Advertisement

அத்தியாயம் 70

அகிலை மிகவும் சிரமப்பட்டு மாதவ் பிடித்து வைத்திருந்தான். பவி…கதவ திறக்கப் போறியா? இல்லையா? அகில் கத்திக் கொண்டிருக்க,

அகில் கொஞ்ச நேரம் அமைதியா இரு. அர்ஜூனிடம் பேசிட்டு உன்னோட தம்பிய பார்க்க போ..என்று வெளியிருந்து சத்தம் கொடுத்தாள் பவி.

பவி..அவன் என்னோட தம்பி. உயிருக்கு போராடிகிட்டு இருக்கான்னு சொல்றாங்க. அவனை நான் பார்க்கணும் என்று கத்தி அழுதான் அகில். கதவை திறந்து பவி உள்ளே சென்று அகிலை அணைத்துக் கொண்டாள்.

அகில்..புரிஞ்சுக்கோ. இப்ப வெளிய போக முடியாது. உனக்கு ஏதாவது ஆகிடும் பவி கண்ணீருடன் கூற, அகில் அழுதாலும் வெளியே செல்ல முயற்சிக்கவில்லை. தேவ் அகிலிடம் வந்து அவன் கையை பார்த்து விட்டு ஏதும் கூறாமல் வெளியேறினான்.

பவி அவனை பார்த்து விட்டு மாதவை பார்த்தாள். மாதவ் அவனிடம் சென்று கேட்க, அவனுக்கு சரியாகிடும் என்றார்.

அர்ஜூன் அங்கே வந்து அகிலை பார்த்து ரதிக்கு போன் செய்து அகிலிடம் கொடுத்தான். அவன் அம்மாவிடம் பேசிய பின் தான் அமைதியானான். அர்ஜூனுக்கு ஏற்கனவே துருவனுக்கு சிகிச்சை முடிந்ததை கூறினான் சைலேஷ். அவனை கேசவன் அவர் அறையிலிருந்து கவனித்துக் கொண்டிருந்தார்.

அர்ஜூன் அகிலிடம், வேலீஸ்வர், காவேரி, அர்தீஸ் இறந்தது. அவர்கள் செய்தது என்று அனைத்தையும் கூற, பவியும் மாதவும் கேட்டுக் கொண்டிருந்தனர். மீனாட்சி பற்றியும் கூறினான்.

அர்ஜூன்..நீ சொன்னவங்க அம்மா கூட பிறந்தவங்களா? கேட்டாள் பவி.

அகிலை பார்த்த அர்ஜூன், ஆம்..என்று தலையசைத்தான். மாதவ் புரியாமல் யார சொல்றீங்க?

தீனா அண்ணாவோட அம்மா இறந்துட்டாங்க என்றான்.

அவங்க அம்மாவா?

உனக்கு அவங்க பழக்கமா? பவியிடம் கேட்டான்.

அவங்க எனக்கு என்று அவள் தயங்க..சித்தி என்று அர்ஜூன் கூறினான்.

ம்ம்..என்றாள். அமைதியாக போனை வைத்த அகில்..ஏன்டா அர்ஜூன் இவ்வளவு பிரச்சனை?

எதுமே சரியில்லடா. ஆனால் அர்தீஸ் பிரச்சனை முடிஞ்சது. இனி இந்த ஆளை பார்த்தால் போதும் என்ற அர்ஜூன் அவனிடம் இப்பொழுது பேசியதை கூற,

பவி..கோபமாக என்ன பேசி வச்சுருக்க அர்ஜூன்? புரிஞ்சு தான் பண்றியா? உண்மையாகவே ஸ்ரீயை அவனிடம் ஒப்படைக்கப் போகிறாயா?

நீ எதுக்கு இப்படி பதருற? மாதவ் கேட்டான்.

ஸ்ரீ என்னோட ப்ரெண்டுல. அதனால் தான் என்று அகில் கூறி விட்டு பவியை பார்த்து முறைத்தான்.

அர்ஜூனுக்கு ஆதேஷ் போன் செய்தான். இவன் எதுக்குடா போடுறான்? என்று அர்ஜூன் போனை எடுத்து, ஏதும் பிரச்சனையாடா?

