Advertisement

                    வீம்புடையானின் வித்தாரக்கள்ளி -2
திருமணம் இனிதே முடிய அனைவரும் மாப்பிள்ளை வீட்டுக்கு செல்ல சொல்லவே தயக்கமாகத் தமக்கையை ஏறிட்டாள் திவ்வியா தங்கையின் பயத்தை கண்டு கொண்ட கண்ணாம்பா
நான் கூட்டியாறேன்மா நீங்க போங்க” என்று  அவரை அனுப்பிவிட்டு.
தங்கையிடம் திரும்பியவள் “ஏன்டி புகுந்த வீட்டுக்கு போறதுக்கு இந்த முழி முழிக்க
அக்கா பயமா இருக்கு நீயும் வாயேன்!
என்னது?….. அடி கூறு கெட்டவளே நான் அங்கன வந்து? இங்க பார்டி நீயாவது அந்தக் குடும்பத்தோட ஒத்துப் போர என்ன பாரு. அது போக உம்ம வீட்டு உறவெல்லாம் ஏதோ ஜந்து கணக்கால வெறிக்குதுங்க அதுவும் நம்ம கொழுந்து அண்ணே அந்தக் கருவாயன் பார்வையே சரி இல்லடி
தமக்கையின் பேச்சில் அதிர்ந்தவள் சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே ஐயோ! அக்கா இந்த வீட்டுல எல்லாமே அவர் தான் மெதுவா பேசு யாரு காதுலயாவது விழுந்துட போகுது
கேட்கட்டும் எனக்கு என்ன பயமா இந்தக் கண்ணம்பாவ பார்த்து தான் எல்லாம் அஞ்சனுமாக்கும்?திவி கலவரமாக அவளைப் பார்க்க அதில் எரிச்சல் மண்டஅடியே பட்டணத்துக்குப் போய் உம்ம பேச்சு தான் மாறி போச்சுன்னா உம்ம குணமே போச்சு என் தங்கச்சின்னு சொல்லிடாத
திவ்வியா முகத்தை சுருக்க “உடனே போனகிக்க சரி அதவுடு ஐத்த ரொம்ப நேரம் நிக்கிறவ வெரசா போஅவளை அனுப்பி வைத்தவள் பேச்சியிடம் பேச தொடங்கி விட்டாள்.
 திவ்வியாவின் கலங்கிய கண்களைப் பார்த்த அன்னலெட்சுமி அவளது கைகளைப் பற்றி என்னடா” என்று கேட்க அவளோ சிறு பிள்ளை போல் தேம்பியவாரேஅக்கா வேணும்” என்று அழுக யூஜீவனுக்கும் ஹரிஷுக்குமே சிறு புன்னகை எட்டி பார்த்தது.
குழந்தை தனம் மாறாத குணம் கிராமத்து மனிதர்களிடம் மட்டுமே காண முடியும். என்று பட்டணத்தின் நாகரிகம் அவர்களைத் தாக்கியதோ அன்றே கிராமமும் ஆட்டம் கண்டது என்னமோ உண்மை தான் அதிலும் சிலர் இவர்களைப் போல் விதி விலக்கு.
அனைவரும் கண்ணம்பாவை பார்க்க அவளோ தனது ஆசை கிழவியிடம் ஒரண்டு இழுத்து கொண்டு இருந்தாள்.அவளிடம் மல்லு கட்டி கொண்டு இருந்த பேச்சி எதார்த்தமாக பார்க்கஎன்னத்த பாக்குற இவளும் திரும்பி பார்க்க அனைவரும் தங்களைப் பார்ப்பதை உணர்ந்தவள்இது என்ன மொத்த குடும்பமும் ஏதோ அதிசயத்தை பாத்த கணக்கா நிக்குதுஎன்று எண்ணியவாறே அவர்களை நோக்கி வந்தாள்.
அன்னலெட்சுமி கண்ணாம்பா கைகளை இறுக்க பற்றி நீயும் வாடா கண்ணு புது இடமில்லையா திவ்வியா பயப்புடுறா என்று அழைக்க
 நான் எதுக்கும்மா  கிழவி சொல்லு” என்று பேச்சியை துணைக்கு அழைக்க அவரோ கூட்டிட்டு போங்க தாயி இவ இங்கன இருந்து என்னத்த பண்ண போரா நான் செத்த நிம்மதியா இருப்பேன்!
அவர் சொல்லவே அனைவரும் சிரிக்க கண்ணாம்பா அவரை முறைத்தாள் மேலும் அவரிடம் நெருங்கி என்ன கிழவி உமக்கு கொழுப்பா! வெத்தல இடிக்குற ஓரல போட்டு இடிச்சு புடுவேன் இடிச்சு
 சரி தான் போடி என்று அவளை ஒரு பார்வை பார்த்தவர் அன்னலட்சுமியிடம் சென்று அவரது கைகளை இறுக்க பற்றியவர்,
 தாயி இதுங்க ரெண்டயும் நல்ல இடத்துல  புடுச்சு கொடுக்கத்தேன் உசுர கையில புடுச்சுக்கிட்டு கிடைக்கேன்  ஆண்டவன் புண்ணியத்துல சின்னத்துக்கு அமைஞ்சுருச்சு
 அவர் கண்ணீர் விட அவரை ஆறுதலாக பார்த்தவர் உங்க பெரிய பேத்திக்கும் கூடிய சீக்கிரம் நல்ல செய்தி வரும் ஆச்சி” என்று தனது மூத்த மகனை பார்த்தவாரே சொன்னார்.
