Advertisement

அத்தியாயம் 69

பிரதீப் சென்ற அறையில் பின் வந்த துகிராவிடம், நீ அங்கேயே நில்லு..யாரும் எதுவும் சொன்னால் என்னிடம் சொல்ல முடியாதா? அவன் கேட்டுக் கொண்டே அவளை பார்த்து சிரித்தான்.

அவன் நில்லு..என்றவுடன் ஒரு காலை தூக்கிக் கொண்டே கதவை பிடித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

துகி..அங்க பாரு பல்லி இருக்கு.

பல்லியா? என்று ஓடி வந்து அவனை அணைத்து விட்டு, வெளிச்சுவற்றை பார்த்தாள். ஏதும் இல்லை.

எங்கே ஓடிருச்சா?

அதுவா..என்று அவளை இறுக்கினான்.

விடுங்க..வலிக்குது.

என்னை விட்டு போகப் போறேல?

உங்க பக்கத்துல இருக்கணும்னா. என் கழுத்துல தாலிய கட்டுங்க.

கட்டலாம். ஆனா நீ படிக்கணுமே?

கல்யாணம் பண்ணிட்டு படிக்கலாமே?

அது கஷ்டமே. நான் உனக்கு படிக்க நேரமே தர மாட்டேனே?

என்ன?

உனக்கு புரியலையா? என்று அவளை விடுவிடுத்து பார்த்தான்.

அவன் பார்வையில் புரிந்த அவன் பேச்சில் வெட்கமுடன்.. தலையை தாழ்த்தினாள்.

சரி, எனக்கு ஒரு கிஸ் கொடுத்துட்டு போ.

முடியாது..

முடியாதா என்று அவன் அவளை தூக்க, சரி தாரேன் இறக்கி விடுங்க என்று அவனை பார்த்தாள்.

என்னாச்சு?

எனக்கு பயமா இருக்கு? இன்று உங்களை தான் கொல்ல வந்தாங்களாமே?  என்று அழுதாள் துகிரா.

இல்லம்மா. அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு ஏதும் ஆகாது என்று அவள் கண்ணீரை துடைத்து, அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

உங்களுக்கு ஏதாவது ஆனால் நானும் என்று அவள் பேச, அவன் கையை வைத்து அவள் வாயை அடைத்தான். இனி ரொம்ப கவனமா இருப்பேன் என்றான். இருவரும் சமாதானமானார்கள்.

அர்ஜூன், சாமான் எல்லாம் வந்து விட்டது. நீ பாப்பாவை பார்த்துக்கோ என்று ஸ்ரீ அனுவை அவனிடம் கொடுத்து விட்டு சமையற்கட்டிற்குள் சென்று பார்த்தாள். ஒவ்வொருவரும் ஒவ்வோர் வேலையா இருக்க, அர்ஜூன் முன்பே அனு சொந்தக்காரர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பான்.

இப்பொழுது கவின் அவனை அழைக்க, அக்கா கல்யாணத்துல பிரச்சனை இல்லையே?

எல்லாமே மாறிப் போச்சு? அத விடு. அக்கா நல்லா இருக்கா. ஆனால் துருவன் ரொம்ப சீரியசா இருக்கான்.

என்ன? துருவனா?

ஆமாம்டா. அகிலிடம் இன்னும் சொல்லல. நீயே சொல்லேன்டா

அவனுக்கு எப்படி? என்ன ஆச்சு? அர்ஜூன் கேட்டான்.

அர்ஜூனிடம் கவின் கூற, கூடவே இருந்து பார்த்துக்கோடா என்று அமர்ந்தான்.

அவனுக்கு இன்னொரு போன் கால் வந்தது.

என்னப்பா அர்ஜூன்? உங்க ஆள் ஒருவன் சாகப் போறான் போல. நான் அந்த பிரதீப்பை தான் குறி வைத்தேன். ஆனால் பாவம் சின்ன பையன் மாட்டிக்கிட்டான்.

ஏய்…என்று கத்திய அர்ஜூன்..இதோட நிறுத்திக்கோ. இல்ல..

இல்லைன்னா என்ன செய்வ? உன்னால என்ன செய்ய முடியும்?

வேண்டாம். என்னை கோபப்படுத்தாதே அர்ஜூன் சத்தமாக பேச, அனு பயந்து விலகி நின்றாள். மற்றவர்கள் வேலையை அப்படியே போட்டு அர்ஜூனை பார்த்தனர்.

அனு பயப்படுவதை பார்த்து ஸ்ரீ ஓடி வந்து அவளை தூக்கினாள். அர்ஜூன் அவனா? நிவாஸ் கேட்க,

அர்ஜூன் கண்கள் கலங்கி இருப்பதை பார்த்து, அர்ஜூன் என்று ஸ்ரீ அருகே வர, கையை உயர்த்தி அவளை நிறுத்தி விட்டு,

துருவனுக்கு மட்டும் ஏதாவது ஆச்சு? நீ செத்த..

