Advertisement

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 4
ஐயோ! என்று திவ்வியா அலற கண்ணாம்பாவோ தனது தோளில் அழுத்திய பாரம் நமது வீம்புவின் தாடை தான் என்று அறிந்தவள் துள்ளி விலகினாள்.
அவனைப் பார்த்துப் பற்களைக் கடிக்க அவளது தங்கையோ நடப்பதை நம்ப முடியாமல் சிறு ஆனந்த அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள்.
தமக்கையை விடுத்து தான் மட்டும் திருமணம் செய்து கொண்டோம் என்று உறுத்தி கொண்டே இருந்தது. அந்த உறுத்தல் இன்று விலகியதும் அத்தனை ஆனந்தம் பெண்ணுக்கு.
முதல் இரவில் தன்னவன் முதலில் பேசியதே தனது தமக்கையின் திருமணம் பற்றித் தான். அவர்களுக்கான இரவில் கூட அவர்களைப் பற்றி யோசிக்காமல் உடனே பேச்சிக்கு அழைத்து விடயத்தைச் சொல்லிவிட்டாள் ‘ஆச்சி’ என்று அவள் சந்தோச மிகுதியில் கத்த அவரோ என்னமோ ஏதோவென்று ‘என்ன தாயி இந்த நேரத்துல’ என்று பதறினார்.
அப்போதுதான் தனது மட தனத்தை உணர்ந்தவள் அவர்களுக்குச் சொல்ல வந்த விடயத்தைப் பதமாக எடுத்துரைக்க பேச்சிக்கு கேட்கவா வேண்டும் அந்த வயதிலும் மறு முனையில் துள்ளிய பேச்சி.
‘நிசமாவா? அந்தப் புள்ளையா? ராசா கணக்கா இருந்தாரே’
‘ஆச்சி அவருக்குத்தான் அக்காவ புடிச்சு இருக்கு அக்கா விலகி தான் போகுது….’
‘அவ கிடக்கா சண்டி குதிரை அதையெல்லாம் ராசா பாத்துக்கும் அவளுக்கு ஏத்த சோடித்தேன்’ அவருக்கு அத்தனை மகிழ்ச்சி.
அதையெல்லாம் எண்ணியவாரே திவி கழண்டு கொண்டாள் தமைக்கையிடம் சிக்கினாள் இன்று மதிய உணவுக்கு தன்னை வைத்து அம்மியில் மசாலா அரைத்து விடுவாள் என்று ஓடியே விட்டாள். அவள் ஓட்டம் பிடித்ததைப் பார்த்தவன் கண்ணாம்பாவிடம் திரும்பி.
“ஒரே வீட்டுல ஒன்னு புலியாவும் ஒன்னு பூனையாவும் இருக்கே எப்படி?” என்று தாடையைத் தடவியவனின் சட்டையை கொத்தாகப் பிடித்து அருகில் இழுத்தவள்,
“யோவ் கருவாயா எம்புட்டுத் தைரியம் இருந்தா என்ன தொட்டு பேசுவ மறுக்கா இந்தக் கை என்ன தொட்டுச்சு உம்ம கை உம்ம உடம்பில இல்ல சொல்லிப்புட்டேன்.எம்ம மேல கை வைக்க நீர் ஒன்னும் எம்ம ராசன் கிடையாது” கோபத்தில் அவள் கண்கள் சிவக்க பேசிவயவளை காதல் பொங்க பார்த்துக் கொண்டு இருந்தான் நமது வீம்பு.
அவள் கோபத்தில் குளிர் காய்ந்து கொண்டே “ஓ! …………சரி அப்போ சீக்கரம் கல்யாணம் பண்ணிக்கோ ஏன்னா ஒரு நாளைக்கு அட்லீஸ்ட் ஒரு முறையாவது உன்ன கட்டிக்கனும் இல்லனா தெய்வ குத்தமாகி போகும் என்ன”அவன் அசால்ட்டாக உரைக்க அவளுக்கு எப்படி இவனைச் சமாளிப்பது என்றே தெரியவில்லை.
எதுவும் செய்ய முடியாத நிலையை எண்ணி அவன் முன் கையை நீட்டி “போயா” என்று சென்று விட்டாள்.
அவனை வசை பாடியவாரே  வந்து கொண்டு இருந்தவளை கையைப் பற்றி நிறுத்தினார் அன்னலட்சுமி அதில் அச்சமுற்று கத்த போனவள் அவர் முகம் பார்த்து சற்று நிதானித்து  “சொல்லுங்கம்மா” என்க
“என்னடா வந்ததுல இருந்து வேலை பார்த்துகிட்டே இருக்க கொஞ்சம் வா உங்கிட்ட பேசனும்” என்று அழைத்துச் சென்றார் அவரது சொல்லுக்குச் செவி சாய்த்தவள் அவருடன் அவர்களது அறைக்கு செல்ல அங்கே பெருமாள் இருப்பதைப் பார்த்து தயங்கி நின்றாள்.