அண்ணா..துருவனுக்கு என்ன ஆச்சு? அவங்க அம்மா அழுதாங்க என்று கேட்க, நீ அவங்களுக்கு போன் செய்தாயா?

ஆமாம் அண்ணா. நான் அவனிடம் பேசலாம் என்று போன் செய்தேன். ஆனால் அம்மா தான் எடுத்து அவன் ஹாஸ்பிட்டல சீரியசா இருக்கான்னு சொல்லி அழுதாங்க.

இப்ப பிழைச்சுட்டான்டா..

பிழைச்சுட்டான்னா? அவ்வளவு சீரியசா இருந்தானா?

விசம் தடவிய கத்தியா? திகைப்புடன் ஆதேஷ் கேட்க, மாமா..யாருக்கு என்னாச்சு? என்று ஜானு கேட்டுக் கொண்டே அவனறைக்கு வந்தாள்.

ஜானு..என்று அழைத்து, அண்ணா..அப்புறம் பேசுறேன் என்று போனை வைத்தான்.

அகிலிடம் ஜானுவும் துருவனும் இன்னும் ப்ரெண்ட்ஸ் தான? அர்ஜூன் கேட்டான்.

ஏன்டா, முதல்ல இருந்ததை விட அதிக நெருக்கமாக ப்ரெண்ட்ஸ் தான்.

சுத்தம்..போடா என்று அர்ஜூன் தலையில் கையை வைத்து, ஜானு இப்பொழுதும் அழப் போறா? என்ற அர்ஜூன் அகில்..நீங்க அந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்துக்கணுமா?

கண்டிப்பா..என்றான் அகில்.

ஏன்டா, இந்த நிலையிலும் இது தேவை தானா? பவி கேட்க,

எனக்கு அது மட்டும் தான் முக்கியம். ஊருக்கு போக தான கேட்கிறாய்? நீங்க இன்றே கூட கிளம்புங்க. தனியா கூட நான் முடிச்சுட்டு வந்துக்கிறேன் அகில் கூற,

இப்ப அவன் பிரச்சனை செய்ய மாட்டேன் என்றாலும் என்னால் கொலைகாரனையெல்லாம் நம்ப முடியாது. முடிச்சுட்டே போகலாம் அர்ஜூன் கூறினான்.

ஜானுவிடம் ஆதேஷ் துருவனை பற்றி கூற, மாமா.. துருவனுக்கா? என்று பதறினாள்.

ஒன்றுமில்லை. அவன் பிழைச்சுட்டான்.

பிழைச்சுட்டானா? சாதாரணமா பேசுறீங்க? சினத்துடன் கேட்டாள்.

ஜானு எனக்கும் கஷ்டமா தான் இருக்கு. அவனும் நானும் நல்லா பழகி இருக்கோம். ஆனால் இப்ப போக முடியாது ஆதேஷ் கூற,

மாமா..சித்தி இறந்திருக்காங்க. என்னோட அம்மாவை நான் பார்த்து கூட நினைவில்லை. அவங்க இப்ப வீட்ல இருக்காங்க. இப்ப துருவன் ஹாஸ்பிட்டல்ல என்று அழுதாள்.

ஜானு..புரியுது..என்று ஆதேஷ் அவளை சமாதானப்படுத்த முயற்சித்தான்.

மாமா..போனை கொடுங்க என்று கேட்டாள்.

எதுக்கு ஜானு?

அண்ணாகிட்ட பேசணும்?

ஜானு பார்த்து பேசு. கோபப்படாத..மாமா..எந்த நிலையில இருக்காங்கன்னு தெரியல? சொல்லி போனை கொடுத்தாள்.

பிரதீப் துருவனை பார்க்க ஹாஸ்பிட்டலுக்குள் நுழைய, ஆதேஷ் போன் செய்வதை பார்த்து பின் நகர்ந்து வெளியே வந்து ஓரிடத்தில் அமர்ந்தான்.

