Advertisement

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 8
அதன் பின் அனைவரும் உண்டு முடிக்க அன்னலட்சுமி கண்ணாம்பாவை அழைத்து அவளை அணைத்து கொண்டார் “உன்ன மாதிரி ஒரு மருமக கிடைக்க நான் கொடுத்து வச்சுருக்கணும் கண்ணு எத்தனை பாங்கா குடும்ப நடத்துற எங்க முகம் அறிஞ்சு நடந்துக்குற,
யாரு துணையும் இல்லாம ஒரு பெண்ணை கரை சேர்த்திருக்க உன்னைய நெனச்சா பெருமையா இருக்குடா” என்று தனது வருங்கால மருமகளைப் பாராட்டி தள்ளினார் அன்னலட்சுமி.
அவருக்கு அத்தனை ஆனந்தம் இருக்காதா பின்ன கடந்த ஆறு வருடங்களாக யூஜீவனுக்கு பெண் பார்க்கும் படலம் நடக்கிறது   ஆனால் இந்த ஆறு கால வருடமும் தனது மகன் தங்களை தலை கீழிருந்து அல்லவா தண்ணி குடிக்க வைக்கிறான் .
எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அது சரியில்லை இது சரியில்லை என்று படுத்தி எடுத்தான். அதை கூட அவர் பொறுத்து கொண்டார் கடைசி கடைசியென்று ஒரு பெண்ணைப் பார்த்தார். பெருமாளுக்கும் அன்னலட்சுமிக்கும் கூட மிகவும் பிடித்தது,
ஆனால் பெண்ணின் தந்தை  தான் பேசி கொண்டே இருந்தார் அவர் கேட்ட அத்தனைக்கும் பொறுமையாகப் பதில் சொன்னவன் ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் எழுந்து கை கூப்பி ஒன்றும் பேசாமல் நடக்க ஆரம்பித்து விட்டான்.
அன்னலட்சுமிக்கும்,பெருமாளுக்கும் தர்ம சங்கடமாக ஆகிவிட்டது அதன் பின் அவர்களைச் சமாதானம் படுத்தி வெளியில் வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.
வீட்டுக்கு வந்து பெருமாள் ருத்திர தாண்டவம் ஆடி ‘இங்க பாரு லட்சுமி இனிமே உன் பெரிய பையனுக்குப் பொண்ணு பார்க்க என்ன கூப்புடாதே என்னால இன்னொரு தடவ கை கட்டி யாரு முன்னாடியும் நிக்க முடியாது பொண்ண கொடுக்குறவன் கேள்வி கேட்கத் தான் செய்வான் .
பிடிக்கலைன்னா வீம்பு புடுச்சவன் மரியாதையா சொல்லிட்டாவது வந்து தொலைச்சனா துரை அசால்ட்டா வணக்கத்தை ஒன்னு வச்சுட்டு அவன் பாட்டுக்குக் கிளப்பிப் போறான்.எதுக்குடா இப்படி பண்ணணு கேட்டா சொன்னா பாரு ஒரு காரணம்,
அப்பனே இப்படி பேசுனா மவ எப்படி இருக்கும்னு கேக்குறான் நீ வேணா பாத்துகிட்டே இரு இதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா திரும்ப உன் மவனுக்குக் கிடைக்கும்’ என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
அதையெல்லாம் எண்ணிய அன்னலட்சுமி தலையை உலுக்கி கொண்டு நடப்புக்கு வந்தவர். கண்ணாம்பாவை அணைத்து முத்தம் பதித்து ஆயிரம் முறை உடல் நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு சொல்லிவிட்டு சென்றார்.
நமது கள்ளி சம்மதம் சொல்லாத போதே அவளைப் படுத்தி எடுத்தவன் இன்று கல்யாணத்துக்கு அவள் ஒப்புதல் கிடைத்து விட்டதே சும்மாவா இருப்பான்.
“பேச்சி டார்லிங்” பேச்சிக்கு முகம் கொள்ள வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள நாணி கோணி
“என்னங்க ராசா” அவர் உடல் மொழியைப் பார்த்த கண்ணாம்பா பல்லை கடித்து கொண்டு.
