Advertisement

ஹாய்……மக்களே

இதோ வந்து விட்டேன்……

உங்களுக்கான எபிசோடு 12

கைரவ், அவளை பார்த்து  விழுந்து விழுந்து சிரித்தான். அவள் ஏதும் புரியாமல் விழித்தவாறே இருக்க, அவன் சிரித்துக் கொண்டே இருந்தான். அவளுக்கு கடுப்பாகி விட்டது. இவ்வளவு நேரம் பாவமாக உட்கார்ந்திருந்த நித்தி அவனை பார்த்து அமைதியாக இரு……. எரிச்சலாக உள்ளது என்றாள்.

அவளை சமாளித்து விட்டு, என் அண்ணன் அந்த பொண்ணை அவனது வாழ்க்கையிலிருந்து முழுவதுமாக அகற்றி விட்டான்.உன்னிடம் மன்னிப்பு கேட்க தேடவும் செய்தான். உன்னை பற்றி யாருக்கும் ஏதும் தெரியவில்லை. உன்னை கல்லூரியில் வைத்து பார்த்தான். நீ தான் அந்த பெண் என்று தெரியவில்லை.ஆனால் உன்னுடைய குணம் அவனுக்கு பிடித்து விட்டது.அன்று முழுவதும் உன் பின் தான் சுற்றி இருக்கிறான். உனக்கு தான் தெரியவில்லை.

கல்லூரி பொறுப்பை அவன் ஏற்றுக் கொண்டதன் காரணம் நீ தானோ என்று எனக்கு தோன்றுகிறது.அந்த மேடம் கூட நேற்று அவனை பார்த்தாயே! அவன் அப்பொழுது கூட அவர்களிடம், எனக்கு வேறொறு பெண்ணை பிடித்திருக்கிறது.என்னை இனி தொந்தரவு செய்யாதே! கூறி விட்டான் என்று நித்தியை பார்த்து சிரித்தான்.

உனக்கு என்னை பிடிக்காது தானே! என் மேல் உனக்கு கோபம் இல்லையா? நித்தி கேட்டாள்.

என் அண்ணாவிற்கு சரியான பெண் நீ தான். முதலில் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. என் அண்ணன் உரிமையானவரை தவிர வேறு யாரிடமும் பேச கூட மாட்டான்.அமைதியாக தான் இருப்பான். கம்பெனியிலும் அவ்வாறு தான் நடந்து கொள்வான். வேலையை தவிர மற்ற பேச்சே வராது அவனுக்கு. ஆனால் நீ அப்படி இல்லை. அவனுக்கு எதிர்ப்பதம். நீ அவனுக்கு சரியாக தான் இருப்பாய் புன்னகைத்தான் கைரவ்.

எனக்கு உதவி தேவைப்பட்டால் கூட நீ செய்வாய் தானே?

என்னடா உதவி?

சிறு வயதிலிருந்தே எங்களுக்கு பெற்றோர்கள் இல்லை. தாத்தா தான் வெளி பொறுப்பை பார்த்துக் கொண்டார். அதனால் அவரால் எங்களை முழுதாக கவனிக்க கூட முடியவில்லை.அண்ணா என்னுடைய முழு பொறுப்பையும் கவனித்துக் கொள்வான். எனக்கு எல்லாமே அவன் தான். எனக்கு இப்பொழுது மட்டுமல்ல எப்பொழுதும் அவன் தான் எல்லாமே! அவரை திருமணம் செய்ய போகும் பெண்ணால் என்னை அவன் கவனிக்காமல் போய் விட்டால்….கைரவ் கண்கலங்க, நித்தி ஆறுதல் கூறுவாள் என்று பார்த்தால், அவளோ கைரவின் தலையில் ஓர் அடியை போட்டு விட்டு,

நீ வருபவளை பற்றி ஏன்டா கவலை படுகிறாய்? உன் அண்ணனை பற்றி யோசி…அவர் உன்னை விட்டு விடுவார் என்று தோன்றுகிறதா?பெற்றோர்கள் என்றாவது தன் பிள்ளை உதறி தள்ளுவார்களா? அதுபோல் தான் உன் அண்ணன். சிறு வயதிலிருந்து உனக்கு எப்படி அவர் எல்லாமாய் இருந்தாரோ! அதே போல் தான் அவருக்கு துணையாய் இருந்தது நீ மட்டும் தான்டா.உன்னை யாருக்காகவும் விட மாட்டார்டா…. அவள் பேச, அவளை அணைப்பது போல் கைரவ் வர,

