேட்டான்.

இல்லண்ணா..நம்ம ஊர்க்கட்டுப்பாடு இருக்கே. அக்கா என்ன செய்றாங்கண்ணு பார்க்கலாம்.

அவனுக்கும் உறவுகள் இருந்தால் சந்தோசமா இருப்பான். இத்தனை நாள் கஷ்டப்பட்ட வாழ்க்கையின் பலன் இவங்க தான்னா? யாரால மாத்த முடியும்? பிரதீப் பேச, சரி தான் என்று தருண் கூறினான்.

நிவாஸ் ஹாஸ்பிட்டலுக்குள் நுழைந்தான். அபியை பார்த்து அவனிடம்..அர்ஜூனுக்கு என்னாச்சு? அவன் அறையை கைகாட்டினான்.

நீ எங்கடா போன? தருண் கேட்டான்.

சீனியர்,..நான் அசதியில தூங்கிட்டேன் என்று சொல்லி விட்டு அறைக்குள் சென்றான். அர்ஜூன் பாட்டி, அம்மா, ஸ்ரீ, ஆதேஷ், அனு இருந்தனர்.

தாரிகா பாட்டியிடம் வந்து, நீங்க வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க பாட்டி என்று கமலியை பார்த்தாள். ஆது பாட்டிய வீட்டுக்கு அழைச்சிட்டு போ. எல்லாரும் கொஞ்சம் வெளிய இருக்கீங்களா? கேட்டாள்.

ஏ..நான் இப்ப தான் வந்தேன் நிவாஸ் கூற, அவனை பிடித்து வெளியே தள்ளி விட்டு கமலியை பார்த்தாள். ஸ்ரீயை பார்த்துக் கொண்டே வெளியே சென்றார் கமலி.

தாரிகா ஸ்ரீயிடம் பேசினாள். இங்க பாரு எனக்கும் சீனியருக்கும் நீ செஞ்ச எல்லாமே தெரியும். அன்று குடிக்கும் முன் பேசிய எல்லாமே எங்களுக்கு தெரியும்? உன்னோட காதலை எதுக்கு மறைக்க நினைக்கிற? அண்ணாவுக்கு நீ இல்லாம வேலையே ஓடாது. அவன் மனது அங்கேயே நின்று விடுகிறது.

ஸ்ரீ மத்தவங்க சொல்ற மாதிரி, நீ அனுவுக்காக அர்ஜூனை ஏத்துக்கக்கூடாது. உனக்காக அவனுக்காக ஏத்துக்கோ. நீ இல்லைன்னா.. அனு கஷ்டப்படுவா தான். ஆனால் நாங்க எல்லாரும் அனுவுக்கு எப்பொழுதும் இருப்போம். ஆனால் அர்ஜூனுக்கு நாங்க இருந்து நீ இல்லாமல் இருந்தா நாங்க இருந்து எந்த பயனுமில்லை. இத்தனை வருசமா காத்திருந்தான். அவன் உன்னிடம் காதலை எத்தனை முறை வேண்டுமானாலும் கூறி இருக்கலாம். ஆனால் அதை வைத்து உன்னை ஒரு முறை கூட கட்டாயப்படுத்தவில்லை. உனக்கு புரியும் என்று நினைக்கிறேன். சொல்லிடு ஸ்ரீ என்று தாரிகா எழுந்தாள். ஸ்ரீயும் எழுந்து தாரிகாவை அணைத்து அழுதாள்.

என்னாலும் அவனை பார்க்காமல் இருக்க முடியாது தாரி. ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால மறக்க முடியல. ஒரு மாதிரி..அருவருப்பா இருக்கு. அதான் ஜிதினையே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு யோசிச்சேன். ஆனால் அர்ஜூனை கஷ்டப்படுத்தவும் முடியாது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அந்த வீடியோ மட்டும் வெளிஆளுங்க யாரிடமாவது கிடச்சா செத்தே போயிடுவேன்.

தேவையில்லாம யோசிக்காத ஸ்ரீ. அவன் எல்லா வீடியோவையும் அழிச்சிட்டான்.

எனக்கு இன்னும் பயமா தான் இருக்கு தாரி.

