Advertisement

சுற்றுபுறத்தை பார்த்தார் விமலா அந்த இடம் காடுபோன்று மரங்கள் அடர்ந்து இருந்தது.. ” இப்பவே பயமா இருக்கே.. இரவுல இங்க இருந்தால் பயந்தே உயிர் போயிடும் நம்ம உயிர் அவ்வளவு லேசாக போகக்கூடாது.. ஒரு நேரம் கால் குணமாகிடுச்சின்னா இவங்களை வச்சுசெய்யணும்..” என்று நினைத்தபடியே வாயைமூடிக்கொண்டார் விமலா..

கன்னியாகுமரியில் அவர்கள் வரவேண்டிய ஆசிரமம் வந்ததும் பெண் ஊழியர்களை வைத்து விமலாவை இறக்கிவிட்டு.. அட்மிஷன் போட்டுவிட்டு ஒரு தொகை பணத்தையும் கட்டிவிட்டு அங்கு முறைப்படி விமலாவை சேர்த்துவிட்டதும் அவரிடம் சொல்லிவிட்டு செல்வதற்கு வந்தான் சரவணன்..

அவனை பக்கத்தில் அழைத்து ” என் அண்ணனும் இப்ப உயிரோடு இல்லை… நானும் இந்த நிலையில் இங்க வந்துட்டேன்… இனி அந்த வீட்டுல அர்ச்சனா வச்சதுதான் சட்டம்.. நான் சொன்னேன்னு போய் சொல்லு.. கேட்க ஆள் இல்லைனு அதிகமாக ஆட வேண்டாமாம் கூடிய சீக்கிரம் நான் திரும்ப பழைய விமலாவா அங்க வருவேணாம் அப்படினு சொல்லு போ…” என்றாள் குரோதத்தோடு..

அவளை பார்த்து பல்லை கடித்த சரவணன் கண்ணால் அவளை பார்த்து

” இந்த நிலைமையிலையும் ரொம்ப அதிகமாக பேசுறீங்க.. பேச்சை குறைச்சிக்கோங்க ஓகே.. வைதேகி மாதிரி ஒரு தேவதையை பெத்து எனக்கு பொண்டாட்டியா வர குடுத்து இருக்குறீங்க.. நீங்க அவளை பெத்து ஒரே ஒரு நல்லது பண்ணி எங்க கல்யாணம் நடக்க காரணமாக ஆகிட்டிங்களேனும் பாரதிக்காவும் இத்தோட சும்மா விடுறேன்.. இல்லைனா என்ன நடக்குமோ.. சே நீங்களும் ஒரு பெண்.. எங்க அச்சுமாவும் ஒரு பெண் இத்தனை வருசம் அவங்க கையால வாங்கி திண்ணுருக்கீங்க அப்ப கூட அவங்களோட நல்ல குணத்துல ஒன்னு கூடவா வரல.. சே திருந்தாத ஜென்மங்களோட பேசி பயனில்லை…” என்று கோபத்தோடு கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் சரவணன்..

சரவணன் சென்றதும் ” அனாதை நாய்க்கு என் பொண்ணு கேட்குதா?.. ஐயோ என்னால இந்த கல்யாணத்தை தடுக்கமுடியலையே!.. ” என்று வக்கிரமாக நினைத்தாள் விமலா..

விமலாவின் விசயத்தை வைதேகிடம் சொன்னான் பாரதி.. அதற்கு அவளோ

” அச்சுமாக்கு பண்ணின கொடுமைக்கு ஆண்டவன் கொடுத்த தண்டனை அண்ணா இது… இப்படியாவது திருந்தினா சந்தோசப்படுவேன்..” என்றாள் வைதேகி..

அவர்கள் பேசியதை கேட்டபடி வந்த சரவணன் ” அதுக்கு கொஞ்சமும் வாய்ப்பேயில்லடா மச்சான்..” என்று விமலா அங்கு பேசியது அனைத்தையும் கூறினான்..