“வாம்மா நீயும் எங்க வீடு பொண்ணு தான் தான் வா” வாய்க் கொள்ளா  சிரிப்போடு அவர் வாஞ்சையாக அழைக்க அவளுக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது தயக்கம் நீங்கி அவர்களது அருகில் அமர்ந்து கொண்டாள்.
அவளைப் புன்னகையோட பார்த்துக் கொண்டு இருந்தவர்களைப் பார்த்தவள் ‘ஏன் அவுக மகேன் மாதிரியே வெறிக்காங்க இது பூர்வீக குடும்ப பார்வை போல’ மனதுக்குள் சற்று நக்கலாக எண்ண அவள் எண்ணத்தை களைத்தது பெருமாளின் குரல்.
“நாளைக்கி எல்லாரும் கோவில் போறோம் தாயி” என்று சொல்ல அவளிடம் சிறு தலை அசைப்பு மட்டுமே!
மேலும் அவர் “இந்த வீட்டு வழக்க படி கல்யாணம் நடந்த மூணாம் நாள் குடும்பத்தோட போறது வழக்கத்துல இருக்கு. இந்த யூஜீவன் பய மட்டும் போக்கு காட்டுறான் பொண்ணு வீட்டு சார்பா நீ அதட்டுப் போடுமா பைய வந்துருவான்”
ஆத்தி!.. என்னது!….. மாமா நீக ஏதோ கோவில் விஷயமா பேச போரீகனு நெனைச்சேன்! இது என்ன..நீக சொல்லி கேக்க மாட்டேன் அடம்பிடிக்கா……..நான் என்ன சொல்லி என்ன மாமா செய்ய”
அவளுக்கு உள்ளூர நடுக்கம் வேலில போற ஓணானை வேட்டிக்குள்ள உட்ட கதையால இருக்கு அவள் அரண்டு விழிக்க அன்னலட்சுமி அவளது கையைப் பிடித்து “நான் சொல்லுரேனு தப்பா நெனச்சுக்காதம்மா அவன் உங்கிட்ட தயக்கமே இல்லாம பேசுற மாதிரி என்கிட்ட கூடப் பேசுனது இல்ல”
அடுத்த அதிர்ச்சி “அதுக்கு” வாய்விட்டே கேட்டவள் அவர்களது மரியாதையைக் கருத்தில் கொண்டு அந்த பெரியவர்களுக்குச் சம்மதமாகத் தலை அசைத்து விடை பெற்றாள் அவள் செல்லவே பெருமாள் அடக்கி வைத்திருந்த சிரிப்பை வெளியிட்டார்.
“ஹா…….ஹா……………….அன்னலட்சுமி உன் மவன் என்ன பாடு படுத்துனான் அவனைப் பாட படுத்த என் ஆச்சியே மருமகளா வந்துருக்குடி”
“ரொம்பத்தான்” அவன் நம்ப மகன் என்று திருத்தியவர்.
“நல்ல வேலை வீட்டுல இத்தனை உறவு இருக்கும் போது என்ன ஏன் பேச சொல்லிறீங்கன்னு கேட்கல கேட்டு இருந்தா என்னத்த சொல்லி சமாளிக்கிறது” அன்னலட்சுமி
“என் மருமக சொல்லாதுன்னு எண்ணி தானே சொன்னேன்”
“எப்படிங்க”
“அந்தப் பொண்ணு நம்பக் கிட்ட எதிர்த்து பேசாது அன்னம் அதுக்குத் தெரியும் நம்மை பத்தி, ஆட்களை நல்ல புரியுது புள்ளைக்கு”
“என்னவோ நம்பல தப்ப எண்ணாம இருந்தா சரி”
************************
அங்கோ கண்ணாம்பா கொதி நிலையில் இருந்தாள் “எங்கன போனா அந்தச் சிறுக்கி” திவியைத் தான் தேடி கொண்டு இருந்தாள் அவள் தேடலுக்குரியவள் ஹரிஷிடம் அல்லவா ஒளிந்து கொண்டு திரிகிறாள்.
ஹரிஷை பார்த்த கண்ணாம்பா “கொழுந்து உம்ம பொஞ்சாதி எங்க?” என்று கேட்க அவனோ “இங்க இல்லங்க அண்ணி அந்தப் பக்கம் தான் போனா” என்று கையை எங்கோ காட்ட அங்கே வெறும் சுவர் தான் இருந்தது.
அவள் அங்குப் பார்க்க திரும்ப அதைச் சாக்காக வைத்துக் கொண்டு திவியும்,ஹரிஷும் அந்த இடத்தை வீட்டு ஓடிவிட்டனர்.
மூச்சுவாங்க ஓடிய திவி “ஏங்க ஊருல இரண்டு மூணு கல்யாணம் பண்ணவன் எல்லாம் நல்ல இருக்கானுக. நான் ஒரு கல்யாணம் பண்ணி  அக்காகிட்ட படாதபாடுபடுறேன். போதா குறைக்கு யூஜீவன் மாமா வேற சும்மா சும்மா அக்காவ சீண்டுறாங்க என்னால முடியலைங்க”என்று வருந்த.
