Advertisement

அத்தியாயம் 81

வந்தவர்களை சமாதானப்படுத்த தான் அர்ஜூன் அழைத்தான். இப்பொழுது அனைத்து சொத்தும் என் பெயரில் இருக்கலாம். ஆனால் இது அனைத்தும் அனுவுடையது. என்னுடைய அம்மாவிற்கே சொத்து நிறைய இருக்கும்.  எனக்கு யாருடையதும் தேவையில்லை. எனக்கு அனுவும் அவளுக்காக அவள் பெற்றோர் உழைத்ததும் அவளை சென்றடைய வேண்டும். அதுக்காக தான் அக்காவிடம் ஒத்துக் கொண்டேன். எடுத்து நடத்தவும் ஆரம்பித்திருக்கிறேன். நீங்கள் அனுவின் உறவினர்கள்.  அவளை பார்த்துக் கொள்ள வேண்டாம். ஆனால் தொந்தரவு செய்யாமல் இருந்தால் போதும் ப்ளீஸ் என்று கையெடுத்து குப்பிட்டு கேட்டான்.

அவர்கள் ஏளனமாக பார்க்க..

ஓ.கே முடியாது என்றால் எல்லாவற்றையும் சமாளிக்க நான் தயார். நீங்களும் தயாராக இருங்கள். ஆனால் பாருங்கள் உங்க வீட்டு பையன் என்னை அடிக்க வந்து அவன் கம்பி எண்ணிக்கிட்டு இருக்கான். ஆனால் அவன் இங்க இல்லை. எங்க இருக்கான்னு தெரியுமா?

தெரியும் என்ற ஒருவர்..அவன் செய்த எதுவும் எங்க யாருக்கும் தெரியாது என்றார்.

எல்லாருக்குமே தெரியாதா? என்று அர்ஜூன் அழுத்தி கேட்க ஒருவர் மட்டும் அர்ஜூனை முறைத்தார். சரி அவரை விடுங்கள். நீங்க என்ன சொல்றீங்க?

எனக்கு உண்மையா இருந்தா இருக்கலாம் இல்லைன்னா..வேலை விட்டு நீங்களே போகலாம். கவலைப்படாதீங்க உங்களுக்கான பணத்தை கொடுத்திடுவேன்.

நீ எங்களுக்கு பிச்சை போடுகிறாயா? ஒருவர் கொந்தளித்தார்.

இங்க பாருப்பா. நீ இன்னும் படிச்சு கூட முடிக்கல. ஏதோ திறமை இருக்குன்னு தான் உன்னை உள்ள விட்டதே..இதுல உன்னோட ப்ரெண்ட்ஸ் வேற அழைச்சிட்டு வந்துருக்க. இது என்ன பர்த்டே பார்ட்டியா எல்லாரும் வர்றதுக்கு.

மேம்..போதும் நிறுத்துங்க. அவங்க என்னோட ப்ரெண்ட்ஸ் தான். ஆனால் திறமையில்லாமல் யாரும் உள்ள வரலை. வேண்டுமென்றால் டீம்மா சேர்ந்து பிராஜெக்ட் பண்ணுவோம். யார் ஜெயிக்கிறாங்கன்னு பார்க்கலாமா? அர்ஜூன் சவால் விடுத்தான்.

மற்றவர்கள் தயங்கினர். என்ன சொல்றீங்க? இரண்டு வாரம் போதுமா? புதுசா பிராக்டெக்ட் தயார் செய்து சேல்ஸ்க்கு விடலாமா? எங்களால் முடியும். நீங்க சொல்லுங்க சார்..அர்ஜூன் கேட்டான்.

இரண்டு வாரத்துல..புதுசா எப்படி முடியும்?

சரி..ஒரு மாதம் எடுத்துக்கலாமா? அர்ஜூன் கேட்க..ஒருவர் எழுந்து இல்லப்பா. இப்ப இருக்கிற வேலையே போதும். என் மகன் கஷ்டப்பட்டு உழைத்து வீண் போகாது. அதனால் நான் வேலை செய்யும் கம்பெனிய அப்படியே விட்டுருப்பா. நான் அதை நல்ல படியாக பெருசாக்குவேன்.

ஓ.கே சார்..நீங்க சொன்னது போல் பெருசாக்கினாள். அதை உங்க பேருக்கே மாற்றி தாரேன். உங்க எல்லார் மேலும் முழுநம்பிக்கை எனக்கு வந்தால் நான் சொன்னது போல் செய்வேன். நீங்களும் செஞ்சு காட்டுங்க என்று அர்ஜூன் எழுந்து “தேங்க்ஸ் பெரியப்பா” என்றான்.

பெரியப்பாவா?

ஆமாம் நீங்க அனுவுக்கு தாத்தான்னா..எனக்கு பெரியப்பா தான என்று கேட்டான். அவனது உரிமை பேச்சில் ஒருவரை தவிர மற்றவர்களும் எழுந்தனர்.

