Advertisement

அத்தியாயம் 47

கமிஷ்னர் அர்ஜூனுக்கு போன் செய்து, என்னப்பா செஞ்சிருக்க?

சார்..நாங்க உண்மைய தான சொன்னோம். நாங்க எல்லாரும் உயிரோட இருக்க காரணமே சார் தானே. ஆனா நீங்க என்ன பண்ணி இருக்கீங்க? ரௌடிய சுட்டதுக்காக போலீஸிற்கே அரெஸ்ட் வாரன்ட்டா?

மாதவ் பெற்றோரும் தங்கையும் இதை பார்த்து சைலேஷிற்கு போன் செய்தனர். அவனும் ஸ்டேசனில் தான் இருந்தான்.

அவனை நாங்க வெளிய எடுத்திடுவோம் கவலைப்படாதீங்க என்று சைலேஷ் பேச, சந்துரூ போனை வாங்கி அம்மா.. நாங்க இருக்கோம். பார்த்துக் கொள்கிறோம்.

மக்களும் மாதவிற்காக பேச அவனை வெளியே விட்டனர். ஆனால் முழுதாக இல்லை. இதில் மாதவும் பிரபலமாகி விட்டான். சைலேஷ் அவனுடன் அவன் வீட்டிற்கு சென்றான். அவன் யாசுவை பற்றி கூறி இருக்க மாட்டான். அவர்கள் அவள் நிலையையும் மாதவ் கையை பிடித்து விடாமல் இருந்ததையும் பார்த்திருப்பர்.

அவன் அப்பா..மற்றதை பற்றி கேட்காமல் யாசுவை பற்றி கேட்டார். அவன் அவளை பற்றியும் பெற்றோர்கள் பற்றியும் கூற, அவர்களது ஊரை பற்றி சைலேஷ் கூறினான்.

உனக்கு அவன் காதலிக்கும் பொண்ணோட ஊரை பற்றி எப்படி தெரியும்? அம்மா கேட்க, நானும் அந்த பொண்ணோட தோழியை தான் காதலிக்கிறேன். அவன் அப்பா அவர்களை பார்த்து முறைத்தார்.

கோபப்படாதீங்க..புள்ள காதலிப்பதே பெரிய விசயம். அவன் வெளியே கூட சென்றதில்லை. வேலை..வேலை..என்று தான் இருந்திருக்கிறான். அந்த பொண்ணும் நல்ல பொண்ணா தான் தெரியுது அம்மா கூற,’

மாதவ் அவன் அப்பாவிடம் மண்டியிட்டு, நீங்க தலைகுனியும் படி செய்து விட்டேன். என்னை மன்னிச்சிருங்கப்பா.

சற்று நேரம் அவனையே பார்த்துக் கொண்டிருந்த அவர்..போலீசா உன் கடமையை சரியா செஞ்சிருக்க. பிள்ளையா எங்களுக்கு புதிய உறவை அழைத்து வரப் போகிறாய்.

ம்ம் கூட்டிட்டு வா பார்க்கலாம் என்றார். அப்பா..என்று அவரை அணைத்துக் கொண்டான் மாதவ்.

நான் வாரேன்டா சைலேஷ் கூற, நானும் என்று அவன் அப்பாவை பார்த்தான்.

மாதவ்..நீ இங்கேயே இரு. பிரச்சனை குறைஞ்சதும் நானே வந்து உன்னை அழைத்து செல்கிறேன் சைலேஷ் கூறி விட்டு அவன் பெற்றோரை பார்த்தான்.

சரிப்பா..நீ போயிட்டு வா என்றனர்.

மாதவ் அவனிடம் வந்து அவள கொஞ்சம் பார்த்துக்கோடா. எல்லாமே செய்தில வந்துருச்சு. அவளோட பெற்றொருக்கு தெரிந்தால்..பார்த்துக்கோடா மாதவ் கூற, சைலேஷ் அவனை பார்த்து

நீ ரொம்ப டென்சனா இருக்க. அமைதியா இரு. அதான் அபியும் அர்ஜூனும் இருக்காங்கள. அவங்க பார்த்துப்பாங்க என்று அவன் கிளம்பினான்.

