Advertisement

ஓம் நமச்சிவாய..

வீணை.04

கடந்த பத்து நாட்களாக பாரதி தூக்கம் இல்லாமல் வேலை வேலை என அலைந்து திறிந்தான்.. அதே போன்று இன்று இரவும் தாயை மருத்துவமனையில் சேர்த்து விட்டு அங்கே இருந்தான்.. சரவணனும் சொல்லிப்பார்த்தான்.. 

” டேய் பாரதி நீ ரொம்ப களைப்பா தெரியிற டா.. நம்ம ரூம்க்கு போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு காலையில வா.. இப்பவே நேரம் ஒரு மணி தாண்டிட்டு.. அப்போதானே நாளைக்கு உன்னால ஃப்ரெஸ்ஸா வேலை பண்ணமுடியும்.. இன்னும் சாப்பிடவும் இல்லை நீ..” என்றான் கவலை தொனிக்கும் குரலில்..

” இல்லை டா நான் இங்கயே  இருக்கிறேன்.. அம்மா கண்முழிச்சதும் நான் அவங்களை பார்க்கணும்.. நீ போ போய் ரெஸ்ட் எடுத்து காலையில ஃப்ரெஸ்ஸா நீ கோர்ட்டுக்கு வா.. நானும் அங்க வந்துடுவேன்..” என்று சரவணனை அனுப்பிவைத்தான் பாரதி..

நேரம் இரண்டு மணி இருக்கும் வைதேகி பாரதியிடம் வந்து அர்ச்சனா கண்முழித்துவிட்டார். என கூறினாள்..

அதை கேட்டதும் சிறுவன் போன்று குதித்து எழுந்து தாயிடம் ஓடினான் பாரதி..

” அச்சும்மா நாங்க ரொம்ப கலங்கி போய்ட்டோம் தெரியுமா?.. வைதேகி எல்லாம் சொன்னா.. இனி நீங்க எதுக்கும் கவலை படவோ கண்ணீர் விடவோ கூடாது.. சமத்தா ரெஸ்ட் எடுங்க.. நீங்க என்ன கேட்க நினைக்கிறீங்கனு தெரியுது.. உங்க புருசன் இப்ப அரஸ்ட் ஆகி ஸ்டேஷன்ல தான் இருக்கிறார்.. இதுல நீங்க கவலைபட எதுவும் இல்லை ம்மா..  அவர் பண்ணின தப்புக்கு தண்டனை அனுபவிக்கிறார்.. நீங்க எனக்கு அம்மாவா ஆரோக்கியமா வேணும்..” என்று அவனின் துன்பத்தை குரலில் காட்டாமல் தாயின் அருகில் தலைசாய்த்து அமர்திருந்தான்..

அவனின் தலையை தடவி விட்டுக்கொண்டு ” கண்ணா நீ நான் பெத்த மகன்டா இனியும் அந்தாளுக்கு பரிந்துபேசி உன் வாழ்க்கையை நான் வீணாக்கமாட்டேன் பா.. அவர் பண்ணின குற்றத்திற்கு என்னை போல உன்னை போல எத்தனை பொண்டாட்டி. புள்ளைங்க.. புருசன் தாய் தகப்பன்.. கஷ்டப்பட்டு துன்பட்டிருப்பாங்க.. அந்த ஆள் என்னை கஷ்டப்படுத்தினது என் தலைவிதி.. ஆனா ஊர்ல யாரும் நிம்மதி இல்லாமல் தவிக்கணும்னு யாருக்கும் எந்த விதியும் இல்லை கண்ணா.. உன் அப்பா உன் கையால சிறைக்கு போகணும்னு அவர் தலைஎழுத்து… இனியாவது இந்த ஊர்மக்கள் சந்தோசமா இருக்கட்டும்.. நான் தான் விபரம்  தெரியாம இருந்துட்டேன்.. என் புள்ள அப்படி இல்லை.. எல்லாம் தெரிஞ்ச போலீஸ்.. நீயும் நல்லா இருக்கணும்.. உன்னால இந்த ஊர்மக்களும் நல்லா இருக்கணும்.. அதுலதான் என் சந்தோசம் இருக்கு கண்ணா. போ போய் ஆகவேண்டியதை பாரு.. இனி அவரை நினைத்து நான் கவலை பட்டு. அது உன்னை பலவீனம் ஆக்குறதை என்னால பொறுத்துக்கமுடியாது கண்ணா..” என்று கூறியபடி கண்ணை மூடி படுத்துக்கொண்டார் அர்ச்சனா.. 

