Advertisement

அத்தியாயம் 57

வீட்டிற்கு சென்றவுடன் அவன் தாத்தாவை அழைத்து, அனிகாவை காட்டி விட்டு, தாரிகா அவளை கூட்டிட்டு போ..டேய் போய் சாப்பிடுங்க. நான் தாத்தாவிடம் பேசி விட்டு வருகிறேன் என்று கைரவிடம் கூறி விட்டு தாத்தா அறைக்கு அவரை அழைத்து சென்று அனைத்தையும் கூறினான்.

கேரி, அவனுடைய மனைவியின் தங்கை ஜாஸ்மின், ஜான் அங்கு வந்தனர். தாரிகா அம்மா அனிகாவிடம் பேச்சு கொடுக்க அவளால் பேசவே முடியவில்லை.

நான் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்கவா? கேட்டாள். மற்றவர்கள் அவளை ஒரு மாதிரி பார்க்க கைரவ் புரிந்து கொண்டு, வேலையாளை அழைத்து அனிகாவை அறைக்கு அழைத்து செல்ல சொன்னான்.

டேய்..அந்த பொண்ணு சாப்பிடலை தாரிகா அம்மா கூற, கனியக்கா..உணவை அறைக்கு கொண்டு போங்க என்றான்.

அனிகா செல்லும் போது கைரவை பார்த்து விட்டு செல்ல, தாரிகா அவனை பார்த்தாள். அவன் முகத்தில் சிறு பரபரப்பு தெரிந்தது.

தாரி..நீ ஓ.கே வா? கேட்டான்.

சாரி..ஆன்ட்டி. கவின் மீதுள்ள கோபத்தில் என்று தாரிகாவை பார்த்தான். அவள் சாப்பிடாமல் எழ, அவளது கையை பிடித்து அமர வைத்தான். இதை பார்த்துக் கொண்டே அனிகா சென்றாள். அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

கைரவ் உண்மையாக தாரிகாவை திருமணம் செய்து கொள்ளப் போகிறானா? அதுவும் கவின் இருவரையும் சேர்த்து பேசியதால்..நான் தவறு செய்து விட்டோமோ? என்று முதலில் சிறு துளியாக ஆரம்பித்த கண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்தது. இதையே நம்மால் பார்க்க முடியவில்லையே? அவங்க திருமண பேச்சின் போது இங்கிருப்பது நன்றாக இருக்காது. இந்த கண்ணீர் என் காதலை காட்டிக் கொடுத்து விடும். எப்படியாவது வெளியே சென்று விட வேண்டும் அழுது கொண்டே கட்டிலில் படுத்து விட்டாள்.

கைரவ் அனைவரிடமும் அனிகா பற்றி அவனுக்கு தெரிந்ததை கூறினான். அவனுக்கு அவளை பிடித்த விசயத்தை மட்டும் கூறவில்லை.

சைலேஷ் தாத்தாவிடம் பேசி விட்டு வெளியே வந்து, சாப்பிட்டு எல்லாரும் தூங்குங்க. நான் நித்தியை அழைத்து வாரேன்.

அண்ணா..வரலன்னு தான சொன்னா?

தாத்தா தான் அழைத்து வரச் சொன்னார்.

எதுக்கு? கைரவ் கேட்க, உன்னிடம் கண்டிப்பா சொல்லணுமா?

நோ..அண்ணா. கூட்டிட்டு வா..என்றான்.

சைலூ..நானும் வரவா? கேரி கேட்க, ஹே..ப்ரெண்டு..நானும் வாரேன் ஜாஸ்மின் கூற,

விட்டா குடும்பத்தோட வருவீங்க போல. நான் பொண்ணு கேட்க போகல. போகும் போது சேர்ந்தே போவோம் சொல்லி விட்டு தாரிகா எதுக்கும் வருத்தப்படாத எல்லாமே சரியாகிடும் என்று அனிகா எங்கே? கேட்டான்.