மாதவ் அப்பா உள்ளே செல்ல, அவன் அம்மாவும் தங்கையும் அவனிடம் வந்து, அந்த பொண்ணை காட்டுடா. சரியா கூட பார்க்கலடா. அவன் போனை நீட்டினான்.

பொண்ணு ரொம்ப அழகா இருக்காடா அவன் அம்மா கூற,

அண்ணா..உன்னோட செலக்சன் சூப்பர்டா தங்கை கூறி விட்டு அவளறைக்கு செல்ல, அவன் மனதில் மகிழ்ச்சியா இருந்தாலும் அவள் நிலையில் அவள் பக்கம் இருக்க முடியவில்லை என்று வருந்தினான் மாதவ்.

அகில் கண் விழித்து பார்த்தான். பவி கட்டிலில் தலையை சாய்த்து அகில் கையை பிடித்துக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் விழித்ததும், அகில்..என்று பேச்சே வராமல் அவனை பார்த்தாள்.

அவன் அவளிடம் உனக்கு ஒன்றுமில்லையே? என்று கேட்டான்.

இல்ல அகில்..எனக்கு ஒன்றுமில்லை. உனக்கு..உனக்கு..தான் என்று அழுதாள் பவி.

அகில் அவள் கையை பிடித்து, அழாதே என்று தலையை ஆட்டி விட்டு, யாசு..யாசுவிற்கு என்னாச்சு? முழிச்சிட்டாளா? எப்படி இருக்கா? வலி அதிகம் இல்லை தானே? என்று அவளை பற்றி கேட்க, பவிக்கு கஷ்டமானது.

இந்நிலையிலும் அவளை பற்றி இத்தனை கேள்வியா? என்று பவிக்கு கோபம் கூட வந்தது. ஆனால் ம்ம்.. நல்லா இருக்கா என்று ஒற்றை வார்த்தையில் முடித்தாள்.

அர்ஜூனை வரச் சொல்கிறாயா? என்று கேட்டான். அவள் முகம் வாட எழுந்து அர்ஜூனிடம் சென்றான்.

பவி ஸ்ரீயை அணைத்த பின் ஸ்ரீ அர்ஜூனிடம் பவியை பற்றி கேட்டிருப்பாள். அவனோ..நீ முதல்ல யாரை காதலிக்கிறன்னு சொல்லு என்று கேட்டிருப்பான். அவள் கோபமாக சென்று அமர்ந்தவள் தான் அவனிடம் வரவேயில்லை. இப்பொழுது அர்ஜூனிடம் பவி, அகில் முழிச்சுட்டான். அவன் உன்னிடம் பேச வேண்டுமாம் என்றாள்.

அதுக்கு எதுக்கு இங்க வந்து நின்னுகிட்டு இருக்க? வா..போகலாம் அர்ஜூன் அழைக்க,

நான் இங்கேயே இருக்கேன். நீ பேசிட்டு வா..என்று தயங்கினாள்.

என்னாச்சு இவளுக்கு? அர்ஜூன் அவளை பார்த்துக் கொண்டே சென்றான். கைரவ் பவியிடம் வந்தான்.

ஒரு நிமிஷம் என்று எழுந்து சென்று அவள் அம்மாவை அழைத்தாள்.

அகில் எப்படி இருக்கான்மா? அவர் விசாரிக்க பேசி விட்டு கண்களை துடைத்தாள். அதை பார்த்த ஸ்ரீ அகிலறைக்கு சென்றாள்.

அர்ஜூன் அவனருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். ஸ்ரீ உள்ளே நுழைய இருவரும் அவளை பார்த்தனர்.

ஸ்ரீ..அகில் ஏதோ பேச வாயெடுக்க, அந்த பொண்ணுகிட்ட என்னடா சொன்ன? அவள திட்டுனியா?