பாரதியின் மனதில் இந்த கேஸில் தாயை எவ்வாறு சமாளிப்பது என்று உறுத்திய பெரிய முள் உடைந்து நொருங்கியது போன்று அப்படி ஒரு மன அமைதியை அடைந்தான்.. இனி அவனை எதுவும் தடுக்காது.. என்பதே அப்படி ஒரு வேகம் விவேகத்தை கொடுத்தது பாரதிக்கு…

வைதேகியை தாயின் அருகில் உறங்கும் படி கூறிவிட்டு அவனும் அங்கிருந்த பெஞ்சில் கால்நீட்டி படுத்துக்கொண்டான்..

அங்கிருந்த மூவருக்குமே விமலா அங்கு அனுமதிக்கப்பட்டது தெரியாது.. கவனிக்க யாரும் இல்லாமல் இடுப்பின் கீழ் அடிபட்டு கால் முறிந்து இயக்கம் இல்லாமல் இருந்தார்.. அவர் பண்ணிய பாவத்தின் பயன் அது..

மூன்று மணிக்கு உறங்கி காலையில் ஐந்து மணிக்கெல்லாம் விழித்து எழுந்து விட்டாள் வைதேகி..

அனைவரும் நின்றபடியே மருத்துவமனை சென்றார்கள்.. அதனால்  சரவணன் தான் அவசியம் தேவையான பொருட்கள் பாரதி அர்ச்சனா வைதேகி என மூவருக்கும் உடை என ஆறுமணிக்கு எல்லாம் வாங்கிவந்தான்..

வைதேகியும் கையில் பணம் எடுத்துவரவில்லை எவ்வாறு பாரதியிடம் கேட்பது என தயங்கியபடியே இருந்தாள்.. அதை புரிந்துகொண்டவனோ வாங்கிவந்துவிட்டான்..  பாரதி இன்னும் வைதேகிடம் சரவணனை பற்றி எதுவும் கூறவில்லை.. அண்ணன் என நினைக்கும் பாரதியிடமே கேட்க தயங்கியவள்.. அவனிடம் ஏதோ உரிமை உணர்வு தோன்றியதோ.. அவன் கொடுத்ததும் வாங்கி பாத்ரூம் சென்று குளித்து தயாராகி வந்தாள்..

கதவு திறக்கும் சத்ததில் தான் பாரதி கண்விழித்தான்.. மருத்துவமனையில் இருப்பது போன்று இல்லாமல் ஏதோ வீட்டில் இருப்பது போன்று பளிச்சென்று இருந்தாள் வைதேகி.. 

அவளை அவ்வாறு பார்த்ததுமே சரவணன் வந்திருக்கிறான் என தெரிந்துகொண்டு ” வைதேகி சரவணன் எங்க?..” என்றான் பாரதி..

” தெரியல ண்ணா..  இதெல்லாம் வாங்கிட்டுவந்து தந்தார்.. உனக்கும் அச்சுமாக்கும் கூட எல்லாமே இந்த பைய்ல இருக்கு.. நான் குளிக்கப்போய்டேன்.. வந்து பார்த்தா காணோம்..” என்றாள் கையை விரித்து பாவனை காட்டி..

அதை பார்த்து ரசித்தபடியே கையில் ஃப்லாஸ்கில் காஃபியோடு வந்தான் சரவணன்..

” நான் உன்கிட்ட என்னடா சொன்னேன்?.. நீ என்ன பண்ணியிருக்க.. இதெல்லாம் நான் பார்த்துக்கமாட்டேனா?..” என்றான் பாரதி..