அக்கா..என்னிடம் ஒன்று அடிக்கடி சொல்வாங்க. அவரோட பேமிலிய எதுவுமில்லாமல் விட்றக் கூடாதுன்னு சொல்வாங்க. அவங்க சொல்லி தான் செய்கிறேன் என்று அர்ஜூன் அவரிடம்..நம்ம குடும்ப ஆட்கள் அனைவரும் நீங்க பார்க்குற கம்பெனிய எல்லாரும் ஒத்துமையா கவனிச்சுக்கோங்க. நீங்க எல்லாரும் சேர்ந்து அத சக்சஸ்க்கு கொண்டு வந்தா..அந்த கம்பெனி உங்களுடையது. என்னோட அனுவுக்கு என்னால இதை விட அதிகமா சேர்த்து வைக்க முடியும்.

அவனை ஆச்சர்யமாகவும் மகிழ்வுடனும் மற்றவர்கள் பார்க்க, உட்கார்ந்திருந்தவர் மட்டும் அனைத்தும் எனக்கு வேண்டும் என்றவுடன் அர்ஜூன் பெல்லை அழுத்தினான். ஒருவர் உள்ளே வர..இவருக்கு இங்க வேலை இல்லை. அப்புறம் எங்க குடும்பத்துகுள்ளேயும் வரக்கூடாது.

ஏய்..எங்க குடும்பத்தை வழிநடத்த நீ யார்?

நான் இந்த வீட்டு பையன் தான். ஆனால் உங்களுடைய பொருட்களுக்கு சொந்தமில்லாத..ஆட்களுக்கு மட்டுமே உரியவன். சொல்லுங்க சித்தப்பா என்று ஒருவர் தோளில் அர்ஜூன் கையை போட்டான்.

ஏப்பா..அவரு என்னோட தம்பி என்றார் அந்த பெரியப்பா.

எனக்கு தெரியாமலா..பெரியப்பா. குடும்பம்ன்னா எல்லா விசயத்துலயும் ஒத்துமையா இருக்கணும். அவர் என்ன சொன்னார்? அனைத்தும் எனக்கு வேண்டும் என்கிறார்.

அப்ப உங்களை ஏமாத்த மாட்டார்ன்னு என்ன நிச்சயம்?

உங்களுக்கு ஒன்று சொல்லவா? அண்ணாவுக்கும் போதை மருந்து கடத்தலுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு என்று அர்ஜூனை எதிர்த்த சித்தப்பாவை பார்த்தான் அவன். அவனை பார்த்து மற்றவர்கள் அவரை பார்த்தனர்.

உனக்கு தெரியுமா? போதை மருந்தா? இவன் என்ன சொல்றான்? உண்மையா? கேட்டார்.

இவன் பேச்சை நம்புறீங்களா? இல்லை என்னை நம்புவீர்களா?

நீ என்னோட தம்பின்னா இதுக்கெல்லாம் உடந்தையா இருக்க முடியாது. எங்க மருமக கைக்கு சொத்து போனா..நம்ம மதிப்பு குறைஞ்சிடும்ன்னு தான் நான் அவளை எதிர்த்தேன். அவள் சாகணும்னு எதிர்பாக்கலை. அந்த குட்டிபிள்ளைய நம்ம வீட்ல யாரும் பார்த்துக்க மாட்டாங்க. ஏற்கனவே மருமகள பிடிக்காது. இதுல அந்த பிள்ளைய கஷ்டப்படுத்துவாங்கன்னு தான்னு மருமக செத்தப்ப பக்கத்துலையே வரல. ஆனால் நீ நம்ம குடும்ப மானத்தையே பறக்க விட்டுருவ போல்.

ஓ..அப்ப..அவன தான நம்புவீங்க?

நான் கேட்டதுக்கு பதில் சொல்லு..அவர் கேட்க..அர்ஜூனுக்கு போன் வந்தது.

அர்ஜூன் நாங்க வீட்டுக்கு வந்துட்டோம். அகிலுடன் உன்னோட வீட்டுக்கு கிளம்புகிறோம்.

ஓ.கே தாரி..அகிலிடம் போனை கொடு என்று அவனிடம் எல்லாரிடமும் கேட்டுட்டு அவங்களுடைய சில ஆடைகளையும் எடுத்து வை. நான் வர நேரமாகும். ஹாஸ்பிட்டலுக்கு எல்லாரையும் அழைத்து செல்.

போனை வாங்கிய ஸ்ரீ..அர்ஜூன் நாங்க நீ வந்த பின் தான் போவோம்.

பிடிவாதம் பண்ணாத ஸ்ரீ..வேலைய முடிச்சிட்டு வர நேரமாகும்.

அனு அழுவாடா..உன்னை தேட மாட்டாளா?

என்ன பண்றா? தூங்கிட்டாளா? ரொம்ப அழுதாளா?

செய்றத செஞ்சுட்டு கேட்கிறான் பாரு கேள்வி.

அம்மா தாயே..மறுபடியும் முதல்ல இருந்தா. எனக்கு வேலை இருக்கும்மா..டேய் அகில் இருக்கிறாயா? இல்லையா?

எஸ் யுவர் ஆனர்..

என்ன கிண்டலா?

நித்திக்கு கால் பண்ணியா? அர்ஜூன் கேட்க, அதுக்கு தான்டா தைரியமே இல்லை.

இப்போதைக்கு யாரும் பேசாமலிருப்பது தான் நல்லது என்று அர்ஜூன் குரல் தாழ, அனைவரும் அவனை பார்த்தனர்.

சரிடா. நாங்க தயாராகிறோம்.

உனக்கு கை எப்படி இருக்குடா?

