Advertisement

ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

இதோ உங்களுக்கான எபிசோடு 14

நிவாஸ் ஸ்ரீ வீட்டிற்கு வந்த கொஞ்ச நேரத்தில் ஜிதின் அங்கே வந்து, என்ன வாங்கி வந்தீர்கள்?இருவரும் விழித்துக் கொண்டிருந்தனர்.

ஜிதின் அவனாகவே வந்து, நீங்கள் இதை மறந்து கடையிலே வைத்து வந்து விட்டீர்கள் போல, கடையிலிருந்து ஆட்கள் வந்து கொடுத்தார்கள் என்று அவனே அதை பிரித்து,

வாவ், இந்த ஆடை உனக்கு ரொம்ப அழகாக இருக்கும் ஸ்ரீ. நிவாஸ் உன்னுடையதை எனக்கு தருகிறாயா? புது மாடல் உடை என்று ஜிதின் நல்லவனாக பேசினான்.

யார் அனுப்பியது? என்று இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, இது யார் கொண்டு வந்தது ஸ்ரீ கேட்டாள்.

கடை ஆட்கள் தான். உன்னுடைய கல்லூரி அடையாள அட்டை இருந்ததால் இப்பொழுது தான் கொடுத்து விட்டு சென்றான் ஒருவன்.

அவன் எப்படி இருந்தான்?

அவன் முகம் தெரியவில்லை.முகக்கவசம் அணிந்திருந்தான் என்றான் ஜிதின்.

இல்லை இது எனக்கு வேண்டும் என்று பேசி ஜிதினை நிவாஸ் அனுப்பி விட்டு,வேகமாக ஜன்னலருகே வந்து பார்த்து அதிர்ச்சியோடு இருந்தான். ஸ்ரீ வந்து பார்க்கும் போது அங்கே யாருமில்லை.ஸ்ரீ நிவாசிடம் கேட்டாள்.

யாருமில்லை என்று கூறி விட்டு தூங்க சென்றவனால் தூங்க முடியவில்லை. ஜிதினை போல் ஸ்ரீயும் இதை பெரியதாக எண்ணவில்லை.

மறுநாள் காலையில் நண்பர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டனர். நித்தி அகிலுடன் சரியாக பேசவே இல்லை.

அர்ச்சுவிடம் என்ன பேசினாய்? கவின் கேட்க,

அவன் நிவாசை பயன்படுத்த வேண்டாம் என்கிறான். வேறு வழியில் அவளது பிரச்சனையை கண்டறிவோம் என்கிறான் நித்தி சொல்ல, நீ என்ன மாறி மாறி பேசுகிறாய்?அகில் நித்தியிடம் கத்தினான்.

அவன் கூறியதை கூறி,ஸ்ரீ நம்மை நம்பாமல் போனால் என்ன செய்வது?நித்தி அமைதியாக பேச,

அவளுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்வோம் அகில் கூறினான்.

எத்தனை நாட்கள் மறைக்க முடியும்.புரிந்து கொள் அவள் கூற, கவினும் அபினவும், அவள் கூறுவது சரி என்று கூறினார்கள்.

அகிலுக்கு மீண்டும் கோபம் அதிகமானது. என்ன அவனது பேச்சை கேட்டுக் கொண்டிருக்கிறீர்களா? இதற்கு தான் அவனை பார்க்க வேண்டாம் என்று முதலிலே கூறினேன் என்று கத்தினான். அனைவரும் அகிலை பார்க்க, நிவாசும் ஸ்ரீயும் வந்தனர்.

தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த யாசு, அகில் முன்னே வந்து அவளது நல்லதிற்காக தான் இந்த முடிவு. நீ தானே அவனை அழைத்தாய்? இனி நீயே நினைத்தாலும் அவளது பிரச்சனை முடியாமல் அர்ச்சு வேறெங்கும் செல்ல மாட்டான். நான் இப்பொழுது ஒரு விசயத்திற்கு மிகவும் சந்தோசப்படுகிறேன். உன்னை போல் ஒரு சுயநலவாதியை இப்பொழுது நான் காதலிக்கவில்லை.