” டேய் மச்சான் நீ பண்ணினா என்ன?. நான் பண்ணினா என்ன? ரெண்டும் ஒன்னுதான்.. ஆறு மணிக்கெல்லாம் நீயா கோர்ட்டில் கேஸ் நடத்துவ?.. எனக்கு அச்சுமாவை பார்க்கணும் போல இருந்துது அதுதான் இதெல்லாம் யாரும்  எடுக்கணும்னு நினைக்காம அவசரத்துல வந்துட்டோம்.. தேவைதானே அதுதான் நான் வாங்கிட்டு வந்துட்டேன்.. இதுல நீ என்ன தப்பை கண்ட ?..” என்றான் நக்கலாக ஓரக்கண்ணால் வைதேகியை பார்த்தபடியே..

வைதேகிதான் அவர்களின் பேச்சை கலைத்து ” சரி சரி வாங்க அண்ணா காஃபி ஆறிடும்..” என்றாள்..

அதன்பின் பாரதியும் குளித்துவிட்டு வந்தான்.. அர்ச்சனா கண்முழித்து இருந்தார்.. சரவணன் தான் தோளோடு அணைத்து கட்டிலில் சாய்த்து அமரவைத்தான்.. வைதேகி முகம் துடைத்து அவருக்கும் காஃபி கொடுத்தாள்..

பாரதி குளித்துவிட்டு வந்ததும் அவனின் அம்மா  அர்ச்சனா தெளிவாக பேசியதால் அவனின் முகத்தில் தனி தேஜஸ் தெரிந்தது.. மனதில் தெளிவிருந்தால் முகத்தில் ஒளிவீசுவது உண்மை என்பதை பாரதியின் முகம் காட்டிக்கொடுத்தது..

அதை பார்த்த சரவணன் ” என்னடா மச்சான் செல்வி பேசுச்சோ!.. முகத்துல பல்ப் எரியுதே.. என்ன மேட்டர்..” என்றான்..

வைதேகியிடம் இரண்டு காஃபி வாங்கிக்கொண்டு சரவணனை அழைத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே சென்றான் பாரதி..

” ஓஹோ அவ என் கூட பேசுவான்ற நினைப்பு கூட இருக்கா உனக்கு?.. நான் நைட் கால் பண்ணியும் அவ எடுக்கல. சரி தூங்கி இருப்பான்னு விடலாம்.. ஆனா காலையில இருந்து எல்லா நீயூஸ் சேனல்ளையும் சொல்லுறாங்களே.. அதை பார்க்காமலா இருப்பா?.. பார்த்துட்டு  அழைத்து பேசுவோம்.. என்ன ஏதுனு? கேட்ப்போம்.. எதுவும் சொல்லுறதுக்கு இல்லை சரவணா..” என்றான் கசந்த புன்னகையை சிந்தி..

” நான் நேற்று சொன்னதுதான் இன்னைக்கும் செல்விக்கு இதெல்லாம் ஏத்துக்க கால அவகாசம் வேணும்.. நீ காத்திருந்துதான் ஆகணும்.. மரம் வச்சதும் பழம் பறிக்கமுடியாது பாரதி.. அது வளர்ந்து பூத்து காய் வந்துதான் பழம் வரும்.. அதுமாதிரி நீ கல்யாணம் பண்ணி. கொஞ்சம் கொஞ்சமாக உன்னையும் உன் அன்பையும் செல்விக்கு புரியவைக்கணும்.. அப்பதான் பழம் பறிக்கிற மாதிரி வாழ்க்கையில சந்தோசம் கிடைக்கும்… நீ கொஞ்சம் தெளிவா இருந்த மாதிரி இருந்தது அதுதான் என்னனு கேட்டேன்.. வேற ஒண்ணும் இல்லை மச்சி..” என்றான் சரவணன்..