இப்ப பரவாயில்லைடா. இப்பொழுதைக்கு அவன் பிரச்சனை செய்ய மாட்டான்னு நினைக்கிறேன் அர்ஜூன் கூறி விட்டு போனை துண்டித்தான்.

அவர் சிரித்தார்.

என்னப்பா, அவனையா நம்புற? அவன் காரணமில்லாமல் ஏதும் செய்ய மாட்டான்.

உங்களுக்கு அந்த கொலைகாரனை தெரியுமா?

தெரியுமே? என்று சிரித்தவர் அந்த பயலையும் அவன் பொண்டாட்டியையும் கொல்ல சொன்னதே நான் தான் என்று அவர் சொல்ல..அர்ஜூனுக்கு கோபம் ஏறியது.

என்னடா சொன்ன? புள்ளைகள விட உனக்கு பணம் அவ்வளவு முக்கியமாகிப் போனதா? இந்த சின்ன வயசுல பெத்தவங்கள இழந்த அந்த குட்டி பிள்ளைய நினைச்சு பார்த்தியா? என்று அடித்தார்.

அண்ணா..நீயா இப்படி பண்ண? அப்ப என்னோட புள்ளைகளையும் பணத்துக்காக எதுவும் செய்ய தயங்க மாட்டேல்ல..என்று ஒரு பெண்மணி கோபமா, இவன் வீட்டுக்கு வந்தால் நான் வரமாட்டேன் அண்ணா என்று பெரியவரிடம் கூறி விட்டு எழுந்தார். மற்றவர்களும் எழுந்து அர்ஜூனை பார்த்து உன்னோட டீலுக்கு நாங்க ஒத்துக்கிறோம்.

அண்ணா அம்மாவிடம் பேசி அவனுக்குரிய சொத்தை பிரித்து கொடுத்து விட்டு அவனை அனுப்பி விடுங்கள். நான் வீட்டிற்கு வருவேன்.

இங்க பாரு பொம்பள பிள்ளைக்கு சொத்தே கிடையாது அவன் கூற, இப்ப எல்லாமே மாறிடுச்சு என்று அவர் சத்தமிட்டார்.

நிறுத்துங்க..என்று அர்ஜூன் கத்தினான். இங்க பாருங்க உங்க விசயத்தை வெளிய வச்சு பார்த்துக்கோங்க. நானே என்னோட ப்ரெண்டோட அம்மா சாகிற நிலையில இருக்காங்க. அந்த டென்சன்ல இருக்கேன். இங்கிருந்து கிளம்புங்க..நானே அடுத்தடுத்து சாவ பார்த்து நொந்து போயிருக்கேன். போங்க எல்லாரும் என்று கத்தலுடன் அழுதான்.

அர்ஜூன்..என்று சைலேஷ் உள்ளே வந்தான். எழுந்த அர்ஜூன்..சார் நீங்க இங்க என்ன பண்றீங்க? உங்க வேலைய பார்த்தா தானே..என்று கண்ணை துடைத்துக் கொண்டு அவனிடம் வந்தான்.

பின் அவர்களை பார்த்து, உங்க எல்லாரிடமும் ஒன்று மட்டும் சொல்றேன். யார் நான் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவங்களுக்கு வக்கீல் நோட்டிஸ் வரும். என்னிடம் அக்கா கொடுத்தது மற்றும் கம்பெனி பாதுகாப்பு பத்திரம் அனைத்தும் உள்ளது. அந்த கம்பெனிய எழுதி கொடுக்கும் போது அதில் முக்கியமானதாக அனுவை எவ்விதத்திலும் யாரும் தொந்தரவு செய்யக்கூடாது. அப்புறம் அந்த கம்பெனியில் வீட்டு பெண்களும் அதில் உழைத்தால் அவர்களுக்கும் உரிமை இருக்கும். பார்த்துக்கோங்க..நான் சிறிது நேரத்தில் பெரியப்பாவுக்கு கால் பண்ணுவேன். அவர் சொல்லட்டும்.

அர்ஜூன் தோளை தட்டிய அவர், இனி எங்க தொந்தரவு உனக்கு இல்லாமல் நான் பார்த்துக்கிறேன் என்று அனைவரையும் அழைத்து சென்றார்.

சார்..என்று சைலேஷ் பக்கம் அர்ஜூன் திரும்பினான். அர்ஜூன் மோதிரம் வாங்க போகணும். கைரவ் நல்லா செலக்ட் பண்ணுவான். ஆனால் அவன் வேலையாக இருக்கிறான். நீ வருகிறாயா? என்னால் இதெல்லாம் பார்க்க முடியாது. தாத்தாவை கேட்டால் நீயே எடுத்துக்கோ என்கிறார்.

தாத்தாவிற்கு விருப்பம் தான சார்.

ஓ.கேன்னு சொல்லிட்டார். மேரேஜ் வருடமாகும் என்பதால் ரொம்ப யோசிக்கிறார்.

அண்ணா..உங்களுக்கு?

எனக்கு பிரச்சனையில்லை. கைரவை கூப்பிட்டுக்கோங்க. நான் அபியை வைத்து பார்த்துக் கொள்கிறேன். சைலேஷ் அங்கிருந்து கிளம்ப.. ராஜவேலை அர்ஜூன் அறைக்கு அழைத்தான்.