ஸ்ரீ..ஸ்ரீ..நீ பயப்பட தேவையேயில்லை. நீ என்ன நினைச்சுக்கிட்டு இருக்க? அர்ஜூனின் பாசிட்டிவ், நெகட்டிவ் ரெண்டுமே நீயும் அனுவும் தான். அவனுக்கு நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை வேணும். அவனுக்கு ஏதாவது ஆகும்ன்னு பயப்படாத. அவனுக்கு உன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். அதுக்கு தான் இந்த பாடுபடுறான். உங்களை பார்த்துக் கொள்ளும் அவன், அவனை கண்டிப்பாக கவனித்து கொள்வான். நீ குடித்ததிலிருந்து அவன் அந்த பக்கம் கூட போகல. கண்டிப்பா அதை இனி தொடவும் மாட்டான்.

தயவு செஞ்சு அன்று போல் மட்டும் சொல்லாத. ஜிதினை கல்யாணம் செய்து அர்ஜூனை உயிரோட கொன்றாத என்று தாரிகா அழுதாள்.

இல்ல தாரி. நான் என் முடிவை மாத்திக்கிட்டேன். கல்யாணம்ன்னு ஒன்று நடந்தால் இனி அர்ஜூனுடன் மட்டும் தான்.

“தேங்க்ஸ்டி” தாரிகா ஸ்ரீயை அணைத்துக் கொண்டாள்.

தாரி..நான் பேசியதை மட்டும் நீங்க இருவரும் அவனிடம் சொல்லிறாதீங்க. நானே சொல்றேனே ப்ளீஸ். ஆனால் எனக்கு நேரம் வேண்டும்.

சரி..ஸ்ரீ. நீ இங்கே இருக்க போகிறாயா? நித்தி சீனியரை பார்க்க போகிறாயா?

அதிகாலையாக போகிறது. அனு தூங்குறா..நான் இங்க இருக்கேன். சற்று நேரம் கழித்து கிளம்புகிறேன்.

ஓ.கே ஸ்ரீ..கிளம்பிய தாரிகா ஸ்ரீயிடம் அர்ஜூன் அம்மா? கேட்டாள்.

நான் பேசணும்..தாரி நீ அவங்கள வர சொல்றியா?

அவள் வெளியே சென்று சொல்ல கமலி உள்ளே வந்தார். ஸ்ரீ எழுந்து நின்றாள்.

உட்காரு..என்ன பேசணும்? கேட்டார். அவள் அமைதியாக இருந்தாள்.

பேசணும்ன்னு சொல்லிட்டு அமைதியா இருக்க?

மேம்..என்னால முடியாது ஸ்ரீ கூற, என்ன முடியாது?

அர்ஜூனை விட்டு போக முடியாது?

அவர் அமைதியாக இருந்தார். ஸ்ரீ எழுந்து கமலியின் அருகே அமர்ந்தாள்.

அது என்ன? ஏதோ நடந்ததுன்னு சொல்றாங்க? உனக்கு உடம்பு எதுவும் சரியில்லையா?

மேம்..அது என்று முதலில் கண்கள் கலங்க..அனைத்தும் நினைவு வர, ஏங்கி ஏங்கி ஸ்ரீ அழுதாள்.

ஏய்..என்னாச்சு? தப்பா கேட்டுட்டேனா?

அழுது கொண்டே நான் அர்ஜூனுக்கு தகுதியானவள் இல்லை ஆன்ட்டி..என்றாள்.

இப்ப தான் மேம் என்றால் அதற்குள் ஆன்ட்டியா? நான் சொன்னதை சொல்றியா?

இல்ல ஆன்ட்டி..பணம், சொத்து பற்றி இல்லை. நான்..நான்..என்று அழுது கொண்டு கீழே அமர்ந்து உடலை குறுக்கி கதறினாள்.

கமலி பதறி, என்னடி ஆச்சு?

நீங்க சொன்னது உண்மையாகிடுச்சு என்று மீண்டும் கதறி அழுதாள்.

முதல்ல சொல்றியா? பதறுது.

எனக்கு தெரியாமல் என்னை நான் ஜிதினிடம் இழந்து விட்டேன். என்னோட ஆன்ட்டி எதையோ கொடுத்து நான் மயங்கிய பின் என்னை அவனிடம் விட்டு..என்று பெருங்குரலோடு அழுதாள்.

என்னடி சொல்ற?

ஆன்ட்டி..நான் சுத்தமானவள் இல்லை. ஒரு முறை அல்ல பல முறை போல..