“என்ன கிழவி உம்ம ஆளு பெயரு சொன்னதுக்கே செவந்து போய் நிக்க”
“உனக்கு எங்கனடி வலிக்க எம்ம ராசா குட்டி ரோசா பூ ஆசையா கூப்புடுது உம்ம தாத்தன் கூட இம்புட்டு அழகா கூப்புட்டது இல்ல” பேச்சியின் பேச்சில் தலையில் அடித்துக் கொண்ட கண்ணாம்பா
“யாரு ரோசா பூ!… அந்தக் கருவாயன் உமக்கு ரோசா பூவா கொமட்ட காட்டி குத்தி புடுவேன். அந்த ஆளு ரோசா பூ இல்ல கிழவி கருப்பூ”அவள் நக்கல் அடிக்க பேச்சி அதற்குப் பதில் கொடுக்கும் முன்பே
“விடுங்க பேச்சி டார்லிங் அவளுக்குப் பொறாமை” என்று வீம்பு சொல்ல அதற்கும் வாய்யை சுளித்துப் பழிப்பு காட்டினாள்.
***********
திவ்வியா பேச்சியையும் கண்ணாம்பாவையும் கட்டி கொண்டு கண்ணீரால் விடை பெற கண்ணாம்பாவிற்கும் கண்ணீர் அரும்பியது.
அதனை அவளுக்குக் காட்டாமல் சாமர்த்தியமாக மறைத்தவள் அவளை பார்த்துப் புன்னகை முகமாக விடை கொடுத்தால் ஹரிஷ் மரியாதை நிமித்தம் பேச்சியைப் பணிந்து விடை பெற்றான்.
காரில் அனைவரும் ஏறிய பின் காரின் ஜன்னல் வழியே கள்ளியை ஆழ்ந்து ஒரு பார்வை பார்த்து அவன் தலை அசைக்க அச்சிறு செயல் அவளுக்குள் என்னமோ செய்தது அவளது அனுமதில்லாமல் அவள் தலை தானாகச் சம்மதம் தந்தது கூடவே வெட்க புன்னகை வேறு.
வீம்புவின் வாகனம் உற்சாகத்தோடு சீறி பாய்ந்தது.
**************
நாட்கள் விரைந்தோட வீம்புக்கு தான் அவஸ்தையாக இருந்தது அவன் அத்தனை தூரம் மிரட்டியும் திருமணம் மூன்று மாதங்கள் தள்ளி போகக் கொதித்துப் போனான் அவன் பாடு அவனுக்கு.
இங்கு அவனது சொந்தங்களைச் சமாளிக்கத் தனது தந்தையும் தாயும் திணறுவதைக் கூடக் கண்டு கொள்ளாமல் அவன் காரியம் மட்டுமே முக்கியமென நடந்து கொண்டான்.
“அடியேய் லட்சுமி இவனுக்குக் கொஞ்சமாவது இங்கீதம் இருக்காடி எதோ கனவுல இருக்குற மாதிரி மிதந்து கிட்டு திரியுறான் நம்ப இதுங்க கிட்ட சிக்கி சின்னா பின்னம் ஆகிக்கிட்டு இருக்கோம்” என்று பெருமாள் தங்களது சொந்தங்களைச் சமாளிக்க முடியாமல் புலம்ப
“ஏங்க புள்ள இப்போதான் கொஞ்சமாவது இணக்கமா இருக்கான் பேசாம இருங்க திட்டுறது யாரு உங்க தங்கச்சிங்க தானே வாங்கிக்கோங்க” நேரம் பார்த்து அடித்த மனைவியை முறைத்தவர் மேற்கொண்டு எதோ பேச போக.
இருவரும் தங்களுக்குள் கிசு கிசுப்பதை பார்த்த அவரது தங்கை “அண்ணா!.. அண்ணி!… உங்க கிட்ட தான் பேசிகிட்டு இருக்கோம் யாரை கேட்டு திரும்பவும் அந்த வீட்டுல பொண்ணு எடுக்கிறிங்க. ஹரிஷ் தான் லவ் பண்ணான் சரி வேற வழியில்லை யூஜீவனுக்கு என்ன ?”என்று அவரது தங்கை பொரிய
தங்கையின் மகளும் “ஏன் அத்தை நமக்கும் அவங்களுக்கும் எப்படி மேட்ச் ஆகும்? கொஞ்சமாவது யோசிங்க. திவ்வியா அண்ணி படிச்சு இருக்காங்க அவங்க ஓகே பட் அவங்க அக்கா எப்படி சொல்லுறது பழைய சோறும் பிஸ்சாவும் பக்கத்துல வச்ச மாதிரி இருக்கும்”அவள் சொல்லி முடிக்கும் போது யூஜீவன் அவர்களை முறைத்துக் கொண்டே அங்கே வந்து அமர்ந்தான்.
