Advertisement

அத்தியாயம் 83

டேய்..இளம்மற..சீக்கிரம் மேல வா..இங்க ரொம்ப நேரம் நிற்க முடியாது என்று நண்பன் குரல் கேட்க..முதல்ல இவங்கள பிடிங்க என்று காயத்ரியை மேலே ஏற்றினான் மறை. பின் அவனும் மெதுவாக மேலேறினான்.

அண்ணா..இப்படி அடிபட்டிருக்கு என்று உதவ வந்த பையன் கூற..அதை பொருட்படுத்தாமல்..குட்டிப்பையன் எங்கே? என்று ராகேஷை தூக்கி அவனது உடலில் அடி ஏதும் பட்டுருக்கா என்று பார்த்தான்.

சார்..நீங்க வாங்க..கை, கால்ல பிளட்டா இருக்கு. மருந்திடலாம் நர்ஸ் அவனை அழைத்தார்.

டாக்டர் எங்க? என்று சினத்துடன் கேட்டான்.

அவர் காட்டவும் நேராக உள்ளே நுழைந்து கத்தினான். நர்ஸ் என்று ஒரு பொண்ணு உள்ள இருக்கா. யாரும் இதை கவனிக்கமாட்டீங்களா? உங்க ஹாஸ்பிட்டல் வேலை பார்க்காத பொண்ணுக்கு எப்படி நர்ஸ் அணிந்திருக்கும் ஆடை கிடைக்கும்? நீங்க எப்படி கவனிக்காம இருக்கலாம்? என்று சத்தமிட்டான்.

உள்ளே வந்த வேலுவும் அவன் நண்பர்களும் அவனை அழைக்க அவன் காதில் விழவேயில்லை.

டேய்..மற..இங்க பாரு வேலு அவனை திருப்பி ராகேஷை வாங்கினான். குட்டிப்பையன் அழுது கொண்டிருந்தான்.

அப்பொழுதுதான் அவன் ராகேஷை கவனித்தான். மறைக்கு அடிப்பட்டதை பார்த்து குட்டிப்பையன் பயந்திருப்பான்.

இந்தாடா..என்று வேலு ராகேஷை வேறொரு நண்பனிடம் கொடுத்து விட்டு மறையை இழுத்து வெளியே வந்து..என்னாச்சுடா? என்று அவனை உலுக்கினான்.

வேலுவை அணைத்துக் கொண்ட மறை..அந்த பையனை பார்த்தவுடன் எனக்கு எல்லாமே நினைவுக்கு வந்தது என்று அழுதான். மறையின் அம்மா இரண்டாவதாக கருவுற்றிருந்த போது செக் அப்பிற்கு ஹாஸ்பிட்டல் வந்தனர். அங்கே வந்த வட்டிக்காரன் பணம் தரவில்லை என்று அவன் அப்பாவை கொன்றான். மற்றுமொரு நாள் ஹாஸ்பிட்டல் விட்டு திரும்பும் வழியில் அம்மாவிடம் பணம் கேட்டார்கள். அவர்களுக்கு சாப்பாட்டை தவிர பணமே இல்லை. அதனால் இப்பொழுதே பணம் வேண்டும் என்று மிரட்டி கொடுக்க சொன்னார்கள். இருந்த பணத்தை கொடுத்தும் கேட்காமல் அம்மாவை கோபத்தில் தள்ளி விட்டனர். அவர் கீழே விழுந்து வலியால் துடித்து அங்கே இறந்து போக மறை அதை பார்த்ததால் அவனையும் கொல்ல விரட்டினார்கள். அப்பொழுது வந்த வெற்றி தான் அவனை காப்பாற்றி உதவி இருப்பார். இதை நினைத்து அவன் அழுதான்.

சரிடா..வா..முதல்ல சிகிச்சையை பார்ப்போம் என்றான் வேலு.

அந்த பையனோட அம்மாவுக்கு என்ன ஆச்சுடா?

அவங்க என்று தயங்கி..அவங்க பழைய படி தான் இருக்காங்க. ஆனால் அவங்க கணவனை கொன்னுட்டாங்க என்றான் வேலு.

போலீஸூடன் தான போனாங்க? ஆமாடா..அவனுடைய பாஸ் தான் கொன்றிருக்கணும்ன்னு சொல்றாங்க.

பாஸா?

அர்ஜூன் பேசிய அதே கொலைக்காரன்.

அவன் யாரு தான்டா?

தெரியல..நீ வா…என்று அவனையும் அங்கேயே சேர்த்தான் வேலு. அவனுக்கு நம்மை பற்றியும் தெரிந்திருக்குமோ? சிந்தித்தான் வேலு. அகல்யாவை சமாளித்து விட்டு தான் வந்திருப்பான்.

அர்ஜூனுக்கு தாரிகா போன் செய்ய..அபி, ஆதேஷ், மேம் வந்துட்டாங்களா? கேட்டான் அர்ஜூன். இல்லை வரலையே என்றாள்.

இன்னுமா வரவில்லை. வீட்டுக்கு கிளம்பி விட்டோம்ன்னு அப்பொழுதே ஆது மெசேஜ் பண்ணாணே? என்று வெளியே வந்தான். பிரகதி சில காகிதங்களை ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள்.

ஹே..இத உங்க டீம் லீடரிடம் கொடு என்று அவளிடம் ஒரு பைல்லை கொடுத்து விட்டு, போனில் ஆதேஷிற்கு போன் செய்தான். அவன் எடுக்கவில்லை. அவள் அர்ஜூனை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். அபி எடுக்கவில்லை. கடைசியில் இன்பாவிற்கு போன் செய்தான்.