சரவணன் பேசியதை கேட்டுவிட்டு பாரதி அர்ச்சனா கூறியவற்றை சொன்னான்.. ” இப்பதான் அச்சுமா தெளிவா ஒரு முடிவு எடுத்துருக்கு டா.. பெரியவர்கள் சும்மா எதுவும் சொல்லி வைக்கவில்லை.. எல்லாத்துக்கும் ஒரு படிப்பினை வேணும்.. அந்த ஆள்  ஜெயிலுக்கு போனதும்தான் அம்மா கண்திறந்து வெளி உலகத்தை பார்க்கணும்னு இருந்திருக்கு போல.. இனிமேல் அச்சுமா இப்படிதான் இருக்கணும்.. அதுதான் அம்மாக்கும் எனக்கும் எல்லாருக்கும் ஹாப்பி..” என்றான் பாரதி..

அதன் பின் இருவரும் வெளியே சென்று அர்ச்சனா வைதேகி இருவருக்கும் காலை உணவு வாங்கிக்கொண்டு.. மதிய உணவை கொடுக்கும் படி ஆடர் பண்ணிவிட்டு வந்தார்கள்..

அதை வைதேகியிடம் கொடுத்துவிட்டு நண்பர்கள்  இருவரும் டாக்டரை பார்க்க சென்றார்கள்.. டாக்டரோ இன்றும் இங்கு இருக்கட்டும்.. மூச்சுத்திணறல் வராமல் இருந்தால் நாளை வீட்டிற்கு அனுப்பலாம்.. வேறு பிரச்சினை இல்லை பீபி மாத்திரை இனி கட்டாயம் தவறாமல் எடுக்கவேண்டும்.. என கூறி அனுப்பிவைத்தார்..

அதன் பின் அவர்களும் பாரதி ஸ்டேஷன் செல்ல சரவணன் கோர்ட் சென்றான்..

பாரதி சென்று முடிக்கவேண்டியவேலைகளை முடித்துவிட்டு குற்றவாளிகளை கோர்ட்டிற்கு அழைத்து செல்ல தயாரானான்..

அப்போது சரவணனிடம் இருந்து பாரதிக்கு அழைப்பு வந்தது.. அதை பாரதி எடுத்து காதில் வைத்து                    ” என்னடா மச்சான். இப்பதானே போன அதுக்குள்ள பேசணுமா? டைம் இல்லை கோர்ட் வரத்தான் ரெடி பண்ணுறேன்.. என்னனு சொல்லு?..” என்றான் ராதாவை எதிரில் வைத்து நீ பண்ணியதால் எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. நீ கைதி. நான் போலீஸ் அவ்வளவேதான். என அவனின் தந்தையை நம்ம வைப்பதற்கு சரவணனுடன் சகஜமாக பேசினான் பாரதி..

” ஐயோ சாமி கொல்லாத டா என்னை.. நான் சொல்லுறதை கேளு.. செல்வியும் ஆன்டியும் வந்திருக்காங்க ஜீ எச் க்கு.. ஆன்டி இப்பதான் எனக்கு கூப்பிட்டு சம்மந்தியை எங்க வச்சிருக்காங்க தம்பி நானும் செல்வியும் பார்க்கவந்திருக்கோம் அப்படினு சொன்னாங்க டா..” என்றான்..

” ஓஹோ!.. அப்படியா?.. சரி டா மச்சான் நீ வேலையை பாரு.. எனக்கு இங்க இருந்து ஜீ எச் பக்கம் தான்.. வந்தவங்களை மரியாதையா வாங்கணு கேட்டு அழைச்சிட்டு போகணும் அதுதான் தமிழ் பண்பாடு.. நீ என்ன பண்ணு கால் பண்ணி ஒரு பத்து நிமிசம் ஓபில வெயிட் பண்ணச்சொல்லு.. நான் போறேன்.. ஆனா நான்தான் வருவேன்னு சொல்லாத.. நான் போய் நின்னா. அவளோட கண்ணே தாமரை மொட்டு விரியுமே அப்படி அழகா விரியும் டா.. அதை நான் பார்க்கணும்..” என்றான் பாரதிகிருஷ்ணா…

” ஐயா சாமி உனக்கு பெரிய கும்பிடு போடுறேன்.. ஆளை விடு.. நான் சொல்லுறேன்.. நீ என்ன வேணும்னாலும் பண்ணு..” என்று கத்திவிட்டு வைத்தான் சரவணன் ..