ஹரிஷோ ஆறுதலுக்குப் பதில் அவள் பயத்தை மேலும் அதிகரிக்கும் பொருட்டு “எனக்கும் பயமா தான் இருக்கு ஒரு குகையில் இரு சிங்கம் நம்ப வீடு” என்றவனை முறைத்து  பார்க்க
இல்லம்மா எங்க அண்ணனும் உர் உங்க அக்காவும் உர் இந்தப் பெண் சிங்கமும் ஆண் சிங்கமும் சேர்ந்து உர் னா நம்ப நிலைமை அதைச் சொன்னேன் முகத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொண்டு ஹரிஷ் விளக்கம் கொடுக்கப் பக்கெனச் சிரித்து விட்டாள் திவ்வியா புதுமணத் தம்பதிகளுக்குச் சிறு இணக்கம் உண்டானது.
***************
அங்கே வீம்புவின் அறை வரை சென்ற கண்ணாம்பா அதற்கு மேல் செல்ல தைரியம் இல்லாமல் இங்கும் அங்கும் நடக்க மூடிய கதவில் யாரோ நடப்பது போல் நிழல் ஆட கதவை திருத்தவன் முன் அவனது கள்ளி.
அவனைப் பார்த்தவளை அவன் கண் அடித்து “உள்ள வா செல்லம் மாமா ரூம் வரைக்கும் வந்துட்டு என்ன தயக்கம்” என்று வீம்பு சீண்ட
“யோவ் கல்ல எடுத்து உம்ம மண்டைய உடைக்கேன். யாருக்கு யாரையா மாமா………… கருவாயா” மேலும் பேச போனவள் தான் வந்த காரணம் நினைவு வர,
“இங்கன பாருய்யா நான் உம்ம கூட ஒரண்டு இழுக்க வரல ஏன் கோவிலுக்கு வர மாட்டேங்க?”
“மாமாக்கு வேலை இருக்குடா தங்கம் அப்புறம் யாரு தொழிலை பார்க்குறது சொல்லு” என்று பேசி கொண்டே அவளை நெருங்க பின்னடைந்தவள்
“யோவ் தள்ளி நில்லும் என்ன பெரிய்யத் தொழிலு பென்சில் குச்சி,பேப்பர்,பேனா வியாபாரம் தானே பாக்குறிக அது பெறவு வந்து பாருக ஒழுங்கா விடியலை பாத்து கோவிலுக்கு வாரிக” என்க அவளது பேச்சில் ஒரு நொடி திகைத்து நின்று விட்டான்.அவள் பேசி கொண்டே போக அவனது கவனம் தன்னிடம் இல்லை என்று கண்டு கொண்டவள்.
“யோவ் கருவாயா” அவனது தோளை பிடித்து உலுக்க அதில் சுயம் பெற்றவன் இமைக்கும் நேரத்தில் அவளை அறைக்குள் இழுத்து சுவரோட சாய்த்து வைத்து அவள் முகத்திற்கு மிக அருகில் சென்றவன் “யாரை பார்த்துடி பென்சில் பேனா விற்கிறவன்னு சொன்ன?” ஆற்றாமையாக கேட்க அவன் முகத்தைப் பார்த்தவள்
“திவி தான் சொன்னா ஏன் அந்த தொழிலும் இல்லையா?” என்று அவள் நக்கலாகக் கேட்க
“ஏய்!….நான் ஸ்டேஷனரி டீலர் எனக்குக் கீழ் முப்பது கிளை இருக்கு பேப்பர் தொழிற்சாலை வச்சு நடத்துறேன்டி” கோபமாக ஆரம்பித்து ஆற்றாமையாக  அவன் முடிக்க அவனைத் தள்ளி விட்டவள்
“யோவ் அதைத் தானே நானும் சொன்னேன்” என்று அடம் பிடிக்க.
வீம்புக்குக் கோபம் கோபமாக வந்தது அவனது தொழில் வட்டாரம் வெளிநாடு வரை பரவி இருக்கத் தன்னவள் தன்னை மளிகை கடைகாரனாக எண்ணி பேசுவது அவனைக் கோபத்தின் உச்சிக்கு அழைத்துச் சென்றது.
அவன் முறைத்து பார்க்க அதனைக் கண்டு கொள்ளாதவள் போல் அவனை விலக்கி நிறுத்தியவள் “உம்ம ஐய்யனுக்காகத் தான் கேக்க வந்தேன் நீக உம்ம வேலையைப் பாரும் நான் நிம்மதியா சாமி பாக்கேன் என்ன” என்றவள் மெல்லமாக ‘அங்கன வந்தும் ஒரண்டு இழுப்பிக எமக்கு ஏஞ் சாமி வம்பு வராதீக’ என்று என்று முணுத்து கொண்டே செல்ல அவன் முகத்தில் அழகிய புன்னகை.
கண்டிப்பா வருவேன்டி என்று சூழ் உரைத்தது நமது வீம்பின் வீம்பு…………..
கள்ளி வருவாள்….

Advertisement