Advertisement

ஓம் நமச்சிவாய.

மூங்கில் காற்றில் இசைக்கும் வீணை.

அத்தியாயம் 02.

ராதாகிருஷ்ணன் மற்றும் விமலா இருவரும் பாரதிக்கு பெண் பார்க்க சென்ற இடத்தில்.

” சம்மந்தி தப்பா நினைக்காதிங்க என் பையன் வேலைனு ஊருக்கு வரல. அதுதான் சொல்லிட்டு போகலாம்னு நாங்க வந்தோம்.. அடுத்த முறை கட்டாயம் அவனை அழைச்சிட்டு வர்றேன்.. ” என்றார் அவர்கள் என்ன சொல்வார்களோ என்ற தயக்கத்தில்..

” நீங்களும் மூணு வருசமா இதை தானே சொல்றீங்க ராதா.. எங்க அளவுக்கு உங்களுக்கு வசதி இல்லாட்டியும். உங்க பையன் போலீஸ். நாளைக்கு நம்ம வட்டி பிசினஸ்ல ஏதாவது பிராப்ளம் வந்தா மாப்பிள்ளை போலீஸ் அப்படினு சொல்லி தப்பிக்கலாம் பாருங்க… அதனால தான் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன். ஆனா அது இனியும் நடக்காதுனு நல்லா தெரிஞ்சிடுச்சு… அதனால நீங்க என்கிட்ட வாங்கின ஐந்து லட்சம் பணத்தை வட்டியோட பத்து நாளில் தரணும்…” என்றார் கறாராக… ராதா சம்மந்தி என அழைத்த கந்துவட்டி கோவிந்தன்..

” என்ன சம்மந்தி வீடு இப்ப இருக்கிற நிலைமையில திடீரென பணம் கேட்டா நான் எங்க போவேன்?.. இன்னும் ஒரு தரம் வாய்ப்பு தாங்க… அவன் எனக்கு அடங்க மாட்டான் தான். ஆனா அவனோட அம்மா என் கையிலதானே.. அவளுக்கு ரெண்டு போடு போட்டு பொண்ணு பார்க்க உன் மகன் வந்தே ஆகனும் சொல்லி கூட்டிட்டு வர்றேன்.. இதுக்கு நான் பொறுப்பு.. இதுவும் தவறினால் நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்கிறேன்.. அப்போ நான் கிளம்புறேன்..” என்று எழுந்தார் ராதா..

” ஏதோ சொல்றீங்க இன்னும் ஒருமாதம் டைம் அதுக்குள்ள நிச்சயதார்த்தம் நடக்கணும்.. இல்லைனா.. நான் எப்படி பணம் வசூல் பண்ணுவேனோ அந்த முறையில உங்ககிட்டயும் வாங்க வேண்டியது வரும் ராதா.. பார்த்துக்கோங்க..” என்று அனுப்பிவைத்தார்..

ராதாகிருஷ்ணன் இன்னும் சூதாட்டம் குடிபோதை எதையும் விடவில்லை… அதற்காகதான் கோவிந்தனிடம் மூன்று வருடத்திற்கு முன் பணம் வாங்கி இருந்தார்.. இன்னும் வட்டியோ முதல் பணமோ எதுவும் கொடுக்கவில்லை..

ஒருமுறை கோவிந்தன் கந்துவட்டி கேஸில் கைதாகி போலீஸி ஸ்டேஸன் சென்றிருந்தார்.. அங்கு சென்று இன்ஸ்பெக்டர்க்கு பணம் கொடுத்தார். ஆனால் அவர் அதை வாங்காமல் எப் ஐ ஆர் பையில் பண்ணி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார் கோவிந்தனை.. அப்பொழுது இருந்து நேர்மையானவர்களும் இருக்கிறார்கள் என தெரிந்ததும் போலீஸ் என்றால் சற்று பயம் வந்திருந்தது கோவிந்தனுக்கு…

அதில் இருந்து வெளியே வந்த பின் தான். ராதா அவரிடம் பணம் வாங்கியபோது மகன் போலீஸ் என்று கூறினார்.. அன்றில் இருந்து ஆரம்பித்தது. இந்த திருமண பேச்சுவார்த்தை ஆனால் இன்னும் முடிந்தபாடில்லை..

