மேகவர்மன் வெண்ணிலாவிடம் பேசத் தவித்திருக்க குடும்பத்தினரோ பேசி முடித்து இறுதியாக தான் அவளிடம் கைபேசியை தந்தனர். அவளது தனிப்பட்ட எண்ணிற்கு அழைப்பதாக கூறி இணைப்பைத் துண்டித்தவன் சில நிமிடங்களில் அவளுக்கு அழைத்திருந்தான். இருபக்கமும் அமைதியே நிலவ அதை முதலில் மேகனே உடைத்தான்.
“ம்ம்க்கும்”என்று செரும
“ஹ்ம்ம்”
“ஓய் பேசு என்ன இவ்வளவு சைலண்ட்”என்று மேகன் இயல்பாய் பேச அவளிடம் எந்த பதிலும் இல்லை.
“உராங்குட்டான் அவ்வளவு தான் சொல்லிட்டேன்”என்றதும் அத்தனை சிரிப்பு அவனுக்கு.
“ஒரிஜினல் நேம் ல கூப்பிட்டா தான் பேசுவியோ”என்று வம்பு செய்ய “ஏன் அப்படி பண்ணீங்க”என்றாள் கோபமாக.
“நான் என்ன செஞ்சேன்”என்று இயல்பாய் வினவிட சட்டென அமைதி அவளிடம்.
“வெண்ணிலா…”என்று அழைத்தவனின் குரலில் இதுவரை கண்டிராத குழைவு
“ப்ப்ச்”
“ஏதாவது குடுத்தியா என்ன…”கிண்டல் செய்தவனை கைபேசியை எடுத்து பார்த்து முறைத்தாள்.
“ஓய் மறுபடியும் என்ன சைலண்ட். சத்தம் அப்படி தான் கேட்டது அதான் ஏதாவது குடுத்தியோனு டவுட்.”
“கிளம்பும் போது என்ன வேலை பண்ணி வச்சிருக்கீங்க.”என்று முணுமுணுக்க
“ஏன் வெண்ணிலா பிடிக்கலையா…”என்றவன் “ஐ மீன் என்னை”என்று நிறுத்தினான்.
ஆழ்ந்த பெருமூச்சு அவளிடம்.
“கிட்டத்தட்ட பதினைந்து வருஷமா நாம சண்டை மட்டுமே போட்டு இருக்கோம் ரைட்”
“எஸ் உண்மை தான்.”
“இப்போ நமக்கு மேரேஜ் ஆகி ஒரு ஆறேழு மாசம் இருக்கும் இல்லையா”என்றாள் அழுத்தமாக
“ஹ்ம்ம் இருக்கும்”
“பதினைந்து வருஷமா வராத அன்டர்ஸ்டான்டிங் ஃபீல் அதெல்லாம் இந்த ஆறு மாசத்தில் வந்திடுச்சா. இல்லை என் மனைவி என் உரிமை அப்படி ன்ற கான்செப்ட் ல இதை பண்ணீங்களா”என்று அவள் கேட்க மேகனின் மனதில் சட்டென இறுக்கம் பரவியது.
“அஸ் ஏ வொய்ஃபா நீங்க பண்ணது சாதாரணமா நடக்கிறது தானே னு நினைச்சாலும் வெண்ணிலாவா இதை என்னால் ஏத்துக்க முடியலை.”
“ஏன் சண்டை போட்டுக்கிட்டவங்க இடையில் காதல் வரக் கூடாதா வெண்ணிலா”
“அது தான் எப்படி னு கேட்கிறேன். நான் உங்க வொஃய்ப் அப்படி ன்ற உரிமையில் தான் இந்த காதலா… அப்போ நமக்கு கல்யாணம் நடக்கலைனா எப்போதும் போல சண்டை தானே போட்டு இருப்போம்.”