அவனும் சிரிப்புடன் அவரை பார்க்க அவருக்கு அத்தனை ஆனந்தம் பெருமாள் அன்னலஷ்மியின் புறம் குனிந்து என்னம்மா மருமகள இப்பவே உன் பையன் கூட்டிட்டு வந்துடுவான் போல
 அவரும் சன்ன குரலில் வந்தா கூட தேவலாம் தாங்க அவர் பதிலில் ஹா!… ஹா!…... என்று சிரித்தவரை அனைவரும் ஒருமாதிரி பார்த்தவாரே காரில் ஏறினர்.
கணவன் மனைவிக்கென்று புதிய கார்  அதனை யூஜீவன் தான் ஓட்டினான் முன் புறம் கண்ணாம்பாவும் அவனும் இருக்க.புது மணத் தம்பதிகள் பின்னில்.
 கண்ணாம்பாவிற்கு நெடு நேர பிரயாணம் ஒத்துக் கொள்ளவில்லை ஒரு பக்கம் தலை வலி மண்டையைப் பிளக்க இன்னொரு புறம் வீம்பு அதாவது நம் நாயகன் யூஜீவனின் பார்வை அவஸ்தையைக் கொடுத்தது பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்தவள்,
 அவனது பார்வை தாறுமாறாக தன்னில் பயணிக்கப் பொறுமை இழந்து  பின் புறம் திரும்பி பார்த்தவள் தங்கையும்,தங்கை கணவனும் உறக்கத்தில் இருக்க எல்லாம் இதுங்களால எப்படி கட்டிக்கிட்டு தூங்குதுங்க’ அவர்களை கடிந்தவள் திரும்பி யூஜீவனை நேர் கொண்டு பார்த்து.
 “யோவ்கருவாயா நானும் அப்பால இருந்து பாக்கேன் என்னய்யா வெறிச்சுக்கிட்டு இருக்க கண்ணு இரண்டையும் நோண்டி கையில கொடுத்துப் புடுவேன் பாவம் ஊமை ஆச்சேனு பாத்தா என்ன?” என்று தனது மார்பு கூடு ஏற இறங்க பேசியவளை தங்குதடையின்றி ரசிக்க வண்டியை ஓரம் கட்டிவிட்டான் நமது வீம்பு.
யோவ் உன்ன தானய்யா வஞ்சுகிட்டு இருக்கேன் இப்போ எதுக்குக் கார நிறுத்துன? எடுய்யா கார” என்று தூங்கும் தனது தங்கை மற்றும் தங்கையின் கணவனுக்கு கேட்காதவாறு சொல்ல அதற்கும் அவன் சிரித்து கொண்டே கார்ரை எடுத்தான்.
 மறுக்கா இந்தக் கண்ணு என் பக்கம் திரும்புச்சுக் கண்ண குத்திப்புடுவேன் பாத்துக்கோ!அவள் பொரிய அதற்கும் சிரித்தவன் கார்ரை உல்லாசமாக விரட்டி கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.
 திவ்வியாவிற்கு ஆரத்தி எடுத்து மிகவும் கோலாகலமாக வரவேற்றனர் கண்ணாம்பாவிற்கு இருந்த கொஞ்சம் நெஞ்ச கோபமும் அவளை ராணி போல் வரவேற்றதில் காற்றோட கரைந்து சென்றது.
அதன்பின்  இரவுக்கு வேண்டி சடங்குகள் நடக்கத் திவ்வியாவை விடக் கண்ணாம்பா தான் பயந்து போனாள். அவர்களின் பழக்க வழக்கம் அவளுக்கே பிடிபடவில்லை இதில் எங்கு அவளை விட எட்டு வயது சிறியவள் புரிந்து கொள்ளப் போகிறாள்.
மெதுவாகத் திவ்வியாவை நெருங்கியவள் ஏன்டி உம்ம வீடு என்ன சத்திர மடமா எங்கன திரும்புனலும் குடும்பக் குடும்பமா இருக்காக டீ தண்ணி கூட உனக்கு வைக்கத் தெரியாதேடி….” தங்கையின் நிலை கவலையைக் குடுக்கப் பாவமாகக் கேட்டு வைத்தால் நமது கள்ளி.
 அக்கா நானே பயந்து போய் இருக்கேன் நீ இருந்த தேம்பா இருக்கும் அப்படின்னு உனைய துணைக்குக் கூட்டிட்டு வந்தா நீ என்னக்கா
நீ என்னாடி சலுச்சுக்கறவ நாதேன் கோபப்படனும்” இருவரும் ஒருவரை ஒருவர் கடிந்து கொள்ளதிவ்வியாவ அழைச்சுக்கிட்டு வாம்மாஎன்று அன்னலட்சுமி அழைக்க தற்போதைக்கு அக்காள் தங்கை சண்டை ஒத்திவைக்கப் பட்டது.
