Advertisement

ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 115.

ஹாஸ்பிட்டலில் தீனா புவனாவை பார்க்க உள்ளே நுழைந்தான். அவன் அப்பா அங்கிருக்க அனைவர் முகமும் மாறி இருந்தது. பக்கத்தில் பணக்கட்டுகளை பார்த்து கோபமாக அவரை பார்த்து விட்டு புவனாவை பார்த்தான்.அவள் முகம் வாட்டமாக இருக்க அவளிடம் வந்தான்.

காவேரி அந்த பணத்தை எடுத்து அவரது கையில் திணித்து, இங்கிருந்து போங்க என்று சத்தமிட்டார்.

என்னடி பையன் அருகிலிருக்கும் தைரியமா? அவருக்கு மட்டும் கேட்பதை போல் பல்லை கடித்தார்.

அப்பா என்று சினத்துடன் அவர்களிடம் வந்து, எதற்கு இந்த பணம்?

அந்த பொண்ணு செலவுக்கு. அந்த பொண்ணை நம்ம வேலைக்காரங்க யாராவது பார்த்துக் கொள்வார்கள். இனி அந்த பொண்ணு நம்ம வீட்டுக்கு வர தேவையில்லை. இனி அவள் உனக்கு பயன்படமாட்டாள்.

இல்லை. எந்நிலையிலும் அவள் எனக்கு வேண்டும். நாங்கள் காதலிக்கிறோம்.

காதலா? அப்படி ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. அவள் என்றுமே உனக்கு சொந்தமாக மாட்டாள் அவர் கூற, அவன் கோபமாக முறைத்துக் கொண்டிருக்க, புவனா அவனது கையை பிடித்தவாறு கண்ணீருடன் வேண்டாம் என்று கண்ணசைத்தாள்.

அப்பத்தாவின் கண்கள் தீனாவின் பின் இருந்தது. அவன் மெதுவாக அவன் முன்னிருந்த கண்ணாடியை பார்த்தான்.

அர்தீஸ் கத்தியுடன் தீனா பின் நின்றான். புவனா மெதுவாக நகர்ந்து ஒரு காலை ஊன்றி இறங்கினாள்.

அம்மாடி.. வேண்டாம்மா என்று அப்பத்தா பதறினார். அவளால் மறு காலை நகர்த்த கூட முடியவில்லை.

அவள் அர்தீஸிடம், நான் உன்னுடன் வருகிறேன். ஆனால் என்னால் எழ முடியவில்லை என்று அழுதாள்.

என்ன சொன்ன? என்று தீனா புவனாவை பார்த்தான்.

நான் போகிறேன் என்றால் தலைகவிழ்ந்தவாறு.

அவனது மிரட்டலுக்கு பயப்படுகிறாயா? அவனால் என்னை ஏதும் செய்ய முடியாது என்று சட்டென கையை திருப்பி அவன் கையிலிருந்த துப்பாக்கியை தீனா கையில் பிடித்தவாறு புவனா அருகே சென்றான்.

அவள் அவனிடம் சாரி என்று அர்தீஸை பார்த்தாள். அவனது அப்பத்தா தன் பெயரன் வருத்தப்படுவானே என்று தீனா கையை பிடித்து, அவனிடம் அந்த அறைக்குள்ளிருந்த மற்றொரு அறையை காண்பித்தார்.

ஏய்..நில்லுடா. நீ உள்ளே சென்றால் இவளை கொன்று விடுவேன் என்று கத்தியை புவனா கழுத்தில் வைத்தான் அர்தீஸ்.

உள்ள ஜானு இருக்கா தீனா என்று அம்மா கூற, அவனுக்கு கோபம் ஏறியது.

அவள ஏன்டா பிடிச்சு வைச்சிருக்க?

ஏன்யா நீ உண்மையிலே என்னோட அப்பன் தானா? என்னவெல்லாம் செஞ்சுகிட்டு இருக்க?

நான் உன்னோட அப்பன் தான். நீ தான் என் மகன் போல் நடந்து கொள்ள மாட்டிங்கிறாய்? நான் சொல்வதை கேள். அந்த பொண்ணை அவங்கிட்ட விட்டுடு.

என்னால் முடியாது என்று கையிலிருந்த துப்பாக்கியை வைத்து அர்தீஸின் கத்தியை தட்டி விட்டு புவனா அருகே சென்று அவளது கையை பிடித்தான்.

உனக்கு அவள் தான் முக்கியம் என்றால் உன்னோட தங்கையை மறந்துவிடு என்றான் அர்தீஸ். ஜானு ஆதேஷிடம் பேசி விட்டு அமர்ந்த நேரம் தான் இவன் அவனுடைய நண்பனுடன் சேர்த்து ஜானுவை அறையில் அடைத்து வைத்திருப்பான்.