அகிலும் கோபமாக, உன்னை யார் காதலிக்க கூறியது?

யாரும் கூறவில்லை தான்.இனி அந்த மோசமான வேலையை நான் செய்ய மாட்டேன். உன்னை ஒருத்தி காதலித்தால் அவள் முட்டாளாக தான் இருக்க முடியும் அவள் ஆவேசமாக பேச, நித்தியாலும் தடுக்க முடியவில்லை.

உனக்கு என்ன தான் பிரச்சனை? கவின் யாசுவை பிடிக்க, அவனது கையை தட்டி விட்டு,

நீ அர்ச்சுவை எப்படி அழைத்தாய்? எதற்காக அழைத்தாய்? அவனிடம் என்ன கட்டுப்பாட்டை விதித்திருக்கிறாய்? நீ அவன் மீது கோபமாக இல்லை.அவன் மீது பொறாமையில் தான் இருக்கிறாய். நீ காதலிக்கும் பெண் அவன் வசம் திரும்பி விடுவாளோ என்று பயம் தான் உனக்கு. நீ அர்ச்சுவை பார்த்து பயப்படுகிறாய் பொரிந்து தள்ளினாள்.

அகில் யாசுவிடம் கையை ஓங்க, நிவாஸ் தடுத்தான்.

ஏன் சீனியர் உங்களுக்கு இவ்வளவு கோபம்?

யாசு விடாது, நீ அவனிடம் பொறாமை படும் அளவிற்கு அவனிடம் ஒன்றுமே இல்லை. வெறும் பணத்தை வைத்துக் கொண்டு அவன் என்ன செய்வான்? அவன் வாழ்க்கையை உன்னால் ஒரு நாள் கூட வாழ முடியாது அவள் அழுதாள்.

அனைவரும் அவளையே பார்க்க, போதும் யாசு வா போகலாம் என்று நித்தி அவளை அழைத்தாள்.

ஒரு நிமிடம் நித்தி என்று, யாசு அகில் அருகே வந்து அவன் உன்னுடைய நண்பனாக, உனக்காக எதையும் விட்டு தருவான் என்று ஸ்ரீயை எறித்து விடுவது போல் முறைத்தாள்.பின் அகிலை பார்த்து, அவனை உன்னுடைய போட்டியாளனாக பார்க்காதே! முதலில் நண்பனாக பார் அப்பொழுது தான் அவனது வேதனை புரியும். உன் மனதில் தெளிவும் பிறக்கும் யாசு செல்ல,நித்தியும் அகிலை பார்த்து விட்டு சென்றாள்.

நிவாசிற்கு இப்பொழுதும் தான் தெளிவாக புரிந்தது. அகிலும், அர்ச்சுவும் ஸ்ரீயை காதலிக்கிறார்கள். அர்ச்சு ஸ்ரீயை விட்டு கொடுக்க தயாராக இருந்தாலும் அகில் அர்ச்சுவை நம்ப மாட்டேன் என்கிறான். அதனால் அவர்களது நட்பிலும் விரிசல் உள்ளது. ஆனால் ஸ்ரீக்கு யாசு கூறிய சுயநலவாதி என்பது மட்டும் ஒளித்துக் கொண்டே இருக்க, ஸ்ரீக்கு கற்பனையாக ஏதோ ஒரு விசயம் தெரிகிறது. அகிலை ஒரு பெண், வேறொருவரிடம் அவன் ஒரு சுயநலவாதி திட்டுவது போல் தெரிகிறது .

அவள் அப்படியே உட்கார்ந்தாள்.யாரும் அவளை கவனிக்கவில்லை. பின் அவளை அவளே சமாளித்து விட்டு எழுந்து நின்றாள்.

கவின் பல பெண்களுடன் நெருக்கமாக இருப்பதை கண்டு, நித்தி அவனிடம் சென்று, என்னடா செய்கிறாய்?

