ஹாய்..ப்ரெண்ட்ஸ்..

அனைவருக்கும் இனிய இரவு வணக்கம்.

இதோ உங்களுக்கான எபிசோடு 105.

அர்ஜூன் வீட்டில் ஸ்ரீ அழுது கொண்டிருக்க, தாரிகா ஸ்ரீயை சமாதானப்படுத்த முயன்றாள்.அர்ஜூன் வெளியே வந்து அவர்கள் அறை அருகே நின்று பார்த்தான். அவனுக்கு ஸ்ரீ அழுவதை பார்க்க வருத்தமாக இருந்தது. அவன் வீட்டிலே சாப்பாடு தயார் செய்து விட்டு மது பாட்டிலை எடுத்து அருந்தினான்.

ஸ்ரீ அவளாகவே வெளியே வந்தாள். கவினும் வீட்டிற்குள் நுழைந்தான். அர்ஜூன் குடித்து விட்டு நினைவில்லாமல் கிடப்பதை பார்த்து மூவரும் அதிர்ந்தனர்.

அர்ஜூனை கவின் எழுப்பினான். அவன் எழவேயில்லை. எப்பொழுதும் குடிப்பதை விட இரு மடங்கு அதிகமாக குடித்திருப்பான் போல,நீரை எடுத்து ஊற்ற வந்தான் கவின்.

ஸ்ரீ அவனை தடுத்து, வேண்டாம் அவன் அப்படியே இருக்கட்டும் என்றாள்.

ஸ்ரீ..?

ஆமாம் சீனியர். அவன் எழுந்தால் கஷ்டப்படுவான். அதற்கு அவன் இப்படியே நிம்மதியாக தூங்கட்டும் என்று அவன் செய்த சாப்பாட்டை பார்த்தனர். ஸ்ரீ கண்கள் குளம் கட்டின.

தாரிகாவும், ஸ்ரீயும் சாப்பிட கவின் அவனுடைய புத்தகத்தை எடுத்து அமர்ந்தான். ஸ்ரீ கவின் தாரிகாவிற்கு இடம் கொடுக்க, உள்ளே சென்று தூங்குவதை போல் நடித்தாள்.

தாரிகா அவனருகே அமர்ந்து கவின் தோளில் சாய்ந்து, ரொம்ப கஷ்டமா இருக்கு சீனியர். என்னால ரெண்டு பேரையும் சமாதானப்படுத்த முடியல என்று புலம்பினாள்.

எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லைடா ஜில்லு. இவ்வளவு தூரம் போயிருக்கும் என்று நினைத்து கூட பார்த்ததில்லை.

ஸ்ரீ எப்படி இருந்த பொண்ணு தெரியுமா? நானும் அவளும் சிறுவயதிலிருந்தே எதிரும் புதிருமாக தான் இருப்போம். ரெண்டு பேரும் ஆரம்பிச்சா அகிலை தவிர யாராலும் எங்களை தடுக்க முடியாது. அவள் எங்க எல்லாருடனும் நெருக்கம் தான் அர்ஜூன் தவிர. ஆனால் மனதளவில் எங்களை விட அவன் தான் அவளை புரிந்தும் வைத்திருக்கிறான். அவளுடைய பிரச்சனையில் பங்கிட்டும் இருக்கிறான்.

ஸ்ரீ தப்பு செஞ்சுட்டா. அவ யாரையோ காதலித்ததற்கு பதில் அர்ஜூனை காதலித்து இருக்கலாம் என்றான்.

அவள் காதலித்து யார் தெரியுமா? தாரிகா கேட்டாள்.

தெரியல..ஆனால் அவ லவ் பண்ணது மட்டும் அவளது நடவடிக்கை தான் காட்டிக் கொடுத்தது. நான் அபியிடம் கூட இதை சொல்லவில்லை.

ம்ம்..என்று பெருமூச்சுடன். அது அகில் சீனியர் தான் என்றாள்.

என்ன சொல்ற? அகிலா உனக்கு எப்படி தெரியும்? அர்ஜூன் தான் சொன்னான்.