அர்தீஸ் அவன் நண்பனிற்கு போன் செய்து, அவள உன் இஷ்டத்துக்கு எடுத்துக்கோடா. தீனா கையை உதறிய புவனா

அவனிடம்,..இல்லை அவளை ஏதும் செஞ்சுடாதீங்க என்று அழுதாள்.

சரி. அந்த போலீஸ்காரனை வெளியே போகச் சொல் என்றான் அவன்.

போங்க சார். ப்ளீஸ் என்று கையெடுத்து கும்பிட்டாள் புவனா. அவன் அவளருகே வந்து, என்ன செய்ற?

எனக்கு என்னோட ஜானு முக்கியம். தயவு செய்து போங்க சார்.

போறேன் என்று கத்தி விட்டு அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு, அவளை பார்த்தான். அவள் கைகளில் நடுக்கம் தெரிந்தது. வெளியே செல்வது போல் பாவனையை காட்டியவன், அவனது அப்பத்தாவிடம் துப்பாக்கியை தூக்கி போட்டான். அவர் அதை பிடிப்பதை பார்த்து கொண்டிருந்த சிறிய இடைவெளியில் அந்த அறைக்குள் நுழைந்து அங்கிருந்தவனை அடித்து விட்டு, ஜானுவை தூக்கி வெளியே வந்தான் தீனா.

வெளியே அப்பத்தா அர்தீஸை குறி வைத்து நின்றிருந்தார். அதை பார்த்து சிரிப்புடன், என்னடா அப்பத்தா தான என்று நினைக்காதீங்க? அவருக்கு நல்லாவே துப்பாக்கியை பயன்படுத்த தெரியும்.

அப்பத்தா..என்று தீனா கண்ணாடியை பார்த்தான். அவரோ பட்டென சுட்டு விட்டார். கண்ணாடி சில்லுசில்லுலாய் நொறுங்கியது. அதில் பயந்து அர்தீஸூம் அவன் நண்பனும் ஓடி விட்டனர்.

அப்பத்தா கலக்கீட்ட போ என்று அப்பத்தா கன்னத்தில் முத்தமிட்டு புவி கட்டிலுக்கு அருகே இருந்த டேபிளில் ஜானுவை படுக்க வைத்து விட்டு, போனை எடுத்து யாரையோ வரச் சொன்னான்.

ஜானு எழுந்திரு..எழுந்திரு..என்று புவி பதறினாள்.

அவளுக்கு ஒன்றுமில்லை. அவள் பயத்தில் மயங்கி இருக்கிறாள் என்றான் தீனா. புவனா அமைதியாக படுத்துக் கொண்டாள்.கொஞ்ச நேரத்தில் அங்கே வந்தார் ஒரு வக்கீல்

அவரிடம் சிலவற்றை வாங்கிய தீனா, இதை அவரிடம் கொடுத்து விடுங்கள் என்றான். அவன் காவேரியிடம் சென்று, அம்மா இதில் உங்கள் கையெழுத்து வேண்டும் என்றான்.

என்னதுடா? வாங்கி பார்த்து அதிர்ந்து, என்னால் முடியாது என்றார்.

கண்டிப்பா நீங்க கையெழுத்திட்டு தான் ஆக வேண்டும்.

விவாகரத்து பண்ற சொல்றான் அத்தை என்று காவேரி அழுதார். அப்பத்தா அமைதியாக இருந்தார்.

அத்தை..அவனிடம் சொல்லுங்கள்.

இல்லம்மா. அவன் சொல்வது தான் சரி. என் மகன் அந்த வேலீஸ்வர் மனைவியுடன் தான் இருக்கிறான். நீ அவனுக்கு விவாகரத்து கொடுத்து விடு என்றார்.

அவர் அப்படியெல்லாம் செய்ய மாட்டார் என்றார் காவேரி உறுதியாக. ஆனால் அவரோ ஆமாம். எனக்கு அவளை தான் பிடித்திருக்கிறது என்றார்.

காவேரி அவரருகே வந்து, ஏன் இப்படி செஞ்சீங்க? நான் என்ன தான் குறை வைத்தேன்? உங்கள் மீதுள்ள நம்பிக்கையில் தான் நீங்கள் என்னை கஷ்டப்படுத்திய போது தாங்கிக் கொண்டேன். ஆனால் நீங்க எனக்கு துரோகம் பண்ணீட்டிங்களா? நான் என்னையும் இழந்து, என் பிள்ளைகளையும் தவிக்க வைத்ததும் இதற்காக தானா?
என்று கதறினார்.