அவர் வந்தவுடன் சாரி..சார். ரொம்ப நேரம் காத்திருக்க வச்சுட்டேனா?

பரவாயில்லை. ரொம்ப கஷ்டமா இருக்காப்பா..

இல்ல சார். கம்பெனி பிரச்சனைய கூட பார்த்துக்கலாம். அந்த கொலைகாரனையும் ஸ்ரீயையும் நினைத்து தான் பயமா இருக்கு.

அந்த பொண்ணை நினைச்சு எதுக்கு பயப்படுறீங்க?

சார்..கொலைகாரனை விட அவ தான் ரொம்ப டேஞ்சரானவ. எப்ப என்ன செய்வான்னு தெரியாது.

அவர் சிரித்தார்.

சார்..நான் ஸ்ரீயை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்.

ம்ம்..என்றார் புன்னகையுடன்.

சார்..உங்க பையனுக்கு பொண்ணு தேடுறீங்களா? நீங்க இன்பா மேம்மையும் விட்ருங்க.

அவர் கலகலவென சிரித்தார்.

ஏன் சார் சிரிக்கிறீங்க?

ஸ்ரீயை பார்த்து கேட்க தோன்றியதால் கேட்டேன். ஸ்ரீ உனக்கு ஒரு நாள் ஓ.கே சொல்லுவா?

எப்படி சார் சொல்றீங்க? நானும் அவளிடமிருந்து அந்த ஒரு வார்த்தையை தான் எதிர்பார்க்கிறேன்.

செய்தியாளர் முன்னே நீ அவளுக்கு விருப்பமிருந்தால் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னேல. அவளுக்கு உன் மீது விருப்பமில்லைன்னா..அப்பவே எல்லார் முன்னும் சொல்லி இருப்பா. அதுவும் பாப்பாவை இருவரும் சேர்ந்து பார்த்துக்கிறோம்ன்னு சொன்னா. எந்த பொண்ணு ஏத்துப்பா? ஆனால் அவ்வளவு நல்லா பார்த்துக்கிறா. இன்று கூட கம்பெனி என்று பாராமல் உன்னிடம் சண்டை போட்டாளே?

உனக்கு எதுவுமே தோணலையா?

என்ன தோணணும்?

அவர் புன்னகையுடன் ஸ்ரீ பேச்சில் உன் மீதுள்ள உரிமை தெரிந்தது? ஹாஸ்பிட்டலுக்கு போயிட்டா வீட்டுக்கு போய் பாப்பாவை தூங்க தான வைக்கணும். ஆனால் உன்னுடன் சண்டை போடும் சாக்கில் உன்னை பார்க்க வந்தது போல் தெரிந்தது. இது அங்கிருந்த திருமணமான அனைவருக்கும் புரிந்திருக்கும். பாப்பாவை விட உனக்கு அவள் முக்கியத்துவம் கொடுக்கிறாள்.

அவனுக்கு மகிழ்ச்சி தாங்க முடியலை. சரி..என்ன பேசணும்?

அவன் அந்த போதை மருந்து பற்றி கேட்க, என்னிடம் வேறேதுவும் இல்லை. தம்பி..நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏதோ..ஒன்றை நீங்க கவனிக்காதது போல் தோன்றுது. எனக்கும் தெரியல. அவன் ரொம்ப டேஞ்சர் பைத்தியக்காரன் வேற..பார்த்துக்கோங்க என்று இருவரும் கம்பெனியை பற்றி பேசினார்கள்.

ஸ்ரீயும் தாரிகாவும் வீட்டிற்குள் நுழைய அகில் போனில் எதையோ சீரியசாக பார்த்துக் கொண்டிருந்தான். அனு அவனை பார்த்து தாரிகாவிடமிருந்து இறங்கி அவனிடம் ஓடினாள்.

பாப்பா மெதுவா போ..என்று சத்தம் கேட்க நிமிர்ந்து பார்த்தன். “க்யூட் அங்கிள்” எங்க போனீங்க? நான் உங்கள தேடினேன். இவர்கள் ஹாஸ்பிட்டல் கிளம்ப அகில் பவி வீட்டிற்கு வந்திருப்பர். அதனால் அனு அவனை பார்த்திருக்க மாட்டாள்.

ஹே..டியர்..என்னை தேடுனீங்களா? என்று அவளை தூக்க வந்தான். இருவருக்கும் இடையே பவி வந்தாள்.

பவி..என்ன பண்ற? அகில் கேட்டான்.

பாப்பா..வா என்னிடம் வா..அவள் அழைக்க, அனு..வழியவிடு என்று அவளை தள்ள..அவள் நகர்ந்து அவனருகே அமர்ந்தாள்.

அச்சோ..கீழ விழுந்துட்டீங்களா?

ஆமாம் டா..இன்னும் அவனுக்கு சரியாகலை என்றாள் பவி.

வலிக்குதா? என்று கேட்டுக் கொண்டே உடல் தளர்ந்து அனு மயங்கினாள்.

ஹே..பாப்பா..என்று பவி பதற, ஸ்ரீயும் தாரிகாவும் அவளுக்கு காய்ச்சல். அகிலை பார்த்ததும் கொஞ்சம் ஆர்வமாகி விட்டாள் என்று அவளை தூக்கிக் கொண்டு அறைக்கு சென்றனர். மற்றவர்களும் உள்ளே செல்ல..ஜூலி அனுவை சுற்றி சுற்றி வந்தது. அவளை விழிக்க வைத்து..அனும்மா..இனி எல்லாரும் உன் பக்கத்திலே இருப்பாங்கடா. நீ மருந்து சாப்பிட்டு தூங்கணும் என்று கண்ணீருடன் அவள் கூறினாள்.