அவள் போன் எடுக்கப்பட்டது.

மேம்..மேம்..என்று அர்ஜூன் அழைக்க..உன்னோட மேம்..உயிரோட வர மாட்டா. நானும் எத்தனை நாள் தான் காத்திருப்பது? அவளுக்கு என்னை பார்த்தால் எப்படி தெரிகிறதாம் அர்ஜூன்? நீ பெரிய இவனாமேம்..முடிஞ்சா உன்னோட மேம் மானத்தை காப்பாற்று..

டேய்..நீ..நீ,..அர்ஜூன் திக்க..

நான் அவனே தான் விக்னேஷ். அவளை எப்படியாவது அடைய தான் அவள் அப்பாவை ஏமாற்றினோம். ஆனால் அந்த ஆள் செத்த பின்னும் எவனாவது ஒருவன் அவளுடன் இருந்து கொண்டே இருக்கிறான். இதில் அந்த போலீஸ்காரன் மாதவ் வேற..இரவில் அவளுக்காக அவள் வீட்டுக்கு வெளியே அவனே காவலில் இருக்கிறான். என்னை அவள் பக்கம் நெருங்கவே விட மாட்டிக்கிறீங்க? முதலில் அவ..என் வாழ்நாள் முழுவதும் வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் இவளை போல் பொண்ணையெல்லாம் என்னால் சமாளிக்க முடியாது. அதை விட அவளை எடுத்து விட்டு உயிரோட விட்டாலும் என்னை ஏதாவது பிரச்சனையில் மாட்டி வைத்து விடுவாள்.

ஹே..வேண்டாம். அபி, ஆதேஷ் எங்க?

அவனுகள விட்டு வருவேன்னா. அவங்களும் இங்க தான் அடி வாங்கி மயக்கத்துல இருக்காங்க. உன்னோட மேம் பக்கத்துல தான் இருக்கேன். அவள மாதிரி அழகான பொண்ணு கிடைக்கவே மாட்டா..பிரகதியிடம் போனை கேட்டு வாங்கிய அர்ஜூன் அபிக்கு போன் செய்தான். போன் அதிர்வை கொடுக்க அவன் போனை எடுக்கவேயில்லை.

இங்க பாரு..உனக்கு வேண்டிய பொண்ணுங்கல்லாம் வேற எங்காவது கிடைப்பாங்க. அவங்கள விட்டுரு. எதுவும் செஞ்சுறாத..என்று பேசிக் கொண்டே ஒரு நம்பரை எழுதி அவளை கால் பண்ண செய்தான் அர்ஜூன். வேரொருவரிடம் போனை வாங்கி மாதவிற்கு தான் போன் செய்தாள் பிரகதி.

அங்கே வந்த ராஜவேலு அர்ஜூனிடம் பேச வர, பிரகதி அவரை தடுத்து கவனிக்க சொல்லி, அர்ஜூன் எழுதி காட்டுவதை மாதவிடம் கூறினாள். போனை டிராக் செய்ய சொல்லி இருப்பாள். விக்கி…இன்பா, அபி, ஆதேஷை கடத்தி இருக்கிறான் என்ற கூறவும் மற்ற வேலையை போட்டு விட்டு மாதவ் அதை கவனிக்கலானான்.

இடத்தை கண்டறிந்து அர்ஜூனிடம் கூறி விட்டு கிளம்பினான் மாதவ்.

இன்பா, அபி, ஆதேஷ் கிளம்பி வீட்டிற்கு வந்து கொண்டிருக்கும் போது அவர்களை இடை நிறுத்தி ஆட்களை வைத்து கடத்தி இருப்பான். அர்ஜூன் போனில் இருக்க..இன்பா விழித்தாள். அவளது கோர்ட்டை கழற்றி..அவள் கையை கட்டிப் போட்டிருப்பர். அவள் விக்கியை பார்த்து பயந்து கத்தினாள்.

அபி..எழுந்திரு…எழுந்திரு..கத்தினாள் இன்பா. அவனிடம் அசைவில்லாது இருக்க..ஆதேஷ்..எழுந்திருடா.. எழுந்திருடா..அபி..பயமா இருக்கு. எழுந்திருடா என்று அழுதாள்.

என்ன அர்ஜூன்? உன்னோட மேம் குரல் உன் காதில் விழுதா?

அர்ஜூன்..அர்ஜூன்..சீக்கிரம் வாடா. இது நம்ம கல்லூரி தான்டா என்று கத்தினாள் இன்பா.

ஏய்..என்று சீற்றத்துடன் அவளை அடித்தான். இன்பா வாயில் இரத்தம் வர அழுதாள்.

ப்ளீஸ் எங்கள விட்டுரு..அவங்கள எதுக்கு பிடிச்சு வச்சிருக்க? அவங்களையாவது விடு என்று கெஞ்சினாள்.

உன் நிலை தான் கந்தல் கோலமாகப் போகிறது என்று கர்ஜிக்க.. மேம்..பயப்படாதீங்க. நான் வாரேன் என்று அர்ஜூன் போனை துண்டித்து…மறந்து பிரகதி போனை எடுத்து கிளம்பினான்.

அர்ஜூன்..அது என்னோட போன்? என்று பிரகதி அவன் பின் ஓடி வந்தாள். அனைவரும் அவளை பார்த்தனர். அர்ஜூன் அவளின் பாஸ் ஆயிற்றே?