ஜானு அவள் அண்ணனிடம், அங்க என்ன தான் நடக்குது? துருவன் இப்ப எப்படி இருக்கான்? என்று பல கேள்விகளை அடுக்கி விட்டு கடைசியில், நான் யாரோட பொண்ணுன்னு கேட்க, பிரதீப் அனைத்திற்கும் பதில் கூறிக் கொண்டே வந்திருப்பான். இவளது கடைசி கேள்வியில் நிறுத்தி,.. நிதானமாக..என்னோட அம்மா தான் உனக்கும் அம்மா. என்னோட அப்பா தான் உனக்கும் அப்பா.

ஆம் ஜானுவின் அப்பாவும் வெற்றியே. அவர் நண்பர் பார்த்த சம்பவத்தில் பிறந்தவள் தான் ஜானு.

அவங்க மீனாட்சி- வெற்றி சக்கரவர்த்தி என்றான்.

அவள் போன் நழுவி விழ, போனை எடுத்து அண்ணா..என்ன சொன்ன?

அவரு சித்தப்பா தான?

இல்ல ஜானும்மா. அவரு தான் நம்மை பெற்ற தகப்பன் என்று அந்த கதை முழுவதையும் சொல்லி முடித்தான். ஜானு கண்ணீருடன் குழப்பமானாள்.

அண்ணா..நாம நினைச்ச மாதிரி அந்த ஆள் நம்ம அப்பா இல்லையா?

இல்லம்மா..

நீ என்ன சொல்றண்ணா? ரெண்டு பேரையும் ஏத்துக்கிட்டியா? ஜானு கேட்க, ஒரு நிமிடம் அமைதியானவன். ஆமாம்மா. எல்லார் மேலையும் தப்பு இருக்கு. ஆனால் இதுல அதிக கஷ்டத்தை அனுபவிச்சது நம்ம அம்மா, அப்பாவான மீனாட்சி வெற்றி இருவரும். இப்பொழுது கூட ஊரார் பதிலுக்காகவும், நமக்காகவும் காத்திருக்காங்க. நான் அவரை எல்லார் முன்னும் ஏத்துக்கிட்டேன்.

அண்ணா..என்னால முடியாது. அவர் கண்ணு முன்னாடி தான கஷ்டப்பட்ட. ஏதாவது உதவி செஞ்சிருக்காரா? ஜானு பொரிந்து தள்ளினாள்.

ஆமா ஜானு. நமக்கு தெரியாம செஞ்சிருக்கார். அந்த வயதில் யாரும் வேலைக்கு எடுக்க மாட்டாங்க. ஆனால் இன்று வரை அது எனக்கு தோன்றியதில்லை. நீ காணாமல் போன போது நானும் அவர் பதட்டத்தை பார்த்தேன். நடிக்கிறார்ன்னு நினைச்சுட்டேன். ஆனால் அவர் தான் உன்னை தேடி தந்தார். வளர்ந்த பின் நான் உனக்காக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டேன். அவர் தான் நமக்கு தெரியாமலே என்னை படிக்க வச்சிருக்கார். அந்த ஸ்பான்ஸ்ர் தயாள் அங்கிள் இல்ல ஜானும்மா..அது நம் அப்பா தான் என்றான் கண்கலங்கியவாறு.

ஜானு..என்னை மன்னுச்சிருடா. என்னால உன்னை சரியா பார்த்துக்க முடியல என்று பிரதீப் அழுதான்.

அண்ணா..அழுறியா? என்று ஜானுவும் அழுதாள். என்னை தான் தாக்க வந்தான் ஒருவன். ஆனால் என்னை காப்பாத்துறேன் என்று சிலர் முயன்றதில் துருவனுக்கு கையில் விசமுள்ள கத்தி கீறி விட்டது என்று அழுதான். அதான் இப்ப ஹாஸ்பிட்டல்ல இருக்கான்.

விசமா..நம்ம ஊர்லயா?

போதை மருந்தே பயன்படுத்துறாங்க. விசம் எம்மாத்திரம்? என்றான் பிரதீப்.

அண்ணா..அங்க வேற ஆளுங்க உள்ள வந்துருக்கணும் ஜானு கூற, ஆமாம்மா..இருக்காணுக அந்த கொலைகாரனோட ஆட்கள் தான் செய்தது.

ஆனால் உன்னை எதுக்கு?