“லூசு மாதிரி பேசாத வெண்ணிலா. மேரேஜ் நடக்கலைனா அஃப்கோர்ஸ் நீ உன் வழியில் போயிருப்ப நான் என் லைஃப் பார்த்து இருப்பேன். பட் நமக்கு மேரேஜ் ஆகிடுச்சு வெண்ணிலா.அப்போ தோணாத ஃபீல் எல்லாம் இப்போ தோணுது அதை தப்புன்னு எப்படி சொல்ல முடியும். நான் ஒண்ணும் உன்னை கல்யாணம் பண்ணி வேற பொண்ணை லவ் பண்ண தேடிப் போகலையே அப்படி போயிருந்தா தான் தப்பு. எனக்கு லவ் உன் மேல ப்ப்ச் எப்படி எக்ஸ்ப்ளைன் பண்ணறது எனக்கு தெரியலை வெண்ணிலா.”என்றவன் “ஓகே டைம் முடிஞ்சது நான் வைக்கிறேன். ஆஃபிஸ் கிளம்பணும். உன்னை நான் வந்து பேசிக்கிறேன்”என்று இணைப்பைத் துண்டிக்க வெண்ணிலா கண் கலங்க அமர்ந்து விட்டாள்.
‘அதெப்படி முடிந்தது திருமணத்திற்கு முன் விடாமல் சண்டைக்கு நிற்பானாம். திருமணம் ஆனதும் என் மீது கரிசனமாம் காதலாம் இதை எல்லாம் என்னை நம்ப வேறு சொல்கிறான்’என்று யோசித்தவள் அப்படியே உறங்கிப் போக அங்கே மேகனுக்கோ மிகுந்த வருத்தமாகிப் போனது.
‘சண்டை போட்டா அது மட்டும் தான் போடணுமா எனக்கு போடத் தோணலை. அவளைப் பிடிச்சது. தானா தான் பிடிச்சது இது எப்படி பிடிச்சதுனு கேட்டா நான் என்ன பதில் சொல்ல முடியும். கல்யாணம் பண்ணி வேறொருத்தியை பிடிச்சு இருக்கு னு சொன்னா அது தப்பு. இவளை பிடிச்சதில் என்ன தப்பு ஏன் லூசு மாதிரியே பேசறா இவ. டேய் சஞ்சு கடன்காரா உன் தங்கச்சி இன்னும் அந்த கிறுக்கு தனமா யோசிக்கிறதை விடலைடா’என்று நண்பனையும் வேறு திட்டிக் கொண்டான்.
இருவருக்கும் அடிப்படையில் இருந்த அன்பை கோபமாக மாற்றியது அவர்களின் ஈகோ அன்றி வேறெதுவும் இல்லை. நீ இறங்கி வா என்று அவனும் அவன் தான் தன் நிலை விட்டு வர வேண்டும் என்று இவளும் தங்கள் சண்டைக்கு காரணம் கற்பித்து தன் நிலையில் நிற்க ஈகோ தான் காரணம். மேகனின் ஈகோ அவனை அறியாமல் தளர்ந்து வெண்ணிலாவின் நற்குணங்களை கண்டு கொண்டான் பேதைப் பெண் இன்னும் அவனின் மாற்றங்களை அறியாமல் சண்டைக்கு நின்றாள்.
இருவரும் புரிந்து கொண்ட நேரம் இருவரின் நிலை என்னவாக இருக்கும் என்று காலம் தான் பதில் கூற வேண்டும்.
****
‘எவ்வளவு சாமர்த்தியமா விலை கம்மியான மிசினை என்ன வாங்க வச்சுட்டா அந்த அகிலா மவ. நானும் அவ பேச்சுல ஏமாந்துட்டேன்’ என்று வெண்ணிலாவை மனதில் தாளித்து கொண்டிருந்தார் மங்கை.
எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்த வேளையில் மங்கையின் மகன் பவேஷ் கிண்டலாக பேசி சிரித்த நேரம் பார்த்து இதனை உளறிக் கொட்டி சிரித்திருக்க அப்போது தான் மங்கைக்கு வெண்ணிலாவின் சூட்சுமம் மண்டையில் அடித்தாற் போல உரைத்தது.