அவள பத்தி நீ ஏன் கேக்குற? அகில் கேட்க, அர்ஜூன் சிரித்தான். அவனை முறைத்து விட்டு, அந்த பொண்ணு அழுறாடா?

டா வா? மேடம் என்ன சீனியர்ன்னு தான கூப்பிடுவீங்க? அகில் கேட்க, அர்ஜூன் மீண்டும் சிரித்தான்.

கோபத்துல வந்துருச்சு. சொல்லுங்க சீனியர் சார்? என்ன சொன்னீங்க?

எனக்கு அடிபட்டதுனால அழுதிருப்பா. அவ அழுமூஞ்சி ஸ்ரீ?

ப்ளடி இடியட். அவ அதுக்கு அழுற மாதிரி தெரியல. யோசிக்காம பேசிருங்க என்று கதவை அடைக்க சென்ற ஸ்ரீயை தடுத்தான் அர்ஜூன்.

நீ என்னையும் சேர்த்து திட்டிய மாதிரி இருக்கே?

இல்ல..அவனையும் சேர்த்து தான் திட்டினேன் என்று கதவை அடைத்து வெளியே சென்றாள். இப்பொழுது சிரிக்கும் முறை அகிலுடயதாயிற்று.

ஆமா..அகில். ஸ்ரீ சொன்னது சரி தான். அவள் முகமே சரியில்லை. நீ அவளை திட்டலையே?

இல்லையே? பேச தான் செய்தோம்.

சரி..இந்தா பேசு. துருவனுக்கு விசயம் எட்டி விட்டது. விட்டா அடிச்சிருவான் போல. நீ ஒரு முறை பேசிருடா அர்ஜூன் கூற, புன்னகையுடன் போனை எடுத்து பேச, அவன் வாய்சே சரியில்லை. இருவரும் அவனிடம் விசாரிக்க, தீனா புகைப்படத்தை பற்றி கூறினான்.

நீ கவலைப்படாதே. புவனாவிடம் அப்படியெல்லாம் ஏதும் இருக்காது என்று சொல்லி வை அர்ஜூன் கூற, அண்ணா..என்றான்.

சரி..அப்ப தீனா சாரை பற்றி தப்பு தப்பா பேசி அவள கஷ்டப்படுத்து அகில் கூற, அவன் அமைதியானான்.

இங்க இருக்கிற பிரச்சனை முடியட்டும். அப்புறம் இதை பற்றி பேசலாம் என்றான் அர்ஜூன். பிரதீப் ஊரில் அனைவரும் செய்தியை பார்த்து அர்ஜூன், அகில், யாசு பற்றி பேச்சு ஆரம்பித்தது.

அர்ஜூன் வெளியே வர, ஸ்ரீ, பவி, கைரவ் சேர்ந்து அமர்ந்திருந்தனர். அபி இன்பா அருகே இருந்தான். நித்தி யாசுவுடன் இருந்தாள்.

இன்பா அர்ஜூனிடம்,அம்மா நாளைக்கு நடக்க இருக்கும் காரியத்தை பற்றி பேசணும்ன்னு சொன்னாங்க.

என்ன மேம்?

அவங்களுக்கு சாமி கும்பிடணும் என்றாள் இன்பா. அர்ஜூன் கண்கள் கலங்கியது சோகமாக அவன் அமர, தருண் அவனை அழைத்து,

உன்னை அனு தேடுறா அர்ஜூன்?

நான் இப்பொழுது வர முடியாதே என்று ஸ்ரீயை பார்த்தான். ஸ்ரீயை அனுப்புகிறேன். அவள் அவனை பார்க்க,

எனக்கு மாதவ் சார் விசயமா சில பேரை சந்திக்கணும். அதனால நீ அனுவ பார்த்துக்கோ.

