Advertisement

அத்தியாயம் 8

நாங்கள் கிளம்புகிறோம்… இங்கே ஏதும் சரியில்லை. அகில் சீனியர், நீங்கள் எங்களிடம் தள்ளியே இருங்கள் நிவாஸ் கூற, சும்மா இருடா…ஸ்ரீ கூற, நீ வாயை மூடு….நீங்கள் என்ன ஸ்ரீயை ஆளாலுக்கு அடிக்க வருகிறீர்கள்? போதும் உங்களது நட்பு….இருக்கும் பிரச்சனையை சமாளிக்கவே போதும் …போதும் ….என்று உள்ளது கோபத்தில் நிவாஸ் கூறி விட்டான். ஸ்ரீ தலையில் அடித்துக் கொண்டாள்.

அர்ச்சுவும், அபினவும்…பிரச்சனையா?…கேட்க,

அதெல்லாம் ஒன்றுமில்லை. அவன் என் மீதுள்ள பாசத்தில் ஏதோ உளறுகிறான்…..ஸ்ரீ கூறினாள்.

இனி அவளுக்கு பிரச்சனை இருக்காது நித்தி நிற்க முடியாமல் பேச, ஸ்ரீ வேகமாக அவளை அறையினுள் அழைத்து சென்றாள்.

சைலேஷ் அவர்களிடம், ஏதும் பிரச்சனையா?

நீங்கள் எதற்காக வந்தீர்கள்? அகில் கேட்க,

நித்தியிடம் பேச வந்தேன் கூற, கவின் கோபமாக முடியாது. நீங்கள் அவளிடம் பேசக் கூடாது என்றான்.

அபினவ் அவனிடம், என்னடா? கேட்க, யாசு மறுபடியும் அங்கே வந்தாள்.

எதற்காக வந்தாய்?அகில் அவளிடம் சீறினான்.

நான் அவரை பார்க்க வந்தேன் என்று சைலேஷை கை காட்டினாள். நீங்கள் மருத்துவமனை உள்ளே வந்ததை கவனித்தேன். உங்களிடம் பேச வேண்டும். அனைவரும் அவனை பார்த்தனர்.

உள்ளே ஸ்ரீ நித்தியை உட்கார வைத்து, சாப்பிட வைத்துக் கொண்டிருந்தாள்.நித்திக்கு அளவில்லாத மகிழ்ச்சி…

கவின் இடையே வந்து, இது என்ன? சைலேஷிடம் போட்டோ ஒன்றை காண்பிக்க, அவன் யாசுவை பார்த்தான். பின் அவளிடம்,”உங்களுக்கு தெரியுமா”? கேட்டான் சைலேஷ்.

தெரியும் என்று யாசு பதிலளித்தாள். அனைவரும் அவளையே பார்க்க,

என்ன பேசுகிறீர்கள்? ஒன்றுமே புரியவில்லை அர்ச்சு கேட்டான்.

கவினிடமிருந்து நித்தி போனை பிடுங்கி, சைலேஷ் போட்டோவை காண்பித்தாள்.அனைவரும் ஆச்சர்யமாக பார்த்தனர்.

அவளுக்கு என்னை எப்படி தெரியும்? என்னுடைய போட்டோஸ் அவளிடம் எப்படி? கூறுங்கள் என்று யாசுவை பார்க்க, அவள் கூற ஆரம்பித்தாள்.

நாங்கள் படிக்கும் இதே கல்லூரியில் இசை போட்டியில் பங்கு பெற மூன்று வருடங்களுக்கு முன்பு வந்திருந்தோம்.