ஆமாம் ஆன்ட்டி. உங்களிடம் பேசும் போது எனக்கு இதெல்லாம் தெரியாது. பிரச்சனையை முடிக்க அர்ஜூன் வீட்டிலிருந்து நிவி கூட ஆன்ட்டி வீட்டிற்கு சென்ற போது அர்ஜூனுக்கு வீடியோ செய்து எல்லாரும் பார்க்கும் படி செஞ்சுட்டாங்க. இதுல அப்பொழுதும் ஜிதினுக்கு போதைமருந்தை கொடுத்து ஏதோ சொன்னாங்க. அதை வச்சு என்னிடம் தப்பாக..ஆனால் நிவி..எனக்கு உதவ அவனுக்கு பயங்கரமாக அடிபட்டது. அர்ஜூனும் கவின் சீனியரும் தான் எங்களை காப்பாத்துனாங்க.

ஆன்ட்டி..எனக்கு நடந்தது எனக்கு தெரியாது ஆன்ட்டி. சத்தியமா தெரியாது. இந்த குற்றவுணர்ச்சியில் தான் ஒப்பந்தம் செய்ய உங்களிடம் வந்தேன். ஆனால் என்னாலும் அர்ஜூன் இல்லாமல் இருக்க முடியாது என்று அழுதாள்.

கமலி கண்ணீருடன்..அப்படியே அசையாது அமர்ந்தார். அவர் செக்கரட்டரி கொடுத்த புகைப்படம் நினைவுக்கு வந்தது. ஆனால் ஸ்ரீயோ அதையே நினைத்து நினைத்து கதறிக் கொண்டிருந்தாள்.

வேற..என்னவெல்லாம் நடந்தது? எல்லாத்தையும் உன்னால சொல்ல முடியுமா? கேட்டார். ஸ்ரீ அர்ஜூனை பார்த்து விட்டு, அவளது மேல் டாப்பை கழற்றினாள். அதை பார்த்து..அதிர்ந்து என்னடி? கேட்டார். அந்த காரணத்தையும் ஸ்ரீ கூறினாள்.

அம்மா சாகும் போது என்னிடம் ஒன்று தான் சொன்னாங்க ஆன்ட்டி. இங்க இருந்து போயிருன்னு சொன்னாங்க. என்னால போக முடியல..

ஏன் போகல?

அவள் பெற்றோரை கண் முன்னே அவர்கள் கொன்றதை கூறி அங்கிள் ஒருவரை வைத்து மிரட்டுவதாக சொன்னாள்.

அங்கிளா? சிதம்பரமா? கேட்டார்.

ஆமாம் ஆன்ட்டி..எனக்கு முதல்ல யாருன்னே தெரியாது. ஆனால் அகில் சீனியர் குடும்ப புகைப்படத்தை அவங்க வாலெட்டில் பார்த்தேன். அப்பொழுது தான் புரிந்தது. அப்புறம் தான் இவங்க எல்லாரும் என்னோட ப்ரெண்ட்ஸ்ன்னு தெரிஞ்சுகிட்டேன்.

ஆன்ட்டி, நீங்க என்னை ஒதுக்கி வச்சிருவீங்களா? உங்க விருப்பமில்லாமல் அர்ஜூனிடம் என் காதலை சொல்ல மாட்டேன். எனக்கு நிவியும் அவனுக்கு நானும் தான் இருந்தோம். ஆனால் அவனை வச்சியும் என்னை மிரட்டினாங்க.

அதான் அர்ஜூன் வீட்ல இருந்தேன். அதுமட்டுமல்ல இனி அவங்க யாரையும் பார்க்கவே கூடாதுன்னு..ஆன்ட்டி அவங்க ஒருத்தரை எப்படி கொன்னாங்க தெரியுமா? எனக்கு ரொம்ப பயமா இருந்துச்சு. விரல் தனியா..கை தனியா என உயிரோட வெட்டினாங்க..அதை பார்த்து..பார்த்து..என மூச்சு வாங்கினாள்.

ஏய்..ஒன்றுமில்லை..ஒன்றுமில்லை..என்று அவர் அவள் முதுகை தடவினார்.

ஆன்ட்டி..ஆன்ட்டி..என அப்படியே மயங்கி அவர் மடியிலே சாய்ந்தாள்.