அவள் தலையசைத்தாள். தருண்..அம்மாவை தயாரா இருக்க சொல்லு..அர்ஜூன் கூற,

அம்மாவா? தருண் கேட்க, ஆமாம் என்னோட அம்மா தான் மாதவ் சார் விசயமா கமிஷ்னரிடம் பேசணும்ன்னு சொல்லு. அபி..ஸ்ரீயை வீட்ல விட்டுட்டு அம்மாவை அழைச்சு வரட்டும் என்றான்.

ஓ.கே சொல்லிடுறேன் என்று தருண் துண்டித்தான். அபி உனக்கு ஓ.கே தான? ஏதும் பிரச்சனையில்லையே?

வா..ஸ்ரீ கிளம்பலாம் என்று அபி கிளம்ப, நானும் கிளம்பவா என்று இன்பா ஒரு பக்கமும் பவி ஒரு பக்கமும் வந்தனர்.

பவி கிளம்ப போறியா? அகிலை நீ பார்த்துப்பண்ணு நினைச்சேன். எங்களுக்கு வேலை இருக்கு. நீ அகிலை பார்த்துக்கோ. உனக்கு உதவியா நிவி இருப்பான். இவன் ஸ்ரீயோட தம்பி அர்ஜூன் கூற, அவளுக்கும் அவன் தம்பி தானே? பவி அவனை பார்க்க, மேம்..நீங்க நித்திக்கு உதவியா யாசு கூட இருங்க என்று அர்ஜூன் மீண்டும் பவியை பார்த்தான்.

அர்ஜூனிடம் வந்த நிவாஸ், இந்த பொண்ணு எதுக்கு அர்ஜூன் என்னை ஒரு மாதிரி பாக்குது? எனக்கு ஆள் இருக்குன்னு தெரியும்ல அவன் கூற, அர்ஜூன் அவனை முறைத்தான்.

டேய், அகிலுக்கும் பவிக்கும் இடையில ஏதோ ஓடிகிட்டு இருக்கு. நீ எதையாவது பேசி கெடுத்து விட்றாத?

என்ன? அகில் சீனியரா? சத்தமாக கூற,

அவனுக்கு என்னடா? அபி கேட்க,

ஒன்றுமேயில்லை. ஓ.கே அர்ஜூன். நான் பார்த்துக்கிறேன் நிவாஸ் கூற, அதான பயமா இருக்கு அர்ஜூன் கூறி விட்டு அமர்ந்தான்.  நிவாஸ் அர்ஜூனிடம்..அர்ஜூன் நீ வரவர ரொம்ப பேசுற? கொஞ்சம் குறைச்சுக்கோ.

நான் குறைக்கணுமா? குறைக்க வேண்டியவங்க குறைச்சா நல்லது. சொல்ல வேண்டியவங்க சொன்னா நல்லது என்று அவன் ஸ்ரீயை பார்க்க,

வாங்க சீனியர், இங்க என்ன வெட்டிப் பேச்சு? என்று ஸ்ரீ அபி கையை பிடித்து இழுத்து செல்ல,

அர்ஜூன்..நீ ஸ்ரீயிடமா பேசுன? நிவாஸ் அர்ஜூன் மட்டுமல்ல உன்னோட அக்காவும் சரியில்ல. நல்லா பாரேன் ரெண்டு பேரும் அடிக்கடி சண்டை போட்டுக்கிறாங்க இன்பா கூற,

மேம்..அது கூட வேடிக்கையா தான இருக்கு.

எங்க? ஸ்ரீ முன்னாடி இப்படி சொல்லு பார்ப்போம் கைரவ் கூற,

எனக்கு வேற வினையே வேண்டாம். உங்ககிட்ட அர்ஜூன் கிட்ட முறைக்கிறதோட நிறுத்திக்கிட்டா. ஆனா என்னை செம்ம மாத்து மாத்துவா..இன்னும் சில பேர் எப்ப அவகிட்ட வாங்கப் போறாங்களோ? நிவாஸ் அர்ஜூனை பார்க்க,

கைரவ் சிரித்து விட்டு, அர்ஜூனை பார்த்து ஸ்ரீ தான் ஓடுவா? என்று கேலி செய்தனர்.

