Advertisement

என்னருமை நண்ப நண்பிகளே,

இனிய இரவு வணக்கம்.

கதை இனி விறுவிறுப்பாக இருக்கும். அதனுள் லயித்து பதிலளியுங்கள்.

உங்களின் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் செல்வதீபா…

அத்தியாயம் 11

அவர்கள் சென்றவுடன் நிவாஸ் ஜிதினை அடித்து வெளியே இழுத்து சென்றான். ஸ்ரீ அழுது கொண்டிருக்க, ஸ்ரீயை பார்த்து, ஒரு முறை மூன்று பெண்கள் தொந்தரவு செய்தார்களே! அந்த பெண் தாரிகா அறைக்கு வெளியே நின்று ஸ்ரீயை பார்த்து விட்டு சென்றாள்.

நிவாஸ் ஸ்ரீயை வந்து பார்த்தான். அவள் கண்ணை மூடி இருப்பதை பார்த்து, தூங்கி விட்டாள் என்று நினைத்து போர்வையை அவளுக்கு போர்த்தி விட்டு, உனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்கிறதோ! என்று புலம்பிக் கொண்டே வெளியே வந்து அவனது ஆசிரியையை பார்த்து ஸ்ரீ ஓய்வெடுப்பதை கூறி விட்டு, அகிலை தேடி சென்றான்.ஸ்ரீ தூங்காமல் அழுது கொண்டு தான் இருந்தாள்.

நிவாஸ் அகிலை தேடிக் கொண்டே, ஸ்ரீ கண்டிப்பாக இவர்களது தோழியாக இருப்பாளோ! என்றும் அகிலும் நண்பர்களும், முதன் முறை ஸ்ரீயை அவர்கள் பார்த்து வருத்தப்பட்டது.மருத்துவமனையிலிருந்து கிளம்பும் போது கவினை கட்டிக் கொண்டு, அவள் என்னையும் மறந்து விட்டாள் என்று அகில் அழுதது.ஸ்ரீக்காக நித்தியும் யாசுவும் சண்டை போட்டது. அகிலுடன் சண்டையின் போது யாசு அவளுக்கு திருமணம் முடிவானது பற்றி கூறியது.யாசு ஸ்ரீயை அடிக்க முற்பட்டது. அர்ச்சு ஸ்ரீயின் அடிபட்ட இடத்தில் கை வைத்தது. ஸ்ரீக்கு அர்ச்சு சாக்லெட் கொடுத்தது. இப்பொழுது அகில் ஸ்ரீயை முத்தம் கொடுப்பது போல் அருகே வந்தது அனைத்தையும் யோசிக்க, அனைவரும் அகிலிடம் பேசிக் கொண்டிருந்தனர். நிவாஸ் அவர்கள் அருகே வந்தான்.

நிவாஸ் அகில் அருகே வந்து, சீனியர் உங்களுக்கு ஸ்ரீயை பிடிக்குமா?

அவன் பதில் கூறாமலிருக்க, மற்ற நண்பர்கள் நிவாசிடம் இப்பொழுது ஏதும் அவனிடம் பேச வேண்டாம்.

இல்லை, நான் அவருடன் பேசியே ஆக வேண்டும் நிவாஸ் பிடிவாதமாக இருக்க, அகில் நண்பர்களிடம் நீங்கள் செல்லுங்கள்.நான் நன்றாக தான் இருக்கிறேன். அவனிடம் பேசி விட்டு வருகிறேன் கூறினான்.

நித்தி, வேண்டாம் என்று தயங்கினாள்.

அபினவ் அவளருகே வந்து, இது தான் சரியான நேரம். அவன் பேசட்டும் என்று மற்றவர்களை அழைத்து சென்றான்.

நிவாசும் அகிலும் ஓரிடத்தில் அமர்ந்தனர். அகில் அவன் பக்கம் திரும்பி, நீ ஏன் அவ்வாறு கேட்டாய்?

நீங்கள் அவளருகே நெருக்கமாக இருந்த போது, உங்களது உணர்வுகள் வெளியே தெரிந்ததை நான் கவனித்தேன். அகில் சிரித்துக் கொண்டு நிவாசிடம் என்னுடைய குக்கூ மாதிரியே அவள் இருந்ததால் கொஞ்சம் தவறி விட்டேன்.

ஸ்ரீயை பயன்படுத்திக் கொள்கிறீர்களா? நிவாஸ் முறைத்தான்.

நான் பயன்படுத்தவில்லை.அவளை பார்த்தால் என்னுடைய குக்கூ நினைவு வருகிறது.

குக்கூ யார்? அவர்களை பற்றி கூறுங்கள்.