பாப்பாவுக்கு காய்ச்சலா என்று அகில் அனுவை தொட்டு பார்த்து விட்டு..சாப்பிட்டு தூங்கி எழுந்தேனனா? எல்லாமே பறந்து போகும் என்றான்.

பாப்பா முன்னே அழாத ஸ்ரீ பவி கூறினாள். அவளை பார்த்து விட்டு ஸ்ரீ அனுவை பார்த்தாள். அனு மெதுவாக எழுந்து ஸ்ரீ கண்ணீரை துடைத்து விட்டு அவள் தோளில் சாய்ந்து கொண்டாள்.

வாங்க அவள் தூங்கட்டும் என்று தாரிகா எல்லாருடனும் வெளியேற..பவி அம்மா அனுவுக்கு கஞ்சி எடுத்து வந்தாங்க. அவளுக்கு அதை கொடுத்து விட்டு அவளுடன் ஸ்ரீயும் படுத்து தூங்கினாள்.

இடையே பவி அவளை எட்டி பார்த்தாள். இருவரும் தூங்குவதை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். அகில் அவளிடம் வந்து, சாப்பிட வரலையா? கேட்டான்.

ஸ்ரீயை கூப்பிடலாம்ன்னு நினைத்தேன். ஆனால் அவ தூங்குறா?

அவ எழுந்தவுடன் சாப்பிட நீயே எடுத்து வை என்றான்.

ம்ம்..என்று அவளை பவி பார்க்க..அகில் அவளை நெருங்கி பார்த்துக் கொண்டு வா..சாப்பிட போகலாம் என்று கையை பிடித்தான்.

க்கூ..என்று இருமல் சத்தம் கேட்டு திரும்பினாள். அவள் அம்மா இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் கையை விட்டு பவி ஓடினாள்.

வாங்க ஆன்ட்டி..சாப்பிடலாம் என்று அகில் அழைத்தான். நீங்க போங்க. நான் வாரேன் என்று அவரும் ஸ்ரீயை பார்த்தாள். என்னம்மா..சாப்பிட வரலையா? பவி அப்பா வந்தார்.

வாங்க என்று புன்னகையுடன் சென்றனர். பவி அம்மா மனதில் கனமுடன் இருந்தார். காவேரி அவருக்கு அக்கா..இப்பொழுது அங்கே அக்காவிற்கு சாமி குப்பிடுவாங்களே? என்று மனதினுள் நினைக்க அவரால் சாப்பிட முடியாமல் சாப்பாட்டை வெறித்துக் கொண்டிருந்தார். அகில் அவரை பார்த்து பவி அப்பாவிடம் காட்டினான். அவர் அவரை தனியே அழைத்து செல்ல..அவர் அழுதார்.

ஆன்ட்டி வாங்க..என்று அகில் தீனாவிடம் விசயத்தை கூறினான். பவி அம்மா உறவின் படி பவியும் அவனுக்கு தங்கை தானே?

வெற்றியிடம் அவன் போனை கொடுக்க..மற்றவர்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர். அவரிடமும் பேச பவி அம்மாவை பற்றி அனைவரிடமும் வெற்றி கூற, அவர்களும் அவரிடம் பேசினார்கள். பின் சடங்கை..போனிலே பார்த்தார்.

சைலேஷ் அடிக்கடி..அனிகாவிடம் நித்தி என்ன செய்கிறாள்? என்று கேட்டுக் கொண்டிருந்தான். அனிகா நித்தி அருகிலே இருந்தாள்.

நந்து மேகா அப்பாவை மதிய உணவின் போது சந்திக்க சென்றான். அவர் மேகா கூறியதை ஏளனமாக கூறி, உன்னை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? அர்ஜூனில் பாதியாகவாது ஆக முடியுமா? கேட்டார்.

மேகா என்னை காதலிக்கிறாளா? எனக்காக அவள் கனவையே உதறி விட்டாளா? கண்கலங்கிய நந்து, அங்கிள் நான் அர்ஜூனாக இருக்க மாட்டேன். நான் நந்தவதனாக தான் இருப்பேன். நான் அர்ஜூன் மாதிரி என்னுடைய மேகா தனியே கஷ்டப்பட விட மாட்டேன்.

உங்களுக்கென்ன தனி கம்பெனி ஆரம்பிக்கணும் அவ்வளவு தான..நானும் அவளுடன் சேர்ந்து செய்கிறேன்.

உனக்கு ஏதாவது இதை பற்றி தெரியுமா?

தெரியாது அங்கிள். ஆனால் எதிலாவது எனக்கு ஆர்வம் வந்தால் அதை விட்டு சென்று எனக்கு பழக்கமில்லை. அது கம்பெனியாகட்டும்..என் மேகாவாகட்டும்.. அவள் கூறியது போல் நாங்கள் நல்ல படியா முடித்து காட்டுவோம் என்று அவனும் சவாலை ஏற்க, அவர் சிரித்தார். ஒன்றும் தெரியாமல் எப்படி?