இரவு உணவிற்குப் பின் சடங்குகள் நடக்க அனைவரும் கேலி கிண்டல் எனத் திவ்வியாவை ஒரு வழி ஆகிவிட்டனர்.
 கண்ணாம்பாவிற்கே காதுகள் கூசியது கிராமத்திலும் இது போல் சடங்குகள் உள்ளது தான்,ஆனால் இது அதையும் தாண்டி சென்றது தங்கை பார்வையால் துணை இரு என்று கெஞ்ச கண்ணம்பாவோ ஐயோ நான் மாட்டேஞ் சாமி நீயே சமாளி’ என்று பதிலுக்குக் கெஞ்சி கொண்டு இருந்தாள்.
ஒரு வழியாக  திவ்வியாவை அழைத்துச் செல்லும்படி சொல்ல  ஹரிஷுக்கு அத்தை முறை பெண்கள் அனைவரும் அத்தான் வரட்டும் அப்போதான் விடுவோம் அவள் வழியை மறைத்து வம்பு செய்து கொண்டு இருந்தனர்.
 அங்கோ ஹரிஷின் பொறுமை காற்றில் பறந்தது அவனே அறையை விட்டு வந்துவிட்டான் தனது மனையாள் அவர்களிடம் சிக்கி தவிக்க அவளைக் காக்கும் பொருட்டு.
ஏய் என் பொண்டாட்டிய விடுங்கடிஹரிஷ்  சண்டைக்குக் கிளம்ப அதில் ஒருத்தி ஹலோ என்ன அடிக்க வர மாதிரி வரீங்க? மாமா பாவமேனு நாங்க எல்லாம் விட்டு கொடுத்ததுனால தான் இன்னக்கி உங்க பொண்டாட்டிக்கு நீங்க கிடைச்சு இருக்கீங்க.
 நாங்க கொஞ்சம் நேரம் விளையாடிட்டு எங்க மனசு ஆறுனதுக்கு அப்புறம் அனுப்புறோம்என்று சொல்ல கையை அவர்கள் முன் நீட்டிபோங்கடி…… என்று சொல்லியவன் கண் இமைக்கும் நேரத்தில் அவளைக் கைகளில் அள்ளி கொண்டு அறையை நோக்கி நடந்தான்.
 அனைவரும் ஓ!…………….போட  திவ்வியா கண்களை மூடி கொள்ள அவளை விடக் கண்ணாம்பா தான் கண்களை இறுக்க மூடி கொண்டாள்.அவர்களது கிராமம் இது போல் காட்சிகள் அரிது அல்லவா அமைதியின் சுய ரூபமே இப்படியென்றால் நமது வீம்பு……………ஹ்ம்………ஹ்ம்ம்………
ஒரு வழியாக அனைவரும் செல்ல  “நான் எங்கன தூங்குறது?” என்று வாய்விட்டு புலம்பி கொண்டு இருந்தவளை இரு இரும்பு கரங்கள் அலட்சியமாகத் தூக்கி சென்றது. அதிர்ச்சியில் உறைந்தவள் யூஜீவனின் முகத்தை அருகில் பார்க்கவும் நல்ல பாம்பாகச் சீறிக் கொண்டு வந்தாள்.
யோவ்! எம்புட்டுத் தைரியம் இருந்தா இந்தக் கண்ணாம்பாவ  தொடுவ நீ…..மேலும் என்ன சொல்லியிருப்பாளோ!
கண்ணம்பான கொம்பா? அது என்ன கண்ணம்பாவே! ஹ்ம்ம்………………………?? அவன் பேசியதில் அதிரிச்சியுற்றவள்
  யோவ் நீ ஊமை இல்லையா?
 யாரு சொன்னா நான் ஊமைனு ஹ்ம்ம்…………….. சரி டைம் வேஸ்ட் பண்ணாத கட்டிக்கிறியா? ஏதோ கடையில் பொருளை வாங்குவது போல சர்வ சாதாரணமாக கேட்க.
என்னது…………..கட்டிக்கவா…… டேய் கருவாயா உடுடா என்ன………? உன் குறுக்கு எழும்ப எண்ணல எம் பெரு கண்ணாம்பா இல்ல அவனோ அவன் காதுகளை தேய்த்து கொண்டே
 ஏய் கத்தாம  கேட்டதுக்குப் பதில் சொல்லு……..என்று அவன் பிடியில் நிற்க முடியாது” என்று கண்ணாம்பா கத்த
தேங்க்ஸ்” என்றவன் அவளை இறக்கிவிட்டு
 எங்க நீ சரினு சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன் இன்னும் ஒரு மாசத்துல நீ இங்க இருக்கனும் என் பொண்டாட்டியா……புரியுதா போய்த் தூங்கு”  அவள் கன்னம் தட்டி சொல்ல அவனது கையை எடுத்துவிட்டவள் கோபமாக முறைத்து கொண்டே சென்றாள்.
கள்ளி வருவாள்………..

Advertisement