ஏய்,..யாராவது வாங்கடா? என கத்திய கமலி அவளை நகர்த்தவேயில்லை. வெளியே சத்தம் கேட்கவில்லை. அவளை மடியில் வைத்தவாறே கீழே அமர்ந்து நகர்ந்து கதவருகே வந்து..கதவை திறந்து யாராவது தண்ணீர் கொண்டு வாங்கடா என்று கத்தினார்.

பிரதீப், அபி, வேலு, தருண், தாரிகா, அவள் அம்மா, அனு இருக்க..தாரிகா முதலில் ஓடி வந்து, ஸ்ரீ என்னாச்சு?

தண்ணீ எடுத்துட்டு வா..பிரதீப் எடுத்து வந்து நீரை தெளிக்க, கண்களை விழித்தாள். கமலி பதட்டமாக இருந்தார். அவள் விழித்தவுடன்..சாரிடி..நான் தான் உன்னை பற்றி தப்பா பேசிட்டேன். உன்னை எதுவும் சொல்ல மாட்டேன். நான் பேசும் போதே நீ சொல்லி இருக்கலாமே?

ஆன்ட்டி..அவங்க கொன்னுடுவாங்க. பயமா இருக்கு என்று முணங்கினாள். மீண்டும் தண்ணீர் தெளிக்கப்பட..கொஞ்சம் தெளிவானாள்.

ஆன்ட்டி என்று கமலியை பார்த்து அனைவரையும் பார்த்தாள். சாரிடி என்று கமலி ஸ்ரீயை அணைத்து என் மீதும் தவறுள்ளது. நீ இங்க இருப்பதை பார்த்தும் கண்டுகொள்ளாமல் விட்டுட்டேன். நான் மட்டும் உன்னை ஒரு முறை பார்க்க வந்திருந்தாலும் பிரச்சனை வந்திருக்காது அழுது கொண்டே பேசினார். நான் உன்னை தவறாக எண்ணவில்லை. உனக்கு ஓ.கேன்னா..நீ என் மகனிடம் காதலை சொல்லு என்றார். அனைவரும் வியந்து அவரை பார்த்தனர்.

ஆன்ட்டி..எனக்கு ஒருமாதிரி இருக்கு ஸ்ரீ கூற அபி முன்னே வந்து கமலியிடம்,..

அவள என்ன செஞ்சீங்க? கோபமாக ஸ்ரீயை அவரிடமிருந்து பிடித்து இழுத்தாள்.

சீனியர். அவங்க என்னை எதுவுமே செய்யலை. நான் என்று சோர்வுடன் பேச..ஸ்ரீ.உனக்கு ஒன்றுமில்லைல்ல என்று வேலுவும் அவளிடம் வந்தான்.

அண்ணா..எனக்கு டயர்டா இருக்கு.

பிரதீப் ஸ்ரீயை தூக்கி அர்ஜூன் அருகே படுக்க வைத்து விட்டு தாரிகாவை பார்த்தான். அவள் அனுவை அவர்கள் இடையே படுக்க வைத்து, வாங்க வெளிய போய் பேசிக்கலாம் என்றாள்.

என்ன பண்ற? பிரதீப்பிடம் கமலி சினத்துடன் வினவ..அவங்க அடிக்கடி ஒரே அறையில் தான் அனுவுடன் இருப்பாங்க. அர்ஜூனுக்கு ஸ்ரீ பற்றி அனைத்தும் தெரியும். அதனால் அவளை ஏதும் செய்து விட மாட்டான் தாரிகா கூறி விட்டு வெளியே செல்ல..

என்ன சொன்ன? ஒரே அறையிலா? வேலு கேட்டுக் கொண்டே அவள் பின் வந்தான்.

அனைவரும் வெளியே வர, கமலி அவர்களை பார்த்துக் கொண்டே நின்றிருந்தார். வெளிய வாரீங்களா? என்று அபி கமலியிடம் கூறி விட்டு..ஸ்ரீயிடம் சென்று நல்லா ஓய்வெடு ஸ்ரீ. அனுவும் அர்ஜூனும் பக்கத்தில் தான் இருக்காங்க என்றவுடன் ஸ்ரீ கண்களை மூடிக் கொண்டாள்.