ஆம்,இரண்டாம் இடத்தை கூட பிடித்தோமே! அபினவ் கேட்க,

நிகழ்ச்சி முடிந்தவுடன், கல்லூரியை சுற்றி பார்க்க இருவரும் தனியாக வந்தோம். சத்தமாக உள்ள ஓர் இடத்தை பார்த்து அவள் அங்கேயே நின்றாள். அங்கே, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இருந்தீர்கள். கையில் போனை எடுத்து அப்பொழுது தான் போட்டோஸ் எடுக்க ஆரம்பித்தாள். நான் கூட உங்கள் அனைவருடைய நட்பிற்காக தான் எடுத்தாள் என்று நினைத்தேன். ஒரு பெண் அந்நேரம் உங்களிடம் காதலை கூற,நீங்களும் அவளை கட்டி அணைத்துக் கொண்டு அவளது காதலை ஏற்றுக் கொண்டீர்கள். அவள் கண்ணிலிருந்து கண்ணீர் வரவும் தான் அவளது போனை பார்த்தேன்.முழுவதும் உங்களது போட்டோவை பார்த்து அவளிடம் கேட்டேன்.

எனக்கு அவரை பிடித்து விட்டது என்றாள் அழுது கொண்டே…

அவளுக்கு போட்டோசை அழிக்க மனமில்லாமல் இப்பொழுதும்  வைத்திருக்கிறாள்.அதிலிருந்து உங்களை சந்திப்பதில் உறுதியாக இருந்தாள். உங்களை சந்திக்க யாருக்கும் தெரியாமல் வகுப்பை தவிர்த்து விட்டு வந்திருக்கிறோம். ஒவ்வொரு விடுமுறையின் போதும் நீங்கள் அந்த பெண்ணுடன் எங்கெல்லாம் செல்வீர்களோ! அங்கெல்லாம் நாங்களும் வந்தோம். அவளை தனியே விட பயந்து நானும் அவளுடன் சென்றேன்.

நான் அவளிடம் தனியே வருவது பாதுகாப்பு அல்ல என்றும், அவர் அந்த பெண்ணை தான் காதலிக்கிறார். நீ தேவையில்லாமல் உன்னை நீயே காயப்படுத்திக் கொள்ளாதே! என்று அப்பொழுதே கூறினேன். என் பேச்சை அவள் கேட்கவே இல்லை.

இவரை பார்க்க யாருக்கும் தெரியாமல் இருவரும் இவ்வளவு தூரம் வந்திருக்கிறீர்களா? உங்கள் இருவருக்கும் ஏதாவது ஆனால் என்ன செய்வது? அகில் கோபப்பட்டான்.

உங்களுக்கு அறிவே இல்லையா? சொல்லி இருக்கலாம்ல?இரண்டு பேரும் மூளையை கழற்றி வைத்து விட்டீர்களா? இவன் அவ்வளவு முக்கியமாக போய் விட்டானா அவளுக்கு? கவின் கத்தினான்.

ஓ….அதனால் தான் விடுமுறை நாட்களில் வகுப்பு பெண்களுடன் ஷாப்பிங் என்று ஏமாற்றி இருக்கிறீர்களா? இது கூட தெரியாமல் இருந்திருக்கிறோம்? அபினவ் அவளை முறைக்க,

அவள் மெல்லிய புன்னகையுடன், எனக்கு இது போதும் என்று யாசு வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு, பிரச்சனை வந்தது என்றாள்.

என்ன பிரச்சனை? அர்ச்சு பதறினான்.

இவர்கள் பின் தான் ஷாப்பிங் சென்றோம். அங்கே ஒருவன் எங்களை பின் தொடர்ந்தான். நாங்கள் திரும்பி பார்த்தால் ஏதும் தெரியாதது போல் நின்றான். நாங்கள் தொடர்ந்து நடந்தோம்.பின் மூன்று பேராக பின் தொடர்ந்தனர்.சைலேஷ் நண்பர்களில் ஒருவர் எங்களை கவனித்து விட்டு, அவர்களை பார்த்து முறைத்தார். அவர்கள் பின் தொடரவில்லை என்று ஒரு கடையினுள் நுழைந்தோம். அங்கே இவரும், நண்பர்களும் இருந்தனர். மீண்டும் அந்த மூவரும் அங்கு வர, எங்களுக்கு பயம் அதிகமானது.