என்னிடமும் சில ஆதாரங்கள் உள்ளது என்று அவன் கூறிக் கொண்டிருக்க, துருவனை பார்த்து விட்டு நித்தியிடம் சைலேஷ் போன் பேசி வருவதாக வெளியே வந்தான். அவர் அறையில் இருந்து கொண்டே அவனை கவனித்துக் கொண்டிருந்த கேசவன் சைலேஷிற்கு எதிரே சில தொலைவில் அவனை ஒருவன் பார்ப்பதை பார்த்து விட்டு சைலேஷை பார்த்தார். பிரதீப் போனையும் சைலேஷையும் பார்த்துக் கொண்டிருந்தான்.

தூரத்தில் இருந்தவன் பேண்டில் கூரான பொருள் போல் ஏதோ தெரிய எழுந்து வேகமாக கீழிறங்கினார். அவர் மூன்றாவது மாடியில் இருக்கிறார். போனில் நித்தியை அழைத்து, மாப்பிள்ளையை வெளியே போக வேண்டாம்ன்னு சொல்லு..என்றார்.

அப்பா..கவின் இங்க இல்லை என்று சொன்ன நித்திக்கு சைலேஷ் சொல்லி விட்டு தானே சென்றிருப்பான். அவள் என்னாச்சுப்பா? என்று கேட்டுக் கொண்டே நித்தி வெளியே வர, தாரிகா அம்மா அவள் பதட்டத்தை பார்த்து அவள் பின் செல்ல மற்றவர்களும் சென்றனர்.

அவருக்கு நேராக ஒருவன் இருக்கிறான். அவனிடம் போக விடாதே.. என்றார். அதே நேரத்தில் பிரதீப் சைலேஷை பார்த்து எழுந்தான். சைலேஷ் போன் பேசிக் கொண்டே செல்ல..பிரதீப் ஜானுவிடம் பேசிக் கொண்டே அவனருகே வந்தான்.

நில்லுங்க…என்று நித்தி கத்த..அவள் சத்தத்தில் சைலேஷ் அவளை திரும்பி பார்க்க, அவனோ சைலேஷ் அருகே லேசான வளைவுடன் கூடிய கூரான கத்தி அவன் மீது படுவதற்குள் பிரதீப் அவனை பார்த்து அவனை தள்ளி விட்டான்.

சைலேஷ் பிரதீப்பை பார்க்க நித்தி, தாரிகா, அவள் அம்மா..வேலுவின் நண்பர்கள் வந்தனர். சைலேஷ் போனில் கைரவும், பிரதீப் போனில் ஜானுவும் அண்ணா..அண்ணா.. என்று கத்திக் கொண்டிருந்தனர்.

கீழே விழுந்தவன் துடிப்புடனும் வெறியுடனும் எழுந்தான். வேலுவின் நண்பர்கள் அவனை பிடிக்க முயல, ஒருவன் மட்டும் அவன் கத்தியை தட்டி விட்டான். அது கீழே விழுந்தது. கேசவன் கீழே வந்து பார்த்தார். வேலுவின் நண்பர்கள் கொலை செய்ய வந்தவனை பிடித்தார்கள்.

அதனால் பிரதீப்பும் சைலேஷும் ஒருவரை ஒருவர் பார்க்க, நித்தி கைகள் நடுங்க அழுது கொண்டே சைலேஷை அணைத்தாள்.

நித்தி..ஒன்றுமில்லைம்மா என்றான். பிடித்த பசங்களை தள்ளி விட்டு கத்தியை எடுத்த கொலை செய்ய வந்தவன் சைலேஷை குத்த வந்தான். நித்தி அதை பார்த்து அவனை அணைத்துக் கொண்டே அவனை சுற்றி அவள் வந்து நின்றாள். சைலேஷ் வேகமாக நித்தியை விடாது அவனும் ஒரு சுற்றி நிற்க கத்தி பாய்ந்தது.

நித்தி பயத்துடன் கொலை செய்ய வந்தவன் கையின் மணிக்கட்டை அழுத்தினாள். அவன் தடுமாற, அதே இடத்தில் அவளது நகத்தை வைத்து அழுத்த அவனோ கத்தினான். அவன் கையிலிருந்த கத்தி கீழே விழுந்தது.