அப்போதே அவளிடம் சண்டைக்கு செல்லும் வேகம் பிறந்தாலும் சட்டென சுதாரித்து நிதானத்தை கை கொண்டு வந்தார் மங்கை.
“என்ன மங்கை பலத்த யோசனை”என்றபடி வந்தமர்ந்தார் தர்மதுரை.
“ஹ்ம்ம் ஹான். ஒரு எலியை கண்டுக்காம விட்டுட்டேன் அது இப்போ அங்கே இங்கே கடிச்சு கடைசியில் என் பட்டுப்புடவையை கடிச்சி வச்சிருக்கு அதான் எலி பேஸ்ட் வைக்கலாமா னு யோசிக்கிறேன்”என்றார் கண்களை உருட்டியபடி.
“இந்த வீட்டுல எலியா”என்றவர் “நான் போய் எலி பேஸ்ட் வாங்கிட்டு வரவா அதை வேற கடையில் இப்போ எல்லாம் தர மாட்டேன்றானுக.”என்று எழுந்து கொள்ள மங்கை இன்னும் யோசனையிலேயே இருந்தார்.
தீபாவின் மீது ஆத்திரமாய் வந்தது. நான் சொன்னது போல ஒழுங்காக திருமணம் செய்து இருந்தால் இப்போது இவள் எல்லாம் என்னை ஏய்த்திருப்பாளா என்று தான் தோன்றியது அவருக்கு. அதிகாரம் செய்தே ஆட்டுவித்தவருக்கு இப்போது தன் தம்பி குடும்பத்தில், தான் எது கூறினாலும் எடுபடாமல் போவது இன்னும் மனதில் ஆத்திரத்தை தான் விதைத்திருந்தது.
எனக்குன்னு நேரம் வராமலா போயிடும் என்று நினைத்தவர் அதற்கான தருணத்திற்காக காத்திருந்தார்.
****
“ஏன் அண்ணி இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்ல”வேதாவின் மகனைத் தூக்கி வைத்திருந்த வெண்ணிலா அவனை கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஹ
“அவருக்கு வேலை இருக்கு நிலா. அத்தை எழுந்து சமைக்க லேட் ஆகும் இவர் சாப்பிடாமலேயே கிளம்பிடுவார். ஏற்கனவே அல்சர் இருக்கு. வர்மன் வந்ததும் நாங்க மறுபடியும் வர்றோம்”என்றாள் வேதா.
“ஹ்ம்ம் போங்க நீங்க, உங்க தம்பி வந்தா நான் எல்லாம் கண்ணுக்கேத் தெரிய மாட்டேன். அவரும் என்னை பேசவே விட மாட்டார்”என்று குறைபட வேதாவும் விஷ்ணுவும் சத்தமாய் சிரித்து விட்டனர்.
“ஏன் சிரிக்கிறீங்க உண்மைய தானே சொன்னேன்”என்று முறுக்கியவளிடம் “அதையே தான் உங்க கல்யாணத்துக்கு முன்னாடி அவனும் சொல்வான் அவ வந்தாலே நீங்க என்ன கண்டுக்க மாட்டீங்கனு. ஆனா இப்போ எல்லாம் சார் அதை சொல்றதே இல்லை. என் கிட்டவே ‘அக்கா நீ போய் அவ கிட்ட பேசுன்னு சொல்ற அளவுக்கு வளர்ந்துட்டான்.’ அவ்வளவு பொண்டாட்டி மேல அக்கறை சாருக்கு”என்று சிரித்தாள் வேதா.
