Advertisement

அத்தியாயம் 19

துளசி சத்தம் கேட்க அங்கே வந்தான் ஆதேஷ். ஆசிரியர் ஒருவர் அவனை பார்த்து விட்டு தலைமை ஆசிரியரிடம் கூற, அவர் அங்கே தான் வந்து கொண்டிருந்தார்.

ஜானுவும் துளசியும் அந்த பையன் அருகே வர, அவன் கையில் சிகரெட்டுடன் நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தான்.

ஜானு அவனை முறைத்தபடி முன் நின்றாள். துளசியும் அவளுடன் இருப்பதை பார்த்து..டேய்..ஒன்னு வாங்குனா இன்னொன்று ஃபீரிடா என்று சிரித்தான்.

டார்லிங்..வாங்க..வாங்க..உங்களுக்காக தான் காத்திருக்கேன் என்று ஜானுவின் அழகை வர்ணிக்க ஆரம்பித்தான்.

இதை கேட்க நான் வரலைடா. இதோட நிறுத்திக்கோ..என்று ஜானு கூற அப்பொழுது தான் ஆதேஷ் அங்கு வந்து மரத்தின் பின் மறைந்து நின்றான்.

டார்லிங்..நான் இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே அதற்குள் எப்படி நிறுத்துவது?

ஆரம்பிக்க போறியா? என்ன பேசுற? இது ஸ்கூல் ஒழுங்கா பேசு துளசி கூற,

உனக்கும் இவ்வளவு தைரியமா? என் டார்லிங் கூட சேர்ந்து உனக்கு தைரியம் பொறந்துருக்கு போல..என்று ஜானு அருகே வந்து, எங்க என்ன மாமான்னு கூப்பிடு?

என் மாமாவை தவிர யாரையும் மாமான்னு சொல்ல மாட்டேன் என்றாள் ஜானு.

எத்தனை நாளா இப்படி பிடிவாதம் பண்ற? கூப்பிடுடி..என்று ஜானுவின் தாடையை பற்றி அழுத்தியவாறு கேட்டான்.

போடா பொறுக்கி..என்றாள். ஆதேஷிடம் மாமான்னு சொல்ல மாட்டேன்னு அவள் சொன்ன காரணம் இதுவாக இருக்குமோ? என்று பார்த்தான் அவன்.

பொறுக்கியா? நானா? என்று மேல் பட்டன் இரண்டை கழற்றிக் கொண்டே மாமாவை பொறுக்கின்னு சொல்லக் கூடாதும்மா..

உன்னோட அபி மாமா..தான் இங்க இல்லையே? என்னை அழைக்க என்ன வந்தது?

ச்சீ..உன்னை நான் அழைப்பதா? முடியாது.

இன்று வந்தானே? யார் அவன்? ஆதேஷை கேட்டான்.

உனக்கு எதுக்கு நான் சொல்லணும் ஜானு கேட்க, அவரு எங்க மாமா என்றாள் துளசி.

மாமாவா? என்று அவன் ஜானுவை பார்த்து, நீ மாமான்னு தான் அழைப்பாயா?

அப்புறம் அண்ணான்னா அழைப்பேன். மாமான்னு தான் கூப்பிடுவேன். இப்ப என்ன உனக்கு? என்று அவள் சினமுடன் அவனிடம் கேட்க, ஆதேஷ் உதட்டில் புன்னகை அரும்பியது.

எவ்வளவு திமிரு இருந்தா அவனை மாமான்னு அழைப்பாய்? அதுவும் என்னிடமே சொல்கிறாய்? அவளது தோளை பிடித்து அழுத்த,..

என்னை தொட்ட அவ்வளவு தான். என் அண்ணா உன்னை கொன்னுடுவான்.

அப்படியா? நான் தொட்டுக்கிறேன் அப்புறம் உன் அண்ணா என்னை கொல்லட்டும் என்று அவளது இதழ்களை கைகளால் வருட அவனை தள்ளி விட்டு,

ச்சீ,..நாயே தொடாதே. எனக்கு அருவருப்பா இருக்கு என்றாள்.

