Advertisement

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 9
அதன் பின் ஒருவராகச் சொந்தங்களைச் சரி கட்டி திருமண நாள் குறித்தாயிற்று திருமணத்திற்கு முதல் நாள் இரவு பரிசம் என்று பேசப்பட்டது.
பேச்சி மட்டும் வந்திருந்தார் அவருடன் கலந்து பேசி அவர்கள் நாள் குறிக்க அப்போது தான் அலுவலகத்தில் இருந்து வந்தவன் பேச்சியை கண்டதும் முகம் கொள்ளா புன்னகையுடன்,
“ஹாய் டார்லிங்” என்று அழைத்துக் கொண்டே அவருக்குப் பக்கத்தில் அமர அவரும் அவனது தலையை வாஞ்சையாகத் தடவினார் கண்ணில் கண்ணீர் தடம்..
“என்ன பேச்சி டார்லிங் எதுக்கு இப்போ அழுகை? அழகா சிரிச்ச முகமா இருந்த பேச்சி எங்க?” அவன் அவரது கன்னம் பற்றி கொஞ்ச அவனது அன்பில் திளைத்தவர்.
“இல்ல ராசா இனி அழுக மாட்டேன்” உடனே சிறு பிள்ளை போல் அவர் சிரிக்க அவரை அணைத்துக் கொண்டான் கள்ளம் அற்ற வெள்ளை மனிதர்களைக் காண்பது அரிது அல்லவா….
சற்று சரிந்து அவர் காதுக்குள் “டார்லிங் அவ எதுவும் சொன்னாளா? அதாவது என்கிட்ட எதுவும் சொல்ல சொன்னாளா?”ஆர்வம் போட்டி போட அவன் கேட்க அவன் கண்களில் உள்ள மின்னலை பார்த்தவர் கள்ளியை மானசீகமாக கடிந்து கொண்டார்.
“ராசா அந்த சண்டி குதிரைய பத்தி தான் தெரியுமே பிறகு ஏன் கேக்க அம்புட்டு திமிரு ராசா. இங்கன நான் வரேன்னு சொன்னதுமே அனுமாரு வாலு கணக்கா ஒரு ரசீது போடுற ராசா,
 உம்ம கிட்ட பேச கூடாதாம்,நீக என்ன கொடுத்தாலும் வாங்க கூடாதாம், எந்த சலுகையும் கூடாதாம் கொட்டி சிறுக்கி ஆடரு போடுறா ராசா” படித்துப் படித்துக் கள்ளி சொல்லித்தான் அனுப்பினாள் அவர்களிடம் சற்று எட்டி நில் என்பது போல்.
“விடு டார்லிங் கல்யாணம் ஆகட்டும் அவளை வச்சு செய்வோம்” அவளை வாரினாலும் அவனுக்கு அவள் எதற்காக அப்படி சொல்லுகிறாள் என்பது புரிந்தது.
தனது வீட்டு ஆட்களின் பேச்சுக்கு இடம் கொடுக்காமல் அதே சமயம் தனது மரியாதையும் இழக்காமல் அவள் செயல் படுவது அவனுக்கு அத்தனை கர்வத்தை கொடுத்தது.
யாரு சொன்னது பெண்ணுக்கு படிப்பில்லாமல் ஒரு சமூகத்தில் வாழ முடியாது என்று  சூழ்நிலையால் படிப்பை இழந்த பெண்கள் கோடி.
படிப்பை இழந்தாலும் பண்பை இழக்காமல் அனுபவத்தை கொண்டு கர்வத்தோடு வாழ்ந்த பெண்களில் ஒருவள் தான் இந்த கள்ளியும்,
அதனால் தான் வெளி நாட்டில் மாஸ்டர் முடித்திருந்த யூஜீவன் அந்த கள்ளி காட்டு கள்ளியிடம் குணமறிந்து மண்டி இட்டது.