மவனே அவ வந்தா, நீ செத்தடா..நிவாஸ் கூட, ஆமாடா..நிவி அவகிட்ட ஒரு தடவை பட்டதே போதும்பா. கொலையே செய்து விடுவாள். தயவு செய்து அர்ஜூன் தூங்கும் போது மட்டும் அருகே சென்று விடாதீர்கள் என்று கைரவ் கூற,

ஏன்டா, அர்ஜூன் கேட்டான்?

ம்ம்..உன் பக்கத்துல படுத்தா பேய் வந்து அடிச்சிடும் என்றான் கைரவ்.

பேயா? என்று நிவாஸ் யோசிக்க,

எல்லாருக்கும் அடிபட்டுருக்கு. உங்களுக்கு வலிக்கலையா? நீங்க ஜாலியா பேசிக்கிட்டு இருக்கீங்க? பவி கேட்க, சொல்லும்மா..அப்படி சொன்னாவாது வாய மூடுறானுகளான்னு பார்ப்போம் இன்பா அலுத்துக் கொண்டாள்.

என்னாச்சு மேம்? ரொம்ப வலிக்குதா? கைரவ் அருகே வர, அங்கேயே நில்லு. என்னை நானே பார்த்துப்பேன்.

அண்ணாவோட ப்ரெண்டுன்னு உதவ வந்தா ரொம்ப பண்றீங்க?

உங்க அண்ணனே என்னிடம் தள்ளி தான் இருப்பான். நானாக பக்கம் சென்றால் தான் பேசுவாங்க. நீ பார்த்ததே இல்லையா?

ம்ம்..கேரி அண்ணா தவிர எல்லாரும் அப்படிதான். ஆனால் மேம்..இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பையன் உங்க பக்கத்துல இருந்த மாதிரி தெரிந்ததே? கைரவ் ஓரக்கண்ணால் இன்பாவை பார்க்க

சொல்லுங்க..என்று ஆர்வமுடன் இன்பாவை அனைவரும் பார்த்தனர். நான் யாசுவை பார்த்து விட்டு வருகிறேன் என்று சென்று விட்டாள்.

கையூ..மேம்மை என்னன்னு நினைச்ச? அவங்க விருப்பப்பட்டா மட்டும் தான் பதில் கிடைக்கும். பாவம் அபி..எத்தனை வருடங்கள் காத்திருக்கணுமோ? அர்ஜூன் கூற,

“காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி” என்று கைரவ் பாட அனைவரும் சிரித்தனர்.

கொஞ்சம் சத்தமா பாடினா பதில் உனக்கு கிடைத்து விடும் கைரவ் சீனியர் என நிவாஸ் கூறினான்.

எலியும் பூனையும் ஒன்றாகி விட்டது அர்ஜூன் சிலாகிக்க, ம்ம்..என்னோட ஸ்ரீயை விட்டுட்டான்ல.. அதான் பேசுகிறேன் நிவாஸ் கூற,

உங்க அக்காவை தவிர பொண்ணுங்களே இல்லையாக்கோம் என்ற கைரவிற்கு திடீரென அனிகா நினைவு வந்தது. அவன் விளையாடும் போதெல்லாம் அவளும் மைதானத்திற்கு வந்து விடுவாள். அவன் அமைதியாக,

என்னடா ஸ்ரீயை ஏன் விட்டோம்னு தோணுதா? நிவாஸ் கேட்க,

இல்லடா..ரெண்டு வாரமா கல்லூரிக்கே போகலையா? எப்பையுமே ஒரு பொண்ணு என் பக்கத்திலே இருப்பாள். அவள் நினைவு வந்து விட்டது. அந்த யோசனை தான்.

யாருடா அந்த பொண்ணு? அர்ஜூன் கேட்க, நான் விளையாட செல்லும் போதெல்லாம் அவளும் என்னை பார்க்க வந்து விடுவாள். இத்தனை நாள் ஏதும் தெரியல. இப்ப திடீர்ன்னு நினைவு வந்துருச்சு?