தன்னை ஒருவன் அவமானப்படுத்திவிட்டான். என நினைத்து அங்கிருந்து வீட்டிற்கு வரும் வழி எல்லாம் அதற்கு காரணமான பாரதியை திட்டியபடியே வந்தார் ராதா..

அதற்கு விமலாவும் தூபம் போட்டார்.. அவர்கள் இருவரும் வீட்டுக்கு வந்தும் மற்றவர்கள் இன்னும் வரவில்லை… அதனால் ஆக்ரோசமாக வரட்டும் என காத்திருந்தார்..

செல்வியிடம் கூறிவிட்டு புறப்பட்டவன். மீண்டும் ஏதோ தோன்றியதால் திரும்பி பார்த்தான்.. அவள் காலை மடித்து இருந்து அழுதுகொண்டிருந்தாள்.. அதை பார்த்துவிட்டு. அவளை சமாதானப்படுத்த நேரமில்லாமல் போகும் போது யசோதாவிடம் அவளை பார்த்து உள்ளே அழைத்துவரும் படி கூறிவிட்டு அனைவரையும் அழைத்துக்கொண்டு சென்னை நோக்கி சென்றான் பாரதி..

போகும் வழி எல்லாம் யோசனையே அவனை ஆக்கிரமித்து இருந்தது..

” அவளை திருமணம் செய்த பின்னாவது அழாமல் பார்த்துக்கவேணும்.. அவளோட கடந்த காலம் என்ன வேணும்னாலும் நடந்திருக்கட்டும். இனி அவள் எனக்கு சொந்தமானவள்.. அவளையும் அவனது தாயையும் இனி கண்கலங்காமல் பார்த்துக்கொள்ளவேணும்…” என்று நினைத்துக்கொண்டு அடுத்து அவனது வேலையை பற்றி நினைத்தான்..

அவனுக்கு தெரியும் தற்போது அவன் பண்ணியிருக்கும் வேலைக்கு ராதா இந்நேரம். தாயை தனியே அனுப்பினால் ஒருவழி பண்ணிவிடுவார் என தெரியும்… அங்கு ஜீ எச்சில் இருந்தும் அழைப்பும் வந்துவிட்டது.. அவன் பிடித்த குற்றவாளிகள் வாக்குமூலம் தரமாட்டோம்.. என்று அங்கிருந்த இன்ஸ்பெக்டரை தாக்கிவிட்டார்கள் என அவர் அழைத்து கூறியதும்.. இரண்டு இடத்திலும் அவனுக்கு முக்கிய வேலை இருந்தது. முதலில் எங்கு செல்வது என யோசித்தான்..

நேரே ஜீ எச் சென்றால் வேலையில் நேரம் ஓடிவிடும்.. அதனால் தாயை பாதுகாப்பாக வீட்டில் இறக்கிவிட்டு செல்லலாம் என நினைத்துக்கொண்டு கண் திறந்தான்…

அவனையே பார்த்திருந்த அர்ச்சனா

” என்ன கண்ணா தலை வலிக்குதா?.. அம்மா மடியில சாஞ்சிக்கோ தலையை பிடிச்சிவிடுறேன்..” என்றார் வாஞ்சையாக…

” இல்ல அச்சுமா தலை வலி இல்லை சும்மாதான்..” என்று கூறி தாயை சமாதானப்படுத்தி தோளோடு சேர்த்து அணைத்துக்கொண்டான் பாரதி…

இரண்டு மணி நேரத்தில் சென்னை சென்றார்கள். அங்கிருந்து வளசரவாக்கத்தில் உள்ள அவர்களின் வாடகை வீட்டிற்கும் வந்துவிட்டார்கள்..

அவர்களை வீட்டில் இறக்கி விட்டு சரவணன் அதே காரில் அவனது வீட்டிற்கு சென்றுவிட்டான்..

பாரதி தாயின் கையை பிடித்து உள்ளே அழைத்து சென்று ராதாவின் முன் நின்று. ” இங்க பாருங்க நான் தான் என் அம்மாவை கூட்டிட்டு போனேன். நான் இப்ப அவசரமாக வெளிய போறேன்… நான் திரும்பி வந்ததும் தைரியம் இருந்தா என்கிட்ட எங்க போன?.. ஏன் போன?.. அப்படினு கேளுங்க.. உங்களுக்கு எந்த முறையில பதில் சொன்னா புரியுமோ அந்த முறையில நான் பதில் சொல்லுவேன்.. அதுவரை நீங்களோ உங்க தங்கையோ என் அம்மா மற்றும் வைதேகி இரண்டு பேர்கிட்டையும் ஏதாவது கேட்டு திட்டி அவங்க கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும்.. அடுத்து வாயால் பேசிக்கிட்டு இருக்கமாட்டேன்..