சார்..அவள் பேச தயங்குறாள் தாரிகா கூற,..ம்ம்..அவளிடம் நாளை பேசிக் கொள்ளலாம். நான் அவளை அழைத்து வருகிறேன் என்று அவன் சென்றான்.

அறையில் கைரவ் பற்றிய சிந்தனையோடு அனிகா அழுது கொண்டிருக்க, கதவு தட்டும் ஓசை கேட்டு முகத்தை சரி செய்து விட்டு எழுந்து பார்த்தாள்.

ஏம்மா..அழுதியா? ஏதும் பிரச்சனையா? கனி அக்கா அவளிடம் வினவ அவள் கண்ணீர் சுரக்க,

அழாதம்மா. இந்தா சாப்பிடு..கைரவ் தம்பி கொடுக்க சொன்னாங்க என்று கொடுக்க, அதை வாங்கி அருகே வைத்தாள் அனிகா.

அவங்களிடம் கைரவ் கூறி தான் அனுப்பி இருப்பான். அக்கா..அவளோட அம்மா அவ கண்ணு முன்னாடியே கொலை செய்யப்பட்டுருக்காங்க. அவ சாப்பிட்ட பிறகு வெளிய வாங்க என்று சொல்லி அனுப்பினான்.

சாப்பிடும்மா..அவர் கூற, நீங்க போங்க. நான் சாப்பிடுறேன்.

இல்லம்மா..நீங்க சாப்பிட்ட பின் தான் வெளிய வரணும்ன்னு தம்பி சொல்லி தான் அனுப்பிச்சுச்சு.

அவள் தயக்கமுடன் உணவை பார்த்தாள். அம்மா நியாபகமா இருக்காம்மா..

அவள் கண்ணீர் வடித்தாள். அவள் கண்ணீரை துடைத்து விட்டு, நானும் என் மகனை இழந்த பின் தான் இங்கே வந்தேன். என்னை பெரியய்யா தான் அழைத்து வந்தார்.

மகனா? கேட்டாள்.

ஆமாம்மா.. அவனும் உயிரோடிருந்தால் கைரவ் தம்பி வயது தான் இருக்கும்.

ரொம்ப வருசமா இருக்கீங்களா?

ஆமாம்மா..அவன் பதினொன்றாவது வயதில் என்னை விட்டு சென்றான். கணவனும் இல்லை. மகனும் இல்லை. அப்ப தான் பெரியய்யா நான் தற்கொலை செய்யும் முயற்சியை தடுத்து வீட்டிற்கு அழைத்து வந்து வேலையும் தந்தார். ஆனால் இங்க பசங்க ரெண்டு பேருக்குமே பெற்றோர் சிறு வயதிலே இறந்துட்டாங்களாம். கைரவ் தம்பி பிறந்த ஒரு வாரத்திலே அவங்க அம்மா உடல் நலமில்லாமல் இறந்துட்டாங்க. அவங்க அப்பா பிசனஸ் விசயமா வெளியூர் சென்று விபத்தில் இறந்து தான் கொண்டு வந்துருக்காங்க.

பெரியய்யா..பிசினசை பார்க்க அந்த வயதிலே சைலேஷ் தம்பி கைரவ் தம்பியை வளர்க்க ஆரம்பித்தார். கைரவ் தம்பி தாத்தாவை கூட எதிர்த்து பேசுவார். ஆனால் அண்ணா பேச்சுக்கு மறு பேச்சு பேச மாட்டார்.

ம்ம்..தெரியும் என்றாள் அனிகா.

சைலேஷ் தம்பி தான் உதவியதா சொன்னாங்க. உங்களுக்கு கைரவ் தம்பிய தெரியுமா?

நாங்க ஒரே கல்லூரி தான். அதனால் தெரியும்.

ஓ..அப்படியாம்மா. அதான் வீட்லயே தங்க வைக்கிறாங்களா?

ஏன்?