அதன் பின் ஜீப் டிரைவரை அழைத்து ஜீ எச் போகும் படி கூறிவிட்டு ஏறி இருந்தான்.. ” நாம ஒரு கால் பண்ணி பேசலையேனு நினைத்தோம்.. ஆனா அவ சொல்லாம வந்து நின்னுட்டா.. இது எப்படியும் அத்தை ரொம்ப கெஞ்சி தான் அழைச்சிட்டு வந்துருப்பாங்க.. இது எல்லாத்துக்கும் கல்யாணத்துக்கு அப்புறம் இருக்கு அவளுக்கு..” என்று நினைத்தபடியே சென்றான்.. 

இந்த நிலையிலும் அவனால் சாதாரணமாக இருக்கமுடியும்  என்றால்.. நடந்தவற்றை அர்ச்சான புரிந்துகொண்டதும்.. இதோ அவனுடைய லோட்டஸை பார்க்கப்போகும் சந்தோசம் என அனைத்துமே பாரதியை இந்த கஷ்ட நிலைமையிலும் சிரிக்கவைத்தது…

சற்று நேரத்தில் ஜீ எச் சென்றுவிட்டான்..அவன் சொன்னது போன்றே வெளி நோயாளி பிரிவில் இருந்தார்கள் இருவரும்.. அவர்களை பார்த்ததும் செல்வியை சற்று நேரம் பார்த்து நின்றான்..

அழகாக புடவை உடுத்தி.. வயிற்றில் ஒரு கை வைத்து.. மறுகையை வாயில் நகம் கடிப்பது போன்று வைத்துக்கொண்டு யசோதாவின் தோளில் சாய்ந்து இருந்தாள் செல்வி..

அதை ஜூம் பண்ணி அவனது கைபேசியில் கிளிக் பண்ணி பத்திரபடுத்தினான் பாரதி.. அதன் பின் அவர்களிடம் சென்று ” வாங்க அத்தை வா தாமரை..” என்று அழைத்து சென்றான்..

” மாப்பிள்ளை நீங்களா? உங்க ப்ரெண்ட்டு தம்பிதானே வர்றேன்னு சொல்லுச்சி.. சம்மந்தியம்மாக்கு என்ன நடந்தது?.. ” என்றார் யசோதா.. செல்வி தாயின் கையை பிடித்து நடந்து வந்தாள்..

” பயப்படும் படி இல்லை அத்தை அப்பா இப்படி ஒரு துரோகம் பண்ணிட்டார்னு நினைத்து அதிர்ச்சியில  மூச்சுத்திணறல் வந்துடுச்சு..  டாக்டர் இப்ப எல்லாம் சரியாகிடுச்சினு சொன்னார்..” என்றான்.. பேசியபடியே அர்ச்சனா இருந்த பிரிவிற்கு வந்துவிட்டார்கள்.. 

அறைக்குள் அழைத்து சென்று இருக்கவைத்துவிட்டு காஃபி வாங்கிவந்து கொடுத்தான்.. அதன்பின் அம்மாவையும் விசாரித்து விட்டு.. யசோதாவிடமும் கூறிவிட்டு நேரமாவதை உணர்ந்து அங்கிருந்து நேராக கோர்ட்டிற்கே சென்றுவிட்டான்.. 

மூர்த்தியும் ஜீப்பில் ராதா மற்றும் அவரின் கூட்டம் அனைவரையும் ஏற்றிக்கொண்டு கோர்ட்டிற்கு சென்றான்..

அங்கு சென்றதும் சரவணன் ரெடியாக இருந்தான் அடுத்து அவர்களுடைய கேஸ் தான்..