சைலேஷ் நகர்ந்து நித்தியை பார்க்க, கேசவன் பதறி அவர்களிடம் வந்தாள்.

நித்தி பயந்து அவள் அப்பாவை அணைத்துக் கொண்டாள்.

கேசவன் அவரை பார்த்து “தேங்க்ஸ் மாப்பிள்ள” என்றார். நித்தியும் சைலேஷும் அவரை பார்த்தனர்.

சைலேஷ் அவரிடம், எதுக்கு அங்கிள் “தேங்க்ஸ்”? உங்க பொண்ணு தான் என்னை காப்பாத்தி இருக்கா..அவன் கூற, அவனை இடித்து மாமான்னு சொல்லுங்க என்றாள் நித்தி.

நித்தி நிமிர்ந்து அவனை பார்க்க, பிரதீப்பும் வேலுவின் நண்பர்களும் கொலை செய்ய வந்தவனை கட்டி வைத்திருந்தனர். பிரதீப் கண்கள் அனைவரையும் ஸ்கேன் செய்ய..சைலேஷ் அவனை பார்த்தான்.

எல்லாரும் உள்ள போங்க. நான் சொல்றவரை வெளிய வராதீங்க என்று சொல்ல, சைலேஷ் நித்தியிடம்..நான் முதல் நாள் சந்தித்த நினைவு தான் வருது. ஸ்ரீக்காக ஓடி வந்தேல..என்றான் சிரிப்புடன்.

மாமா..அவள வெளிய விடாதீங்க. நல்ல வேலை கத்திய பிடிக்கல என்றான்.

அது விசக்கத்தியா தான் இருக்கும்ன்னு முதலிலே யூகித்தேன் நித்தி கூற, சரி..உள்ள போங்க என்று போனை தேடினான். அது கீழே கிடக்க, எடுத்து கைரவிடம்..யாரும் வீட்டுக்குள்ள வராம பார்த்துக்கோ. என்னோட செக்கரட்டரி வருவான். அவனையும் செக் பண்ணி பைல்லை மட்டும் வாங்கி விட்டு அப்பொழுதே அனுப்பி விடு. நான் யாரையும் நம்ப தயாராக இல்லை.

கேரி..இருக்கானா? அவனிடம் கொடு என்று லேப்பில் சைலேஷ் சில வேலைகளை கூறி செய்யச் சொன்னான். அவர்கள் பேசிய பின் கைரவிடம் அனிகா பற்றி கேட்டான். அவள் விழித்து விட்டாள். மெதுவாக தான் பேசுகிறாள் என்றான்.

சரி..கவனமா இரு. தாத்தாவிடம் இப்ப நடந்ததை கூறாதே! சீக்கிரம் வந்து விடுவேன் என்று போனை வைத்தான். மறுபடியும் அவன் போன் அலற, கேசவன் அவனை பார்த்தார்.

சைலேஷ் யோசனையோடு போனை எடுத்தான். செயலாளர் அழைத்து சைலேஷை வரச் சொன்னார்.

சார். நான் வெளியூருக்கு என்னோட கிளைண்டை மீட் பண்ண வந்திருக்கேன்.

கிளைண்டா என்று நித்தி அவள் அப்பாவை பார்த்து விட்டு, அவரோட கிளைண்ட இவனாக இருக்குமோ? என்று கிண்டல் செய்தாள்.

திரும்பி புருவம் சுருக்கி அவளை பார்த்து விட்டு, என்ன விசயமென்று கேட்டார்?

அகிலுக்கு அடிபட்டது அவனோட மியூசிக் ஆசிரியருக்கு தெரிந்திருக்கும் போல. அகிலிடம் போனில் பேசிய போது அவன் கண்டிப்பாக கலந்து கொள்வேன்னு சொல்லி இருப்பான். சைலேஷும் அவர்களிடம் நன்றாக பேசி பார்த்திருப்பான். இவன் மூலம் அகிலை நிறுத்துவோம் என்று அவனை சந்திக்க வந்திருப்பார்.

அவனில்லாது போகவே செயலாளரிடம் பேசி இருக்கிறார். செயலாளர் அதை கூற, அவர் அங்க தான் இருக்காரா சார்?