இந்த மாதிரி பிரச்சனையோட நிறைய பேர் பிரச்சனையோட வந்துருக்காங்க. ஆனால் விருந்தாளிகள் அறையில் தான் தங்க வைப்பாங்க. பிரச்சனை முடிந்தவுடன் கிளம்பிடுவாங்க. இந்த வீட்ல வந்து தனியா தங்குற இரண்டாவது சின்ன பொண்ணு நீங்க தாம்மா.

இரண்டாவதா?

ம்..நித்தியம்மா..அப்புறம் நீங்க..என்றார்.

அப்ப தாரிகா..?

அவங்களா? அவங்க அம்மா கூட வந்திருக்காங்க. அப்புறம் வெளிநாட்டு பொண்ணும் அவங்க அண்ணா, மாமாவுடன் குடும்பமா தான் இருக்காங்க.

அக்கா..என்று தயங்கிய அனிகா..நான் இங்க இருப்பது சரியான்னு தெரியலக்கா. நான் சைலேஷ் சாரிடம் ஹாஸ்டல்ல தங்குறேன்னு சொன்னேன். கேட்கவே மாட்டேன்னு சொல்லிட்டார். கைரவ் பற்றி நான் கூறும் முன்பே என்னை வீட்டிற்கு தான் அழைத்து வருவதாக சொன்னார்.

அம்மா..தம்பி செஞ்சா சரியா தான் இருக்கும். நீங்க சாப்பிடுங்க.

எனக்கு பசிக்கல. டயர்டா இருக்கு. தூங்க முடியல..மனசே சரியில்லை என்று புலம்பினாள்.

நான் இங்க வேலைக்காரி தான்ம்மா. நான் ஒன்று சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டீங்கள? கனியக்கா கேட்டார்.

என்னதுக்கா?

நான் வேண்டுமானால் ஊட்டி விடவா. சாப்பிட்டு தூங்குங்க. அவள் கண்ணீர் சரேரென்று விழுந்தது.

தப்பா சொல்லிட்டேனாம்மா? மன்னிச்சிரும்மா. நான் என் மகனை இழந்த போது இப்படி தான் தோன்றியது. யாராவது பக்கத்திலே இருக்கணும். எனக்கு உணவை கொடுக்கமாட்டாங்களா? தூங்கும் போது தட்டிக் கொடுக்க மாட்டீங்களா? ஏங்கி இருக்கிறேன்.

இப்ப உங்க நிலைமை என் பழைய நினைவை காட்டியது. எனக்கு ஆறுதல் வேண்டும் அவர் கூற, அவரை அனிகா அணைத்துக் கொண்டு,

நீங்க எனக்கு ஊட்டி விடுங்க. நான் சாப்பிடுறேன் என்றாள் அழுது கொண்டே. இருவருமே ஒருவருக்கு ஒருவர் ஆறுதலளித்து கொண்டனர்.

அனிகா சாப்பிட்டு முடிக்க, எதையும் நினைக்காமல் நீ தூங்கும்மா என்று அவர் வெளியேறினார். அவள் மனம் கொஞ்சம் அமைதியானது.

வெளியே வந்தவரிடம், அக்கா..சாப்பிட்டாளா? தாரிகா கேட்டாள்.

பொண்ணு..ரொம்ப அழுதாம்மா. சாப்பிட வைச்சுட்டேன். தூக்க முடியலைன்னு சொன்னா? அவர் கூறி விட்டு செல்ல, கைரவ் முன் வந்தான்.

தம்பி..அந்த பொண்ணு சாப்பிட்டுடுச்சு என்று அவர்கள் சாப்பிட்டதை எடுத்து வைத்தார்.

“கையூ குட் நைட்” என்று கேரி கூற, அவன் யோசனையோடு நின்றான்.

ஹே..பாய்..ஜாஸ்மின் கைரவை உலுக்க,..ம்ம்..என்று கேள்வியுடன் நோக்கினான்.

