Advertisement

ஹாய்..ப்ரெண்ட்ஸ்.

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 107

கல்லூரி முடிந்து அனைவரும் வெளியேற, நித்தி அருகே பவி வந்து, நாம வெளியே எங்காவது போகலாமா? கேட்டாள்.

அவள் பசங்கல பார்க்க,எல்லாரும் எனக்கு வேலை உள்ளது என்று கழன்று கொண்டிருந்தனர்.நித்தி அர்ஜூனை பார்த்தாள்.

நித்தி நம்ம பிரச்சனையை சீக்கிரம் முடிக்கணும். அதுக்கான வேலையில தான் எல்லாரும் இருக்கோம்.

அகிலை பார்த்தாள். அவன் ஏதும் பேசாமல் இருந்தான்.என்ன நீ வருகிறாயா?

ம்ம்..என்று வண்டியை எடுத்தான்.அவர்கள் கிளம்பினார்கள். அர்ஜூன் யோசனையோடு கவினிடம், அந்த பொண்ணுக்கும் அகிலுக்கும் ஏதும் இருக்குமோ?

தெரியலடா. ஸ்ரீக்கு இப்ப போதை தெளிஞ்சிருக்குமா? கேலியுடன் கவின் கேட்க, ஏன்டா காலையில வர இவ்வளவு போதையுடன் இருந்தாள். எப்படிடா?அர்ஜூன் கேட்க, கவின் கலகலவென சிரித்தான்.

ரொம்ப வேகமாக யோசிக்கிறடா? எப்ப நடந்தது இப்ப கேட்குற? எல்லாத்தையும் உடனே சிந்தித்து செய்கிறாய்? ஸ்ரீ விசயத்தில் தடுமாறுகிறாய்? புன்னகையுடன் கிண்டல் செய்தான்.

எப்படிடா?

வெரி சிம்பிள். அவள் காலையில் கூட குடித்து விட்டு படுத்திருக்கலாம் என்றான்.

ஏன்டா காலையில? நீ தான் மிச்சம் வச்சிருந்தேல? தூக்கத்துல எழுந்து கூட குடிச்சிருக்கலாம்.

அது எப்படிடா?

அவ கிட்டயே கேட்டுக்கோ..என்றவன் தாரிகா வருவதை பார்த்து உங்க அப்பாவை பார்க்கப் போறோம். வருகிறாயா?

நான் வரல..உங்க அம்மா வீட்டுக்கு தான் என்றான்.

நான் தான் வரலன்னு சொல்றேன்ல கத்தினான் அர்ஜூன்.

வா ஜில்லு, நாம கிளம்புவோம் என்று அவர்கள் செல்ல, அர்ஜூனும் கிளம்பினான்.

அகிலுடன் சென்று கொண்டிருந்த போது,வண்டியை நிறுத்துடா என்று இறங்கினாள் நித்தி. துகிரா ஓரிடத்தில் தனியே அமர்ந்திருந்தாள்.

அகில், அது துகிரா தானா?

ஆமா இவ தனியா என்ன செஞ்சுகிட்டு இருக்கா? ஆதேஷும் அவளுடன் இல்லையே என்று பேசிக் கொண்டே அகில் அவளை நோக்கி நடக்க,பெண்களும் அவன் பின்னே சென்றனர்.

ஏய், தனியா இங்க என்ன செய்ற? ஆதேஷ் எங்கே?

அவன் இன்று கல்லூரிக்கு வரவில்லை. அவன் ஆன்ட்டியுடன் சண்டை போட்டு விட்டான்.என்னால ரெண்டு பேரையும் பேச வைக்கவே முடியவில்லை.

அதற்காகவா இங்கே தனியே இருக்கிறாய்?

இல்லை. அவன் அப்பாவிடம் நடந்ததை கூறி விட்டான். அவர் என்னை வந்து பார்த்து, எனக்கும் அவனுக்கும் விரைவிலே திருமணம் செய்து வைக்க போகிறாராம்.நான் அவன் செய்ததை கூறியும் அவர் கேட்கவே மாட்டிக்கிறார் என்று துகிரா அழுதாள்.