எங்களையும், அவர்களையும் பார்த்த இவருடைய நண்பன்,அவர்கள் அருகே சென்று,உங்களுக்கு என்ன வேண்டும்? என்று கேட்க,அவர்கள் எங்களை பார்க்க, அவர் புரிந்து கொண்டு,ரொம்ப நேரமாக இந்த பொண்ணுங்களை பின் தொடர்கிறார்கள் அவர் நண்பர்களிடம் கூற,அவர்கள் சண்டையை ஆரம்பிக்க,அதில் ஒருவன் கத்தியை எடுத்து நித்தியை பார்க்க, அருகிலிருந்த ஹாக்கி மட்டையை எடுத்து கத்தி வைத்திருந்தவனிடம் சைலேஷ் தூக்கி எறிய, மட்டை தட்டி கத்தி கீழே விழுந்தது.அவன் வேகமாக நித்தி அருகே வர, சைலேஷ் அவளை இழுத்து நகர்த்தி விட்டதில் இருவரும் கீழே விழுந்தனர். அதற்குள் அங்கிருந்த பாதுகாவலர்கள் அங்கே வந்து அவர்களை இழுத்து சென்றனர்.பின் இருவரும் எழுந்தனர்.சைலேஷ் கையில் அடிபட்டிருந்தது.

ஒரு நிமிடமென்று மருந்தை கொண்டு வந்து அவனுக்கு போட்டு விட்டாள். பின் அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான செயின் ஒன்று உதவிக்கு பரிசாக கொடுத்தாள்.

அவர்கள் அவளை பார்த்து சிரித்து விட்டு, நாங்கள் என்ன பெண்களா? செயின் வாங்கி கொடுத்திருக்கிறீர்கள்?

அவள் அதை பிரேஸ்லெட் போல் சைலேஷ் கையில் மாட்டி விட, நானும் மற்றவர்களுக்கு மாட்டி விட, அனைவரும் கிளம்பினார்கள்.

மறு வாரமும் அவரை பார்க்க வந்த போது அந்த பெண்ணுடன் தனியாக இருந்தார்.அவர்களை பின் தொடர்ந்து சென்றோம்.

இவர் கையில் இருந்த பிரேஸ்லெட்டை பார்த்து, எங்கே வாங்கியது? அவள் கேட்டாள்.

இவர் நடந்ததை கூற, அதை அவரது கையிலிருந்து எடுத்து, நித்தி கண் முன்னே அதை அந்த பொண்ணு தூக்கி எறிந்து விட்டாள்.பின் இவரிடம் கோபித்துக் கொண்டு வேகமாக நடக்க, அவளை கட்டிப் பிடித்துக் கொண்டு, நான் உதவியதற்காக அந்த பொண்ணு அனைவருக்கும் கொடுத்தாள்.

அப்படியா…? இது என்ன? என்று கீழிருந்து அதை எடுத்து டாலரை அவள் காண்பிக்க, அதில் “ஐ லவ் யூ” என்று எழுதி இருந்தது. இவர் அதிர்ச்சியுடன் பார்த்து விட்டு,

அந்த பெண்ணின் முகம் கூட நினைவில் இல்லை. அவளை பற்றி எனக்கு ஏதும் தெரியாது. நான் எப்படி அந்த மாதிரி பொண்ணு பின்னால் சுற்றுவேனா?

உன்னை எப்படி நம்புவது?

என் நண்பர்களிடமும் இதே போல் இருக்கும் கூற, சரி போன் போடு என்று அவளே பேச, நித்தி சைலேஷிற்கு மட்டும் தான் அவ்வாறு வாங்கினாள். இதை தெரிந்து கொண்டு,அவள் கோபப்பட, எனக்கு அந்த மாதிரி பெண்ணை பிடிக்காது என்றான் அவளிடம்.

என்ன சொல்கிறாய்?

ஆம். அந்த மூன்று பேரையும் நான் பார்த்தேன். அவர்களிடம் மிரட்டி கேட்ட போது,

அந்த பெண் தான் தாக்குவது போல் நடிக்க சொன்னாள் என்று அவன் கூறினான் என்று அந்த பெண்ணிற்கு முத்தம் கொடுத்து சமாதானப்படுத்தினார்.