அட, அவன் மேல உனக்கு அவ்வளவு பாசமா? மருமகனே இதுக்கே கோபப்பட்டால் என்ன செய்வது? என்னோட அடுத்த டார்கெட் நாளை..யாருன்னு நான் சொல்லல. நீ கண்டு பிடிச்சுக்கோ..

ஸ்ரீ அனுவை இன்பாவிடம் கொடுத்து விட்டு, அவள் அறைக்கு சென்று போனை எடுத்து வந்தாள். அதை ஆன் செய்ய..அதில் அந்த கொலைகாரன் அருகே இருப்பதை காட்டியது.

அர்ஜூனை பார்த்தாள். அவன் கோபமாக இருக்க, இவனிடம் பேச முடியாது என்று ஆளுயர்ந்த கண்ணாடி ஒன்றில் அவள் மார்க்கரை எடுத்து எழுதினாள்.

அந்த கொலைகாரன் நம் வீட்டின் பக்கம் தான் இருக்கிறான். இதில் சரியாக காட்டும் என்று எழுத, அனைவரும் அதிர்ந்து ஸ்ரீயை பார்த்தனர். அர்ஜூன் மட்டும் அதை கவனிக்கவில்லை.

கொலைகாரனிடம் அவன் பேசிக் கொண்டிருக்க, அர்ஜூன் அவனருகே வந்து சுரண்டினாள். அவன் திட்டுவதற்குள் அவன் வாயை மூடி காட்டினாள். அவன் பார்த்து விட்டு ஸ்ரீயை பார்த்தான். கையிலிருந்த போனை கொடுத்தாள்.

உனக்கு யார் வேண்டும்?

அவன் ஸ்ரீயை கூற, அர்ஜூன் சிந்தித்தவாறு..சரி நான் ஸ்ரீயை அழைத்து வருகிறேன். ஆனால் எனக்கு நேரம் வேண்டும்.

எதுக்கு என்னை பிடிக்கவா?

இல்லை. நாங்க அவளுடன் நேரம் செலவழிக்க…

அர்ஜூன்..என்று தருணும் அபியும் சத்தமிட..இல்லைடா. நாம எல்லாரும் சாகுறதுக்கு ஸ்ரீயை அவனிடம் ஒப்படைத்து விடலாம் என்று பேசி கண்களை காட்ட,

அர்ஜூன் நீயே இப்படி செய்யலாமா? இன்பா கேட்க,.. மேம்..எனக்கு வேற வழியே தெரியல. அகில் தம்பி துருவன் இப்ப ஹாஸ்பிட்டலில் ரொம்ப சீரியசா இருக்கான். என்னால் எல்லாரையும் பாதுகாக்க முடியல.

என்னை மன்னிச்சிரு ஸ்ரீ..அர்ஜூன் கூறி விட்டு நிவாஸை பார்த்தான்.

உன்னால முடியாதுன்னா. நான் பார்த்துக்கிறேன் நிவாஸ் கூறி விட்டு, ஸ்ரீயை என்னால் யாரிடமும் விடமுடியாது.

இல்ல..விட்டு தான் ஆகணும் அர்ஜூன் கூறிக் கொண்டே, ஓ.கே என்று சைகை செய்ய.

அர்ஜூன்..நீ என்ன சொல்ல வர்ற?

கண்டிப்பா ஸ்ரீயை நானே உன்னிடம் ஒப்படைக்கிறேன். அவளுடன் நானும் வருவேன். ஆனால் இரண்டு வாரங்கள் தேவை. அவளது பழைய நினைவை கொண்டு வந்த பின் நானே அழைத்து வருகிறேன் என்றான்.

நான் அவளை எங்க வீட்டுக்கே அழைத்து செல்கிறேன் நிவாஸ் கோபமாக கூற,

நிவி சும்மா இரு. அர்ஜூன் சொல்றது சரி தான். நான் செல்கிறேன் ஸ்ரீ கூறினாள்.

நானும் வருவேன் நிவாஸ் கூற, அதெல்லாம் முடியாது என்று ஸ்ரீ அவனிடம் வந்து, இதுக்கு மேல யாரும் இதுல தலையிட வேண்டாம்.

போதும். இதுக்கு மேல என்னால் யாரும் காயப்படுவதை பார்க்க முடியாது என்று தழுதழுத்த குரலில் பேச, இவ நடிக்கிறாளா? உண்மையிலே பேசுறாளா? இதயா இன்பாவிடம் கேட்க,

அம்மா..என்று அனு அழைத்தாள். அனைவரும் அவளை அதிர்ந்து பார்க்க..அர்ஜூன் இன்பாவிடம் உள்ளே போக சொல்லி கண்ணை காட்டினாள். ஸ்ரீயின் பார்வை மாறாமல் அனு மீது கண்ணீருடன் படிந்தது.