வெளிய காத்திருப்போர் அறையில காத்திருக்கார்.

சார், அவரிடம் நான் பேசிக்கிறேன். நானே அவருக்கு கால் பண்றேன்னு சொல்லுங்க. அவர் நம்பரை வாங்கி அனுப்புங்க. வேறெதுவும் இருக்கா?

மீட்டிங் நாளைக்கு வாங்க சார். ஏற்கனவே உங்கள கீழ இறக்க முயன்று கொண்டிருக்கிறார்கள். வந்துருவீங்கல்ல சார்.

கண்டிப்பா வந்துருவேன் என்று போனை வைத்து விட்டு, நித்தியிடம் திரும்பி, இந்த அகிலுக்கு என்ன தான் பிரச்சனை?

உங்க சார் கிட்ட கண்டிப்பா நீங்க நிகழ்ச்சியில கலந்துப்பீங்கன்னு சொல்லி இருக்கான். இதுக்கெல்லாம் எனக்கு போன் போடுறானுக? இந்த நிலையில் அவனுக்கு உங்க பாட்டு, ஆட்டம் முக்கியமா? கேட்டான்.

நானா சொன்னேன்? அவன் கிட்ட கேளுங்க.

இங்க உயிர் போற சம்பவமே நடக்குது..என்று சினத்துடன் சைலேஷ் கேட்க, அது அவனோட கனவு, ஆசை..ஆன்ட்டி பேச்சை கூட கேட்காமல் அங்கே படிக்க வந்ததே இதுக்காக தான்.

நீயுமா?

நாங்க அவனுக்காக வந்தோம்.

அவன் ஒரு சின்ன மேடையா இருந்தாலே விட மாட்டான். எங்க கல்லூரியில எங்களுக்கும் தனி பேம்மே இருக்கு. விடுவானா? அவன்?

உங்க கல்லூரியா? அவன் கேட்க, ஏன் இல்லையா? கேட்டாள் அவள்.

உங்க சார், உங்களுக்கு எதிரான போட்டியாளர் பக்கம் சென்று விட்டார் போல. என்னிடம் போல் அவரிடமும் கோபித்துக் கொள்வாயா?

அவர் யார் பக்கம் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் அகிலை மறுக்க வைக்க முடியாது. எப்படியும் நினைத்ததை செய்தே தீருவான். பிடிவாதக்காரன் நித்தி கூற,

சைலேஷ் அவங்க சாருக்கு போன் செய்து..அவன் தான் முயற்சிக்கிறானே? பண்ணட்டும். ஏதும் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்கிறேன். நீங்க அவன் நல்லா பண்ணுவான்னு நினைக்கலையா? சைலேஷ் கேட்க,

சார், அவன் நல்லா பண்ணுவான். ஆனால் விதுனன் டீம் பிரச்சனை பண்ணுவாங்களே?

நான் பார்த்துக்கிறேன் சார்..சைலேஷ் கூற, நித்தி சைலேஷ் உள்ளங்கையை விரித்து, எங்களுக்கு எதிரான டீம் பிரச்சனை பண்ண மாட்டாங்கன்னு சொல்லிடுங்க என்று அவளது விரலால் எழுதி காட்ட முதலில் அவனுக்கு புரியவில்லை. அவள் மீண்டும் எழுதி காட்ட..அவன் பேசி விட்டு போனை வைத்தான்.

நல்ல வேலை நீ பேசவில்லை. நீ பேசி இருந்தா இங்கே உன் அருகே இருப்பது தெரிந்தால் பிரச்சனையாகி விடும் என்றான் சைலேஷ்.

அப்படியா? சார்..அப்ப நீங்க யாரிடமும் சொல்ல கூடாதுன்னு நினைக்கிறீங்களா? நித்தி முறைத்துக் கொண்டே கேட்டாள்.

சொல்லணும்ன்னா. நான் இப்பவே தயார். திருமணத்திற்கு கூட தயாராக இருக்கிறேன். நீ எப்படி? சைலேஷ் கேட்டுக் கொண்டே கேசவனை பார்த்தான்.

சரி தான மாமா?