அம்மா என்று தீனா அவரை அணைத்துக் கொண்டு, நான் இருக்கேன்மா. அந்த வீடும் நமக்கு வேண்டாம். அங்கே உள்ள கசப்பான அனைத்தையும் மறந்து விடுங்கள் என்றான். அவர் அழுது கொண்டே மறக்கணுமா? எப்படிடா? என்று மீண்டும் அழுதார்.

அப்பத்தா அவர் மகனிடம் வந்து, இனி உனக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் பெயரன் எழுதி கொடுத்ததை வாங்கிக் கொண்டு விட்டு விடு. இனி எங்களை தொந்தரவு செய்யாதே! நீ கிளம்பு என்று கூறிக் கொண்டு அவரும் அழுதார்.

நான் கிளம்பணுமா? சரி போறேன். ஆனா உன்னோட பெயரனை தலையில் வைத்துக் கொண்டு ஆடாதே! அவன் ஒரு நாள் இல்லை ஒரு நாள் உங்களை ஏமாற்ற தான் போகிறான் என்று சொல்லி விட்டு அவர் சென்றார்.

தீனா அவர்களை சமாதானப்படுத்தி விட்டு, புவனாவை பார்த்தான். அவள் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். இருவரையும் பார்த்த அம்மாவும், அப்பத்தாவும் வெளியே சென்றனர்.

தீனா புவனா அருகே வந்து, அவனிடம் நீ என்ன சொன்ன? அவனுடன் போகிறாயா? சினத்துடன் வினவினான்.

அவன் ஜானுவையும், உங்களையும் ஏதாவது செய்து விடுவானோ என்று பயந்து தான் அப்படி பேசினேன்.

அவன் என்ன பேசினாலும் நீ இப்படி பேசியிருக்கக் கூடாது. இனி இப்படி செய்தால் உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன். இப்ப நீ செய்த தவறுக்கு பதில் எனக்கு ஏதாவது வேண்டுமே?

என்ன வேணும் சார்?

அவளை மேலும் நெருங்கிய தீனா, அவனது மீசையால் அவளது கழுத்தில் கோலமிட்டான்.

சா..சார்..வேண்டாம்.

என்ன வேண்டாம் என்று அவளது கழுத்தை முகர்ந்து, நீ என்ன இம்ச பண்றடி என்று கழுத்தில் முத்தமிட்டு மேலிருந்த உதட்டை மெதுவாக அவனது உதட்டால் வருடினான்.அவள் கிரங்கி கண்களை மூடினாள்.

என்னடா பண்றீங்க? டேய்..அண்ணா நான் இங்கே தான் இருக்கேன் என்று ஜானு எழுந்து வேகமாக வெளியே ஓடினாள். அவன் தன் தலையை கோதிக் கொண்டு அவளை பார்த்தான்.

எனக்கு அடிபட்ட போது வலி உயிர் போனது. ஆனால் இப்பொழுது வலிக்கவில்லை? தீனாவிடம் சொன்னாள்.

அவன் அவளை அணைத்து இனி தான் வலி ஆரம்பமாகும். நான் உன் அருகே இருக்கேன். ஆனால் மறுபடியும் சென்னை செல்ல வேண்டும். நாளை தான் வருவேன் என்று நினைக்கிறேன்.

கண்டிப்பா போகணுமா?

ஆமாம். உன்னோட அண்ணனிடம் நம்மை பற்றி பேச வேண்டும் என்றான்.

அவள் வெட்கத்துடன் தலைகுனிய,

என்ன வெட்கமா? என்று அவளது மூக்கோடு மூக்கை உரசினான்.

அவள் மீண்டும் வெட்கத்தோடு அவன் மீது சாய்ந்து முகத்தை மறைத்தாள்.

நீ எப்பொழுதும் என்னை நம்புவாய் தானே?

கண்டிப்பாக என்றாள் அவனை அணைத்தவாறு. அவன் அவளது கால்களை பார்த்து, அவளை விலக்கி விட்டு அதனருகே சென்றான்.அவளது அடிபட்ட கால்களில் முத்தமிட்டு வருடினான். அவள் முகம் சுளித்து, எனக்கு வலிக்கிறது என்று கண்ணீர் உதிர்த்தாள். பின் வலி அதிகமாக அதற்கான மருந்தை கொடுத்த நித்தி அப்பா தீனா அம்மாவிடம் மருந்து கொடுத்தாலும் புவனாவிற்கு வலி அதிகமாக தான் இருக்கும். அவள் கால்களை கீழே வைக்கவே கூடாது என்றார்.அவளுடைய கால் எலும்புகள் விழுவிழந்து தான் இருக்கு. ஆனால் நல்ல வேலையாக உடையவில்லை. அதனால் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றார்.