அந்நேரம் அர்ஜூன் போனிற்கு கால் வந்தது. அகில் போன் செய்திருந்தான். தாரிகா அர்ஜூன் கூறியதை அகிலிடம் சொல்லி இருப்பாள்.

அகில் நம்பரை பார்த்தவுடன் அகில்..அபிக்கு ஏதோ பிரச்சனை. அவனை யாரோ கடத்திட்டாங்களாம்..என்று பிரகதி பேச..

யார் நீங்க? அவன் போன் எப்படி உங்களிடம்?

அது வந்து..அவள் யோசிக்க, ராஜ வேல் மொத்த விசயத்தையும் அகிலிடம் கூறினார்.

சார்..எங்கன்னு சொன்னானா?

தெரியலப்பா. சொல்லலை.

ஆனால் அந்த பொண்ணை எப்படியாவது காப்பாற்றணும். நானும் என்னால் முடிந்ததை செய்கிறேன் என்று அவர் போனை வைத்தார்.

அந்த பொண்ணோட குரலை எங்கோ கேட்டது போல் உள்ளதே? அகில் சிந்தித்தான்.

அர்ஜூன் போனை அவர் வாங்கிக் கொண்டு.. உனக்கு அவனை முன்பே தெரியுமா? என்று கேட்டார். இருந்தாலும் போனை அவளிடம் கொடுக்கலை.

தெரியும் என்று சொன்னாள்.

அவர் மகனுக்கு போன் செய்து விசயத்தை கூற, அவர்களும் உதவ பிரகதி நம்பருக்கு கால் பண்ண பின் தான் அர்ஜூனுக்கு போனை மாற்றி எடுத்து வந்தது தெரிந்தது.

அய்யோ..அவளோட போனை எடுத்து வந்திருக்கேனே? என்று புலம்பியவாறு கல்லூரிக்குள் நுழைந்தான்.

அகிலும் பவியும் அந்த கம்பெனிக்கு வந்தனர். அவனை வினிதா வீட்டில் வைத்து ராஜவேலு பார்த்திருப்பார். அவனை பார்த்ததும் அர்ஜூன் போனை மாற்றி எடுத்து சென்று விட்டான். இந்த பொண்ணுடைய போனை தான் என்று பிரகதியை பார்க்க அவளை காணோம். அவள் அகிலை பார்த்தவுடன் மறைந்து நின்றிருந்தாள். பவி அவளை கண்டுகொண்டாள். அவளருகே சென்று அவளை இழுத்து வந்தாள்.

அகில் அவளை பார்த்தும் தெரியாதது போல் உங்க நம்பர் தாங்க. நான் என் நண்பனிடம் பேசணும் என்றான். அவளுக்கு தொண்டை அடைக்க கண்ணீருடன் அப்படியே நின்றாள்.

சைலேஷ், கேசவனுடன் கவின் ஹாஸ்பிட்டல் வந்த போது..கவின் அகில்-ஸ்ரீயை பிரிக்க அவனை காதலிப்பதை போல் பிரகதியை ஏமாற்றியது பற்றி பவியிடம் கூறி இருப்பான். அதை மறைந்திருந்து அகில் கேட்டிருப்பான்.

பவிக்கு இவள் தான் பிரகதின்னு தெரியாம..சீக்கிரம் உங்க நம்பர் சொல்லுங்க. இவன் வேற எதையுமே சொல்லாம சாவடிக்கிறான் பவி அர்ஜூனை திட்டிக் கொண்டிருந்தாள்.

சார்..உங்க ஸ்டாஃப் நம்பரை கூட சொல்ல மாட்டாங்களா? ஏன் அவங்கள ஏதாவது செஞ்சு ஏமாத்திருவேன்னு நினைக்கிறீங்களோ? அகில் கேட்டவுடன் பிரகதி அழுது கொண்டு..அகில் சாரி. நான் வேண்டுமென்றே செய்யல..

நீ என்னை ஏமாத்தலை. உன்னை நீயே ஏமாத்திக்கிட்ட. வாயை மூடிட்டு நம்பரை மட்டும் கொடு. என்னை கோபப்படுத்தாதே அவன் கத்த பவி இருவரையும் பார்த்தாள்.

சார்..நம்பரை வாங்கித் தாங்க சார். என்னோட ப்ரெண்ட்ஸ் பிரச்சனையில இருக்காங்க. குடிக்க தண்ணீர் இருந்தா தாங்களேன் அகில் கேட்டான்.

நான்..நான்..எடுத்துட்டு வந்திருக்கேன் என்று திக்கி திக்கி பவி கூறிக் கொண்டே எடுத்து கொடுத்தாள். தண்ணீரை அருந்தியவன் அவளை பார்த்து அவளது கையை கோர்த்து விட்டு, சார் நம்பர் கிடைக்குமா? இல்லையா? நாங்க கிளம்பணும் என்றான்.

தம்பி..அர்ஜூன் தம்பி போன்ல இருக்கு. இந்தாங்க போன் என்று அவர் கொடுத்தார். வாங்கி விட்டு ஓர் அடி எடுத்து வைத்த அகில் நின்று அவளை பார்த்து, நாங்க காதலிக்கிறோம். என்னோட கரியர்ல வெற்றியடைந்த பின் நாங்க கல்யாணம் பண்ணிப்போம் என்று அவள் முன் பவி கையை கோர்த்து தூக்கி காட்டியவன். ஸ்ரீயை என்னோட வாழ்க்கையில் இருந்து அகற்ற நினைத்து நீ செய்தது போல் எங்க விசயத்துல எதுவும் செய்ய முடியாது முட்டாள்..என்று அவரை பார்த்து தலையசைத்து கிளம்பினான்.