ஹாம்..என்றவர் இல்லை. அதற்கு நேரம் இருக்கு என்று நித்தியை பார்த்தார். அவளும் அவரை பார்த்தாள்.

அப்புறம் ஏன் அப்படி சொன்னீங்க மாப்பிள்ள? அவர் கேட்க, அது உங்க பொண்ணுக்கே தெரியும் என்று பிரதீப்பை பார்த்தான்.

போலீஸ் அவ்விடம் வந்து அவனை இழுத்து செல்ல, நான் இங்கேயே இருக்கேன். நீங்க போலீஸுடன் போங்க..என்று வேலு நண்பர்களை அனுப்பி விட்டான்.

மாமா..அவள உள்ள கூட்டிட்டி போங்க என்று சைலேஷ் பிரதீப்பிடம் சென்று அவனை அணைத்தான்.

சைலேஷை பார்த்துக் கொண்டே அனைவரும் உள்ளே செல்ல, நித்தியும் தாரிகாவும் ஒன்று போல் நந்து…என்றனர்.

தாரிகாவும் நித்தியும் ஒருவரை ஒருவர் பார்த்து பிரதீப், சைலேஷிடம் வந்து நினைவு படுத்தினர்.

அவன் பத்திரமா தான் இருப்பான். கவின் தாத்தாவுடன் தான் இருந்தான். வேலுவிற்கு போன் செய்து பிரதீப் கேட்டான்.

தெரியலையே அண்ணா. நான் வெளிய தான் இருக்கேன். இருங்க நான் தாத்தாவிடம் பேசிட்டு சொல்றேன் என்று போனை வைத்து மீண்டும் போன் செய்து, எங்க வீட்ல தான் இருக்கான் என்று அவன் கூறவும் தான் அவர்களுக்கு மூச்சே வந்தது.

நித்தியிடம் அவள் அப்பா நந்துவை பற்றி கேட்டு விட்டு சைலேஷை பற்றி கேட்டு அறிந்து கொண்டார். அவள் அவன் வீட்டிற்கு சென்றது வரை நடந்த அனைத்தையும் கூறினாள்.

பின் அப்பா..அவரு உங்களுக்கு ஓ.கே வா?

சரி தான்ம்மா. நல்ல புள்ளையா தான் இருக்கார். ஆனால் அவர் குடும்பத்தை பற்றி நேரில் பார்த்து தான் முழுதாக ஏற்றுக் கொள்ளணும்.

ஆனா அவரை மாப்பிள்ளைன்னு கூப்பிடுறீங்க?

வசதியான பையனா? அதான் கொஞ்சம் தயக்கமா இருக்கும்மா. எனக்கு உன் விருப்பத்தை விட பெரியது ஏதுமில்லைம்மா. அதை விட பையனும் உன்னை நல்லா பார்த்துப்பான்னு நம்பிக்கை வந்திருச்சும்மா. ஆனால் வசதி தான் என்று சிந்தித்தார்.

சைலேஷிற்கு அர்ஜூன் போன் செய்ய, இருவரும் உள்ளே வந்தனர். சொல்லு அர்ஜூன்? சைலேஷ் கேட்க, நித்தி மூன்றாம் மாடியிலிருந்து கை தட்ட, அனைவரும் அவளை பார்த்தனர். சைலேஷ் பேசிக் கொண்டே படி ஏறினான்.

அர்ஜூன் அந்த கொலைகாரன் பேசியதையும், இவன் பேசியதையும் சொல்ல,

உனக்கு என்ன ஆச்சு அர்ஜூன்? என்று கேட்டபடியே உள்ளே நுழைந்தான்.

அண்ணா..வேற வழியில்லை.

வழியில்லைன்னா. ஸ்ரீயை பணயம் வைக்க போறியா? என்று சினத்துடன் அவன் கேட்க, கேசவனும் நித்தியும் அதிர்ந்து எழுந்தனர்.