என் அம்மாவை துன்பப்படுத்தி அழவைக்கிற யாரும் அதாவது அப்பனாவே இருந்தாலும் சுட்டுத்தள்ளிட்டு போயிக்கிட்டே இருப்பேன்.. என்ன முடியாதுனு நினைக்கிறீங்களா?.. இதோ இது அரசாங்கத்தால எனக்கு தந்த லைசன்ஸ் துப்பாக்கி.. இது கள்ளத்துப்பாக்கி.. சில விசக்கிருமிகளை இதாலதான் அழிப்பேன்.. யாருக்கும் எந்த கணக்கும் காட்டத்தேவை இல்ல.. இனி இந்த வீட்டுல உங்க ஆட்டம் சத்தம் எதுவும் எடுபடாது.. புரிஞ்சதா?.. ரொம்ப கவனமா இருக்கணும் இந்த பாரதிகிட்ட..” என்று ராதாவிடம் கத்திவிட்டு..

வைதேகியிடம் திரும்பி ” இங்க உனக்கோ அம்மாக்கோ இவங்க இரண்டு பேரில் யாராவது ஒருத்தரால ஏதாவது பிரச்சினை வந்தா உடனே ஒரு கால் போடு. அடுத்த பத்து நிமிசத்துல நான் இங்க இருப்பேன்..”என்று அவளிடம் கூறிவிட்டு தாயின் கையால் ஒரு காஃபி வாங்கி குடித்த பின் அங்கிருந்து சென்றான் பாரதிகிருஷ்ணா..

அவன் இந்த கேஸை முடித்துவிட்டு அடுத்ததாக தற்போது இருக்கும் வீட்டை சொந்தமாக வாங்க நினைத்தான்…

அவனின் தாய் அர்ச்சனா சிறுவயதில் இருந்து செல்வ செழிப்புடன் இருந்தவர்.. இங்கு தற்போது அதிகமாக கஷ்டப்படுகிறார்.. அவர் பிறந்து வளர்ந்த அந்த வீட்டை அவனே மீண்டும் வாங்கி அங்கு அவனின் தாயை சந்தோசமா இருக்கவைக்கவேண்டும்.. என்பதே அவனது அடுத்த ஒரே நோக்கம்…

அந்த வீடு விற்று இருபது வருடம் முடிந்துவிட்டது.. பாரதி தற்போது விசாரித்த வகையில் அந்த வீடு மூன்றாவது ஆளிடம் கை மாறி உள்ளது… ஒரு அர்த்தமற்ற அர்ப்ப ஆசைக்காக சூது போதை என பழகி அதற்காக சொத்தை விற்று வீட்டை விற்று இறுதியில் இந்த நிலையில் அவர்களை வைத்திருக்கிறார் ராதாகிருஷ்ணன்.. என நினைக்கும் போது அவனின் தாத்தா மகாலிங்கத்தின் மேலும் அவனின் தந்தை ராதாவின் மேலும் கட்டுக்கடங்காமல் கோபம் வரும் பாரதிக்கு..

இந்த காலத்தில் அந்த வீட்டை வாங்குவது என்றால் பலகோடி தேவைப்படும்.. எப்படி அவனால் முடியும்.. அரச உத்தியோகம் மாத சம்பளம் இதில்தான் பஞ்சம் இல்லாமல் அவனின் குடும்பம் செல்லவேண்டும்..

அப்படி இருக்கும் போது எவ்வாறு இது சாத்தியம் என நினைத்தான்.. முதலில் மாதம் மாதம் இருக்கும் வீட்டிற்கு கொடுக்கும் வாடகை பணமே அதிகம்.. அதனால் கையிருப்பை போட்டு அந்த வீட்டை அவனின் திருமணத்திற்கு முன் வாங்கவேண்டும் என நினைத்தான்..

