Advertisement

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 11
அந்த வீட்டில் வெகு நாள் வாழ்ந்தது போல இருந்தது கண்ணாம்பாவின் நடவடிக்கை பொதுவாகக் கிராமத்து மக்கள் எதார்த்தமாகப் பழகும் குணமுடையவர்கள்.
எப்படி இவர்களிடம் பேசலாமா? இல்லையா? என்ற பட்டிமன்றத்திக்கே அவர்களிடம் வேலை இல்லை அனைவரும் அவர்கள் பார்வையில் சமமே.
சிலர் நாகரிகம் என்ற பெயரில் சுற்றி திரியும் மனிதர்களை விடக் கிராமத்து மனிதர் சற்று தன்மை கொண்டவர்களே ஒரு விழாவிற்குச் சென்றால் கழுத்தை பார்த்து பேசும் பெண்களுக்கு இடையில்,
அவர்கள் உள்ளமும்,மனதும், வயிறும் நிறைந்ததா என்று பார்த்து பார்த்துப் பணிவிடை செய்யும் மக்கள் பலர் நம் கிராமத்து மக்கள் தான்.
அதுபோலத் தான் நம் கள்ளியும் அந்த வீட்டில் பாந்தமாகப் பொருந்திப் போனாள் திருமணமாகி பல நாள் அந்த வீட்டில் வாழ்ந்தது போல இருந்தது அவளது நடவடிக்கை.
பெருமாளுக்கும்  மருமகளின் செயல் அத்தனை மகிழ்ச்சியைத் தந்தது மகன்கள் இருவரும் அவர்களது துணையை அவர்களே முடிவு செய்த செயல் சிறு நெருடலை கொடுத்தாலும் கண்ணாம்பாவின் குணம் அந்த நெருடலை கூட மெல்லிய வருடலாக மாற்றி விட்டது தான் விந்தை (சும்மாவா அவளுக்கு வித்தாரக்கள்ளி என்ற பெயரை வைத்தோம்)
அடுக்கலைக்குள் காலையில் புகுந்த தனது மனைவி இன்னும் சமைத்துக் கொண்டு இருக்க வீம்புக்கு ஏக கடுப்பு “கட்டி புடுச்சா தள்ளி விடுறா இடுப்பை கிள்ளுனா கையைப் புடுச்சு முறுக்குறா எங்க தேடுனாலும் மென்மை சுத்தம்… தேடவும் வழியில்லை ச்ச..” கடுப்பில் புலம்பியவன் அவளை முறைத்துக் கொண்டு வாசலில் நிற்க.
அவன் வருவதற்கு முன்னே அவனது வாசனை கள்ளியின் நாசியைத் தீண்டிவிட்டதே அவனது தவிப்பை பார்க்க ஏனோ அத்தனை சந்தோசமாகத் தான் இருந்தது பெண்ணுக்கு.
“காளை புடிக்குற கைக்குக் கரண்டி புடிக்குற இடத்துல என்ன வேலைனு கேக்கேன் குட்டி போட்ட பூனை கணக்கா சுத்தி சுத்தி வாரிக”
“ஏன்டி சொல்ல மாட்ட” என்று கோபமாக நெருங்கியவன் இழுத்து அணைக்க அவனது பிடி இறுக்கமாக இருந்தது அவனது கோபம் புரிந்தவள்,
“கருவாயா என்ன அம்புட்டுக் கோபம் எம்ம மேல வீட்டை சுத்தி சனமா இருக்கு இதுல பாதி இளவட்டம் அவுக முன்னாடி இப்படித்தேன் கட்டிக்கிவிகளா”
“ஓ!.. அதான் மேட்டரா”என்று இழுத்தவன் எதுவும் ஒருவிதமாக சிரித்து கொண்டே அமைதியாக சென்று விட்டான்
“என்ன வீம்பு நல்ல புள்ள கணக்கா முகத்த வச்சுக்கிட்டு போராக சரி இல்லையே”அவளது புலன்கள் விழித்துக் கொண்டது இருந்தும் ஒரு மகிழ்ச்சி இருவரும் ஒருவரை ஒருவர் வாருவதில் சுகம் கண்டு கொண்டனர்.
அது ஓர் அழகான விளையாட்டும் கூட இந்த விளையாட்டில் இருவரது நற்குணமும் அழகான தாம்பத்யமும் வெளிப்பட்டது என்றே சொல்லலாம்.
மதிய உணவை அனைவருக்கும் பரிமாறியவள் அவளும் திவியும் உண்டு முடித்த பின் மதிய தூக்கம் என்பது அவளுக்குப் பிடிக்காத காரணத்தால் அக்கா தங்கை இருவரும் உட்காந்து பேசி கொண்டு இருந்தனர்.