பார்த்தால் உனக்கு தெரியவில்லையா? நான் ரொம்ப ஜாலியாக இருக்கிறேன். தொந்தரவு செய்யாதே!

என்னை தொந்தரவு என்கிறாயா?

ஆமாம்,நீ தொந்தரவு தான். முதலில் இங்கிருந்து செல் என்று கூறிக் கொண்டு ஒரு பெண்ணின் தோளில் கவின் கையை போட, கோபத்தின் உச்சிக்கே போனாள் நித்தி.

அங்கே இருந்த ஒரு பெண் வைத்திருந்த தண்ணீரை பிடுங்கி கவின் தலையில் ஊற்றி விட்டாள்.

உடனே கவின், தேவையில்லாத விசயத்தில் நீ தலையிடாதே! சென்று உன்னுடைய ஆளை கவனி என்றான்.

உன்னுடைய தோழியாக நீ இப்படி செய்வதை பார்க்க கஷ்டமாக உள்ளது. உன்னுடைய நல்லதிற்காக தானே கூறுகிறேன்.

எனக்கு யாரும் நல்லது நினைக்க தேவையில்லை.சிறு வயதிலிருந்தே உன் பின்னே தானே சுற்றினேன். நீ தான் என்னை ஏற்றுக் கொள்ளவில்லையே! நான் என்ன செய்தால் உனக்கு என்ன?

நித்தி கண்கலங்கியவாறே…..நீ கூறியது சரி தான். நீ என்ன செய்தால் எனக்கு என்ன? அவள் கிளம்பிய போது. கவினுடன் இருந்த பெண், இனி எங்களை தொந்தரவு செய்யாதே! அவனருகே நீ வரவே கூடாது என்று தண்ணீரை எடுத்து நித்தி மீது வீசினாள்.

இதை எதிர்பார்க்காத கவின் வேகமாக எழ, அந்த பெண்கள் அவனை பிடித்துக் கொண்டனர். அவனால் எழ முடியாமல் தவித்தான்.ஆரம்பத்தில் இருந்தே நாம் தோழன், தோழிகள் தான். என்னால் உன் காதலை ஏற்றுக் கொள்ள முடியாது. அகில், அபி போல தான் நீ எனக்கு. எனக்கு எப்பொழுதும் உன் மீது காதல் உணர்வுகள் வரவே வராது.வாழ்க்கை முழுவதும் நான் உன்னுடைய தோழி மட்டும் தான்.என்னை விட உன்னை நேசிக்கும் பெண்ணை சீக்கிரமே பார்ப்பாய்.அவளை காதலி.அவளுக்காக நேரத்தை செலவழி.நான் உன்னை காதலிக்க வேண்டாம் என்று கூறவில்லை. இந்த மாதிரி தவறான வழியில் செல்லாதே! இது உனக்கு மட்டுமல்ல, உன்னை சார்ந்தவர்களையும் காயப்படுத்தும் என்று தலை ஈரமாக உள்ளதால் கைக்குட்டை எடுத்து தலையில் போட்டுக் கொண்டு, கண்ணீரை துடைத்துக் கொண்டு ஓடினாள்.

நித்தி….நில்லு….கத்தினான்.

உனக்கு ஒரு துளி கூட என் மேல் காதல் வரவில்லையா? தலையை பிடித்துக் கொண்டு கவின் கத்த,அந்த பெண்களிடம் இனி என் பக்கமே வராதீர்கள் என்று கத்தி விட்டு அவர்கள் சென்றவுடன் அழுது கொண்டிருந்தான்.

வருத்தத்துடன் நித்தி, அபினவ் அருகே வந்து உட்கார்ந்தாள்.அவன் கையில் இரண்டு புத்தகங்களை வைத்து படித்துக் கொண்டிருந்தான்.

நித்தியை பார்த்தவுடன், உனக்கு என்ன ஆயிற்று? தலை ஏன் இவ்வளவு ஈரமாக உள்ளது?கேட்டான்

கவினிடம் பேசியதை அபியிடம் கூறினாள்.