கையூ..அந்த பொண்ண ட்ரை பண்ணி பாரேன் அர்ஜூன் கூற, போடா டேய்..அவ அமைச்சரோட பொண்ணுடா.

அதனால என்னடா? அர்ஜூன் கேட்க, சரியா வரும்ன்னு தோணலடா.

அவளோட அப்பாவ எதுக்குடா பாக்குற? அந்த பொண்ணு உனக்கு ஏத்தவளா இருப்பாளான்னு பாரு.

அந்த பொண்ணு பேர் என்னடா?

அனிகா.

அனிகாவா? என்ற பவி. அவளது அடையாளத்தை கூறி, அவளா? என்று கேட்டாள்.

ம்ம்..உனக்கு அவளை தெரியுமா?

நல்லா தெரியும். நாங்க பள்ளியில் ஐந்து வருடம் சேர்ந்து தான் படித்தோம். நீ சொன்ன மாதிரி அவங்க அப்பா கொஞ்சம் கண்டிப்பு தான். அவள் வெளிய போகணும்னா காரணம் சொன்னா தான் விடுவாங்க. ஆனால் அவ ரொம்ப நல்ல பொண்ணு. யார் வம்புக்கும் போக மாட்டாள். அமைதியா அவ வேலைய மட்டும் பார்த்துக்கிட்டு இருப்பா. அவளுக்கு அம்மான்னா ரொம்ப பிடிக்கும். ஆனா அவள் அப்பாவுக்கு இன்னொரு குடும்பம் உள்ளது.  அவளுக்கு அண்ணனும் தங்கையும். ஆனா அவ அம்மாவுக்கு ஒரே பொண்ணு.

யார் என்ன சொன்னாலும் கேட்டுப்பா. ஆனா என்ன என்னை மாதிரி ஏமாறமாட்டா என்று கண்கலங்கினாள்.

அர்ஜூன் அவளிடம், நீ இன்னுமா அதை நினைச்சுக்கிட்டு இருக்க?

அதெப்படி மறக்க முடியும் அர்ஜூன்? என்னோட முட்டாள்தனத்தால் அன்று ஏதாவது நடந்திருந்தால் என்று ஸ்ரீக்கு நடந்தது நினைவுக்கு வந்தது. ஏதோ நல்ல நேரம்..அகிலும் நித்தியும் இவங்களெல்லாம் வந்தாங்க என்று நிவாஸை பார்த்தாள்.

ஏதோ நிவாஸிடம் அவளால் பேச முடியவில்லை. ஆனால் அடிக்கடி அவனை பார்க்கிறாள். அர்ஜூனுக்கு புரியவில்லை. எதுக்கு இவள் இப்படி பார்க்கிறாள்? நிவாஸும் அவளை பார்த்து சிந்தித்தான்.

சரி..அவளை பற்றி வேறென்ன தெரியும்? சொல்லு? கைரவ் கேட்க,

ஒரு பொண்ணு உன் பின்னாடி வரான்னு தெரியுது. ஆனா அவளை கண்டுக்காம இருந்திருக்க. இப்ப அவ எப்படின்னு கேக்குற?

ஒரு நிமிஷம் அவ நிலையிலிருந்து யோசித்தாயா? நீ விளையாடுவதை மட்டும் தான் பார்க்க வருவாள் என்று உறுதியாக தெரியுமா? என்று பவி கேட்க, கைரவ் யோசித்து விட்டு எனக்கு தெரியலை என்றான்.

நீ எத்தனை நாளா கல்லூரி போகல? இரண்டு வாரமா போகலைன்னு சொன்னேல. உன் பின்னாடி ரெண்டு தடிமாடு சுத்துமே அதுககிட்ட கேளு. சொல்லுவாங்க என்றாள்.