” பார்த்தீங்களா எங்க அம்மா திருந்தாத ஜென்மம்.. இது அச்சுமாக்கு தெரியவேணாம்.. தெரிந்தால் அவங்களுக்கு இளகிய மனம்.. கணவன்தான் இல்லை நாத்தனார் இப்படி கஷ்டப்படுறாங்களே போய் அழைச்சிட்டு வாங்க. நானே பார்த்துக்கிறேன். அப்படினு சொன்னாலும் சொல்லுவாங்க… இந்த தொல்லையே இனி இந்த வீட்டுல வேணாம்.. இனியாவது இந்த வீடு சந்தோசத்தில் நிரம்பட்டும்.. பாவம் அதிகாரம் எல்லாம் தொலையட்டும்.. அன்பு பாசம் காதல் மட்டும் தொடரட்டும்.. ” என்றாள் வைதேகி…

செல்வியும் வைதேகியும் நெருங்கிய தோழிகளாகிவிட்டார்கள்.. வைதேகி அவர்களின் வாழ்வை பற்றி தினமும் கதை கதையாக சொல்வாள் செல்வியிடம்.. ஆனால் அவளைபற்றி வைதேகியிடம் சொல்வதற்கு வாய்வரவில்லை செல்விக்கு.. வைதேகியும் கேட்டு தொல்லை படுத்தவில்லை…

இவ்வாறு நாட்கள் ஓடியது.. இனி தாயை அவன் மதித்து மறைக்காமல் உண்மையை சொல்லவேண்டும் என்று நினைத்து செல்வி பற்றிய உண்மையை சொன்னான்.. மகன் தவறு செய்யமாட்டான்.. ஒரு பெண்ணை தவறாக பார்க்கவோ தொடவோ மாட்டான்.. என்ற நம்பிக்கை இஞ்ச் பிசகாமல் நான் அர்ச்சனாவின் வளர்ப்பு என தாயிடம் நிரூபித்து தாயின் நம்பிக்கையை காப்பாற்றி மனதை குளிர்வித்தான் பாரதிகிருஷ்ணா…

அதன்பின் ஒருமாதம் வீட்டில் நன்றாக ஓய்வில் இருந்துவிட்டு தற்போது இருக்கும் வீட்டை விட்டு அனைத்துக்கும் பக்கமாக ஒரு நல்ல வீடு பார்க்கும் படி சரவணனிடம் கூறினான்…

அவனும் ஐந்து நாளில் அவன் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் பாரதி எதிர்பார்த்தது போன்று வீட்டை காட்டினான்.. அந்த வீடு வசதியாகவும் அவனால் வாங்கும் அளவிற்கும் இருந்தது.. வீடு பிடித்திருந்தது… அர்ச்சனாவிடம் கூறினான்.. அவரும் சந்தோசமாக சம்மதித்தார்..

ராதாவின் ஒருமாத காரியம் முடித்தபின்.. அவர்களின் திருமணத்தின் அவசியத்தை அர்ச்சனாவிடம் கூறி நாள் பார்க்க சொன்னான்..

அனைத்திற்கும் பொருத்தமான நல்ல முகூர்த்த நாள் அமைந்தது..

திருமண நாளிற்கு இடையில் திருமணம் முடித்து புதிய வீட்டிற்கு போவது போன்று பணம் கொடுத்து பத்திர பதிவை அர்ச்சனா செல்வி இருவரின் பெயரிலும் அந்த வீட்டை பதிவு பண்ணினான்.. சரவணன் பாரதி இருவரும் புது வீட்டை செட்பண்ணி திருமணம் முடித்து வந்தால் வாழகூடிய வகையில் அனைத்தையும் ரெடி பண்ணிவைத்தார்கள்..

இதோ இன்று நல்ல நாளில் நல்ல நேரத்தில் எளிமையாக நல்ல உள்ளம் கொண்டவர்களின் ஆசியுடன் இனிதாக பாரதி செல்வியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு வாழும் காலம் வரை அவள் தனக்கு மட்டும் சொந்தமானவளாக ஆக்கிக்கொண்டான்.. பாரதிகிருஷ்ணா

டி சி பி..

அவர்கள் எதிர்பார்த்த படியே திருமணம் முடித்து நேராக புதுவீட்டிற்கு சென்றார்கள்..தம்பதி சகிதமாக பூஜை அறையில் விளக்கேற்றி.. ஓமம் வளர்த்து கிரகபிரவேசம் செய்து பால் காய்ச்சி.. மகிழ்ந்தார்கள்..