“அப்படி எல்லாம் இல்லை வேதாண்ணி”என்றவருக்கும் சமீபமாக அது தோன்றாமல் இல்லை. அதைக் கிண்டலாக கூட அவனிடம் கேட்டிருந்தாள் வெண்ணிலா. சாதாரணமாக சிரித்து விட்டு கடந்து தான் சென்றிருந்தான் அவனும். அப்போதே அந்த பேச்சை விட்டிருக்க இன்று வேதா கூறவும் தான் அவளுக்கு தோன்றியது மேகன் தன்னிடம் பேசுவதில் மாற்றம் வந்து விட்டது என்று.
வேதாவும் விஷ்ணுவும் ஊருக்கு கிளம்பி இருந்தனர். வேலவன் வேலைக்கு சென்று விடுவதால் மாமியாரும் மருமகளும் தான் வீட்டில் இருந்தனர் அவ்வபோது மங்கை வேறு வந்து செல்வதால் பொழுது ஓடியது வெண்ணிலாவிற்கு. காலை வேலைகளை முடித்து விட்டு அகிலா நரசிம்மன் சஞ்சய் என்று பேசுபவள் மேகன் அழைத்தால் ஓரிரு வார்த்தைகள் பேசி விட்டு வைத்தாள்.
“நீ இதுக்கு சண்டையே போட்டு இருக்கலாம் வெண்ணிலா. ஏதாவது பேசேன்”என்று திட்டி கூட இருந்தான் மேகன்.
வெண்ணிலாவிற்கு தன் மனது சிறிது சிறிதாக புரிய ஆரம்பித்தது. அவனோடு சண்டையிட்ட காலம் எல்லாம் நினைவுகளாய் அசை போட ‘இதற்காகவா சண்டை இட்டோம்’என்று தானாய் சொல்லி சிரித்துக் கொண்டாள்.
இருவரின் சண்டைக்கு முதற் காரணம் இருவரின் ரசனையும் ஒரே பாதையில் பயணித்ததும் இருவரும் ஒரே மாதிரியான விஷயங்களை விரும்பியதும் தான் காரணம் என்று அவர்கள் இருவரின் தற்காலிக பிரிவில் தான் இருவருமே உணர்ந்தனர்.
வழக்கமான ஒரு இரவு பொழுதில் அவளுக்கு அழைத்திருந்தான் மேகவர்மன்.
“ஏன் கால் பண்ண இவ்வளவு நேரம்”என்று எடுத்ததுமே கேட்டவளைக் கண்டு வியப்பாய் விழி விரித்தான் மேகன்.
“வெய்ட் பண்ணியா முகி”அத்தனை எதிர்பார்ப்புடன் அவன் கேட்க சட்டென்று ஒரு இதம் அவள் மனதில்.
“இல்லை அது வந்து இந்நேரம் கால் வந்திருக்குமே இன்னும் வரலையேனு”என்று தயங்கித் தயங்கிப் பேச அவனுள் மென்சாரல் மழை.
“ஹ்ம்ம் கொஞ்சம் வொர்க் டா”என்றவன் “என்ன பண்ற படுத்துட்டியா”என்று கேட்க
“ஹ்ம்ம் ஆமாம். நீங்க”
“இப்போ தான் லஞ்ச் போகலாம் னு வந்தேன். கால் பண்ண டைம் ஆகிடுச்சேனு தோணவும் பண்ணேன்.”
“என்ன லஞ்ச்”என்று கேட்கவுமே கூறியவன் “எப்போடா இந்தியா வந்து சாம்பார் சாப்பிடுவோம் னு இருக்கு. இங்கே கிடைக்குது தான் பட் வீட்டு சாப்பாட்டை ரொம்பவே மிஸ் பண்றேன்”என்றான்.
“இன்னும் எவ்வளவு நாளைக்கு வேலை இருக்கு”என்றவளிடம் “அல்மோஸ்ட் முடிஞ்சுது வெண்ணிலா. டூ த்ரீ வீக்ஸ் ல முடிச்சுடுவோம்னு நினைக்கிறேன்.”என்றான்.