கைரவ் ஆனா ஒன்று மட்டும். அனிகா ரொம்ப சென்சிடிவ் டைப். அவளும் அவளோட அம்மாவும் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காங்க. அவ அதிகமாவே அழுதிருக்கா. நாங்க ஒரே டைப்பா இருந்ததால ப்ரெண்டா தான் இருந்தோம். ஆனால் அவளோட அண்ணன் அடிக்கடி அவங்க வீட்டுக்கு போவானான். நானும் அடிக்கடி சென்றேன். அவன் என்னிடம் தவறாக நடந்து கொள்ள பார்த்தான். அதிலிருந்து அம்மாவும் அவ பக்கம் கூட போகக் கூடாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க. அதனால நான் அவளிடமிருந்து விலகினேன். அதனால் கூட அவள் அழுதாள்.

எனக்கு இப்ப கூட ஆசை தான். அவளுடன் பேச போனேன். அவளாகவே விலகி விட்டாள். அடுத்து கூட ஏதோ பிரச்சனை நடந்திருக்கும் போல. என்னவென்று தெரியாது. ஆனால் வகுப்பு பசங்க பொண்ணுங்க பேசி தான் தெரிந்தது. அவளை தூரத்திலிருந்து பார்ப்பேன். ஆனால் பேசலை. அவளும் என்னை போல் தனியா தான் இருந்தாள். ஆனால் என்னை விட அவள் தான் ரொம்ப கஷ்டப்பட்டாள். பாவம் அந்த பொண்ணு. சும்மா விளையாட்டா மட்டும் பழகிறாத என்றான்.

கைரவ் யோசனையோடு அமர்ந்திருந்தான்.

என்ன யோசிக்கிற? பவி கேட்க, ஒன்றுமில்லை என்று எழுந்து வெளியே சென்று அவனுடைய அல்லகைகளுக்கு போன் செய்து அனிகா பற்றி கேட்க,

தல..உங்க பின்னாடி பல பொண்ணுங்க வந்துருக்காங்க. யார சொல்றீங்கன்னு தெரியலையே?

அவன் அவளை பற்றி கூறி, எனக்கு உடனே அவளை பற்றி சொல்லு என்றான்.

தல..உடனேவா? ரொம்ப கஷ்டமாச்சே.

முடியாதுன்னா விட்டுருங்க. நான் பார்த்துக் கொள்கிறேன்.

அய்யோ தல கோவிச்சுக்காதீங்க. நாங்க இப்ப கூட ரெடி தான். அந்த பொண்ணு புகைப்படம் இருக்குமா?

பார்த்துட்டு சொல்றேன் என்று அவன் தேடினான். அவனிடம் ஏதுமில்லை. கல்லூரி குழுவில் எதிலாவது இருக்கிறாளா? என்று தேடினான்.

ஏதோ திருமண விழாவில் எடுத்தது போல் இருந்தது. அவள் அலங்காகாரம் அதிகம் ஆனால் சிரிப்பு இல்லை. உம்மென இருந்தாள். அவள் படத்திற்கு கீழ் நிறைய கவிதைகள் அவளுக்காக இருந்தது. அதை அவளுக்கு தெரியாமல் போட்டது போல் தெரிந்தது. அதில் ஒருவர் மட்டும்..அவளிடம் கேட்காமல் போஸ்ட் செய்தது தவறு..சீக்கிரம் அழித்து விடுங்கள் என்று இருந்தது.

அதை பார்த்து அது கொஞ்ச நேரத்திற்கு முன் தான் போட்டிருக்கிறார்கள் என்று அறிந்து கொண்டான்.

யாரது அவளுக்காக பேசியது? யோசித்தவன் அந்த புகைப்படத்தை அவனுடைய ஆட்களிடம் அனுப்பினான்.

உடனே போன் வந்தது. தல..எதுக்கு இந்த பொண்ண பத்தி கேக்குறீங்க? ஒருவன் கேட்க, சும்மா தான் சொல்லுடா.