இன்பா அனுவிடம் மெதுவாக, அவ இப்ப வருவா? நாம உள்ளே போகலாம் என்று சென்றாள்.

அந்த குட்டிப்பொண்ணு அம்மான்னு கூப்பிடுறா?

அது..அவ அம்மா புகைப்படத்தை பார்த்து தான் சொல்றா?

சரி, நான் நேரம் தருகிறேன். ஏமாத்த நினைச்ச. உங்க எல்லாரையும் சேர்த்து ஊரையே அழிச்சிருவேன்.

ஏமாத்த மாட்டோம் என்று போனை துண்டித்து விட்டு கண்ணீருடன் அமர்ந்தான்.

ஏன் அர்ஜூன் ஸ்ரீயை விட்டுறதா சொன்ன?

துருவனுக்கு நடந்ததை அர்ஜூன் சொல்ல, அனைவரும் திகைத்தனர்.

இப்ப எப்படி இருக்கான்னு தெரிஞ்சதாடா? கேட்க ஸ்ரீயும் உறைந்து நின்றாள். அவளை கட்டுப்படுத்திக் கொண்டு இன்பா அனுவை அழைத்து சென்ற அறைக்கு சென்றாள்.

அகிலிடம் எப்படிடா சொல்றது? கவின் நம்மை சொல்ல சொல்லி இருக்கான் அர்ஜூன் புலம்ப, அவனுக்கு தெரிந்து தான் ஆக வேண்டும் என்று தருண் கூற,

அர்ஜூன் போன் செய்து அகிலிடம் கூற, என்னடா சொன்ன? துருவனையா? அவன் இப்ப நல்லா தான இருக்கான்.

அந்த கத்தியில விசம் தடவி இருந்ததாம். ரொம்ப சீரியசா இருக்கானாம்.

டேய்..என்னடா சாதாரணமா சொல்ற? அகில் கத்தினான். மாதவும் உள்ளே வந்தான். பவி..அவனிடம் என்ன? என்று பதட்டத்துடன் கேட்க,

என்னோட தம்பி சீரியசா இருக்கான்..என்று பவியிடம் கூறி அழுத அகில், எழுந்து வெளியே வர மாதவ் அவனை தடுத்தான்.

தேவ்..அங்கே வந்து, ஏன்பா தம்பி..என்ன பண்றீங்க? நாளைக்கு தான் நீங்க டிஸ்சார்ஞ் ஆகணும். இப்ப எதுக்கு வெளிய வந்தீங்க?

யோவ்..போயா..என்று அகில் அவனை நகர்த்தி விட்டு செல்ல மாதவ் அகிலை தடுத்தான். அவன் அழுது கொண்டே..என்னோட தம்பி பிழைப்பானான்னு இருக்கான். நான் இங்க இருந்து என்ன செய்ய?

அகிலிடம் போனை வாங்கி அர்ஜூன் அவன் ஹாஸ்பிட்டல விட்டு வெளிய வர பார்க்கிறான். அவனை அங்கேயே இருக்க சொல்லுங்க. நான் அவனை பார்க்க வருகிறேன். அவனிடம் நிறைய பேசணும் என்று பைக்கை எடுத்து அபி எல்லாரையும் பார்த்துக்கோ. நான் வந்துடுவேன் என்று கிளம்பினான் அர்ஜூன்.

தனியே அமர்ந்திருந்த துளசியிடம் ரதி வந்து, அவள் கொடுத்த பிரேஸ்லெட்டை அவளிடம் கொடுத்து நீயே அவனிடம் அவன் எழுந்த பின் கொடுத்து விடு என்று அவளிடம் கொடுத்து விட்டு அமர்ந்து கொண்டார்.

துளசிக்கு மேலும் கஷ்டமானது. அவளுக்கு அவளாகவே இதுவும் கடந்து போகும் துளசி என்று சொல்லிக் கொண்டாள்.

கவின் அம்மாவிற்கு அழைப்பு விடுத்தான் வேலு. கவினையும் அழைத்து வரச் சொல்லி. இருவரும் கிளம்ப, கவின் தாரிகாவை பார்த்தான். அவள் அமைதியாக அவனை பார்த்தாள்.

மருத்துவர் வெளியே வந்தனர். கேசவன் வர, ஓடிச் சென்று அவன் முன் நின்றனர் ரதியும் துளசியும். இருவரையும் பார்த்து அவர், கவலைப்படாதேம்மா..தம்பி பிழைச்சுட்டான். கத்தி ஆழமாக பட்டிருக்கு. அவன் கையை நகர்த்தவே வேண்டாம். இப்பொழுது எழ மாட்டான். நேரமாகும். அவன் எழுந்தவுடன் சொல்லுங்க. பெயின் அதிகமா தான் இருக்கும் என்றார்.

