Advertisement

ஓம் நமச்சிவாய..

வீணை 05.

அழகாக விடிந்தது பாரதிக்கு.. இன்று விசேசமான முகூர்த்த நாள்.. காலையில் இருக்கும் நல்ல நேரத்தில் எளிமையாக கோவில் செந்தாமரைச்செல்வி பாரதிகிருஷ்ணா இருவருக்கும் திருமணம்.. நடைபெற இன்னும் இரண்டு மணி நேரமே இருந்தது..

அன்றே மாலை நேரத்தில் உள்ள நல்ல நேரத்தில் செல்விக்கு ஏழாவது மாதத்தில் வளைகாப்பு நடத்துவதற்க்கான அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்றது..

இன்றில் இருந்து ஒரு மாதத்திற்கு முன்.

ராதாகிருஷ்ணன் மூர்த்தியின் துப்பாக்கியை எடுத்து அவரே சுட்டு தற்கொலை பண்ணியதும்.. அந்த இடமே ஆடிப்போய்விட்டது.. இதற்கு பல கண்கள் சாட்சியாகியது.. கோர்ட்டில் இருந்த அனைவரும் அங்கு கூடிவிட்டார்கள்.. நீதிபதி உடனடியாக ஜீ எச் எடுத்து செல்லும்படி கூறிவிட்டு அங்கு போலீசார் இருவரை காவலுக்கு வைத்துவிட்டு நீதி மன்றத்தை கலைத்தார்..

ஆம்புலன்ஸில் ராதாவை ஏற்றிச்சென்றதும்.. ஏனைய குற்றவாளிகளை வேறு இன்ஸ்பெக்டரை அழைத்து செல்லும் படி கூறிவிட்டு.. சட்டத்தை பாதுகாக்க கொடுக்கப்பட்ட துப்பாக்கியை ஒருவர் அவரிடமிருந்து எடுத்ததை கூட கவனிக்காமல் அசாதாரணமாக இருந்து ஒருவரின் தற்கொலை கண்முன் நடந்ததை கூட தடுக்காமல் இருந்ததால் மூர்த்தியை மூன்றுமாதம் சஸ்பென்ஸ் செய்து அனுப்பி விட்டு..

மாபெரும் கேஸ் வருடக்கணக்காக தடையின்றி இழுத்த கேஸை பதவிக்கு வந்த அன்றே அதை கண்டுபிடித்து குற்றவாளிகளை கைதுபண்ணி இந்தளவிற்கு சட்டத்திற்கு உண்மையாக இருந்த பாரதிகிருஷ்ணா டி சி பி யை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.. அவரின் தந்தை குற்றவாளி என தெரிந்ததும். அவரை டி சி பி கைது பண்ணியது அதன் பின் இன்று கண்முன் தந்தை தற்கொலை பண்ணியது.. இது அனைத்தும் பாரதிகிருஷ்ணாவை மனதளவில் பாதித்து இருக்கும்.. அதனால் அவருக்கு ஒருமாத விடுப்பு கொடுத்து மீண்டும் பதவிக்கு வந்ததும் பாரதிகிருஷ்ணா விரும்பினால் பாராட்டுவிழா வைக்கவும்.. இத்துடன் இந்த கோர்ட் கலைகிறது.. என்று கூறி நீதிபதி சென்றுவிட்டார்..

ஆம்புலன்ஸை தொடர்ந்து சரவணன் பாரதி இருவரும் சென்றார்கள்.. சரவணன் செல்லும்போதே யசோதாவிற்கு அழைத்து சுருக்கமாக விசயத்தை கூறி வெளியே வரும்படி கூறினான்..

அவருக்கோ தலையே வெடித்துவிடும்படி இருந்தது.. ” என்னடா இது தொடர்ந்து இப்படி துன்பம் சுத்தி சுத்தி அடிக்குதே.. சம்மந்தியம்மா வேற நோயால் பாதிக்கபட்டு இருக்கிறாங்க.. இதை கேட்டா என்ன ஆகுமோ!.. ” என்று பரிதவித்தார்..

சற்று நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்தது. அதன்பின் சரவணன் பாரதி இருவரும் வந்தார்கள்.. பாரதி திடமாக ” அத்தை அம்மாக்கு தெரியுமா?..” என்றான்..

” இல்லை மாப்பிள்ளை நான் எதுவும் சொல்லவில்லை.. ” என்றார் யசோதா..

சரவணன் ராதாவின் பாடியின் பின் செல்ல.. பாரதி தாயை பார்க்கச்சென்றான்..

அறைக்குள் சென்றுவிட்டான்.. அர்ச்சனா கண்மூடி சாய்ந்து படுத்திருந்தார்.. அதை பார்த்ததும் தாயின் நிலையை அவனால் கணிக்கமுடியவில்லை..

தாயின் அருகே சென்று ” அச்சுமா..” என்று அழைத்தான்..

இன்று கணவன் சிறைக்கு சென்றுவிடுவார்.. அது அவரை பாதித்தால் கட்டாயம் மகனையும் பாதிக்கும்.. அதற்கு அவர் இடம் கொடுக்கப்போவதில்லை.. என நினைத்துக்கொண்டு அவரை பார்க்க வந்தவர்களிடம் சில வார்த்தைகள் பேசிவிட்டு கண்மூடிக்கொண்டார் அர்ச்சனா..

செல்வி எதுவும் பேசாமல் அவரையே பார்த்திருந்தாள்.. வைதேகி அர்ச்சனாவின் அருகில் அமர்ந்திருந்தாள்..

மகன் அழைத்ததும் கண்திறந்தார்.

” வா கண்ணா.. கோர்ட்ல வேலை எல்லாம் முடிஞ்சதா?..” என்றார்..

” அம்மா ஒரு பெரிய தவறு நடந்துடுச்சிம்மா..” என்றுவிட்டு திரும்பி செல்வியை பார்த்துவிட்டு. வைதேகியிடம் ” நீ தாமரையை வெளிய அழைச்சிட்டு போ வைதேகி. நான் அம்மாகிட்ட கொஞ்சம் பேசணும்..” என்றான்..

அதை கேட்டு அவளும் செல்வியிடம் வந்தாள்.. ” ஆமா நாங்க மூணாவது மனுசன் தானே.. அதுதான் நம்மை அனுப்பிட்டு தாயோட ரகசியம் பேசப்போறானாக்கும் கருவாப்பய.. என்னவும் பண்ணட்டும். நமக்கு என்ன வந்தது?.. இதுக்குதான் நான் வரல நீ போய்ட்டுவாம்மான்னு சொன்னேன்.. இந்த அம்மாதான் கேட்காமல் வம்படியா என்னை இழுத்துட்டுவந்துடுச்சி..” என்று பாரதியை பார்த்து மனதில் புலம்பினாள் செல்வி..

எழுந்து இருவரும் சென்றுவிட்டார்கள்..

அதன் பின் தாயின் அருகில் அமர்ந்து அவரின் கையை பிடித்து..” அம்மா நான் சொல்லுறதை பதட்டப்படாம கேட்கணும்.. எனக்கு நீங்க கட்டாயம் வேணும்.. கேஸ் முடிந்து வெளியவந்ததும்.. அவர் மூர்த்தியோட துப்பாக்கியை எடுத்து அவரால் குடி சூது எதுவும் இல்லாமல் சிறையில் வாழமுடியாதுனு துப்பாக்கியால சுட்டுகிட்டார்ம்மா..” என்று கூறியபடி தாயின் முகத்தில் இருந்து கண் எடுக்காமல் அவரையே பார்த்திருந்தான்..