அவன் தொட்டால் நல்லா இருக்குமோ? அவன் கேட்க, ச்சீ அவர் உன்னை போல் இல்லை. காதலியா இருந்தாலும் கன்னியமாகவே நடந்து கொள்வார் என் ஆதேஷ் மாமா.

அவள் பேச்சில் அசந்து நின்றான் ஆதேஷ். துளசியும் விழிவிரித்து ஜானுவை பார்த்தாள். அபி மாமா..அபி மாமா..உயிரையே விடுற ஜானுவா? என் ஆதேஷ் மாமாவா? என்று பார்த்தாள்.

உன் மாமாவா?

அப்புறம் என்ன அவர் உன் மாமாவா? துடுக்காக கேட்டாள்.

உன் விருப்பமில்லாமல் தொட வேண்டாம்னு நினைத்திருந்தேன். ஆனால் நீ பேசுறது சரியில்லையே?

உன் அபி மாமாவிற்கு உன் மீது காதல் இல்லை என்று தான் இத்தனை நாட்கள் உனக்காக காத்திருந்தேன். இவன் என்ன புதுசா வந்திருக்கான்?

என்ன பேசுற? என்னோட அபி மாமாவுக்கு என்னை பிடிக்கும் என்று அவனிடம் கூற, அவன் விழுந்து விழுந்து சிரித்தான்.

உன் மாமாவுக்கு உன்னை மட்டுமல்ல இவளையும் பிடிக்கும் முறைப்பெண்ணாக தான். ஆனால் அவன் உன்னை காதலிக்கவில்லை. காதலித்தால் உன்னை விட்டு தள்ளி இருப்பானா? ஒரு வேலை காதல் இருந்தால் உன்னை அடிக்கடி பார்க்க வந்திருப்பான். ஆனால் போன வருடம் விழா நேரத்தில் மட்டும் தான் வந்தான்.

ஜானுவுக்கு தாரிகா கூறியது நினைவுக்கு வந்தது. அவள் கண்கள் கலங்கியது.

டார்லிங் எதுக்கு அழுறீங்க? அதான் அவருக்கு பதில் நான் இருக்கேனே?

நீ என்னோட அபி மாமா மீது பயத்தில் இல்லையா?

அவனுக்கும் மட்டுமல்ல எவனுக்கும் நான் பயப்பட மாட்டேன்.

மாமா..என்னை காதலிக்கலன்னு தான் அவரை விட்டுட்டியா?

ஆமாம்..உனக்கு இன்று பார்த்த மாமாவை பிடிக்குமா?

இங்க பாரு என் வழிக்கு வராதே. என் அண்ணாவிற்கு தெரிஞ்சா உன்னை ஒரு வழி பண்ணிடுவான் என்று பேச்சை மாற்றினாள்.தாரிகாவும் துகிராவும் அங்கே வந்தனர். ஆதேஷ் மறைந்திருப்பதை பார்த்து அவர்களும் மறைந்து நின்றனர். அந்த ஆசிரியரும் மறைந்து ஜானுவை பார்த்துக் கொண்டிருந்தார்.

டார்லிங்..என்னையா பயமுறுத்துறீங்க? என்று துளசி அருகே இருந்தவனிடம் கண்காட்டினான். அவன் துளசியை அடித்தான்.

துளசி…என்ற ஜானு. ஏய்..என்ன பண்றீங்க? அவளை விடு என்றாள்.

இந்தா என்று ஒரு பானத்தை நீட்டினான். உனக்கு பிடித்தது டார்லிங் குடி..என்றான்.

எனக்கு வேண்டாம் என்றாள்.

உனக்காக ஆசையா வாங்கி வைத்தது. குடி என்றான்.

இப்படியெல்லாம் கட்டாயப்படுத்தினால் காதல் வராது. என்னை விட்டுடேன்.

உன் மாமா உன்னை காதலிக்கவில்லை என்று தான் நான் புரியவைத்து விட்டேனே? எனக்கு ஒரு வாய்ப்பு கொடேன்.

என்னோட மாமா..என்று ஜானு பேச அவளது கழுத்தை பிடித்து அவள் வாயில் பானத்தை ஊற்றி விட்டு அவனது கைக்குட்டையை எடுத்து அவளது வாயை துடைத்து விட்டு அவள் இதழருகே சென்றான்.

