Advertisement

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 6
அம்மியில் தேங்காய் சில்லை வைத்து நைத்து இழுத்து அரைத்துக் கொண்டு இருந்தாள் நமது கள்ளி. என்ன தான் உலகம் முன்னேறி இருந்தாலும்,
எத்தனை வசதிகள் வந்தாலும் அம்மியில் அரைத்துக் குழம்பு வைக்கும் ருசியே தனி அல்லவா அதிலும் நமது கள்ளி பழமைவாதி வேறு ‘இக்காலத்திலும் இப்படி ஒரு பெண்ணா’ என்று சிலர் வாய்ப் பிளப்பதும் உண்டு.
அவள் அரைப்பதை நமது பேச்சி ஓர விழியில் அவளைப் பார்த்தவாரே “ராசாவே உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதய்யா” என்று பாட கண்ணாம்பாவின் கை அரைப்பதை ஒரு நிமிடம் நிறுத்தி விட்டு மீண்டும் தொடங்கியது கூடவே பேச்சியைப் பார்த்து
“அது எந்த ராசா கிழவி புதுசா சுடு காட்டுக்கு வழி துணையா”என்று கேட்க.
“உமக்கு என்னடி? எம்ம உசிவன் ராசாவத்தேன் சொன்னேன்” அவன் பெயரை அவர் சொல்லும் விதம் சிரிப்பை உதிர்க்க பார்த்தாலும் அதனை அடக்கி,
“ஓ!……………உமக்கு ஏத்த சோடித்தேன் கிழவி கருவாயனுக்கும் கிழவிக்கும் அம்புட்டு பொருத்தமா இருக்கும்”என்று நக்கல் அடித்தவள் மீண்டும் வேலையைத் தொடர்ந்தாள்.
அன்று ஹரிஷ் அவளிடம் என்னவென்று கேட்க தங்களுக்குள் நடந்ததை வெளியில் சொல்ல விரும்பம் அற்று “கொழுந்து என்ன? ஏதுன்னு? கேட்காதீக பஸ்ல ஏத்தி உடுக உங்க அம்மை ஐய்யன் கிட்ட உடம்புக்கு சுகமில்லன்னு சொல்லி புடுங்க ஏன்னா சொல்லாம போறது மறுவாதி இல்ல”
அதற்கு மேல் அவளிடம் பேச முடியாது என்பதை உணர்ந்து கொண்டு அவளை அழைத்துச் சென்றான். திவி தான் தவித்துப் போனாள் தமக்கையைச் சங்கட படுத்தி விட்டோமோ என்று.
ஆனால் பொறுப்பான தம்கையாக கள்ளி போகும் போது அத்தனை அறிவுரை தங்கைக்கு வழங்கியே சென்றாள்.
************
யூஜீவனின் கோபமும் செய்கையும் அவளுக்கு உள்ளுக்குள் பயத்தை விதைத்தாலும் வெளியில் அதனைக் கட்டாதவாறு அவனை முறைத்துக் கொண்டு இருந்தாள்.
கடைசியாகத் தான் கை ஓங்கியதற்கு அவன் கொடுத்த பதிலடி இன்னும் வலித்தது கன்னத்தில் முத்தம் தானே வைத்தான் எப்போது அவனது பற்கள் கன்னத்தைப் பதம் பார்த்தது என்றே தெரியவில்லை ஊருக்கு வந்து பேச்சி அவளைப் பார்த்து முதலில் அதிர்ந்தவர் பின்பு சன்ன சிரிப்புடன்
‘கன்னத்தில் என்னடி காயம்’ என்று பாட அப்போதுதான் வேகமாகச் சென்று கண்ணாடியில் பார்த்தாள் நான்கு பற்களின் தடம் சற்று அழுத்தமாக தான் இருந்தது  வீம்பு புடிச்ச கருவாயா எப்போ இது?
அந்த நினைவை வலுக்கட்டாயமாகத் தள்ளியவள் சமைக்க வேண்டி வேலைகளைச் செய்யச் சென்று விட்டாள் அடுக்கலைக்குள் அவள் வேலையாக இருக்க முற்றத்தில் பேச்சி லவுட் ஸ்பீக்கர் போட்டுப் போனில் பேசி கொண்டு இருந்தார் அதுவும் சிரித்துச் சிரித்து.
“ஏது போனு? யாருகிட்ட பேசுது கிழவி அதுவும் குலுங்கி குலுக்கி சிரிக்குது ” என்று வாய்விட்டு பேசியவாறு முற்றத்திற்கு வர அங்கே வீம்புவின் குரல் கணீரென்று ஒலித்தது.