அதை சரவணனின் பொறுப்பில் விட்டுவிட்டான்..

இவ்வாறு இது அனைத்தையும் யோசித்தபடியே அவனது ஜிப் டிரைவரை அழைத்து ஜி எச் வந்துவிட்டான்..

அவன் அங்கு வந்ததும் பத்திரிகை நிருபரக்களும் கேள்வி கேட்பதற்காக காத்திருந்தார்கள்..

அது தெரிந்ததும் பின் வழியால் உள்ளே சென்றான்.. அங்கு அவன் வைத்துவிட்டு சென்ற இன்ஸ்பெக்டர் தலையில் கட்டுப்போட்டு படுத்திருந்தார்.. வேறு ஒருவர் தான் இருந்தார்..

நேரே காயப்பட்டவரிடம் சென்று எப்படி நடந்தது எனக்கேட்டான் பாரதி..

” சார் அவங்க கண்முழிச்சிட்டாங்கனு டாக்டர் சொன்னதும் நான் உள்ள போனேன்… போய் அங்க இருந்த ஒருத்தன்கிட்ட வாக்குமூலம் எடுக்கணும் கொஞ்சம் ஒத்துழைப்பு தாங்க அப்படினு சொன்னேன்.. அப்போ தான் அவன் பக்கத்து பெட் பேஸன்ட்கு செலைன் போட்டிருந்த கம்பியை எடுத்து தலையில அடிச்சிட்டான் சார்.. அதுதான் உங்களுக்கு கூப்பிட்டேன்..” என்றான் அந்த இன்ஸ்பெக்டர்…

அதன் பின் மருத்துவமனையில் வைத்து எதுவும் பண்ணமுடியாததால். டாக்டரிடம் சென்று ” அவங்க கெல்த் ஓகேவா சார்?.. வேற எதுவும் ப்ராப்ளம் இருக்கா?.. இல்ல டிச்சார்ச் பண்ணலாமா? எனக்கேட்டான்…”

” இல்ல பாரதி பெரிய பாதிப்பு எதுவும் இல்ல காயம் சரியாகும் வரை மருந்து கட்டணும் வேற எதுவும் இல்லை.. ஓகே நீங்க அழைச்சிட்டுபோங்க..” என்றார் டாக்டர்..

அதன் பின் துரிதமாக செயற்பட்டான். அடிபட்ட இன்ஸ்பெக்டரை வீட்டிற்கு அனுப்பிவிட்டு.. மூர்த்தியை அழைத்தான்.. அதன் பின் அவர்களை பின் வழியாகவே கைது பண்ணி ஸ்டேசன் அழைத்துச்சென்றார்கள்..

அது அனைத்து பத்திரிகை டீவியிலும் நியூஸாக வந்தது.. ” சென்னைக்கு புதிய டி சி பி. வருகை ஆனால் அவர் யார் என்ற தகவல் இன்னும் வெளியாக வில்லை.. வந்ததும் மக்களின் மிகப்பெரிய பிரிச்சினையை உடனடியாக தீர்த்துவைத்தார்.. “

” சில வருடங்களாக மக்களால் இரவில் பயணம் பண்ணுவது மிகுந்த சவாலான ஒன்றாகிவிட்டது.. ஆண்கள் பணம் வாகனம் என்பற்றை பத்திரமாக எடுத்து சென்று பாதிப்போ பறிமுதலோ இல்லாமல் வீட்டிற்கு வருவது அரிதாகி விட்டது..”

” அதே போன்று பெண்கள் பணம் நகை தாலி என்பவற்றை போட்டுக்கொண்டு இரவில் வேலைக்கோ வெளி இடங்களுக்கோ செல்வது மிகவும் ஆபத்தான ஒன்றாக இருந்தது.. புதிய டி சி பி யின் வரவால் உடனடியாக அந்த வழிபறி கொள்ளையர்கள் கைது செய்யபட்டார்கள்… இது காலம் வரை அவர்கள் தானாகவே இந்த குற்றம் பண்ணினார்களா?.. இல்லை இவர்களின் பின் யாரேனும் இருக்கிறார்களா? என தேடல் ஆரம்பித்துவிட்டது.. இனிமேலாவது இரவில் மக்கள் பயமில்லாமல் பணிக்கமுடியும் என நம்புவோம்.. எங்களுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.. உங்களுடன் சேர்ந்து வேட்டையாடும் வேங்கை புதிய டி சி பி யாரென அறிவும் ஆவலுடன் ரெய்ன்போ டீவில் இருந்து நான் உங்கள் வர்ஷா..” என்று இது போன்று அனைத்து தமிழ் நீயூஸ் சேனல்களிலும் ஒளிபரப்பாகியது..