என்னாச்சுடா உனக்கு? தாரிகா கேட்க, ஒன்றுமில்லை என்று அறைக்கு செல்ல, அவள் அவனையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

கம்.. “கோ டூ ஸ்லீப்” ஜான் கேரியை இழுக்க, கைரவை பார்த்துக் கொண்டே அவன் செல்ல, தாரிகா அம்மாவும் அறைக்கு சென்றார்.

சற்று நேரத்தில் விளையாடும் போது அணியும் உடையை மாற்றி விட்டு கைரவ் கையில் கூடைப்பந்துடன் வந்தான்.

இந்த நேரத்திலா விளையாட போகிறாய்? தாரிகா கேட்க, எனக்கு மனசு சரியில்லை. நான் விளையாண்டால் தான் என் மனம் அமைதியாகும். பின் தான் தூங்க முடியும்.

நீ தூங்கலையா? யாருமில்லாமல் என்ன செய்கிறாய்?

எனக்கும் தூக்கம் வரவில்லை.

என்னுடன் விளையாட வருகிறாயா?

எனக்கு இதில் விருப்பமேயில்லை. நான் என் அறைக்கே போகிறேன் என்று சென்று விட்டாள். சமையலறையில் சத்தம் கேட்க,

இந்நேரத்தில் அனைவரும் தூங்கி இருப்பார்களே? என்று எட்டிப் பார்த்தான். அனிகா தான் தண்ணீரை எடுத்துக் கொண்டிருந்தாள்.

ஏய்..என்ன பண்ற? அக்காவிடம் சொன்னா கொண்டு வந்துருப்பாங்கள? கேட்டான்.

அவங்களை எதுக்கு தொந்தரவு பண்றதுன்னு தான் கேட்கல.

சரி..தூங்கலையா?

தூக்கம் வரலை..

அறைக்கு போ. அண்ணா பார்த்தா திட்டுவான்.

நீ இப்பவா விளையாடப் போற?

அண்ணா..திட்ட மாட்டாங்களா?

இல்ல..இன்று புரிஞ்சுப்பாங்க என்று அவளிடம் நீ போ..எதையும் நினைக்காமல் தூங்கு. அண்ணா எல்லாத்தையும் பார்த்துப்பான்.

அனிகா தண்ணீரை அருந்த, அவளது தொண்டைக்குழி ஏறி இறங்கியது. அவளை பார்த்துக் கொண்டே நின்றான் கைரவ். அவள் அவனை தாண்டி செல்ல அவளது கையை பிடித்து நிறுத்தி அவளை பார்த்தான்.

அவள் அவனை பார்க்க, அவள் கையை விடுத்து தண்ணீரை அங்கிருந்த ஜக்கில் ஊற்றி..கொண்டு போ என்று கொடுத்தான். அவள் அவனை பார்க்க, வேறெதுவும் வேண்டுமா? கேட்டான்.

இல்லை என்று மாடிப்படி ஏற, அவளை பார்த்துக் கொண்டே நின்றிருந்தான். அவள் அறைக்குள் செல்லவும் வெளியே அவனுக்கென்றுஅமைக்கப்பட்டிருந்த கூடைப்பந்து மைதானத்திற்கு சென்று விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சைலேஷும் நித்தியும் வந்தனர். கைரவ் வியர்க்க வியர்க்க விளையாடுவதை பார்த்த சைலேஷ் நித்தியுடன் அவனை நோக்கி சென்றான். அவனுடைய பந்து நித்தி காலருகே வந்து நிற்க, நித்தி தூக்கி போடு என்றான் கைரவ்.

நித்தி பந்தை பார்த்துக் கொண்டே நிற்க, உனக்கு தூக்கி போட தெரியாதா? ஏன் பந்தை அப்படி பாக்குற? கேட்டான்.

சினத்துடன் கைரவை பார்த்து விட்டு, கையில் பந்தை எடுக்க அவளுக்குள் சில நினைவுகள் வந்து சென்றது.. கடைசியில் ஒரு வாய்ஸ் உனக்கு ஒன்றுமில்லையே? கேட்டது. அவள் கண்கள் நீரால் நனைய, சைலேஷ் நித்தி..என்ன? என்று கேட்டான்.