தல..இந்த பொண்ணு பின்னாடி யாருமே போகமுடியாது. அவளோட அப்பா அமைச்சர் ஆள் வைச்சு கண்காணித்துக் கொண்டே இருப்பார். அந்த பொண்ணுக்கு ப்ரெண்ட்ஸ் யாருமே கிடையாது. சார் யாரிடமும் கூட அவள் பேச மாட்டாள்.

ஆனா..அந்த பொண்ணு உங்க விளையாட்டு எதையும் தவறவிட்டதே இல்லை. உங்களோட பெரிய ரசிகை. நீங்க விடுப்பு எடுத்தால் எங்களிடம் கேட்பாள்? நான் கூட ஒருமுறை உடல் சரியில்லை என்று சூப் கொடுத்தேனே? அது அந்த பொண்ணு கொடுத்தது தான்.

ஏன்டா நீங்க அப்பவே சொல்லலை.

நீங்க தான் திட்டுவீங்கள? அதான் தல நாங்க சொல்லல.

சரி..இந்த ரெண்டு வாரமா அவள பார்தீங்களா?

ம்ம்..பார்த்தோம். அந்த பொண்ணு நீங்க விளையாடுற கோர்ட்ல தான் தனியா உட்கார்ந்திருந்தது. இரு நாட்களுக்கு முன்பு கூட பார்த்தோம்.

நான் வர மாட்டேன்னு தெரிந்திருக்குமே?

தல..உங்க விசயம் தெரியாம யாருக்கு இருக்கும்? ஒருவன் கேட்க,

அப்புறம் ஏன் அங்கே இருக்கணும்? என்று கேட்டான்.

தல..அந்த பொண்ணை நேற்று பார்த்தேன். டேய்..சும்மா இரு..மற்றொருவன் சொல்ல

என்னடா சொல்லுங்க?

தல..அந்த பொண்ணுக்கு உங்கள பிடிச்சிருக்கோன்னு தோணுது?

ஏன்டா சொன்ன? மற்றொருவன் அவனை அடிக்க,

சண்டை போட்டுக்கிட்டு இருக்கீங்களா? ஒழுங்கா நேற்று என்ன நடந்ததுன்னு சொல்லுங்க?

தல..அந்த பொண்ணிடம் ஒருவன் பேசினான். ஆனால் அடுத்த ஐந்தே நிமிடத்தில் அவனை நடுரோட்டில் அடித்தே கொன்றனர். அதை பார்த்து அந்த பொண்ணு மயங்கியே விழுந்துடுச்சு.

என்ன பாவம் பண்ணுச்சோ? அந்த பொண்ணு யாரிடமும் பேசியே பார்த்ததில்லை. எங்களிடம் கேட்க கூட மறைவான இடத்தில் வந்து தான் கேட்டாள். அந்த சூப், அப்புறம் உங்க பிறந்தநாளன்று இனிப்பும், நீங்க கட்டி இருக்கும் கைகடிகாரமும், ஒருநாள் சாப்பாடு கூட கொடுத்தாள். அதுவும் நாங்கள் வருவதை பார்த்து வைத்து விட்டு ஓடி விடுவாள்.

எதுக்கு யாரிடமும் பேச மாட்டாள்?

தல..உங்களுக்கு புரியலையா? அந்த பொண்ணு வீட்ல கல்யாண ஏற்பாடாக கூட இருக்கலாம்.

கல்யாணமா? என்று அதிர்ந்தான்.

தல..அந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லிடாதீங்க என்றான் ஒருவன்.

பிடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் கைரவ் கூற, தல எங்கள விட்டுருங்க என்றான் மற்றவன்.

அந்த பொண்ணு நாளைக்கு கல்லூரி வருவா? அவளை பின் தொடர்ந்து என்ன செய்றான்னு சொல்லணும்?

தல..அந்த பொண்ணு பின்னாடி போனா..சாவு நிச்சயம்.

எனக்கு தெரியாது. எனக்கு அவள பத்தி தெரியணும் என்றான் கைரவ் பிடிவாதமாக.

சரி..முயற்சி செய்கிறோம் என்று போனை துண்டித்தனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement