Advertisement

ஓம் நமச்சிவாய

 மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை

 அத்தியாயம் 6

 அடுத்த நாள் காலையில் முதல் வேலையாக அர்ச்சனா செல்வியை அவர்களது வீட்டிற்கு நல்ல நேரம் பார்த்து அழைத்து வருமாறு யசோதா விடம் கூறினார் …

 மகனின் மனதை புரிந்து கொண்ட தாயாக நடந்துகொண்டார்..

 தாயின் செயலை பார்த்த பாரதி அருகில் வந்து ” என் அச்சும்மா-ன்னா அச்சுமா தான் எப்பவுமே கிரேட்.. ” என்று தாயின் கன்னத்தை கிள்ளி கொஞ்சி விட்டு மனைவியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தான்…

 யசோதா-வும் அர்ச்சனா சொன்னது போன்று செல்வி மற்றும் வைதேகியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்..

 வைதேகி வைத்து செல்வியை ஆழம் சுற்றி உள்ளே அழைத்துச் சென்றார்கள்..

 நேற்று நடந்த அனைத்து வைபவத்திலும் கலந்து செல்வி மிகவும் சோர்வாக இருந்தாள்.. அதைப் பார்த்த அர்ச்சனா அவர்களது அறையில் ஓய்வு எடுக்கச் சொல்லி அனுப்பினார்…

 செல்வி அவர்களின் அறைக்கு சென்ற சற்று நேரதில் ஹாலில் இருந்த யாருடைய கவனத்தையும் கவராமல் பூனை நடையிட்டு மெதுவாக அவர்களின் அறைக்கு பாரதியும் சென்றான்….

” ஹாய் எப்படி கண்ணம்மா இருக்கிற?…. ” என்றான்.. கட்டிலில் அவளின் அருகில் அமர்ந்தபடி..

” என்ன இந்த கண்ணம்மா எல்லாம் புதுசா இருக்கு.. எனக்கு இப்படி எல்லாம் பிடிக்காது இனி இப்படி கூப்பிட வேண்டாம்.. ” என்றாள் செல்வி… அதைக்கேட்டதும் பாரதியின் முகம் அஷ்ட கோணல் ஆகியது..

 அத்தோடு போனால் அவன் பாரதி கிருஷ்ணா இல்லையே. ” ஏய் என்னடி இந்த பாரதிக்கு ஏற்ற கண்ணம்மா நீ தான் என்று கண்டுபிடித்து தான்.. கல்யாணம் கட்டி வம்படியாக உன்னை அழைச்சிட்டு வந்திருக்கேன்.. யார்கிட்ட இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் காட்டுற.. என்னை திரும்பி பாரு?.. சொல்லுறேன் இல்ல எனக்கு முகத்தை காட்டுடி… ” என்றான் பாரதி.. அவனை கண்டதும் முகத்தை மறுபக்கம் திருப்பி வைத்திருந்தாள் செல்வி..

 அவன் சொல்லியும் அவனை பார்க்க விரும்பாமல் மீண்டும் அவ்வாறே இருந்தாள் செல்வி…

 பாரதிதான் அவளின் முகத்தை தொட்டு திருப்பி பார்த்தான் கண்ணில் கண்ணீர் வழிந்தபடி இருந்தது அதை பார்த்ததும் பதறி விட்டான்.. ” ஏன் இப்போ அழுற?.. என்ன நடந்துச்சுன்னு சொன்னாதானே தெரியும் அன்னைக்கே சொல்லி இருக்கிறேன் எனக்கு பொண்ணுங்க அழுகிறது பிடிக்காதுன்னு இனிமே நீ என்னோட பொண்டாட்டி உன் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வரக்கூடாது அது என்னை பலவீனப்படுத்தும் என்ன சொல்றது புரிஞ்சுதா?.. ” என்று கேட்டபடி அவள் கண்ணிரை துடைத்தான்..

” ஏன் இப்படி பண்ணுனீங்க?.. நான் எப்படி ஒரு சூழ்நிலையில் இருக்கிறேன்னு உங்களுக்கு தெரியுமா?.. எங்க அம்மா பாவம் அவங்களுக்கு இதுக்கு மேல கஷ்டம் கொடுக்கக் கூடாது என்று தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்… ஒருவேளை உங்க மேல எனக்கு காதல் வர வாய்ப்பு இருந்தா கட்டாயம் காதல் வரும்… அதுவரை நீங்க எனக்காக காத்திருக்க முடிஞ்சா காத்திருங்க.. என்னை தொல்லை பண்ணாதீங்க… நான் எங்க அப்பாவை பார்த்ததே இல்ல… எனக்கு எல்லாமே அம்மா தான்.. அவங்க மனசு என்னால இனிமே கஷ்டப்படக்கூடாதுனு தான் நான் அவங்க சொல்ற எல்லாத்துக்கும் சம்மதிச்சேன் ப்ளீஸ் என்னை நீங்க தான் புரிந்து கொள்ளணும்..” என்றாள் செல்வி பாரதியின் முகத்தை பார்த்து..

 அதைக்கேட்ட பாரதி ” நீ சொல்றதும் சரிதான் நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டேன்… நீ இப்ப இருக்கிற சூழ்நிலைக்கு உனக்கு மன அமைதி ரொம்ப முக்கியம்.. எதையும் நினைத்து மனசை போட்டு குழப்பிக்காத.. சந்தோசமா இரு… நீ சொன்ன அந்த காதல் வரும் வரைக்கும் நான் காத்திருப்பேனான்னு எனக்கு தெரியாது… ஆனால் கூடிய சீக்கிரம் உனக்குள்ள மாற்றத்தை வரவைக்க முடியும்.. அதுவரை நீ உன் வீட்ல எப்படி இருந்தியோ அதே மாதிரி இங்கேயும் இருக்கலாம்.. ” என்று கூறி அங்கிருந்து எழுந்து வெளியே வந்துவிட்டான் பாரதி…

 மகனின் வாடிய முகத்தை பார்த்த அர்ச்சனா சீக்கிரமாக மகனின் வாழ்க்கை செழிக்க வேண்டும் என இறைவனிடம் வேண்டிக்கொண்டார்…

 அடுத்த நாளிலிருந்து பாரதி மீண்டும் வேலைக்கு செல்ல வேண்டும்.. அதனால் இன்றே இன்ஸ்பெக்டரை கை பேசியில் அழைத்தான்.. ” ஹலோ நான் பாரதி கிருஷ்ணா பேசுறேன்.. மணல் கொள்ளை கேஸ் எப்படி போகுது.. ” என்றான்…

” சார் அவங்களை பிடித்ததும் அந்த லாரி டிரைவர் தப்பிச்சு ஓடிட்டான்.. மத்தவங்கிட்ட யாரு இதுக்கெல்லாம் உங்களுக்கு பாஸ்னு கேட்டால் சொல்ல மாட்டேங்கிறாங்க சார்.. இவனுங்களுக்கு எல்லாம் உங்க பாணியில தான் உண்மையை வர வைக்க முடியும் நாளைக்கு நீங்க டியூட்டிக்கு வந்து இந்த கேஸை டீல் பண்ணுங்க சார்..” என்றான் அந்த இன்ஸ்பெக்டர்…

” ஓகே நாளைக்கு நான் வந்து பாத்துக்கிறேன்.. நான் இல்லாத இந்த ஒரு மாசத்துல என்னென்ன கேஸ் எல்லாம் பிடிபடாமல் பெண்டிங்ல இருக்கோ அது சம்பந்தமன டீடெயில்ஸ் கொண்ட ஃபைல் எல்லாமே நான் மார்னிங் வந்ததும் என்னோட டேபிளுக்கு வந்திருக்கணும்.. ஓகே.. ” என்று போலீஸ் தோரணையில் கம்பீரமாக பேசி விட்டு கைபேசியை வைத்தான் பாரதிகிருஷ்ணா டி சி பி..

 முதல் அடியிலேயே சறுக்கி விழுந்தது போன்று உணர்ந்தான்.. செல்வியின் விஷயத்தில்.. எப்படி அவளை அவனைப் புரிந்து கொள்ள வைப்பது என்று தீவிரமாக யோசித்தான் பாரதி..

 பாரதியின் முக வாட்டத்தை யசோதாவும் கவனித்தார்.. செல்வி இருந்த அறைக்கு சென்று ” ஏண்டி மாப்பிள்ளை கிட்ட நீ எதுவும் ஏடாகூடமா பேசினியா? மாப்பிள்ளையின் முகம் வாடி இருக்கு..” என்றார்.. எங்கு மகள் கிடைத்த அழகான வாழ்வை கெடுத்து விடுவாளோ!. என பயந்து..

” நான் எதுவும் தவறாக பேசல ம்மா என்னை நீ கொஞ்சம் புரிஞ்சிக்கோயேன்.. திடீர்னு வந்து கல்யாணம் பண்ணி முன்ன பின்ன தெரியாத ஒருத்தர் அன்பா பேசினா நான் எப்படி உடனே ஈனு பல்லை காட்டி பேசமுடியும்.. கொஞ்சம் டைம் கேட்டேன்.. அவரை புரிஞ்சுகிறதுக்கு.. இதுகூடவா தப்பு?..” என்றாள் செல்வி மனத்தாங்களுடன்..

யசோதாவும் மகள் திருமணம் முடித்துவிட்டாள்.. இனி அவளின் வாழ்க்கை மாப்பிள்ளையின் பொறுப்பு.. அவர் பார்த்துப்பார். என நினைத்து மகளை தொல்லை பண்ணாமல் எழுந்து வந்துவிட்டார்..

அன்று இரவு கமிஸ்னரிடம் இருந்து பாரதிக்கு அழைப்பு வந்தது.. அதை எடுத்து காதில் வைத்தவன். ” ஹலோ சார் ஹவ் ஆர் யூ?..” என்றான் பாரதி..

” பைன் பாரதி.. நாளைக்கு நீங்க டியூட்டிக்கு வரும் போது உங்களுக்கு சின்னதா ஒரு பார்ட்டி பண்ணலாம்னு நம்ம டீம் பிளான் பண்ணியிருக்காங்க.. இதில் உங்களுக்கு எதுவும் பிரச்சினை இல்லையே?..” என்றார்..

” நோ சார். நான்தான் என்னோட வெட்டிங் பார்ட்டி வைக்கணும்.. நீங்க ஏன் எனக்கு பார்ட்டி தரணும்.. வேண்டாமே.” என்றான்..

” ஓகே பாரதி. இது ஜட்ச்சோட ஆர்டர். உங்களுக்கு பாராட்டு விழா நடத்தணும் அப்டினு.. அதுதான் நாளைக்கு நைட் டின்னரோட பார்ட்டி இருக்கு.. மறுப்பு சொல்லாம நீங்க கலந்துக்கணும்.. இது நம்ம டீமோட விருப்பம்.. நீங்க வேணா இன்னொரு நாள் உங்க வெட்டிங் பார்ட்டி வைங்க ஒகே..” என்று அவன் பதில் சொல்லும் முன் வைத்துவிட்டார்..

இவனை மீறி இனி அவரால் பணம் வாங்க முடியாது என நன்கு உணர்ந்து கொண்டார் கமிஸ்னர்.. வழிபறி கொள்ளையர்கள் அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கமிஸ்னர்க்கு ஒரு தொகை பணம் கொடுத்துவிடுவார்கள்..

அதனால் தான் வேறு போலீஸ் அவர்களை நெருங்கும் நேரம் அவர்களை டைவர்ட் பண்ணிவிடுவார்..

இதோ பாரதி வந்ததும் இனி கை நீட்டுவது அவரின் பதவிக்கு ஆபத்து என புரிந்துகொண்டார்..

அன்று இரவு உணவு உண்டதும். பாரதி அவர்களின் அறைக்கு சென்றான்.. முதல் முதலாக ஒரு பெண் அவனின் அறையில் அதுவும் உரிமையுடைய மனைவியாக இருந்தும் அவளைவிட்டு தள்ளி நிற்கும் நிலையை வெறுத்தான் பாரதி..

அவன் அவளுக்கு தொல்லையாக இருக்க விரும்பாமல் படுக்கையை கீழே விரித்து படுத்து கண்மூடிக்கொண்டான்..

அதை பார்த்த செல்வி அவனின் பக்கம் திரும்பி ” நான் ஒண்ணும் சூரியவம்சம் பட தேவையானி இல்ல.. நீங்க சரத்குமாரும் இல்ல.. ஏன் கீழ படுக்குறீங்க ஒரே கட்டில்ல படுத்தாலும் கட்டுபாடா இருக்கலாம்.. அப்டினு சொல்லமாட்டேன்.. உங்களுக்கு உங்க மேல நம்பிக்கை இருந்தா மேல வந்து படுங்க.. ஒரு ஆண் கீழ படுத்து நான் மேல படுக்குறது எனக்கு பிடிக்கலை..” என்றாள்..