வெளியே சென்ற கமலி வாஷ்ரூம் சென்றார். ஸ்ரீ கூறிய அனைத்தும் அவரை வதைத்தது. கண்ணீருடன் அவரை அவரே கண்ணாடியில் பார்த்து,

நீ அன்று இருந்த அந்த நிலையை விட அந்த பொண்ணு நிலை மோசமா இருக்கு கமலி. நீ அவள காயப்படுத்தலை. உன்னை நீயே காயப்படுத்திட்ட. உடலில் எவ்வளவு காயம்? எப்படி தாங்கிக்கிட்டா? நீ முழுமனசோட அவள உன்னோட மருமகள ஏத்துக்கோ. இதனால் உன் வலியும் சரியாகும். உன் மகனும், அவளும் நிம்மதியா இருப்பாங்க என்று சொல்லிக் கொண்டிருக்க..தாரிகா அம்மா முகம் கண்ணாடியில் தெரிந்தது.

கமலி திரும்பி பார்க்க..கையை கட்டிக் கொண்டு அவரை தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

பேசலாமா? தாரிகா அம்மா கேட்க, இருவரும் வெளியே வந்தனர். மற்றவர்கள் அவர்களை பார்க்க..இருவரும் வெளியே சென்று பேசினார்கள்.

மறுநாள் பொழுதாக நித்தி அம்மாவை அடக்கம் செய்வதற்கான வேலை விரைவாக நடைபெற்றது. நித்தி..அழுது சோர்ந்து களைத்திருந்தாள். சைலேஷ் தாத்தா அர்ஜூன் வாங்கிய ரெசார்ட்டில் தான் இருந்தார். அவரும் வந்து விட..ஹாஸ்பிட்டலில் இருந்தவர்களும் வந்தனர். வினிதா அம்மாவும் அங்கு வர, காயத்ரி அறையில் மறை ராக்கியை அவன் மார்பில் சாய்த்து அமர்ந்திருந்தான். காயத்ரிக்கு மறை தான் காப்பாற்றினான் என்று தெரியாது. அவன் மீது வாமிட் செய்தது மட்டும் தான் நினைவிருக்கும். அவ்வப்போது அர்ஜூன் அறையை எட்டி பார்த்துக் கொண்டிருந்தான் மறை. அனு எழுந்து ஸ்ரீ, அர்ஜூனை பார்த்தாள். அர்ஜூனை எழுப்ப…அவன் எழாமல் இருந்தான். ஸ்ரீ பக்கம் திரும்பினாள். அவளது களைத்த முகத்தை பார்த்த குழந்தை அவளுக்கு முத்தமிட்டு கீழே இறங்கினாள்.

காயத்ரி அறையில் ராக்கி விழித்து மறையை பார்த்தான். மறை கண்ணை மூடி படுத்திருக்க.. ராக்கி அவனது மீசையை பிடித்து இழுத்து விளையாட..கண்களை விரித்து புன்னனையுடன் ராக்கியை பார்த்தான். அவன் திட்டுவானோ என்று பயந்து நழுவ முயன்று கீழே விழ சென்றவனை பிடித்து..அவனது பிஞ்சு உள்ளங்கையில் முத்தமிட்டான்.

ப்ரெண்டு நீ என்னை திட்ட மாட்டாயா? அவன் என்னை அடிப்பான்..என்று ராக்கி கூற,..மறை முகம் மாறியது.

இனி அவன் உன்னை அடிக்கமாட்டான். உன்னை யார் என்ன சொன்னாலும் என்னிடம் சொல்லு. அவனை நாம் அடித்துவிடலாம் என்றான்.

சிரித்த ராக்கி மறை கன்னத்தில் முத்தமிட்டான். நெற்றி முட்டி சிரித்த மறை காயத்ரியை பார்த்தான். அவள் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.

வா உன் அக்காவை பார்க்க போகலாம் என்று எழுந்து வெளியே வந்து அர்ஜூன் இருக்கும் அறைக்கதவை திறந்தான்.

அனு அவர்கள் அறை நாற்காலியில் அமர்ந்து இருவரையும் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். அவளுக்கு அவள் அம்மா வினிதா கூறியது நினைவுக்கு வந்தது. ஸ்ரீயை அம்மா..என்று அழைக்க சொல்லி இருப்பாள். இனி அர்ஜூனும் ஸ்ரீயும் தான் அம்மா..அப்பா..என்று கூறி இருப்பார். இருவரும் எப்பொழுதும் உன்னிடமே இருக்கணும். அப்ப தான் அம்மா சந்தோசமா இருப்பேன். நீயும் சந்தோசமாக இருக்கணுன்னு அவளுக்கு முத்தம் கொடுத்திருப்பாள். அனு கண்ணீருடன் இருவரையும் பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து மறை அவளை தூக்கிக் கொண்டு..அவர்களை பார்த்துக் கொண்டே வெளியே வந்தான்.