அதை பார்த்ததும் நன்றாக எழுந்து அமர்ந்து.. ” அதுக்கு நீ ஏன் கண்ணா கலங்கி போய் இருக்கிற?.. அந்த ஆள் கோழை. அதுதான் இனி எப்படி எல்லாத்தையும் எதிர்கொள்ளுறதுனு தெரியாம தைரியம் இல்லாமல் தற்கொலை பண்ணிகிட்டார்.. இதுதான் அவரோட முடிவுகாலம் போல.. நீ ஆம்பிளை அதுவும் வீரமான விவேகமான ஆம்பிளை.. அப்படிபட்ட நீ அந்த கோழையை நினைத்து கவலை படக்கூடாது கண்ணா.. பாரு இது அம்மாக்கு அதிர்ச்சி இல்லை.. நல்லா அன்னியோன்னியமா காதலோட அன்பா வாழ்ந்தா எனக்கு அதிர்ச்சி மயக்கம் எல்லாம் வந்திருக்குமோ!?.. என்னவோ?.. அதுதான் அப்படி எதுவும் இல்லையே.. எங்களுக்குள்ள.. இந்த கேஸ்ல சிறைக்கு போயிருந்தால் எத்தனைவருட தண்டனை கிடைச்சிருக்கும்.. அந்த ஆள் குற்றவாளியா சிறைக்கு போயிட்டார்னு நினைச்சிக்கிறேன்.. எனக்கு ரெண்டு ஒன்னுதான் கண்ணா.. அம்மாக்கு ஒண்ணும் இல்லை நீ என்னை பற்றி கவலை படாம அடுத்து ஆகவேண்டியதை பாரு. போ போய் என்னை வீட்டுக்கு அழைச்சிட்டு போக ஏற்பாடு பண்ணு..” என்றார் அர்ச்சனா..

சற்று நேரம் தாயை ஊன்றி கவனித்தான்.. அப்போதும் அவனால் அவரின் முகத்தில் எந்தவிதன உணர்வையும் காணமுடியவில்லை.. அதன்பின் தாய் சொன்னதை செய்வதற்கு வெளியே சென்றான் பாரதி..

வந்தவன் அங்கிருந்த செல்வியை பார்த்துவிட்டு. வைதேகியை அழைத்து

சுருக்கமாக விபரம் கூறி தாமரையை வீட்டிற்கு அழைத்து போகும் படியும் போகும்போது மெதுவாக அவளை பாதிக்காதபடி விபரத்தை சொல்லவும். என கூறி அனுப்பிவைத்துவிட்டு. அவன் டாக்டரிடம் சென்றான்..

அதன் பின் அனைத்தும் துரிதமாக நடந்தது.. அன்றே போஸ்ட் மார்டம் செய்து பாடியை கொடுத்தார்கள்..

அர்ச்சனாவை மருத்துவமனையில் இருந்து யசோதாவுடன் வீட்டிற்கு அனுப்பிவைத்தான்..

சரவணனும் பாரதியும் ராதாவின் பாடியுடன் வீட்டிற்கு சென்றார்கள்..

 பாரதியின் மேல் அதிகாரி.. அவனின் கீழ் வேலை பார்க்கும் இன்ஸ்பெக்டர்ஸ். கான்ஸ்டபில்ஸ். ஏட்டு. அனைவரும் நின்றார்கள்..

ஆளுக்கு ஒரு வேலையாக செய்து அன்றே ராதாவின் இறுதி காரியத்தை முடித்தார்கள்..

அதன்பின் நீதிபதியின் உத்தரவு படி கமீஸ்னர் பாரதிக்கு ஒருமாத விடுப்பு கொடுத்தார்.. அது அவனுக்கு மிகவும் தேவைபட்டது..

யசோதாவிடம் ” அத்தை கொஞ்ச நாளைக்கு நீங்களும் தாமரையும் இங்கயே இருந்திடுங்களேன்.. அம்மாக்கும் ஆறுதலாக இருக்கும்..” என்றான்..