அனைவரும் இவர்களை வேடிக்கை பார்க்க பிரகதி அழுது கொண்டிருந்தாள். பவி அவளை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல..நேரா பார்த்து நடக்கிறியா? கேட்டான். அவனை பார்த்துக் கொண்டே அவனுடன் பைக்கில் ஏறி அவனை அணைத்துக் கொண்டாள். அகில் அர்ஜூனுக்கு போன் செய்து பேச..பவி அவனையே ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

இன்பா த்ரீ போர்த் வெள்ளை நிற சட்டையுடன் இருக்க..அவளது சட்டை பட்டனை விக்கி கழற்ற, இன்பா கத்திக் கொண்டிருந்தாள். அங்கே வந்தான் போதையில் கிஷோர். அவனை பார்த்து மேலும் பயந்து அபி.. எழுந்திருடா..எழுந்துரு…என்று கதறினாள். ஆதேஷிற்கு விழிப்பு வர..அவன் கட்டை அவிழ்க்க முயன்றான். ஆனால் ஆட்கள் அவனை பார்க்கும் முன் மயங்கியது போல் நடித்தான். இன்பா கதறலை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. கிஷோர் அவளருகே வந்து..உன்னை தான் குறி வைத்தேன். உன்னோட தங்கச்சி தான் அன்று மாட்டுனா. ஆனால் அன்று அவளையும் ஏதும் செய்ய முடியல. ஆனால் இன்று எனக்கு வேட்டை தான்.

முதல்ல இவ எனக்கு தான்டா என்று விக்கி அவனை தள்ளினான். கிஷோர் விக்னேஷ் இடையே சண்டை போய்க் கொண்டிருக்க..விக்கியின் ஆட்கள் கிஷோரை பிடித்துக் கொண்டனர். அதனால் ஆதேஷை யாரும் கவனிக்கவில்லை. அவன் மெதுவாக கயிற்றை கழற்றி அபியிடம் நகர்ந்து வந்து அவனது கயிற்றையும் கழற்றி அவன் கன்னத்தில் தட்டினான். அபியும் விழித்தான். அவர்கள் இருவரையும் பார்த்து விட்டனர். ஆதேஷ் ஜானுவுடன் சேர்ந்து நிறைய சண்டை மூவ்ஸ் அனைத்தையும் பார்த்து அவன் அப்பாவுடம் பிராக்டிஸ் செய்திருப்பான். சும்மா..சிறிதளவு மட்டுமே. கிஷோரை விடுத்து விக்கியின் ஆட்கள் அவர்களிடம் வந்தனர். ஆனால் விக்கி பட்டன் அனைத்தையும் களைந்து அவளை தொடும் முன் அவள் விட்ட உதையில் கீழே விழுந்து சீற்றத்துடன் எழுந்தான்.

இன்பாவை தூணுடன் கட்டியிருந்த கை கயிற்றை கழற்றிய அவன் கைகள் இரண்டையும் சேர்த்து கட்டி விட்டு…காலில் இருந்த கட்டை அவிழ்த்தான். அவள் எழ..அவளது கன்னத்தில் மாறி மாறி பளார் பளார் என்று அடித்தான். அவன் ஓங்கி அவளது வயிற்றிலே எத்தினான்.

அம்மா..என்று கத்தி தள்ளி சென்று விழுந்தாள். அவள் வாயிலிருந்து இரத்தம் கொப்பளித்தது. அபியும் ஆதேஷூம் பதறி அவளை பார்க்க, அவனுடைய ஆட்கள் விடுவதாக இல்லை.

அண்ணா..நான் பார்த்துக்கிறேன். நீங்க மேம்மை பாருங்க என்றான் ஆதேஷ். ஆனால் அபியை நகர விடாமல் சண்டை போட, இன்பாவால் நகர முடியவில்லை. வலி தாங்க முடியாமல் வயிற்றை பிடித்து கதறினாள். விடாது வாயாடும் இன்பாவை பார்த்த அபியால் அவள் அழுகையை தாங்க முடியலை. அவன் கோபம் சீற்றமானது. அவனது அமைதி அனைத்தும் பறந்தது. கைக்கு கிடைக்கும் அனைத்தையும் எடுத்து அவர்களை அடித்து தள்ளினான். அவனுக்கும், ஆதேஷிற்கும் அடிபட்டது. இன்பாவின் நிலையை பார்த்து கிஷோர் பயங்கரமாக சிரித்தான். அவன் சிரிப்பை பார்த்த அபிக்கு மேலும் சீற்றமானது.

இரும்பு பைப் ஒன்றை எடுத்து அவன் அடிக்க வர, அதற்குள் ஒருவன் அபியை இரும்பு கம்பியால் அடிக்க வந்தான். இன்பாவின் உள்ளாடையும் ஸ்கர்ட்டும் மட்டுமே அவள் மேனியில் இருக்க, அந்த விக்கியின் அருகாமை, அவளது வலி, அவனது தொடுகை, அபியை அவர்கள் தாக்க வருவது அனைத்தும் தாங்க முடியாத வேதனையில் இன்பா மனம் வலுவிழந்து மயங்கி தரையில் சரிந்தாள். அபியை அடிக்க வந்தவனின் இரும்புக்கம்பியை கையால் தடுத்த ஆதேஷ்..அவனை கோபத்தில் முழுமூச்சாய் தள்ளினான். அடிக்க வந்தவன் சுவற்றில் முட்டி இரத்தமுடன் கீழே விழுந்தான்.

கிஷோர் அபியை பார்த்து, அவ..இனி உனக்கில்லை. அவள் எங்களுக்கு என்று அவனும் இன்பா அருகே சென்றான். இன்பா மயங்கியதை பயன்படுத்த அவளது மேனியில் கையை விக்கி வைக்க..கிஷோர் அவனிடம் வந்து, நாம் சண்டை போட்டதால் தான்..என்று இருவரும் அவளை தொட்டனர்.

கொதித்த அபி..ஓடி வந்து இருவரையும் பிடித்து இழுத்து அடிக்க..அவங்க இருவரும் சேர்ந்து அபியை அடித்தனர். கிஷோர் அபியின் மீது இருக்க.. விக்கி இன்பா அருகே சென்றான். அங்கே வந்த மாதவ் துப்பாக்கியை பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்து விட்டு..

இன்பா நிலையை பார்த்து கலங்கியவாறு..அடி வெளுத்தான் விக்கியை. கிஷோரை தள்ளி விட்டு வந்த அபி..இன்பாவிடம் வந்து அவனது சட்டையை கழற்றி அவளுக்கு அணிவித்து..அவளை மடியில் போட்டு கதறி அழுதான். ஆதேஷ் அவனிடம் வந்து இன்பா முகத்தில் தண்ணீர் தெளிக்க..அபி தடுத்து எல்லாரும் போகட்டும்.. காத்திரு..என்றான். போலீஸ் விக்னேஷ், கிஷோரை இழுத்து செல்ல..அர்ஜூன் அங்கே ஓடி வந்தான். அபி, ஆதேஷிற்கும் அடிபட்டிருக்கும். அனைவரும் சென்ற பின் தண்ணீர் தெளிக்க இன்பா விழித்தாள். அகிலும் பவியும் வந்தனர். இன்பா எதுவும் பேசாமல் இருக்க,

இன்னு..இங்க பாரு..பாரு..என்று அவள் கன்னத்தை மாதவ் தட்டினான். அவள் அசையாது பொம்மை போல் அபி மடியில் சாய்ந்திருந்தாள்.

உதடுகள் நடுங்க மேம்..என்னை பாருங்க..என்று அபி அவள் முகத்தை திருப்ப..அவள் கண்ணீர் வடிய அப்படியே இருந்தாள்.

பவி..அவளிடம் வந்து, எல்லாரும் தள்ளிப்போங்க என்று கத்தினாள். அபி மட்டும் எழவேயில்லை. அவனை பார்த்த பவி ஏதும் கூறாமல் அபி அணிவித்த சட்டை பட்டனை இன்பாவிற்கு போட்டு விட்டாள். பின் அவளை தூக்கி நிற்க முயற்சித்தனர்.

ப்ளீஸ் எல்லாரும் தள்ளிப் போங்க என்று அபி கலங்கிய குரலில் கூற, அனைவரும் நகர்ந்தனர். இன்பாவை தூக்கி எழுந்த அபி..ஆதேஷ் காருக்கு சென்று இன்பாவுடன் உள்ளே அமர்ந்து பவியை பார்த்தான். அவளும் ஏறிக் கொண்டாள். அகில் அர்ஜூனிடம் போனை கொடுத்து விட்டு முன்னே அமர..அனைவரும் மருத்துவமனைக்கு சென்றனர்.

அர்ஜூன் சோர்வுடன் ஆபிசிற்கு வந்து பிரகதியை பார்த்தான். அவளும் அழுது ஓய்ந்திருந்தாள். அர்ஜூனை பார்த்ததும்.. அவளுடைய ரெசிக்னேசனை கொடுத்தாள். அதை கிழித்து எறிந்து வெளியே ஓரிடத்தில் அவன் அமர..அனைவரும் அவனை பார்த்தனர். அவன் கண்கள் கலங்கி அவனுக்கு ஸ்ரீயின் அன்றைய நிலை நினைவிற்கு வந்தது. அவளும் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பாளே? என்று நினைத்த அர்ஜூன் அவன் அறைக்கு சென்று கண்ணாடியில் அவனை பார்த்தான். ஸ்ரீ சரியாக பத்து வருடம் கூட ஆகும் என்று கூறியது நினைவில் வந்தது. அர்ஜூன் கதறி அழுதான். அவனது தோளில் ஆறுதலாய் ஓர் கைபட எழுந்தான். ராஜ வேலு அர்ஜூனை பார்த்து..அந்த பொண்ணுக்கு ஒன்றும் இல்லையே? என்று கேட்டார்.

அவன் இல்லை என்று தலையசைக்க..ஸ்ரீ மாதிரி விடாமல் நல்ல வேலையாக இந்த பொண்ணையாவது காப்பாற்றி விட்டீர்கள்?

அர்ஜூன் நிமிர்ந்து அவரை பார்க்க..எனக்கு தெரியும்பா. ஆனாலும் அந்த பொண்ணை இந்த அளவு காதலிக்கிறியே உனக்கு பெரிய மனசுப்பா. அவர் கூற..அதை கண்டுகொள்ளாது..அவள் மனசுக்குள்ளே போட்டு அவளை அவளே கஷ்டப்படுத்திக்கிட்டு இருக்கா. அவளை எப்படியாவது சரி செய்யணும். அவளால் அதிலிருந்து வெளியே வர முடியலைன்னா.. தற்கொலை செய்யும் எண்ணம் கூட வருமாம் என்று ஏங்கி அழுதான்.

இல்லப்பா. உன்னோட ஏஞ்சல் அந்த அளவுக்கு உன்னை விட்டு போகமாட்டா. அவள கவனமா பார்த்துக்கோ. கவனிச்சுக்கிட்டே இரு என்று அவர் கூறினார்.

அங்கிள், எனக்கு அவள நினைச்சா தான் பயமா இருக்கு. அம்மாகிட்ட சொல்லீட்டீங்களா?

இல்லப்பா. அம்மாவிடம் என்றுமே சொல்ல மாட்டேன்.

தேங்க்ஸ் அங்கிள். நான் வேலை செய்யும் அனைவரிடமும் பேசி விட்டேன். கண்காணிக்க மட்டும் முடியுமா? அங்கிள். நான் தினமும் எல்லா ஹெட்டையும் பார்த்து பேசிக்கிறேன். ஆனாலும் நீங்களும் இந்த ஒரு மாதம் மட்டும் பார்த்துக்கோங்க..

கண்டிப்பா அர்ஜூன். நீ போயிட்டு வா. நான் பார்த்துக்கிறேன் என்றார். அவன் பிரகதியிடம் நீ உனக்கான வேலையை பார்ப்பதில் எங்களுக்கு பிரச்சனையில்லை. ஆனால் இனி அவர்கள் விசயத்தில் மட்டும் தலையிடாதே! என்று கூறி விட்டு ஹாஸ்பிட்டல் வந்தான்.

இன்பா ஓர் அறையில் இருக்க..அபி, அகில், ஆதேஷ்  நித்தி அம்மாவை பார்க்க சென்றனர். அங்கிருந்த சைலேஷ் விசயத்தை அறிந்து இன்பாவை பார்க்க அவனுக்கு மனம் கனத்து போனது. அவன் பேசுவது கூட கேளாமல் அமர்ந்திருந்தாள்.

ஆதேஷ் கிளம்பி..வீட்டிற்கு வர..அவனுக்கு பட்ட அடியை பார்த்து வீட்டில் அனைவரும் பதறிப் போனார்கள். இப்பொழுது தான் சரியானது போல் இருந்தது லலிதா அவனை திட்ட..ஜானு கண்கலங்க ஆதேஷை பார்த்தாள். ஆனால் ஏதும் அவள் பேசவில்லை. உள்ளே சென்று விட்டாள்.

அவனது அம்மாவை பார்த்த ஆதேஷ்..நேராக ஜானு அறைக்கு சென்றான். நடந்ததை கூறினான்.

மாமா..நாம இப்பவே கிளம்பணும்ன்னு ஆன்ட்டி சொன்னாங்க என்று கேட்டாள்.

ஆமாம் ஜானு என்று நித்தி அம்மாவை பற்றி கூற..அவள் தயங்கிக் கொண்டே அவங்களை பார்க்க அழைத்து செல்கிறீர்களா? என்று கேட்டாள்.

போகலாம் ஜானு. உனக்கு என்னாச்சு?

ஒன்றுமில்லை மாமா.

ஜானு மறைக்காத. எனக்கு நல்லா தெரியுது. சொல்லு..என கேட்டான்.

மாமா..நாம கொஞ்சம் விலகியே இருப்போமா?

ஏன் ஜானு? என்னுடன் பேச, இருக்க உனக்கு விருப்பமில்லையா?

அப்படியெல்லாம் இல்லை மாமா. நான் உங்க அளவுக்கு பணமெல்லாம் இருக்காது. ஊர்ல மரியாதை, ரெசார்ட், எஸ்டேட், தொழிற்சாலை..இருக்கு. ஆனா மாமா..ஆன்ட்டி..வந்து என்று ஜானு சொல்ல முடியாமல் தயங்கினாள்.

உன்னோட அண்ணனை ஒன்றுமில்லைன்னு பேசுறாங்கன்னு சொல்றியா? ஆதேஷ் கேட்டான்.

நான் எங்கே மாப்பிள்ளையை அப்படி பேசினேன்? என்று லலிதா உள்ளே வந்தார்.

ஒட்டு கேட்டீங்களா மாம்?

ஆமாம்டா..ஜானு காலையில இருந்து ரொம்ப டல்லா தெரிஞ்சது. அதான் அவள் என்ன நினைக்கிறான்னு கேட்டேன்.

ஜானு..நான் அப்படி பேசலையேடா?

அவள் ஆதேஷை பார்த்தாள்.

மாம்..இன்று அர்ஜூன் அண்ணா கம்பெனி மீட்டிங்கல யாரை பற்றி பெருமையா பேசினாங்களோ? அவங்கள தான் அண்ணன்னு சொல்றா? ஆதேஷ் கூறினான்.

யாரடா சொல்ற?

தருண் அண்ணா..ஒன்றும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் ரொம்ப நல்லவங்க. என்னையும் புவியையும் நல்லா பரத்துக்கிட்டாங்க. எத்தனை முறை அண்ணா..என்னுடன் இல்லாத போது என்னுடன் துணைக்கு நின்னுருக்காங்கன்னு தெரியுமா? என்று ஜானு அழுதாள்.

ஜானும்மா..எதுக்கு அழுற?

எனக்கு அவனை பத்தி முழுசா தெரிஞ்சுக்காம பேசியது தப்பு தான். ஆனால்..

ஆன்ட்டி..என்னோட அண்ணா பணம் வச்சிருக்கிறதுனால தான் நல்லா பேசுறீங்களா? என்று வெளிப்படையாக கேட்டு விட்டாள் ஜானு. இதை ஆதேஷும் எதிர்பார்க்கவில்லை.