தலையை பிடித்துக் கொண்டு, அகில் தானா? நாங்க தான் தேவையில்லாம அர்ஜூனை காயப்படுத்தி விட்டோம் என்று வருந்தினான். ஸ்ரீ இவர்கள் பேசுவதை கேட்டு விரக்தி புன்னகை சிந்தினாள்.

அவர்கள் ஸ்ரீயை பார்க்க வந்தனர். அவள் தூங்குவதை பார்த்து, மருந்து போடலை அவள். இடையே எழுவாள். அப்பொழுது போட்டு விடுவோம் என்று தாரிகா ஸ்ரீ அறையில் படுக்க, ஹாலில் அர்ஜூன் தனியே இருப்பதால் கவினும் அவனுடன் படுத்துக் கொண்டான்.

அனைவரும் தூங்கி விட்டார்கள் என்று எழுந்து ஹாலிற்கு வந்தாள். கவின் கண்ணை மூடி படுத்திருக்க,

ஏன்டா, எல்லாரும் என்ன என்னோட அர்ஜூன் கூடவே படுத்துகிறீங்க? நேற்று அந்த லூசு கைரவ்..இன்று நீயாடா? என்று கவினை எட்டி உதைத்தாள்.

அய்யோ..வலிக்குதே? என்று கண்ணை திறவாது ஸ்ரீ பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான் அவன். தாரிகாவும் பார்த்து வீடியோ எடுக்க ஆரம்பித்தாள்.

ஸ்ரீ அர்ஜூன் அருகே சென்று அவள் செய்வது, பேசுவதை பார்த்து இருவரும் உறைந்து இருந்தனர்.

கவின் மனதினுள், என்ன சொல்றா இவ? இது உண்மை தானா? காதை குடைந்து கேட்டுக் கொண்டிருந்தான்.

என்ன ஸ்ரீ? நீ எவ்வளவு பெரிய விசயத்தை மறைக்கிற? என்று தாரிகா வருத்தத்துடன் வீடியோ எடுத்து வைத்தாள். ஸ்ரீயும் அப்படியே உறங்க, கொஞ்ச நேரத்தில் விழித்த ஸ்ரீ தாரிகா அருகே வந்து படுத்துக் கொண்டான். தாரிகா ஸ்ரீயை எழுப்புவதை போல் பாவனை செய்து, மருந்தை போட்டு விட்டு படுக்க, ஸ்ரீ தூங்கிப் போனாள்.கவின் தாரிகாவால் தான் தூங்க முடியவில்லை.

அன்றிரவு பதினோரு மணிக்கு மேல் வீட்டிற்கு வந்த தீனா, அவனது அறை சென்று குளித்து ஆடை மாற்றி புவனாவை பார்க்க நினைத்தான்.

அவள் அறை கீழேயும், அவன் அறை அதற்கு நேராக மேலேயும் இருக்கும். அவனது அறையிலிருந்து அவளுடைய பால்கனிக்கு குதித்து புவனா அறைக்குள் வந்தான்.

அவள் அழகு பதுமையாய் ஆழ்ந்த துயிலில் இருந்தாள். அவளுக்கு அவனது அணைப்பு அவன் உடனிருப்பதை போல் தோன்றவே..படித்தவாறே புத்தகத்தை போட்டு தூங்கிக் கொண்டிருந்தாள்.

அவளை நின்று ரசித்து விட்டு அவளது நெற்றியில் முத்தமிட்டான். பின் அவளுக்கு போர்வையை போர்த்தி விட சரியாக அப்பத்தா அவள் அறையை எட்டிப் பார்த்தார். அவன் அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு, புத்தகத்தை பார்த்தான். அதில் ஏதோ கிறுக்கலை கண்டு சிறு புன்னகையுடன் அதை ஒதுக்கி விட்டு அவளருகே அமர்ந்து அவளது கையை அவனது கைகளில் வைத்தவாறு அவளை பார்த்துக் கொண்டிருந்தான்.

இதை பார்த்த அப்பத்தா முதலில் கோபப்பட்டாலும் திடீரென மகிழ்ச்சியுடன் அங்கிருந்து சென்றார்.அவருக்கு பெயரன் காதலிப்பது புரிந்தது. இனியாவது வேறு எந்த பொண்ணு பின்னாடியும் செல்லாமல் இருந்தால் போதும். அவருக்கும் புவனாவை பிடிக்கும் தானே?