ஆதேஷிற்கு சொன்னாயா?

இல்லை. அவனே கோபமாக இருக்கிறான். அதனால் என்ன செய்வதென்று புரியலையே?

நித்தி ஆதேஷிற்கு போன் செய்தாள். அவன் எடுக்கவில்லை.

வேண்டாம். அவனை தொந்தரவு செய்ய வேண்டாம். அவன் காதலித்த பொண்ணை அவன் மறக்க முடியாமல் கஷ்டப்படுகிறான். இரண்டு பேரும் சரியா கூட பேசுறதில்லை.என்னால் வேற அவனுக்கும் பிரச்சனை?அப்புறம் என்று அகிலை பார்த்தாள்.

அன்று நீங்க எல்லாரும் உதவி செய்ததற்கு வருத்தப்படுவீங்கன்னு சொன்னாங்க. என்னால உங்க எல்லாருக்கும் ஏதோ பிரச்சனை கொடுக்க போறாங்க.எனக்கு ரொம்ப பயமா இருக்கு.

இப்ப இருக்குற பிரச்சனையில..யாரிடமும் சொல்ல வேண்டாம். தீனா சாரிடம் சொன்னால் அவர் பார்த்துக் கொள்வார்.

துகிரா எழுந்து, போலீசிடம் வேண்டாம்.

சரி தான் அகில். தீனா சார் பொறுமையா பேசவே மாட்டார். அதனால் பிரதீப் அண்ணாவிடம் கூறுவோம் என்றாள் நித்தி.
முதல்ல ஆதேஷிடம் சொல்லிட்டு செய்யுங்க. அப்புறம் தெரிஞ்சா ரொம்ப கோபப்பட போறான்.

அவன் தான் போனையே எடுக்க மாட்டேங்கிறானே? துகிரா கூற,அவனோட அம்மா நம்பரை வாங்கி நித்தி போன் செய்தாள்.துகிராவிடம் கொடுக்க, அவள் மாட்டேன் என்றாள்.

நித்தியே ஆதேஷ் அம்மாவிடம் பேசினாள்.அவர் ஆதேஷை அழைக்க, அவன் அவரை திட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

துகியை இப்பொழுதே சென்று பார் என்றார் மௌனமாக. நித்தி அவரிடம், ஆதேஷிடம் போனை கொடுக்க சொல்ல, துகிரா கூறியதை சொன்னான்.

அவள் எங்கே?

பக்கத்தில் தான் இருக்கிறாள்.

இப்பொழுதே நான் வருகிறேன். கொஞ்ச நேரம் பார்த்துக் கொள்ளுங்கள் என்றான். நித்தி பிரதீப்புக்கு போனில் அனைத்தையும் கூறினாள்.

இரும்மா. அவன் கண்டிப்பாக அந்த பொண்ணை கூட்டிட்டு அவங்க அப்பாட்ட தான் போவான். அவனை போகவிடாதீங்க. நான் வாரேன் என்றான்.பக்கத்தில் இருந்த பிரதீப்பின் உதவியாளன், சார்..இன்று எங்கும் போகமுடியாது சார். நாம் ஒருவரை சந்திக்கணும் என்றான். பிரதீப் யோசித்தான். அகிலிடம் நீ ஆதேஷ் வந்தவுடன் அவர்களை அழைத்துக் கொண்டு ஊருக்கு வா.

ஊருக்கா?

ம்ம்..காரில் வந்தால் எட்டு மணிக்கு முன்னதாகவே வந்திடலாம். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்றான்.

சரிங்கண்ணா என்று போனை வைத்து விட்டு, பவி நீ உன்னோட வீட்டுக்கு போ.நாங்க எங்க ஊருக்கு போறோம் என்றான் அகில்.

ஊருக்கா? இந்த நேரமா? நித்தி கேட்டாள்.

ஆமாம். அண்ணா சொன்னா காரணம் இருக்கும். உனக்கு ஏதும் பிரச்சனையில்லையே? துகிராவிடம் கேட்டான்.