நினைவு திரும்பிய நித்தி நின்ற இடத்திலிருந்து பந்தை கூடையை நோக்கி போட்டாள். அது சரியாக வலைக்குள் விழுந்தது.

வாவ்..என்று அனிகா நித்தியிடம் வந்தாள். சைலேஷ் ஆச்சர்யமாக நித்தியை பார்க்க, கைரவும் ஆர்வமுடன் நித்தி..உனக்கு விளையாட தெரியுமா? இவ்வளவு தொலைவிலிருந்து யாராலும் போட முடியாது. செம்ம சார்ட் போட்டுருக்க..என்று சோர்ந்த கைரவ் புத்துணர்ச்சியுடன் வந்தான்.

நாம உள்ள போலாமா? தாத்தாவை பார்த்து விட்டு ஓய்வெடுக்கலாமா? கேட்டாள்.

நான் என்ன கேட்கிறேன்? என்று கைரவ் பேச, ப்ளீஸ்டா..இத பத்தி பேசாத. சைலேஷ் அசையாது நித்தியையே பார்த்தான்.

நீங்க வாரீங்களா? இல்லையா? ரொம்ப டயர்டா இருக்கு.

என்ன டயர்டா இருக்கும் போதே செம்மையா போட்டுருக்க நித்தி அனிகா மகிழ்ச்சியாக பேச, இப்பொழுது சைலேஷும் கைரவும் அவளை பார்த்தனர்.

இல்ல..கொஞ்சம் எமோசனலாகிட்டேன் சார் என்றாள் அனிகா. நித்தியும் அவளை பார்க்க, நித்தி கையை பிடித்த சைலேஷ்..நீயும் விளையாடேன் என்றான்.

சார்..நான் பந்தை பிடித்து கூட பழக்கமில்லை என்றாள்.

இப்ப கத்துக்கோ..

இந்த நேரத்திலா? இந்த கையை வைத்துக் கொண்டா? நித்தி கேட்க, அவளுக்கு கையில் லேசான காயம் தான். தலையில் தான்.

ஆனால் அவளுக்கு தலையிலும் பெயினா தானே இருக்கும்? அவள் ஓய்வெடுக்கட்டும். இன்னொரு நாள் பார்த்துக் கொள்ளலாம் கைரவ் கூறினான்.

வலிய பார்த்தா விளையாட முடியாதுன்னு நீ தான சொல்வ?

அண்ணா..அது எனக்கு. பழக்கமில்லாத அவளுக்கு அல்ல.

அதனால் என்ன? அரைமணி நேரம் தான் உங்களுக்கான நேரம் என்று கைரவை பார்த்தான்.

அண்ணா..என்னை சொல்லி தரச் சொல்றியா?

ஏன்டா முடியாதா?

அண்ணா..என்று கைரவ் அனிகாவை பார்த்தான்.

சார்..ஆர்வம் மட்டும் தான். விளையாட தெரியாது.

நான் தான் சொன்னேன்ல கத்துக்கோ..வேண்டாம்ன்னா உள்ளே போ..என்றான் சைலேஷ். அவள் சிந்தித்தாள்.

பிடிக்கிற அனைத்தையும் கத்துக்கலாமே? அதுல தப்பு ஏதுமில்லை. எங்க கூட உள்ள வாரீயா? கேட்டான்.

சார்..பிடிக்கிற எல்லாத்தையும் கத்துக்கலாம்ன்னு நினைக்கிறேன் என்றான்.

தேறிட்ட போ..என்றாள் நித்தி. சைலேஷும் நித்தியும் உள்ளே தாத்தாவை பார்க்க சென்றனர்.

கைரவை பார்த்தாள் அனிகா. அவன் அவளை மேலிருந்து கீழாய் பார்த்தான்.