“ஓகே சாப்பிடுங்க”
“ஏன் கால் கட் பண்ண போறீயா தூக்கம் வருதா”
“இல்லை வேலை இருக்குமோ னு நினைச்சேன்”என்றவள் தயங்கிட அவனே தயக்கம் உடைத்து “காலையில் ஒரு அஞ்சு மணிக்கு கால் பண்ணுவேன் அட்டண்ட் பண்ணு முகி. இப்போ போய் தூங்கு குட் நைட்”என்று இணைப்பைத் துண்டிக்க வெண்ணிலாவிற்கு உறக்கம் வர மறுத்தது.
ஆனாலும் அவன் அதிகாலையில் அழைப்பானே என்று வலுக்கட்டாயமாக தூக்கத்தை வரவழைத்து தூங்கிப் போக விடியலில் அழைத்து விட்டான் மேகன்.
முழு சத்தத்தில் கைபேசியை வைத்திருந்தவள் அழைப்பு வரவுமே விழித்துக் கொண்டாள்.
ஆடியோ காலில் வருவான் என்று எதிர்பார்த்தவளுக்கு ஆச்சரியம் அளிக்கும் விதமாக
வீடியோ காலில் வந்திருந்தான்.
வெகு நாட்களுக்குப் பின்னர் இருவரும் பார்த்து கொள்ள போகின்றனர். அந்த உணர்வே அவளைத் திக்கு முக்காட செய்திருக்க பரபரப்புடன் முகத்தை கழுவி விட்டு ஓடி வந்தாள்.
“ஹாய் வெண்ணிலா”என்று கைகாட்டி அவனைக் கண்டு மூச்சடைத்தது அவளுக்கு. இலகுவான டீ சர்ட் ஒன்றை மாட்டியபடி “இப்ப தான் வொர்க் முடிஞ்சது வெண்ணிலா. டிஸ்டர்ப் பண்ணிட்டேனா”இயல்பாய் அவன் கேட்க இவளுக்கு தான் திணறலாக இருந்தது அந்த புதிய உணர்வின் தாக்கத்தால்.
“ஓய் தூக்கம் வருதா கட் பண்ணவா”என்றதும் வேகமாக தலையாட்டி மறுத்தவளைப் பார்த்து மேகனின் முகமெல்லாம் சந்தோஷ அலைகள்.
“ஹேய் முகி”என்றவன் ஆவலாய் அந்த திரையில் இரு கைகளையும் குவித்து வைத்து அவள் கன்னங்களை தாங்கிப் பிடிப்பது போல செய்ய வெண்ணிலாவால் அந்த தாக்கத்தில் இருந்து வெளியே வர இயலவில்லை.
“இதுக்கு இவ்வளவு நாளாடி”தவிப்பாய் கேட்டவன் கைகளை எடுத்து விட்டு தலையணையைக் கட்டிக் கொள்ள வெண்ணிலா விசும்பி விட்டாள்.
அவளை அள்ளிக் கொள்ளும் ஆவல் பிறக்க தவிப்பாய் பார்த்தான். அவனின் உணர்வுகளை அவதானித்துக் கொண்டே இருந்தவள்”உராங்குட்டான் உன்னை பிடிக்குது என்ன செய்ய”என்று அவள் கண்களை மூடித் திறந்து கேட்க
“பிடிச்சதை எல்லாம் யோசிச்சுட்டே இருப்பியாம் நான் ஓடி வந்திடுவேனாம். “என்றவன் அவ்வபோது சிரிக்கவும் ரசிக்கவும் என்று அவளை ஆட்டிப் படைத்தான்.
தொட்டுக் கொள்ளும் தூரம் இருந்தார்கள் உணர்வுகள் தொலைவில் நின்று கேலி செய்தது.
இன்று தொட முடியாத தூரத்தில் இருவரும் இருக்க உணர்வுகள் தொட்டுக் கொண்ட தூரத்தில் ஏக்கங்களையும் தவிப்புகளையும் தாங்கி நின்றது.