உங்க ஊருக்கா? அங்க ஸ்நாக்ஸ் இருக்கும்ல.கிராமத்துல அதிகமா இருக்காதாம். ஏதாவது ஒன்று, இரண்டு தான் இருக்குமாம். கேள்விப்பட்டிருக்கிறேன்.

உனக்காக நாங்க யோசிச்சா? நீ எதை பத்தி கேக்குற? அகில் துகிராவை திட்டினான்.

அதெல்லாம் எல்லாமே இருக்கும். அண்ணா தான கூப்பிடுக்காங்க.அங்க இல்லைன்னா அண்ணா எப்படியாவது வாங்கி தந்துருவாங்க என்றாள் நித்தி புன்னகையுடன்.

நானும் வாரேன் நித்தி..பவி கேட்க,நோ..தடுத்தான் அகில்.உங்க அம்மா இப்பொழுது தான் உன்னை வெளியவே விட்டிருக்காங்க.

ப்ளீஸ்..நான் என்னோட அம்மா கிட்ட பேசிக்கிறேன்.

அவளையும் கூட்டிட்டு போகலாம்டா நித்தி கேட்க, அர்ஜூன் ஏற்கனவே சொல்லி இருக்கான். நம்ம பிரச்சனையில வேற யாரையும் இழுக்கக் கூடாது என்று. அதனால் தான் ஆதேஷிடமிருந்து கூட விலகி இருக்கான்.

யார் விசயத்துலையும் நான் தலையிட மாட்டேன் நித்தி. நான் எங்கேயும் வெளியே சென்றதேயில்லை. அதனால் தான் உன்னுடன் செல்ல நினைத்தேன். நீங்க ஊருக்கு போனா நானும் வருவேன் என்றாள்.

பவி அம்மாவிடம் பேச, அவர்கள் பயந்து கொண்டு வேண்டாம் பவி என்றார்.

அம்மா,ப்ளீஸ் இன்று ஜூலியை நீங்க பார்த்துக்கோங்க. நாளைக்கே வந்திடுவேன் என்றாள்.

அவள் அம்மா அகிலிடம் போனை கொடுக்கச் சொன்னார். அவர் அவனிடம் எதையோ கூறினார். அவனும் பேசி விட்டு போனை வைத்தான்.

ஆதேஷ் அங்கே வந்து துகிராவை இழுத்து செல்ல, அவனை தடுத்து பிரதீப்புற்கு போன் செய்து கொடுத்தனர். ஆதேஷ் அமைதியானான். அவன் அம்மாவிற்கு போன் செய்து, நாளை தான் வீட்டிற்கு வருவேன் என்றான்.

அவன் அம்மா பதறி, அவனோட பிரச்சனை பண்ணாதடா. அவங்க வேற மாதிரிடா.என்ன வேண்டுமானாலும் செய்து விடுவான்.

அப்ப துகியை அவங்க என்ன செஞ்சாலும் உங்களுக்கு ஓ.கே வா?

அவரிடம் பதிலில்லை. ஏன்டா அவங்கள பயமுறுத்துற? என்று துகி போனை வாங்கி, ஆன்ட்டி நாங்க எங்க ப்ரெண்டோட ஊருக்கு தான் போறோம். எந்த பிரச்சனையும் இல்லை என்று ஆதேஷ் அம்மாவை சரிபடுத்தி விட்டு,அவனை முறைத்துக் கொண்டே போனை வைத்தாள்.அனைவரும் கிளம்பினார்கள். ஆதேஷ் காரில் அவனும் துகியும், பவியின் காரில் அகில், பவி, நித்தி சென்றனர்.

மணி ஏழானது.நித்தி சைலேஷிடம் ஊருக்கு செல்வதாக கூறி இருந்தாள். அவன் யாசுவிடம் கூற, நித்தியும் அவளுக்கு போன் செய்தாள். யாசு அவளிடம் கத்தினாள்.

நாங்க நாளைக்கு மாலை தான் வருவோம். எல்லாரிடமும் எதையாவது சொல்லி சமாளி என்று வைத்து விட்டாள்.