அவனே தாமரையிடம் சென்று ” நீயும் அத்தையும் இங்கையே இருங்க. அப்பாவோட ஒருமாத காரியம் முடியட்டும்.. நாள் பார்த்து நாம கல்யாணம் பண்ணிக்கலாம்.. இன்னும் கல்யாணத்தை தள்ளிவைக்கமுடியாது.. பங்குனி மாதம் வந்தால் முகூர்த்த நாளும் இருக்காது.. குழந்தையும் பிறந்திடும்.. அதுக்கு முன்ன நம்முடைய கல்யாணம் நடந்திருக்கணும்.. இது யாருக்காகவும் தடைபடக்கூடாது.. என்ன சொன்னது புரிஞ்சதா?.. இவ்வளவு முக்கியமான விசயம் சொல்லுறேன் எந்த பதிலும் சொல்லாம நின்றால் என்ன அர்த்தம்..” என்றான்..

அவன் சொன்னதை கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்து ” இவன் மனுசனா? இல்லையா?. பெத்த அப்பா செத்து இன்னும் எட்டாவது நாள் காரியமும் முடியவில்லை.. அதுக்குள்ள கல்யாணம் பண்ண கேட்கிறானே!..” என்று நினைத்து வாயில் கைவைத்தாள் செல்வி..

அவளுடைய பாவனையை பார்த்து

” நீ என்ன நினைக்கிறனு நல்லாவே புரியுது.. இவன் மனுசனா? இல்லை மிருகமானுதானே!.. அதை நீ என்கூட வாழ்ந்து பார்த்து தெரிஞ்சிக்கோடி.. அவர் என்ன வீரமரணமா அடைந்தார்.. துன்பபடுறதுக்கு.. கோழை மாதிரி தற்கொலை பண்ணிகிட்டார்.. அதுக்காக கவலை பட்டு நம்மலும் சாப்பிடாம தூங்காம வேலை பண்ணாம குளிக்காம இருக்கமுடியுமா?.. இல்லையே. அப்போ இதெல்லாம் பண்ணினா தப்பில்லை அப்படினா. நான் ஒரு அவசியத்துக்காக கல்யாணம் பண்ணுறதும் தப்பில்லை.. எனக்கு என் அம்மா அவங்களோட சந்தோசம் ரொம்ப முக்கியம்.. அடுத்து அவளுக்கு சமமா நான் மதிக்கிறது நீ தான்.. சரியா?.. போ போய் இப்பவே மாமியாரோட பேசி பழகு.. அப்புறம் உங்க சண்டைக்கு நான் தீர்ப்பு சொல்ல வரமாட்டேன்..” என்றான்.

அவன் பேசியதை கேட்டவள். ” உங்ககிட்ட நான் ஒன்னு கேட்கவா?.. ” என்றாள் செல்வி..

அதை கேட்டவன் ” எஸ் தாராளமாக கேளு நீ என் மனைவியாக வரப்போற பேச எல்லாம் அனுமதி கேட்கணுமா என்ன?.. என்னனு சொல்லு?..” என்றான் அவளை பார்த்து..

” என்னை எப்படி உங்களுக்கு தெரியும்?.. நீங்க ஏன் குழந்தை குழந்தைனு அடிக்கடி சொல்லுறீங்க?.. முதல் நீங்க ஏன் என்னை கல்யாணம் பண்ணனும்?.. எனக்கும் குழந்தைக்கும். உங்களுக்கும். என்ன சம்மந்தம்?.. அன்னைக்கு நீங்க பொண்ணுபார்க்கறேன் அப்படினு வந்து கலாட்டா பண்ணிட்டு போனதுல இருந்து இப்படி ஆயிரம் கேள்வி ஓடுது என் மண்டைக்குள்ள.. தெரியலைன்னா தலையே வெடிச்சிடும்.. இது தெரிஞ்சாதான் எனக்கு உங்களோட இந்த கல்யாணம் பண்ணிக்கிறது அவசியமானு தெரியும்.. அவசியம் வந்ததுக்கு அப்புறம் நான் முடிவுபண்ணிக்கிறேன்.. கல்யாணம் பண்ணுறதை பத்தி சரியா?.. நீங்க வேணும்னா பெரிய போலீஸ் ஆபீசரா இருங்க.. அதுக்காக எனக்கு பிடிக்காத ஒன்னை திணிக்காதீங்க மிஸ்டர் டி சி பி சார்…” என்றாள் நிமிர்வாக..