ஓய்…..இதெல்லாம் என்னிடம் நடக்காதுடா, கொன்னுடுவேன்.பார்த்துக் கொள் நித்தி கூற, அவன் சிரித்துக் கொண்டே கண்ணீரை துடைத்தான்.

கைரவ் உன்னுடைய திமிர், கெத்து எதுவுமே உன் பேச்சில் காணுமே நித்தி கேட்க, கைரவ் வெட்கப்பட்டான்.

உனக்கு வெட்கமெல்லாம் வருமா? யாருடா அது?

ஸ்ரீ என்றான்.

ஸ்ரீயா? என்னை மன்னித்து விடு. என்னிடம் உதவி ஏதும் கேட்டு விடாதே! என்னுடைய இரண்டு நண்பர்கள் அவளை காதலிக்கிறார்கள்.நான் இந்த விசயத்தில் உதவ முடியாது என்றாள்.

அகிலை தானே கூறுகிறாய்? இன்னொருவன் யார்?

அது என்னால் கூற முடியாது.

என்னால் அவளை விட முடியாது என்றான்.

ஏதாவது செய்து தொலையுங்கள்டா….அவரை பற்றி பேசியதை யாரிடமும் கூறி விடாதே!அவரால் நான் காயப்பட்டேன். அவரை வைத்து விளையாடப் போகிறேன் என்றாள்.

என்ன செய்ய போகிறாய்?

பொறுத்திருந்து நடப்பதை வேடிக்கை பார்.

அவனுக்கு அதிக காயத்தை கொடுத்து விடாதே!பேசிக் கொண்டே மைதானத்தை விட்டு வெளியே வந்தனர்.

கூடைப்பந்து பயிற்சியாளரை பார்த்து அவன் நின்றான். அவர் நித்தியை பார்த்து, இவள் அந்த பெண்தானே மனதினுள் நினைத்தவாறு அவளை பார்க்க, கைரவிடம் கூறி விட்டு அவளும் அவரை பார்த்துக் கொண்டே சென்றாள்.

இங்கே வா என்று அகில் நிவாசை அழைக்க சீனியர், மேடம் வந்து விடுவார்கள் அவன் கூற, வா ஐந்தே நிமிடம் என்று அதே கோவிலுக்கு அழைத்து வந்து வெளியே நின்று,ம்ம்…கூறு…அவர்களை பற்றி…என்றான்.

நிவாஸ் விழிக்க, அவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று தான் கூறி இருப்பான். அந்த உருவம் நிவாஸ் கண்ணிற்கு தெரிந்தது.

சீனியர்…சீனியர்…என்று பயப்படவே நிவாசிற்கு போனில் சில விசயங்களை அனுப்பினான் அகில்.

முதலில் அந்த உருவம் என் அருகே உள்ளதா?

ஆம் என்றான்.

நான் போன் பயன்படுத்துவதை கண்காணிக்கிறதா?

இல்லை என்றான். அது நான் பேசுவதை மட்டும் கவனிப்பது போல் உள்ளது.

உன்னை மட்டுமா? சரி.நான் நேரடியாகவே உன்னிடம் பேசுகிறேன்.

எனக்கு சரியாக எந்த பக்கம் உள்ளது? கேட்டான்.

உங்களுக்கு வலது பக்கம் என்றவுடன் நீரை ஊற்றி பார்த்தான். அகிலுக்கு அப்பொழுதும் ஏதும் தெரியவில்லை. பின் போனை எடுத்து புகைப்படம் எடுத்து பார்த்தான்.

சீனியர் என்ன செய்கிறீர்கள்?