பார்த்தது முதல் அவனது உடல் கட்டும் அதற்குத் தகுந்தாற் போல் இருக்கும் மீசையும், தமிழ் நாட்டுக்கே உரிய கருமை நிறமும்,அவனது குரலும் அவளை வசீகரித்தது என்பது யாருக்கும் தெரியாது உண்மை.
உரிமை இல்லாதவனிடம் கண்கள் அலை பாய்வதை அவளால் ஏற்க முடியவில்லை நாகரீகமென்ற பெயரில் இன்று நடக்கும் காதல் நாடகம் என்ன?இவள் எண்ணுவது என்ன?கிராமத்து பெண்ணின் பெண்மை நியாயம் பேசியது அந்த நியாயத்திற்குக் கட்டுப்பட்டே அவள் அவனிடம் ஒதுங்கியே இருந்தாள்.
நமது வீம்பு தான் தனது விருப்பத்தைப் பொட்டில் அடித்தது போல் சொல்லியாகி விட்டதே அதை எண்ணியவள் அவனது பேச்சை கேட்கும் பொருட்டுப் பேச்சிக்குப் பின்னால் போய் நின்றாள்….
“அழகிக்கு இன்னும் சாப்பாடு போடாம என்ன பண்ணுறா என் சண்டி ராணி?” என்று கேட்க பேச்சியோ
“கேக்க ஆளு இல்லமாதேன் அந்தச் சிறுக்கி கொழுப்பெடுத்த அலையுறா ராசா, வெரசா வந்து அள்ளிக்கிட்டு போயிடு சாமி,போற காலத்துல அவ வாழுறதையும் கண்ணு தளும்பப் பாத்துபுட்டு சிவன் போக்குல கண்ணா மூடுவேன்” அவர் பேச்சில் கண்ணாம்பாவிற்கே கண்ணில் நீர் தளும்பியது.
கடைசிக் காலத்தில் தனது வாழ்க்கையை எண்ணி பேச்சி ஒவ்வொரு நாளும் மருகி கரைவதை பார்க்காமல் இல்லை, ஆனால் அவளுக்குத் திருமண வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பே இல்லாமல் அல்லவா இருக்கின்றது.
 அது மட்டுமில்லை திவ்வியாவிற்கு ஒரு தாயாக இருந்து பேறு காலம் பார்க்க வேண்டும்.தாய் வீட்டு சொந்தமென்றால் அது தான் மட்டும் தான்.
இதில் எங்கிருந்து தனது திருமணத்தைப் பற்றி யோசிப்பது சொந்தம் என்று பல உறவுகள் இருந்தாலும் அவர்களின் வரவு குறைந்த அளவே.
இதையெல்லாம் விட யூஜீவனுக்குத் தான் தகுதி இல்லையென்று அவர்கள் வீட்டில் நினைத்து விட்டால் தன்னால் அதைச் சற்றும் ஏற்க முடியாது அவளை பொறுத்தவரையில் தகுதி என்பது மனமும்,குணமும் தான்.
அது தன்னிடம் நிரம்பவே இருக்கு அவளுக்கு தெரியவில்லை அவளது இந்த மனப்பான்மையே யூஜீவனை இழுத்தது. மார்டன் யுவதிகள் வளம் வரும் இடத்தில் எந்த விதமான சங்கடமும் இல்லாமல் நான் இப்படித்தான் என்று அவள் வளைய வந்தது அவனை மிகவும் ஈர்த்தது.
பேச்சிக்கு உணவை பரிமாறியவரே “என்ன கிழவி உம்ம ராசா என்ன சொன்னாரு”என்று கேட்க உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவர்………
“எம்ம ராசன் நேரத்துக்கு உண்க உறங்க சொன்னாரு அப்போதேன் உடம்பு தெம்பு கொடுக்குமா”.
“பெரிய்ய…….கண்டு புடிப்புதேன் கிழவி உம்ம ராசா அறிவ கண்டு வியக்கேன்” போலியாக அவள் வியப்பு காட்ட
அவளை முறைத்த பேச்சி “போன போட்டு பேசு ராசா நேத்துல இருந்து சோறு தண்ணி இல்லாம இருக்கவா அவுங்க அம்மை போன போட்டு எம்ம கிட்ட வெசன படுராக” என்று சொல்லியவர் தனது வெற்றிலை பையை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.