ஐந்து பேர் கொண்ட அந்த குற்றவாளி குழுவை பின் வழியாக போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துவந்துவிட்டான்…

இங்கு செல்வியின் வீட்டில்.. பாரதி யசோதாவிடம் அவளை பார்க்கும்படி சொல்லிவிட்டு சென்றதும் அவளிடம் வந்தார்…

” செல்வி மா அம்மா மேல கோபமா டா?.. இப்படி இருக்ககூடாது வயித்துல பாப்பா இருக்கு தானே.. வா வீட்டுக்கு போவோம்..” என்று அவளை எழுப்பி உள்ளே அழைத்துச்சென்றார்…

உள்ளே சென்றதும் கண்ணீரை துடைத்து விட்டு ” ம்மா பிலீஸ் மா எனக்கு இந்த கல்யாணம் வேணாம்.. சொன்னா கேளுமா?.. அந்த ஆளோட என்னால பயம் இல்லாம வாழமுடியாது.. மொத்தத்துல கல்யாணமே வேணாம்.. நான் நீ பாப்பா மூணு பேரும் போதும்.. உன்னையும் இந்த நிலைமையில விட்டு நான் எங்கையும் போகமாட்டேன்.. ” என்றாள் கெஞ்சும் குரலில்..

அவள் கூறியதை கேட்ட யசோதா..

அவளுக்கு பிடித்த பால் பாயாசம் செய்து எடுத்துவந்து அவளை குடிக்கவைத்துவிட்டு மகளுடன் பேச ஆரம்பித்தார்..

” அம்மா மேல நம்பிக்கை இல்லையா?.. செல்வி..” என்றார் ஒரே வரியில்..

“ஏன் மா இப்படி கேக்கிற உன் மேல எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்குமா?..” என்றாள்..

” அப்போ நான் உன்னை பெத்த அம்மா தானே செல்வி மா.. நீ இந்த மாதிரி நேரத்துல உனக்கு கட்டாயம் துணை வேணும் மா நாளைக்கு பிள்ளை பிறந்ததும் அப்பா எங்கனு கேட்டா என்ன சொல்லுவ?.. அதனால அம்மா உனக்கு நல்லது மட்டும்தான் பண்ணுவேன்.. நீ சந்தோசமா இந்த கல்யாணத்து தயாராகனும்.. மாப்பிள்ளையை தவிற உன்னை வேற யாராலையும் நல்லா சந்தோசமா பார்த்துக்கமுடியாது.. இப்ப போகும் போது கூட நீ அழறியாம் போய் பேசி உள்ள கூப்பிடுங்க அத்தைனு சொல்லிட்டு போறார்.. இந்த நல்ல மனசு யாருக்கு வரும்.. நாள் தள்ளிப்போகாம கூடிய சீக்கிரம் இந்த கல்யாணம் நல்ல படியா நடக்கனும்.. அதுல தான் அம்மாவோட சந்தோசம் இருக்கு செல்வி.. இனி உன் விருப்பம்..” என்று கூறிவிட்டு எழுந்து சென்றார்..

யசோதா சென்றதும் செல்வி அவளின் அறைக்குள் சென்று புடவையை மாற்றி நைட்டிக்கு மாறிவிட்டு பெட்டில் படுத்துக்கொண்டாள்..

” நல்ல மனசாம்ல பெரிய மனசு.. அவனுக்கு பெரிய ஆள் அப்படினு நினைப்பு.. அவரே பொண்ணு பார்க்க வருவார்.. அப்புறம் பிடிச்சிருக்கானு அதிகாரமாக கேட்பார்.. நாங்க பிடிச்சிருக்கு சொல்லணும்… எல்லாம் என் நேரம்..” என்று நினைத்துவிட்டு..