வெளியிருந்து அவனை அனைவரும் பார்க்க, நித்தி சைலேஷ் இருவரையும் பார்த்து விட்டு அவர் முன் சென்றார். அவர் பின் ஓடிய துளசி அறைக்குள் சென்று பார்க்கலாமா? கேட்டாள்.

தொந்தரவு செய்யாம பாருங்க என்றார் அவர். அது ரதிக்கும் கேட்டது. ரதி முதலில் உள்ளே சென்றார். செவிலியர் ஒருவர் உள்ளே இருந்தார். அவர் வெளியே வந்ததும் துளசி உள்ளே சென்றாள். கண்ணீருடன் வாயில் கையை வைத்து சத்தமின்றி அழுதாள். பின் கண்ணீரை துடைத்து விட்டு அவனுடைய அவனது இந்நிலையிலே மறுகையில் பிரேஸ்லெட்டை போட்டு விட்டு அவன் கையில் முத்தமிட்டு சில நிமிடங்கள் அங்கேயே நின்றாள். செவிலியர் அவளையே பார்த்துக் கொண்டிருக்க வெளியே வந்து ரதியை பார்த்து விட்டு நித்தியிடம் வந்தாள்.

அக்கா..நான் கிளம்புகிறேன். நீங்க அவங்க கூட இருங்க..என்றாள்.

என்னால இருக்க முடியுமான்னு தெரியல..என்று கூற..சரிக்கா..நீங்க கிளம்புன்னா..அத்தைய இங்க வரச்சொல்லுங்க.

ஹூ..? நித்தி கேட்க, அபி மாமாவோட அம்மாவை என்றாள்.

சரி..என்று நித்தி துளசி கையை பிடித்தாள். அக்கா எனக்கு ரொம்ப டயர்டா இருக்கு. நான் வீட்டுக்கு கிளம்பிகிறேன்னு அவள் கிளம்ப, வேலு நண்பர்களில் ஒருவன் அவளிடம் வந்து, நானும் உடன் வாரேன்ம்மா. பிரதீப் அண்ணா தான் உன்னை அழைத்து வரச்சொன்னார்.

இல்ல அண்ணா. நான் தனியா இருக்கணும். நான் நடந்தே போகிறேன்.

துளசி..நீ அவ்வளவு தூரம் நடக்க மாட்ட நித்தி கூற, நான் நடப்பேன் அக்கா என்று அவள் நகர, சக்கர அவள் முன் வந்து நின்று..

அக்கா..துரு அண்ணாவுக்கு ஒன்றுமில்லையே?

நீ போய் பாரு. சக்கர அவனை பார்த்துக்கோ..என்று அவள் செல்ல.

அக்கா..எங்க போற? இரு..அண்ணாவை பார்த்துட்டியா?

பார்த்துட்டேன். நீ பார்த்துக்கோ..என்று அவள் செல்ல, பிரதீப் ஆள் ஒருவனிடம் நீ அவ பின்னாடியே துணைக்கு போ என்று சைலேஷ் அனுப்பினான்.

நீங்க யாரு? அவன் கேட்க,

அண்ணா..இவரை பிரதீப் அண்ணாவுக்கு தெரியும் என்ற நித்தி, அவ அழுதான்னா அழட்டும். ஆனால் வீட்டுக்கு போகும் வரை அவள் எங்கு சென்றாலும் போய் பார்த்துக்கோங்க என்று இன்னொருவனையும் அழைத்து அனுப்பினாள். போகும் துளசியை பார்த்துக் கொண்டிருந்தார் ரதி.

அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டே வீட்டிற்கு வீறிட்டு நடந்தாள். பாதி தொலைவுக்கு மேல் சென்று அவள் கால் வலிக்க அமர்ந்தாள். முகத்தை மூடி அழுதாள். அம்மாவையும் இழந்து விட்டாள். துருவனை விடுவதாகவும் நினைத்து விட்டாள். மொத்த அழுகையும் அழ, அவர்களோ துளசியை பாவமாக பார்த்தனர்.

வீட்டிற்கு வந்தாள் துளசி. மறைந்து நின்றவர்களிடம் உங்கள் உதவிக்கு நன்றி அண்ணா. நான் அழுததை மட்டும் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றாள்.

சரிம்மா. நீ உள்ள போ..என்றனர் அவர்கள். வீட்டினுள் அனைவரும் அமர்ந்திருக்க, யாரையும் பார்க்காது அவள் அறைக்கு ஓடினாள்.

துளசி..நில்லு என்று துகிரா அழைக்க, அவள் திரும்பி பார்க்கவேயில்லை. தீனா எழுந்தான். பிரதீப் அவன் கையை பிடித்து நிறுத்தி..நான் பேசுகிறேன் என்று துளசி அறை கதவை தட்டினான்.

அப்பத்தாவிற்கு அப்பொழுது தான் துளசி அங்கு இல்லாததே நினைவிற்கு வந்தது.