அவளை விடுடா..என்று துளசி கத்த, அவள் அருகே வந்தவன் என் டார்லிங் அளவு இல்லைன்னாலும் நீயும் அழகா இருக்க என்று அவளை தொட வந்தான்.

துளசி அருகே இருந்தவன் அவளை பிடித்துக் கொள்ள, ராகுல் நோ..அவளை ஏதும் செய்து விடாதே என்று ஜானு பதறினாள்.

நான் மாமான்னு கூப்பிடணும் அவ்வளவு தானே? என்று அவள் கூப்பிடுவதற்குள் ஜானு..என்று ஆதேஷ் அங்கு வந்தான். ஆசிரியர் ஆசிரியைகளும் அங்கு வந்தனர்.

இவங்க எப்படி வந்தாங்க? என்று ராகுலும் நண்பர்களும் விழிக்க, இதை எதிர்பார்த்தவன் போல் ஆதேஷ்..பள்ளி ஆசிரியர் முன் வந்து, எல்லாரும் என்ன பண்றீங்க சார்?

பொண்ணுங்கள தொந்தரவு பண்றாங்க. வேடிக்கை பாக்குறீங்க? கேட்டான்.

அதை கேட்க, நீ யாருடா? ராகுல் கேட்டான்.

ஏன்டா, உனக்கு தெரியாதா? ஆதேஷ் கேலியா பேச, தாரிகாவும் துகிராவும் வேண்டாம்டா என்றனர்.

அப்ப..அவங்கள அப்படியே விட்டுடலாமா? ஆதேஷ் அவர்களுக்கு கேட்கும் படி கேட்டான்.

நாங்க அப்படி சொல்லல? அவனை பாரேன். தடிமாடு மாதிரி இருக்கான். உன்னால சண்டையெல்லாம் போட முடியாது.

அதான் இவங்க இருக்காங்கள..என்று அங்கிருந்தவர்களை பார்த்தான்.

ஜானு இங்க என்ன நடக்குது? தலைமை ஆசிரியர் கத்தினார்.

ஆதேஷ் அவரை முறைத்து விட்டு, பிரச்சனை அவன் தான். ஆனால் நீங்க ஜானுவை திட்டுறீங்க என்றான் கோபமாக.

தம்பி, நீங்க யாரு? நீங்களே யாரிடமும் கேட்காமல் உள்ளே வந்துருக்கீங்க?

சார்..நான் யாருன்னு தெரியுறதுக்கு முன்னாடி இந்த பிரச்சனைய முடிங்க. நான் என்னை பற்றி கூறுகிறேன். இனி ஜானு பின் அவன் வரக் கூடாது. உங்களால முடியுமா?

அவர் அமைதியாக, அவன் பெரிய இடத்து பையன். அவனை ஏதும் சொல்ல முடியாது.

ஓ..அப்ப ஜானு மேல தப்புன்னு சொல்றீங்களா? அவன் கேட்க, அவர் தயங்கியவாறு இல்லை என்றார்.

சரி. அவனை பற்றி சொல்லுங்க என்று ராகுலை பார்த்தான்.

அவர் அவன் செல்வவளத்தை கூற, சார் நான் அதை பற்றி கேட்கலை. அவனுடைய திறமையை பற்றி என்று அவனை பார்த்தான்.

எங்க ராகுலை கேம் விளையாடுறதுல யாரையும் ஜெயிக்க முடியாது என்று அவன் நண்பன் கூற, துகிரா அட அது எனக்கே தெரியுமே?

சரி..ஒரு டீல் வைச்சுக்கலாம் என்று ஆதேஷ் அவனருகே வந்து அவன் தோளில் கையை போட்டுக் கொண்டு, நாம ப்ளே பண்ணலாம். நான் ஜெயித்தால் நீ ஜானு பக்கம் கூட வரக்கூடாது.

நான் ஜெயித்தால் என்று அவன் கேட்க, ஜானு ஓடி ஆதேஷிடம் வந்து வேண்டாம் என்றாள்.