பாப்பா தூங்கலையா? காய்ச்சல் இருக்குன்னு சொன்னாங்க. இப்ப பரவாயில்லை போல் என்ற மறை அனுவையும் ராக்கியையும் காயத்ரி அறைக்கு அழைத்து செல்ல, அக்கா..என்று அனுவை அணைத்துக் கொண்டான் ராக்கி. காயத்ரிக்கு டிரிப் முடிய..அவர்களை விட்டு நர்ஸை அழைக்க சென்றான். கண்விழித்த காயத்ரி அனுவை பார்த்த மகிழ்ச்சியில்..அனு..என்று எழ..மேடம் இறங்காதீங்க. உட்காருங்க..என்று நர்ஸ் பொண்ணு வந்தார். உடன் மறையும் இருந்தான்.

சித்தி..என்று அனுவும் அவளிடம் ஓடினாள். மறை அவளை தூக்கி காயத்ரி அருகே அமர வைக்க, அவனை பார்த்து விட்டு. சாரிடா அனு. அன்று உன் பக்கம் கூட ஆறுதலுக்கு வர முடியலை என்று அழுதாள். அவளுக்கு வினிதாவின் நினைவு வர அழுகை அதிகமானது.

சார் பாப்பாவை தூக்குங்க. அவங்க இப்ப தான் விழிச்சிருக்காங்க. மேம். எதுக்கு இப்ப அழுறீங்க? உங்க கணவனை நினைக்ககூட கூடாது என்று அவள் கூற,

அந்த பொறுக்கிய நினைச்சு நான் ஒன்றும் அழலை. எனக்கு என்னோட வினி நினைவு வந்தது. அதான் அழுகை வருது.

நீங்க ஏதோ ஸ்ட்ராங்குன்னு சொன்னீங்க? இப்படி அழுறீங்க? வேலையை பார்த்துக் கொண்டே நர்ஸ் கேட்டார்.

என்னோட பெற்றோருக்கு அப்புறம் எனக்கு எல்லாமே அவள் தான். அவளை கொன்றுக்காங்க. அழாம சிரிக்கவா செய்யணும்?

வேலையை முடித்து விட்டு..சார்..உங்களுக்கு கால் எப்படி இருக்கு? பிளட் வந்ததுன்னு என்னோட ப்ரெண்டு சொன்னா?

இப்ப எதுவும் இல்லை சிஸ்டர்.

சார் வலிக்கலன்னு ரொம்ப பெரிய பொருட்கள் தூக்குவது, ஓடுவது, நடப்பது அதிகமா பண்ணாதீங்க. மறுபடியும் ஹாஸ்பிட்டல் வந்தா..இதை விட பெரிய கட்டா போடணும்.

எனக்கு காயம், வலி கூட பெருசா தெரியல. இந்த கட்ட பார்த்துட்டு என்னோட ப்ரெண்ட்ஸ் எழுந்திருக்க விட மாட்டிக்கிறாங்க.

சிரித்த நர்ஸ் சார், வெளிய போகும் போது பார்த்து போங்க.

எதுக்கு?

உங்களுக்கு பேன்ஸ் அதிகமாகிட்டாங்க. உங்க சாகசத்துல..மத்த நர்ஸ மயக்கிட்டீங்க? அவன் கன்னத்தை கிள்ள, அவன் சட்டென நர்ஸ் கையை பிடித்து திருப்பினான்.

சார்…சார்..நர்ஸ் கத்த, ஹே என்ன பண்றீங்க? காயத்ரி சத்தமிட்டாள்.

அவரை விடுவித்தவன்..என் மேல யார் கைய வச்சாலும் பிடிக்காது. “பீ கேர்ஃபுல்” என்று ராக்கி, அனுவை பார்த்து தெரியாதவங்கள இப்படி தொடக்கூடாது. சரியா? என்று அவன் கேட்க, நர்ஸ் கோபமாக..