முடியும் அங்கிள்..நான் வாரேன். நாங்க உங்க சவாலில் வெற்றி அடைந்து சேர்ந்து வந்து பார்ப்போம் என்றான் திடமுடன். செல்லும் அவனை புன்னகையுடன் பார்க்கலாமே? என்றார்.

அவருக்கு ஒரு வேலை நந்துவை பிடித்து விட்டதோ?

கல்லூரிக்கு சென்ற நந்து நேராக மேகா வகுப்பிற்கு சென்று அவளருகே அமர்ந்தான்.

நந்து இங்க என்ன பண்ற? சார் வரப்போறாரு.

வரட்டும் என்றான்.

கிளம்பு..என்று அவனை பிடித்து தள்ளினாள். சார் அங்கே வந்தார்.

ஸ்டூடண்ஸ்.. நந்தவதன் நம் வகுப்பின் புது ஸ்டூடண்ட் என்றார்.

மேகா அவனை பார்க்க விழித்து பார்த்து, டேய்..இதுக்கு பணம் அதிகமாகும்.

தெரியும்?

எப்படி பண்ண?

உன்னோட அப்பா தான் பணம் கட்டியிருப்பார்.

என்னோட அப்பாவா?

அப்புறம் உன் கூடவே இருந்தானே அவனா கட்டுவான்? என் மாமனார் தான் கட்டுவார்.

மாமனாரா? டேய்..என்னோட அப்பாவை பார்த்தாயா?

பரவாயில்லை மறைக்காம கேட்கிற?

டேய்..விளையாடாம.. சொல்லு, என்ன சொன்னார்? திட்டுனாரா?

அவருக்கு அர்ஜூனை தான் பிடிக்குமாம். அதான் என்னை சேர்த்து விடுங்க. பார்க்கலாம் என்றேன் கிண்டலாக கூறினான்.

டேய்..ஒழுங்கா நடந்ததை கூறு.

ஹலோ..நான் கிளாஸ் எடுக்கவா? இல்லை வெளிய போறீங்களா? சார் கேட்டார்.

நாங்க கவனிக்கிறோம் சார் நந்து கூறினான்.

அவரும் ஆரம்பித்தார். வகுப்பு முடிந்தவுடன்..நந்து அவள் அப்பாவிடம் பேசியதை கூறினான்.

எதுக்குடா கனவை விட்டு?

ஏன் எனக்காக நீ விடலையா? அவன் கேட்க, அவனை கட்டிக் கொண்டு..அப்பா எப்படி பேசினாங்க தெரியுமா? எனக்கு கனவை விட நீ தான் முக்கியமாக தெரிந்தாய்..அதான் இதை எடுத்தேன்.

உனக்கு இந்த ஆடை தான் ரொம்ப அழகா இருக்கு என்று அவள் கன்னத்தை பிடித்து கிள்ளினான்.

என்னுடன் இருந்தவன் நம்ம சீனியர் தான். அர்ஜூன் தான் அறிமுகப்படுத்தினான். அவனிடம் தான் கற்றுக் கொண்டிருக்கிறேன். அவனிடம் முதலில் எந்த புத்தகம் உதவியாக இருக்குமென்று கேட்டு வாங்கணும். பின் அதை படிக்கணும்.

நான் என்னோட திட்டத்தை சொல்றேன் என்று எப்ப அவனுடன் பேசி தெரிஞ்சுக்கணும்? புத்தகம் படிக்கும் நேரம் என அனைத்தையும் கூறி விட்டு கம்பெனி போகும் நேரத்தையும் கேட்கணும். பின் அங்கிருப்பவர்களுடன் நன்றாக பழகி அறிந்து கொள்ளலாம் நந்து கூற, மேகா அவன் வாயை பார்த்துக் கொண்டிருந்தாள்.

எப்படிடா?

ஒருநாள் உன்னோட வீட்ல இருக்கிறோம். மறு நாள் என் வீடு என்று கூற,..

நான் வரமாட்டேன்ப்பா.

ஏன்? மேடமுக்கு சின்னதா இருக்குமோ?

இல்லடா..சொல்லப்போனா. எனக்கு உன்னோட வீடு பிடிச்சிருக்கு. உன்னோட அம்மா என்னை முறைச்சுக்கிட்டே இருப்பாங்க.

ஆமா..நீ செஞ்சதுக்கு யாரா இருந்தாலும் கோபப்பட மாட்டாங்களா?

சாரிடா..நான் கவனிக்காமல் இருந்துட்டேன். அதவிடு..ஆரம்பிக்கலாமா? நம் புது பயணத்தை?

ம்ம்..நான் தயார் என்று மேகா கையை நீட்ட, நந்து பிடித்துக் கொண்டு உன்னை எப்பொழுதும் என்னை விட்டு செல்ல விடமாட்டேன். அவள் அவனை பெருமையுடன் பார்த்தாள்.

என் பொண்ணு உன் வீட்டிற்கு வர மாட்டா? என்று மேகா அப்பா..நான் சொல்ற வீட்ல படிங்க..

நோ..அங்கிள். தனியே வீட்டில் தங்குவது தவறு. உங்க வீட்ல நீங்க இருப்பீங்க. எங்க வீட்ல அம்மா இருப்பாங்க. அதான் நல்லது. அடுத்தவங்க அவளை ஏதும் சொல்லும் படி விட என்னால் முடியாது.