அதற்கு மேல் பொறுமை காற்றில் பறக்க திவிக்கு அழைத்தவள் “எங்கடி உன் மாமே?” என்று கேட்க அவளுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை அதனை உணர்ந்தது போல்,
“அதான்டி அந்தக் கருவாயன் கிட்ட போன கொடு” என்று பல்லை கடிக்க காதில் இருந்த போனை தூரமாக வைத்தவள் அதிர்ச்சியில் கருவியான……..‘ஐயோ போச்சு மாமா மாட்டுனாக’ என்று அலறியவரே அவனது அறையை நோக்கி ஓடினாள்.
மதியம் உண்டு விட்டு சிறுது நேரம் ஓய்வெடுப்பது வீம்புவின் வழக்கம் அதனால் தான் உடனே அழைத்து விட்டாள் (இருந்த மூன்று நாட்களில் அந்த வீட்டை கள்ளி அக்கு வேறு ஆணி வேறாக அலசியது தனிக் கதை)
திவி கதவை தட்டி போனை கொடுக்க முதலில் முழித்தவன் பின்பு அவள் செய்கையில் தனது அக்காவென்று சொல்ல…சிரித்தவாரே போனை காதுக்குக் கொடுத்தான்.
“ஹலோ” அவனது அந்த ஒற்றைச் சொல் அவள் அடி வயிற்றில் ராட்டினம் ஓட்ட அதனை கண் மூடி அனுமதித்தவள் “ஹ்ம்ம்..” என்ற பதில் மட்டுமே அவளது நிலையைக் கண்டு கொண்டவன் போல உரக்க சிரிக்க அவன் சிரிப்பொலியில் தெளிந்தவள்,
“யோவ் என்ன விடல பையன்னு நினைப்பா இல்ல நினைப்பானு கேக்கேன் சோறு பரிக்காம என்ன சோலி வேண்டி கிடக்கு. அது என்ன அம்புட்டு வீம்பு உமக்கும் எமக்கும் எதுல பொருந்துமுனு கண்ணாலத்துக்கு நீக்கிக. புருஞ்சுக்கிடுக உம்ம குடும்பத்தோட என்னால ஓட்ட முடியல திவி படுச்ச புள்ள நான் அப்படில்ல…………”
அவளது பேச்சில் எரிச்சலுற்றவன் “அதுவும் இல்லாம எனக்கு உன்னைய பிடித்தா போதும் மத்தவங்களுக்கு உன்ன புடிக்கணுங்கிற அவசியம் இல்லை புரியுதா?
“இது தான் தப்பு நீக மட்டும் இல்ல உங்க அம்மை ஐய்யனும் எனக்கு உறவுத்தேன் அவுக இல்லாம நீக எப்படி. அவுங்க முறையா பேசட்டும் பிறகு பாக்கலாம் இன்னும் ஒருக்கா யோசிக” அடுத்து அவள் பேசுவதற்குள் இடையிட்ட வீம்பு.
கோவத்தில் சில அந்தரங்க செய்திகளை சொல்லி அவனுக்கு அவள் எப்படில்லாம் சரி வருவாள் என்பதைத் தெள்ள தெளிவாகச் சொல்ல,
“யோவ் நேருல இல்லனு மெதப்புல பேசுறியோ சங்க கடிச்சு துப்பிடுவேன் பொறுக்கி பொறுக்கி” என்று கோபமாகக் கண்ணாம்பா போனை வைக்க அங்கு அவளது வீம்பு வாய்விட்டு சிரித்தான். மனதில் உடனே தாய் தந்தையிடம் பேச வேண்டும் என்ற சங்கல்பம் வேறு.
*******
இவளோ இன்னும் கோபம் அடங்காமல் பொரிந்து தள்ளினாள் “கருமம் கருமம் இந்தக் கருவாயன் கிட்ட பாத்துதேன் பேசனும் சாமி வெக்கமே இல்லாம பேசுறத பாரு ஐயோ!..இவுக கூடக் காலம் முழுக்க நான்? ஆத்தி கருவாயனே இப்படின்னா அங்கன ஒன்னும் ஒன்னும் ஒவ்வொரு திணுசால இருக்கும் ..நாடகத்துல வர மாதிரி எத்தனை வில்லி வர போகுதோ தெரியல” அவள் வாய்விட்டு அலற பேச்சியின் சிரிப்பொலி வீட்டை நிறைத்தது.
கூடவே  “அடியேய் உமக்கு ஒரு பழமொழி தெரியுமாடி ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்துல உண்டு’ ” என்று அவர் சொல்லி முடிக்க பாட்டியை நோக்கி ஓடினாள் பேத்தி.

Advertisement