கொஞ்ச நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். புவனா திடீரென விழித்தாள். தீனா அவளருகே உட்கார்ந்திருப்பதை பார்த்து, என்னாச்சு சார்?

ஒன்றுமில்லை. துளசி வேறேதும் பிரச்சனை செய்தாலா?

நோ சார் என்று விட்டு, துளசி அறையில் இவள் வைத்த கடிதத்தை பற்றி நினைத்தாள். அதில் இன்னும் ஒரே மாதத்தில் நான் உங்க வீட்டிலிருந்து கிளம்பிடுவேன். நானும் என் வீட்டில் தனியே இருந்து கொள்ளலாமென்று தான் நினைத்தேன்.

உனக்கு அர்தீஸை தெரியும்தானே? அவனை என்னால் தனியே சமாளிக்க முடியாது. பயமா இருந்தது.அதனால் தான் உங்க வீட்டிற்கு வந்தேன். கொஞ்சநாள் மட்டும் நான் இருந்து விட்டு, நீ பார்க்க முடியாத இடத்திற்கு சென்று விடுவேன்.என்னால் நீயும் கஷ்டப்பட்டு விட்டாய்? எழுதி இருந்தாள்.

துளசி அவளது கடித்ததை பார்த்து தூக்கி எறிந்தாள். பிறகு நேரம் கழித்தும் அது அவள் எறிந்த இடத்திலே கிடந்தது. என்ன தான் எழுது இருக்கிறாள் என்று பார்ப்போம் என்று வாசித்து, அமைதியானாள்.

ஒரு மாதம் தானே இருந்து விட்டு போகட்டும். அவளுக்கு அவ அம்மா சொன்னது  நினைவிற்கு வந்தது.நான் செத்து நீ தனியா இருந்தா தான் புரியும்டி என்று சொன்னதை நினைத்து துளசி தன் தவற்றை உணர்ந்து கொண்டாள்.

என்ன யோசிக்கிற?

ஒன்றுமில்லை சார், நீங்க ஓய்வெடுக்க போங்க சார்.

போகிறேன் என்று அவளை நெருங்கி வந்தான். அவள் பதற, ஒன்றுமில்லை. நான் கிளம்புகிறேன் என்று அவன் எப்போதும் போல் பறக்கும் முத்தம் கொடுத்து விட்டு வந்த வழியே செல்ல, அவளும் எழுந்து வந்து பார்த்தாள். அவன் அறையிலிருந்து கையை ஆட்டினான். அவள் வெட்கப் புன்னகையுடன் உள்ளே சென்று படுத்துக் கொண்டாள்.

சைலேஷ் வீட்டில் கேரி பாப்பாவை தூங்க வைத்து விட்டு வெளியே வந்தான். மூவரும் உள்ளே நுழைந்தனர்.சைலேஷ் கைரவை அழைத்து இவர்களை பார்த்துக் கொள் என்று அறைக்குள் வந்து லேப்பை எடுத்தான்.அவன் உதவியாளன் அவனை அழைத்து திட்டம் நடக்கவில்லை சார்.

சரி. நானே போன் செய்கிறேன் என்று தலையை பிடித்து அமர்ந்தான். நான் என்னோட பாணியிலே இதை சரி செய்கிறேன் என்று முடிவெடுத்தான்.

நீங்க மேம்மை லவ் பண்றீங்களா? தயங்கிக் கொண்டே யாசு கேரியிடம் கேட்டாள்.

ஹா..ஹா..என்று சிரித்தான். கைரவ் இவர்கள் பேசுவது புரியாமல், எதுக்கு கேக்குற?

அபி இன்பா மேமை லவ் பண்றான். அவங்க வீட்ல வைச்சு அம்மா முன்னாடியே சொல்லிட்டான்.

சொல்லிட்டானா? கேரி கேட்டு விட்டு,பாவம்பா உங்க அபி. இன்பாவை காதலிக்க வைப்பது சாதாரண விசயமில்லை. ரொம்ப கஷ்டம்.