லலிதா கோபமாக..என்ன சொன்ன ஜானு? பணமா? எங்களிடம் இல்லாத பணமா? அதுக்காக எதுக்கு உன்னோட அண்ணாவிடம் பேசணும்? உன்னை பிடித்து தான் பேசினேன். துகிராவை நல்லா பார்த்துப்பார் என்று பேசினேன். என் மனதுக்கு சரி என்றதால் தான் பேசினேன். இல்லையென்றால் என்று அவர் பேசுவதற்குள் ஆதேஷ் அவரை நிறுத்தினான்.

இல்லையென்றால் என்ன ஆன்ட்டி? சொல்லுங்க? பேச மாட்டிங்க..உங்க ஸ்டேட்டசுக்கு சரியா இருக்க மாட்டார்ல என்னோட அண்ணன் என்று ஜானு கேட்க.

நான் அப்படி சொல்லவேயில்லை என்று அவர் மழுப்பினாள்.

துகிரா அண்ணி ஒண்ணும் உங்க பொண்ணு இல்ல. அவங்கள அவங்க வீட்ல இருந்து என்னோட அண்ணன் தான் காப்பாற்றி அழைத்து வந்தார். அவங்க விருப்பப்பட்டு தான் வந்தாங்க. உங்கள மாதிரி ஸ்டேட்டஸ் பார்க்கலை என்றாள். இருவரும் மாறி மாறி பேச,

இருவருமே வாயை மூடுங்க என்று கத்திய ஆதேஷ்.. மாமாவிடம் நான் ஸ்டேட்டஸ் பார்த்து பழகலை. துகிரா என்னோட தங்கை தான். யார் என்ன சொன்னாலும் அவ மாமாவ தான் கல்யாணம் பண்ணிப்பா.

சண்டை போடணும்னா. வெளிய போய் ரெண்டு பேரும் சண்டை போடுங்க என்றான்.

ஜானு விறுவிறுவென கீழே இறங்கி வெளியே சென்றாள். ஆதேஷ் கோபமாக ஜானுவிடம் வந்து..இப்ப இது முக்கியமில்ல ஜானு. உன்னோட அபி மாமாவுக்கும் அடிபட்டிருக்கு. இன்பா மேம் பேசவே மாட்டிக்கிறாங்க. அபி அண்ணா உடைஞ்சு போயிருக்காங்க. அவங்கள பார்க்க வரப் போறியா? இல்லையா? அவன் கேட்க, ஜானு அழுதாள்.

இப்ப எதுக்கு அழுற? ஆதேஷ் சத்தமிட, அவன் அப்பா அங்கே வந்தார்.

அவரிடம் சென்ற ஜானு..கண்ணை துடைத்து விட்டு.. அங்கிள்..நான் ஊருக்கு இப்பவே போகணும். எனக்கு யாரையும் பார்க்க பிடிக்கலை என்று அழுது கொண்டே வெளியே ஓடினாள்.

என்ன பேசுறா? என்று ஆதேஷ் யோசித்தான். இருவரையும் ஆதேஷ் அப்பா..முறைத்து விட்டு..மருமகளே ஓடாதீங்க. நான் வாரேன். நாம உங்க அண்ணாவிடம் போகலாம் என்று அவரும் அவள் பின்னே ஓடினாள்.

இப்பொழுது தான் ஆதேஷிற்கு புரிந்தது. அவன் பிரதீப்- துகிரா காதலுக்காக பேசி இருப்பான். பிரதீப்பிடம் ஸ்டேட்டஸ் பார்த்தால் தன்னிடம் அப்படி தான் பேசுவார்களோ என்று பயந்து தான் ஜானு பேசி இருப்பாள். அவள் நம்முடைய காதலை எண்ணி இருக்கிறாள் என்று புரிந்து அவனும் வெளியே செல்ல..லலிதா புரியாமல் நின்று கொண்டிருந்தார்.

ஜானுவை சமாதானப்படுத்தி ஆதேஷ் அப்பா அழைத்து வர அவனும் பின்னே வந்தான். ஜானு அவனிடம் பேசவில்லை. அவர்களும் அங்கிருந்து ஹாஸ்பிட்டல் கிளம்பினர்.

சைலேஷ் இன்பாவை பார்த்து விட்டு வருத்தமாக நித்தி அம்மா இருக்கும் அறைக்குள் வந்து தயாரானான். அர்ஜூன் வீட்டிற்கு சென்று அனைவரையும் அழைத்து வந்தான். நிவாஸ் ஆருத்ராவிடம் ஒரு மாதத்திற்கு பின் சந்திக்கலாம் என்று அவனும் அதே நேரம் வந்தான். சற்று நேரத்தில் கவின் நித்தியுடன் உள்ளே வர..அவள் கவின் கையை பிடித்துக் கொண்டு வேண்டாம்டா என்று பயந்து கொண்டே கூற..வா..என்று அவளை இழுத்து உள்ளே நுழைந்தான்.

சைலேஷ் குடும்பம் அங்கிருப்பதை பார்த்துக் கொண்டே அவள் அம்மாவை பார்த்தாள். கடைசியாக அவள் பார்த்ததற்கும் இப்பொழுது பார்ப்பதற்கும் பல வித்தியாசம். உடல் மெலிந்து கை விரல்கள் சுருங்கி நகம் உடைந்து கண்கருவளையத்துடன் ஆக்சிஜன் மாஸ்க் போட்டிருந்தார். அவள் அப்பா அம்மா அருகே கையை பிடித்து அமர்ந்திருந்தார். இருவரையும் பார்த்து அவளுக்கு தொண்டை அடைத்தது. அவள் அம்மா அவளை பார்த்து கண்ணீர் வடிய அசையாது கையை மட்டும் மெதுவாக நீட்ட..கையை பிடித்து..