புறம் பேசவதற்கும் நேர்மறை கருத்தை சொல்லுவதற்கும் ஒரு வீட்டில் கண்டிப்பாக ஒருவர் இருந்தே ஆக வேண்டும் என்பது எழுத படாத சட்டம் போலும்.
அங்கே வந்த பெருமாளின் தங்கை மகள் அவரது தாயாரும் “திவி அத்தை உங்க அக்கா வந்ததுல இருந்து ரொம்பச் சந்தோசமா இருக்கீங்க போல யாருக்கு அமையும் இந்தக் கொடுப்பினை”
“அப்படி சொல்லு ஸ்வீதா குட்டி அதுவும் உங்க மாமனுக இரண்டு பேரும் தாங்கு தாங்குனு தாங்குறானுக”.
“அவுக பொண்டாட்டிய தானே தாங்குறாகப் பெரியம்மா இதுல என்ன குறையக் கண்டிக” என்று கண்ணாம்பா அவரை நிமிர்ந்து கேட்க,
அதில் கோபம் கொண்ட பெருமாளின் தங்கை “ஏன் உன் தங்கச்சியையும் தானே சொன்னேன் அவ அமைதியா நிற்கல உனக்கு ஏன் கோபம் வருது படித்து இருந்தா யாருகிட்ட எப்படி பேசனுமுனு தெரிஞ்சு இருக்கும்”அவர் சொல்லவே அரிசி பற்கள் தெரிய சிரித்தவள்.
“அது என்ன பெரியம்மா படிச்சவுக படிக்கறது பகுத்தறிவுக்காக மட்டுந்தேன் படிச்சவன் ஒரு செயலை செய்யும் போது ஒரு தடவ யோசுச்சு புட்டு செய்வான் அந்த ஒரு நிமிசம் அதுல இருக்கச் சாதகம் பாதகம் பாக்கத்தேன்.
படிக்காதவன் செஞ்சுபுட்டு யோசிப்பான் அதுவும் அவுக அனுபவ பாடம் படிச்சி  இருந்தா அந்த யோசனையும் தேவை இல்லைத்தேன்..
சரி படிக்காத நாதேன் இப்படி பேசுறேன் படிச்ச நீக எப்படி கேட்டீக புருஷன் தாங்குறாங்கனு” வில்லாக வளைந்த புருவத்தை உயர்த்தி கேட்க அவர்கள் பதில் சொல்ல தடுமாறி அதையும் கோபமாக காட்டிவிட்டு சென்றனர் அவர்கள் செல்லவே.
“ஏன்டி எம்ம பாத்த இவுகளுக்கு என்ன தொக்காட்டம் தெரியுதா சொல்லி வைடி திவி கண்ணம்பாவ பத்தி”
“அக்கா அவுங்கள விடுக்கா நீ இதை மாமாகிட்ட சொல்லிக்கிட்டு இருக்காதா” 
“ஏன்டி இதுக ஒரு ஆளுன்னு இதை போய் வேலைக்கு போற மனுஷன்கிட்ட சொல்லி வம்பு பண்ணுவேனா அதுகளுக்கு நானே போதும் வா, ஆனா ரொம்ப சந்தோசமா இருக்கு திவி பொறுப்பா எனக்கே புத்தி சொல்லுதியே” என்று தங்கையை உச்சி முகர்ந்தாள் தமக்கை.
படிப்பு மட்டும் வாழ்க்கைக்குப் போதுமா என்ன? அனுபவமே சிறந்த ஆசான் என்பது கிராமத்துக்குப் புரிந்தது நகரத்திற்குப் புரியவில்லையே திருவள்ளுவர் போல் இரண்டு அடியில் முடித்து விட்டாலே படித்தவன் படிக்காதவன் என்று.ஒரு புறம் கள்ளியை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை தான்.
ஒருவராக நேரத்தை நெட்டி தள்ள இரவு உணவு வேளை வந்தது மாலையில் விளக்கேற்றி சாமி கும்பிட்டு அனைவருக்கும் டீயை கொடுத்தவள் தனது கணவனை  நோக்கி செல்ல அவனோ அவள் வருவதை அறிந்தாலும் அதனைக் கண்டுகொள்ளாமல் தனது தந்தையிடம் பேசி கொண்டு இருந்தான்.
 அங்கு ஹரிஷ் அவரது மாமா,சித்தப்பா மற்றும் இளவட்டம் என்று அனைவரும் அந்தத் தோட்டத்தில் இருந்தனர்.