இவ்வளவு நேரமும் அவள் பேசியதையும் பேசும் போது முகத்தில் வந்து போன பாவனைகளையும் விழி எடுக்காமல் கூச்சமே இல்லாமல் பார்த்து ரசித்துவிட்டு அவளிடம்

” பேசி முடிச்சிட்டியா டி.?.. இல்லை இன்னும் ஏதாவது மிச்சம் இருக்கா?.. நான் என்னவோ நீ ரொம்ப பயந்த புள்ளபூச்சி.. போலீஸ்காரன் பொண்டாட்டி தைரியமா நிமிர்ந்து நிற்கணும்.. எதுக்கும் பயப்படக்கூடாது. இவ என்ன பயந்தாங்கோலி. தொடை நடுங்கியா இருக்கிறாளே.. நாமதான் கல்யாணத்து பிறகு தைரியத்தை சொல்லி தட்டிக்கொடுக்கணும்… அப்படினு நினைத்தேன்.. நீ என்னடான்னா எண்ணெய்யில போட்ட கடுகு மாதிரி வெடிக்கிறியே டி கொடமிளகாய்.. இதுதான் உனக்கு சரியான பேர்.. உனக்கு இந்த கேள்வி வருவதில் தப்பேதும் இல்லை… உனக்கு சொல்ல கூடாதுனும் இல்லை நேரம் வரும்போது நானே எல்லாத்தையும் சொல்லுவேன்.. இது உனக்கு இப்ப தெரியவேணாம்.. என் அம்மாக்கு சமமா உன்னை நினைக்கிறேன்னு சொன்னதா எனக்கு நியாபகம்.. அதை மறந்திடாத.. நான் யாருக்கும் கெடுதல் பண்ணலை இதுவரை… குறிப்பா சொல்லணும்னா உனக்கு பண்ண நினைக்கவும் மாட்டேன் சாகும்வரை.. கண்டதையும் மனசுல போட்டு குழப்பாம மனசளவில சந்தோசமா இரு.. கல்யாணம் பண்ணும் வரை நான் உன் பக்கத்துல வந்தா அது தப்பு.. கொஞ்சம் பொறுத்துக்கோ. கல்யாணம் முடிஞ்சதும். உனக்கு செய்யவேண்டியதை பார்த்து பார்த்து பண்ணுவேன்… அதுவரை உன்னை கவனிக்க வேண்டியது அத்தையோட பொறுப்பு.. அச்சுமா. அத்தை வைதேகி. எல்லாரும் இருக்கிறாங்க. இனி இது உன்வீடு தயக்கம் இல்லாமல் ஃப்ரியா சந்தோசமா இருடி கொடமிளகாய்..” என்று கூறி அவளது தலையை தடவி விட்டு சென்றான் பாரதி..

 இவர்கள் பேசியதை மகளை காணோம் என நினைத்து தேடிவந்த யசோதா கேட்டுவிட்டார்..

அன்று இரவு செல்விக்கு பழைய புரணாமே பாட்டாக விழுந்தது.. மீண்டும் அவளே அம்மாவுக்காக இந்த திருமணம் நடக்கவேண்டும் என செல்வியே நினைக்கும் அளவிற்கு பேசி பேசியே மகளின் மனதை கரைத்தார் யசோதா…

ராதாவின் எட்டாம் நாள் காரியம் நடந்தது…

அதன்பின் அதிக காலம் தாயை விட்டு பிரிந்து படிக்க சென்றிருந்தான் பாரதி.. அது அனைத்தையும் ஈடு செய்யும் படி இருந்தது வீட்டில் அவனின் செயற்பாடு..