பிரதீப் வந்துருக்கேன் துளசி. கதவை திற..

அண்ணா..நான் ஒய்வெடுக்கணும். என்னை விடுங்க என்றாள்.

துளசி, எனக்கு எல்லாமே தெரியும் என்று பிரதீப் கூற கதவை திறந்தாள்.

அண்ணா…என்று அழைக்க..அவன் உள்ளே சென்று அவள் படுக்கையில் அமர்ந்தான்.

அவளும் வந்து, அண்ணா..என்றாள்.

சில விசயங்கள் நமக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். ஆனால் அதை ஏத்துக்கிறதும் ஏத்துக்காததும் நம் மனசுல தான் இருக்கு. யார் என்ன சொல்றாங்கன்னு பார்க்காத? உன்னை பத்தி நீ என்ன நினைக்கிற? உன்னால முடியுமான்னு யோசி. அப்புறம் முடிவெடு என்றான்.

அண்ணா…முடியாதுன்னு தோணுச்சுன்னா.?

அதை முயற்சி செய்றதுல தப்பே இல்லை. அதே முயற்சி படிப்பிலும் இருக்கணும் என்றான்.

அண்ணா..என்று அவன் மடியில் முகத்தை புதைத்து அழுதாள். அண்ணா..கஷ்டமா இருக்கு.

அவன் அமைதியாக இருந்தான்.

அண்ணா..உனக்கு கஷ்டமா இருக்கா? உன்னால் தான் என்று நினைக்காத. அவனுக்கு ஒன்றுமில்லையாம்.

அதான் அழுறியா துளசி?

அண்ணா..அவன் பிழைச்சுட்டான். ஆனால் விழித்தால் பெயின் அதிகமா இருக்குமாம்.

நீ கவலைப்படாதேம்மா. உனக்காக தான் காத்திருந்தேன். நான் அவனை பார்த்துக்கிறேன் என்றான் பிரதீப்.

அண்ணா..நீ எதுக்கு? நீ காரணமில்லை.

எனக்கு தெரியும்மா. உனக்கு பதிலா நான் பார்த்துக்கிறேன்.

அண்ணா..எனக்காகவா?

ம்ம்..பார்த்துக்கிறேன். எல்லாரும் இவர்களை வெளியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தனர்.

அண்ணா..இன்னும் ஏதோ தப்பா இருக்கு. என்னை யாரோ கவனித்தது போல் இருந்தது.

என்னோட ஆட்கள்.

இல்லண்ணா.. அவங்களையும் தாண்டி யாரோ பார்க்குற மாதிரி இருந்துச்சு. யாருன்னு பாருண்ணா. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.

நாங்க பார்த்துக்கிறோம் என்று துளசி தலையை கோதினான்.

அண்ணா..அம்மா..தலைய சீவ மட்டும் தான் என் தலையவே தொடுவாங்க. அண்ணா..பக்கத்துல கூட வந்ததில்லை. இன்று தான் யாரோ என் பக்கத்துல இருக்கிற மாதிரி தெரியுது அவள் கூற கேட்டுக் கொண்டிருந்த அனைவர் கண்ணிலும் கண்ணீர்.

அப்பத்தா..தீனாவிடம்..புள்ள என்ன பேசுறா? அந்த பயனை அவ?

ஆமா. அவளுக்கு துருவனை பிடிச்சிருக்கு என்றான் தீனா. வெற்றி அவளை பார்த்துக் கொண்டிருக்க, மீனாட்சி அவர் தோளில் கையை வைத்தார். அனைவரும் செல்ல, துளசி தூங்கிய பின் வெளியே வந்த பிரதீப் துகிரா, புவியை பார்த்தான்.

அண்ணா..நான் வரலாமா? புவனா கேட்க, இல்லம்மா..நீ உன்னோட காலை பாரு. அவனுக்கு ஒன்றும் ஆகாது என்று சமாதானப்படுத்தி அவன் ஹாஸ்பிட்டல் கிளம்பினான்.

எல்லாரையும் வீட்டிற்கு அழைத்த வேலு ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தான். கவின் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தனர். வேலு, அவன் தாத்தா, கவின் அம்மா, அப்பா, அகல்யா, கவின் இருந்தனர்.

வர சொல்லிட்டு, என்னடா பேசாம இருக்க? தாத்தா கேட்க,

கல்யாணத்தை ஒரு மாசத்துக்கு பின் வைச்சுக்கலாமே? கேட்டான்.

அகல்யா அவனை முறைக்க, என்ன ஆச்சு மாப்பிள்ள? அகல்யா ஏதும் சொன்னாலா? கவின் அப்பா கேட்டார்.

அதெல்லாம் இல்லை மாமா.

அப்புறம் என்ன மாமா? என் மேல சந்தேகமா இருக்கா? நான் கல்யாணத்துக்கு பின் ஓடிருவேன்னு நினைக்கிறீங்களா?