ஜானு துளசிக்கு போன் செய்து கோபமாக, எங்க இருக்க? கேட்டாள்.

வீட்டில என்றாள் துளசி.

ஏய்..சும்மா சொல்லாதே. புவி எங்கே? கேட்டாள்.

புவனாவா? எனக்கு தெரியாதே!

தெரியாதா? நடிக்காத. நீ எழுதின காகிதத்தை நாங்க பார்த்துட்டோம்.

என்ன காகிதம்? நிஜமாவே நான் வீட்ல தான் இருக்கேன் என்று புவனா அறைக்கு துளசி சென்று பார்த்தாள். அவள் அறையில் இல்லை.

அவ வீட்டுக்கு இன்னும் வர போல? துளசி சொல்ல, நிஜமாக அவள் உன்னுடன் இல்லையா? ஆனால் இந்த காகிதத்தில் நீ தான் அவளை வரச் சொன்னாத போட்டிருக்கு.

நானா? நான் ஆறு மணிக்கே வீட்டிற்கு வந்து விட்டேன் துளசி சொல்ல, துருவன் வாங்கி, அந்த காகிதம் நீ எழுதவில்லையா? கேட்டான்.

இல்லை. அவள் எங்க?

அவளை யாரோ உன்னோட பேர சொல்லி ஊருக்கு வெளிய இருக்குற அந்த பள்ளத்தாக்கு மலைத்தொடருக்கு வரச் சொல்லி எழுதி இருக்காங்க.

அர்தீஸா இருக்குமோ? ஜானு கேட்க, எங்க வீட்ல இருக்குறதுனால கண்டிப்பா இப்பொழுதைக்கு அவன் தலையிட மாட்டான். வேற என்று யோசித்த துளசிக்கு அவளது ப்ரெண்ட்ஸ் நினைவு தான் வந்தது.

ஜானு ஒரு நிமிடம் இரு காண்பரென்ஸ் போடுறேன் என்று அவளது தோழி ஒருத்திக்கு போன் செய்ய, சொல்லு என்று அவள் கேட்டாள்.

புவனா எங்கே? துளசி கேட்டாள்.

அந்த பொண்ணு பயங்கரமாக சிரித்தாள். அவ இனி நம்முடைய வாழ்வில் இடைஞ்சலா இருக்க மாட்டா.

என்ன சொல்ற? அவள எதுவும் செஞ்சிடாதீங்க கத்தினாள் துளசி.

அவளே முதல்ல வந்தா, எங்க வீட்ல எங்களுக்கு தண்டனை தாராங்க. அவளை ஒழிச்சிடா.நான் தான் முதல் மதிப்பெண் வாங்குவேன் என்று சிரித்தாள் அந்த பொண்ணு.

வேணாம்டி. அவள விட்டுருங்க..

ஏய்..என்னோட புவிக்கு ஏதாவது ஆனா செத்தீங்கடி என்று ஜானு கத்தினாள்.

அந்த பொண்ணு போனை அணைத்து விட்டு, ஜானு சீக்கிரம் போகணும். இருட்டா வேற இருக்கும். துருவன் இருக்கான்ல. அவனோட முன் போ..நானும் வருகிறேன் என்று துண்டித்து தீனாவிற்கு அழைப்பெடுத்தால் அவன் எடுக்கவேயில்லை.

அவள் பதட்டமாக வெளியே ஓட, அப்பத்தா..நில்லுடி என்றார். ஆனால் துளசி சென்று விட்டாள். ஜானு பிரதீப்பிடம் கூற, ஜானும்மா நீ அங்கேயே இரு. நான் வாரேன் என்று கூறியும் அவள் கேட்காது துருவனுடன் ஓடினாள்.