நீங்க?

நான் சும்மா அபியிடம் விளையாடினேன்.

என்ன சொன்னீங்க? நித்தி கேட்டாள்.

ஊருக்கு போகும் போது அவளையும் கூட்டிடு போவேன்னு சொன்னேன். ஆனா அவன் உறுதியா இருக்கான் என்று சிரித்தான்.

என்ன சொன்னான்?

அது ரகசியம் என்றான் கேரி.

போங்கண்ணா என்று நித்தி தாத்தாவை பற்றி கேட்டாள். அவர் உறங்குகிறார் என்று கைரவ் கூறினான்.வேலை செய்வர்கள் வந்து நித்தியை பார்த்து, ஓடி வந்து விசாரிக்க, அவள் பேசுவதையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

பின் அவர்கள் சென்றவுடன் நித்தி சைலேஷ் அறைக்கு சென்றாள்.அவன் மும்பரமாக வேலை செய்வதை பார்த்து, ஒரு நாற்காலியை இழுத்து போட்டு அவனருகே அமர்ந்தாள்.

அவளை பார்த்து, என்ன மேடம் எல்லாரிடமும் பேசிட்டீங்களா? கேட்டான். அவள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.கைரவ் அண்ணா இன்னும் சாப்பிடவில்லை என்று நித்திக்கு மெசேஜ் பண்ணினான்.

நீங்க சாப்பிடலையா?

ம்ம்..தோன்றவில்லை.

நீங்க அர்ஜூன் வீட்டிற்கு போனீங்களா?

ஆம் என்றான்.அங்க அந்த கயல் ஆட்கள் வந்தாங்களாமே?

ம்ம்..என்றான் சுருக்கமாக. ஸ்ரீ என்று நித்தி ஆரம்பிக்க, நித்திம்மா என் வேலையை முடித்து வரவா?

அவள் வருத்துடன் எழுந்தாள். நில்லு..எனக்கு பசிக்கிறது?

நீங்க தான் சாப்பிட தோன்றவேயில்லைன்னு சொன்னீங்க.

சொன்னேன் தான். நீ கொடுத்தால் சாப்பிடுவேன்.

நித்தி முகம் மலர்ந்து, எடுத்து வருகிறேன் என்று ஓடினாள். கைரவை அழைத்த சைலேஷ் யாசுவிற்கு அறையை காண்பிக்க சொன்னான்.

ஆமாம். அவங்க ஒரு வாரம் இங்கேயே தங்கட்டும் என்றான்.அர்ஜூனிடம் நான் பேசிக் கொள்கிறேன்.

அவன் வெளியேற, நித்தி உள்ளே வந்தாள்.சைலேஷிற்கு அவள் ஸ்பூன் எடுத்து ஊட்டி விட,நோ என்று கையசைத்தான்.அவள் அவனுக்கு அவள் கையாலே ஊட்டி விட, அவளுடன் விளையாடியவாறே வேலை பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தான்.

அழகான விடியலொன்று பிறக்க, கொட்டாவியுடன் தாரிகா வெளியே வந்தாள். ஸ்ரீயை பார்த்து நேற்று நடந்ததை நினைத்து பாவமாக இருந்தது தாரிகாவிற்கு.கவின் அவள் பார்வையை புரிந்து அவள் தோளில் கை வைத்தான்.

சீனியர், நான் நினைப்பதை தான் நீங்க  நினைக்கிறீங்களா?

ம்ம்.. இதை கூட கவனிக்காமல் இருந்திருக்கிறேன்.

நானும் மற்றவர் பேச்சை கேட்டு தவறாக தான் எண்ணி இருந்தேன்.

கவின் ஸ்ரீயை தூக்கி வந்து அர்ஜூன் அருகே போட்டான். அவள் ஆழ்ந்த உறக்கத்திலிருக்க, அவன் மீது காலை போட்டுக் கொண்டாள். இருவரும் இதை பார்த்துக் கொண்டிருந்தனர். அர்ஜூனிற்கு மெதுவாக நினைவு திரும்ப,கவினும் தாரிகாவும் மீண்டும் அவரவர் இடத்தில் படுத்துக் கொண்டனர்.