அவளின் வாழ்வு அவளின் கை மீறி சென்றுவிட்டது.. தாய்காகவும் அவளை நம்பி வயிற்றில் இருக்கும் குழந்தைக்காகவும் அவள் வாழ்ந்துதான் ஆகவேண்டும்… இனியும் தாய்க்கு கஷ்டம் கொடுக்காமல் இந்த திருமணம் பண்ணித்தான் ஆகவேண்டும் என நினைத்தாள்..

அதன் பின் ஒரு முடிவெடுத்துவிட்டதும் தான் சற்று நேரம் உறங்கலாம் என கண்மூடினாள் செல்வி..

ஸ்டேஷனில் இருக்கும் லாக்கப்பில் தள்ளிவிட்டு லத்தியை கையில் எடுத்து பாரதியும் உள்ளே சென்றான்…

அவனை பார்த்ததும் ஒருவன் பலமாக சிரித்தான்..

சும்மாவே அவர்கள் மேல் கொலை வெறியில் இருந்த பாரதிக்கு அவனின் சிரிப்பு அவர்களை கொல்லும் வெறியை ஏற்படுத்தியது..

 சிரித்தவனுக்கு லத்தியால் நன்றாக அடி வெளுத்தான்.. அதன் பின் தான்

” டேய் நாய்ங்களா? உங்களை நான் அடித்து , கொல்லப்போறேன்னு மிரட்டி யார் உங்களை இதெல்லாம் பண்ண சொன்னாங்க? அப்டினு கேட்க மாட்டேன்… உங்க பிள்ளைங்க உங்களை இந்த நிலைமையில பார்த்தா எப்படி இருக்கும் நல்லா யோசித்து பாருங்க?..” என்றான் பல்லை கடித்து பாரதிகிருஷ்ணா…

அதில் மற்றுமொருவனோ.. ” எங்களை எங்க பசங்க இப்படி பார்க்கிறது எங்களுக்கு அசிங்கம்தான்.. ஆனா நீ உன் அப்பன் ராதா வை இந்த நிலைமையில பார்ப்பியானு ஒருமுறை யோசித்து பாரு?..” என்றான் தெனாவட்டாக…

பாரதியின் வீட்டிலோ இந்த நீயூஸை பார்த்ததும் ராதா ஆடிப்போய்விட்டார்..

சற்று நேரத்தில் தெளிந்து அர்ச்சனாவை அழைத்தார்..

இரவு உணவிற்கு தோசை உற்றிக்கொண்டிருந்தார்.. கணவன் அழைக்கவும் வைதேகிடம் பார்த்துக்கொள்ளும் படி கூறிவிட்டு ஹாலுக்கு வந்தார்..

” என்னங்க?..” என்றார் அர்ச்சனா..

” உன் மகன் அவனோட வேலையை பற்றி ஏதாவது சொல்லி இருக்கானா? உன்கிட்ட..” என்றார் வழமையாக அவரின் குரலில் இருக்கும் அதிகாரம் இன்று இல்லை..

 கணவன் தன்னிடமா கோபம் இல்லாமல் முதல் முறையாக பேசினார் என யோசித்தபடி நின்ற அர்ச்சானாவை.. மீண்டும் சற்று சத்தமாக அழைத்து கேட்டார் ராதா…

” இல்லையேங்க. ஏன் கேட்டுகிறீங்க?..” என்றார் அர்ச்சனா…

பழையபடி அதிகாரத்துடன் ” அதெல்லாம் உனக்கு தேவை இல்லாதது நீ உள்ள போ..” என்று சத்தமாக கத்திவிட்டு அவருடைய கைபேசியில் யாரோக்கோ அழைப்பு விடுத்தார் ராதாகிருஷ்ணன்…

அவனது அப்பாவை அவனுக்கு பிடிக்காதது என்னவோ உண்மைதான்.. திமிர் பிடித்தவர், பொறுப்பில்லாதவர், சூதாடி, என இப்படிதான் தெரியும் பாரதிக்கு.. ஆனால் இவன் சொல்வது புதிதாக இருப்பதால் என்னவென்று விசாரித்தான்..