அவனைப் பார்த்த சொந்தங்களுக்குப் பயமென்றால் அன்னலஷ்மிக்கு நிம்மதி இனி அவன் பார்த்துக் கொள்ளுவான் என்ற நிம்மதியுடன் நடக்கும் கூத்தை கவனிக்க ஆரமித்து விட்டார்
“லாவண்யா” என்று அத்தை மவளை அழைத்தவன் இனிமே என் பொண்டாட்டிய பத்தி தப்பா பேசாத அப்புறம் சொல்லுறதுக்கில்ல,
அவ படிக்காட்டியும் இரண்டு எம்.ஏக்கு சமம்.சின்ன வயசுலயே குடும்பக் கணக்கு, தோட்டம் குத்தகைனு, அவ தான் பார்த்துகிட்டு வரா.
தைரியமான பொண்ணு எத்தனை உறவினர்கள் தெரியுமா, ஆனா தனுச்சு அவ தங்கைச்சியையும் வளர்த்து கட்டியும் கொடுத்துட்டா யாரையும் லேசுல எடை போட்டுடாத” அவள் கண்களைக் கண்டிக்கும் பார்வை பார்த்தவன்,
“இது தான் முதலும் கடேசியும் அவளை பத்தி யாரும் தர குறைவா பேச கூடாது இல்ல நான் பேசுவேனா? பின் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை” அத்துடன் பேச்சு முடிந்தது என்பது போல அவன் கிளம்பி சென்று விட்டான்.
திவ்வியாவிற்குத் தனது அக்காவை பேசியதை தாங்கி கொள்ள முடியவில்லை அவள் கள்ளியின் கை பாவை அல்லவா உடனே நடந்த அத்தனையும் தனது அக்காவிற்குச் சொல்ல.
அங்கு கண்ணாம்பா கொதி நிலையில் இருந்தாள் யூஜீவன் மட்டும் இன்று அவள் கண் முன் நின்றால் நிச்சயம் ஒரு காளி ஆட்டம் பார்க்கலாம் அத்தனை ஆவேசம்..
அவனை வசைபாடி கொண்டே கை வேலை செய்து கொண்டு இருந்தாள்.
அவளது நிலை புரியாமல் பேச்சி “கருப்பு தான் எனக்குப் புடுச்ச கலரு” என்று பாட தோசை வார்த்துக் கொண்டு இருந்தவள் ஆவேசமாக கரண்டியை அவரை நோக்கி வீசினாள் பேச்சியோ அதனை எல்லாம் ஊதி தள்ளிவிட்டு “அவுக கண்ணு இரண்டு தோஸண்ட் வாட்ஸ் பவரு” அடுத்த வரியை பாட
“ஏய்,கிழவி வர வர குசும்பு கூடி போச்சு எல்லாம் அந்தக் கருவாயன் இருக்குற மெதப்பு”
“ஆமாடி ராசா இருக்குறது ஆனை (யானை) பலம்”
“ராசா!…ராசானு!…புலம்புன உம்ம காதுல இருக்குற தண்டட்டியை புடுச்சு ஊசல் ஆடி புடுவேன் எம்ம காது சவ்வு கிளிஞ்சு போகுது உம்ம ராசா புராணம் கேட்டு”
அதற்குள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் பேச்சிக்கு அழைத்தான் யூஜீவன்.பக்கத்து விட்டுப் பெண் துணையுடன் காது சரியாகக் கேட்காத காரணத்தால் போனை  ஸ்பீக்கர் மோடுக்கு மாற்ற பட.