” ஆண் பெண் இரண்டு பேரும் சமம் அப்டிதான் நான் நினைக்கிறேன்.. எனக்கு இது பழக்கம் தான்.. நீ மேல படு எனக்கு எதும் பிரச்சினை இல்லை..” என்று கூறி மறுபக்கம் திரும்பி படுத்துவிட்டான் பாரதி..

அடுத்தநாள் காலையில் செல்வி எழுந்து குளித்து புது மருமகளின் கலையுடன்.. பூஜை அறையில் விளக்கேற்றி வணங்கிவிட்டு.. அனைவருக்கும் காஃபி கலந்து எடுத்தாள்.. அப்பொழுது வைதேகியும் எழுந்து வந்தாள். ” ஹாய் செல்வி குட் மார்னிங்.. நேரத்தோட எழுந்துட்டியா?.. ஆஹா காஃபி மணமே அள்ளுதே!..” என்றாள் வைதேகி..

ஒருவர் பின் ஒருவராக வரவும் காஃபி கொடுத்தாள் செல்வி. ” நீ ஏன்மா பிள்ளைதாச்சி கஷ்டப்படுற.. நாங்க மூணுபேர் இருக்கோம்ல பார்த்துக்கமாட்டோமா?..” என்றார் அர்ச்சனா..

” இதுல எனக்கு என்ன கஷ்டம் அத்தை.. நான் தினமும் வீட்டுல பண்ணுறதுதான்.. ” என்றாள் சிரித்தபடி..

அவளின் சிரித்த முகத்தை மனதின் ஓரத்தில் பத்திரபடுத்தி வைத்துவிட்டு.. அதை ரசித்தபடி ஜாகிங் சென்றுவிட்டு வியர்வை வழிந்த முகத்துடன் உள்ளே வந்தான் பாரதி..

அவனை பார்த்த அர்ச்சனா ” வா கண்ணா செல்வி கண்ணு கம கமனு காஃபி போட்டு வச்சிருக்கு குடி இந்தா..” என்று ஒரு கப்பை எடுத்து பாரதியிடம் கொடுத்தார்..

அவனும் வாங்கி ஒரு சிப் குடித்துவிட்டு

” ஆஹா என்ன அருமையான ருசி சூப்பர்..” தாமரையின் மலர்ந்த முகத்தை ஓரக்கண்ணால் விழுங்கியபடியே குடித்தான்..

அதை செல்வியும் பார்த்தாள் தான்

” இந்த கருவாப்பயலுக்கு என்ன கொழுப்பு.. நேத்து அவ்வளவு சொல்லுறேன்.. பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிட்டு. ஐயோ இன்னைக்கு இத்தனை பேர் முன்னாடி மானத்தை வாங்குறானே கருவாப்பய..” என்று மனதில் திட்டானாளோ கொஞ்சினாளோ. அதுவளுக்கு மட்டுமே தெரிந்தது..

அடுத்து அவளை இருக்கவைத்துவிட்டு வைதேகியும் யசோதாவும் காலை உணவை செய்தார்கள்..

பாரதி குளித்து போலீஸ் உடையில் கம்பீரமாக ரெடியாகி வந்தான்..

அவனை இதுதநாள் வரை இந்த உடையில் டீவியில் தான் பார்த்திருக்கிறாள் செல்வி.. இன்றுதான் முதல் முதலாக நேரில் பார்க்கிறாள்.. ” சும்மா சொல்லக்கூடாது அம்சமாத்தான் இருக்கான் கருவாப்பய..” என்று நினைத்தபடி பார்த்துவைத்தாள்..

அவளின் அருகில் வந்து ” பிடிக்கலனு சொல்லிட்டு நீ மட்டும் மாமனை இப்படி ஆசையா முறைத்து பார்க்கலாமா டி லோட்டஸ்..” என்றான்..

அவன் அவ்வாறு கேட்டதும் ” ஐயோ இவ்வளவு வெளிப்படையாவா பார்த்தோம்.. கருவாப்பய கண்டுபிடிச்சிட்டானே..” என்று நினைத்தபடி நாக்கை கடித்தாள் செல்வி..

” அது என்னடி பண்ணுது உன்னை பாவம் விடு..” என்றான்..

” சும்மா சும்மா என்னை டி சொல்லாதீங்க..” என்றாள். அவன் அவ்வாறு டி சொல்லும் அழகில் அவளுக்குள் நடக்கும் இரசாயன மாற்றத்தை அவளால் கடுட்படுத்தமுடியாத அவளில் நிலையை நினைத்து நொந்தாள் செல்வி..

” இங்க பாரு என்னை ஓவரா கட்டுபடுத்தக்கூடாது. அது எனக்கு பிடிக்காது.. நீ என் பொண்டாட்டி நான் ஆசையா அப்படிதான் டி சொல்லுவேன்.. நீயும் வேணும்னா டா சொல்லுடி கொடமிளகாய்..” என்றுவிட்டு நேரம் போவதை உணர்ந்து அங்கிருந்து எழுந்து சாப்பாட்டு மேசையின் முன் இருந்து ” அம்மா பசிக்குது.. அத்தை பசிக்குது.. நேரமாகிடுச்சு.” என்று தாளம் தட்டினான்..

” வெளிய பார்க்கத்தான் கெத்து போலீஸ்.. வீட்டுல வெத்து சிரிப்பு போலீஸ்..” என்றாள் இந்தமுறை அவனுக்கு கேட்க்கும் படி..

அதை கேட்டு சிரித்துவிட்டு அம்மா மாமியாரின் கவனிப்பில் நன்றாக உண்டுவிட்டு அனைவரிடமும் சொல்லிவிட்டு ஸ்டேஷன் சென்றான் பாரதிகிருஷ்ணா டி சி பி..

அவன் சென்னைக்கு மாற்றமாகி வந்ததுக்கு இன்னும் அவனின் ஆபீஸ் அறைக்குள் சென்றதே இல்லை.. நிற்கமுடியாத வேலைபளு அதன்பின் விடுமுறை.. என அவனின் நாட்கள் கழிந்ததால். இன்றுதான் அவனின் ஆபீஸ் அறைக்குள் சென்றான்..

அவன் நேற்று கூறியது போன்று அவன் கேட்ட ஃபைல்கள் எல்லாம் மேசையில் தேதி வாரியாக குற்றங்கள் வாரியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது..

அதில் அவன் தற்போது அடுத்து உடனடியாக பார்கவேண்டிய கேஸ் மணல் கொள்ளை.. அதை தடுத்து அவர்களை கைது பண்ணவேண்டும்..

அதற்கு அந்த ஃ பைலை கையில் எடுத்துக்கொண்டு புறப்பட்டான் பாரதி..

அவன் அங்கு செல்லும் போது யாரின் நல்ல நேரமோ அந்த மணல் கொள்ளையை நடத்தும் பெரியவனே அங்கு நின்றான்..

வேலை செய்யும் ஒருவன் தான்

” ராமுண்ணே டி சி பி வர்றான்..” என்றான்..

அவனை பார்த்து ஓட்டம் எடுத்தார்கள்..

அதில் ராமு என அழைக்கப்பட்ட பெரியவனை பிடித்து.. ” என்னடா பயந்து ஓடுறீங்க.. நான் உங்களை கைது பண்ண வரல.. நமக்குள்ள ஒரு டீல் பேசிக்கலாமே..” என்றான் பாரதி..

அவனின் நேர்மை பற்றித்தான் அவன் சென்னை வந்த நாள் முதல் அதிகம் கேட்டிருக்கிறான் ராமு.. இவன் என்னவென்றால் டீல் பேசலாம் என்று கூறவும் சந்தேகத்தோடு பார்த்தான் ராமு..

பிடித்த ராமுவை விட்டுவிட்டு ” என்னடா நம்பிக்கை வரலையா?.. அது சரி எப்படி நம்புவ நீயும்.. அந்த வழிபறி கேஸை பிடிக்கத்தான் என்னை சென்னை அனுப்பினாங்க.. வந்த வேலையை சரியா முடிச்சால் தானே பேர் எடுத்து இங்கயே இருக்கமுடியும் குடும்பத்தோட.. அதுதான் அப்பானு தெரிஞ்சும் பிடித்துகொடுத்தேன்.. ஆனா அவன் சுட்டு தற்கொலை பண்ணிகிட்டான்.. என்ன பண்ணுறது..”