அது பேயாக இருக்குமோ என்று நினைத்தேன். அது மாதிரி தெரியவில்லை. இதை பற்றி நீ கவலைப்படாதே! இனி இந்த விசயத்தை நான் கவனித்துக் கொள்கிறேன். என்ன இவர் சிறுபிள்ளை போல் நடந்து கொள்கிறார்? என்று மனதினுள் புன்னகைத்தான்.நிவாசும் அகிலும் அவரவர் வகுப்பிற்கு சென்றனர்.வகுப்பு முடிந்தவுடன் அனைவரும் ஸ்ரீயை பார்க்க வந்தனர். உள்ளே ஜிதின் ஸ்ரீயுடன் இருந்தான். நிவாஸ் வெளியே நின்று, இருவரும் என்ன பேசுகிறார்கள் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன் அனைவரையும் பார்த்து இருங்கள் என்று நிற்க வைக்க, அவள் என்ன பேசுகிறாள்? என்று அனைவரும் கவனிக்க ஆரம்பித்தனர்.

என்னை மன்னித்து விடு. நீ ஏன் என்னை தவறாக பேசினாய்? அதனால் தான் அகில் சீனியரை காதலிக்கிறேன் என்று கோபத்தில் கூறி விட்டேன். நீ ஏதும் எண்ணிக் கொள்ளாதே! நீ என் அருகே வந்து தொந்தரவு மட்டும் செய்யாதே. அது எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. எனக்கு கொஞ்சம் நேரம் வேண்டும். உனக்கே நடந்த அனைத்தும் தெரியும். என்னுடைய பெற்றோர்களை இழந்த நிலையில் என்னால் எதையும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றாள்.

இதை கேட்டு அனைவரும் அகிலை பார்க்க, அவன் அவளை பார்த்தவாறே நின்று கொண்டிருந்தான்.

எனக்கும் சீனியருக்கும் ஏதும் இல்லை. நீ கூறிய கோபத்தில் தான் கூறினேன் என்று ஸ்ரீ கூறினாலும் ஜிதினிற்கு அவள் மீது சந்தேகம் எழுந்தது. அவளிடன் அதை பற்றி மேலும் அவன் பேசவில்லை.

பார்த்துக் கொள்.நான் கிளம்புகிறேன் என்றவுடன் அனைவரும் ஓடிப் போய் அங்கங்கு ஓளிந்து கொண்டனர்.

ஜிதின் சென்ற பின்னும் வெளியே நின்று ஸ்ரீயை பார்த்தனர்.அவள், இவனை சமாளிக்க என்னவெல்லாம் பேச வேண்டியதிருக்கிறது.இதை கேட்ட அனைவரும் அகிலிடன், உன்னை காதலிப்பதை பற்றி தான் கூறுகிறாள் என்று பேச, நிவாஸ் அனைவரையும் பார்த்து முறைத்தான்.

விடுடா…என்று அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல, அகிலுக்கு ஒரே சந்தோசம்.

ஸ்ரீ அனைவரையும் பார்த்து விட்டு அகிலை பார்த்துக் கொண்டிருக்க,ஜிதின் மறுபடியும் உள்ளே நுழைந்து வா என்று அழைத்தான்.

எங்கே? ஸ்ரீ கேட்க,

வா என்று வெளியே அவளை தூக்கி வந்தான். கல்லூரி முடிந்து அனைவரும் கிளம்பி கொண்டிருக்க,அவர்கள் முன்னே அவளை இறக்கி விட்டு,ஜிதின் ஸ்ரீயை கட்டிக் கொண்டான். அவள் விலக நினைக்க, உனக்கு நேரம் தருகிறேன் என்று அவளது காதில் கூறிக் கொண்டு, இவள் எனக்கானவள் என்று அனைவர் முன்னும் அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.

ஸ்ரீக்கு மனம் பதட்டமாக, அந்நிலையில் அவனை விட்டு விலகவும் முடியாமல், கண்கலங்கிக் கொண்டு அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு நிற்க, அகில் மீண்டும் கோபமாக அங்கிருந்து செல்ல, அனைவரும் அவன் பின்னே சென்றான். நிவாசும் ஸ்ரீயை முறைத்து விட்டு சென்றான். மற்றவர்களும் அங்கிருந்து சென்றனர்.