அவர்களின் கேஸ் அரம்பித்தது.. டவாலி ராதாகிருஷ்ணன் என மூன்று முறை அழைத்தார்.. சரவணன் அவரிடம் வந்து விசாரித்தான்.. ராதாவும் இனி மறைத்து வேலையில்லை என நினைத்து.. ஆரம்பத்தில் இருந்து செய்த குற்றங்களை வாக்குமூலமாக அவரே சொன்னார்..

அதன் பின் மற்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக கூறியதும்.. பாரதி எடுத்துவைத்திருந்த ஆதாரங்களை சரவணனிடம் கொடுத்திருந்தான்.. அது அனைத்தையும் சரவணன் கோர்ட்டில் ஒப்படைத்தான்… இவர்களின் வழிபறியால் பாதிக்கப்படவர்கள் கொடுத்த கம்ப்லைன்டின் காஃப்பி என தேதி வாரியாக கொடுத்திருந்தான்.. அடுத்து அங்கிருந்த சிசிடீவி புட்டேஜ் காஃப்பி. இவ்வாறு சரியான நிறைய ஆதாரங்களை இந்த பத்து நாளில் எடுத்திருந்தான்.. அதன் பின் குற்றவாளிகளே குற்றத்தை ஒத்துக்கொண்டமையால் நீதிபதி தீர்ப்பை கூறினார்.. 

அதன் பின் மூர்த்தி ராதாவை அழைத்து வரும் போது. ” நான் கொஞ்சம் டி சி பி கிட்ட பேசணும்..”என்றார்.

அதை மூர்த்தி பாரதியிடம் சொல்லவும் அவனும் அனுப்பும் படி கூறினான்..

பாரதியின் அருகில் சென்று அவனை கட்டியணைத்து ” என்னால் இனி சிறையில் என்னோட இத்தனை வருட பழக்கத்தையும் விட்டு வாழமுடியாது.. இனியாவது நீங்க நல்லா இருங்க.. உன் அம்மாவை பார்த்துக்கோ.. ” என்று கூறி யாரும் எதிர்பாராத வகையில் அருகில் நின்றிருந்த மூர்த்தியின் துப்பாக்கியை எடுத்து நெற்றி பொட்டில் வைத்து அவரை அவரே சுட்டுக்கொண்டார் ராதாகிருஷ்ணன்..

பாரதி ராதாவிடம் எதுவும் பேசவில்லை..  அது பார்பவர்கள் கண்ணில் தவறாக தெரியும்.. அதனால் மூர்த்தியிடம் அழைத்து போகும் படி கூறிவிட்டு அருகில் நின்ற வேறு வக்கிலிடம் பேசிக்கொண்டிருந்தான்.. 

அதை கேட்ட ராதா மூர்த்தியின் அருகில் சென்று துப்பாக்கி   எடுத்து சுட்டு தற்கொலை பண்ணிக்கொண்டார்.. திடீரென துப்பாக்கி சத்தம் கேட்டதும் அனைவரும் வெளியே வந்தார்கள்.. உள்ளே வேறு கேஸ் நடந்துகொண்டிருந்தது..  நீதிபதி  என அனைவரும் வந்துவிட்டார்கள்.. பாரதி ஸ்தம்பித்து நின்று விட்டான்..

இதை அனைத்து கேமராக்களிலும் புகைபடமாகவும்.. வீடியோவாகவும் பதிவாகியது..

உடனடியாக அங்கு நின்ற ஆம்புலன்ஸில் டெட்பாடியை ஏற்றி ஜீ எச் அனுப்பினார்கள்.. அதன் பின் பாரதியும் சரவணனும் சென்றார்கள்..

சரவணன் யசோதாவிற்கு அழைத்து இங்கு நடந்தவற்றை கூறினான்..

யாரும் இதை எதிர்பார்க்கவில்லை.. பாரதியின் தலையில் இடியை இறக்கிவிட்டு சென்றுவிட்டார் ராதாகிருஷ்ணன்..

இதை அவனது அச்சும்மா தாங்குவாரா?.. என்ற கவலையுடன் ஜீ எச் சென்றான் பாரதிகிருஷ்ணா..

வீணை இசைக்கும்

Advertisement