யூஜீவன் “ஹாய்!.. பேச்சி டார்லிங்க சாப்பிட்டீங்களா?” அந்த ஒரு வார்த்தை போதுமே போதுமே கள்ளிக்கு
“உம்ம இருய்யா வாரேன்” என்று வந்தவள் போனை வாங்கி
“யோவ் உம்மக்கு என்ன கருப்பு மன்மதக் குஞ்சுன்னு நினைப்போ உம்ம பாக்கத்தான் நாங்க இம்புட்டு நாள் ஏங்கி கிடந்தமோ எங்க பாக்குறேன் உம்ம தலையில கொம்பு இருக்கானு” போன் வாங்கியவுடன் அவள் பொரிய ஆதியும் புரியாமல் அந்தமும் புரியாமல் அந்தப் பக்கம் முழித்துக் கொண்டு நின்றான் வீம்பு (பெருமாள் சாபம் ஸ்டார்டிங்…………………..)
“ஏய் மூச்சு விடுடி இப்போ எதுக்கு மாமா மேல இவ்வளவு கோபம் செல்லத்துக்கு” அவன் கொஞ்சலில் கண்ணீர் எட்டி பார்க்க “உம்ம கிட்ட என்னய்யா சொன்னேன் கண்ணாலத்துக்கு முன்னாடி எல்லதுக்கிட்டையும் கேட்டுக்கோனு எம்புட்டு தூரம் சொன்னேன்.எதுல உம்ம விட நான் குறைஞ்சு போய்ட்டேனு கேக்கேன் நான் பழைய சோறவே இருக்கேன் நீக….. அது என்ன …………..” என்று யோசிக்க  இப்போது அவளது கோபத்திற்கான காரணம் புரிய
எலி பார்த்த வேலையா இது என்று எண்ணியவனுக்கு ஐயோ!…. என்று இருந்தது இருந்தாலும் அவன் தான் ஜித்தனுக்கே ஜித்தன் ஆயிற்றே அவளை அழகாகக் கையாண்டான்.
“என் செல்லத்தைத் தவிர வேற யாரும் எனக்குச் செட் அகமாட்டாங்க அடுத்தவங்க பேச்சுக்கெல்லாம் ஏன்டி காது கொடுக்குற”ஆதங்கமாகக் கேட்டவன்.
அவளின் தற்போதைய நிலையை மாற்ற எண்ணி மிகவும் அந்தரங்கமாக. அவள் மட்டுமே அவனுக்கு ஈடு கொடுக்க முடியும் என்பதை அவன் பாணியில் உரைக்க போனை காதில் அமுத்தி பிடித்துக் கண்களை இறுக்க மூடி கொண்டாள்.
ஒரு கட்டத்துக்கு மேல் உணர்வுகள் கட்டு பட மறுக்க “யோவ்! நிறுத்துயா உம்ம கிட்ட நான் ஒன்னும் கேக்கல சாமி எம்ம விடும் பேச்ச பாரு எங்கன இருந்து தான் இப்படி பேசிறிகளோ?” அதற்கு மேல அவளுக்குப் பேச வாய் வரவில்லை.
அதற்கும் அவன் சீண்ட “ஐயா சாமி உமக்குப் புண்ணியம்மா போகும் கண்ணாலம் வரைக்கும் எம்ம கூடப் பேசாதிக”என்றவளை ஏக்கமாக அழைத்தான்
“ஏன்டி”என்று அறியா சிறுவன் போல கேட்க.
“யோவ் நல்ல பேசி புடுவேன் வைய்யா போன” என்று போனை அணைத்தவள் தனது அறைக்குள் ஓடி சென்று கதவை தாளிட்டாள்.
முதல் முறையாக உணரும் வெட்கம் வேட்கை அவளைத் துவள செய்யப் படபடக்கும் இதயத்தைக் கை கொண்டு அமுத்தியவள் நேரம் கேட்ட நேரமாக அவன் சொன்னது காதில் ஒலிக்க வேகமாகக் கையை விலக்கி கொண்டாள்
“ஆத்தி! கடஞ்சு எடுத்த பொறுக்கி கணக்கா பேச்ச பாரு எங்கன எறங்குன எங்கன மடிவேனு தெருஞ்சுல அடிக்கான் கருவாயன்” அவள் கொஞ்சினாளா இல்ல திட்டினாளா என்று அவளுக்கே புரியவில்லை பாவம்.
வீம்பின் வம்பு தொடரும்……………………..

Advertisement