நான் பார்த்துக்கிறேன் என்றான். அவள் பயத்துடன் அவனை பார்க்க, நீ ஜெயித்தால் நான் இவங்க எல்லார் முன்னும் மண்டியிட்டு மன்னிப்பு கேட்கிறேன்.

துகிராவும் தாரிகாவும் ஒன்றாக நோ..என்றனர்.

துகி உனக்கு தான் தெரியும்ல..இருந்தாலும் வேண்டாம் என்று அவள் கூற, ஜானுவும் துளசியும் அவனிடம், எங்க பிரச்சனைய நாங்களே பார்த்துக்கிறோம் என்றனர்.

ஜானு அருகே வந்து, எத்தனை நாளா தொந்தரவு பண்றான்? கேட்டான் ஆதேஷ்.

மூன்று வருடங்களாக என்றாள்.

மாமாவிடம் சொன்னாயா?

இல்லை என்று தலையசைத்தாள். ஆதேஷ் ஜானுவை அறைந்தான்.

ஆது..என்று தாரிகாவும், ஜில்லா என்று துகிரா அவர்களிடம் வந்தனர்.

என்ன? என்று அவர்களையும் முறைத்தான். இருவரும் அப்படியே நின்று விட்டனர். ஜானு கன்னத்தில் கை வைத்தவாறு அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். மாமா..என்று துளசி கூற,

மாமாவா..? என்று தலைமை ஆசிரியர் ஆதேஷை பார்த்தார்.

பொண்ணுங்க தைரியமா இருக்குறது நல்ல விசயம் தான். ஆனால் எதுக்கு பயப்படணுமோ அதுக்கு பயந்து தான் ஆகணும். இவனுக்கு உன்னை பிடிச்சதுனால ஒன்றும் செய்யாமல் இருந்திருக்கான். வேற எவனாது இருந்தா என்ன நடந்திருக்கும்? மாமாவிடமாவது சொல்லணுமா? இல்லையா? என்று ஜானுவை திட்ட, அவள் அழ ஆரம்பித்தாள்.

டார்லிங் எதுக்கு அழுறீங்க? அவன் கேட்க,

ஏய்..நிறுத்துறியா? நீ என்ன கொஞ்சினாலும் அவள் உன்னை பார்க்க கூட மாட்டாள்.

சார்..நாங்க ப்ளே பண்றோம். அவனும் அடங்குவான். நீங்க என்ன சொல்றீங்க? ஆதேஷ் கேட்டான்.

நீயே ஜெயிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்? அவ்வளவு சீக்கிரம் ஜானுவை விட மாட்டேன். எனக்கு அவள் என்றால் உயிர் ராகுல் சொல்ல..

அப்படியா தம்பி..அதையும் பார்த்திடலாம் என்றான் ஆதேஷ்.

ஆது..என்று தாரிகா அழைக்க, அவளை பார்த்து விட்டு துகியை பார்த்தான்.

நீ ஆரம்பிடா என்று துகிரா கூறி விட்டு தாரிகாவிடம், இவனை ஜெயிக்க தான் கேம் விளையாடி பிராக்டிஸ் செய்வேன். என்ன ஒரு முறை கூட இவனை வெற்றி அடைய முடியவில்லை என்றாள்.

ஆது, நீ கேம் விளையாடுவியா? என்னிடம் சொன்னதேயில்லை. அவன் அவளை பார்த்து கண்ணடித்தான்.

ஆதேஷ் சாரை பார்க்க, ஒத்துக்கிறோம் பொண்ணுங்க பாதுகாப்புக்காக என்றார்.

பசங்க, ஆசிரியர் அனைவரும் குழுமி இருக்க, ஆரம்பித்தது. ஆதேஷ் அருகே துருவன் நின்று கொண்டிருந்தான். ஜஸ்ட் விளையாட்டாக மட்டும் பசங்க பார்க்க, ஆதேஷ் ஜானுவுக்காக மட்டுமல்ல, இனி ராகுல் எந்த பொண்ணையும் தொந்தரவு செய்யக் கூடாது என்று கூறி இருவரும் தொடங்கினார்கள்.