எதற்காக அவளை பற்றி கேட்கிறாய்?

நீங்கள் அனைவரும் அவர்கள் மீது பிரியமாக உள்ளீர்களே! அதனால் தான் கேட்டேன்.

அவர்கள் இப்பொழுது உங்கள் வாழ்க்கையில் இல்லையே! அவர்களை விட்டு வேரோரு பொண்ணு பார்க்கலாமே! உங்களை நிறைய பெண்களுக்கு பிடித்திருக்கிறது.

அவள் எங்கள் வாழ்க்கையில் மறுபடியும் வந்து விட்டாள்.இதற்கு முன் அவளை தொலைத்தது போல் இனி என்னால் அவளை விட முடியாது என்று கோபத்தோடு நிவாசை பார்த்தான் அகில்.

ஓ அப்படியா! எனக்கும் குக்கூவை தெரிந்து விட்டது….

தெரிந்ததா?…. அகில் அதிர்ச்சியாக, அவர்கள் உங்களது இதயத்தில் இருப்பது தெளிவாக தெரிகிறது.

நல்லது. நான் பயந்தே விட்டேன் மனதினுள் நினைத்துக் கொண்டு புன்னகைத்தான் அகில்…

சட்டென நிவாஸ் குக்கூவும், ஸ்ரீயும் ஒன்று தானே! கேட்க,அகில் பதில் கூற  முடியாமல் திணறிக் கொண்டு, இல்லையே…… என்னுடைய குக்கூ அவள் மாதிரியே இருப்பாள் அவ்வளவு தான்.

சீனியர், என்னை ஏமாற்ற முடியாது.நான் கண்டுபிடித்துவிட்டேன் என்றான்.நீங்கள் அனைவரும் நடந்து கொண்ட விதமே எனக்கு தெரிந்து விட்டது.

அகில் நிவாசையே பார்த்துக் கொண்டிருக்க,என்ன ஆயிற்று சீனியர்?

ஸ்ரீயிடம் இதை கூறாதே!…

நான் கண்டிப்பாக கூற மாட்டேன். உங்கள் அனைவர் பற்றியும் கூறுங்கள்.

எதற்காக? அது தேவைப்படாது…..

கண்டிப்பாக தேவை தான்…

என்ன கூறுகிறாய்?

ஸ்ரீயின் பழைய நினைவுகளை கொண்டு வர எங்களது குடும்ப மருத்துவரை அணுகினோம். அவர் ஒரு மனநல மருத்துவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.அவர் மருத்துவ முறைகளை ஸ்ரீயிடம் செலுத்தி பழைய நினைவுகளை கொண்டு வர முயன்றோம். எந்த பயனும் இல்லை.

அவளுக்கு பழைய நினைவுகளை கொண்டு வருவது கடினம் என்று கூறி விட்டார். மீறி முயற்சித்தால் மூளைக்கு செல்லும் நரம்பு உடைந்து அவள் இறக்ககூடும் என்றார்.யதார்த்த முறையில் வேண்டுமானால் முயற்சி செய்யலாம் என்றார். எப்படி? என்று புரியாமல் தான் இருந்தோம்.ஆனால் உங்கள் அனைவரையும் பார்க்கும் போது ஏதோ ஒரு பெண்ணின் நிழலுருவம் தெரியவது போல் இருப்பதாக கூறினாள்.

ஒருவேளை அவளுக்கு தெரிவது நித்தி சீனியரா? யாசு சீனியரா?

அது ஸ்ரீ தான்.

ஸ்ரீயா?

ம்ம்…

கண்டிப்பாக அவள் தான் என்று உங்களால் கூற முடியுமா?

அகில் கண்ணில் நீருடன்,…கண்டிப்பாக அது அவள் தான். எங்களை தாண்டி உருவம் தெரிகிறதென்றால் அது கண்டிப்பாக அவள் தான்.

அப்படியென்றால் அவள் உங்கள் அனைவருடனும் இருந்தால் அவளுக்கு பழைய நினைவு வர வாய்ப்புள்ளது.

ஏமாற்றம் கலந்த சிரிப்போடு அகில், அவள் எங்களுடனா?…

ஆம்…என்னால் முடியும் என்றான் நிவாஸ்.

அந்த ஜிதின்…….. அகில் கேட்க, அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். அவளுக்கு பழைய நினைவை சீக்கிரமே கொண்டு வந்தே ஆகணும் நிவாஸ் கூறிக் கொண்டே சோகமானான்.

என்ன? அகில் கேட்க,

ஜிதினை நான் பார்த்துக் கொள்வேன். அவனது அம்மாவை…அதான் கயல் ஆன்ட்டியை..என்று யோசித்தான்.