ஜானு அவரை பார்த்து, புவி ஸ்கூலுக்கு வர முடியாதா? அவளுக்கு படிப்பு என்றால் உயிர் என்று கண்கலங்கினாள். அவளுக்கும் மருத்துவம் படிக்க ரொம்ப ஆசை என்று அழுதாள்.

நித்தி அப்பா ஜானு தலையை கோதி விட்டு,அவள் படிக்கலாம். ஆனால் இரண்டு மாதங்கள் வெளியே சுற்றாமல் இருந்தால் நல்லது. யாராவது நோட்ஸ் கொடுங்கள்.அவள் தான் ஏற்கனவே நன்றாக படிப்பாளே? என்றார்.

ம்ம்..என்று தலையை ஆட்டினாள் ஜானு. அவர் சென்றவுடன் ஜானு அழுதாள். அவளுக்கு ஸ்ரீ பேசியது, புவி நிலைமை, இப்பொழுது ஒருவன் அடித்தானே அது எல்லாம் அவளை மிகவும் வருத்தியது.

தீனா அவளருகே வந்து,  நீ வகுப்பை கவனித்து வந்து அவளுக்கு சொல்லித்தா என்றான்.

நானா? எனக்கே அவள் தான் சொல்லித் தருவாள்.

அவளுக்காக நீ படிக்ககூட மாட்டாயா? என்ன ப்ரெண்டு நீ என்று ஜானுவை உசுப்பேற்றினான்.

உங்க எல்லாருக்கும் முன் அவளுக்கு நான் தோழி. நான் கண்டிப்பாக என்னோட புவிக்காக படிப்பேன்.

அவன் புன்னகையுடன் உள்ளே பார்த்தான். புவனா வலி தாங்க முடியாமல் வாயை கையால் அடைத்து அழுது கொண்டிருந்தாள். உடனே அவன் உள்ளே செல்ல, மற்றவர்களும் அவன் பின் சென்றனர். அவனை பார்த்ததும் அவள் அழுகை கூடியது. ரொம்ப வலிக்குது சார் என்று தேம்பி தேம்பி அழுதாள். அவன் அவளருகே அமர்ந்து அவளை கட்டிக் கொள்ள, ஜானுவும் மறுபக்கம் ஏறி அமர்ந்து, புவி கையை பிடித்துக் கொண்டு கண்கலங்க அவளை பார்த்தாள்.

ஒன்றுமில்லைம்மா. நாங்க எல்லாரும் இருக்கோம்ல.அழாதே கண்ணை மூடி தூங்கு தீனா கூற, அவள் முடியவில்லை என்று மேலும் அழுதாள்.

அண்ணா, சாரை கூப்பிடவா? கேட்டாள் ஜானு.

இல்ல ஜானு. அவர் தான் சொன்னார்ல. வலி அதிகமா தான் இருக்குமென்று அவன் கண்ணிலும் நீர் துளிகள்.

அப்பத்தா அவர்களை பார்த்து, வாம்மா ஜானு நாம வெளியே இருப்போம் என்றார்.

அவர்கள் வெளியேற, தீனா புவியை அணைத்து,அவள் கால் அசையாது மெதுவாக அவளை நகர்த்தி அவன் மீது போட்டுக் கொண்டான். அவள் அழுது, புலம்பி, கதறி, கரைந்து அவன் மீதே துயிலானாள். அவன் கண்ணீருடன் அவளை தன் மார்பில் போட்டு அவளது தலையை தடவி கொடுத்தான்.

சற்று நேரத்தில் தீனாவிற்கு அழைப்பு வர போனை அணைத்து விட்டு, அவளை மெதுவாக அவனிலிருந்து பிரித்து அவளை படுக்கையில் கிடத்தி விட்டு, வெளியே வந்து போனை எடுத்தான்.

அர்ஜூன் வீட்டில் அவனது போனிற்கு அழைப்பு விடுத்த சைலேஷ் இவனுக யாருமே கல்லூரிக்கு வரவில்லை என்று சரமாரியாக திட்டி தீர்த்தான்.

அர்ஜூன் அனைத்தையும் கூற, அகில் ப்ரெண்ட்ஸ் கண்டிப்பா மதியமாவது கல்லூரிக்கு வந்தே ஆக வேண்டும் என்றான் சைலேஷ்.

வரச் சொல்றேன் சார். ஆனால் அகில், நித்தி வர முடியாது. அவர்கள் ஊரில் இருக்கிறார்கள்.

சரி..இருக்கிறவங்கள வரச் சொல்லு என்றான் கோபமுடன்.

ஓ.கே சார். வந்துடுவாங்க என்று போனை வைத்து விட்டு அர்ஜூன் கவின் அபியிடம் கூறினான். ஓ.கே போயிட்டு வந்திடுவோம் என்றான் அபி.

Advertisement