என்ன சொன்னீங்க? நித்தி கேட்க, அவன் கேசவனை பார்த்து பேச்சை நிறுத்தி கவனித்தான். சாப்பாடு எடுத்து வைத்திருந்தனர். அப்பாவும் மகளும் சைலேஷிற்கு. பார்த்து விட்டு கொஞ்சம் அமைதியா இரு நித்தி..சைலேஷ் சொல்ல,

சார்..நான் அவளை ஒப்படைப்பதாக தான் கூறினேன். ஆனால் ஸ்ரீயால் அவனே பிடிபடணும். அவனிடம் நேரம் கேட்டிருக்கேன். பார்த்துக்கலாம் சார். ரிஸ்க் எடுத்தால் தான் பிரச்சனை முடியும்.

அர்ஜூன்..ஆனால் இது சரியா படல.

நீங்க ஊர்லயா இருக்கீங்க? அப்படியே தீனா அண்ணா வீட்டுக்கு போயிட்டு வாங்க. அங்க அவங்க அம்மா இறந்து என்று பேச ஆரம்பிக்க, போனை வாங்கிய கேசவன்,

அர்ஜூன்..என்ன பண்றீங்கடா? எதையும் சொல்லியே செய்றதில்லையா? ஸ்ரீயை என்ன பண்ண போறீங்க? நானும் அனைத்தையும் பார்த்தேன். அவன் யார்? ஏதாவது தெரிஞ்சா சொல்லு..கேட்டார்.

அங்கிள்..நான் ஊருக்கு வந்து எல்லாரிடமும் எல்லாவற்றையும் சொல்கிறேன். ரெண்டே நாள் அங்கிள். நம்ம ஊரை வைத்து பேசுகிறான். நம்ம எல்லாரும் சேர்ந்து செயல்பட்டால் நல்லபடியாக முடிக்கலாம்.

நித்தி அவனிடம், அவளை பத்திரமா பார்த்துக்கோ..

நித்தி..எனக்கு அவனை பார்த்தால் கூட பயமா இல்லை. ஸ்ரீ செய்றத நினைச்சா தான் பயமா இருக்கு.

என்ன சொல்ற அர்ஜூன்? அவள் அந்த போதை மாத்திரை பற்றி கூற, கேசவன் அதை பற்றி இன்னும் சில விவரத்தை கொடுத்தார்.

அங்கிள்..நீங்க சார் போன்ல..திகைத்து..கிரீன் சிக்னல் கொடுத்துட்டீங்களா?

இன்னும் முழுசா கொடுக்கல. எல்லாரையும் சந்தித்த பின் தான் சொல்ல நினைக்கிறேன்.

போனை பிடுங்கிய நித்தி, டேய் நீ என்ன பண்ற? அக்காவுக்கு சாமி கும்பிட போகலையா? நித்தி கேட்க, அர்ஜூனிடம் பதிலில்லை.

அக்காவா? கேசவன் கேட்க, போனை வாங்கிய சைலேஷ்..நீ தான் எல்லாத்தையும் முன்னிருந்து பண்ணனும். அகிலுடன் இருக்கிறாயா?

ம்ம்..என்றான்.

சீக்கிரம் கிளம்பு. பாப்பா உன்னை தேடப் போறா? என்றவுடன், அண்ணா ஊர்ல இருந்து கிளம்பினா..கொஞ்ச நேரத்திலயே கிளம்புங்க. அவன் தொந்தரவு செய்ய மாட்டேன்னு சொன்னான். ஆனாலும் இருட்டும் முன் வருவது நல்லது அர்ஜூன் கூற,

ஆமா..அர்ஜூன் சீக்கிரம் கிளம்பணும்ன்னு சொல்லி விட்டு, நீ சீக்கிரம் கிளம்பு என்று போனை வைத்தான் சைலேஷ். நித்தி வினிதாவை பற்றி சொல்ல..வெற்றி, மீனாட்சி பற்றிய அனைத்தையும் சொல்லி முடித்தார் கேசவன்.

கீழே சக்கரை சோகமாக அமர்ந்திருக்க, பிரதீப் அவனிடம் பேசினான். அண்ணாவை இப்படி பார்ப்பேன்னு நினைக்கவேயில்லை என்று அவன் அழுதான். அவன் அம்மா..அவனை தேடி அங்கே வந்து பிரதீப்பிடமும் ரதியிடமும் பேசி விட்டு சென்றார்.

 

Advertisement