அவள் கூச்சத்தை மறைத்து. அவளுடைய துப்பட்டாவை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டாள். கைரவ் அவளிடம் சுயர் தானா? கேட்டான்.

ம்ம்..என்றாள்.

இப்படி சொன்னா எப்படி?

வாயை திறந்து ஓ.கே வான்னு சொல்லணுமே?

ஓ.கே என்றாள். அவன் போன் ஒலிக்க எடுத்தான்.

தல..அண்ணாவிடம் இந்த டுபாக்கூர் சொல்லிட்டான்.

என்ன? அண்ணாவிடமா? சொன்னானா? அவளை பார்த்துக் கொண்டே கேட்டான். அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதான் தல..அந்த பொண்ணு அனிகா பத்தி..

என்ன? என்று சத்தமிட்டு அவளை பார்க்க, அவள் அவனை தான் கவனித்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக தள்ளி வந்து, என்னோட அண்ணாவிடமா சொன்னான்? என்ன சொன்னான்?

அந்த பொண்ணு பற்றி எச்சரிக்கை செய்ய போன் செய்தோமோ? பேச்சு வாக்கில் அவன் உங்களுக்கு அந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்.

டேய்..உங்கள..எங்கடா அவன்? போனை கொடு..

தல..என்ற மற்றொரு குரலில், அடேய்..பக்கி என்னத்த சொல்லி இருக்க? செத்தேன். அவன் நல்லா கிளாஸ் எடுப்பானே? மகனே நாளைக்கு காலையில நாம சந்திக்கிற இடத்துக்கு தனியா வர..

தல..நான் பாவம். தெரியாமல் பேச்சு வாக்கில் சொல்லிட்டேன்.

உங்ககிட்ட எத்தனை முறை சொல்லி இருக்கேன்? அண்ணாவிடம் பேசும் போது யோசிச்சு பேசுங்கன்னு. இப்ப எப்படி அவனிடம் பேசுறது? பைத்தியங்களா?… பைத்தியங்களா?..அவன் அவர்களை திட்ட, அனிகா அவனை பார்த்து சிரித்தாள்.

தல..ஏதோ பொண்ணோட சிரிப்பு சத்தம் கேட்குது? அந்த பொண்ணா?

போனை வைச்சுரு போனை அணைத்து விட்டு அவளிடம் திரும்பினான். அவள் வாயில் கை வைத்து சிரிப்பை கட்டுப்படுத்தினாள்.

எதுக்கு சிரிக்கிற?

வாயிலிருந்து கையை எடுக்காமல். ஊஹும்..என்று தலையாட்டினாள். அவளிடம் வந்து அவள் வாயிலிருந்த கையை எடுத்து விட்டான். இரு உதடுகளையும் ஒட்டி வைத்துக் கொண்டு அவனை பார்த்தாள்.

எதுக்கு சிரிச்ச?

இல்ல..நீ கல்லூரியில பந்தாவா பேசுவ? இப்ப உன்னோட அண்ணாவுக்கு ஏதோ தெரியக் கூடாதது தெரிந்தது இப்படி பயப்படுற? என்று கேட்டுக் கொண்டே சிரித்தாள்.

ம்ம்..ஆமா அண்ணா தான் எனக்கு எல்லாமே. அவனிடம் பயப்படவும் செய்வேன். உரிமையாகவும் நடந்துப்பேன். காலேஷ் வேறல.

நீ அமைதியா இருந்துட்டு..இப்ப சிரிக்கல என்று கேட்டான். அவள் அமைதியானாள்.

வா..என்று கையை நீட்டினான். அவள் தயங்க..அப்புறம் எப்படி சொல்லித் தரதாம்?

அவள் கையை கொடுத்து அவன் கையை பிடித்து எழுந்தாள்.

உன்னோட கை? கைரவ் அனிகாவிடம் கேட்டான்.

ஒரு நிமிடம் என்று அமர்ந்து கை கட்டை பிரித்தாள். கையில் இருந்த கீறலை பார்த்து கைரவ் சிரித்தான்.