என்று ஹரிஷ் திவ்வியாவை பற்றிச் சொன்னானோ அன்றே அந்தக் குடும்பத்தைப் பற்றி அக்கு வேறு அணி வேறாக ஆராய்ந்து விட்டான் யூஜீவன்.கிடைத்த பதிலின் பலன் தான் கள்ளி மீது தீராத காதல் கொண்டது.
தான் பெறாத சுகத்தையும்,வாழக்கையையும் தன் பிள்ளைகள் வாழ வேண்டும் என்பது பெற்றோர்களின் எண்ணம் திவ்வியாவை தனது மகளாகவே எண்ணினாள் அதன் வெளிப்பாடு தான் திவ்யாவின் திருமணம்.
“பாட்டி அவகிட்ட நான் பேசிக்கிறேன் நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும்”
“என்ன ராசா உங்களுக்கு ஒத்தாச பண்ணாம கிழவிக்கு என்ன ஊழியம் சொல்லு ராசா கேக்கேன்”
“அவளை எப்புடியாவது முகூர்த்த புடவை எடுக்கும் போது கூட்டிட்டு வந்துருங்க அது போதும்”
“சரி சாமி குட்டிக்கரணம் அ டிச்சவது கூட்டியாரேன் ராசா” அவரை அணைத்து நன்றி பாட்டி என்றவன் சிட்டாகப் பறந்து விட்டான்.
******************
அவனது கொஞ்சல்கள் எல்லாம் அவனது அத்தைமார்களைக் காய வைத்தது. அத்தனை துவசம் அவர்கள் கண்களில் அதை யார் கவனிக்கவில்லை என்றாலும் பேச்சியின் கண் கண்டு கொண்டது.
மூன்று தலை முறை பார்த்தவர் ஆயிற்றே கண்ணில் ஸ்கேன் வைத்துக் கொண்டு இருப்பவர் கண்ணனுக்குத் தப்புமா என்ன அவருக்கு அவரே
“என்ன பாடு படப் போறாங்களோ” என்று வாய் விட்டே புலம்பினார்.தனது பேத்தியிடம் இருந்து இவர்கள் காப்பாத்த அவசரமாக அய்யனாருக்கு ஒரு மனுவையும் போட்டார்.
அவரது மனு போட்ட உடனே தள்ளுபடி ஆகிவிட்டதைப் பாவம் அவர் அறியவில்லை.
இந்த வீட்டிற்கு வரும் மூத்த மருமகளின் கொடி தான் பறக்கும் என்பதை அறிந்தவர் கடவுள் ஒருவரே அல்லவா அதான் கள்ளியிடம் ஜகா வாங்கினார்…………
(கடவுளையே கதற விட்ட பெருமை கள்ளியையே சாரும்)
***************
அடுப்பில் வேலையாக இருந்த கண்ணாம்பா போன் அடிக்கவும் தனது தங்கையாக தான் இருக்குமென்று ஆவலுடன் போனை எடுத்தாள்.
“ஹலோ” அவள் சொல்ல போனில் விபரீதமான ஒலி கேட்டது மறுமுனையில் மூச்சு விடாமல் வீம்பு முத்தம் கொடுக்க
“எந்த பொறுக்கி வந்தேன் உரிச்சு உப்புக் கண்டம் தான்டி எதுக்குமே வழி இல்லாம ஆக்கிப்புடுவேன் ” என்று அவள் பொரிய,
“செஞ்சாலும் செய்வடி நீ”
அவன் தான் என்ற உடன் ஒரு வித சிலிர்ப்பு ஓடி மறைய அதனை மறைத்தவள் “யோவ் நீர் என்ன வெளிநாடு போய்ப் படிச்சீரு இப்படித்தேன் போன எடுத்தா” அதற்கு மேல் அவள் வார்த்தை வராமல் சண்டி தனம் செய்ய.