அதை கேட்ட எனக்கே ஒரு மாதிரி ஆனது. அவளுக்கு எப்படி இருக்கும்? அவள் உடைந்து விட்டாள்.இவரை திரும்பி கூட பாராது அவளை ஊருக்கு அழைத்து வந்து விட்டேன் அனைவரிடமும் கூறி விட்டு, அவனருகே வந்து உங்களை பார்க்க நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் தெரியுமா? அவளை கேவலமாக பேசி விட்டீர்கள். அன்று நீங்கள் கூறியது போல் அவள் ஏதும் செய்யவில்லை.அவளை மிகவும் காயப்படுத்தி விட்டீர்கள்!அவள் அதிலிருந்து மீள மிகவும் கஷ்டப்பட்டாள்.

முதலில் எங்களுடைய தோழி எங்களை விட்டு பிரிந்தாள். அப்பொழுது தான் உங்களை பார்த்தாள். நீங்களும் காயப்படுத்தி விட்டீர்கள். பின் கவின் தான் நன்றாக கவனித்துக் கொண்டான். அப்பொழுதும் கூட அவளால் உங்களை மறக்க முடியவில்லை.கவின் அவளிடம் காதலை கூறியும் அவளால் அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவளுக்கு என்றால் அவன் தான் முதலில் நிற்பான்.அவன் காதலுக்கு முன் நீங்கள் பொறுத்தமில்லாதவர் தான்.

நீ சரியாக தான் கூறுகிறாய்? அவள் காதலுக்கு நான் கொஞ்சமும் தகுதி இல்லாதவன் தான் சோகமாக அவன் அமர்ந்தான்.

நீங்கள் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டீர்கள் தானே! யாசு மெதுவாக வினவினாள்

இல்லை என்று அவனது முழுக் கை சட்டையை மடித்து காட்டினான். அவனது கையில் நித்தி வாங்கி கொடுத்த அதே செயின் இருந்தது.

இது அதே செயின் தானே! என்று அவனருகே வந்து அந்த செயினை பார்த்து மகிழ்ந்தாள் யாசு.

அப்படியென்றால் அந்த பொண்ணு?

அவளை என் வாழ்க்கையிலிருந்து துரத்தி விட்டேன்.

என்ன? யாசு அதிர்ச்சியோடு கேட்க,

நீங்கள் அன்று சென்ற ஒரே வாரத்தில், உங்களுக்கு உதவினானே! என் நண்பன், அவன் பெயர் மாதவ். அவன் போலீஸ் பயிற்சிக்காக சென்ற இடத்தில்,அவன் தற்செயலாக அந்த மூவரையும் பார்த்து மீண்டும் விசாரிக்க,முதலில் கூறவில்லை.பின் அவன் மிரட்டியதால் அனைத்தையும் கூறினார்கள். நான் காதலித்த பெண் தான் அனைத்திற்கும் காரணம். நீங்கள் என்னை பின் தொடர்வதை முன்னே கண்டறிந்து, உங்களை பின் தொடர்ந்து கடத்த, அவர்களை அனுப்பியதே அவள் தான். அதுவும் எனக்காக அல்ல, என் பணத்திற்காக….நான் தான் அவளை காதலித்து இருக்கிறேன்.அவள் பணத்திற்காக மட்டுமே என்னுடன் இருந்திருக்கிறாள் என்று கண்கலங்கிக் கொண்டே, அவளிடம் நான் ஏமாந்து இருக்கிறேன் என்றான்.