செட் அப் அகல்யா..என்று அவளிடம் வந்து, நான் அப்படி நினைக்கிறதா இருந்தா முன்னே கல்யாணத்துக்கு ஒத்துகிட்டு இருந்திருக்க மாட்டேன் கோபப்பட்டவன் அவளருகே அமர்ந்து அவள் கையை பிடித்து,

இப்ப நம்ம ஊர்ல நிறைய ஆளுங்க வெளிய இருந்து வந்தது போல் தெரியுது. துருவனுக்கு நடந்தது போல் ஏதும் நடந்து விடக்கூடாது. இப்ப திருமணம் வச்சா..அந்த கூட்டத்துல.. யாருக்கு என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்று கவினை பார்த்து விட்டு, அதுமட்டுமல்ல..நம்ம கல்யாணத்துல வெற்றி அய்யா குடும்பமும், சிவராஜன் அங்கிள் குடும்பம் தருண் , புவனாவும் வர முடியாது. எனக்கு பிரதீப் அண்ணா..ரொம்ப முக்கியமானவங்க. தாத்தா அவங்களால தான் எல்லா பிரச்சனையையும் தாண்டி நம்ம வாழ்க்கையை ஓட்ட முடிஞ்சது. அதனால அவங்க வராம இருந்தா நல்லா இருக்காது என்று அனைவரையும் பார்த்து விட்டு அகல்யாவை பார்த்தான்.

நீ சொல்றது சரி தான். நம்ம ஊர் தலைவர் பதவி கொடுத்தும் மறுத்து அதற்கான அனைத்து பொறுப்பையும் ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறார் வெற்றி. அவர் இல்லாமல் எப்படி திருமணம் நடத்துறது?

கவின் அம்மாவும் அப்பாவும்..இந்த ஏற்பாட்டை என்ன செய்வது? கேட்டனர்.

நான் அவங்க கிட்ட பேசுறேன். பேசினதுல பாதி பணம் கொடுத்திடலாம். ஒரு மாதத்திற்கு பின்னும் அவங்கள அழைத்தே கல்யாணத்துக்கான அனைத்தையும் தயார் செய்யலாம் வேலு கூற,

மாமா..வேண்டாம் என்று தயங்கினான் கவின்.

ஏன் வேண்டாம்னு சொல்ற மச்சான்?

மாமா பாதி பணம் கூட இப்ப கொடுக்க கஷ்டம் தான். மீண்டும் அவங்களை அழைத்தால் பணம் அதிகம் தேவைப்படும். இப்பொழுது போல் அவங்க ஆடம்பரமாக தான் செய்வாங்க. அதுக்கும் பணம் வேண்டும் என்று  வருத்தமாக கவின் கூறினான்.

நான் என்னுடைய  திட்டத்தை மட்டும் தான் சொன்னேன். பணத்தை பற்றி பேசலை வேலு சொல்ல,

மாமா எப்படினாலும் பணம் இல்லாமல் எப்படி நடத்துவது?

திட்டம் ஓ.கே வானு மட்டும் சொன்னா போதும். பணத்தை பத்தி நீ கவலைப்பட வேண்டாம்.

மாமா..நீங்க அவ்வளவு பணம் ஏற்பாடு செய்யணுமே?

அகல்யாவும், அதெல்லாம் தேவையில்லை. கல்யாணம் எளிதாக கோவிலில் நடந்தா கூட போதும் என்றாள். இவர்கள் பேச, பெரியவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

உங்ககிட்ட யாரும் பணத்தை பத்தி கேட்கல. புரியுதா? அத நான் பார்த்துக்கிறேன் வேலு அழுத்தமுடன் கூற, கவின் அகல்யாவையும், அவன் பெற்றோரையும் பார்த்தான்.

இல்லப்பா. பாப்பா சொல்றது போல எளிதாக நடத்தினா போதும். நீங்க கூட சொன்னீங்களே?

இல்ல மாமா. இப்பவே கல்யாணம் என்பதால் தான் சொன்னேன். ஆனால் ஒரு மாதத்திற்கு பின் நடத்தினால் செய்யலாம் என்றான்.

ஒரு மாதத்தில் பணம் எப்படி கிடைக்கும்? கவின் அம்மா கேட்டார்.

அத்தை. நான் ரெடி பண்ணிடுவேன். ஏற்கனவே சேமிப்பு இருக்கு. அண்ணா கல்யாணமென்று பணம் கொடுத்தாங்க. அதுவும் இருக்கு. பிரச்சனை அத்தை.

சேமிப்பு இருந்தா வச்சுருங்க. தேவைப்படும் கவின் அம்மா கூற, உங்களுக்கு அவ ஒரே பொண்ணு. நானும் ஒரே பையன் தானே? வைச்சுக்கலாமே? என்று அவன் விருப்பப்படுவது போல் கூற, பெரியவர்கள் ஒத்துக் கொண்டனர்.