அவர்கள் அவ்விடத்தை நெருங்க, தீனாவிடம் வேலையில் இருப்பவர் வேகமாக அவனிடம் வந்து, ஜானுவும் துருவனும் மலைப்பாதை வழியே பதட்டத்துடன் அழுது கொண்டு செல்கிறார்கள். ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன் என்று கூற, போனை பார்த்தான். துளசி பல முறை போன் செய்திருப்பாள். அவன் அவளுக்கு அழைப்பு விடுக்க, அவள் அழுது கொண்டே, ஏன்டா இவ்வளவு நேரமா போன் எடுக்கல என்று மீண்டும் அழுதாள்.

அழாம, விசயத்தை சொல்லு என்றான்.

அவள் சொல்லி விட்டு, புவனாவை கொல்ல போகிறார்கள் என்று நினைக்கிறேன் என்று கூறவும் எகிறி குதித்து வண்டியில் ஏறினான். மனதில் அவள் மட்டுமே வந்து வந்து செல்ல, காளையவன் கண்ணிலோ கண்ணீர் குளம் கட்டியது.

ஓடிக் கொண்டிருந்த துளசி நேராக ஒரு காரில் மோதினாள். அகில் வெளியே வந்து துளசியை பார்த்து, இங்க என்ன செய்ற? எதுக்கு அழுற? கேட்டவுடன் காரிலிருந்தவர்கள் வெளியே அவளிடம் வந்தனர்.

அழுது கொண்டே நடந்ததை கூறி விட்டு, அண்ணா.. துருவும், ஜானுவும் தனியே சென்றிருக்கிறார்கள். நான் அண்ணாவிடம் கூறி இருக்கிறேன் என்று அழுதாள்.

அகில் தம்பி தானே துருவன். தனியாவா? அவ்வளவு பெரிய மனுசனாயிட்டானா? வாங்க..என்று இருட்டு காட்டிற்குள் போன் டார்ச்சை ஆன் செய்து கொண்டு அனைவரும் ஓடினர்.

அவர்கள் அங்கே வந்து பார்த்தால், துருவனை அந்த பசங்க அடித்துக் கொண்டிருந்தார்கள்.

யாராவது வாங்க..யாராவது வாங்க..என்று ஜானு அழுது கொண்டு கத்துவதை கேட்ட ஆதேஷ், துகிரா, துளசி அவளருகே சென்றனர்.

மலையின் விளிம்பில் புவனா தொங்கிக் கொண்டிருக்க ஜானு அவளது கையை பிடித்துக் கொண்டிருந்தாள். ஆதேஷை பார்த்து, அவள பிடி..ப்ளீஸ் என்று அழுதாள் ஜானு. அவன் புவனா கையை பிடித்து தூக்க,அவன் இழுக்க இழுக்க புவனா கத்தினாள். இழுக்காதீங்க..என்று அலறினாள்.

புவி மேல வா..ஜானு கூற, என்னோட கால் சிறு பறையின் இடையில் மாட்டிக்கிடுச்சு. என்னால முடியல ஜானு. என்னை விட்டுருங்க. எனக்கு ரொம்ப வலிக்குது.

இரு..கையை மெதுவாக தளர்வாக்கு என்றான்.

என்ன சொல்ற? இந்த மலை எத்தனை அடி ஆழம் தெரியுமா? இரண்டாயிரம் அடி ஆழமானது. விழுந்தா உடம்பு கூட கிடைக்காது என்று கத்தினாள்.

என்னது? இரண்டாயிரமடியா? துகிரா வாயை பிளந்தாள்.

பவி அங்கே அவர்களிடம், அவன் சொல்வது சரி தான். மெதுவாக கையை விட்டு விடாமல் தளர்த்துங்கள். அவளது கால் அப்பொழுது தான் வெளியே வரும் என்று ஜானுவை நகர்த்தி பவி அவளது கையை பிடித்து ஆதேஷை பார்த்தாள். அவனுக்கு வியர்த்து வழிந்தது.

மெதுவா..என்று அவள் சொல்ல, அவர்கள் தளர்த்தினார்கள். ஆனால் புவியின் பாதம் அந்த பாறையில் பட்டு எறிய ஆரம்பித்தது. மீண்டும் அவள் கத்தினாள். அவளுக்கு ஏற்கனவே வெந்நீர் காயம் சரியாகி இருக்காது.மெதுவாக தான் நடந்து கொண்டிருந்தாள். பிரதீப் வந்தான்.