நான்கு படுக்கை அறை பெரியஹால் முற்றம் பூஜையறை.. சப்பாட்டு அறையுடன் கூடிய சமயலறை.. வரவேற்பு அறை என அனைத்தும் கொண்ட அழகிய வீடு அது.. அதே போன்று தற்போது வீடு கட்டுவது என்றால் பாரதி கொடுத்தது போன்று இரண்டுமடங்கு பணம் வேண்டும்..

ஆனால் வீட்டின் ஓனர் மகனுடன் அமெரிக்கா செல்வதால் வந்த விலைக்கு விற்றுவிட்டார்.. பாரதி கூட நினைக்கவில்லை இவ்வளவு குறைவான பணத்தில் இவ்வளவு வசதியுடன் கூடிய வீடு கிடைக்கும் என்று.. வீட்டை பார்த்ததும் அனைவரும் மகிழ்ந்து போனார்கள்…

பூஜையும் முடிந்ததும்.. எளிமையாக வீட்டில் சமைத்தார்கள்… மதிய உணவை உண்டுவிட்டு அர்ச்சனா செல்வியை அவர்களின் அறையில் ரெஸ்ட் எடுக்கும் படி அனுப்பிவைத்தார்..

திருமணம் நடந்தபின் செல்வி பாரதியை திரும்பியும் பார்க்கவில்லை… அது அவனுக்கு வலித்தாலும் இனி அவளை சரிகட்டுவது அவனது பொறுப்பு என நினைத்து மனதை தேற்றிக்கொண்டான் பாரதி…

அன்று மாலையில் உள்ள நல்ல நேரத்தில் அருகில் இருக்கும் சுமங்கலிகளை அழைத்து எளிமையாக வளையல் பூட்டி வளைகாப்பும் நடத்தினார்கள்…

எங்கு மகளின் வாழ்வு இவ்வாறே முடிந்துவிடுமோ என நினைத்த யசோதா மகளின் நிறைவான வாழ்வை பார்த்து ஆனந்தகண்ணீர் வடித்தார்..

செல்வியும் மனதில் மகிழ்ந்தாள் எனத்தான் சொல்லவேண்டும்.. அதை வெளியே காட்டிக்கொள்ளவில்லை..

சம்பிரதாயத்திற்கு அன்று இரவு சரவணன் தங்கும் இடத்திற்கு யசோதாவை வைதேகியையும் செல்வியை அழைத்து செல்லும்படி அனுப்பிவைத்தார் அர்ச்சனா…

இதோ நீண்ட வருடத்தின் பின் நண்பர்கள் இருவரும் ஒரே அறையில் பழைய விசயங்களை பேசி மகிழ்ந்தார்கள்..

திருமணம் என்று கூறி மேலும் பத்து நாள் விடுப்பு எடுத்திருந்தான் பாரதி.. அதற்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தது மீண்டும் வேலைக்கு செல்வதற்கு…

” டேய் மச்சான் ஊர் உலகத்துல என்னை மாதிரி யாரும் கல்யாணம் பண்ணி இருக்கமாட்டாங்க டா சரண்.. வித்தியாசமான பெண்பார்க்கும் படலம்.. வித்தியாசமான கல்யாணம்.. அன்னைக்கே பொண்டாட்டியோட வளைகாப்பு.. அது முடிச்சி அவளை அனுப்பிவச்சிட்டு முதலிரவு அன்னைக்கு உன்கூட இருந்து மொக்கை போடுறேன் பாரு டா சரண்.. இந்த கொடுமை வேற எந்த ஆம்பிளைக்கும் வரவே கூடாது… மீ பாவம் அவ் அவ்..” என்றான் வடிவேல் பானியில்..

சரவணன் மனம்விட்டு சிரித்தான் பாரதியை பார்த்து. அதற்கு ” டேய் மச்சான் சிரிக்காத நீயும் இந்த கஷ்டத்தை அனுபவிப்ப அப்போ தெரியும் என்னோட பீலிங்..” என்றான் பாரதி..

அதை தூசி போன்று தட்டிவிட்டு இருவரும் பேசியபடியே உறங்கிவிட்டார்கள்..

துக்கம் நடந்தவீட்டில் நல்லது நடக்கவேண்டும் என்பார்கள்.. அது நடந்துவிட்டது.. ஆனால் பாரதி இதுவரை சந்தித்த துக்கத்தை விட பெரிய சோதனை வரக்காத்திருந்தது…

பெங்களூரில்..