“சொல்லுடி என்ன பண்ணுனேன்” அவளிடம் பதில் இல்லாமல் போகவே
“இப்படி முத்தம் கொடுத்தேனா” அவன் மீண்டும் அவளுக்கு முத்தம் அளிக்கக் கண் முடி ரசித்தவள் மறு நோடி அவனிடம்
“யோவ் உம்ம ரவுசு தாங்கல பொசுக்கு பொசுக்குன்னு கட்டிக்குறது யாரு இருக்கானு பாக்காம இச்சு போச்சுன்னு முத்தம் பதிக்க நான் சும்மா இருக்கேனு பாக்கீகளா “
“ச்சு…………..” என்று எரிச்சலாகச் சலித்தவன்
“ஏய் உனக்குக் குடுக்காம ரோட்ல போறவளுக்குக் கொடுக்கவா அவளை கட்டிக்கவா” என்று சிறு கோபமாகக் கேட்க.
 அவள் என்ன பதில் சொல்வாள் அவள் தான் இறங்கி போக வேண்டியதாக இருந்தது.
“சரிய்யா உம்ம வழிக்கே வாரேன் பொது இடத்துல இப்படி நடந்துக்கச் சங்கடமா இருக்குல்ல உம்ம மாதிரி நான் நாகரி..கமா வளரல புரிஞ்சுக்கிடுங்க”
அவளது சங்கடம் புரிந்தாலும் நாகரிகத்தில் அவள் கொடுத்த நக்கலில் பல்லை கடித்தான்.சில பொன்னான நேரங்களையும் காதல் சுவடுகளும் அதன் நினைவுகளையும் இழக்க அவன் விரும்பவில்லை.
அதற்கும் ஒரு வழியைக் கண்டு பிடித்தான் அந்த வீம்புக்காரன்.
“நக்கலு சரி…இனிமே யாருமில்லாது இடத்துல கட்டிக்கிறேன்” என்று அவன் சொல்ல பலமாகத் தலையில் அடித்துக் கொண்டாள்
“திருந்தா சென்மம் நீ போயா” என்று போனை வைத்து விட்டாள் அவளும் என்னதான் செய்ய இவனை சமாளிக்க முடியவில்லை அடாவடி காரனாக இருக்கிறானே!
அதன் பின் அவனுக்கும் சரி அவளுக்கும் சரி நிற்க கூட நேரமில்லாமல் சென்றது அலுவலக வேலையாக அவனும் கல்யாண வேலையை ஒற்றை ஆளாக அவளும் ஓடி கொண்டு இருந்தனர். இதற்கு இடையில் தான் முகூர்த்த புடவை வாங்கும் நாள் வந்தது.
பேச்சி சொன்னது போலவே சாதித்து விட்டார், கண்ணம்பாவை சரிக்கட்டி கூட்டி வந்து விட்டார், அவளும் இதோ கடையில்.
அன்னலட்சுமி அவளுக்கு ஒவ்வொரு புடவையாக வைத்து பார்க்க அவளோ வேறு எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.
ஏனோ இன்று அத்தனை அழகாக இருந்து தொலைத்தாள் அந்த கிராமத்து பைங்கிளி.
அடர் மிளகாய் சிவப்பில் தங்க சரிகை வைத்த மைசூர் சில்க் புடவை அவள் மேனியை ஒட்டி உறவாட. இடை வரை இருந்த கூந்தலை தளர பின்னி பூ வைத்து.
அந்த ஒற்றை முக்குத்தி மொத்தமாக உசுரை வாங்க அழகான கிராமத்து ஓவியம் அங்கே உயர் பெற்று நின்றது.
இங்கே தன்னவன் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ட்ரா போட்டு உரிந்து கொண்டு இருந்தாள். அவன் வந்தது கூடத் தெரியாமல் அவள் திருவிழா போல் இருக்கும் கடையை வேடிக்கை பார்க்க அவனுக்கு அத்தனை கோபம்
“திரும்புறாளானு பாரு என்ன பார்க்காம உனக்கு என்னடி வேடிக்கை” என்று சாடியவன் அவளது தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டு இருக்க தேவியின் தரிசனம் இதோ!