அவனுடைய காதலை உன்னை ஏற்று கொள்ள வைக்க தான் இவை அனைத்தும் செய்கிறான் இல்லையென்றால் இது போலா அவன் பெண்களுடன் பழகுவான்? உன் அளவிற்கு யாரையும் அவன் இன்னும் பார்க்கவில்லை. அவனுக்கு ஏற்ற பெண் கிடைத்து விட்டால் அனைத்தும் சரியாகி விடும்.

சீக்கிரம் அந்த பெண் வந்து விட்டால் நன்றாக இருக்கும் என்றாள் நித்தி.

அவன் அவளை பார்த்து சிரிக்க,அபி, எதற்காக சிரிக்கிறாய்? நீயும் ஒரு பெண்ணை காதலிக்கலாமே!

அவன் சரியாகி விடுவான்.நம்முடைய விசிறிகள் தான் பேச வருகிறார்கள்.

அதனால் என்னடா? பழக வேண்டியது தானே!

என் புகழை காதலிப்பவர்களாக தான் இருக்கிறார்கள். என்னை யாரும் காதலிக்கவில்லையே!

அவள் சிரித்துக் கொண்டே, உனக்கானவள் வெகு விரைவிலே சந்திக்க தான் போகிறாய் என்று என் ஆறாம் மூளை கூறுகிறது.

அவனும் சிரித்தான். சைலேஷ் தான் நடந்ததை கூறி விட்டாரே! நீ ஏன் அவரை ஏற்றுக் கொள்ள கூடாது. அவர் உன்னை பார்க்கும் போதெல்லாம் அவரிடம் பேச மாட்டாயா? ஏக்கத்தோடு பார்க்கிறார்.

என்னால் அவரை முழுதாக நம்ப முடியவில்லை. பயமாக உள்ளது என்றாள்.

உனக்கு இப்பொழுதும் அவர் மீது காதல் உள்ளது தெளிவாக தெரிகிறது. சீக்கிரம் பேசி விடு. உன் இடத்தை நீயே வேறொருவருக்கு கொடுத்து விடாதே!

பேச முயற்சி செய்கிறேன் என்றாள்.

கவின் அங்கே வந்து, நித்தி….என்னை மன்னித்து விடு…இனி தவறான பழக்கத்தை விட்டு விடுகிறேன்.

அபி மகிழ்ச்சியோடு கவினை பார்க்க, நித்திக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அவன் பக்கம் திரும்பாமலிருந்தாள்.

கவின் நித்தி அருகே வந்து மண்டியிட்டு மன்னிப்பு கேட்டான்.பின் சைலேஷ் பற்றி கவின் கேட்கவே,நித்தி அமைதியாக இருந்தாள்.அவர் அன்று கூறியது உண்மை தான். ஆனால் முழுவதையும் அவர் நம்மிடம் கூறவில்லை.

நம் வகுப்பு நவீன் ஒரு வீடியோ பார்த்துக் கொண்டிருந்தான்.அதில் அந்த மேடமும்,சைலேசும் பேசியதை பார்த்தேன்.அந்த வீடியோவை அவனிடமிருந்து வாங்கி விட்டு அவனது போனில் அழித்து விட்டேன் என்று அவனது போனை காட்டினான்.

தனியே அழைத்து சென்ற சைலேஷ், மேடமை பார்க்க விருப்பமில்லாமல் திரும்பி இருக்க, அவர் அவனது இடுப்பை கட்டிக் கொண்டு,கோபப்படாதே!

ச்சீ……கையை எடு. உனக்கு அசிங்கமாக இல்லை. திருமணம் முடிந்தும் இப்படி நடந்து கொள்கிறாய்? அவன் பணக்காரன் போலவே?