” நானும் நாலுபேரப்போல நல்லா வசதியா வாழணும்னு நினைக்ககூடாதா என்ன?… எனக்கு குடும்பம் அம்மா பொண்டாட்டி எல்லாம் இருக்கிறாங்க.. இன்னும் மூணு மாசத்துல குழந்தை பிறக்கப்போகுது.. அப்படி இருக்கும் போது அவங்களை வசதியா வாழவைக்கணும்னு நினைக்கிறேன்.. அதுக்கு இந்த அரசாங்கம் தரும் சம்பளம் இந்த காலத்துல எதுக்கு பத்தும்.. நேர்மையாக வேலை பண்ணினா சிலையா வைப்பாங்க?.. இல்ல தங்கப்பதக்கம் தருவாங்களா? இல்லையே.. வேற இடத்துக்கு தூக்கி போடுவாங்க அரசியல் வாதிகள்.. நமக்கு ஏன் வம்பு எனக்கு சென்னையில வசதியாக வாழணும்.. உனக்கு இந்த மணல்களை அள்ளி எடுக்கணும்.. ஒருவருக்கு ஒருவர் இந்த உதவியை பண்ணலன்னா என்ன மனிதர்கள் நாம..”

” நான் இதை கண்டுக்கமாட்டேன்.. நீ தவறாமல் என்னை கவனிச்சிடணும்.. என்ன புரிஞ்சதா?.. இப்ப நான் போலீஸ்ஸா பேசலடா ராமு.. சராசரி தேவைகளை புரிஞ்சிகிட்ட மனிதனாத்தான் பேசுறேன்.. எனக்கு 20% பங்கு வந்திடணும்.. இது வெளிய யாருக்கும் தெரியக்கூடாது.. தெரிந்தால் உனக்கு தான் ஆபத்து.. நான் மாட்டிக்காம எப்படி தப்பிக்கணும்னு தெரியாம இங்க வரல.. இப்ப கூட நாம பேசுறதை உன் ஆள் வீடியோ சூட் பண்ணுறான்.. அந்த போனை நீயே என் கண்முன்ன வாங்கி உடைக்கிறியா?.. இல்ல நான் அவனோட மண்டையை உடைக்கவா?..” என்றான்..

அவனின் இந்த தோரணையே நீ பண்ணித்தான் ஆகவேண்டும் என கூறியது..

அதே போன்று ராமுவும் அந்த வீடியோ எடுத்தவனை அழைத்து இரண்டு அடிபோட்டு அவனின் கையில் இருந்த போனை வாங்கி பாரதியின் கண்முன் உடைத்தான்..

அதை பார்த்த பாரதி..” இதுதான் கடைசி முதலுமா இருக்கணும்.. இனி இப்படி நடந்தால் வாயால சொல்லமாட்டேன்.. சுட்டுதள்ளிட்டு போய்கிட்டே இருப்பேன்.. பணத்தை வண்டில வை.. இனி தவறாம பணம் கைக்கு வந்திடணும்.. இல்லைனா இந்த பாரதியோட ஆட்டம் ஆரம்பிச்சிடும். அதை நீ தாங்க மாட்ட..” என்று கை நீட்டி எச்சரித்துவிட்டு அங்கிருந்து சென்றான் பாரதி..

விமான நிலையத்தில் இருந்து இறங்கியதும் அவன் ஆர்டர் பண்ணியிருந்த புதிய ஆடிக்கார் டிரைவருடன் வந்து அவனுக்காக காத்திருந்தது..

அவன் சென்னையில் தங்குவதற்காக ஒரு பங்களாவை வாங்கிருக்கிறான்.. இது அனைத்தும் அவனின் செல்வாக்கை பயன்படுத்தி ஒரே இரவில் நடந்தது.. அனைத்திலும் அவனின் பணம் பேசியது..

அந்த காரில் எஸ் கே என்று அழைக்கபடும் சர்வேஷ் கபூர்.. மற்றும் அவனின் பி ஏ மாலிக் இருவரும் அவன் வாங்கிருக்கும் புதிய பங்களாவிற்கு சென்றார்கள்..

சென்றதும் ” நான் ரெஸ்ட் எடுக்கபோறேன் மாலிக் ரொம்ப டயர்ட்.. சோ டோன்ட் டிஸ்டர்ப் மீ ஓகே.. ” என்றான்..

” சார் ஈவ்னிங் பாரதிகிருஷ்ணா வோட பார்ட்டிக்கு போகணும்னு சொன்னீங்களே?..” என்றான்..

அதை கேட்டு வாய்விட்டு சிரித்தான் சர்வேஷ் கபூர்..

அவனின் அந்த சிரிப்பின் அர்த்தம் புரியாமல் விழித்தான் மாலீக்..

மாலை நேரம் பாரதி வீட்டிற்கு வந்து பார்ட்டிக்கு ரெடியாகி புறப்பட்டான்..

வீணை இசைக்கும்.

Advertisement