அவள் எதிர்ச்சையாகத் திரும்பி பார்க்க அவளுக்கு எதிர் புறம் இருந்த கண்ணாடியில் முட்டு கொடுத்து நின்றவன் அவள் திரும்பியதும் அவன் கை தானாக நழுவியது.
வழமை போல் அவனது பார்வை அவள் அங்கமெல்லாம் மேய “கருவாயா!.. கருவாயா! எப்படி பாக்கான் பாரு அம்புட்டு பேரு இருக்கவா அதுவும் அவுக ஐய்த்த இந்த வெறி வெறிக்குது இதுல இவுக வேற”அவன் பார்வையின் பொருள் உணர்ந்தவள் அவனுக்கு முதுகு கட்டி நிற்க.
அவளைத் தூக்கி சென்று விடும் வேகம் அவனிடம் அதற்குப் பேச்சியே ஒரு வழி செய்து கொடுத்தார் அவரது ராசாவின் தவிப்பை பார்த்தவரால் தாங்க முடியவில்லை நல்ல பாட்டியம்மா.
“கண்ணு”
“என்ன கிழவி”
“கல்யாணத்துக்கு எனக்கு ஒரு நூல் புடவை எடு புள்ள”என்று சொல்ல
“இரு வரும் போது அங்கன பாத்தேன் வாங்கிட்டு வாரேன்”என்று பேச்சியிடமும் அன்னலஷ்மியிடமும் சொல்லியவள் அந்தப் புறம் செல்ல அவனும் சென்றான் போகும் வழியில் பேச்சிக்கு பறக்கும் முத்தம் வேறு.
மின்தூக்கியில் ஏறி நின்றவள் பக்கத்தில் இருக்கும் வீம்புவை கவனிக்கவில்லை இன்று அலுவலகத்தில் மீட்டிங் என்பதில் முழுப் பார்மல் உடையில் இருந்தான் எப்போதும் முழு ஷர்டில் இருக்க அவள் கண்டு கொள்ளவில்லை.
அவள் இறங்க போகையில் கை பற்றிக் கார் பார்க்கிங் இழுத்து சென்றவன் காரில் தள்ள அவளது இதயத் துடிப்பு எகிறியது அவன் தொடுகையை ஒருவாராக உணரும் முன்னே இழுத்து வந்து விட்டான் அவள் முறைக்க.
அவளைக் கண்டு கொள்ளாது கன்னம் பற்றியவன் “கொன்னுட்டடி என்னை எப்புடி இருக்கத் தெரியுமா?” என்று அவளைப் பார்வையால் முழுங்க. அவள் அவனை விலக்கும் முன் இறுக்கக் கன்னம் பற்றி அருகில் இழுத்தவன் அவளது இதழ்களை இறுக்க பற்றி கொண்டான். கண்மூடி அவளுடன் லயித்து இருந்தவன் கண் திறந்து பார்க்க அவள் அழுகை தான் தெரிந்தது.
முத்தத்தைப் பாதியில் விட்டால் தெய்வ குத்தம் என்பது போல் முழுமையாக முடித்த பின் விட அவனைச் சரமாரியாகத் தாக்கியவள் அவன் பேச வர “ச்சீய் பேசாதீக” என்று அழுது கொண்டே சென்று விட்டாள்.
அதற்கெல்லாம் பயந்து நமது வீம்பு பின்னாடி செல்லவில்லை கார் சீட்டை சாய்த்து அதில் சயனித்துக் கொண்டு சிறுது நேரத்திற்கு முன் நடந்த அழகான தருணத்தை ஆழ்ந்து அனுபவித்தான்.
நல்ல ரசிகன் போலும்…

Advertisement