அவர்களை பற்றி கூறேன்?..அகில் வினவ நிவாஸ் திறுதிறுவென விழித்தான்.

அகில் மறுபடியும் கேட்க, நிவாஸ் பதில் கூறாமாலிருந்தான். ஏதோ பிரச்சனை உள்ளது என்று புரிந்து கொண்டு அகில்,எதையும் கூறினால் தான் உதவ முடியும் என்றான்.

எந்த பிரச்சனையும் இல்லை என்று நிவாஸ் வேகமாக நகர, அவனை பிடித்துக் கொண்டு அகில்,

யார் அவர்கள்? அவர் பெயரை கேட்டாலே ஏன் அனைவரும் பயப்படுகிறீர்கள்?

வேறு யாரு பயந்தார்கள்?

என்னுடைய அம்மா தான்…

உங்களுடைய அம்மாவிற்கு அவர்களை தெரியுமா?

அதை பற்றி எனக்கும் சரியாக தெரியவில்லை.ஒரு முறை அவர்களது பெயரை கூறி இருவரும் சண்டை போட்டனர் என்றான்.

அப்படியென்றால் உங்களது அம்மாவிடம் கேட்கலாமே!

அவர்கள் பயப்படுவதால் நான் அவர்களிடம் அதை பற்றி கேட்க முடியாது. என்னுடைய அம்மாவிற்கு ஏற்கனவே உடல்நிலை சரியில்லை அகில் கூறினான்.

அம்மாவிற்கு என்ன?

அதை விடு…நீ முதலில் அவர்களை பற்றி கூறு என்றான்.

நிவாஸ் அவர்களது பெயரை தான் கூறியிருப்பான்.அவன் கண்ணில் முழு வெள்ளை நிறத்தில் ஓர் உருவம் அவனை மிரட்டுவது போல் தெரிந்தது. அவன் பயந்து வேகமாக ஓடினான்.

அகில் அவன் பின்னே சென்றான். நேராக கல்லூரியில் இருந்த பிள்ளையார் கோவிலுக்குள் நுழைந்தான்.நிவாஸ் முகத்தை பார்த்தாலே அவன் பயப்படுவது தெளிவாக தெரியவே, அவன் பார்க்கும் திசையை பார்த்தான் அகில். அவனுக்கு அங்கே ஏதும் தெரியவில்லை.

அவனருகே சென்று அகில் நிவாசை பிடித்து உலுக்கினான். அந்த உருவம் மறைந்தது. நிவாஸ் அகிலை கட்டிக் கொண்டு, என்னை விட்டு செல்லாதீர்கள் அழுதான்.

அகில் அவனை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்து, அவனிடம் பேச, அவனுக்கு தெரிகிற உருவத்தை பற்றி கூறினான். இது போல் நான்கு முறை அதனை பார்த்திருக்கிறேன். அவர்களை பற்றி பேசினாலே இந்த உருவம் வந்து பயமுறுத்தும்.

கோவிலுக்குள் வந்ததனால் அந்த உருவம் சென்று விட்டதோ என்று அகில் கேட்க, எனக்கு தெரியவில்லை என்றான்.

அகில் யோசித்து விட்டு, கல்லூரி முடியட்டும். நாமே கண்டறிவோம். நாம் அனைவரும் சேர்ந்து ஸ்ரீக்கு பழைய நினைவுகளை கொண்டு வருவோம்.

அவள் மீது நீங்கள் கோபமாக இருக்கிறீர்களா?

எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு வேளை அவளும் ஜிதினை விரும்புகிறாளோ! உனக்கு தெரியுமா? அகில் கேட்க, நிவாஸ் தெரியாது என்று கூறி விட்டான்.

என்ன தான் நிவாஸ் அகிலுடன் நல்ல விதமாக பேசினாலும் அவன் அகிலை கவனித்தவரை அவன் மனதுக்கு சரியாக படவில்லை. ஆனால் ஸ்ரீக்கு தான் இவனை பிடித்து விட்டதே! ஜிதினை விட இவன் பரவாயில்லை என்று தான் பட்டது.

ஆமாம் சீனியர்,..உங்களுடைய நண்பன் அர்ச்சு…அவரும் ஸ்ரீயை காதலிக்கிறாராமே! கேட்க,அவனை பற்றி என்னிடம் ஏதும் கேட்காதே! என்றான் அகில்.