எஸ் கே பில்டர்ஸ் & பிரமோட்டர்ஸ்..

எஸ் கே எக்ஸ்போர்ட்..

எஸ் கே கார்டன் சில்க் மில்ஸ்..

எஸ் கே ஜூவல்லரி சாப்..

எஸ் கே சூப்பர் மார்க்கெட்….

என எஸ் கே என்பவர் தொழிலில் நீங்கத தடம்பதித்தார்… வெற்றி மட்டுமே அவரது சொத்தாய் போனது.. நேர்மை கடுமையான உழைப்பால் வந்த முன்னேற்றம்.. அதன் பலன் அபரிதமானது..

தற்போது எஸ் கே எக்ஸ்போர்டில் எம் டி அறையின் முன் கதவை தட்டியபடி நின்றான் அவனின் பி ஏ மாலிக்..

” எஸ் கம் இன்..” என்றான் எம் டி..

உள்ளே வந்த மாலிக்.. ” சார் உங்களோட நீண்ட நாள் கனவு பலித்துவிட்டது.. சென்னையில் நாம தொழில் தொடங்குவதற்கு எல்லாமே ரெடி.. ஷிட்டியிலயே ஒரு பெரிய இடம் கிடைச்சிட்டு..” என்றான் மாலிக்…

” இது இதைத்தான் ரொம்ப எதிர் பார்த்தேன் மாலிக்.. நல்ல நீயூஸ் சொல்லியிருக்க.. குட். எனக்கு அப்படி ஒரு ஹாப்பினஸாக இருக்கு மாலிக்.. இந்த சந்தோசமான விசயத்தை உடனே டாடிகிட்ட சொல்லணும்… இன்னைக்கு சென்னையில் என்ன ஃபேமஸ் நீயூஸ்.. ” என்றான் எஸ் கே..

” சென்னைக்கு போகும் காலம் வந்துவிட்டது..” என்றான் எஸ் கே..

 தமிழ் நீயூஸ் பேப்பரை எடுத்து ” கமிஸ்னர் வெத்து.. டி சி பி பாரதிகிருஷ்ணா தான் கெத்து.. நீண்ட நாள் இழுபட்ட கேஸை கண்டுபிடித்துவிட்டார் சென்னைக்கு டியூட்டியில் சேர்ந்த அன்றே.. அந்த சாதனைக்கு போலீஸ் டீம் இணைந்து பாராட்டுவிழா நடத்துவதாக.. போட்டு இருக்கு சார்.. இதுதான் இன்றைய ஹெட்நீயூஸ்..” என்றான் மாலிக்..

” அப்போ ஏன் இன்னும் லேட் பண்ணணும்… நாளைக்கு நமக்கு சென்னையிலதான் நாளே ஆரம்பிக்கணும்.. நம்மளும் கலந்து சிறப்பிக்கிறோம்.. டி சி பி யோட பாராட்டுவிழாவில்… டிக்கெட் புக் பண்ணு மேன். மச மச னு நிக்காம சீக்கிரம் ரெடியாகு.. வேலை முடியுற வரை நாம சென்னையில் தான் இருக்கணும்.. இங்க எல்லாத்தையும் டாடி பார்த்துப்பார்.. ஓகே கோ.. நான் வீட்டுக்கு போய் இந்த குட் நீயூஸை டாட்கிட்ட சொல்லிட்டு ரெடியாகுறேன்.. நான் சென்னை போகணும் னு சொல்லி மார்னிங் டிக்கெட் புக் பண்ணு.. யாராவது டிக்கெட் இல்லைனு சொன்னால் எஸ் கே சொன்னார்னு சொல்லு… நாளைக்கே சென்னை போறோம்.. புது டி சி பி-க்கு பெரிய வாழ்த்து சொல்லுறோம்.. ஓகே டண்.. பாய் குட் நைட் மாலிக்..” என்று கூறி ஆபீஸில் இருந்து அவனின் வீட்டிற்கு புறப்பட்டான் எஸ் கே..

எஸ் கே சொன்னது போன்றே அடுத்தநாள் விடியல் சென்னையில் தான் ஆரம்பித்தது அவர்கள் இருவருக்கும் ..

வீணை இசைக்கும்…

Advertisement