அவளைக் கண்டுகொள்ளாமல் டீயை கையில் எடுத்தவனுக்கு ஓர் அழைப்பு வர அதனை காது கொடுத்தவன் பேசி கொண்டே சிறிது தூரம் சென்றான் கண்ணாம்பாவும் அவன் பின்னே செல்ல,
அவர்கள் அனைவரும் பார்க்கும் தூரம் நின்று கொண்டவன் போனை பேசி வைத்து விட்டு திரும்ப பாய்ந்து கொண்டு வந்தது ஐந்தடி இருக்கும் அல்சேஷன் நாய் (நாய்கள் என்றால் கண்ணாம்பாவிற்குப் பயம் என்பது குறிப்பிடத்தக்கது)
அது என்னவோ குறி வைத்து கண்ணாம்பாவின் மேல் தான் பாய்ந்தது கையில் உள்ள ட்ரேயை தூக்கி வீசியவள் அங்கு நின்ற நமது வீம்புவை இறுக்கக் கட்டி கொண்டாள்.
இரு உதடுகளையும் மடக்கி சிரிப்பை அதற்குள் புதைத்தவன் “என்னம்மா? அந்த நாய் ஒன்னும் பண்ணாதுடா” என்று ஒன்றும் அறியாத சிறுவன் போலச் சொல்ல”அவனை நிமிர்ந்து பார்த்து
“முதல அத கட்ட சொல்லுக” என்று மீண்டும் அவனை இறுக்கி கொண்டாள்
பெருமாளுக்கு ஒன்றும் புரியவில்லை எங்கு இருந்து வந்தது இந்த நாய் அதுவும் நேராகக் கண்ணம்பாவை குறி வைத்து பாய அவருக்கே ஒன்றும் புரியவில்லை.
இளவட்டம் குதூகலமாக சிரித்து கொண்டு பார்க்க பெரியவர்கள் நாசுக்காக நகர்ந்து கொண்டனர். ஹரிஷுக்கு மட்டும் தனது அண்ணனின் லீலை என்பது புரிந்தது தனது அண்ணனா இது என்ற சந்தேகமும் கூட.
இப்போது வீம்பின் போன் அடிக்க “இவன் டேய் சுரேஷ் சும்மா சொல்லக் கூடாது உன் நாய் செமையா செஞ்சுதுடா சூப்பர்” அவன் பேசுவதைக் கேட்ட கள்ளிக்கு அப்போது தான் விடயம் பிடிபட அவனை முறைத்து
“உங்க வேல தானா இது”
“ஆமாடி இப்போ நீ மட்டும் அத்தனை பேருக்கு முன்னாடி என்ன கட்டிக்கலாமா?” என்று நியாயம் பேச,
“எதுக்கு எதை இன கூட்டுரிக உங்கள” என்று அவனை நெருங்கிவள் அவனது குமிழ் சிரிப்பில் எதுவும் செய்ய முடியாமல் பிறகு பாக்கேன் என்று சொல்லி சென்றுவிட்டாள் அவளது விநயம் புரியாமல் வீம்பும் சிரிப்புடன் சுத்தி கொண்டு இருந்தான்.
இரவு உணவு அமைதியாகக் கழிய  இதழோரம் சிறு வளைவுடன் தனது கணவனைப் பார்த்தவள் “அம்மா” என்று அன்னலட்சுமியை அழைக்க
“சொல்லுடா”
“ஆச்சி திவிக்கும், எமக்கும் கண்ணாலம் நல்ல படியா நடந்தா கண்ணாலம் ஆன மறுநாள் சுத்த பத்தமா விரதமிருந்து கோவிலுக்கு போகுறதுனு வேண்டுதல் அதுனால இன்னைக்கு ஒரு சாமம் உங்கன கூடப் படுத்துக்குறேன்” தனது கணவனைப் பார்த்துக் கொண்டே சொல்ல உண்டு கொண்டு இருந்த வீம்புக்குப் புரை ஏறியது கூடவே “கொன்னுடுவேண்டி” என்று இதழ் அசைவில் மிரட்ட உதட்டை சுளித்துப் பழிப்பு காட்டினாள் கள்ளி.
இவர்கள் கூத்தை அறியாத அன்னலட்சுமி “அதுக்கு என்னடா தாராளமா படுத்துக்கோ”
“அம்மா “என்று வீம்பு எதுவோ சொல்ல வர
“தம்பி கோவில் விஷயத்துல விளையாடாத நீ சாப்புட்டு வாம்மா”என்று சென்று விட்டார்
தன்னை முறைத்துக் கொண்டு இருந்தவனிடம் அருகில் சென்றவள் வேண்டுமென்றே அவனை ஒரசியவாறே குனிந்து தனது ஜாக்கட்டை காலர் போலத் தூக்கி காட்டி எப்பூடி” என்று வெறுப்பேத்திவிட்டுச் சென்றாள.
 இதற்கு பின் விளைவு….

Advertisement