மாம்ஸ் நீங்க தான் ஜெயிக்கணும் என்று சக்கரை ஆதேஷ் அருகே ஓடி வந்தான். அவனுடன் கையை அடித்துக் கொண்ட ஆதேஷ் ஜானுவை பார்த்தான். அவள் அங்கேயே நிற்க,

ஜானு..வா..மாமா உனக்காக தான் போட்டியே போட்டுருக்காங்க என்று ஆதேஷ் அருகே அழைத்து சென்றாள் துளசி. அங்கிருந்த கம்ப்யூட்டரில் ஆதேஷூம் ராகுலும் ஆரம்பித்தனர்.

துருவனுக்கு நடந்தது தெரியாதுல. அவன் துளசியை தனியே அழைத்து சென்று அறிந்து கொண்டு அங்கே வந்தான். ஜானுவிற்கு முதல் முறையாக தயக்கமாக இருந்தது. அவள் ஆதேஷ் கையையே பார்த்தாள். அவன் கைகள் நர்த்தனத்தில் விசைப்பலகையை ஆடிக் கொண்டிருக்க அந்த சத்தமும், விளையாட்டில் துப்பாக்கி சுடும் சத்தமும் ஒலிக்க அனைவரும் ஆர்வமுடன் பார்த்தனர்.

ராகுல் நண்பர்கள்..கமான் மச்சி..என்று அவனை ஊக்கினர். ஆதேஷ் அருகே நின்ற துகிரா, அப்படி செய்..இப்படி செய்..என்று கத்த, சும்மா இரு துகி என்று ஆதேஷ் முழுகவனத்தையும் அதில் செலுத்திக் கொண்டிருந்தான். ஆதேஷ் கையிலிருந்து மீண்ட ஜானுவின் வேள்விழிகளோ அவனது விழிகளில் ஆர்வம் செலுத்தியது.

ஹே..ஹே..ஆது “யூ ஆர் தி வின்” என்று கத்தினாள் துகி. ஆதேஷ் ராகுலை பார்க்க, அவளை அறியாமல் ஜானு கண்ணிலிருந்து ஒரு சொட்டு நீர் ஆதேஷ் கைகளில் பட்டு தெறித்தது. அவன் கவனம் ஜானு மீது படர, அவள் அமைதியாக அவனை பார்த்துக் கொண்டு நின்றாள்.

மாம்ஸ்..சூப்பர்..என்று ஆதேஷை சட்டையை பிடித்து இழுத்து அவனை குனிய வைத்து, அவன் கன்னத்தில் முத்தமிட்டான் சக்கர. அவன் சக்கரயை பார்க்க, மத்த வாண்டுகளும் அவனை முத்தமிட்டு சென்றனர். அவனுக்கு ஏதோ விருது பெற்றது போல் இருந்தது. ஆதேஷ் கண்கள் கலங்க அவர்களை பார்த்தான்.

மாமா..மாமா..என்ற சத்தத்தில் ஆதேஷ் நிமிர்ந்து பார்த்தான். ராகுல் ஜானுவை கையை பிடித்து தரதரவென இழுத்துச் சென்றான். ஜானு விடாமல் பயத்தில் மாமா..மாமா..என்று கத்தினாள்.

அவளை விடு..விடுடா என்று துகிரா ராகுலை அடிக்க, அவளை அவன் நண்பர்கள் தள்ளி விட்டனர்.

நில்லுடா..நில்லு..என்று ஆதேஷ் கத்திக் கொண்டு துகியை தூக்கி விட்டு, டேய் முதல்ல ஜானுவை காப்பாத்தணும் என்றாள் அவள்.

போனை எடுத்த ஆதேஷ், அம்மா..என்று அழைத்துக் கொண்டே அவர்களை நோக்கி சென்றான். எல்லாமே தயார்டா..அவர் அப்பொழுதே வந்துட்டார் என்றார் அம்மா.

ஆதேஷுடன் துருவனும் ஓடி வந்தான். அண்ணா. அவனை விடக் கூடாது என்று துருவன் முன் செல்ல, ஆதேஷ் அங்கேயே நின்று துருவன் கையை பிடித்து நிறுத்தினான்.

 

 

 

 

 

Advertisement