யோவ்..உன்னோட ப்ரெண்ட்ஸ் பேசிக்கிட்டது சரி தான். உம்மணாமூஞ்சி என்று திட்டியவள்..நீ தேற மாட்ட. உன்னை எவளும் கல்யாணமே பண்ணிக்க மாட்டா என்று கத்தினாள்.

மேடம்..என்ன சொன்னீங்க? காயத்ரி கேட்டாள்.

அவரை எந்த பொண்ணும் கல்யாணம் பண்ணிக்க மாட்டான்னு சொன்னேன்.

நீங்க செஞ்சது சரியா? உங்களுக்கு கல்யாணம் முடிஞ்சதா?

அடுத்த மாசம் மேரேஜ்.

சரி. அப்ப உங்க வுட்பிக்கு கால் பண்ணி நடந்ததை சொல்லுங்க. அவர் யார் மேல தப்புன்னு சொல்வாரு.

மேம்..என்று நர்ஸ் தயங்க..

தப்பு உங்க மேலன்னு இப்ப புரியுதா? எதையும் யோசிச்சு பேசுங்க. அவர் இப்ப உங்க கையை தட்டி விடாமல் தொட்டு ஏற்றிருந்தால் என்ன பண்ணுவீங்க?

சாரி..மேம்..என்று மறையை அந்த பொண்ணு பார்க்க, அவன் காயத்ரியை பார்த்துக் கொண்டிருந்தான்.

வேலை பாக்குற இடத்துல கவனமா இருக்கணும். நாம் செய்யும் சிறு தவறு கூட நம் வாழ்க்கையையே புரட்டி விடும்.

அவங்க தவற்றை புரிந்து கொண்ட நர்ஸ், சாரி மேம் என்றார்.

நீங்க என்னை ஏதும் சொல்லலை. அவர்கிட்ட கேளுங்க என்றாள் காயத்ரி மறையை பார்த்து.

சாரி சார் நர்ஸ் கூற, இதற்கு முன் நீங்க பழகிய சூழல் வேறாக இருக்கும். இங்க இப்படி பசங்ககிட்ட நடந்துகிட்டா அவங்க தப்பா எடுத்து பிரச்சனையாகிடும் என்றான்.

ஓ.கே சார் என்ற நர்ஸ், மேம் நீங்க அதிகமா பேசுனா. இன்னும் ஓர் நாள் அதிகமாக இங்க இருக்க வேண்டி இருக்கும்.

என்ன? நான் இப்ப வெளிய போக முடியாதா?

மேம்..உங்களுக்கு ஓய்வு தேவை. அப்புறம் பெரிய டாக்டர் வந்து பார்த்த பின் தான் செல்ல முடியும். அவர் மனைவி இறந்து இன்று தான் தூக்கப் போறாங்க? சார் உங்களுக்கு தெரியும்ல?

ம்ம்..எல்லாரும் அங்க தான் போயிருக்காங்க.

போன் இருந்தா தாங்களேன் அர்ஜூனிடம் பேசணும் காயத்ரி கேட்டாள்.

அவன் இங்க தான் இருக்கான்.

இங்கையா? அவன் உள்ளே வராமல் என்ன செய்றான்?

அவன் பக்கத்து அறையில் இருக்கான் என்று அவன் கூற, அவள மாதிரியே பண்றான்.

நான் வினியிடம் எப்படி கெஞ்சினேன் தெரியுமா? அவங்க யாருமே சரியில்லை. இப்ப இவனும் அவளை போலவே நடந்துக்கிறான். அப்பொழுது தான் அனு அழுதவாறு இருவரையும் பார்த்தது நினைவுக்கு வந்தது மறைக்கு.

பாப்பா எதுக்கு அவங்க பார்த்து அழுதீங்க?

அம்மா..ஏஞ்சலையும், அர்ஜூனையும் அம்மா அப்பான்னு சொல்ல சொன்னாங்க. ஆனால் ஏஞ்சல் அழுதுகிட்டே இருக்கா.

ஏஞ்சலா? மறை கேட்க, அவ ஸ்ரீயை தான் சொல்றா காயத்ரி கூற, சார் வெளிய போங்க அந்த நர்ஸ் கையில் சில பொருட்களுடன் உள்ளே வந்தார்.

அம்மா..என்று ராக்கி காயத்ரியை கட்டிக் கொள்ள, நாம வெளிய போகலாம் என்று மறை இரு பிள்ளைகளையும் தூக்கினான்.