அர்ச்சனா வைதேகிக்கு அவன் சமைப்பான் வீட்டு வேலைகள் செய்வான் எனத்தெரியும்.. ஆனால் செல்வி வாய்பிளந்து பார்த்து நின்றாள்..

யசோதாவையும் சமாளித்து அன்று அவன் சமைத்த உணவை சப்புக்கொட்டி உண்டாள்..

மொத்ததில் துக்கம் நடந்த வீடு போன்று சோகம் கவலை கண்ணீர் என்று இல்லாமல் அனைவரும் அதை கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார்கள்.. பாரதி அவர்களை அவ்வாறு மாற்றினான் என சொல்லவேண்டும்…

இடையில் இவ்வளவு நாள் கழித்து சரவணன் மூலம் தான் விமலாவின் நிலை பாரதிக்கு தெரியவந்தது..

அவன் கேஸ் விசயமாக டாக்டர் ஒருவரை பார்க்க ஜீ எச் சென்றிருந்தான் சரவணன்.. அங்கு தான் விமலாவை அவ்வாறு பார்த்தான்..

அதை உடனே பாரதிக்கு அழைத்து சொல்லியிருந்தான்..

பாரதி உடனடியாக ஜீ எச் சென்று டாக்டரிடம் பேசி விமலாவின் தற்போதைய நிலையை அறிந்துகொண்டு அவரை அங்கிருந்து அழைத்துவந்து சரவணனின் பொறுப்பில் கன்னியாகுமரியில் அவனுக்கு தெரிந்த ஒருவருடைய மாற்றுத்திறனாளிகளை பராமரிக்கும் ஆசரமத்தில் விசாரித்து அங்கே கொண்டு சேர்க்கும் படி கூறி சரவணனை அனுப்பிவைத்தான்…

விமலா அவனுடன் பேசுவதற்கு முயன்றார்.. ஆனால் பாரதி முகம் கொடுத்து பேசவில்லை.. போகும் வழியில் தான் சரவணன் ராதா வை பற்றி கூறினான்.. ” அண்ணாக்கு இப்படியா? நடக்கணும்.. என்னை தனிய விட்டுட்டு போயிட்டாரா மொத்தமா? விபரம் தெரிந்த நாள்ல இருந்து நாங்க பிரிஞ்சதே இல்லையே.. அண்ணே.. நான் பெத்த கழுதை கூட என்னை அனாதையா விட்டுட்டாலே” என்று கத்தியபடி வந்தார்..

வைதேகியை கழுதை என்றதும் சரவணன் கோபமாக திரும்பி

” இங்க பாருங்க வைதேகியை திட்டுற வேலை இனி வச்சிக்காதீங்க?.. நீங்க அன்பா பாசமா அவளை வளர்த்திருந்தா உங்களுக்கு இப்படி ஆனதும் விட்டுருப்பாளா என்ன?.. அவளுக்கு நீங்க இப்படி வீல்சேரில் இருக்கிறதே தெரியாது.. அவளுக்கு அச்சுமாதான் அம்மா நீங்க பெத்தால் அம்மா ஆகிடமுடியாது.. நானும் அவளும் பாரதி செல்வி கல்யாணம் முடிஞ்சதும் கல்யாணம் பண்ணிக்கப்போறோம்.. அப்புறம் காட்டுறேன் அவளுக்கு உண்மையான அன்பு பாசம் எல்லாம் எப்படி இருக்கும்னு… வாயே திறக்ககூடாது.. பேசினால் உங்களை இங்கேயே விட்டுட்டு சென்னை போய் பாரதிகிட்ட ஆசிரமத்துல சேர்த்துட்டேன்னு சொல்லிடுவேன்..” என்றான் மிரட்டலாக..

Advertisement