” மொத உன் வீட்டு சாக்கடையை சுத்தம் பண்ணு டி சி.. அப்புறம் ஊரை சுத்தம் பண்ணலாம்.. உனக்கு இந்த விசயமே தெரியாதா?.. உன் அப்பா இருக்கிறானே கஞ்சாகருப்பு.. அவனும் இதோ இவனும் நானும் தான் மொத பிட்பாக்கேட் அடிக்க ஆரம்பிச்சோம்.. ஆனா போக போக விலை வாசி அதிகமாக அது எங்களுக்கு பத்தாம போயிடுச்சு.. அப்புறம் தான் இந்த வழிபறியை ஆரம்பிச்சோம்… கொஞ்ச காலம் எங்களோட தொழில் பண்ணிட்டு.. திடீர்னு ஒருநாள் பெரிய இடத்துல அவருக்கு கல்யாணம் நடக்கப்போகுதாம்.. இது தெரிஞ்சா பொண்ணு கொடுக்கமாட்டாங்க.. நான் இதுல இருந்து போறேன்.. அந்த சொத்து எல்லாம் என் கைக்கு வந்ததும் நீங்க என் கூட வந்துடுங்க திரும்பவும் நாம தொழிலை ஆரம்பிப்போம் அப்புடினு சொல்லிட்டு போயிட்டான் கருப்பு…”

” அப்புறம் உன் அம்மாகாரியை கட்டிக்கிட்டு ஆறு மாசத்துல எங்களை பார்க்க வந்தான்.. உன் தாத்தா மாரடைப்புனு ஹாஸ்பிடல்ல படுத்திருக்கும் போது முகத்துல வச்சிருந்த சுவாச குழாயை எடுத்துட்டானாம்.. மூச்சு விட கஷ்டப்பட்டுதான் கிழவன் மண்டையை போட்டான்.. ஆனா சொத்து முழுக்க ஏன் பேர்லதான் இருக்கு.. நாம போலீஸை கைல போட்டுகிட்டா நல்லா தொழில் பண்ணலாம்.. நம்ம பழைய தொழில் கஞ்சாவும் கடத்தலாம்.. அப்படினு சொல்லித்தான் ஆரம்பித்தோம்..”

” உன் அப்பனுக்கு கெத்தா ராதாகிருஷ்ணனு பேர் வச்சதே நான் தான்.. பொண்ணு குடுக்கிற பெரிய மனுசன் எதுவும் விசாரிக்காம நண்பரை நம்பி பொண்ணு கொடுத்து சொத்தும் கொடுத்துட்டார்.. அப்புறம் என்ன கருப்போட ஆட்டம் தான்.. எப்ப நீ போலீஸ் ஆகினியோ அப்ப உன் அப்பன் இனி இதுல நான் வரமாட்டேன்… நான் உங்களை காட்டிக்கொடுக்கமாட்டேன்.. நீங்களே இனி தொழில் பண்ணிக்கோங்க அப்படினு சொல்லி விலகிட்டான்… “

” இப்ப என்ன பண்ணுவ? இப்ப என்ன பண்ணுவ?..” என்றான் அந்த கூட்டத்திலேயே பெரியவன் போன்று இருந்தவன்..

பாரதி அவன் சொன்னதை கேட்டதும் கையால் ஒரு குத்துவிட்டான்.. கடவாய் பல் கீழே விழுந்து உதடு கிழிந்து இரத்தம் வந்தது…

” நீ மட்டும் சொன்னது உண்மையா இருந்தா? அப்பனா இருந்தாலும் சரி ஆண்டவனா இருந்தாலும் சரி ஒரே சட்டம் ஒரே தண்டனை தான்.. அப்படி இல்லன்னா இந்த உடம்பில உயிர் இருக்காது…” என்று அவனை காட்டி கர்ஜித்து விட்டு வெளியே வந்து.

” ஏட்டையா அவனுங்களுக்கு சோறு தண்ணி எதுவும் குடுக்க வேணாம் பார்த்துக்கோங்க.. இதோ நான் வீட்டுக்கு போயிட்டு வர்றேன்..” என்று கூறி கம்பீரமாக புறப்பட்டான்..

ராதா போலீஸ் ஒருவனுக்கு அழைத்து பாரதியை பற்றி விசாரித்தான்..

அதற்கு அந்த போலீஸோ ” அண்ணே டி சி பி வந்திருக்கான் டெல்லியில இருந்து ஆனா எங்களுக்கு யார்னு இன்னும் தெரியாது..” என்று கூறி வைத்துவிட்டான்..