அவருக்கு நந்துவின் குணம் பிடித்தாலும் பணம் இல்லை. அவனுக்கென்று எதுவுமே இல்லை. சிறிய வீடு என்று குறைகள் அதிகம் கண்ணில் பட்டது.

இருந்தாலும் மேகா எப்படி அவன் வீட்டில் இருக்கிறாள்? என்று பார்ப்போம் என்று நினைத்து சரி என்றார். மேகாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. ஓவரா ஸ்டேட்டஸ் பார்ப்பாரே? என்று அவள் நினைத்தாள்.

மாலை மணி நான்கை தாண்ட..துளசி தயாராகி வெளியே பையுடன் வெளியே வந்தாள். சக்கர புவனாவை பார்க்க அப்பொழுது தான் வீட்டினுள் நுழைந்தான்.

அனைவரும் அவளை பார்க்க..அதற்குள்ளே தயாராகி விட்டாயா?

அண்ணா..போகலாமா? என்னால் இதுக்கு மேல இங்க இருந்தா என் மனசு மாறிடும் என்று கண்கலங்கினாள்.

தீனாவிடம் புவனா..கண்டிப்பா துளசி போகணுமா?

கஷ்டமா இருக்கு. அவ பக்கத்துல இருந்தப்ப எதுவும் தோணல புவி. ஆனால் இப்ப ஒருமாதிரி இருக்கு. ஆனால் அவள் வாழ்க்கையில் கஷ்டத்தை சமாளிக்க பழகுறதும் நல்லது தானே?

துளசி அக்கா..பையுடன் எங்க போற? சக்கர கேட்டுக் கொண்டே உள்ளே வந்தான். அவனை எதிர்பார்க்காதவர்கள் என்ன சொல்ல என்று விழித்தனர்.

துளசி அவனிடம்..நான் ஊருக்கு போறேன் சக்கர. என்னால இங்க இருக்க முடியல என்று அனைவரையும் பார்த்து.. காவேரி அம்மா நினைவா இருக்கு. அதனால நான் அவங்க நினைப்பு போன பின் வருவேன் என்று குனிந்து அவனிடம்..துருவனை பார்த்துக்கோ. தினமும் பார்க்க போ என்று சொல்லி விட்டு..அப்பா என்று வெற்றியை அணைத்துக் கொள்ள, அவரும் அழுதார்.

அம்மா..நான் போயிட்டு வாரேன் என்று கூற..அவளுக்கு இன்னொரு பையை மீனாட்சி கொடுக்க..

என்னதும்மா?

நான் என் பொண்ணு துளசிக்காக வாங்கியது. அவரை அணைத்து எல்லாரையும் பார்த்துக்கோங்க அம்மா. என்னை மறக்க மாட்டீங்கள?

மறக்கவா? என்று சக்கரை துளசியை பார்த்தான்.

இல்லடா. நான் உன்னை பெத்தெடுக்கலைன்னாலும் நீ என்னுடைய பிள்ளை தான். அம்மா..கண்டிப்பா உன்னை பார்க்க வருவேன்.

பிரதீப்பிடம்..அண்ணா பிரச்சனை முடிஞ்சதும் என்னை பார்க்க வருவீங்கல்ல.

கண்டிப்பா வருவோம்டா..என்றான். தீனாவை பார்த்து துளசி கண்ணீர் பெருகியது. அவனை அணைத்து அண்ணா..நீ வருவேல்ல..நான் காத்திருப்பேன். தீனாவும் கண்ணீருடன்..கண்டிப்பா வருவேன்டா. நான் வராமல் எப்படி?

துகிராவிடம் வந்து..அண்ணி நீங்க தினமும் கால் பண்ணுங்க. நான் பேசணும் என்றாள். துகிரா அவளை அணைத்து..நீ கவனமா இரு. ஆரம்பத்துல கஷ்டமா இருக்கும். போக போக பழகிடும். வெளிய போகும் போது கவனமா இரு. ப்ரெண்ட்ஸ் பார்த்து பழகு. நல்லா சாப்பிடு. அப்புறம் அவனை பற்றியே யோசிச்சுக்கிட்டு இருக்காத. படிப்புல கவனத்தை செலுத்து. ஒருநாள் எல்லாம் மாறும்.

“தேங்க்ஸ் அண்ணி” அண்ணாவை பார்த்துக்கோங்க. உங்க வீட்டுக்கு போனாலும் அண்ணாவை மாதத்திற்கு ஒருமுறையாவது பார்க்க வாங்க..என்றாள்.

நான் பார்த்துக்கிறேன் என்றாள் துகிரா. பிரதீப் துகிராவை பார்த்தான்.

புவியிடம் சென்ற துளசி அவளை அணைத்துக் கொண்டு.. அவனை பார்த்துக்கோங்க. உங்களிடம் அவன் புகைப்படம் இருந்தால் அனுப்ப முடியுமா? கம்மிய குரலில் கேட்டாள்.

அனுப்புறேன் துளசி. நீ போகணுமா?

போனால் தான் நல்லது. நான் போயிட்டு வாரேன். அண்ணாவையும் நம்ம குடும்பத்தையும் பார்த்துக்கோங்க.