ஆமாம். பணக்காரன் தான்.நான் வசதியானவள் போல் காட்டிக் கொண்டு தான் திருமணம் செய்தேன்.ஆனால் அவர்கள் என்னை பொருட்டாய் கூட மதிக்காமல் அவர்களுடைய வேலையை மட்டும் கவனித்து வந்தனர். எனக்கு இப்பொழுது தான் புரிகிறது. நான் மகிழ்ச்சியாக இருக்க, பணம் தேவையில்லை.அன்பு தான் தேவை. எனக்கு நீ மட்டும் போதும் மீண்டும் அவனருகே வந்தாள்.

பொறுமை இழந்த சைலேஷ், அவளை தள்ளி விட்டு,நீ திருமணம் செய்தவரை கூட ஏமாற்ற தான் செய்திருக்கிறாய்?அதனால் தான் அவர்கள்  உன்னை மதிக்கவில்லை. அவரை விவாகரத்து செய்திருக்கிறாய்? அப்படிதானே!

நீ உண்மையாக தவறை புரிந்து கொண்டால் அவருக்கு புரிய வைத்து சேர்ந்து வாழ்ந்திருப்பாய்.கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் என் அருகே வருகிறாய்? உன்னை பார்த்தாலே எனக்கு அருவருப்பாக உள்ளது. எனக்கு வேறொரு பெண்ணை பிடித்திருக்கிறது.

யாரு? உன் பின்னே சுற்றினாலே அவள் தானே!

ஆமாம்,அவள் மட்டும் தான் என் வாழ்க்கைக்கு உரியவள்.

அவளை சும்மா விட மாட்டேன். என்ன செய்கிறேன் பார்…

அவள் அருகே கூட நீ வர நினைக்காதே! அப்புறம் உன் வேலை மட்டுமல்ல, அனைத்தும் உன்னை விட்டு சென்று விடும். அவள் அருகே வந்து, என்னை பற்றி தான் உனக்கு தெரியுமே! என்னிடம் கவனமாக இரு.உன் பார்வை கூட அவள் பக்கம் விழக் கூடாது. அவள் அருகே சென்றால் கூட உனக்கான பின் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று சைலேஷ் கண்ணால் எறிப்பதை போல் முறைக்க, அவளும் அவனை முறைத்து விட்டு அங்கிருந்து சென்றாள்.

அடேங்கப்பா,…என்னம்மா மிரட்டுகிறார்? அவரா இது? அபி ஆச்சர்யமாக நித்தி பக்கம் திரும்ப, அவள் உறைந்து போய் உட்கார்ந்திருந்தாள்.

இப்பொழுது நீ அவரிடம் பேசுவாயா? அபி கேட்க

யோசித்துக் கொண்டே இல்லை என்றாள்.நித்தி திடீரென சிரித்துக் கொண்டு, அவருடன் சிறிய விளையாட்டு விளையாடலாமா?

விளையாட்டா?

ஆமாம், அவளுடன் சேர்ந்து என்னை காயப்படுத்தினாரே, அதற்கு பதில் நானும் கொடுக்க போகிறேன் கவினை பார்த்துக் கொண்டே கூறினாள்.

எனக்கு புரிந்தது. நான் உதவுகிறேன்…..அமைதியாக கவின் கூறினான்.

என்னடா செய்ய போகிறீர்கள்?அபி கேட்டான்.

நீயே பாரு என்று இருவரும் சிரித்து விட்டு கிளம்பினார்கள்.

சும்மாவே இரண்டு பேரும் சேர்ந்தாலே கலக்குவார்கள். அய்யோ பாவம்! சைலேஷ் மனதினுள் நினைத்த படி இருவரையும் பார்த்தான்.

                       “உனை பார்த்த விநாடி

                          எனை அறியாது

                     கண்கள் மழையாகிறதே!

                          யாரடா எனக்கு நீ ?

                         யாரடா எனக்கு நீ  ?

                   தூரத்து வெளிச்சமாகிறாய்!

                   என் மனதில் துளிரானாய்!

                          யாரடா எனக்கு நீ?

                            யார் நீ?”

 

Advertisement