கைதி சொன்னதை கேட்டதும் பாரதியும் முடிவு பண்ணிவிட்டான்… ” அந்த ஆள் இப்படி பண்ணவும் வாய்ப்பிருக்கு.. இல்லைனா எப்படி இவ்வளவு கேடுகெட்ட பழக்கம் வரும்.. இந்த தாத்தா பூவை குரங்கு கைல கொடுத்த மாதிரி இல்ல இந்தாளுக்கு எங்க அம்மாவை கட்டி வைத்திருக்கிறார்..” என நினைத்துக்கொண்டு அவனது யூனிபார்மை எடுத்து போட்டுவிட்டு ஜீப் டிரைவரை அழைத்தான்..

அவரும் வந்ததும் வைதேகிக்கு அழைத்து வீட்டின் கதவை இரண்டு பக்கமும் பூட்டி வைக்கச்சொல்லிவிட்டு.. அவன் வந்து அழைத்ததும் திறக்கும் புடி கூறிவிட்டு கமிஸ்னர் ஆபீஸ் சென்று அரெஸ்ட் வாரண்ட் வாங்கிக்கொண்டு அவனது வீட்டிற்கு சென்றான்..

அரைமணி நேரத்தில் வீட்டிற்கு சென்றுவிட்டான்..

சென்று கதவை தட்டி அழைத்தான் அவனது குரல் கேட்டதும் வைதேகி கதவை திறந்தாள்..

இரண்டு போலீஸுடன் அவனின் வீட்டிற்குள் சென்றதும்.. விபரம் எதுவும் தெரியாத அர்ச்சனா.. மகனை முதல் முதல் போலீஸ் உடையில் பார்த்ததும் அதிசயித்து வாயில் கை வைத்து பின் நெட்டி முறித்து ” என் புள்ள போலீஸ் உடுப்புல என்ன அழகு..” என்றார்..

கண்களில் வலியுடன் அவரை பார்த்து வைதேகியை அழைத்து தாயை உள்ளே அழைத்து செல்லும் படி கூறிவிட்டு…

தந்தையிடம் திரும்பி அரெஸ்ட் வாரண்டை காட்டி ” கஞ்சாகருப்பு உங்களை கைது பண்ணுறோம்..” என்றான் பாரதிகிருஷ்ணா..

மகன் கஞ்சாகருப்பு என்று சொன்னதுமே அவனுக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது என புரிந்துகொண்டவர்.. ” ஹலோ ஏன் சார் கைது பண்ணணும்.. நான் என் தப்பு பண்ணினேன்..” என்றார் தற்போதும் திமிராக.

” நீங்க என்ன பண்ணுனிங்கனு எல்லாம் ஆதாரமா எங்ககிட்ட இருக்கு நீங்க ஸ்டேஷன் வாங்க எல்லாம் சொல்லுறோம்..” என கூறி இன்ஸ்பெக்டர் மூர்த்தியை வைத்து அவனது தந்தையை கைது பண்ணி அழைத்து சென்றான் பாரதிகிருஷ்ணா..

ராதாவை ஸ்டேஷன் அழைத்து சென்று மூர்த்தியை விட்டு விசாரிக்கும் படி கூறிவிட்டு.. மனதை சமன் படுத்தி ஒரு முடிவெடுத்தவனாக.. செல்விக்கு அழைப்பு விடுத்தான்..

மூன்று முறை அழைத்தும் எடுக்கபடவில்லை.. இன்றைய ஒரு நாளில் அவனுக்கு எவ்வளவு வேலை அலைச்சல்.. தற்போதைய அவனின் நிலை என அனைத்தையும் நினைத்து தவித்தவன் அவளுடன் பேசினால் சற்று சரியாகும் என நினைத்து அழைத்தான்.. ஆனால் அழைப்பு எடுக்கபடாமல் போனதும் அவனின் கோபம் இன்னும் அதிகரித்தது..

அங்கிருந்த மேசையில் ஓங்கி கையை குத்தினான்..

தற்போது வீட்டில் அவனது தாயின் நிலையை நினைத்து கவலையுற்றான்..

அப்பொழுது வைதேகிடம் இருந்து அழைப்பு வந்தது.. அதில் அவள் சொன்னதை கேட்டதும் பதறிதுடித்து வீட்டிற்கு சென்றான் பாரதிகிருஷ்ணா..

வீணை இசைக்கும்..

Advertisement