சார்..உங்களுக்கு கை இன்னும் சரியாகல. டாக்டர் பார்த்தா திட்டுவாரு. வேற யாருமே இல்லையா?

இப்ப தான் சார் வொய்ப்பை எடுக்க போறாங்க. அதான் எல்லாரும் அங்க இருக்காங்க. நான் பார்த்துக்கிறேன் என்றார்.

கதவை திறந்து உள்ளே வந்தான் வேலு. நானும் இருக்கேன் என்று அகல்யாவை அழைத்து வந்தான்.

நீ துருவனை பார்த்துக்கோ. அவனுக்கு உதவி தேவைப்படும்ல..

ஓய்வெடு. ஈவ்னிங் எனக்கு உதவ நீ வரணும்.

ஈவ்னிங்கா? மறை சிந்திக்க..நாளைக்கு நிச்சய அழைப்பு இருக்கு.

மறை புன்னகையுடன், என்னடா மாப்பிள்ளைக்கு களை கூடியிருக்கு என்று கேலியுடன் அவனை அணைத்துக் கொண்டே அகல்யாவை பார்த்து முறைத்தான்.

அவனை பார்த்த அகல்யா வாயை கோணி காட்டினாள். மறை மேலும் முறைத்தான்.

பாருங்க மாமா முறைச்சுகிட்டே இருக்கான் அகல்யா வேலுவிடம் கம்பிளைண்ட் கொடுக்க, விடுடா..உனக்கு இன்னுமா கோபம் போகலை?

அது எப்படி போகும்?

ஏன் போகாது? அகல்யா கேட்க, நீ வாய திறந்த கொன்றுவேன். உன்னாலையும், உன் குடும்பத்தாலும் எவ்வளவு கஷ்டப்பட்டான் தெரியுமா? இடியட்..

இடியட்டா? நானா?

நீ தான்..இடியட்.

டேய்…வேலு சத்தம் கொடுக்க, சும்மா இருடா மச்சான். போ..அவனையே கட்டிக்கோ..என்று மறை அகல்யாவை பிடித்து தள்ளினான். அவள் அழுதாள்.

எனக்கு அவனை பத்தி தெரியாது? மேலும் அவள் அழ, மற நீ போ..வேலு கூற..

அவன் உன்னை ஏமாற்றி விக்கிற அளவு போயிருக்கான் அதுகூட தெரியாம பைத்தியமா நீ? காதலாம் காதல்..என் மச்சான் வரல இப்ப..என்று நிறுத்திய மறை அவளை அழுவதை பார்த்து விட்டு அகன்றான். மீண்டும் அவளிடம் வந்து சாரி..கண்ண திறந்து சுத்தி இருக்கிறவங்கள பாரு. அப்புறம் முடிவெடு என்று வேலுவை பார்த்து, பசங்கள பார்த்துக்கோ என்று நகர்ந்தான்.

டேய்..நில்லுடா என்று வேலு இருவரையும் பார்த்தான். அகல்யாவை சமாதானப்படுத்தினான்.

அவன் மட்டும் எப்ப பாரு..என்னை முறைச்சுக்கிட்டும் திட்டிக்கிட்டும் இருக்கான் மாமா. நீங்களும் ஏதும் சொல்லாம நிக்குறீங்க?

அவன் தப்பா ஏதும் சொல்லலையே? எந்த விசயத்திலும் பொண்ணுங்களுக்கு கவனம் தேவை.

உங்களுக்குள்ள அவர் எதுக்கு வர்றார்?

மேம்..அந்த நர்ஸ் பொண்ணு சத்தம் கொடுக்க, ஒரே நிமிஷம் ப்ளீஸ் என்றாள்.

அவனுக்கென ப்ரெண்ட்ஸ் தவிர உறவுகள் யாருமில்லை. அவன் அம்மா கருவிற்றிருந்த போது அவன் தான் கவனித்துக் கொண்டான் என்று மறை பற்றிய அனைத்தையும் கூற..சார் நேரமாகுது என்றார் நர்ஸ்.

வா பாப்பு. நாம வெளிய இருப்போம் என்று வேலு பசங்களுடன் அகல்யாவை அழைத்துக் கொண்டு வெளியே வர, நர்ஸ் காயத்ரியை கவனித்தார்.