மாமா..நானும் என்னால் முடிந்த பணம் தருகிறேன். நீங்க வாங்கினால் ஒத்துக்கிறேன் கவின் கூற, வேலுவும் ஒத்துக் கொண்டான். ஆனால் அகல்யா அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். அவன் அவளை பார்த்து ஓ.கே வா? கேட்டான்.

அவளுக்கு அவள் ஒரு முறை தோழியுடம் படிக்கும் போது பேசியது நினைவிற்கு வந்தது. அகல்யா தான் ஆசைப்பட்டிருப்பாள். திருமணம் ஒரு முறை நடப்பது. அது விழாவை போல் ஜொலிக்கணும்ன்னு சொல்லியது நினைவு வந்து கண்கலங்க வேலுவை பார்த்து விட்டு, அவன் கையை பிடித்து தனியே இழுத்து சென்றாள்.

ஏய்..என்னடி பண்ற?

அம்மா..இரு பேசிட்டு வந்துருவோம் என்று செல்ல..கவின் அமைதியுடன் பணத்திற்கு என்ன வேலை செய்யலாம்? என்று சிந்தித்தான்.

அகல்யா வேலுவை தனியே அழைத்து வந்து, மாமா..நீங்க நான் பேசியதை கேட்டீங்களா?

அவளை பார்த்துக் கொண்டு, ம்ம்..என்றான்.

மாமா..அதை கூட நினைவில் வச்சிருக்கீங்களா? நானே மறந்து போயிட்டேன். அன்று திருமணம் பற்றிய செயல்திட்டத்திற்கான என்னுடைய கருத்து. அவ்வளவு தான்.

ம்ம்..அதான்..உன்னுடைய யோசனை தானே? அது தான் என் முடிவு என்றான்.

அது..சும்மா என்னுடைய கருத்து மட்டும் தான். ஆனால் நாம் நினைக்கும் எல்லாத்தையும் செயலாக்க நினைக்க கூடாது. எவ்வளவு செலவாகும்? என்று அவள் சிந்திக்க..

அவன் அவளை பார்த்து சிரித்துக் கொண்டு, நமக்காக செய்யாமல் யாருக்காக செய்யப் போகிறோம் என்றான்.

மாமா..கல்யாணம் மட்டும் செலவில்லை. அடுத்தடுத்து செலவாகும். கல்யாணத்துக்கே செலவு செய்தால் மற்றதுக்கு எங்கே செல்வது? கேட்க,

மற்றதா? அது என்ன? வேலு குறும்புடன் தெரியாதது போல் கேட்க,

அய்யய்யோ என்ன பேசிட்டோம்? என்று வெட்கத்துடன் வேகமாக திரும்பினாள்.

அவள் காதருகே வந்து, உனக்கு என்ன வேணும்? பாப்பாவா? தம்பியா? கேட்டான்.

அவள் முகத்தில் வெட்கத்துடன் புன்னகை ஜொலிக்க, அவளுக்கு காதலித்தவன் நினைவே இல்லாது போனது. எப்பொழுது வேலு பற்றிய அனைத்தையும் நினைக்க ஆரம்பித்தாலோ..அப்பொழுதே காதலன் வெளியே சென்று வேலு அவள் மனதில் குடி கொண்டு விட்டான். ஆனாலும் ஒரு ஓரத்தில் அவனது சில நினைவுகள் அவளுக்கு தெரியாமலே இருக்க தான் செய்தது. வேண்டுமென்றே..அவன் கடைசியாக கல்யாணத்தை நிறுத்திடலாம்ன்னு சொன்னதை நினைத்துக் கொண்டு தான் இருந்தாள். அதன் வலியால் தான் அந்த பள்ளம் முன் வந்தது. ஆனால் வேலு இடையே வந்து அதையும் தவிடு பொடியாக்கி விட்டான்.

மாமா..சும்மா இருங்க என்று அவள் திரும்பினாள். இருவரும் நெருக்கமாக இருக்க, அவன் குறும்பு பேச்சால் அவனது மார்பில் சாய்ந்து முகத்தை மறைத்து வெட்கப்பட்டாள். அவளை ரசித்துக் கொண்டே வேலு சிரித்தான்.

ஓ…இதுக்கு தான் மாமாவை தனியா அழைச்சிட்டு வந்தியா? கவின் கேட்க, வேகமாக நிமிர்ந்து கவினை பார்த்தாள். அவன் அவளை பார்த்து சிரிக்க, அனைவரும் அங்கிருந்தனர். அகல்யா அவன் பின் மறைந்து வெட்கத்துடன் எட்டி பார்த்தாள்.

பேசலாமா? தாத்தா கேட்க,

நாங்க பேசிக்கிட்டு தான் இருந்தோம் தாத்தா வேலு கூற, மாமா நீங்க பேசியதை தான் நாங்க பார்த்தோமே? கவின் கிண்டலாக கூறினான்.