அம்மா..ஏன் இப்படி பண்ணீங்க? யாருமே என்னிடம் சொல்லலை. எப்படியாவது எனக்கு புரிய வச்சிருக்கலாம்ல. நான் உங்களை தவறாக புரிந்து கொண்டு தப்பா பேசிட்டேன். என்னை மன்னிச்சிருங்கம்மா..என்னை விட்டு போயிடாதீங்கம்மா. நீங்க இல்லாம எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? ஆனால் இப்ப இந்த நிலமையிலா உங்களை பார்க்கணும் என்று கதறி அழுதாள்.

அம்மா..நான் உங்க பக்கத்திலேயே இருக்கேன். என்னை விட்டு போயிறாதீங்கம்மா..என்று அழுது கொண்டிருந்தாள். சிலமணி நேரமாக அவள் அழுது கொண்டிருக்க..நித்தி அம்மா..சைலேஷை பார்த்து அவனை அருகே கண்ணால் அழைத்தார்.

சைலேஷ் கையை பிடித்து..நித்தியை பார்த்தார். அவன் அனிகாவை பார்த்தான். அவள் முன் வந்து அணைத்து நித்தியை சமாதானப்படுத்தினாள். அங்கிருந்த அனைவரையும் பார்த்தார். நித்தியை சைலேஷ் அருகே நிற்க வைத்து விட்டு அனிகா கைரவிடம் சென்றாள்.

சைலேஷ் தாத்தாவிடம் கை நீட்ட, மோதிரத்தை அவன் கையில் கொடுத்தார் தாத்தா. நித்தி அருகே வந்த ஸ்ரீ..அவளிடம் ஒரு மோதிரத்தை கொடுத்தாள். நித்தி புரியாமல் அனைவரையும் பார்த்து விட்டு சைலேஷை பார்த்தாள். அவன் அவளது அம்மாவை பார்த்து தலையசைக்க அவர் கண்களை மூடி திறந்தார்.

மோதிரத்தை போட்டு விடுப்பா..என்று கமலி கூற..சைலேஷ் அவரை பார்க்க அவரருகே லலிதா, ஆதேஷ், அப்பா, ஜானு இருந்தனர்.

நித்தி கையை பிடித்த சைலேஷ் அவளை பார்த்துக் கொண்டே அவளது விரலில் மோதிரத்தை அணிவித்தான். ஸ்ரீ..இப்ப எதுக்கு? என்று கண்ணீருடன் நித்தி அவளிடம் கேட்க, போடுங்க சீனியர் என்றாள்.

நித்தி அவள் அம்மாவை பார்க்க, அவளிடமும் கண்ணை மூடி திறந்து போட சொன்னார் நித்தி அம்மா. சைலேஷை பார்த்து கண்ணீருடன் அவனது விரல்களில் மோதிரத்தை போட்டு விட்டாள். சைலேஷ் நித்தி கையை கோர்த்து அவள் அம்மா அருகே அமர்ந்தான். உங்க பொண்ணுக்கு எப்பவும் துணையா இருப்பேன் என்று கேசவனிடம் மாமா நில்லுங்க என்று நித்தியை அழைத்து வந்து அவர்களது காலில் விழுந்து ஆசி பெற்றனர். அவர்கள் நிமிர்ந்து பார்க்க நித்தி அம்மா மெதுவாக கண்ணை மூடினார்.

அம்மா..என்று அவரிடம் வந்த நித்தி கதறி அழுதாள். நீங்க என்னை விட்டு போகக்கூடாது..என்று அவள் அழ, சைலேஷ் அவளை இழுத்து அணைத்துக் கொண்டான்.

அம்மா..கஷ்டப்படுவாங்க. என்னை விட்டு போவாங்கன்னே எனக்கு தெரியாது சைலு. அவங்கள வர சொல்லுங்க. எனக்கு அம்மா வேணும் என்று அழுது கொண்டே அவனை அணைத்தவாரே மயங்கினாள் நித்தி. அழுது கொண்டிருந்த அனைவரும் நித்தியிடம் வந்தனர். அவள் அப்பா அழுது கொண்டிருந்தார்.

சைலேஷ் அவளை தூக்கி பக்கத்தில் இருந்த கட்டிலில் போட்டான்.

பவி அம்மா அவளிடம் வந்து தண்ணீரை தெளித்து எழுப்பினார். எழும் போதே அம்மா..அம்மா..என்று புலம்பிக் கொண்டே எழுந்தாள் நித்தி. ஸ்ரீ, பவி, அனிகா, தாரிகா நித்தியிடம் வந்து அமர, அவள் அம்மா அருகே அமர்ந்து அழுதாள். அர்ஜூன் அனுவுடன் வெளியே அமர்ந்திருந்தான். சைலேஷும் கவினும் வெளியே ஹாஸ்பிட்டல் பார்மாலிட்டிசை கவனித்துக் கொண்டிருந்தனர். கேரி, மாதவ், சந்துரு வந்தனர். அவர்களும் நித்தி அம்மா, அப்பாவை பார்த்து விட்டு இன்பாவை பார்க்க சென்றனர்.

Advertisement