அர்ஜூன் தலையை பிடித்துக் கொண்டு எழுந்தான். ஸ்ரீ அவனருகே இருப்பதை பார்த்து பதறினான். அவளது காலை அவன் நகர்த்த, அவள் மெலிதான கவுனை தான் அணிந்திருந்தாள். அவளது ஆடை விலகியது.

அய்யோ ஸ்ரீ..என்ன செய்ற? என்று மீண்டும் நகர்த்த, அவள் கையை அவன் மீது போட்டு அணைத்தாள். அவனுடைய முகபாவனை பார்த்து இருவரும் சிரித்தனர்.

ஸ்ரீ என்னை விட்டு விடு. என்னால என்னையே கட்டுப்படுத்தாமல் போய் விடும் என்று புலம்பினான். ஸ்ரீயின் கை, கால்கள் அவன் மீதிருக்க அவன் மெதுவாக திரும்பி அவள் முகத்தை பார்த்தான். அவள் அழகாக புன்னகையுடன் அவனை மீண்டும் நெருங்கினாள். அவன் வேறு பக்கம் திரும்பி விட்டு, மீண்டும் அவள் பக்கம் திரும்ப இரு இதழ்களும் உரசியது.அவன் அவளையே பார்க்க,அவள் இறுக கட்டிக் கொண்டாள். இப்பொழுது இருவரின் இதழ்களும் அழுத்தமாக பதிந்தது. அர்ஜூனிற்கு விலக மனமின்றி அப்படியே படுத்துக் கொண்டான். ஸ்ரீயின் முத்தம் அர்ஜூனை மயக்கியது. கண்களை மூடிய அர்ஜூன் ஆழ்ந்து உணர்வுகளை வெளிக் கொண்டு வந்தான். ஸ்ரீ மீதான உணர்வுகள் அவனுக்கு அவளை அணைக்கத் தூண்டியது. ஆனால் அப்பொழுதும் கட்டுப்படுத்தியவாறு அவளை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தான்.

கவினும் தாரிகாவும் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர். அவனுடைய போன் சத்தம் கேட்டு, ஸ்ரீயை விலக்கி விட்டு எழுந்து வேகமாக தள்ளி அமர்ந்தான். அவள் எழுந்து, அம்மா என்று அர்ஜூனை கட்டிக் கொள்ள, பின் அவனை பார்த்து அர்ஜூன் நீயா? நானா? என்று ஏதோ பேசினாள்.

அவனோ பேசாது அவளையே பார்த்தான்.அர்ஜூன் என்று அருகே வந்து, நேற்று நீ குடிச்சியா?

அவன் சுற்றி பார்த்தான். அவன் குடித்த தடயமே இல்லாது இருந்தது. அர்ஜூன் கவினை பார்த்தான். அவன் தூங்குகிறான் என்றால் யார் இதை சுத்தப்படுத்தி இருப்பார்கள்? தாரிகா அறையை எட்டி பார்த்தான். அவளும் தூங்குவது போல் நடித்தாள்.

ஸ்ரீ மீண்டும் அர்ஜூனிடம், நீ என்னடா செய்ற? என்று அவனது சட்டையை பிடித்துக் கொண்டு உளறினாள். ஸ்ரீ இங்கே வா என்று முகர்ந்து, ஏய் ஸ்ரீ நீ குடிச்சியா?

நானா? இல்லையே..அர்ஜூன் தான். இடியட் எனக்கு கொடுக்காம குடிச்சிட்டான் இடியட். அவனை..என்று எழுந்து தள்ளாடிக் கொண்டு அவன் மீதே விழுந்தாள். அர்ஜூன்..வீடு சுத்துது பாரேன் என்று அவனது தலையை பிடித்து ஆட்டினாள்.

அர்ஜூன்..நான் என்னோட காதலை சொல்லவா? உளறினாள்.

காதலா? ஸ்ரீ நீ யாரை லவ் பண்ற? கேட்டான்.

அய்யோ..போச்சு என்று கவின் வேகமாக எழுந்தான். தாரிகாவும் எழுந்தாள்.