அந்த பெண் தாரிகா மட்டும் மறைந்து நின்று பார்க்க, ஜிதினை தள்ளி விட்டு,…நான் தான் கூறினேனே! நீ ஏன் இவ்வாறு செய்கிறாய்? ஜிதினை அடிக்க, அவனும் சென்றான். அவள் அங்கேயே உட்கார்ந்து தேம்பி தேம்பி அழுதாள்.மறைந்திருந்த தாரிகா ஸ்ரீ முன் வந்து, அவளை தூக்கி விட்டு அணைத்துக் கொண்டாள். அவள் மீண்டும் ஸ்ரீயை தாங்கிக் கொண்டு அதே அறைக்கு அழைத்து செல்ல, நான் தனியே இருக்க நினைக்கிறேன் ஸ்ரீ கூறினாள். தாரிகா ஸ்ரீயை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றாள்.

நிவாஸ் அகில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தான். தாரிகா நிவாசை நிறுத்தி அவனருகே சென்று ஸ்ரீயை பார்க்க செல் என்று கூறி விட்டு, கவினை பார்த்து விட்டு சென்றாள்.
நித்தி அர்ச்சுவிற்கு போன் செய்து, எங்கே இருக்கிறாய்?

என்னுடைய கல்லூரியில் தான்.

உன்னுடன் பேச வேண்டும் என்றாள் நித்தி.

பேசலாமே என்றான். எங்கே? என்று நித்தி கேட்க

இப்பொழுது சிறிய வேலை உள்ளது. ஆறு மணியளவில் “குட் மா கார்டன் ரெஸ்டாரண்ட்” வந்து விடு. பார்ப்போம் என்று போனை துண்டித்தான்.

அகில் கோபமாக, அவனை எதற்காக பார்க்க போகிறாய்?

நீ எதற்காக அவனை அழைத்தாயோ அதற்கு தான் என்றாள்.மீண்டும் அகில் கோபப்பட,

நித்தியும் கோபமாக, நீ என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கிறாய்? உனக்கு பிடிக்கவில்லை என்றால் நீ எதற்காக இத்தனை வருடம் கழித்து அவனை உதவிக்கு அழைத்தாய்?

நான் அவனை பார்க்க தான் போகிறேன் கூற, கவின் நானும் வருகிறேன் என்று நித்தி அருகே வந்தான்.

தேவையில்லை. உங்களுக்கு அவனை பார்த்து பொறாமை. ஆனால் நீங்கள் நினைப்பது போல் அவன் இல்லை.அவன் நிலையில் இருந்து யோசித்தால் தான் அவன் வலி புரியும். உங்களிடம் அவன் அளவு மனமும், பணமும் தான் இல்லை.ஆனால் அவனுக்கு இதை தவிர வேறெதுவும் இல்லை.உங்களால் புரிந்து கொள்ள முடியாது கத்தி விட்டு அவள் கோபமாக சென்று விட்டாள்.

நிவாஸ் கவினிடம், அர்ச்சுவை பற்றி கூறுங்கள் கேட்க, மூவரும் அவனை பார்த்து முறைக்க, அகில் கோபமாக நிவாசிடம், அவனை பற்றி கேட்காதே! கத்தி விட்டான். நிவாசிற்கு கடுப்பாகியது. அவனும் கோபமாக ஸ்ரீயை அழைத்து வீட்டிற்கு சென்றான்.

பின் நான் நித்தி சீனியர் கூறிய இடத்திற்கு சென்று நாமே தெரிந்து கொள்வோம் சிந்தித்தான் நிவாஸ்.

நித்தி சோகமாக உட்கார்ந்து அர்ச்சுவை பற்றி யோசிக்க, யாசு அவளருகே வந்து உட்கார்ந்தாள். நித்தி நடந்ததை கூறி விட்டு,இருக்கும் பிரச்சனை போதாது. அவர்களை பார் யாசு என்று அவள் தோள் மீது சாய,

ஒரு நாள் கண்டிப்பாக அவனை பற்றி புரியும். நித்தி அவளையும் அழைத்துக் கொண்டு அர்ச்சுவை பார்க்க கிளம்பினாள்.சைலேஷ் காரில் அந்த வழியே சென்றான்.நித்தி வெளியே செல்வதை பார்த்து,

எங்கே போகிறீர்கள்?வாருங்கள்….அழைத்து செல்கிறேன்.