சிரிக்காத..ஒரு நிமிஷம் பயத்துல உயிரே போச்சு. நல்ல வேலை சார் வந்தாங்க. கையில இரத்தம் வந்ததை பார்த்து பதறினேன். அதனால் காயம் தெரியாதவாறு கட்டு போட்டாங்க.

அவளருகே அமர்ந்து, உனக்கு இதுக்கு முன் அடி பட்டதேயில்லையா?

பட்டிருக்கு. ஆனால் கொலை செய்ய வருவதெல்லாம் புதுசுல்ல. அதான் ரொம்ப பயந்துட்டேன்.

ம்ம்..உன்னால நிஜமாகவே விளையாட முடியுமா?

நீ சொல்லித் தந்தால் விளையாடுகிறேன். வா..என்று எழுந்தான். அவளும் எழுந்தாள். அவள் கையில் பந்தை தூக்கி போட்டான். அவள் பிடித்து விட்டு அவனை பார்த்தாள்.

அவன் பேசுவதற்குள் கையை திருப்பி பந்தை கூடையில் போடுவதற்கான பொசிசனில் வைத்துக் கொண்டு கண்களை மூடினாள்.

ஏய்..தெரியாதுன்னு சொன்ன?

கண்ணை மூடிக் கொண்டே, நீ விளையாடுவதை தான் தினமும் பார்ப்பேனே?

எதுக்கு கண்ணை மூடுற? திற என்று பேசிக் கொண்டே அருகே வந்தான்.

முதல் முறையாக போடுகிறேன் கீழே விழுந்தால் எனக்கு நம்பிக்கை போய் விடுமே?

அவளது அதே பொசிசனில் அவளுக்கு பின் நெருக்கமாக நின்று அவளது இரு கை மீதும் கையை வைத்தான். அவள் கண்ணை திறந்து திரும்பி அவனை பார்த்தாள். அவனும் அவளை பார்த்தான்.

போடலாமா? கீழே விழாது என்றான் அவளை பார்த்துக் கொண்டே.

அவனது நெருக்கம் அவளை பேசவிடாது செய்ய..முன்னே திரும்பி, ம்..என்றாள். தயாரா கேட்டான்.

ம்ம்..என்றாள்.

இருவரும் சேர்ந்து போட கூடையினுள் விழுந்தது. போ..எடுத்துட்டு வா.

அவள் பந்தை எடுத்து வர, பந்தை பிடிக்கும் முறை, தரையில் அடிக்கும் முறை, போடும் முறை என சொல்லி செய்து காட்டினான். அவளும் பழகினாள். பின் மூச்சு வாங்க அமர்ந்தாள்.

போதுமா? தூங்க போகலாமா? கேட்டான் கைரவ்.

இன்னும் கொஞ்ச நேரம்..

அண்ணா..திட்ட போறான்.

நீ உன்னோட பந்தை மட்டும் கொடுத்துட்டு போ. நான் விளையாடுகிறேன்.

நேரம் என்னன்னு தெரியுமா? பதினொன்றாகி விட்டது. அண்ணா..அரை மணி நேரம் தான் சொன்னான். ஆனால் அடுத்த அரை மணி நேரமும் ஆகி விட்டது.

நீ போ. நான் வாரேன். காலையில பந்தை வாங்கிக்கோ..என்று அவனது கையிலியிலிருந்து பந்தை பிடிங்கி விட்டு ஓடினான்.

ஏய்..என் கையிலிருந்தே வாங்கி விட்டாயா? இரு வாரேன் என்று அவனும் அவள் பின் ஓடி அவளை பிடித்து இழுத்தான். அவள் அவன் மீது மோதி விலகினாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர். பந்தை வாங்க அவன் வந்தான். அவள் பின்னே நடந்து சென்றாள். அங்கிருந்த பலகை தட்டி கீழே விழுந்தாள்.

 

 

 

 

 

 

Advertisement