அகல்யா..நீ சொல்லு. ஓ.கே தான? வேலு கேட்க, அவள் மேலும் யோசித்துக் கொண்டே, தாத்தா நீங்க சொல்லுங்க? கேட்டாள்.

நீ தான்ம்மா சொல்லணும். நீங்க தான சேர்ந்து வாழப் போறீங்க? அவர் சொல்ல,..அவள் வேலுவை பார்த்தாள். சொல்லு..என்றான்.

நீங்களே பார்த்துக்கோங்கன்னு சொல்லிட்டா. ஆனால் அவளுக்குள் பயம். எங்கே கடன் அதிகமா வாங்கி விடுவானோ என்று..

ஆனால் அதை புரிந்தவனாக..அதிகமாக பணம் யாரிடமும் வாங்க மாட்டேன் என்று அகல்யாவை பார்த்தான்.

ஓ.கே ஒரு மாசத்துக்கு பின் கல்யாணத்தை வச்சுக்கலாம் தாத்தா கூற, எல்லாரும் ஆமோதித்தனர்.

அத்தை நீங்க அவளுக்காக என்று முதலில் சேர்த்த நகையை மட்டும் போட்டுடுங்க. போதும். வாங்கிய அனைத்தையும் ரசீதை கொடுத்து திரும்ப கொடுக்கலாம். அவ இதுவரை போடலைல என்று கேட்டான்.

இல்ல தம்பி..நிச்சயத்துக்கு அவங்க தான் போட்டாங்க. அது வாங்கியது போல் தான் இருக்கு கவரை எடுக்ககூட இல்லை.

எங்க வாங்குனீங்க? என்று கேட்ட வேலு, கவினிடம் அதை கொடுத்து விடுங்க. நாங்க சென்று பணமா மாத்திடுறோம்.

முடியுமா? மாப்பிள்ள?..

முடியும் மாமா. எனக்கு தெரிஞ்சவங்க மூலமா பேசி மாத்திட்டு வாரேன் என்றான்.

மாமா..இன்றே போகணுமா? கவின் கேட்க..

என்ன? என்று அவன் அம்மா கேட்க, அவன் பதில் கூறாது..மாமா நான் அவளிடம் பேசிட்டு நாளை பார்ப்போமா? கேட்டான்.

நாளைக்கு ஊருக்கு போயிடுவீங்கள?

மாமா..இன்றே போகணும். நீங்களே மாத்திடுங்களேன் என்றான் கவின்.

இல்ல மச்சான். அது சரியா இருக்காது. நீங்க தான் ஊருக்கு போயிட்டு இரண்டு நாள்ல வரீங்களாமே? அப்ப கூட மாத்திக்கலாம்.

அவன் விழிக்க..பிரதீப் அண்ணா தான் சொன்னாங்க.

பிரச்சனை ஏதும் ஆகாதுல மாமா?

அதெல்லாம் இல்லை மச்சான் என்றான்.

எல்லாரும் அவரவர் வேலைக்கு கிளம்ப, கவின் அகல்யாவை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான்.

எல்லாரும் போயிட்டாங்களா? என்று சென்ற பின் கவின் அகல்யாவை நிறுத்தி..மாமாவை கட்டிக்க உனக்கு சம்மதம் தானே?

சம்மதம் தான். அக்கா..கல்யாணம் முடிஞ்ச பின் அந்த மாமாவை பத்தி இவரிடம் பேசக்கூடாது.

என்னடா பேசுற? இன்னும் அவனை மாமான்னு சொல்ற? எனக்கு அவரை நினைச்சா கஷ்டமா இருக்கு என்று கவின் அகல்யாவை பார்த்தான்.

ஓ..அவனை நினைச்சு கஷ்டப்படுறியா? என்னை நினைத்து கஷ்டமா இல்லையா உனக்கு? அவன் என்னை காதலித்தது போலவே தெரியல. அவன் அம்மாவிற்கான அடிமைய தான் தேடி இருக்கான். நான் தான் இல்லாததை இருக்கு என்று நினைத்து முட்டாள் தனமா இருந்திருக்கேன். இனி அவனை பற்றிய பேச்சே நம் வீட்டில் இருக்கக்கூடாது என்று கூறி விட்டு அவள் சென்றாள்.

மாமா..நீங்க அக்கா மனசுல வர ஆரம்பிச்சுட்டீங்க? என்றான் கவின்.

என்ன மச்சான் பேசுறீங்க? அவன் கேட்க,..அவள் பேசியதை கவின் கூற, அவள் கல்யாணத்துக்குள்ள அவளது பழைய காலத்தை மறந்திடுவாள். பாருங்க என்றான் வேலு.

நல்லது தான் மாமா..என்றான் கவின்.

 

Advertisement