புவியின் சத்தத்தை பார்த்து அவன் பதறினான். அவனை பார்த்ததும் அங்கிருந்த பசங்க ஓட, அவர்களை அகில் நித்தி மடிக்கி பிடித்தனர்.

பிரதீப் அவர்களை பார்த்து, உங்களுக்கு என்ன ஒரு உசுறு விளையாட்டா இருக்கா? என்று கத்தினான். அகில், நித்தியிடம் அவர்களது பெற்றோர்களுக்கு போன் செய்து இப்பொழுது இங்கே வரச் சொல்லுங்க என்று வேகமாக புவனாவிடம் சென்றான். பவியை நகர்த்தி விட்டு,பிரதீப் புவனாவிடம் பேசினான். துகிராவும் பவியும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அண்ணா என்னால முடியல..விட்டுருங்க என்று கதறினாள். அவனும் இழுக்க, அவள் கால் வலியால் கத்தினாள்.நித்தி பவியை அந்த பசங்கள பார்த்துக் கொள்ள சொல்லி அகிலும் உதவ வந்தான்.

முதல்ல அவளது காலை எடுத்து விட்டால் தான் அவளை பாதுகாக்க முடியும் என்று பிரதீப் சொல்ல, அதற்கு யாராவது மலைக்குள் இறங்க வேண்டும்.

இதற்குள்ளா? என்று பயத்துடன் துகிரா எட்டிப் பார்த்தாள். இப்பொழுது எதுவும் தெரியாது காலையில் தான் தெரியும் என்றான் அகில்.

அகில் இங்கே மரத்தில் கட்டி மலைக்குள் இறங்குவது போல் தடிமனான கயிறு ஏதாவது உள்ளதா? என்று பார். சீக்கிரம். ரொம்ப நேரம் அவளால் தொங்க முடியாது பிரதீப் கூறினான்.

ஜானு, துகிரா, அகில் தேட, சிறு கயிற்றை எல்லாம் காட்டி இதுவா ஜானு? இதுவா? கேட்டுக் கொண்டிருந்தாள் துகிரா.

சும்மா இருக்கீங்களா? நானே டென்சன்ல இருக்கேன்.நீங்க வேற?

நீங்கன்னா சொன்ன? என்று கேட்டுக் கொண்டே துகிரா ஒரு கயிற்றை பிடித்து இழுத்தாள். அது தடிமனாக வெள்ளை நிறத்தில் நீண்டு கொண்டே சென்றது.

இங்க இருக்கு? இது தானே ஜானுவிடம் கேட்டாள். அவளை முறைத்துக் கொண்டே ஜானு பார்த்து அகிலை அழைத்து, அண்ணா இது சரியா வரும் தானே?

ம்ம்..என்று எடுத்தான். அதன் மறு முனை குவியலாக இருந்தது. பிரதீப்பிடம் கூறினான். அவன் அங்கிருந்த பெரிய மரத்தில் கட்டி அவர்களருகே கொண்டு வந்து குவிந்திருந்ததை எடுத்து மலைபக்கம் போட்டான்.

இதை பாரேன். இங்கே போட்டதும் எவ்வளவு சிறியதாக உள்ளது என்றாள் துகிரா. எல்லாரும் அவளை பார்த்து முறைத்தனர்.

இல்லையா? கேட்டாள்.

பவியை பிடித்துக் கொள்ளச் சொல்லி பிரதீப் தயாராக, இந்த மலைக்குள்ள நீங்க இறங்கப் போறீங்களா? கேட்டாள் துகிரா. அவன் ஏதும் பேசாமல் இருக்க,அண்ணா பாத்துண்ணா என்றாள் ஜானு கலக்கத்துடன்.

அவளை பார்த்து தலையசைத்து விட்டு அருகே செல்ல, ஒரு பைக் சத்தம் கேட்டது. சர்ரென வண்டியை நிறுத்தி ஓடி வந்தான் தீனா.

Advertisement