எல்லாம் தெரிந்த பின்னும் என் பின்னே, உனக்காக தான் அவ்வாறு செய்தேன் என்று சுற்றினாள். அவள் அந்த மூவரிடமும் பேசியதை அப்படியே வீடியோ போட்டு காட்ட, என்னை மன்னித்து விடு. என்னை ஏற்றுக் கொள். இனி அவ்வாறு செய்ய மாட்டேன் கூறினாள். என்னுடைய நண்பர்கள் அவளிடம் வீடியோவை காட்டி போலீசிடம் கொடுத்து விடுவோம் என்று மிரட்டினார்கள். அதிலிருந்து அவள் என் பக்கம் வரவே இல்லை. பின் அவளுக்கு திருமணமும் முடிந்தது. அவள் இங்கு தான் ஆசிரியையாக இருக்கிறாள் என்றும் அவளுக்கு விவாகரத்து ஆனதும் இன்று காலையில் தான் தெரியும் என்றான்.

இன்று காலையில் அவள் என்னிடம் பேச வரவே நித்தி முன் பேச வேண்டாம் என்று அவளை தனியே அழைத்து சென்றேன். அவள் மீண்டும் என்னுடன் நட்புடன் இருக்க பேசினாள். அவளை நன்றாக திட்டி விட்டு வந்து பார்த்தேன்.அவளுடைய போன் மட்டும் தான் இருந்தது. பின் கவின் வந்தான் என்று அவனை பார்க்க, அவன் உடைந்து போய் உட்கார்ந்திருந்தான். பின் கோபமாக அவளை காயப்படுத்தி இருக்கிறாய்? சைலேஷை அடிக்க கவின் கையை ஓங்க, நித்தி ஓடி வந்து அவனை தடுத்து விட்டு அவன் மீதே சாய்ந்தாள்.

கவின், நித்தி…. என அழைத்துக் கொண்டே அவளை தாங்க, அவனது கையை எடுத்து விட்டு, சைலேஷை பார்த்து, நீங்கள் இங்கிருந்து கிளம்புங்கள்.. என்றாள்.

நான் உன்னிடம் பேச வேண்டும் சைலேஷ் கூற, நான் அனைத்தையும் கேட்டேன்.என்னால் முடியவில்லை என்று அவனிடம் கூறி விட்டு, யாசு…..போகாதே!…..அவளது கையை நித்தி பிடிக்க, அவள் நித்தியை பார்த்து கொண்டே கையை எடுத்து விட்டு, அகிலிடம் இனி உன்னை தொந்தரவு செய்ய மாட்டேன். பாடல் அரங்கேற்றம் இருந்தால் மட்டும் விருப்பமிருந்தால் கூறு… வருகிறேன்.

அபினவை பார்த்து,உன் உபதேசத்திற்கு நன்றி கூறி விட்டு, அகிலுடைய காதலை காப்பாற்ற முயற்சி செய்ய உதவி செய் என்று கூறி விட்டு, அர்ச்சுவை ஒரு பார்வை பார்த்து விட்டு சென்றாள். அர்ச்சு மனது கஷ்டத்துடன் இருப்பதை யாசு உணர்ந்து கொண்டாள்.

அவள் சென்ற திசையை பார்த்துக் கொண்டே அகில், நான் என் காதலில் கண்டிப்பாக வெற்றி அடைவேன் மகிழ்ச்சியுடன் கையை உயர்த்தினான்.. உனக்கு நாங்கள் உதவி செய்கிறோம் என்று நண்பர்கள் கூற,ஸ்ரீ இருக்கும் அறை பார்த்து மகிழ்ந்தான் அகில்.

சைலேஷ் புரிந்து கொண்டான் குக்கூவும், ஸ்ரீயும் ஒரே ஆள் தான் என்று.நிவாசும் அவர்கள் பேசியது, நடந்து கொண்டதை வைத்து அவனுக்கும் ஸ்ரீ தான் குக்கூவோ என்று மனதினுள் எண்ணினான்.

“கண்டவுடன் வந்ததே காதல்

உன் முகமாய் தெளிவாய்

பூவாய் மலர்ந்தேனே!

கருவாய் முளைத்தேனே!

பனியாய் உறைந்தேனே!

தீயாய் தகித்தேனே!

உனை தேடி வந்தேனே!

புழுவாய் துடித்தேனே!

காதலை மறைத்தேனே!

முழுதாய் பிரிந்தேனே!”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement