Advertisement

வீம்புடையானின் வித்தாரக்கள்ளி – 3
அழகான உறவுகளின் விடியல் போலும் அக்காளுக்கும் தங்கைக்கும் “எம்புட்டுத் தைரியம் இருந்தா என்னய்ய தூக்குவாக” விடியலில் தொடங்கிய பாட்டு இது இதையே ஆயிரம் முறை சொல்லிவிட்டாள் கண்ணாம்பாள்.
அடுக்கலைக்குள் இருந்து கொண்டு வெங்காயம் நறுக்கியவாரே  தன்னிடம் புலம்பும் தமக்கையை என்ன சொல்லி தேற்றுவது என்று தெரியாமல் முழித்து கொண்டு இருந்தாள் திவ்வியா.
இரவின் ரகசியம் தந்த இனிமை ஒரு புறம். தனது கணவன் தன்னிடம் பகிர்ந்த செய்தி ஒரு புறம். அச்செய்தியை உறுதி படுத்தியது போல் அக்காளின் புலம்பல் என கலவையான உணர்வில் இருந்தாள் திவ்வியா.
தமக்கைக்கு  யூஜீவன் செயலை  ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதை அறிந்தவள் தனக்கு எதுவும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல் “அக்கா இப்போ எதுக்கு உனக்கு இத்தனை கோபம் என் வீட்டுக்காரு வரட்டும் நான் சொல்லி வைக்கிறேன்” என்ற திவியை ஏற இறங்க பார்த்தவள்
“எல்லாம் நானே கேட்கேன்  நீ உம்ம வேலையைப் பாரும் அந்த கருவாயான நானா பாக்கேன்”
“ஐயோ அக்கா தயவு செஞ்சு கொஞ்சம் மெதுவா பேசேன் எனக்கு வேற தலைய வலிக்குது” திவி கத்தவே வாய்யை இறுக்க மூடி கொண்டாள்.
*************
“என்னம்மா பண்ணுறீங்க இரண்டு பொண்ணுங்களும்” என்று  அன்னலெட்சுமி குரல் கொடுத்துக் கொண்டே வந்தார். வந்தவர் நேரே சிறிய மருமகளிடம் சென்று அவள் கன்னத்தைப் பற்றிக் கொஞ்ச சிறு நெகிழ்ச்சி பெண்ணிடம்.
இதையெல்லாம் ஒருவித புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் கண்ணாம்பா மனதில் அத்தனை நிம்மதி.
உள்ளே  இருப்பது புலியோ பூவோ என்று பயந்து கொண்டு தான் இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்தாள் இன்று அதற்கு அவசியமில்லை என்பது போல் அன்னலெட்சுமி நடந்து கொண்டார்.
“என்ன பெரிய மருமகளே” என்று கண்ணம்பாவை அழைக்க முதலில் முழித்தவள் பின்பு அவரைப் பார்த்து “சொல்லுங்கம்மா” என்க
“ஒண்ணுமில்லடா நாளை மறுநாள் குல தெய்வம் கோவிலுக்குப் போயிட்டு அப்புறமா ஆச்சி உன்னை ஊருக்கு அனுப்ப சொன்னாங்க”
“என்னது இன்னும் இரண்டு நாளா? என்று வாய்விட்டே சொல்லியவள் அம்மா நீங்கெல்லாம் போயிட்டு வாங்க எனக்கு ஊருல சோலி இருக்கு நான் அங்கன இல்லனா ஆச்சியால சமாளிக்க முடியாது”கெஞ்சவே தொடங்கி விட்டாள் பின்னே இன்னும் இரு தினங்கள் என்றால் நமது கள்ளியால் சத்தியமாக முடியாது அதுவும் நமது வீம்புடன்.
அவளது எண்ணத்தின் நாயகனே அவள் முன் தோன்றி “ஆமா ஆமா இவ இல்லனா அங்க சூரியனே உதிக்காதும்மா”  என்று நமது வீம்பு வார
(இனி செல்ல பெயரை கொண்டு யூஜீவனை அழைப்போம் மற்றவர்களுக்கு வீம்பு நமது கண்ணாம்பாவிற்குக் கருவாயன்).
இயல்பாகத் தன்னிடம் பேசியது தனது மகன் தான என்று கண் மூடி திறந்து அன்னலெட்சுமி பார்க்க  தனது கணவன் மூலம் அறிந்த யூஜீவனா இது என்று திவ்வியாவும் பார்த்துக் கொண்டே தனது அத்தையை அழைத்து வந்து விட்டாள்.
ஏற்கனவே அவன் மேல் கொலை வெறியில் கண்ணாம்பா அவனைத் திரும்பி முறைக்க அதை அலட்சியம் செய்தவன் அவளை பார்த்து இரு கண்களையும் மாற்றி  மாற்றி அடித்தான் ஆ!…………என்று வாய்யை பிளந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அங்கு இருந்த மனிதர்கள் எல்லாம் எப்போதோ மாயம் ஆகியிருந்தனர்.
அவனை முறைத்தவாரே அவன் இருக்கும் பக்கத்தில் கூடச் செல்லாமல் சுற்றிக் கொண்டு சென்றவளை வாயிலின் புறம் நின்று இரு கைகளையும் ஊன்றி வழியை மறைத்தான் வீம்பு அதில் எரிச்சல் உற்றவள்,
“யோவ் கருவாயா நானும் அப்பால இருந்து பாக்கேன் உம்ம போக்கே சரியில்ல எம்ம தங்கிச்சியை வச்சு என்னை எடை போடாதீர் அப்புறம் வருத்தப்படுவீக நிக்குறதா பாரு அய்யனார் கணக்கா விலகுக” என்று பொரிய
நேற்று போல் இன்றும் தனது காதுகளை அழுத்தி தேய்த்துக் கொண்டவன் “மெதுவாப் பேசுடி பக்கத்துல தானே நிக்கிறேன் என்னமோ நூறு கிலோமீட்டர் தள்ளி இருக்குற மாதிரி இந்தக் கத்துக் கத்துற”
“என்னது டி….யா…. யோவ் நான் என்ன உம்ம பொஞ்சாதியா”
“பின்ன இல்லையா?” அவனும் அவளைப் போலவே சொல்ல
 “வம்பு பண்ணாதீக நான் இப்படித்தேன் எனக்கு மந்திரம் ஓதுற மாதிரி எல்லாம் பேச வராது விலகுங்க போகனும்”
“போகலாம் போகலாம்” என்று சொல்லியவன் தலை முதல் கால் வரை பொறுமையாகத் தனது கண்கள் கொண்டு அவளை  வருட  ‘கருவாயா பாக்குற பார்வையைப் பாரு இந்த லக்ஷ்மியம்மா எங்க போனாக திவி …….எல்லாம் அவளால வரட்டும் அவ கண்ணாலம் ஆன மறுநாளே அவுக வீட்டுப்பக்கம் சாஞ்சுட்டா வெசனம் புடுச்சவ’
அவனது பார்வையில் பொறுமை காற்றில் பறக்க “யோவ் எம்ம கையால அடி வாங்க போரய்யா நீ” முறைத்து நின்றவளிடம் நெருங்கியவன்  சற்று குனிந்து  அவனது கன்னத்தைக் காட்ட அவனது  தீடீர் செய்கையால் பயந்து நகர்ந்து கொண்டாள் நம் கள்ளி.
அவளது பயத்தைப் பார்த்து வாய்விட்டு சிரித்தவன் திரும்பி செல்ல  அப்போதுதான்  இழுத்து வைத்த மூச்சை வெளியில் விட்டாள்.
“ஆத்தி என்னால இங்கன முடியாது சாமி ………… ஆச்சி எல்லாம் உன்னால உம்ம பேத்தியால இரு வந்து உன்ன கவனிக்கிறேன்”  என்று புலம்பியவாரே வந்தவளை தடுத்து நிறுத்தியது யூஜீவனின் அத்தை குரல்,
“ஏய் பெண்ணே கொஞ்சம் நில்லு”அவரது குரலுக்குச் செவி சாய்த்தவள் திரும்பி பார்க்க அவள் அருகில் வந்தவர்
“நான் உன் தங்கச்சி மாமனாருக்கு அக்கா”
“ஓ!………….” என்று ஒரு புன்னகை புரிந்தவள் திரும்பி செல்ல பார்க்க விடுவாரா நமது கள்ளியை பற்றித் தெரியாமல் மேலும் வம்பு வளர்க்கும் பொருட்டு “நேத்தே கேட்கணும் நெனச்சேன் கல்யாணம் தான் சாதாரணமா பண்ணியாச்சு சீர் எதுவும் உன் தங்கச்சிக்கு கொடுக்கலையா?”
அவரது நாகரிகமற்ற பேச்சுக்கு அவரை ஏற இறங்க பார்த்தவள் “ஏன் எங்களைப் பார்த்த பஞ்சத்துல இருக்கப் பரதேசி கூட்டம் மாதிரியா இருக்கு?” என்று பதிலுக்கு கண்ணாம்பாவும் சீற
அவளை எகத்தாளமாகப் பார்த்தவர் “அம்மா அப்பா இல்லாத பொண்ணுங்கனு சொன்னாங்க  உன்னைய  பார்த்த ஒன்னும் சரிபடல என்றவர் அவளது தோற்றத்தை சுட்டி காட்டி உனக்கும் கல்யாணமும் ஆகல அதான் கேட்டேன் கஷ்ட படுற குடும்பமா இருந்தா எதுவும் செய்ய முடியாதுல”
கண்கள் சிவக்க அவர்களைப் பார்த்தவள் “நான் தங்கச்சிக்குச் செய்யுறது அவுக மாமா ஐத்தைக்கு  தெரிஞ்சா போதும் மத்தவங்களுக்குத் தெரியனும்னு அவசியம் இல்ல” என்று சொல்லியவள் நிற்காமல் நடந்து விட்டாள்.
“திமிற பாரு எப்படி பேசிட்டு போறா” என்று அங்குள்ள உறவினர் ஒருவரிடம் அந்தப் பெண்மணி சொல்ல அது காற்று வாக்கில் மிதந்து சற்று நேரத்துக்கு எல்லாம் அந்த வீடே பரவியது.
எங்கள் பெண்களை இந்த விஷயத்தில் யாராலும் ஈடு கொடுக்க முடியாது.எத்தனை புதிய டெக்னாலஜி கண்டு பிடித்தாலும் ஒரு செய்தியை அதி விரைவாகப் பிரித்து ஒன்பது செய்தியாகச் சொல்லும் திறமை எங்கள் பெண்கள் இனத்துக்கே உரியது இதில் எல்லாம் எங்களிடம் பிச்சை வாங்க வேண்டும்.
****
அந்த வீட்டில் கிட்டத்தட்ட அறுபது அறைகள் இருந்தன ஒவ்வொரு இடமும் பழமையை எடுத்துரைத்தது  அவர்களது குடும்பப் பாரம்பரியத்தைப் பறை சாற்றியது.திவ்வியாவிடம் தனிமையில் பேசுவதற்காக அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் கண்ணாம்பா அவளுக்குத் தங்கையிடம் சிலவற்றைப் பேச வேண்டிய அவசியம் உள்ளது.
இங்கு ஆட்கள் அதிகம் உள்ளதால் மனம் விட்டு பேச முடியவில்லை எனவே சற்று தள்ளி உள்ள தோட்டத்திற்கு சென்று பேசலாம் பேசலாம் என்று தங்கையை இழுத்து செல்ல,
அவர்கள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஒவ்வொரு அறையின் வாயிலும் மக்கள் நிரம்பி வழிய பலவிதமான கேள்விகள் அவர்களை தாக்க மூன்று முறை பொறுத்த கண்ணாம்பா அடுத்து ஒருவர் அழைக்க.
“ஏய்!…..ய்!……………இன்னும் எத்தனை சுங்கச்சாவடி டி தாண்டனும் ஒவ்வொரு இடமா வரி கட்டுற மாதிரில நின்னு நின்னு வர வேண்டியதா இருக்கு இதுல எம்புட்டு கேள்வி கேக்குதுங்க உமக்கு சீரா என்னையும் அந்தக் கிழவி கொடுத்துடுச்சா நான் என்ன இனாமா மறுவாதியா நான் ஊருக்கு போகனும் கொழுந்து கிட்ட சொல்லி டிக்கெட்டை போடா சொல்லு இல்ல பார்த்துக்கோ”
“அக்கா…….”என்று இழுத்தவளை
“அக்கா நொக்கான வாய்ய காட்டி குத்துவேன் வேரசா  நடடி…….எம்ம உசுர எடுக்க எங்க ஆத்தா உன்ன பெத்து போட்டுருக்கு”கண்கள் உடைப்பெடுக்க அவளை ஏறிட்டவள் அக்கா என்று அவளது கையைப் பற்ற அதுவரை இருந்த கோபம் சற்று மட்டு பட.
“இங்கன பாரு திவி குட்டி நான் இங்கன தங்குறது சரிவராது கொண்டான் கொடதான் வீட்டுல விருந்தும் மறந்தும் மூணு நாள்தேன் புரிஞ்சுக்கிடு திவி” என்று கண்ணாம்பா பக்குவமாக சொல்ல திவ்வியா ஆதரவாக அவள் தோள் சாய்ந்தாள் ஒரு கையால் அவள் தலையை வருடியவள் சில நொடிகள் சென்று தனது மறு புறம் தோள் மீது கனமாக எதுவோ அழுத்த திடுக்கிட்டு பார்த்தவள்.
.“ஐயோ!…….” என்று அலறினாள்.
கள்ளி வருவாள்…

Advertisement