வேண்டாம் சார். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று யாசு கூற, அர்ச்சு இடையே வந்து பைக்கை நிறுத்தி கீழே இறங்கினான்.

அவன் நித்தியை பார்த்தவுடன், அவளை உற்று பார்த்துக் கொண்டே அழுதாயா? கேட்க, சைலேஷ் அவனை முறைத்தான்.

வாருங்கள் செல்லலாம். யாசு நீ ஓ.கே தானே? அவன் கேட்க,

ஏன்டா, நீ மனுசன் தானா? எனக்கு புரியவில்லை. உனக்கு கோபமே வராதா?

ஏன் வராது? காட்டவா? நித்தி முடியை லேசாக இழுக்க, சோகமாக இருந்த நித்தி அவனுடன் சண்டை போட ஆரம்பித்தாள்.இருவரும் விளையாண்டு கொண்டே சென்றனர். சைலேஷ் அவர்களை பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான்.

சார், நீங்கள் கிளம்புங்கள். நாங்கள் இவனை பார்க்க தான் கிளம்பினோம் என்று கூறி விட்டு யாசுவும் சென்றாள்.

நிவாஸ், வீட்டில் யாருக்கும் தெரியாமல் கிளம்ப ஸ்ரீ பார்த்து அவனிடம் கேட்டாள்.

அவன் ஏதேதோ பேச, யாரை பார்க்க செல்கிறாய்?ஸ்ரீ சரியாக கேட்டு விட்டாள்.

இல்லையே,நான் யாரை பார்க்க செல்வேன்.

ஓ அப்படியா! ஜிதின் என்று ஸ்ரீ கத்த, நான்….நிவாஸ் தயங்கினான்.

யாரிடம் கூற போகிறாய்?

இங்கே பார். நான் யாரிடமும் எதையும் கூறவில்லை. நித்தி சீனியரும் அர்ச்சுவும் பேச போகிறார்கள். அவர்களை கண்காணிக்க போகிறேன்.

எதற்காக அவர்களை கண்காணிக்க வேண்டும்?

அன்று அர்ச்சு உன்னிடம் நடந்து கொண்டது. எனக்கு …அவரால் உன் நினைவு திரும்ப வாய்ப்புள்ளது என்று தோன்றுகிறது. அதனால் அகில், கவினிடம் விசாரித்தால் அவரை பற்றி பேச மறுத்தார்கள். அதனால் தான் நேராகவே சென்று மறைந்திருந்து கண்காணிக்க செல்லலாம் என்று தான் கிளம்புகிறேன்.

ஜிதின் அவர்களது அறை கதவை தட்டி, அழைத்தாயா? கேட்க,

நாங்கள் இருவரும் தேவையான சில பொருட்கள் வாங்கவேண்டும். அழைத்து செல்கிறாயா? ஸ்ரீ கேட்க,நிவாஸ் அவளை முறைத்தான்.

இல்லை.நீங்கள் சென்று வாருங்கள் என்று கூறினான். செல்வோமா? கண்சிமிட்டி ஸ்ரீ கேட்டாள்.அவன் அவளை முறைத்து கொண்டு சரி என்றான்.

வெளியே வந்தவுடன் நிவாஸ் ஸ்ரீயிடம், என்ன விளையாட்டு?…நீ எப்படி வருவாய்? காலில் அடிபட்டிருக்கிறது.நீ இங்கேயே இரு.

இல்லை.நானும் வருவேன் இல்லையென்றால் ஜிதினிடம் கூறுவேன் என்று கூற,வந்து தொலை…. என்று திட்டிக் கொண்டே அழைத்துச் சென்றான்.

“திரும்ப பார்த்தேனே உன்னை!

எனை முழுதாய் தொலைத்தேனே!

உன்னுயரம் பதறடிக்கிறதே!

உன் காதல் திணறடிக்கிறதே!

உனை மறவேனே!

காதல் தருவேனே!

மறுபடியும் என் காதலா!”

Advertisement