கைரவ் கூடைப்பந்து விளையாட்டில் திறம்பட செயலாற்றுபவன். அவன் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்க நித்தி சோகமாக அந்த வழியாக வந்து, அவன் விளையாடுவதை பார்த்து உள்ளே நுழைந்தாள். அங்கே ஒரு பெண் கைரவ் விளையாடுவதை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.அவளருகே வந்து நித்தி உட்கார,கைரவ் அவளை பார்த்துக் கொண்டு…நித்தியிடம் வந்தான்.

அந்த பெண்ணை பார்த்து, ஹே அனிகா, உனக்கு வகுப்பு இல்லையா?

அவள் அவனுக்கு தண்ணீரை கொடுத்து விட்டு, இப்பொழுது இல்லை என்றாள்.

அவன் திரும்பி நித்தியை பார்த்து,என்ன மேடம் இந்த பக்கம்? என்னிடம் பேச வேண்டுமா? கைரவ் கேட்க நித்தி அமைதியாகவே இருந்தாள்.

நீ அமைதியாக இருக்கிறாயா?என்று நீரை அருந்தி விட்டு அந்த பெண்ணிடம் கொடுக்க, அனிகா அங்கிருந்து சென்றாள்.

என்னுடைய அண்ணா பற்றி யோசிக்கிறீர்களா?அவள் ஏதும் பேசாமல் இருக்க, அவனே தொடர்ந்தான்.

என் அண்ணன் முடிவெடுத்து விட்டால் மாறவே மாட்டான்.அவனுக்கு உன்னை பிடித்திருக்கிறதா? என்னால் நம்பவே முடியவில்லை.எனக்கு ஒன்றும் பிரச்சனையில்லை. நீ ஏதாவது கூற வேண்டுமென்றால் கூறு…

நித்தி அவனை ஆச்சர்யமாக பார்க்க,ஏன் என்னை அப்படி பார்க்கிறாய்? அவள் அதற்கும் ஏதும் பேசாமலிருக்க,

அவனுடைய பழைய காதலியை உனக்கு தெரியும் தானே! இந்த கல்லூரியில் படித்து, இப்பொழுது இங்கேயே பிபிஏ மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருமணம் முடிந்தும் இன்னும் அண்ணாவுடன் இருந்தது போல் அப்படியே அழகாக இருக்கிறார்.

நித்தி அவனை பார்த்து முறைத்து விட்டு கோபமாக எழ, எங்கே செல்கிறாய்?

இப்பொழுது தான் நீ நீயாக இருக்கிறாய்.சொல்லு….என்றான் கைரவ்.

நான் உன்னிடம் எப்படி சொல்வது? என்று மனதில் நினைத்துக் கொண்டு அவள் மௌனமாகவே இருந்தாள்.

அவனுடைய பழைய காதலி பணத்திற்காக தான் பழகி இருக்கிறார். அதனால் தான் பெண்கள் மீது பெரிதும் விருப்பமில்லாமல் படிப்பு முடிந்தவுடன் கல்லூரி ஏற்று நடத்த விருப்பமில்லாமல் கம்பெனி பொறுப்பை ஏற்று நடத்தி வந்தான். அவன் கல்லூரிக்கு வருவான் என்று நானும் எதிர்பார்க்கவே இல்லை.இப்பொழுதெல்லாம் பெண்கள் பணத்திற்கு தான் முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.பின் தான் காதல் எல்லாம் என்பான்.

ம்ம்…அதனால் தான் அவரை விட்டு விலகி விடலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன் மனதில் நினைப்பதாக அவன் முன்னே கூறி விட்டாள்.

என்ன கூறினாய்?

ஒன்றுமில்லை என்றாள்.

அவன் அவளை கூறுகிறாயா? அண்ணாவிடம் நீ கூறியதை சொல்லவா? அவன் மிரட்ட

உன்னுடைய அண்ணா என்னை முதல் முதலாக பார்த்தது அந்த ஷாப்பிங் போன இடத்தில் தான்.அப்பொழுது அவருக்கு நான் யாரோ தான்.அதனால் தான் அவ்வாறு பேசினார். என்னால் நன்றாக புரிந்து கொள்ள முடிகிறது. தற்பொழுது முதல் முறையாக வெகு நாட்கள் கழித்து சந்தித்தேன். அவர் அன்று அவளிடம் பேசியது நினைவில் வந்து அதிகமாகவே காயப்படுத்தியதால் அவரிடம் கடுமையாகவே நடந்து கொண்டேன். இப்பொழுது நல்ல படியாக பேசினால் அவரது உயர் இடத்தை வைத்து தான், அவருடைய பழைய காதலி போல் என்னையும் நினைத்துக் கொண்டால்… அவருக்கும் கஷ்டம் எனக்கும்  கஷ்டம்….அதனால் எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது என்றாள்.

Advertisement