அப்பத்தாவிடம் சென்றாள். அவர்..அழ, அவளும் அழுதாள்.

சக்கர துளசி முன் கையை கட்டி நின்றான். கண்ணை துடைத்து..என்ன? புருவத்தை உயர்த்தினாள்.

நீ எங்க போற? பொய் தான சொல்ற? உன்னோட அம்மா செத்துட்டாங்க. நான் அவங்கள மறந்துட்டேன்னு தான சொன்ன? இப்ப இந்த அம்மாவிடம் நல்லா பேசுற? எங்க போற? எதுக்கு போற?

துளசி பிரதீப்பை பார்த்தாள்.

புவி அவனிடம் வந்து..சக்கர கிளம்பும் போது இப்படி கேட்கக்கூடாது.

அவள் கையை தட்டி விட்ட சக்கர..புவி நீ தான பொய் சொல்லக்கூடாதுன்னு சொன்ன?

ஏன் சொல்ல மாட்டிக்கிற?

புவனா எல்லாரையும் பார்த்து.. அவனிடம் சொல்வதாக கூறி, அவனுக்கு துளசி காதலிப்பதை மட்டும் கூறி அவள் கிளம்பட்டும் என்றாள்.

அண்ணாவை பிடிக்குன்னா சொல்லலாமே?

இங்க பாரு சக்கர. இத பத்தி நீ யாரிடமும் வாயை திறக்கவே கூடாது. முக்கியமாக துருவனிடம் என்று பிரதீப் கூற,

அண்ணா..அக்காவுக்கு துரு அண்ணாவை பிடிக்க கூடாதா? தப்பா?

தப்பில்லை. ஆனால் நீ யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னேன்னா. உனக்கு நான் டியூசன் எடுக்க மாட்டேன் புவனா கூறினாள்.

அக்கா..எனக்கு டியூசன் எடுக்குறியா?

எனக்கு சரியாகிடும் இரண்டு நாள் கழித்து ஆரம்பிக்கலாமா? புவனா கேட்க..அவன் வேகமாக புவியை அணைத்துக் கொண்டான்.

சக்கர..நீ வீட்டுக்கு போ தீனா கூறினான்.

துளசியை பார்த்து, நீ அழாதக்கா என்று துளசி கண்ணீரை துடைத்து விட்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டான். அவள் கண்ணீருடன் அவனை பார்த்தாள்.

அழாத..நான் அண்ணா பக்கத்திலே இருப்பேன் சக்கர கூற, துளசி அவனை முத்தமிட்டு..சாக்லேட் ஒன்றை நீட்டினாள்.

வாங்கி விட்டு அவளை பார்க்க, அவள் திரும்பி மொத்த குடும்பத்தையும் பார்த்து விட்டு கண்ணீருடன் வெளியே வந்தாள். பிரதீப்பும் தீனாவும் அவளை வண்டியில் ஏற்றி அவர்களும் ஏறினார்கள்.

அண்ணா…ஜானுவை பார்த்துட்டு போகலாமா? அவள் கேட்க,..ஜானுவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் தீனா கூற, பார்த்துட்டு போகலாம். ஆனால் நீ ஊருக்கு போவது போல் காட்டிக் கொள்ளாதே. உனக்கு ஏதாவது வாங்க வருவதாக சொல்லிக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

தருண் மாமாவை பார்க்கவேயில்லை?

அவன் அர்ஜூன் சொன்னதால் அவனது பாட்டி வீட்டிற்கு போனான்.போன் செய்து தாரேன் பேசிக்கோ தீனா போன் செய்து, துளசி பேச..தருணிற்கு சந்தேகம் ஊர்ஜிதமானது.

வெற்றி துளசி சென்ற பின்னும் வெளியே அமர்ந்திருக்க, மீனாட்சி உள்ளிருந்து கவனித்தார். துகிரா அவர் அருகே வந்து, கஷ்டமா இருக்கா மாமா என்று கேட்டார்.

ஆமாம்மா. அவள் சத்தமில்லாமல் ஒருமாதிரி தான் இருக்கும் என்று அழுதார். சக்கர அவரிடம் வந்து, அய்யா..நானும் துளசி அக்காவுக்கு துணையா போகவா? கேட்டான். துளசியை நினைத்து அனைவரும் அழுதனர்.

அவ போன புறவு கேட்கிறியேய்யா? அப்பத்தா சக்கரையிடம் கேட்க, நீ சொல்லு கிழவி. நான் இப்பவே ஓடி போய் அண்ணாவை பிடிச்சிருவேன் என்று அவன் கூற, புவி அவனை அணைத்து அழுதாள்.

அம்மா..என் புள்ள அழுதுகிட்டு போறா? என்று வெற்றி அழுதார்.

மாமா..எல்லாமே சீக்கிரம் சரியாகிடும் என்று துகிரா ஆறுதலாக பேச, மீனாட்சி அங்கே வந்து..எல்லாரும் உள்ள வாங்க. இல்ல யாராவது பார்த்தா சந்தேகம் வந்திடும் என்று முந்தானையால் கண்ணை துடைத்தவாறு அழைத்தார்.

ஆமாடா. வா மகனே வீட்டுக்குள்ள போகலாம் என்று அனைவரும் செல்ல..சக்கர அவன் வீட்டிற்கு சென்றான்.

 

 

 

 

 

 

 

Advertisement